Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு

Featured Replies

முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு
 
 

article_1495084072-IMG20170518090653.jpg

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டாம் எனக்கூறி அவருடைய உரைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

அத்துடன், 'இந்நிகழ்வில் அரசியல் பேச வேண்டாம் எனவும் அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லுங்கள்' எனவும் கோசமிட்டனர். இதனால், அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின் தணிந்தது.

 

- See more at: http://www.tamilmirror.lk/196851/ம-ள-ள-வ-ய-க-க-ல-ல-சம-பந-தர-க-க-கட-ம-எத-ர-ப-ப-#sthash.mGqOV2Fk.dpuf
  • தொடங்கியவர்

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் இன்று உணர்­வு­ பூர்­வ­மாக அனுஷ்­டிக்க ஏற்­பாடு

p19-1468cd80eb3887141810cfee172cbc9a1ea4196d.jpg

 

சம்­பந்தன், விக்கி­னேஸ்­வரன் உட்­பட பெருந்­தொ­கை­யானோர் பங்­கேற்பு
(ஆர்.ராம்)

இறுதி யுத்­தத்­தின்­போது பலி­யான மக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு இன்று வடக்கு, கிழக்கில் மிகவும் உணர்­வு­பூர்­வ­மாக இடம்­பெ­ற­வுள்­ளது. இதன் பிர­தான நிகழ்வு மாபெரும் மனிதப் பேர­வலம் நிகழ்ந்த முள்­ளி­வாய்க்கால் மண்ணில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

வட­மா­காண சபையின்  ஏற்­பாட்டில்  மூன்­றா­வது வரு­ட­மாக நடை­பெறும் இன்­றைய உணர்­பூர்­வ­மான நிகழ்­விற்­கான அனைத்து ஏற்­பா­டுகள் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏற்­பாட்­டுக்­கு­ழுவின் அங்­கத்­த­வ­ரான வட­மா­காண சபை உறுப்­பினர் ரவி­கரன் தெரி­வித்­துள்ளார். 

அதே­நேரம் இந்த நினை­வேந்தல் நிகழ்வில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் முதற்­த­ட­வை­யாக பங்­கேற்­க­வுள்ளார். அத்­துடன் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் உட்­பட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மக்கள் பிர­தி­நி­திகள், வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்கள், தமிழர் அர­சியல் தரப்­புக்கள், சம­யத்­த­லை­வர்கள், மனித உரிமை ஆர்­வ­லர்கள், புத்­த­ஜீ­விகள், உற­வு­களை பறி­கொ­டுத்த அநீ­தி­களை நேரில் உணர்ந்த பொது­மக்கள் உட்­பட பலர் எவ்­வி­மான பேத­மு­மின்றி பங்­கேற்­க­வுள்­ளனர்.

இந்­நி­கழ்வில் முதல் அங்­க­மாக குரு­தியால் தோய்ந்த முள்­ளி­வாய்க்கால் புனித மண்ணில் ஆன்­மாக்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக 9 மணி முதல் அனை­வரும் ஒன்று கூட­வுள்­ளனர். அதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு முள்­ளி­வாய்க்­காலில் கூடும் அனைத்து தரப்­பி­னரும் மூன்று நிமிட மௌன அஞ்­ச­லியில் ஈடு­ப­ட­வுள்­ளனர்.

இதே ஏக­கா­லத்தில் வடக்­கிலும் கிழக்­கிலும் ஏனைய இடங்­க­ளிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்­பெயர் தமிழ்ப்­பேசும் மக்கள் ஆகி­யோரும் மௌன அஞ்­ச­லியை நடத்­து­மாறும் கோரப்­பட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து தமது உயிர்­களை ஈகம் செய்ய உற­வு­க­ளுக்­காக ஈகைச்­சுடர் ஏற்­றப்­ப­ட­வுள்­ளது. பிர­தான சுடரை எதிர்க்­கட்­சித்­த­லைரும், வட­மா­காண முத­ல­மைச்­சரும் ஏற்­ற­வுள்­ளனர். அதனை அடுத்து ஏனைய அனைரும் ஈகைச்­சு­ட­ரேற்றி அஞ்­சலி செய்­ய­வுள்­ளனர்.

தொடர்ந்து நினை­வேந்தல் நிகழ்வில் இரு சிற்­று­ரைகள் முக்­கிய தலை­வர்­களால் நிகழ்த்­தப்­ப­ட­வுள்­ளன. ஆத­னை­ய­டுத்து இந்­நி­கழ்வு நிறை­வ­டை­ய­வுள்­ளது.

போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள்

முள்­ளி­வாய்க்­கா­லுக்கு நேர­டி­யாக வரு­கை­தந்து அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக மக்­களை ஏற்­றி­வரப் பஸ் வண்­டிகள் ஒழுங்­கு­செய்­யப்­பட்­டுள்­ளன. முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் துணுக்காய் பிர­தேச செய­லகம் முன்­பாக காலை 7.30, மாந்தை கிழக்கு பிர­தேச செய­லகம் முன்­பாக காலை 7.30க்கும், ஒட்­டு­சுட்டான் பிர­தேச செய­லகம் முன்­பாக காலை 8 மணிக்கும், வள்­ளு­வர்­புரம் (விசு­வ­மடு) பாட­சாலை முன்­பாக காலை 8மணிக்கும் தொட்­டி­ய­டிச்­சந்தி (விசு­வ­மடு) முன்­பாக காலை 7.30 மணிக்கும், விசு­வ­ம­டுச்­சந்­தி­யி­லி­ருந்து காலை 7.30க்கும், கைவேலி சந்­தி­யி­லி­ருந்து காலை 7.30க்கும், முல்­லைத்­தீவு மாவட்டச் செய­ல­கத்­திற்கு முன்­பாக காலை 8 மணிக்கும் 8.30பக்கும் மற்றும் 9 மணிக்கும் இல­வச போக்­கு­வ­ரத்து சேவை ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன..

வவு­னியா மாவட்­டத்தில் வவு­னியா புதிய பஸ் நிலையம் முன்­பாக காலை 7 மணிக்கும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் கிளி­நொச்சி டிப்போ சந்­தி­யி­லி­ருந்து காலை 7.30 மணிக்கும் மன்னார் மாவட்­டத்தில் மன்னார் பஸ் நிலையம் முன்­பாக காலை 6 மணிக்கும் போக்­கு­வ­ரத்து ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாண மாவட்­டத்தில் தொண்­டை­மா­னாறு சந்தி காலை 6.30க்கும் கைதடிச் சந்­தியில் இருந்து காலை 7 மணி, காரை­நகர் சந்­தி­யி­லி­ருந்து காலை 6.30க்கும், யாழ்ப்­பாணம் மத்­திய பஸ் நிலையம் முன்­பாக காலை 6.30க்கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி

இதே­வேளை யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் நினை­வேந்தல் நிகழ்­வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் வடக்கு,-கிழக்கு தமிழர் தாயகப் பகு­தியில் இரண்டு இடங்­களில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வாக­ரையில் மாணிக்­க­புரம் வாவிக் கரையில். (வாகரை வைத்­தி­ய­சா­லைக்கு அண்­மையில் மட்­டு-­தி­ரு­கோ­ண­மலை வீதியில்) காலை 9.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ள­தோடு வடக்கு மாகா­ணத்தில் முள்­ளி­வாய்க்கால் கிழக்கு கடற்­க­ரையில் (ஏ32வீதியில் 46ஆவது கிலோ மீற்றர் கல்­லி­லி­ருந்து புனித சின்­னப்பர் ஆலய வீதி) பி.ப 2.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

மன்னார் பொது அமைப்­புக்­களின் ஒன்­றியம்

இதே­வேளை மன்னார் பொது அமைப்­புக்­களின் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் மன்­னா­ரிலும் நினை­வேந்தல் நிகழ்வு காலை 9 மணிக்கு அடம்­பனில் நடை­பெ­ற­வுள்­ளது.

கிழக்­கிலும் ஏற்­பாடு

உரிமை கேட்ட ஈழத்­தமிழ் இனத்தின் மீதான உக்­கி­ர­மான தாக்­கு­தலின் இறு­தி­நாளை நினை­வு­கூர்ந்து உயிர்­நீத்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் முக­மாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வாக­ரைக்­கி­ளையின் ஏற்­பாட்டில் மட்டக்கப்பு வாகரை பிள்ளையார் ஆலய முன்றயலில் காலை 9.30க்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள், கட்சிப்பிரதிநிதிகள், மகளீர் அணியினர் இளைஞர் அணியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிகழ்வின் முதலில் கூட்டு வழிபாடு அபிசேகம் பூஜை, நினைவுச்சுடர் ஏற்றல் என்பன நடைபெற்று அஞ்சில இடம்பெறவுள்ளது. இதேபோன்று அம்பாறையிலும்,திருகோணமலையிலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-18#page-1

  • தொடங்கியவர்

இன்னொரு யுத்தம் நடக்காமல் இருப்பதற்கான மாற்றம் வந்திருக்கிறதா? சம்பந்தன் கேள்வி

 
 
''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

இலங்கையில் இன்னொரு யுத்தம் நடைபெறாமல் இருப்பதற்கான மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் முள்ளிவாய்க்கால் சம்பவம் தொடர்பான எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றபோது, அதில் உரையாற்றிய சம்பந்தன் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தீபமேற்றி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் முப்பது வருடங்களாக யுத்தம் ஒன்று ஏன் நடைபெற்றது, அதன் உண்மையான நோக்கம் என்ன, அந்த குறிக்கோளை நாம் அடைந்திருக்கின்றோமா என்று கேள்வி எழுப்பினார்.

இனிமேல் ஒரு யுத்தம் நடைபெறாதிருப்பதற்கான மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா,  அத்தகைய மாற்றம் அவசியம்தானா, அந்த மாற்றத்தை அடைய என்ன நடைபெற வேண்டும்; என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த நிழ்வு பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

அதற்கு யுத்தத்தின்போது நடந்தது என்ன என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். அந்தப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில்,மீண்டும் ஒரு யுத்தம் நடக்காமல் தடுக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப ஆட்சிமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். 

''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

சம்பந்தன் உரையாற்றுகையில் குறுக்கிட்ட ஒருவர், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமைக்கு சம்பந்தன் பாராட்டுத் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு அதற்குப் பதிலளிக்க வேண்டும் என கேள்வி கேட்க முற்பட்டதையடுத்து நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றினார்.

விக்னேஸ்வரன் கேள்வி

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வன்முறைகளற்ற சூழ்நிலை இருக்கும்போது, வடக்கே ஒன்றரை லட்சம் படையினரை வைத்திருப்பது ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.

சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட மைதானத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்திற்கு வடமாகாண மக்களின் முதன்மைப் பிரதிநிதி என்ற வகையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர் தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும் என்றும், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் விளைவுகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

போர் முடிந்து எட்டு வருடங்களாகின்ற நிலையில் வன்முறைகளற்ற ஒரு சூழலில் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை வடக்கில் வைத்துக் கொண்டு இன ஐக்கியம், நல்லிணக்கம் பேசுவது குறித்து எழுந்துள்ள கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று அவர் நினைவூட்டினார்.

கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

பலதரப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ் மொழியைப் பேசுகின்றவர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைய பிளவுபட்டு கிடக்கும் தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். 

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட குழந்தைகள், வயோதிபர்களையும் போராளிகள் என குறிப்பிடுபவர்கள் குறித்து தமது அனுதாபத்தைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

''தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் ஒற்றுமையாகத் திரள வேண்டும்''

எல்லோருடைய மனங்களிலும் கரும்புள்ளியைப் பதித்து சோகத்தை ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் சோகதினம் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நாளாக அமைய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பல பெண்கள், துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டுக் கதறியழுத காட்சிகள், அந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது. 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர். 

கிழக்கில் நிகழ்வுகள்

இலங்கையில் இறுதிக் கட்ட போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்திலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தமிழர் வாழும் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை இது தொடர்பான நிகழ்வுகள் அரசியல் கட்சிகளினாலும் சிவில் அமைப்புகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இலங்கை தமிழரசு கட்சியின் நிகழ்வு Image captionஇலங்கை தமிழரசு கட்சியின் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் வாகரை ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

போரில் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காக சிறப்பு பூசை வழிபாடு மற்றும் அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டு உயிர் நீத்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்.

இந் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாகரை கடலோரத்தில் தமிழ் தேசிய விடுதலை முன்னனியின் ஏற்பாட்டில் மற்றுமோர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

http://www.bbc.com/tamil/sri-lanka-39959807

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது.

அடி கிடி வேண்டாமல் தப்பியதே பெரும் புண்ணியம் 

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் ஒரு பேச்சு. யாழ்ப்பாணத்தில் ஒரு பேச்சு.
இன்று முள்ளிவாய்க்காலில் ஒரு பேச்சு. - இதுசம்பந்தர்.

நீ துரோகி வெளியேறு -இது தமிழ் மக்கள்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்தபின்னர் தான் அவர்களின் பிரச்சினைகளை நான் உணர்ந்தேன்.- விக்கி ஐயா

விக்கி ஐயாவின் காலைப்பிடித்து சம்பந்தர் துரோகி அவரை பேசவிடாதீர்கள் - தமிழ் மக்கள்

மீண்டும் மீண்டும்சொல்கின்றோம்
ரத்தமும் சதையும் எலும்பும் உயிரும் கொடுத்த போராட்டம்
இங்கே உங்கள் அரசியலை நடத்தாதீர்கள்
நாசமாப்போவீர்கள்
அல்லது போகடிக்கப்படுவீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் சுதந்திரதின நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்ட சம்பந்தனும் சுமந்திரனும் முதன் முதலாக வடமாகாண சபையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்டது வரவேற்கத்தக்கது!

  • தொடங்கியவர்

சம்பந்தனின் உரைக்கு இடையூறு

p20-c1440c38a2c84bf15094936ee17cc6b5f98c400e.jpg

 

அரசியல் பேசுவதாகவும் விசனம்

(முள்­ளி­வாய்க்­கா­லி­லி­ருந்து ஆர்.ராம்)

தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயு­த­ரீ­தி­யி­லான போராட்டத்தின் இறுதிக் கட்­ட­மாக 2009ஆம் ஆண்டு மிகப்­பெரும் யுத்தம் வன்­னிப்­பெ­ரு­நி­லப்­ப­ரப்பில் நடை­ பெற்­றி­ருந்­தது. இந்த யுத்­தத்தின் ஈற்றில் பாரி­ய­ளவில் அப்­பாவி பொது­மக்கள் தமது உயிரை துறந்­துள்­ளனர். இவர்கள் உட்­பட தமிழ்­மக்­க­ளுக்­காக உயிர்­நீத்த அனைத்து  ஆன்­மாக்­க­ளுக்கும் அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கான மே 18 நினை­வேந்தல் நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை காலை 9.30க்கு முள்ளிவாய்காலில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. 

இந்­நி­கழ்வில் சர்வ மதத்­த­லை­வர்கள் வடக்கு கிழக்கு மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் பங்­கேற்­றி­ருந்­தனர். மூன்று நிமிட அக­வ­ணக்கம் நிறை­வ­டைந்த பின்னர் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் முதலில் அஞ்­சலி உரையை ஆற்­றினார். அனைத்­தொ­டர்ந்து முதன்­மு­த­லாக முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில் பங்­கெ­டுத்த எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு உரை­யாற்­று­வ­தற்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.  

எதிர்க்­கட்­சித்­த­லைவர் தனது அஞ்­சலி உரையில் மதத்­த­லை­வர்கள், மக்கள் பிர­தி­நி­திகள், உற­வி­களை பறி­கொ­டுத்த பொது­மக்கள் என அனைத்து தரப்­பி­ன­ரையும் விளித்து உரையை ஆரம்­பித்­தி­ருந்தார். அவ­ரு­டைய உரையில் தொடர்ந்­து­கொண்­டி­ருந்த சம­யத்தில் அந்­நி­கழ்வில் பங்­கெ­டுத்­தி­ருந்த பொது­மக்கள் அர­சி­யல்­பு­ர­ச­லாக உரையில் கூறப்­படும் வாச­கங்­க­ளுக்கு தமது பதில்­களை தெரி­வித்­த­வாறு இருந்­தனர்.  

இந்­நி­லையில் எதிர்க்­கட்­சித்­த­லை­வரின் உரை தொடர்ந்து கொண்­டி­ருந்த ஆறா­வது நிமி­டத்தில் ஊட­க­வி­ய­வ­லாளர் ஒருவர் இடை­யீடு செய்து, நீங்கள் பயங்­க­ர­வா­தத்தை வெற்றி கொண்­ட­மைக்­காக பாரா­ளு­மன்­றத்தில் பாராட்­டுக்­களை தெரி­வித்­தீர்­களே? தற்­போது என்ன கூறு­கின்­றீர்கள்? நீங்கள் பதி­ல­ளித்­தா­க­வேண்டும்? என்று வின­வினார்.

இதன்­போது இந்­நி­னை­வேந்தல் நிகழ்வின் ஏற்­பாட்­டுக்­கு­ழுவின் அங்­கத்­த­வ­ரான வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் ரவி­கரன், இது நினை­வேந்தல் நிகழ்வு, தய­வு­செய்து ஊட­கத்­தி­னரின் கேள்­வி­களை பின்னர் வைத்­துக்­கொள்­ளுங்கள். குழப்­பி­வி­டா­தீர்கள் என்று கோரினார்.

இதே­ச­ம­யத்தில் அங்­கி­ருந்த ஏனைய சிலரும் இவ்­வா­றான கருத்தை முன்­வைத்­த­தோடு அதற்கு அப்பால் சென்ற சிலர் இது ஊட­க­மா­நாடு அல்­லவே. அஞ்­ச­லிக்­கூட்டம். வினாக்­களை தொடுக்­கா­தீர்கள் எனக்­கூ­றி­னார்கள்.

இருப்­பினும் குறித்த ஊட­க­வி­ய­லாளர், இதற்கு பதி­ல­ளித்­தே­யா­க­வேண்டும் என்று கூறிய நிலையில் அங்­கி­ருந்த நிகழ்வு உத­வி­யா­ளர்­களால் அவர் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அழைத்­துச்­செல்­லப்­பட்டார்.

இதற்கு ஏக­கா­லத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர், எனது உரையைப் பற்றி யாரா­வது பேசு­வார்­க­ளாயின் அதனை நன்கு வாசித்து விட்டு பேச­வேண்டும். நான் என்ன பேசினேன். எப்­போது பேசினேன் என்ற விடயம் எனக்கு நன்கு நினை­வுள்­ளது. இந்த விட­யத்தை தொடர விரும்­ப­வில்லை என்று கூறி தனது உரை­யினை மேலும் தொடர்ந்தார்.

அதே­நேரம் நினை­வேந்­தலின் பிர­தான ஈகைச்­சுடர் ஏற்­று­வ­தற்கு வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­தான நினைவுச் சின்­னத்தின் அருகில் இருந்த எஸ்.லதா எனப்­படும் பெண்­ம­ணி­யொ­ருவர், அனை­வரும் நான் சொல்­வ­தையும் சற்று கேளுங்கள். நாங்கள் இந்த மண்­ணிற்­கு­ரி­ய­வர்கள். இதே­யி­டத்தில் அவ­லத்­திற்­குள்­ளாகி தலை­கு­னிந்து நின்­ற­வர்கள். எங்­க­ளுக்கு பேசு­வ­தற்கு உரிமை இருக்­கின்­றது என்று ஆக்­ரோ­ச­மான தொனியில் வார்த்­தை­களை வெ ளியிட்டார்.

இந்த நிகழ்வை வைத்து அர­சியல் செய்­யப்­பார்க்­கின்­றார்கள். இங்கு அர­சியல் செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. எங்­களின் பிள்­ளை­களை பறி­கொ­டுத்து விட்­டுத்தான் அஞ்­சலி செலுத்த வந்­தி­ருக்­கின்றோம். அதனை வைத்து அர­சியல் நாட­­கமாடி பிழைக்­கா­தீர்கள் என்­ற­வாறு வார்த்­தைப்­பி­ர­யோ­கங்­களை செய்தார்.

நிகழ்வின் ஏற்­பாட்­டார்கள் அவரை பொறு­மை­காக்­கு­மாறு கோரி­ய­போதும் குறித்த பெண்­மணி நிறுத்­து­வ­தாக இல்­லாத நிலையில் அவ­ருடன் இணைந்து கொண்ட மேலும் பல பெண்­களும், வயோ­திப மாது­களும் கண்ணீர் சிந்­தி­ய­வாறு, எங்­களை வைத்து பிழைப்பு நடத்­தா­தீர்கள். இத்­தனை நாட்கள் எங்கு போயி­ருந்­தீர்கள் என்­றெல்லாம் வினாத்­தொ­டுத்­தார்கள்.

எனினும் இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் தனது உரையை நிறைவு செய்­தி­ருந்தார். அதன்­பின்னர் குறித்த நிகழ்வின் பிர­தான நிகழ்­வான ஈகைச்­சுடர் ஏற்றும் வைபவம் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த ஏக காலத்தில் அதனை சூழ்ந்­தி­ருந்த மேலும் பல பெண்கள், ஆண்கள் என அனை­வரும் கடுமையான விமர்சனங்களை வௌியிட ஆரம்பித்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மெய்ப்பாதுகாவலர்களின் உதவியுடன் அங்கிருந்து பிரதான நிகழ்வுக்காக அமைக்கப்பட்டிருந்த பதாகைக்கு பின்புறமான இருந்த நடைபாதை வழியாக எதிர்க்கட்சித்தலைவர் வௌியேறிச் சென்றார்.

அவர் வௌியேறிச்சென்ற பின்னரும் கூட ஒரு சில அரசியல்வாதிகள் மீது பொதுமக்கள் தமது விமர்சனங்களை ஊடகவியலாளர்களும், ஏனைய அரசியல்வாதிகளுக்கும் தெரிவித்து கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-19#page-1

சாட்­சி­யங்­க­ளின்றி நடை­பெற்ற இறு­தி­யுத்­தத்தின் உண்­மைகள் உடன் கண்­ட­றியப்­பட வேண்டும்

 

எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்தல்

(முள்­ளி­வாய்க்­கா­லி­லி­ருந்து ஆர்.ராம்)

சாட்­சி­யங்­க­ளின்றி நடை­பெற்ற இறுதி யுத்­தத்தின் உண்­மைகள் கண்­ட­றி­யப்­பட்டு மீண்டும் நிக­ழாமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்­ளார்.

பாரிய ஆழ­மான ஆட்சி மாற்­ற­மொன்று தேவை­யா­க­வி­ருந்தால் அவை ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் எனத் தெரி­வித்­த அவர் முள்­ளி­வாய்க்­காலில் 60ஆயிரம் மக்­களே வாழ்ந்­தார்கள் என்­பது தவறு எனவும்  4இலட்சம் மக்­களே வாழ்ந்­துள்­ளார்கள் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.  

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலின் எட்டாம் ஆண்டு நிகழ்வு நேற்று வியா­ழக்­கி­ழமை மாபெரும் கொடூரம் நிகழ்ந்­தே­றிய முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் திடலில் நடை­பெற்­றி­ருந்­தது. இந்­நி­கழ்வில் பங்­கு­பற்­றி­யி­ருந்த எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

வைகாசி மாதம் 18ஆம் திக­தி­யான இன்று முள்­ளி­வாய்க்­கா­லிலே மிகவும் முக்­கி­ய­மான நிகழ்­வொன்று நடை­பெ­று­கின்­றது. 30வருட கால­மாக நடை­பெற்ற யுத்தம் இந்த பிர­தே­சத்தில் தான் நிறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

அந்த யுத்­தத்தில் மடிந்த மக்கள் அனை­வ­ரி­னதும் ஆத்மா சாந்­தி­ய­டை­வ­தற்­காக அஞ்­சலி செலுத்­து­வ­தற்­கா­கவும் மரி­யாதை செலுத்­து­வ­தற்­கா­கவும் இந்த இடத்­திற்கு அனை­வரும் வருகை தந்து கூடி­யி­ருக்­கின்றோம்.

நான் கூறிய கார­ணங்கள் இந்த நிகழ்வின் முக்­கி­யத்­து­வத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. இந்த யுத்தம் ஏன் நடை­பெற்­றது. முப்­பது வருட கால­மாக யுத்தம் ஏன் நீடித்­தது. அந்த யுத்­தத்தின் உண்­மை­யான குறிக்கோள் என்ன? அந்தக் குறிக்­கோளை நாங்கள் அடைந்­தி­ருக்­கின்­றோமா?

இனிமேல் காலத்தில் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத வகையில் நிலை­மைகள் தற்­போது மாறி­யி­ருக்­கின்­ற­னவா? மாற்­ற­ம­டை­ய­வேண்­டிய தேவை இருக்­கின்­றதா? மாற்றம் அடை­ய­வேண்­டிய தேவை இருந்தால் அந்த மாற்றம் அடை­வ­தற்கு என்ன நடை­பெற வேண்டும்.

இவ்­வி­த­மான பிரச்­சி­னை­க­ளுக்கு இன்­றைக்கு நடை­பெறும் நிகழ்வு பதி­ல­ளிக்க வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் பார்க்­கையில் முதலில் உண்மை அறி­யப்­பட வேண்டும். உண்­மையின் அடிப்­ப­டையில் நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும். நீதியின் அடிப்­ப­டையில் அங்­க­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பரி­காரம் வழங்­கப்­பட வேண்டும்.

உண்மை, நீதி, பரி­காரம் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் ஒரு நிரந்­த­ர­மான சமா­தானம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இது அவ­சி­ய­மான தேவை­யாகும்.

சில­பல கார­ணங்­களின் நிமித்தம் இந்த நாட்டில் யுத்தம் ஏற்­பட்­டி­ருந்தால் அவ்­வி­த­மான யுத்தம் மீண்டும் ஏற்­ப­டா­தி­ருக்க வேண்­டு­மா­க­வி­ருந்தால் என்ன செய்ய வேண்டும் என்­பதை பரி­சீ­லிக்க வேண்டும்.

இந்த நாட்டின் ஆட்சி முறையில் பாரிய ஆழ­மான மாற்­றங்கள் ஏற்­பட வேண்­டு­மா­க­வி­ருந்தால் அவை ஏற்­ப­ட­வேண்டும். அத­ன­டிப்­ப­டையில் தான் இந்த நாட்டில் நியா­ய­மான நிரந்­த­ர­மான சமத்­து­வ­மான சமா­தானம் ஏற்­ப­டக்­கூ­டிய வழி பிறக்கும் என்­பதை எல்­லோரும் உணர்ந்து கொள்­ள­வேண்டும்.

அது­மட்­டு­மன்றி இவ்­வி­த­மான சம்­ப­வங்கள் இனி­மேலும் நடை­பெ­றா­தி­ருப்­ப­தற்­கான உத்­த­ர­வாதம் அளிக்­கப்­பட வேண்டும். நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். இந்த நிகழ்வு முள்­ளி­வாய்க்­காலில் நடை­பெ­று­கின்­ற­போது இந்த நிகழ்வில் இந்த நாட்டில் உள்ள மக்கள் அனை­வரும் மாத்­திரம் அல்ல பௌத்த, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மத­கு­ரு­மார்கள் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருக்­கின்­றார்கள். இந்த நிகழ்வை சர்­வ­தேச சமு­கமும் பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இச்­ச­ம­யத்தில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் கேள்­வி­தொ­டுக்­கப்­பட்டு இடை­யீடு செய்­யப்­பட்ட நிலையில் தொடர்ந்தும் உரை­யாற்­றிய சம்­பந்தன், என்­னு­டய உரையைப் பற்றி இங்கு யாரா­வது பேசு­வ­தாக இருந்தால் அந்த உரையை முழு­மை­யாக வாசித்த பின்­னரே பேச­வேண்டும். என்ன விட­யத்தை பேசினேன். என்ன விட­யத்தை நான் பேச­வில்லை என்­பது எனக்கு நன்கு தெரியும். ஆகவே அந்த விட­யத்தை நான்­தொ­ட­ர­வில்லை.

எனது உரையின் ஆரம்­பத்­திலே உண்­மைகள் அறி­யப்­ப­ட­வேண்­டு­மென்று நான் கூறி­யி­ருந்தேன். உண்­மைகள் அறிப்­ப­டு­வ­தாக இருந்தால், யுத்­தத்­தின்­போது நடை­பெற்ற சம்­ப­வங்கள் வௌிவ­ர­வேண்டும். உண்மை வௌிவ­ர­வேண்டும்.யுத்தம் சாட்­சி­யங்கள் இல்­லாது நடத்­தப்­பட்­டுள்­ளது.

யுத்தம் தீவி­ர­ம­டை­வ­தற்கு முன்­ன­ப­தாக 2008ஆம் ஆண்டு இந்­தப்­ப­கு­தியில் கட­மை­யாற்­றிக்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் அதி­கா­ரிகள், ஐ.நாவின் அதி­கா­ரிகள், சர்­வ­தேச செஞ்­சி­லுவை சங்க அதி­கா­ரிகள், உள்நாட்டு வௌிநாட்டு பத்திரிகையாளர்கள் என எவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இறுதி யுத்தத்தின் போது இந்த பிரதேசத்தில் 60ஆயிரம் மக்களே வாழ்ந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள். உண்மையிலேயே இந்தப் பிரதேசத்தில் 4இலட்சம் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அதன் காரணத்தால் மக்களின் இழப்புக்கள் இந்தளவிற்கு உயர்வாக காணப்படுகின்றது.

ஆகவே தான் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன். எமது மக்களுக்காக நாம் அனைவரும் கூடி எமது மரியாதையையும் நினைவேந்தலும் ஒன்றாச் செய்கின்றோம் என்றார். 

சம்பந்தன் தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கே முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டார்!

சம்பந்தன் தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கே முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டார்!

சம்பந்தன் தனது துரோகத்தனத்தை மறைப்பதற்கே முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொண்டார்!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது துரோகத் தனங்களை மறைப்பதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டார் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அரசியலை மாகாணசபைக்குள் முடக்கும் செயற்பாடுகளையே சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுவந்ததாகவும், அதற்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் இணங்கவில்லையெனவும், இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு இனத்தையே சிறிலங்கா அரசாங்கம் அழித்ததாகவும் தெரிவித்த அவர், அதன் காரணமாகவே வடக்கு மாகாண சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வில் தமது கட்சி கலந்துகொள்ளவில்லையெனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை தமிழ் மக்கள் பேரவை நிகழ்த்தியிருந்தால் தாம் இதில் கலந்துகொண்டிருப்போம் எனவும் தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் அரசியலை மாகாணசபைக்குள் முடக்குவதற்கு துணைபோன இரா.சம்பந்தன் தனது துரோகத்தனத்தை மறைப்பதற்காகவே இந்நிகழ்வில் கலந்துகொண்டார் எனவும் குற்றம் சுமத்தினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது மக்களைக் காப்பாற்றுவதற்காக தான் பல தடவைகள் சம்பந்தன் அவர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது அவர் அதனை நிறுத்திவைத்துவிட்டு இந்தியாவில் மறைந்திருந்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

http://thuliyam.com/?p=68250

 

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு – நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு - நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஏற்பட்ட மக்களது எதிர்ப்பினைச் சமாளிக்கப் பத்திரிகையாளர்ச் சந்திப்பொன்றை நடாத்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்ட முயற்சி முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் உடன்பாடின்மையால் தடைப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் எனது உரையில் அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டதாகத் தெரிவித்த முதலமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பினைத் தவிர்த்து சென்றுள்ளார்.

இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை களத்தில் நின்றிருந்த முன்னாள் கள ஊடகவியலாளர் சிவகரன் விளக்குகையில்:

வழமைபோலவே முள்ளிவாய்க்காலில் வடக்கு மாகாணசபையால் நினைவு நிகழ்வுக்கு என ஒழுங்கு செய்த இடத்தில் பொது மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். வழமைக்கு மாறாக இம்முறை தூர இடங்களில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் எந்தெந்த இடங்களில் இருந்து யார் யார் தலைமையில் பேரூந்துகள் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்படும் என்ற விளம்பரங்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. இவ்வாறு தூர இடங்களில் இருந்தும் பேரூந்துகளில் ஒரு தொகை மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு வந்திருந்தனர்.

வழமையாகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அந்தப்பகுதியில் இராணுவப்புலனாய்வாளர்களின் கண்காணிப்பு அதிகரிக்கப்படுவது வழக்கம். இம்முறையும் எந்தக்குறையும் இல்லாமல் அவர்கள் தங்கள் கடமையை செய்து கொண்டிருந்தார்கள். இம்முறை இராணுவப்புலானாய்வாளர்களுடன் விசேட அதிரடிப்படை படைப்பிரிவும் வந்திருந்தது. காலை மணி 9.00 முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருடத்தில் ஒரு முறை மட்டும் வந்து போகும் சொகுசு வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு வாகனங்களும் வந்ததும் வாகனத்திலிருந்து சொகுசு மனிதர்கள் கீழ் இறங்குவதைப் பார்க்க முடிந்தது.

இவ்வாறு வந்த வாகனங்களின் ஒன்றுக்கு பின்னாலும் அருகிலும் பாதுகாப்புக் கடமைச் செய்யும் பொலிசார் ஓடிவந்துகொண்டிருக்க கறுப்பு நிற அதிசொகுசு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இறங்க அவரை கைத்தாங்கலாக கூட்டிவருகின்றனர் ஏற்பாட்டாளர்கள். கூடவே சுமந்திரனும் வருகிறார். அஞ்சலி நடக்குமிடத்திற்குச் சம்பந்தர் வந்ததும் ஐயா வந்திட்டார் தொடங்குவோம் என சில குரல்கள், இல்லையில்லை 9.30 இற்கு இன்னும் 20 நிமிடமிருக்கு என்று சில குரல்கள் வடமாகாண முதலமைச்சர் ஏற்கனவே நினைவிடத்திற்கு வந்துவிட்டார். நினைவிடத்தில் ஏற்கனவே வந்திருந்த முதலமைச்சரை சம்பந்தர் சந்திக்கிறார். ஊடகவியலாளர்கள் எல்லோரும் ஓடியோடி புகைப்படம் எடுக்கிறார்கள். இரு நாட்டுத்தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வது போன்ற காட்சி ஊடகவியலாளருக்கு.

முதலமைச்சரும், சம்பந்தனும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக்கொள்ளும் அந்த இடைவெளிக்குள் ஐயாவுக்கு கதிரை போடுங்கோ என குரல்கள். உடனடியாகவே கதிரை போடப்படுகிறது. சம்பந்தன் உட்கார்ந்து கொள்கிறார். பின்னர் இன்னொரு கதிரை கொண்டுவந்து முதலமைச்சருக்குப்போடப்படுகிறது. சம்பந்தருக்கு அருகில் முதலமைச்சர் இருக்கவே அடுத்தடுத்து கதிரைகள் போடப்படுகின்றன விழாவுக்கு வந்திருக்கும் அதிதிகள் வரிசையாக சம்பந்தருக்கு அருகிலிருந்து ஊடகங்களுக்குக் காட்சிகொடுக்க முண்டியடித்துக் கதிரைகளைப் பிடித்துக்கொள்ளின்றனர்.

இப்போது நேரம் காலை 9.20 அஞ்சலி நிகழ்வுக்கு 10 நிமிடங்கள் இருக்கின்றன. அஞ்சலி நிகழ்வை ஒழுங்கு படுத்துகின்றவர்கள் ஒலிபெருக்கியில் தகவல்களை வழங்கிக்கொண்டிருக்க நேரம் 9.30 ஐ எட்டுகிறது. இப்போது நிகழ்வை ஏற்பாடு செய்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஒலிவாங்கியில் அறிவிப்புக்களை விடுக்கிறார்.

முதலில் 3 நிமிட மௌன அஞ்சலி ( விடுதலைப்புலிகள் ஒரு நிமிட அகவணக்கம் தான் செலுத்துவார்கள்). மௌன அஞ்சலியின் பின்னர் முதலமைச்சரை உரையாற்ற அழைக்கிறார் ரவிகரன். முதலமைச்சர் தனது இருக்கையிலிருந்து எழுந்து உரையாற்ற வருகிறார்.

முதலமைச்சரின் கால்களைப்பிடித்து சில பெண்கள் கண்ணீர் விட்டவாறு ஐயா சம்பந்தனை கலையுங்கோ அவன் இங்க வேண்டாம், அவன் துரோகி அவனை போகச்சொல்லுங்கோ என்று கண்ணீர்விட்டு அழுகின்றனர். முதலமைச்சரால் அந்தப்பெண்களை சமாதானப்படுத்த முடியவில்லை. ஏற்பாட்டாளர்கள் ஒருவாறு அந்தப்பெண்களைச் சமாதானப்படுத்தி முதலமைச்சரை உரையாற்றும் இடத்திற்கு அழைத்துவருகின்றனர்.

முதலமைச்சர் உரையாற்றுகிறார். எல்லோரும் முதலமைச்சரின் உரையை அமைதியாக செவிமடுக்கின்றனர். முதலமைச்சர் உரையாற்றி முடிகிறது. வழமையாக முதலமைச்சர் உரையாற்றி முடிந்ததும் முதலமைச்சர் சுடரேற்ற ஏனையோர்கள் சுடரேற்றுவார்கள். இம்முறை முதலமைச்சர் உரையாற்றியதும் ரவிகரன் அறிவித்தல் விடுக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா சிறு உரையாற்றுவார்.

சம்பந்தனை கையில் பிடித்து பேசும் இடத்துக்கு கொண்டுவந்து விடுகின்றார்கள் அவரது பாதுகாப்பாளர்கள். சம்பந்தன் பேச ஆரம்பிக்கிறார். முதலில் அவர் அங்கு வந்திருப்பவர்களுக்கு வணக்கம் சொல்கிறார். வணக்கத்தில் முதலாவதாக அங்கு வந்திருந்த பௌத்த துறவிக்கு வணக்கம் சொல்கிறார். பின்னர் ஒவ்வொருவருக்காக வணக்கம் சொல்லிவிட்டுப் பேசத்தொடங்குகிறார்.

சம்பந்தர் பேசத்தொடங்கவே கூட்டத்தில் கிசு கிசுப்புக்கள் தொடங்குகின்றன. ஏற்கனவே சம்பந்தனை வெளியில் அனுப்புங்கள் என முதலமைச்சரின் கால்களை கட்டிப்பிடித்து மன்றாடிய காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் தாய்மார்கள் சம்பந்தனின் உரையை செவிமடுக்காமல் தமக்குள்ளேயே திட்டத்தொடங்குகின்றனர். ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே புறுபுறுத்துக்கொண்டிருக்கின்றனர். சம்பந்தன் பேச்சை தொடர்கிறார். பாராளுமன்ற அரசியல் பற்றிப் பேசுகிறார்.

இப்போது சம்பந்தருக்கு அருகிலிருந்து சம்பந்தனின் உரையை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த முதன்மை ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தனின் பேச்சை இடைமறித்து ஐயா நீங்க தானே பாராளுமன்றத்தில் பய்கரவாதத்தைத் தோற்கடித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவித்தீர்கள்? என கேள்வி கேட்க அதுவரை தமக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த மக்கள் சம்பந்தன் மீது காரசாரமான வார்த்தைகளை வீசத்தொடங்குகின்றனர் கூட்டத்தில் குழப்பம் எல்லோரும் சம்பந்தன் ஏன் இங்கு வரவேண்டும் என கேள்விகளை கேட்க எங்கும் அல்லோலகல்லோலம். ஏற்பாட்டாளர் சம்பந்தனைத் தொடர்து பேசச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். சம்பந்தர் தொடர்ந்து பேசுகிறார். ஆனால் சம்பந்தனின் பேச்சை யாரும் செவிமடுப்பதாக இல்லை. கூட்டத்தில் ஒரே கூச்சல்.

சம்பந்தர் பேச்சை முடித்துக்கொள்கிறார். இதற்கிடையில் உணர்ச்சிவசப்பட்ட பெண்னொருவர் அந்த இடத்தில் வந்து இந்த இடத்தில் அரசியபேசக்கூடாது என கூச்சலிடுகிறார். அஞ்சலிக்க வந்த மக்கள் அனைவரும் செய்வதறியாது முண்டியடிக்கின்றனர். இந்த இடைவெளிக்குள் முதலமைச்சர் பொதுச்சுடறேற்ற சம்பந்தனும் ஏனையோரும் அஞ்சலி செய்கின்றனர். மறுபக்கத்தில் மக்களின் கூச்சல் குழப்பம் தொடர்கிறது. கானாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும், முள்ளிவாய்க்காலில் உறவுகளைத் தொலைத்தவர்களும் தமது உறவுகளை நினைத்து பெருங்குரலெடுத்து அழுகின்றனர்.

மக்களின் எதிர்ப்பைப் சமாளிக்க முடியாமல் சம்பந்தர் அந்த இடத்திலிருந்து வெளியேறுகின்றார். கூடவே சுமந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்டோரும் வெளியேறுகின்றனர். முதலமைச்சரும் நிகழ்வை முடித்துக்கொண்டு வெளியேறுகிறார். அஞ்சலியிடத்தில் மக்களின் கூச்சல் ஓயவில்லை. சுமந்திரனால் முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் அங்கிருந்த பொதுமக்களோடு முறண்படுகின்றனர். மக்கள் ஆத்திரமடைய ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர்.

இதற்கிடையில் முதலமைச்சருக்கு சுமந்திரனால் தூது விடப்படுகிறது. வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் முதலமைச்சரிடம் போய் ஐயா இங்கு நடந்த பிரச்சியைப் பெரிது படுத்தாமல் மக்களுக்கு விளங்கப்படுத்த சம்பந்தன் ஐயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை செய்ய விரும்புகிறார். அதில் உங்களையும் கலந்து கொள்வேண்டும் என ஐயா (சம்பந்தன்) விரும்புகிறார் என தூது சொல்ல முதலமைச்சர் இல்லை நான் மக்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் இனி சொல்வதற்கு எதுவுமில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது என் மறுத்துவிட்டு முள்ளிவாய்க்காலிலில் இருந்து புறப்பட்டுச் செல்ல சம்பந்தனுக்கு முதமைச்சரின் செய்தி சொல்லப்படுகிறது.

உடனே சம்பந்தர் முதலமைச்சரின் வாகனத்தை பின் தொடருமாறு தன்னுடைய சாரதிக்கு கட்டளை பிறப்பிக்கிறார். முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து வீதியில் முதலமைச்சரை சம்பந்தர் வழிமறித்து இருவரும் தமது சொகுசு வாகனங்களில் கண்ணாடிகளை இறக்கிவிட்டு பேசுகின்றனர். அப்போது சம்பந்தன் முதலமைச்சரிடம் ஐயா ஒருக்கால் வாங்கோ பத்திரிகையாளரை சந்திச்சு இந்த குழப்பம் பற்றி கதைப்பம் என்றவுடன் முதலமைச்சர் இல்லையில்லை நான் மக்களுக்கு சொல்லவேண்டியதொல்லாம் சொல்லிட்டன். நீங்களும் சொல்லவேண்டியதெல்லாம் சொல்லீட்டிங்கள். இனி என்ன சொல்லக்கிடக்கு. எனக்கு வேலை இருக்கிறது என பேச்சை முடித்துக்கொண்டு முதலமைச்சர் புறப்பட்டுச்சென்று விட்டார்.

இது தான் முள்ளிவாய்க்கால் 2017 நினைவேந்தல் கூச்சல் குழப்பத்தோடு முடிந்ததென அவர் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=68275

  • கருத்துக்கள உறவுகள்

அட சும்மும் வந்தவரே.. படங்களில பெரிசா முன்னால காணம். ஒருவேளை சிங்கள ஆமிக்காரங்களோட.. சி ஐ டியோட சேர்ந்து.. கிளைமோர் கண்டுபிடிக்கிற மிசினோட மிணக்கட்டுக் கொண்டிருந்திருப்பார் போல. tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.