Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவும் பெரியண்ணனாக இந்தியா விளங்க வேண்டும்; வடக்கு முதல்வர் கூறுகிறார்

Featured Replies

உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.  

இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு:


கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது  நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா?


பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதைத் தவிர சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை நான் பெற்றிருக்கவில்லை. ஆனால், முன்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த போது நான் அவரை சந்தித்திருந்தேன். அந்த விஜயம் தொடர்பாக மிக மகிழ்ச்சியான நினைவுகளை கொண்டிருக்கின்றேன். எமது ஆலயங்கள் சிலவற்றுக்கு நான் அவருடன் சென்றிருந்தேன்.

குறிப்பிட்ட சில வீடமைப்புத் திட்டங்களையும் திறந்து வைப்பு நிகழ்வில் உடன் சென்றிருந்தேன். ஆனால் அதிலும் பார்க்க முன்னரே பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போது அவரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அந்த மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது குஜராத் மக்களிடமிருந்து அவர் தொடர்பாக கேள்விப்பட்டேன்.

அவர் தொடர்பாக அவர்கள் மிகவும் உயர்ந்த அபிப்பிராயத்தை கொண்டுள்ளனர். அவர் மிகவும் சிறந்த நிர்வாகி என்பதை கண்டறிந்தேன். அவர் செய்யும் பணிகள் யாவற்றிலும் கவனத்தை செலுத்துவதுடன் மிகவும் ஒழுங்கான மனிதராகவும்  அவர் விளங்குகிறார். இந்து என்ற முறையில் நானும் அவரின் வாழ்க்கை முறையை ஒத்த வழியையே எடுத்துக் கொண்டுள்ளேன். அதிகாலையில் எழுந்து யோகாவில் ஈடுபடுகின்றார்.

ஆதலால் அவர் தொடர்பான எனது கணிப்பீடு மிக மிக சாதகமானதாகும். இந்தியாவை மிக உயர்ந்த மட்டத்திற்கு அவர் கொண்டு செல்வார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொருளாதார ரீதியிலும் ஏனைய வழிகளிலும் அவர் இந்தியாவை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வார்.


கேள்வி:  இந்தியத் தமிழர்களுக்கும் இலங்கையில் உள்ளவர்களுக்குமிடையிலான மத, இன உறவுகள் தொடர்பாகவே இந்திய அரசாங்கங்கள் இதுவரை காலமும் கவனத்தைச் செலுத்தி வந்தன. பிரதமர் மோடி இப்போது பெரும்பான்மை பௌத்தர்கள் மத்தியில் உரையாற்றுகின்றார். பௌத்தர்களின் பாரிய பண்டிகையான வெசாக்கிற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.


பதில்: நல்லது. புத்தர் இந்துக்களுக்கு வெளியாள் அல்ல. விஷ்ணுவின் அவதாரமாக துதிக்கப்படுகிறார். ஆதலால் புத்தர் தொடர்பாக நாங்கள் எந்தவொரு பகைமையுணர்வையும் கொண்டிருக்கவில்லை. மோடி அவர்கள் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தவர். ஆதலால் அவர் தலதா மாளிகைக்கு இந்த விஜயத்தின் போது செல்வதில்  என்ன பிழை உள்ளது?

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தொடர்பாக கொள்கையில் அங்கு ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. உண்மையில் சிறப்பாக உள்ளது. பௌத்தர்கள் தொடர்பான நல்லெண்ணம் மிகவும் தேவையானதொன்றாகும். எமது முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு இது மிகவும் இன்றியமையாதது.

இலங்கையிலுள்ள மக்களின் ஒரு பிரிவினர் தொடர்பாக மட்டும் அவர் பக்கச் சார்பாக இருப்பதாக பார்க்க முடியாது. 1987 இலங்கை  இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட போது தமிழர்களுக்கான உத்தரவாதத்தை இந்தியா வழங்கியிருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. ஆதலால் எம்மீது அவர்கள் இப்போதும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள்.  வடக்கு  கிழக்கு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென நான் நினைக்கவில்லை. தென்பகுதி பௌத்தர்கள் தொடர்பாக அந்தக் கொள்கை மாறியிருக்குமென கருதவில்லை.

கேள்வி: டிக்கோயாவில் பிரதமர் மோடி இலங்கையிலுள்ள மற்றைய தமிழ் சமூகத்திற்கு நூறு படுக்கைகளை கொண்ட மருத்துவமனை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டிஷாரால் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய அவர்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர். உங்கள் வடக்கு  கிழக்கு ஈழத் தமிழர்கள்  புராதன தென்னிந்திய இராச்சியங்களை பூர்வீகமாக கொண்டவர்கள். அவர்களுக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று அறியப்பட்ட குழுவினர்களுக்கும் இடையிலான உறவு குறித்து விபரிக்க முடியுமா?


பதில்: அரசியல் ரீதியாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் மற்றும் வட, கிழக்குத் தமிழர்களுக்கிடையிலான தனித்துவத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை. இந்திய வம்சாவளித் தமிழர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் வட, கிழக்கு தமிழர்கள் போன்று நாங்கள் பார்க்கின்றோம். நிச்சயமாக அங்கு சமூக ரீதியான வேறுபாடுகள் இருக்கக்கூடும்.

ஆனால், அது சகல சமூகங்களுக்கும் பொதுவானதாகும். வாழ்க்கையில் ஒருவர் தங்கியிருக்கும் இடத்தில் செய்யும் பணியில் வேறு விடயங்களில் அவை தங்கியிருக்கின்றன. 1977 இல் இருந்து வட மாகாணத்தின் பிரஜைகளாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் பலர் உருவாகியுள்ளனர். ஆதலால் அவர்கள் இப்போது வட, கிழக்கு மாகாணங்களின் அங்கமாக உள்ளனர்.

அவர்கள் எமது மக்கள். இந்நிலையில்  அங்கு பிரதமர் மோடி செல்வதையிட்டு நாம் எதனையும் தவறானதாக பார்க்கவில்லை. 30 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் அவர்களும் அதிகளவுக்கு பாதிக்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிட்ட சிலர் போராளி இயக்கங்களையும் சார்ந்திருந்தனர்.  ஆதலால் வேறுபட்ட வழியில் அவர்கள் பற்றி நாங்கள் நினைக்கவில்லை. 


கேள்வி: இந்தியாவின் கவனம் யாழ்ப்பாணத்திலிருந்து சிங்களவர்களைப் பெரும்பான்மையாக கொண்ட தெற்கிற்கு  அவதானிக்கப்படத் தக்கவித்தில் திரும்புவது குறித்து நீங்கள் கவலையடைந்துள்ளீர்களா? இதன் அர்த்தமானது இலங்கைத் தமிழர்களுக்கு அதிகளவு சுயாட்சி, அதிகளவிலான அதிகாரப் பகிர்வு போன்றவற்றிற்கான இந்தியாவின் ஆதரவு திசை திரும்புவதாக அர்த்தப்படுகிறதா?

பதில்: 1987 இல்  எமது சார்பாக இந்தியா உத்தரவாதம் வழங்கியது. அந்தப் பொறுப்பு இப்போதும் இருந்து வருகிறது. இப்போதும் நல்லிணக்கம் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இலங்கையில் சகல சமூகங்களையும் இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முன்னர் வட மாகாணத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்த நிலையில் இப்போது இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையகத் தமிழர்களிடம் இந்தத் தடவை மோடி செல்வதில் என்ன தவறு உள்ளது?


கேள்வி: இலங்கையிலுள்ள வடமாகாணம் மற்றும் சகல தமிழர்களும் கொழும்புடனும் யாழ்ப்பாணத்துடனும் இந்தியா தனது உறவை எவ்வாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டுமென விரும்புகின்றது என்று குறிப்பிட முடியுமா?


பதில்:  இந்தியா எமது பெரிய அயலவராகும். அவர்களது பொருளாதாரம் மேம்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் தமது அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவைப்பாடு உள்ளது. ஆயினும் அவர்கள் தமது பூகோள அரசியல்  பிரச்சினையை கொண்டுள்ளனர். தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு உள்ளது. இந்தியா போன்று எமக்கு நெருக்கமான நாடொன்று உதவ முடியுமென நான் எதிர்பார்க்கின்றோம். எம்மிடம் அதிகளவான திட்டங்கள் உள்ளன. அவை முன்பே தயாரிக்ப்பட்டவையாகும்.

ஆயினும் அவை கைவிடப்பட்டு விட்டன. போரினால் அல்லது வேறு காரணங்களுக்காக அவை கைவிடப்பட்டன. அந்த விடயங்களை மீள ஏற்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக பலாலியில் விமான நிலையம் பற்றிய விடயமாகும். மற்றும் காங்கேசன்துறையில் துறைமுகம், தனுஷ்கோடி  தலைமன்னார் படகு சேவை போன்ற விடயங்களை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றோம்.

இவை யாவும் முன்னர் இருந்த விடயங்களாகும். அவற்றுக்கு மீண்டும் உயிரோட்டம் அளிப்பது வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு உதவுவதாக மட்டுமன்றி கொழும்பிலுள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் உதவியானதாக அமையும். பிராந்திய விமான நிலையமும் வடக்கு, கிழக்கு காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு போன்ற  இடங்களில் இரு துறைமுகங்களும் பிரயோசனமானதாக அமையும்.

ஒரு கட்டத்தில் நாட்டின் மீன்பிடித் தேவைகளில் 1/3 ஐ முல்லைத்தீவு நிறைவேற்றி வந்தது. இப்போது இவை யாவற்றுக்கும் புத்துயிர்ப்பளித்தல் இந்தியாவிற்கும் இலங்கைகும் வட, கிழக்குத் தமிழர்களுக்கும் அனுசரணையானதாகும்.  சிங்களவர்களும் தமிழர்களும் இந்தியா உதவுக் கரம் நீட்டும் பெரியண்ணனாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.


கேள்வி: முன்னர் நீங்கள் அளித்த பதிலொன்றில் நீங்கள் பயன்படுத்திய வார்த்தை விசனமானதாக இருப்பதை கண்டு கொண்டேன். யுத்தம் முடிவடைந்து விட்ட நிலையில் இந்தியாவின் உதவியை தீர்வு காண்பதற்கு விரும்புவதாக கூறியிருந்தீர்கள். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் பார்வைக்குத் தென்படாத பிளவுகள் இருப்பதை நான் அறிந்துள்ளேன். ஆனால்,  மோதல் என்று எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? உள்நாட்டு விடயமாக கருதப்படும் இதற்கு இந்தியாவால் எவ்வாறு உதவ முடியும்?


பதில்:  இலங்கையில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையில்  கட்டியெழுப்பப்பட்ட சந்தேகமும் வெறுப்புணர்வும் காணப்படுகிறது. அது கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். அரசியல் வாதிகளால் ஏற்படுத்தப்பட்டதென நான் துணிந்து கூறுகிறேன். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த அரசாங்கத்திடம்   தமிழர்கள் சமஷ்டி முறை ஒன்றைக் கேட்டபோது சமஷ்டி பிரிவினை என சிங்களத் தலைவர்கள்  தெரிவித்தனர்.

உண்மையில் மக்களைப் பிரிப்பதிலும் பார்க்க சமஷ்டி அவர்களை ஒன்றுபடுத்துகின்றது. ஆதலால் அவர்களுக்கு சமஷ்டியானது பிரிவினை அல்ல என்பது பற்றி அறிந்து கொள்வதற்கான தெரிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அல்லது அவர்கள் அறிந்து கொள்ள விரும்பியிருக்கவில்லை. இப்போது நாங்கள் சமஷ்டி அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றோம். ஏனெனில், நாங்கள் இந்த நாட்டில் பரஸ்பரம் கௌரவத்துடன் வாழக்கூடியதாக இருக்க வேண்டும்.

 இந்நிலையில் பாரபட்சமாக நடத்தப்படுவதை தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை கொண்டிருக்க நாங்கள் விரும்புகிறோம். அதிகாரப் பகிர்வின் அனுகூலங்கள் தொடர்பாக  சிங்களப் பொது மக்களுக்கு கற்பிப்பது அவசியமாகும். சமஷ்டி என்ற வார்த்தையானது எமது அரசியலமைப்பில் அறிமுகப்படுத்துப்படுவது அவசியம். ஏனெனில், அரசியலமைப்பில் சமஷ்டி என்ற வார்த்தை இல்லையென கூறுவதற்கு ஆற்றல் கொண்ட நீதிபதிகளை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

இதன் அர்த்தம் இப்போதும் நாங்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குள் இருக்கின்றோம் என்பதாகும். இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டடிருந்தன. அவை எமது நீதிபதிகளால் பிரிக்கப்பட்டன. அனுகூலங்கள் தொடர்பாக சிங்களப் பொதுமக்களுக்கு கற்பிக்கக்கூடியதாக இருக்குமானால் வடக்கு, கிழக்குக்காக அதிகாரப் பகிர்வில் அதி உச்சபட்சத்தை கொண்டிருக்க முடியும். ஒரே நாடாக ஒன்றாக வாழ்வதற்கு இந்நாட்டில் சாத்தியம் என நான் நினைக்கின்றேன். 


கேள்வி: இந்த விடயத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கான சாத்தியப்பாடு எவ்வாறு?


பதில்:   இந்தியாவினால் உதவ முடியும். இரு சமூகங்களினாலும் இந்தியா ஏற்றுக் கொள்ளபபட்ட ஒன்றாக உள்ளது. யாவற்றுக்கும் மேலாக 13 ஆவது திருத்தத்தை இந்தியாவே எமக்கு வழங்கியிருந்தது. தமிழர்களுக்கான உத்தரவாதமளிப்பவர்களாக இந்தியா விளங்கியது. இந்திய  இலங்கை உடன்படிக்கை 1987 இல் கைச்சாத்திட்ட போது அதிகபட்ச சுயாட்சியை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கும் விதத்திலான திருத்தம்  கொண்டுவரப்பட்டிருந்தது.  ஆதலால் இலங்கையிலுள்ள இரு சமூகங்களுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்த இந்தியாவினால் முடியும். கௌரவம், சமத்துவத்துடன்  சமூகங்கள் வாழ்வதற்கான அங்கீகாரத்தை வழஙக முடியும்.


கேள்வி: ஏனைய இரவில் மோடியுடன் இராப்போசன விருந்துபசார கலந்துரையாடலை நீங்கள் மேற்கொண்டிருந்தீர்களா?


பதில்:  இல்லை. அவரிடமிருந்து மேசையின் மறுமுனையில் நான் இருந்தேன். ஆதலால் எந்தவொரு அரசியலையும் பேசுவதற்கான வாய்ப்பை நாங்கள் கொண்டிருக்கவில்லை.  ஆனால், வட மாகாணத்திற்கு கடந்த தடவை அவர் வருகை தந்திருந்த போது நான் கலந்துரையாடியிருந்தேன.


கேள்வி: அவர் என்ன கூறியிருந்தார்?


பதில்:  பிரதமர் மோடி மிகவும் கவனமானவர். அவர் தனது முன்னுரிமைகளை பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் அவர் மிகவும் ஆர்வத்துடன் செவிமடுப்பவர். அதனை மட்டுமே என்னால் கூற முடியும்.

http://www.thinakkural.lk/article.php?article/yawqrjrxrb293325766f01626662oeoul8f3d34b93a36a2301dffc9lfe3u#sthash.z0hyR7hH.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவைப் பெரியண்ணாவாக ஒப்பிடுவது மகா தவறு!

வேண்டுமானால்...மாமியாராக ஒப்பிடலாம்! 

3 minutes ago, புங்கையூரன் said:

இந்தியாவைப் பெரியண்ணாவாக ஒப்பிடுவது மகா தவறு!

வேண்டுமானால்...மாமியாராக ஒப்பிடலாம்! 

சகுனி, கூனி தான் ஹிந்தியாவின் பாத்திரத்துக்கு பொருத்தமான பெயர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

சகுனி, கூனி தான் ஹிந்தியாவின் பாத்திரத்துக்கு பொருத்தமான பெயர்கள்!

அப்படியாயின்...மாமா முறை தான் பொருந்தும்!:cool:

  • கருத்துக்கள உறவுகள்

வட  மாகாண முதலமைச்சர்.... இந்தியாவை பெரியண்ணனாக ஒப்பிட்டதை பார்க்க,
எனது தலையை... சுவருடன் முட்ட  வேண்டும் போல் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களே வேண்டாவிருப்பாக இந்தியாவை பெரியண்ணாவாகவும் அண்ணியாகவும் பார்க்கும் பொழுது ....நாங்களும் பெரியண்ணாவாக பார்ப்பதில் தப்பில்லை.....அது சரி சிங்களவர்கள் எங்கனட சின்னண்ணா?:10_wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, புங்கையூரன் said:

இந்தியாவைப் பெரியண்ணாவாக ஒப்பிடுவது மகா தவறு!

வேண்டுமானால்...மாமியாராக ஒப்பிடலாம்! 

8 hours ago, போல் said:

சகுனி, கூனி தான் ஹிந்தியாவின் பாத்திரத்துக்கு பொருத்தமான பெயர்கள்!

6 hours ago, தமிழ் சிறி said:

வட  மாகாண முதலமைச்சர்.... இந்தியாவை பெரியண்ணனாக ஒப்பிட்டதை பார்க்க,
எனது தலையை... சுவருடன் முட்ட  வேண்டும் போல் உள்ளது.  

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாததுகளுக்கு சடப்பொருள் என்றுதான் சொல்ல வருகின்றது.:cool:

 

1 hour ago, putthan said:

சிங்களவர்களே வேண்டாவிருப்பாக இந்தியாவை பெரியண்ணாவாகவும் அண்ணியாகவும் பார்க்கும் பொழுது ....நாங்களும் பெரியண்ணாவாக பார்ப்பதில் தப்பில்லை.....அது சரி சிங்களவர்கள் எங்கனட சின்னண்ணா?:10_wink:

சபை குழப்புறன் எண்டு கோவிக்காதேங்கோ......நீங்கள் அண்ணியெண்டு சொல்ல வெளிக்கிட்டது ஆரை? :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா கோஸ்டி இந்தியாவை அண்ணியாத்தான் பார்க்கும்...:10_wink:

10 minutes ago, குமாரசாமி said:

 

 

சபை குழப்புறன் எண்டு கோவிக்காதேங்கோ......நீங்கள் அண்ணியெண்டு சொல்ல வெளிக்கிட்டது ஆரை? :grin:

 

 

ஏற்கனவே தமிழரை கொலைசெய்ய உதவியவர்கள் இவர்கள்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இப்ப என்ன உதவியை எதிர்பாக்கிறார்? டெங்கு நுளம்புகளை கொலை செய்யவாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அப்ப முதலமைச்சர் ஏன் இந்தியா பக்கம் தாவுகிறார் ஏன் என்று  தெரியவில்லை ஆருக்கு தெரியும் அரசியல்  லாபமாக இருக்குமோ என்ன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.