Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்க நீக்கம்!

Featured Replies

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்க நீக்கம்!

 

 

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

afsafasfsafa.jpg

இதேவேளை இவரது காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியதாச கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதா குமாரசிங்க இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/19662

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தின் இரத்தமே உன்னையே தூக்கிட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இரத்தத்தின் இரத்தமே உன்னையே தூக்கிட்டாங்களா?

தென்னிந்தியத் திரையுலகம் அடிக்கடி தென்னிலங்கை வருவது இதற்குத்தானோ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Paanch said:

தென்னிந்தியத் திரையுலகம் அடிக்கடி தென்னிலங்கை வருவது இதற்குத்தானோ? :grin:

வேற என்னத்திற்கு...:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Paanch said:

தென்னிந்தியத் திரையுலகம் அடிக்கடி தென்னிலங்கை வருவது இதற்குத்தானோ? :grin:

18 minutes ago, putthan said:

வேற என்னத்திற்கு...:rolleyes:

என்ன சிங்கள நோனாமார்   குளிக்கிறதை ஒளிச்சிருந்து பார்க்கவோ?  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

என்ன சிங்கள நோனாமார்   குளிக்கிறதை ஒளிச்சிருந்து பார்க்கவோ?  :grin:

நாங்கள் தமிழ்நொனா சிங்களநோனா என்று பிரித்து பார்க்க கூடாது....எல்லொரும் நோனாக்கள் என்று ஒரு பரந்த நோக்குடன் பார்க்க வேண்டும்:10_wink:

தமிழ் அரசியவாதிகள் செய்த பிழையை புலம்பெயர்ந்த நாங்கள் செய்கூடாது:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

நாங்கள் தமிழ்நொனா சிங்களநோனா என்று பிரித்து பார்க்க கூடாது....எல்லொரும் நோனாக்கள் என்று ஒரு பரந்த நோக்குடன் பார்க்க வேண்டும்:10_wink:

தமிழ் அரசியவாதிகள் செய்த பிழையை புலம்பெயர்ந்த நாங்கள் செய்கூடாது:10_wink:

ஆமாம். கருணா அம்மானைப்போல் பரந்த நோக்கு வேண்டும். :grin: :103_point_down:

Bildergebnis für கருணா

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

நாங்கள் தமிழ்நொனா சிங்களநோனா என்று பிரித்து பார்க்க கூடாது....எல்லொரும் நோனாக்கள் என்று ஒரு பரந்த நோக்குடன் பார்க்க வேண்டும்:10_wink:

தமிழ் அரசியவாதிகள் செய்த பிழையை புலம்பெயர்ந்த நாங்கள் செய்கூடாது:10_wink:

அருமை !
கடந்த கால தவறுகள் 
திருத்தப்பட வேண்டியவை !

இனி என்ன ...மனுசி திரும்பவும் லிபெர்ட்டி பிளாசாவில் நாலாம் மாடியில்  பிசினஸை ஆரம்பித்து ஜெகஜோதியாக வாழும்

 

என்ன பிசினஸ் என்று கேக்க கூடாது... வேணும் என்றால் காதுக்குள்ள சொல்றன்

  • தொடங்கியவர்

ராஜபக்ஷக்களுக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவிற்கு வேறு சட்டமா? : சபையில் கேள்வி

 

 

gotabaya-rajapaksa--arjuna-mahendran-gee(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கும் இரட்டை பிரஜாவுரிமை உள்ளன. அதேபோன்று மத்திய வங்கியின் முன்னாள் அளுநர் வெளிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையின் நோட்டில் கையொப்பமிட்டார். மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இரட்டை பிரஜாவுரிமையை கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே இரட்டை பிரஜாவுரிமை விடயத்தில் ராஜபக்ஷவினருக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவிற்கு வேறு சட்டமா என மக்கள் விடுதலை முன்னணி எம்.பி விஜித்த ஹேரத் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளை சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சுவிட்ஸர்லாந்து நாட்டு பிரஜாவுரிமையை கொண்டவர் என்பதற்காக கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதி அற்றவர் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலர் இரட்டை பிரஜாவுரிமை வைத்துள்ளனர் என கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். 

எனவே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் பலருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளது. அதேபோன்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் வெளிநாட்டு பிரஜையாக இருந்து கொண்டு இலங்கையின் நோட்டில் கைச்சாத்திட்டுள்ளார். அதேபோன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இரட்டை பிரஜாவுரிமையை கொண்டே அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததை கைச்சாத்திட்டார். இது போன்று பல ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார். 

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் பாதுகாப்புசெயலாளர் ஆகியோருக்கு இரட்டை பிரஜாவுரிமை உள்ளது. இவ்வாறான நிலைமையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை மாத்திரம் எப்படி நீக்க முடியும்.

அப்படியாயின் ராஜபக்ஷக்களுக்கு ஒரு சட்டம், அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், கீதா குமாரசிங்கவிற்கு வேறு சட்டமா? இது நியாயமா? எனவே இந்த விடயத்தில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/19740

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.