Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’

Featured Replies

’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’
 

-எஸ்.நிதர்ஷன்

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார்.

இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர்.

வடக்கிலும் உணவு பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் திரட்டப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணத்து மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் இந்த பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு பொருட்கள் சேர்க்கும் பணிகள் எதிர்வரும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. இவ்வாறு எமக்கு கிடைத்துள்ள பொருட்களை எதிர்வரும் வாரத்திற்குள் அனுப்பி வைக்கவுள்ளோம். இந்த உதவிகள் இருபகுதி மக்களிடையேயும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் என தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/’தென்பகுதியினருக்கு-உதவ-யாழ்--மக்கள்-ஆர்வத்துடன்-உள்ளனர்’/71-197834

  • தொடங்கியவர்

யாழில் இருந்து பாதிக்கப்பட்ட தெற்கு மக்களுக்கு 10 லொறிகளில் நிவாரண உதவி 

 

தெற்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர் உணவு மற்றும் இதர பொருட்கள் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

IMG_5776.JPG

தெற்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் கடந்த சில நாட்களாக உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.

IMG_5781.JPG

பல பொது அமைப்புக்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.

IMG_5783.JPG

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு இன்று நண்பகல் தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

IMG_5787.JPG

இதேவேளை, யாழ்.மாவட்ட செயலகத்தினால் யாழ்.வணிகர் சங்கத்துடன் இணைந்து சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களும் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

IMG_5804.JPG

மேலும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட உதவிப் பொருட்களும் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

IMG_5817.JPG

மொத்தமாக யாழ்.மாவட்டத்தில் சேரிக்கப்பட்ட பொருட்கள் சுமார் 10 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

IMG_5832.JPG

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் சேரிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் இன்று தெற்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_5836.JPG

IMG_5838.JPG

IMG_5844.JPG

 

 

Tags

http://www.virakesari.lk/article/20562

 
 
 
 
வடக்கின் உதவிக்கரங்கள்...
 

image_5be7f4aeae.jpgநாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக, வடமாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றினால் அளிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள், இன்று பிற்பகல் 2 மணியளவில், வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்து, தெற்கை நோக்கிப் புறப்பட்டன. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் தலையீட்டின் கீழ், இந்த நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

image_9fd32d149b.jpgimage_2d88880696.jpgimage_1ceab46ba7.jpgimage_043ffe0aaa.jpgimage_d80065f193.jpgimage_131b6bf625.jpgimage_c9af069b23.jpgimage_8253f8f10f.jpgimage_59be3f638b.jpgimage_a5385a4ccc.jpg

  •  

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/வடக்கின்-உதவிக்கரங்கள்---/46-197871

  • தொடங்கியவர்

அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு கிளிநொச்சியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

FB_IMG_1496390358169.jpg

நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பிரதேச செயலகங்களும் இணைந்து கிளிநொச்சி வாழ் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் வழங்கிய உணவுப்பொருட்களை நேற்றைய தினம் (1.6.2017)  அரச அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம்  தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் காலி மாவட்ட செயலகத்தில்   கையளித்தனர்

உலர் உணவு, மருத்துவ பொதிகள் மற்றும் ஆடைகள் உட்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேற்பட்ட நிவாரணப்பொருட்கள் மூன்று பார ஊர்திகளில் எடுத்து செல்லப்பட்டன.

இப்பெருந்தொகையான நிவாரணப்பொருட்களை வழங்கிய மாவட்ட மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அரச அதிபர் தனது நன்றிகளை தெரிவித்ததோடு இது ஒரு நல்லெண்ண செயற்பாடாகவும் அமையும் எனவும் தெரிவித்தார்.

image-0-02-06-6cf93661e918f73a37d0bb5d4fimage-0-02-06-be7960af3e1f6df823e9bcc6fd

 

https://globaltamilnews.net/archives/28744

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் செயல் சிறப்பாக உள்ளது. இதற்கு பிரதிபலனாக இன்னொரு மிகப்பெரிய இனவாதியை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் நம் சிங்கள மக்கள்..! :love: :D:

  • தொடங்கியவர்

தெற்கிற்கு உதவிக்கரம் நீட்டிய வடக்கு மக்கள்

 


தெற்கிற்கு உதவிக்கரம் நீட்டிய வடக்கு மக்கள்
 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தென் மாகாண மக்களுக்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

வட மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை தெற்கிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வை அடுத்து நிவாரணப் பொருட்கள் இன்று முற்பகல் தெற்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் 5 லொறிகளில் முப்படையினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களை தெற்கிற்கு அனுப்பி வைப்பதனூடாக வடக்கிற்கும் தெற்கிற்குமான புரிந்துணர்வு மேலும் கட்டியெழுப்பப்படும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

 

http://newsfirst.lk/tamil/2017/06/தெற்கிற்கு-உதவிக்கரம்-நீ/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழ் மக்களின் செயல் சிறப்பாக உள்ளது. இதற்கு பிரதிபலனாக இன்னொரு மிகப்பெரிய இனவாதியை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் நம் சிங்கள மக்கள்..! :love: :D:

இன்னார் செய்வார் ஒருவர் அவர் நான நன் செயல் செய்வது நன்று.(சத்தியமாய் இதை நான் நான் சொல்ல வில்லை):)

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழ் மக்களின் செயல் சிறப்பாக உள்ளது. இதற்கு பிரதிபலனாக இன்னொரு மிகப்பெரிய இனவாதியை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் நம் சிங்கள மக்கள்..! :love: :D:

கருவிலே இனவாதம் ஊட்டப்பட்டவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கிழக்கிலிருந்தும் செல்ல இருக்கிறது நிவாரண  பொருட் கள் நிதிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இருந்து,  சிங்களவனுக்கு....  ஒரு சதமும், மொடுக்க மாட்டேன்

நான்.... பிறந்த மண் மேல் சத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

விரைவில் கிழக்கிலிருந்தும் செல்ல இருக்கிறது நிவாரண  பொருட் கள் நிதிகள் 

இப்பிடி எத்தனை இழிச்சவாயர்கள் கிழம்பியிருக்கீங்க, லட்சமாக எங்கள் சனம் செத்த போது வெடி கொழுத்தி கொண்டாடிய கூட்டம் அது. நினைவில் கொள்ளுங்கள்

7 hours ago, சுவைப்பிரியன் said:

இன்னார் செய்வார் ஒருவர் அவர் நான நன் செயல் செய்வது நன்று.(சத்தியமாய் இதை நான் நான் சொல்ல வில்லை):)

எத்தனை தரம் அவர் நாண வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசத்தில் தங்கி இருக்கும் சிங்கள ஆளுனர் தன்ர இனவாத நாடகத்தை.. மனிதப் பேரிடர் வேளையிலும் இராணுவ ஆக்கிரமிப்பை பயன்படுத்தி மேற்கொள்வது கீழ்த்தரமான செயல். 

மனிதாபிமான உதவிகளை.. தென்னிலங்கை... வட இலங்கை என்று பிரித்துப் பேசி.. இவர்களே... தேசத்தை இரண்டாக்கிக் காட்டிக் கொண்டு.. நல்லிணக்கம் தேடுவது.. கேலிக் கூத்து. தமிழ் - சிங்கள தேச நல்லிணக்கம் என்பது சாத்தியமில்லை.

ஆனால்.. தமிழர் தேசம்.. சிங்கள தேசத்துக்கு தன் மனிதாபிமானத்தை பேரிடர் வேளையில் நிச்சயம் காட்டும். அது வேறு விடயம். அது முற்றிலும் மனிதாபிமான விடயமாக மட்டுமே பார்க்க்கப்பட வேண்டும். இப்படியான நாடகங்களுக்கு இடமளிக்கக் கூடாது. ஊடகங்கள்.. இவற்றிற்கு முக்கியம் அளிக்காது.. மக்களின் மனிதாபிமான உதவிகளை சரியாக பாதிப்பப்பட்ட மக்களைச் சென்றடைய மட்டும் உதவினால் போதும். tw_angry:

விளம்பரம் அவசியமில்லை.. மனிதாபிமானத்துக்கு. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வடக்கில் இருந்து,  சிங்களவனுக்கு....  ஒரு சதமும், மொடுக்க மாட்டேன்

நான்.... பிறந்த மண் மேல் சத்தியம்.

பணியாளர்கள் சிலர் பணம் சேகரித்து வெள்ள நிவாரணத்துக்கு அனுப்பும்படி என்னிடம் தந்தார்கள். அவர்களிடமே அந்தப் பணம் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் யாரும் தயவு செய்து மனிதாபிமானம் என்று பேசிக்கொண்டு வந்துவிடாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நமக்காக போராடிவன் பட்டினியால் பக்கத்து வீட்டில் சுருக்கிட்டு  தற்கொலை செய்கின்றான்

இவர்கள் வெளியில் உதவ ஆர்வமாக உள்ளார்களாம்

நாசமாப்போக.......

தனக்கு மிஞ்சித்தான் தானமும் தறுமமும்......

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நந்தன் said:

இப்பிடி எத்தனை இழிச்சவாயர்கள் கிழம்பியிருக்கீங்க, லட்சமாக எங்கள் சனம் செத்த போது வெடி கொழுத்தி கொண்டாடிய கூட்டம் அது. நினைவில் கொள்ளுங்கள்

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை அரச திணைக்களங்கள் , காரியாலயங்கள் ,பொது மக்கள்  எல்லோரும்பாதிக்கப்பட்ட மக்களூக்கு உதவ் வேண்டும் என்ற கோரிக்கை இதே மார்கழி மாதம் வெள்ளம் வட கிழக்கில் வந்தால் யார் உதவுவார்கள் ??

 பொது மக்கள்  (வெடி கொழுத்தி கொண்டாடியது  முஸ்லீம் சனம் கூடதான் சுவிட் கொடுத்து , யூஸ்   கூட கொடுத்தார்கள் இன்று கிழக்கை அவர்களிடம் கொடுத்து விட்டு வாழ வில்லையா ?  ஒரு புத்த விகாரை ஊருக்க முளைக்க கூச்சலிடுறம் அவங்கள் குடைந்து கொண்டு கொல்லைப்புறமாக  வந்து கொண்டிருக்கிறார்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.