Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெப்ரவரி 22 க்காகக் காத்திருப்போம்

Featured Replies

"பெப்ரவரி 22" பற்றி மிக முக்கிய அறிவித்தல்

இங்கே "கிளிக்" செய்யவும் http://www.webeelam.com/Feb.22.htm

  • Replies 71
  • Views 14.8k
  • Created
  • Last Reply

இருபத்திரண்டில் குண்டு போடுமோ நம்படை நீயொரு மண்டு

கூலிக்கு அடிப்பதா மார்பு அதைச் செய்வதோ சிங்களம் இன்று

சதுரங்கம்ஆடலாம் நின்று காட்டுவர் தமிழ்ப்படை வென்று

காலையில் விடிந்திடும் பொழுது என்றும்போல் கழிந்திடும் அன்று

உடன்பிறப்புகள் அங்கு போர் அல்லலைத் தாங்குமோ சொல்லு

ஈனப்பிறப்புகள் ஆகோம் அவர் தொல்லையை நீக்குவோம் வெல்லு

வானத்தில்பறக்குது கழுகு அதுகொல்லுது கோபத்தில் ஏனிந்த தில்லு

பூனையாய்தெரியுமோ புலிகள் அது பதுங்கித்தான் பாய்ந்திடும் கொல்லு

  • கருத்துக்கள உறவுகள்

ed;wp

குகதாசன் எழுதுவது:

நன்றி

-------------------

KUGATHASAN

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி!

நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி!

நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி!

முக்குளிச்சி நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே!

முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே!

வச்சதிப்பொ காணாம நானே தேடுறேன்!

ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்!

நான் படிக்கும் மோகனமே நான் படிக்கும் சீதனமே!

தேன் வடித்த பாத்திரமே தென்மதுர பூச்சரமே!

கண்டது என்னாச்சி கண்ணீரில் நின்னாச்சு!

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!

பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி!

:D:lol::D:D:lol::lol:

சபேசன் உப்பிடி நீங்கள் நக்கல் அடிக்க முதல் இதை இணைப்பை உள்ள ஆக்கத்தை வாசிச்சு பாருங்கோ. யேர்மனியின் திருவிளையாடல்கள் விலாவாரியாக எழுதியிருக்கு.

http://wwics.si.edu/subsites/ccpdc/pubs/words/3.pdf

அப்பிடித்தான் 22 ஆம் திகதி ஒன்றும் தப்பித் தவறி நடக்காமல் விட்டாலும், நாங்கள் அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி சிறீலங்காவை எந்தளவிற்கு கிலி கொள்ள வைத்திருக்கிறம் அதன் பின் விளைவுகள் தாக்கங்களை கொஞ்சம் ஆழமாக யோசிச்சுப் பார்த்தியளோ?

http://www.tamilnaatham.com/advert/2007/feb/PJ17

சிறீலங்காவின் பதட்டமான ஏற்பாடுகளால் அதற்கு ஏற்பட்டிருக்கு செலவீனங்கள் நட்டங்கள் பற்றிய தெளிவான பார்வை தேவை. ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.

22 ஆம் திகதியை எதிர்கொள்ள தயார் ஆவதற்கு ஏற்பாடுகள் செய்ய படையினரின் வாகனங்கள் விமானங்கள் உலங்குவானூர்திகள் வழமைக்கு மாறாக அதிகமாக பயன் படுத்தப்படுவதால் வரும் எரிபொருள் செலவுகள் தேய்மானங்கள்.

இளநிலை அதிகாரிகள் உயர்நிலை அதிகாரிகள் குறிப்பிட்ட திகதியை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கிலி அழுத்தத்தால் அவர்களிற்கு உடல் நலக் குறைவு வரலாம். வருத்தங்கள் வந்து வைத்திய சாலைச் செலவுகள்.

அவ்வாறு பயிற்றப்பட்டவர்கள் அனுபவம்வாய்ந்தவர்கள் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் பொழுது ஏற்படும் வெற்றிடத்தால் அவர்களை நம்பி தீட்டப்பட்ட மகிந்தவின் திட்டங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காணும்.

அது போக அனுபவம் வாய்ந்தவர்கள் இளைப்பாற வேண்டி வந்தால் புதியவர்களை சேர்த்து பயிற்சி கொடுப்பது சம்பளம் கொடுப்பது, இளைப்பாறியவர்களிற்கு நிவாரணம் ஓய்வுhதியம் என்று மேலும் செலவுகள்.

இப்படி புதிய புதிய திகதிகளை வைத்து பரபரப்பை தொடர்ச்சியாக ஏற்படுத்தினால் சிறீலங்கா பாரிய பொருளாதார சிக்கலில் மாட்டுப்படும்.

செக்கசொலவாக்கியாவில் நடந்த வெல்வெற் புரட்சி மாதிரி புலம்பெயர்ந்த நாம் நடத்தும் பன்னாடைப் புரட்சி இது.

நீங்கள் சொல்லுவது போல் சித்திரை 01 வரை அடுத்த புரட்சியை கிடப்பில் போடத்தேவையில்லை.

22 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களால் பங்குனி 08 இல் ஒன்று நடத்தலாம்.

கடந்த மாதம் அவுஸ்ரேலியாவின் கலாநிதி விக்டர் இராஜகுலேந்திரத்தினோடனா நேர்காணலில் கஸ்பர் அடிகளார் சொன்ன 3 மாதக் கணக்கும் பங்குனி மாதம் முழுவதும் பல புரட்சிகளிற்கு வழி திறந்துவிட்டிருக்கிறது. எங்கள் கற்பனா சக்தி கலைத்திறன் கவி நயம் மொழி நயம் போன்றவற்றிலுள்ள சிறு சிறு குறைபாடுகள் குறுக்கே நிக்காது பார்த்துக் கொண்டால் போதும்.

வணக்கம் அங்கு 22இல் திருவிழர தொடக்கம் இங்க தகவல் பிரசாரம் தொடக்கவேண்டியதுதான்

அங்கு யுத்தம் இங்கு தகவல் யுத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு விளம்பர யுக்த்தி ஜயா..வியாபாரிகள் விளம்பரத்திற்காக பத்திரிகையை நாடி போவார்கள் ஆனால் இங்கே பத்திரிகை காரங்க வியாபாரத்திற்காக விளம்பரத்தை நாடுகிறாங்க அவ்வளவு தான்..

அது சரி இந்த மாசி(பெப்22) என்ன விஷேசம்?.....என்ன எதிர்பார்ப்பு? அவங்க தான் பயப்பீதியிலை ஏதோ புலம்புகிறாங்க என்றால் நீங்களுமா? உங்களுக்கு நான் உண்மையான தமிழன் மன்னிக்கவும் ஈழத்தழிழன் என்ற முறையிலை ஒரு உண்மையை மட்டும் சொல்லுகிறேன் அதாவது எதிர் வரும் ஓரிரு நாட்களிலை தமிழீழத்திலை என்ன நடக்கபோகுது என்று அறிய ஆவலோ? அப்படியென்றால் தலைவரின் 2006 மாவீரர் உரையை திரும்ப திரும்ப போட்டு கேளுங்கோ உண்மையும் விளங்கும் நீங்களும் ஒரு அரசியல் ஆய்வாளர் ஆகிவிடுவீர்கள்....அதாவது மாசி22 க்கு பின்பு எதுவும் நடக்கலாம். நான் யுத்தத்தை சொல்லவில்லை ஜயா..நிறைய புதினங்கள் இருக்கு...

.நன்றி...

மீண்டும் ஒரு கருத்துடன்

  • கருத்துக்கள உறவுகள்

எமை நாம் புடம் போடுவோம்

22 ம் திகதி என்ன நடக்க போகிறது

யாருக்கும் விடை தெரியாத கேள்வி இது.

ஆனால் எமக்குள் இருக்கும் வேற்றுமைகள் பிரிவுகள் அதாவது சிங்களம் எமை அழிக்க எதிர்பார்க்கும் அனைத்தையும் நாம் கொண்டுள்ளோம். நாம் கடைசிப்போருக்கு தயாரில்லை என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். புலிகள் தயாரா என்பது யாருக்கும் தெரியாது. தெரிவதும் நல்லதல்ல.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது அது சிங்களம் துட்டகைமுனுவின் கழிப்பில் நிற்கிறது. எக்காளமிடுகிறது;

நாம் இன்றும் பகிடிகள் நக்கல் நழினங்களில் காலம் கழிக்கின்றோம்.

நடக்கவிருக்கும் பேரழிவை மறந்து நாட்கணக்கு எழுதிக்கொண்டிருக்கின்றோம்.

என்னைப்பொறுத்தவரை தமிழன் (நாம்) தயாராகாமல் தமிழீழத்தை எடுத்தும் என்ன பயன்?????

....இது குகதாஷின் கருத்து.....

பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி முக்கிய பிரதேசங்களை கைப்பற்றி பெரும் இராணுவ வெற்றியை உலகிற்குக் காட்டினாலேயன்றி எந்த ஒரு சர்வதேச நாடும் தமிழீழத்தை அங்கீகரிக்கப் போவதில்லை. 22ம் திகதியை கிண்டலடிக்கும் புத்திமான்களே ! அந்தத் திகதியில் தாக்குதல் நடக்காது என்று உங்களால் அடித்துக் கூற முடியுமா ? (இன்னும் 24 மணி நேரத்திற்குள்).

இலக்குகள் ஏற்கனவே தலைமைப் பீடத்தினால் முடிவு செய்யப்பட்டிருக்கும். அதற்கான ஆயத்தங்களும் பல மாதங்களுக்கு முன்னே தொடங்கப்பட்டிருக்கும். எப்போது என்பதும் தலைமைப்பீடமே முடிவுசெய்யும்.

தமிழர் நிலத்தை எமது பலத்தின்மூலம்தான் வென்றெடுப்பதென்ற இறுதி முடிவு அறிவிக்கப்பட்டாயிற்று. கடந்த ஆண்டே தமிழர் நில மீட்பிற்கான ஏற்பாடுகளில் தமிழர் சேனைகள் ஈடுபடத்தொடங்கி விட்டன.

இன்றோ நாளையோ அடுத்த வாரமோ அடுத்த மாதமோ எமது நிலத்தை மீட்பதற்கான பெரும்பாய்ச்சல்கள் ஆரம்பமாகவும். அதற்காக ஆயிரமாயிரம் வீரர்கள் தமது உயிர்களைக்கூட கொடுப்பதற்கு தயாரான நிலையில் வெயில், மழை, குளிரென எவற்றையும் பொருட்படுத்தாது அணிவகுத்து நிற்கிறார்கள்.

ஆனால் இங்கே பெப்.22ற்கு நாம் கவுண்டவுண் போட்டுக் கொண்டு நிற்கிறோமே தவிர தாயகத்தின் விடுதலைக்காய் என்ன செய்கிறோம்?? சிங்கள படைகளிற்கு அடி கொடுக்க வேண்டும், சிங்களவனை எமது நிலத்திலிருந்து கலைக்க வேண்டும் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன நாம் செய்கிறோம்...??

நாளைய பெரும்பாய்ச்சல்களிற்கு உயிரைக் கொடுக்க அங்கே வீரர்கள் தயார், அந்த பெரும்பாய்ச்சல்களின்போது இழக்கப்படும் படைக்கல வசதிகளை மீளப் பெறுவதற்கான செலவுகளை, அந்த பெரும்பாய்ச்சல்களின்போது விழுப்புண்ணடையும் போராளிகளிற்கும், எதிரியின் தாக்குதல்களில் காயமடையும் மக்களிற்கும் சிகிச்சை வழங்க மருத்துவ செலவுகளை, களத்தில் போரிடும் போராளிகளிற்கும் போர் நடவடிக்கையின் போது இடம்பெயரும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவு செய்வதற்கான செலவுகளை ஈடு செய்வதற்கு பெருந்தொகை நிதி வேண்டுமல்லவா??? இதனை நாமல்லவா கொடுக்க வேண்டும். தேவையற் செலவுகளைத் தவிர்த்து எம்மால் இயன்றதை, கொடுத்து தேச விடுதலையின் பங்காளிகளாக நாமும் இருப்போம்.

Edited by மின்னல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபத்தி ரண்டென்ன கிழமை - பாரும்

இதுவென்ன அடடா நடுவினில் வருதே

விடுமுறை எடுத்திடும் இருநாள்- இதனால்

வியாழமுதல் திங்கள்வரை நீண்டிடும் திருநாள்

தமிழ்ச் சனல் பலவும் தொடுத்து - இடையில்

அலுப்படிச் சாப்பாக்கத் தமிழ்ப் படம் இறக்கு

இருப்பதோ இருபத்தே ழிஞ்சு – இறக்கு

இருநூறு இஞ்சிலே எல்சீடி ஒன்று

தங்கத் தமிழீழம் பொங்கி – அதை

தட்டிலே தருவான் எங்களின் தம்பி

இருமுனைச் சிற்றிசன் கப்பல் – எடுத்து

இருந்திடும் எந்தனது ஐடியா சுப்பர்

“சமர்” இற்கு தமிழீழம் போக – நல்ல

சமத்துவமாக இப்பவே மலிவாய்

ரிக்கற் எடுத்திட வேண்டும் – அதையும்

ரிட்டேனாய் எடுத்துநாம் சேவ் பண்ண வேண்டும்

“ஒண்டும்” நடக்காட்டில் என்ன – இங்கு

ஓசியில் தமிழ்ச்சனல் புதிதாக வருதாம்

எடுக்கப்பார் புல்லாய் றீபண்டு - இன்றேல்

எடுத்ததை மாத்திவிடு இந்தியாவுக் கெண்டு

பெப்ரவரி 22 ஐ ஏன் எல்லோரும் எதிர்பார்க்கிறீர்கள் புலிகள் அந்த செய்தி பற்றி ஏதும் அறிவித்தவர்களா. நீங்கள் ஏதோ ஏதோ எல்லாம் சொல்கிறீர்கள். ஆனால்........................

"நாம் சிந்திப்பது போல் புலிகள் சிந்திப்பது இல்லை".

"எங்கள் வழிகள் புலிகளின் வழிகள் அல்ல என்பதை முதலில் மனதில் வையுங்கள்"

Edited by mathuka

இருபத்தி ரண்டென்ன கிழமை - பாரும்

இதுவென்ன அடடா நடுவினில் வருதே

விடுமுறை எடுத்திடும் இருநாள்- இதனால்

வியாழமுதல் திங்கள்வரை நீண்டிடும் திருநாள்

தமிழ்ச் சனல் பலவும் தொடுத்து - இடையில்

அலுப்படிச் சாப்பாக்கத் தமிழ்ப் படம் இறக்கு

இருப்பதோ இருபத்தே ழிஞ்சு – இறக்கு

இருநூறு இஞ்சிலே எல்சீடி ஒன்று

தங்கத் தமிழீழம் பொங்கி – அதை

தட்டிலே தருவான் எங்களின் தம்பி

இருமுனைச் சிற்றிசன் கப்பல் – எடுத்து

இருந்திடும் எந்தனது ஐடியா சுப்பர்

“சமர்” இற்கு தமிழீழம் போக – நல்ல

சமத்துவமாக இப்பவே மலிவாய்

ரிக்கற் எடுத்திட வேண்டும் – அதையும்

ரிட்டேனாய் எடுத்துநாம் சேவ் பண்ண வேண்டும்

“ஒண்டும்” நடக்காட்டில் என்ன – இங்கு

ஓசியில் தமிழ்ச்சனல் புதிதாக வருதாம்

எடுக்கப்பார் புல்லாய் றீபண்டு - இன்றேல்

எடுத்ததை மாத்திவிடு இந்தியாவுக் கெண்டு

உது வன்னிமைந்தனிடம் திருடிய கவிதை போல் உள்ளது. எதற்கும் வன்னிமைந்தன் வரும்வரை இதைப்பற்றி விமர்சனம் செய்ய முடியாது. பிளீஸ் ஹோல்ட் ஒன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது வன்னிமைந்தனிடம் திருடிய கவிதை போல் உள்ளது. எதற்கும் வன்னிமைந்தன் வரும்வரை இதைப்பற்றி விமர்சனம் செய்ய முடியாது. பிளீஸ் ஹோல்ட் ஒன்!

அடுத்தவர் கவிதையை நம்பியிருக்க நான் தருமியில்லை. பாலபண்டிதர்!

பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தி முக்கிய பிரதேசங்களை கைப்பற்றி பெரும் இராணுவ வெற்றியை உலகிற்குக் காட்டினாலேயன்றி எந்த ஒரு சர்வதேச நாடும் தமிழீழத்தை அங்கீகரிக்கப் போவதில்லை. 22ம் திகதியை கிண்டலடிக்கும் புத்திமான்களே ! அந்தத் திகதியில் தாக்குதல் நடக்காது என்று உங்களால் அடித்துக் கூற முடியுமா ? (இன்னும் 24 மணி நேரத்திற்குள்).

இலக்குகள் ஏற்கனவே தலைமைப் பீடத்தினால் முடிவு செய்யப்பட்டிருக்கும். அதற்கான ஆயத்தங்களும் பல மாதங்களுக்கு முன்னே தொடங்கப்பட்டிருக்கும். எப்போது என்பதும் தலைமைப்பீடமே முடிவுசெய்யும்.

எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த இடத்தில் எதுவும் நடக்கலாம்.

ஆனால் அது 22 ஆக இருக்காது. அடித்துக் கூறலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் மேதைகள், ஆய்வாளர்கள் எல்லாரும் ஏதேதோ சொல்லினம் ஒருவர் பரபரப்பு பற்றி எழுத தலைப்பை தொடங்கினார் அது மாறி இப்ப பெப்பிரவரி 22 ல் விவாதம் வந்து நிக்குது. இன்னோருவர் கவிதை பாடுறார், மற்றவர் சினிமா பாட்டை கொப்பி பண்ணி நக்கல் பண்ணுறார். இவர்கள் கிண்டல் செய்வது யாரை? எதை? சிந்திக்கத் தெரிந்தவர்களா இவர்கள்? பெரிய கேள்வி எனக்குள்! இதை விட இன்னோருவர் திரைப்படத்தின் நிலைக்கு பெப்பிரவரியை கொண்டு வந்து விட்டார். இவர் தான் ரி.பி.சியை பற்றி ஆய்வெழுதின முதல் ஆள் என்று நினைக்கிறன். ஆய்வு, தேடல் என்று சும்மா அலம்பிறது பலருக்கு தொழிலாகீட்டு. சும்மா எங்கள் பலம் எங்கள் பலம் என்று மார்தட்டி நிற்பவர்களுக்குள் வித்தியாசமான, கோணத்தில் ஆய்வுகளை தந்தது பரபரப்பு, ஏன் நீங்கள் எல்லாம் வாகரையை விட்டு பின்னகர்ந்து போனபோது ஒப்பாரி வைத்த போது இவர்கள் பொறுப்புடன் விளக்கமாய் ஆய்வு ஒன்றினை தந்திருந்தனர். இந்த முறை கவர் பக்கத்தில் போடப்பட்ட தலைப்பு பற்றி நீங்களாக கற்பனை பண்ணி எழுத ஆரம்பித்தீர்கள். அது இப்போது எங்கோ நிற்கிறது.

என்ன இங்கு கருத்து வைக்கும் சிலருக்கு விவாதத்தை தொடரவும் தங்கள் கருத்துக்களை கூட்டவும் விருப்பமே தவிர, அந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்க்கு பொதுவான ஒரு தீர்வைக்கான முயல்வதில்லை. அதை சாட்டாக கொண்டு சில புல்லுருவிகளும் குழம்பியிருக்கும் குட்டையை நன்றாக, குழப்பி விட்டு போகின்றனர். பெப்பிரவரி 22 மீது நம்பிக்கையை உலகெங்கும் உள்ள மக்கள் வைத்திருக்கின்றனர். அதன் கருத்து 22ம் திகதி சண்டை ஆரம்பமாகும் என்பதல்ல இது ஒரு எல்லை கோடு அதாவது இதற்க்கு பின்ன தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற ஒரு உணர்வு தான் அவர்களிடம். இதை கொச்சைப்படுத்தும் விதத்தில் அவர்களது நம்பிக்கை தவறாக கூட இருக்கலாம் ஆனால் அவர்களை கிண்டலடிப்பது என்று கூறிக்கொண்டு தங்களை தாங்களே நக்கலடிப்பவர்கள் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களே முடிவை அவர்களிடம் விடுவோம்.

இன்றினிய நாளன்றோர் களமிறங்கு கொடும் பகைகொல்லும்

இளங்கன்று பயம்அறியா தொகைநூல் பாடல் கேள்சொல்லும்

மரம்விழுமா காக்கை தான்குந்த வீண்வினை படல் தான்அல்லும்

நிதம்பணிவோம் சிரம்தாழ்த்தி மாவீரர்புகழ் கானம் பாடும்கல்லும்

உலகமே எதிர்பார்த்திருக்கும் பெப்பிரவரி 22 எல்லைக் கோட்டிற்கு அப்பால் இயங்கு நிலையில் கைய்யளிக்க பெருமளவு கனரக ஆயுதங்கள் தென்மராட்சிக்கு நகர்த்தப்படுகிறது.

உலகமே எதிர்பார்த்திருக்கும் பெப்பிரவரி 22 எல்லைக் கோட்டிற்கு அப்பால் இயங்கு நிலையில் கைய்யளிக்க பெருமளவு கனரக ஆயுதங்கள் தென்மராட்சிக்கு நகர்த்தப்படுகிறது.

கீழ்வரும் சட்டலைட்டில் எதனைப் பயன்படுத்தி இந்த விடயங்களை நேரடி அஞ்சல் செய்கின்றீர்கள்?

யாழ் களம்நின்ற பலம்கொண்டு சொல்லதனைச் சுடுவோம்

சூழ் பயங்கொண்டு ஒழிந்திட்டு மீண்டிங்கு வருவோம்

புற முதுகிட்டு ஓடிவந்த நண்பருடன் இணைவோம்-உறை

வாளுக்குப் பதில்சொல்ல நாதியற்று அலைவோம்

பகலிரவு விழித்திருந்து விசைப்பலகை பதிப்போம்

சொல்செயலில் தேசியத்தை உயிரெனவே மதிப்போம்

நாள்பார்த்துக் களமிறக்க சேனைதனைப் படைப்போம்

புகழ்தேடிப் புதுயுகத்தை ஆவலுடன் சமைப்போம்

நாளைக்கு நாள்வருமா இரண்டிலொன்று பார்க்க-நரி

ஊளைக்கு கலங்கிடுமா வான்மதிதான் அழைக்க

பகைவன் விழித்திடுவான் அவன் படலை தட்ட

பறைதனையே அடித்துவிட்டா படையை நாம் நடத்த

விண்வளர்ந்த கானகத்தில் காத்திருப்பான் ஒருவன்-இந்த

பண்கேட்டு பதைபதைத்து புன்னகைப்பான் தருமன்-அவன்

ஆணையிட்டால் பகையழிக்கத் தளபதிகள் அலைவர்-கொடும்

காலனுக்கே உயிர்களையத் தம்பிகளோ விரைவர்

உலகமே எதிர்பார்த்திருக்கும் பெப்பிரவரி 22 எல்லைக் கோட்டிற்கு அப்பால் இயங்கு நிலையில் கைய்யளிக்க பெருமளவு கனரக ஆயுதங்கள் தென்மராட்சிக்கு நகர்த்தப்படுகிறது.

அப்படியானால் பொப்கோன் வாங்கிவிட்டீர்களா ?

கலக்கத்தில் ஒட்டு மொத்த சிங்கள தேசமும்.

UNP admits CFA 'responsibility'

[ BBC ][ Feb 20 19:07 GMT ]

The main oppsosition in Sri Lanka has accepted 'full responsibility' of signing a truce with the Tamil Tigers. Wickramasinghe and LTTE supremo Velupillai Prabhakaran signed the Norwegian brokered Cease Fire Agreement (CFA) was signed on 22 February 2002. In an exclusive interview with the BBC, President Mahinda Rajapaksa described the CFA as a "mistake".The CFA was criticised by the Sinhala nationalists as a step towards 'dividing Sri Lanka'. The then President, Chandrika Kumaratunga, accused Wickramasinghe of signing the truce without the approval of the head of state.

...

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...0_unp_cfa.shtml

Edited by kurukaalapoovan

"கலக்கத்தில் ஒட்டு மொத்த சிங்கள தேசமும்", "UNP admits CFA 'responsibility'"

மொட்டைத்தலையும் முழங்காலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி காத்து இருக்க தேவையில்லை முடிவு எடுக்வேன்டியதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.