Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு

Featured Replies

தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு

கடந்த வாரம் தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்தியக் கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதப்படகு இன்று செவ்வாய்க்கிழமை சென்னையை ஒட்டிய நடுக்கடலில் வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தப் படகு பிடிபட்டபோது இது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமான படகு என்று தமிழக காவல்துறை அறிவித்திருந்தது.

இந்தப் படகின் பக்கவாட்டிலும் முன்பக்கத்திலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், இந்தப் படகு சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் செவ்வாய்கிழமை காலை வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தப் படகில் இருந்த ஐந்து பேரை கைது செய்து தமிழக காவல்துறை கடந்த ஒரு வாரமாக விசாரணை செய்ததில், இந்தப் படகில் கண்ணுக்கு தெரியாமல் அதிவேக வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும், தமிழக காவல்துறையின் வெடிமருந்து நிபுணர்களும் இந்த படகை பரிசோதித்து பார்த்து இதை உறுதி செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதை சென்னை துறைமுகத்தில் நிறுத்திவைப்பது பாதுகாப்பானதல்ல என்பதால், இந்தப் படகை அழிப்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் காவல்துறை நேற்று பெற்று, இன்று இதனை ஆழ்கடல் பிரதேசத்தில் வெடிக்கச்செய்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கடலோர காவல் படையினர், இந்திய கப்பற் படையினர், மத்திய, மாநில உளவுத்துறையினர், சென்னை மாநகர காவல்துறையினர் முன்னிலையில் இந்தப் படகு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த சுமார் ஆயிரம் கிலோ எடையிலான அலுமினியக் கட்டிகளை தமிழக காவல்துறையினர் செவ்வாயன்று கைப்பற்றியுள்ளனர். இந்த அலுமினிய கட்டிகள் வெடிகுண்டுகள் தயாரிப்புக்காக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தபோது பிடிபட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

இதிலிருந்து என்ன தெரிகிறது?

1. படகினுள் குண்டை ஒளித்துவைக்க முடியும்.

2. குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை முதலில் பெற வேண்டும்.

3. ஆழ்கடலில் வைத்தே குண்டை பாதுகாப்பாக வெடிக்க வைக்கமுடியும்.

4. படகை வெடிக்க வைக்க இந்தியக் கடலோர காவல் படையினர், இந்திய கப்பற் படையினர், மத்திய, மாநில உளவுத்துறையினர், சென்னை மாநகர காவல்துறையினர் ஆகியோர் தேவை.

5. அலுமினியக் கட்டிகளை வைத்து வெடிமருந்து செய்ய முடியும்

என்ன யாழ் கள குழந்தை சுட்டிக்கு எல்லாம் விளங்குகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டதை சொல்லுகிறேன் ஜயா இது உண்மையா? பொய்யா? என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கோ..சங்கதி என்னவென்றால் அங்கே ஆயுதங்கள் கடத்தப்படவில்லை இது உண்மை ஆனால் ஆயுதம் பிடிபட்டதும் உண்மை....எப்படி? இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்கவேண்டிய கட்டாயம் பல தரப்புக்கு தேவைப்படுகிறது...சரி ஒரு முறை பிடிபட்டால் சொல்லலாம் ஏதோ எதிரபாராமல் இடம்பெற்றதாக..ஆனால் இது? என்னய்யா பூச்சாண்டியா காட்டுகிறீர்கள்?

  • தொடங்கியவர்

அது மட்டுமல்ல. அங்கு பல விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளது.

படகையே மறைத்து விட்டால் எல்லாம் மறைக்கப்பட்டதாகிவிடும்

என்ற கபட நோக்கம். வெடி பொருள் நிரப்பப்பட்டப படகைச்

செயலிழக்க வைப்பதற்கு அழிப்பதுதான் ஒரே வழியா? வெடிகுண்டினைச்

செயலிழக்க வைப்பதற்கு அங் ஒருவரும் இல்லையா? ஆதாரத்தையே

அழித்துவிட்டு அதன்பிறகு எதைக்கண்டுபிடிக்கப் போகிறார்கள்?

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. செய்தியில் நிறையப் பொய்

கலப்படம் செய்யப்பட்டுள்ளது. அது அவர்களுக்கே உரித்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் 16ம்திகதி தமிழக தினத்தந்தியில் வெளியான செய்தியில் வெடிபொருட்களினை கடத்திய 5 பேரில் இருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இலங்கைத்தமிழர்கள் மூவரில் சுகுமார் என்பவர் முன்னால் புளட் போராளி என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்க்க

http://www.dailythanthi.com/article.asp?Ne...sdate=2/16/2007

அப்படியானல் வேணுமென்றே புலிகள் மீது பழி போடப்பட்டு வருகின்றது.

தமிழக ஆதரவையும் தமிழக அரசின் ஆதரவையும் தணிக்க மத்திய அரசும் றோவும் விரிக்கும் வலை இது

சென்னை:எட்டு நாட்களுக்கு முன் பாக் ஜலசந்தி அருகே பிடிபட்ட விடுதலைப் புலிகளின் படகு நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தூள் தூளாக தகர்க்கப்பட்டது.

அப்படகின் பக்கவாட்டுச் சுவர்களில், வெளியில் தெரியாத வகையில் 500 கிலோ அதிபயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலும், அதை வெளியில் எடுக்க முடியாது என்ற காரணத்தினாலும், அப்படகு நேற்று பகல் 11 மணிக்கு நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது.. இந்தியா, இலங்கைக்கு இடையே நடுக்கடலில், பாக் ஜலசந்தி அருகே கடலோர காவல் படையின் "ரமாதேவி' என்ற கப்பல் பத்து நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, நடுக்கடலில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்படகில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களை கேட்ட போது, "இன்ஜின் பழுதாகி விட்டது; சரி செய்து கொண்டிருக்கிறோம்' என்று கூறினர். இதையடுத்து, கடலோர காவல் படையினர் சென்று விட்டனர். மறுநாளும் அதே இடத்தில் அப்படகு இருந்தது கடலோர காவல் படைக்கு சந்தேகத்தை எழுப்பியது. உடனே, அப்படகை கடலோர காவல் படையினர் சோதனையிட முடிவு செய்து, படகிற்கு சென்ற போது அதிர்ந்தனர். படகில் ஏ.கே., 56 ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கு தேவையான 124 குண்டுகள், ஐந்து கையெறி குண்டுகள், சாட்டிலைட் போன், டெட்டனேட்டர், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் தற்கொலை ஜாக்கெட், எட்டு பேரல்களில் திரவ ரசாயனம் ஆகியவை இருந்தன.பிடிபட்ட படகை, கடலோர காவல் படையினர் சென்னைக்கு எடுத்து வந்தனர். அப்படகில் இருந்தவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலோர காவல் படை நடத்திய விசாரணையில், இப்படகில் இருந்தவற்றை கடலுõரில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர். கடலோர காவல் படையினரிடம் இருந்து பிடிபட்ட ஐந்து பேரையும் "கியூ' பிரிவு போலீசார், மத்திய உளவுப் பிரிவினர் மற்றும் சென்னை நகர போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் பிடிபட்ட ஐந்து பேரில் நான்கு பேர் இலங்கை தமிழர்கள் என்பதும், அதில் இரண்டு பேர் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. கடற்புலிகள் பிரிவில் செயல்படும் அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகியோர் தான் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களிடம் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை நடந்து வந்தது.

மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்யும் தற்கொலை ஜாக்கெட் படகில் இருந்தது தான் "கியூ' பிரிவு போலீசுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ய வைத்தது மனித வெடிகுண்டு தான். அந்த வகையில், 14 கிலோ எடையுடைய தற்கொலை ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு இந்திய கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது ஏன்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிபயங்கர தகவல் கிடைத்தது. புலிகள் வந்த படகு புத்தம் புதிய படகு. பைபரால் செய்யப்பட்டது. படகில் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் 500 கிலோ எடையுள்ள வெடி மருந்து பொருட்கள் பதுக்கி, அதை பைரறக தகடால் சீல் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் நேற்று முன்தினம் பிற்பகலில் தெரிவித்ததும், "கியூ' பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்படகை உடனே சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. கடலோர காவல் படையின் வெடிகுண்டு நிபுணர் படை ஓடி வந்தது. படகை சோதனையிட்ட போது, படகில் வெடி மருந்து இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த வெடி மருந்து பொருட்களை எடுக்கவே முடியாது; துறைமுகத்தில் வைத்து செயலிழக்கவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சென்னை நகரத்துக்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை அதிகாரிகளும் கடலோர காவல் படையின் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். நடுக்கடலுக்கு படகை இழுத்துச் சென்று வெடிக்கச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. உடனே படகை வெடிக்கச் செய்வது தொடர்பான தகவலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தெரிவித்து விட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலோர காவல் படையின் "அவ்வையார்' கப்பல் மூலம் புலிகளின் படகு இழுத்துச் செல்லப்பட்டது. பகல் 10.15 மணிக்கு "அவ்வையார்' கப்பல் நின்றது. புலிகளின் படகு மற்றொரு ரப்பர் படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டது. சென்னையிலிருந்து 20 கடல் மைலுக்கு (37 கிலோ மீட்டர்) அப்பால் படகை எடுத்துச் சென்று நிறுத்தினர். புலிகளின் படகிற்கு ரப்பர் படகு மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். புலிகளின் படகில் இருந்த வெடி மருந்துகளுடன் கிரானைடு இணைக்கப்பட்டது. அதை "டைம் டிவைசர்' மூலம் வெடிக்கும்படி செய்யப்பட்டது. 40 நிமிடங்கள் கழித்து புலிகளின் படகு வெடிக்கும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்துவிட்டு, ரப்பர் படகு மூலம் "அவ்வையார்' கப்பலுக்கு வந்து விட்டனர். அப்படகு பகல் 11 மணிக்கு வெடித்து சிதறியது. நெருப்பு பிழம்பாக நடுக்கடலில் அக்காட்சி தெரிந்தது. புலிகளின் படகு வெடித்து சிதறியதை கடலோர காவல் படையின் அதிகாரிகள் பல மைல்களுக்கு அப்பால் இருந்தபடி பார்த்தனர். போலீஸ் காவலில் இருக்கும் விடுதலைப்புலிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

படகில் வந்த புலிகள் நெஞ்சுரம் படைத்தவர்கள்: கடலோர காவல் படையிடம் பிடிபட்டவர்களில் இரண்டு பேர் புலிகளின் அமைப்பில் தீவிர பயிற்சி பெற்றவர்கள். அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகிய இருவரும் தான் இப்படகை எடுத்துக் கொண்டு, புலிகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வது வழக்கம். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடிக்க முற்பட்டால், படகை வெடிக்கச் செய்து, இலங்கை வீரர்களை அழிக்கச் செய்து விடுவார்களாம். இந்திய கடற்படை பிடித்ததால், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். தவிரவும் சிறிதும் சோர்வோ, தயக்கமோ இன்றி அவர்கள் இருவரும் விசாரணையின் போது சிரித்தபடியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியது; அதிகாரிகளை ஆச்சரியத்துக்கு கொண்டு போனது. "அவர்களின் மூளையில் இலங்கைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர், இதுவே இறுதியானது என்ற வகையில் நன்றாக பதிந்து விட்டது' என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். "இரண்டு பேரும் அழுத்தமானவர்கள் மட்டுமல்ல; கடும் நெஞ்சுரம் படைத்தவர்களாகவே இருக்கின்றனர்' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.என்.டி., என்றால் என்ன?:புலிகளின் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளின் பெயர் டி.என்.டி., என்று அழைக்கப்படுகிறது. "ட்ரை நைட்ரோ டொலுவீன்' என்பதின் சுருக்கம் தான் டி.என்.டி. இது ஆரம்பத்தில் சாயப்பொருளாகத் தான் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில் இதை வெடிபொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மஞ்சள் நிற திடப்பொருளான டி.என்.டி., மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவது டி.என்.டி., தான். இப்பொருள் வெடிக்கும் போது, மனிதனுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். கல்லீரல் கடுமையாக பாதிக்கும். நுரையீரலிலும், கல்லீரலிலும் ரத்தம் வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். ஆண் தன்மை மங்கிப் போகும். உடலில் டி.என்.டி., பட்டால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக தோல் மாறிவிடும். தோல் மீது பட்டதும் எரிச்சல் ஏற்படும். டி.என்.டி., தண்ணீரில் கரையாது. தண்ணீரை உறிஞ்சவும் செய்யாது. ஈரமான இடத்தில் கூட டி.என்.டி.,யை வெடிக்க வைக்க முடியும். அதற்காகத்தான் படகில் டி.என்.டி., வெடிபொருளை கொண்டு வந்து வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

" நம்ம " தினமலர் இப்பிடி சொல்லிச்சாம்!

http://www.dinamalar.com/2007feb21/specialnews1.asp?newsid=1

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர், தமிழன் எக்பிரஸ், துக்ளக், இந்து போன்றவை எதுக்கெடுத்தாலும் புலிகள் மீதுதான் பழி போடுவார்கள். தமிழகத்தில் ஈழ ஆதரவைக் குறைப்பதற்காக இப்பத்திரிகைகள் முயல்வது தெரிந்தே

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அம்புலி மாமா கதை மாதிரி தான் எனக்கு படுகிறது.

இது சிறீலங்கா அரசு & கொம்பனியின் குள்ள நரித்தனம் என நான் நினைக்கிறேன்.

அந்த வெடி மருந்து பொருட்களை எடுக்கவே முடியாது; துறைமுகத்தில் வைத்து செயலிழக்கவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சென்னை நகரத்துக்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

:rolleyes::lol: :lol: :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன படகு என்டு சொல்லினம் இன்றைய மாலைமலர் 2000 கே.ஜி வெடிமருந்து இருந்ததாக கூறுகின்றது இது சாத்தியமா?

தவிரவும் சிறிதும் சோர்வோ, தயக்கமோ இன்றி அவர்கள் இருவரும் விசாரணையின் போது சிரித்தபடியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியது; அதிகாரிகளை ஆச்சரியத்துக்கு கொண்டு போனது. "அவர்களின் மூளையில் இலங்கைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர், இதுவே இறுதியானது என்ற வகையில் நன்றாக பதிந்து விட்டது' என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
:rolleyes:

புலிகளிடம் படகு எண்டு என்னப்பா கதை சொல்லுறாங்கள் அதுக்குள்ளை 500Kg TNT வெடி மருந்தா அதுவும் ஒரு கடத்தல் படகிலையா...???(அது என்ன விலை வரும் தெரியுமா.?) அது வெறும் கட்டு மரம், அதிலை ஒரு TNT எறி குண்டு இருந்தது எண்டு சொல்லி இருப்பினம் எண்டால் சரியா இருந்து இருக்கும்.... அதோட Satellite Phone வேற, இங்கை இருக்கிறவை நம்புற மாதிரி சொல்லவே தெரியேல்லைப்பா...!

Edited by Thala

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் படகுகளை இந்தியாவள் தொட்டுக்குhட பார்கமுடியாது ? ஏன் என்றாள் அது விவேகமும் வேகமும்உடையது

தாக்குதல் நடத்த வந்த படகு என்றால் அதற்கு 500 கிலோ வெடிமருந்து தேவையில்லை.

வெடிமருந்தைக் கடத்தி வந்தார்கள் என்றால் அவ் வெடிமருந்தினை எப்படி புலிகள் படகிலிருந்து வெளியே எடுப்பார்கள் ?

படகை வெடிக்க வைத்தா ?

அட்டுப்பால் அப்பாஸ் தான் சரியான விளக்கம் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் படகுகளை இந்தியாவள் தொட்டுக்குhட பார்கமுடியாது ? ஏன் என்றாள் அது விவேகமும் வேகமும்உடையது

seriya sonenga , naanga enna kanja bussness ah pannuram chumma chumma pidipadurathukku,, india police pathi ethina movie la vanthirukku , ithuvum kooda ethachum movie shooting ah , duklus pichaa edukka ponaa neram parthidu photo eduthudu vanthirupaaru

அண்மையில் இந்திய கடற்படையினால் கைப்பற்றப்பட்ட, புலிகளின் ஆயுதப் படகில், இந்தியாவையே அழிக்கக்கூடிய "அணுகுண்டு" இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, இவ்வணுகுண்டு, சூசைட் அங்கி வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்!!! நல்ல காலம் கடலிலேயே அதை இந்திய சுப்ப கீரோக்கள் பிடித்து விட்டார்களாம்!!!! இந்த அணுகுண்டை, இந்திய அணுவாராட்சி வல்லுனர்களூம், இந்திய கடற்படை கீரோக்களும் சேர்ந்து அண்டகிரவுண்டில் செயலிழக்கச் செய்திருக்கிறார்களாம். ........

......... ஆண்டவா நல்லகாலம், பாரதமாதாவைக் காப்பாற்றி விட்டாய்!!! விட்டால் நாலெழுத்துப் படியாத தநா முட்டாள்களுக்கு உதென்ன, ஆயிரம் பூறிசுகளை விடுவங்கள், அதுகளும் நம்புங்கள் என்ற படியால்!!!!!! .

உப்படித்தான் முந்தி "புலிகள் தமிழகத்தில் நீர்மூழ்கிக் கப்பல்" செய்கிறார்கள்!! பிடித்து விட்டோம் ...... இப்படி பலதுகளை விட்டு தநாக்களை முட்டாள்களாக்கியவர்கள்!!!

"கேக்க ஆயிரம் என்ன மில்லியன் கணக்கிலை கேணைகள் இருக்கும் போது ............"

30 வருடங்களிற்கு மேலாக போராடிற இனம் எனக் கூறிக் கொள்ளும் நாங்களே அதைவிட மோசமான கேணையன்களாகத்தானே இருக்கிறம். அந்தக் கேவலத்தில் தமிழ் நாட்டுத் தமிழர்களை கேணையன்கள் என்று செல்லி என்ன வரப்போகுது?

உதாரணத்திற்கு:

"அம்பாறையில் என்ன நடக்குது?"

"ஏன் இன்னம் அடிவிளவில்லை செயலை விட்டிட்டு அறிக்கை விட்டுற சவுண்டு பாட்டி ஆயிட்டாங்கள்"

"கதிரவெளியும் போட்டுதாம்"

போன்ற கேணைத்தனங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாடு எவ்வளவோ பறவாயில்லை.

30 வருடங்களிற்கு மேலாக போராடிற இனம் எனக் கூறிக் கொள்ளும் நாங்களே...

எல்லோரும் உங்களைப் போல் புத்திசாலியாக இருக்க முடியுமா குறுக்ஸ்.

கேணைகள் இருந்தால்தானே உங்களைப் போன்றவர்களுக்கு பொழுது போகும்.

அற்புதம் குறுக்ஸ், ஆழமான கேணைத்தனமில்லாத கருத்துகளுக்கு?

குறுக்ஸ், எம்மவர்களில் ஏறக்குறைய 95% ஆன சனங்களுக்கு, புலிகள் ஏன் அடிக்கவில்லை? புலிகள் ஏன் பேசாமல் இருக்கிறார்கள்? .... என்ற ஆயிரம் கேள்விகளுடன் தான் இருக்கிறார்கள்!! அந்த 95% ஆன மக்களையும் கேணைகளாக்கி விடாதீர்கள்!! இவைகள் ஒரு சாதாரண ஈழத்தமிழனின் மனதில் எழும் ஆதங்கங்களின் வெளிப்பாடு!! கடத்தல்கள், கொலைகள், கஸ்டங்கள், .... என்று தொடர்ந்து கொண்டிருக்கும் போது சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதவைகளே!! இல்லை, இப்படிக் கேட்பவர்களையெல்லாம் தயவுசெய்து துரோகிகள் ஆக்கி விடாதீர்கள்!!!!!!

மற்றும் கதிரவெளியில் நடந்தவைகள் தெரியாவிடில் கம்னு இருங்கோ!!! .... வேண்டாம் .........

மற்றும் அம்பாறையில், அந்தனை புலிகளின் முகாங்களை கைப்பற்றினோம், இத்தனை ஆயுதங்களைக் கைப்பற்றினோம் என்று சிறிலங்காவின் ஆதரவு ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் கதறிக் கொண்டிருக்கும் போது, குழம்பும் எம்மக்களுக்கு உண்மை நிலைகளை, எமது ஊடகங்கள் ஒன்று கூட சரியாக எடுத்துக் கூறவில்லை என்ன, மறைத்தார்கள்!!! சில சமயம் உங்கள் போன்ற கேணைகள் அற்ற அறிவாளிகள் கூட நிலைமைகளை எடுத்துச் சொல்லவில்லை!!!

இதற்கு மேலாக உங்களைப் போன்ற கேணைகளற்ற அறிவுஜீவிகள் எம் சமுதாயத்திற்கு பலவற்றைச் செய்யலாம். நீங்கள் முன் வர வேண்டும்!! நீங்கள் முன்வராவிடில் என் போன்ற, ஈழத்தமிழர்களிலுள்ள 95% கேணைகளூக்கு எடுத்துக் கூறுவது யார்????????????

போராட்டத்துக்கை இருந்து பார்த்து அனுபவித்து வழர்ந்த பழுத்த பழங்கள் உங்களுக்கே இத்தனை கேணைத்தனமான ஆதங்கங்கள் குழப்பங்கள் கேள்விகள் வருகுது என்றால் ஒன்று அனுபவிக்காது சிவனே என்று இருக்கிற தமிழ்நாட்டுத் தமிழரை ஏன் கேணையன்கள் என்றியள்?

உங்களுக்காவது போராடும் இனம் சொந்த ஊர், உற்றார் உறவினர்கள் இருக்கிறார்கள் போராட்டத்தின் அங்கங்கள் என்ற ஈடுபாடு நிர்ப்பந்தம் இருக்கு. தமிழ்நாட்டுத் தமிழருக்கு அந்த ஈடுபாடுகள் நிர்ப்பந்தங்கள பிணைப்புகள் தொடர்புகள் இருக்கோ?

உங்களிற்கு அறிவூட்ட புலிகள் எந்தளவிற்கு முயற்சித்தார்கள் எத்தனை வடிவங்களில் முயற்சித்தார்கள் எவ்வளவு காலமாக முயற்சிக்கிறார்கள்? தெளிவு பெற்றியளோ இன்னமும் சந்தேகம் தான். அதில எத்தனை வீத முயற்சி தமிழ்நாட்டுத் தமிழர் நோக்கி காட்டப்பட்டிருக்கு?

இந்தளவு முயற்சிகளுக்கு பிறகும் கதிரவெளியில் என்ன நடந்ததாம் காலிதுறை முகத்து களஞ்சியத்துக்கு என்ன நடந்ததாம் முகமாலையில என்ன நடந்ததாம் கிருலப்பனையில் கருணாவாம் றேஞ்சிலான் நிக்கிறியள்.

அதுக்குள்ளை பில்டப் வேறை கம்முன்டு இருங்கோ ரொயிலெற்றுக்கு இருங்கோ எண்டு.

நான் இங்கு அறிவாளி என்று சொல்லவில்லை. இதுவரை மற்றும் இன்று நடப்்பவற்றையே உங்களை அரச ஊடகங்கள் சர்வதேச ஊடகங்கள் துரோக ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து குழப்புது என்று அடிச்ச காத்துக் சுத்துறியள் என்றால் இனிவருங்காலங்களில் என்ன செய்யப் போறியள்?

உங்கடை நொண்டிச்சாட்டுகள் வந்து பக்கத்தில இருக்கிற corner shop இல பால் பக்கற்றும் பத்திரிகையும் வேண்ட நடந்து போறதுக்கு குளுக்கோல் முதல் சலைன் வரை எல்ல விதமான ஊக்குவிப்பும் தேவை என்று சொல்லுறியள். அதுக்கே எல்லாம் தேவை என்ற அளவிற்கு உங்களுக்கு stamina இல்லை எண்டால் எதிர்காலத்தில் எப்படி மரதன் ஓடப் போறியள்? மரதனுக்கு நீங்கள் தயாரோ தயாரில்லையோ திணிக்கப்படப்போகுது. தயாராவது உங்கள் பொறுப்பு.

இந்த விடையத்தில் பலஸ்தீனர்கள் சில தசாப்த்த காலமாக மரதன் ஓட வேண்டி நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் இன்றும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். தற்போதைய நிகழ்வுகளின் பின்னணியில் இந்த சவாலின் சிக்கலை ஆழத்தை பற்றி கொஞ்சமாவது அறிய ஒரே விடையம் பற்றி BBC, CNN, MSNBC, CBC, ABC போன்ற வழமையான மேற்குல ஊடகங்கள் என்ன சொல்கின்றன அதே விடையத்தைப்பற்றி Aljazeera International இன் பார்வை என்ன என்று சில நாட்கள் அவதானியுங்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி சேவைகூட இல்லையா? ஏனென்றால் ஒன்றையுமே காட்டாமல் செய்கிறார்கள்.அப்ப பிறகென்ன இதெல்லாம் றீல் தான்

குறுக்சின் கருத்துப்படி நாங்கள் இங்கிருந்து கதையளப்பது வேஸ்ட். இங்கு செலவிடும் நேரத்திற்கு தமிழீழத்திற்கு எதாவது (?) பங்களிப்பைச் செய்வோம்.

எல்லோரும் யாழ் களத்தைவிட்டு ஓடிவிடுங்கள். அதற்குமுன் குறுக்ஸின் பங்களிப்பு என்னவென்று சொல்லட்டும், கேட்டுவிட்டு ஒடிவிடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:

எல்லோரும் உங்களைப் போல் புத்திசாலியாக இருக்க முடியுமா குறுக்ஸ்.

கேணைகள் இருந்தால்தானே உங்களைப் போன்றவர்களுக்கு பொழுது போகும்.

:rolleyes: குறுக்ஸ் அண்ண சொல்றதிலையும் நியாயம் இல்லாமல் இல்லைப் பாருங்கோ!!

இங்க வெளிநாட்டில இருக்கிறவையில பலர்...இப்படித்தான் புலம்பிறவை..களத்தில் நின்று போராடுபவர்களுக்கு இல்லாத உணர்ச்சியா இவையளுக்கு இருக்கப் போகுது!...

குறுக்ஸ் அண்ணை இந்த வகையில் நான் உங்க பக்கம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.