Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்!

Featured Replies

வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்!

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப் பெற்றுக் கொள்ள இணக்கம்!

 
வடக்குப் பிரச்சினையில் திடீர் திருப்பம்!
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்டாத அமைச்சர்களை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/6879.html

  • தொடங்கியவர்

மக்களின் கடும் எதிர்பாபல் வடக்கு முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லைா பிரேரனை கைவிடப்படுமா? சமரச முயற்சிகள் தொடர்கின்றன.

vikki-sam.jpgக்களின் எதிர்ப்பால் முதலமைச்சருக்கு எதிரான தீர்மானத்தை கைவிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது தொடர்பில் எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், அறிவு ஜீவிகள், புலம்பெயர் அமைப்புக்கள் போன்ற தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் தீர்மானத்தை கைவிட தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டவர்கள்மீது வடக்கு முதலமைச்சர் விட்டுக் கொடுப்பை வழங்க வேண்டும் என கூட்மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புளொட் தலைவர் சித்தார்த்தன் ஊடாக தூது விட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு வடக்கு முதல்வர் மறுப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வடக்கு முதல்வருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சித்தார்த்தன் ஈடுபட்டிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் இரா. சம்பந்தன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக அரசியல் வட்டாரங்களின் ஊடாக தெரிய வருவதாகவும் குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.

 

http://globaltamilnews.net/archives/29880

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

பின்வாங்கும் சம்பந்தன்…முதல்வருக்கு எதிரான பிரேரணை மீளப்பெறப்படுகிறது!

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சை அடுத்து முதல்வருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மீளப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

குற்றம் நிரூபிக்கப்படாத இரு அமைச்ச்சகளை பதவியில் நீடிக்க விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

vigneshvaran.jpg

dcp699797946464-2.jpg

dcp699797946464-3.jpg

 

http://eeladhesam.com/?p=59323

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் செய்தவர்களையும் ஊழல் செய்ததாக நம்பப்படுபவர்களையும் தயவு தாட்சண்யமின்றி அப்புறப் படுத்துவதே முதல்வரின் கடமையாயிருக்க வேண்டும்.  சம்பந்தர் ஐயா அவர்களுக்காக வாக்காலத்து வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.  இது அரசியலல்ல, சமூகத்தின் நன்மை கருதி எடுக்கப்படவேண்டிய  முடிவு.  யாரும் அரசியல் நோக்கில் இதனைச் சிந்தித்தால் அவர்களும் சமூகத்தினால் புறந்தள்ளப்பட் வேண்டியவர்களே!  முதலமைச்சர் சிவிவி யின் கரங்களைப் பலப்படுத்த ஒன்றுபடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரைத் தெரிவு செய்தது தமிழ்மக்கள்.அவரை நீக்க சம்பந்தருக்கோ,சுமத்திரனுக்கோ,மாவைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது.இனப்படுகொலை செய்த அரசாங்கத்தைக் காப்பற்ற கால அவகாசம் கொடுக்கிறார்கள் நீதியை நிலைநாட்டிய விக்கி ஐயாவை நீக்க நினைக்கிறார்கள்.விக்கி ஐயா தங்களுக்கு ஒரு போட்டியாளராக வந்து விடுவாரோ என்று பயந்து முளையிலேயே கிள்ளப் பார்க்கிறார்கள்.இவர்கள் வெட்டிய குழிக்குள் இவர்களே விழப் போகிறார்கள்.சமஷ்டி பெற்றுத் தருவோம் என்று வாக்குகள் பெற்றவர்கள் தமிழருக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள் . அதுவும் ஈபிடிபி,சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தமிழர்களின் கழுத்தை அறுக்கிறார்கள் .தமிழரசுக் கட்சியில் இருக்கும் உறப்பினர்கள் சம்பந்தர்,சுமத்திரன்,மாவை ஆகியோருக்கு அடி பணியாது துணிந்து இந்த விடயத்தில் குரல் கொடுக்கமுன் வரவேண்டும்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர்கள் மதில் மேல் பூனையாக மெளனமாக இருக்காமல் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

'சைக்கிள்' Gap பில் கடா வெட்ட பார்க்குது

அது சரி, ஐங்கர நேசன்  ஐயா நல்லவரு வல்லவரு
என்று நேற்று வரைக்கும் சொல்லிக் கொண்டு திரிஞ்ச சனம்
இப்ப ஏன்  அப்படியே யூ ரேர்ன் அடிச்சு
விக்கி ஐயா வின் தீர்ப்பு தான் சரி என்று சொல்லினம்

அப்ப ஐங்கரநேசன்,
சிறிதரனால் கொண்டு வரப்பட்ட குருகுலராஜா
ஆகியோர் கள்ளர்கள், ஊழல்வாதிகள்  
என்று  ஏற்றுக் கொள்கின்கிறிர்களா ?

இது வரைக்கும் விக்கி ஐயாவும் சரி
வடக்கு மாகாண சபையும் சரி
சாதிச்ச ஏதாவது நினைவுக்கு வருகுதா?

 

Edited by வைரவன்

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, வைரவன் said:

இது வரைக்கும் விக்கி ஐயாவும் சரி
வடக்கு மாகாண சபையும் சரி
சாதிச்ச ஏதாவது நினைவுக்கு வருகுதா?

சாதிக்க முடியாமல் அவர்கள் கைகள் கட்டி போடப்பட்டுள்ளன அடுத்து தமிழனை முட்டாளாக்கும் தமிழரசு கட்சி போல்வெளியால் வீரம்பேசிகொண்டு சிங்களவனுக்கு சாமரம் உள்ளுக்குளால் வீசுவதில்லை குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது தெரிவிக்கிறார்கள் உண்மையை மக்களுக்கு சொல்கிறார்கள் சிறிதரன் போல் gspக்கு நாடகமாடுவதில்லை சுமத்திரன் போல் பூசி மெழுகுவதில்லை வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போது மக்களுக்காக உண்மையை சொல்லி விளங்கபடுத்துகிறார்கள் மக்களுக்கு விளங்குது மொத்தத்தில் உங்களுக்கு எப்படி ?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

சாதிக்க முடியாமல் அவர்கள் கைகள் கட்டி போடப்பட்டுள்ளன அடுத்து தமிழனை முட்டாளாக்கும் தமிழரசு கட்சி போல்வெளியால் வீரம்பேசிகொண்டு சிங்களவனுக்கு சாமரம் உள்ளுக்குளால் வீசுவதில்லை குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது தெரிவிக்கிறார்கள் உண்மையை மக்களுக்கு சொல்கிறார்கள் சிறிதரன் போல் gspக்கு நாடகமாடுவதில்லை சுமத்திரன் போல் பூசி மெழுகுவதில்லை வெளிநாட்டு தூதுவர்கள் வரும்போது மக்களுக்காக உண்மையை சொல்லி விளங்கபடுத்துகிறார்கள் மக்களுக்கு விளங்குது மொத்தத்தில் உங்களுக்கு எப்படி ?

ஏனென்றால் வெளினாடுகளுக்கு ஒன்றும் தெரியாது
என்று அவையளுக்கு எடுத்துச் சொல்லத் தான் சனம் இவர்களுக்கு
வாக்கு போட்டு அனுப்பியை. வெளினாடுகளும் உவர்கள் சொன்னதை
கேட்டு அப்படியே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து சாதிச்சிட்டினம்

விக்கி தலைமையிலான இந்த மாகாணசபை அரசு
ஒரு கையாலாகாத
நிர்வாகத் திறன் அற்ற அரசு
விக்கியர் மகிந்த இருக்கும் வரைக்கும் மாகாணசபைக்கான
அதிகாரம் பற்றி கதைச்சுக் கொண்டு இருந்தார் பிறகு
அதுவும் இல்லை.
வெற்று தீர்மானங்கள் போட்டு
நாட்களை நிரப்பிக் கொண்டு இருந்தவர்
இப்ப தான் கண்ணை முழிச்சு தன்னுடன் இருந்த திருடர்களை
காட்டிக் கொடுக்கின்றார்

உதுல என்ன பகிடி என்றால்
உந்தாளை நம்பி சைக்கிள் கோஷ்டி
களத்தில் இறங்க திரும்பவும் முயலுது

உதுகள்ட வேலையை பார்த்து வெறுத்து
அடுத்த எலக்சனில மகேஸ்வரனின் மனுசிக்கும்
யூ என் பிக்கும் டக்கிளசுக்கும் சனம் இன்னும்
அதிகமாக வாக்கு போட போகுது

ஆனால் வெறும் எதிர்ப்பு
அரசியல் மட்டும் செய்ய தெரிஞ்ச
சைக்கிளுக்கு மட்டும் போடவே போடாது

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு  சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கிறது தமிழர்சுக்கட்சி  இவர்களை  அடுத்த தேர்தலிலதோல்வி பெறச் செய்வது வடக்கு மக்களின் கடமை  அதற்க்காக ஊடகங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்  தற்பொழுது தெரிய வந்திருக்கும்  உள்ளுக்க இருக்கும் கயவர்களைப்பற்றிய பாடம்  இவர்களுக்கு அடுத்த பாடம் கற்பிக்க வேண்டும் 

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனி ஒருவன் said:

மக்களுக்கு  சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கிறது தமிழர்சுக்கட்சி  இவர்களை  அடுத்த தேர்தலில் பெறச் செய்வது வடக்கு மக்களின் கடமை  அதற்க்காக ஊடகங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்  தற்பொழுது தெரிய வந்திருக்கும்  உள்ளுக்க இருக்கும் கயவர்களைப்பற்றிய பாடம்  இவர்களுக்கு அடுத்த பாடம் கற்பிக்க வேண்டும் 

சரி

வேற  யார்??????

அது  உங்களைவிட  அப்புக்காத்தார்களுக்கு  நல்லா  தெரியும்

றரு கீரைக்கடைக்கு  ஏற்பாடு  செய்யுங்க

அதுக்கு  பின்னர் பாருங்க

2  கீரைக்கடையும்  மக்கள் காலடியில் கிடக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

சரி

வேற  யார்??????

அது  உங்களைவிட  அப்புக்காத்தார்களுக்கு  நல்லா  தெரியும்

றரு கீரைக்கடைக்கு  ஏற்பாடு  செய்யுங்க

அதுக்கு  பின்னர் பாருங்க

2  கீரைக்கடையும்  மக்கள் காலடியில் கிடக்கும்..

ம்  அதற்க்கான தருணம்  விக்கி ஐயாவுக்கு கிடைத்திருக்கிறது இனி அரசியல் செய்யப்பழகி கொள்வார் அதற்கேற்றால் போல் அவருக்கு  உன்மையாக மக்களூக்கு சேவை செய்யக்கூடியவர்களை உள் வாங்க வேண்டும் ஆனால் ஏற்கனவே சொன்னேனே சேவை செய்வதற்கென ஒருஆசனம் கேட்டவருக்கு மாவையால் மறுக்கப்பட்டது ஆசனம்  தங்களுக்கு தேவையான ஏன் விசுவாசமான ஆட்களை நிறுத்தி வைத்து தமிழர் மக்களின் விருப்புக்கட்சியான  தமிழரசுக்கட்சியை  களங்கப்படுத்துகிறார்கள்  இனிமேல் இவர்களுக்கு கொஞ்சம் கஸ்ர காலம் குஸ்ர காலமும் ஆரம்பம் 

19060060_489060568102982_180201551807499

Edited by தனி ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனி ஒருவன் said:

ம்  அதற்க்கான தருணம்  விக்கி ஐயாவுக்கு கிடைத்திருக்கிறது இனி அரசியல் செய்யப்பழகி கொள்வார் அதற்கேற்றால் போல் அவருக்கு  உன்மையாக மக்களூக்கு சேவை செய்யக்கூடியவர்களை உள் வாங்க வேண்டும் ஆனால் ஏற்கனவே சொன்னேனே சேவை செய்வதற்கென ஒருஆசனம் கேட்டவருக்கு மாவையால் மறுக்கப்பட்டது ஆசனம்  தங்களுக்கு தேவையான ஏன் விசுவாசமான ஆட்களை நிறுத்தி வைத்து தமிழர் மக்களின் விருப்புக்கட்சியான  தமிழரசுக்கட்சியை  களங்கப்படுத்துகிறார்கள்  இனிமேல் இவர்களுக்கு கொஞ்சம் கஸ்ர காலம் குஸ்ர காலமும் ஆரம்பம் 

விக்கி ஐயா  ஒரு ஆலோசராக  இருக்கலாம்

இனி  அவரை  ஓய்வெடுக்க  அனுமதித்து

இளையவர் ஒருவரை தேடுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

 

5 minutes ago, விசுகு said:

விக்கி ஐயா  ஒரு ஆலோசராக  இருக்கலாம்

இனி  அவரை  ஓய்வெடுக்க  அனுமதித்து

இளையவர் ஒருவரை தேடுங்கள்...

அனால் என்னவோ தெரியல மக்கள் விக்கி ஐயாவை விரும்புகிறார்கள் சம்பந்தர் ஏன் மற்ற அனைத்து உறுப்பினர்களை விடவும் :104_point_left:

Edited by தனி ஒருவன்

  • தொடங்கியவர்

விக்கினேஸ்வரன் சம்மந்தன் சந்திப்பு முற்றுப்பெறாத உடன்பாடுகள் நிச்சமற்ற தன்மையே தொடர்கிறது.

 

vikki-sam.jpg

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு   வடக்கு வாழ் மக்களிடம் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சி தலைவருமான சம்மந்தன் அவசரமாக முதலமைச்சருடன் உரையாடியுள்ளாh்
இவ்வுரையாடலின் போது சம்மந்தன்  சில முன்மொழிவுகளை வைத்து அதன் பிரகாரம் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாக10ம்  ஆனால் சிலவற்றை முதலமைச்சர் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவி வருகிறது என்றும் குறிப்பிடப்படுகிறது.

அதாவது அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் குருகுலராஜா ஆகியோர் அமைச்சு பதிவை இராஜினாமா செய்வது என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது என்றும்இ ஆனால் ஏனைய இரண்டு அமைச்சர்களையூம் கட்டாய விடுப்பு வழங்குவதனையூம் அவர்கள் மீது மேலதிக விசாரணை நடத்துவதனை தவிர்க்குமாறு அத்தோடு நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றுக்கொள்வதாகவூம் சம்மந்தன் விக்கினேஸ்வரனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் அதற்கு விக்கினேஸ்வரன்  மேலதிக விசாரணைகள்  இடம்பெறுவதனை நிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் ஆனால் அமைச்சர்களான சத்தியலிங்கம்இடெனீஸ்வரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை  தீர்மானத்தை இரத்துச் செய்வதாகவூம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உடன்பாடுகள் முற்றுப்பெறாத நிலையில் மாவை சேனாதிராஜா உங்களுடன் தொடர்பு கொள்வார் என கூறி உரையாடலை  சம்மந்தன் முடித்துக்கொண்டதாக முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளாh்

எனவே தற்போது வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இன்னும் நிச்சயமற்ற தன்மையே தொடர்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/29903

  • தொடங்கியவர்

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும்

 

 

முதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்  சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் சமகால நிகழ்வு தொடர்பாக இன்று எமது செய்திச்சேவை  வினாவியபோது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை 3.00 மணி வரை முதலமைச்சருடன் நானும் மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்சும் பேசியுள்ளோம் சம்மந்தன் ஐயாவுடனும் பேசியிருக்கிறேன்.

சம்மந்தன் ஐயா முதலமைச்சருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாறியுள்ளார் இருவரும் சாதகமான மனநிலையில் உள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக தலைவர்கள் பேசியிருக்கவேண்டும் ஆனால் பேசவில்லை ஆனால் இப்போது பேசியுள்ளார்கள்.கூடுதலாக அனைவரும் இணைந்தே இதுதொடர்பாக முடிவுகள் எட்டப்படும் என நினைக்கின்றேன்.

இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது, போராடி இழந்த உயிர்களுக்கு நாம் செய்யும் செயற்பாடா..? இது இதனை அனைவரும் மனதில் இருத்தி செயற்படவேண்டும்.நல்லதே சிந்திப்போம் நல்லதே நடக்கும் எனவும் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/20922

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தீவில் நாம் ஒரு சிறிய தேசிய இனம் நாம் போராடியது, போராடி இழந்த உயிர்களுக்கு நாம் செய்யும் செயற்பாடா..? இது இதனை அனைவரும் ம னதில் இருத்தி செயற்படவேண்டும்.நல்லதே சிந்திப்போம் நல்லதே நடக்கும் எனவும் குறிப்பிட்டார்.

அதுதான்  நீங்கள்  சிங்கள்வரோடை அயிரோப்பிய பாராளுமன்றம் போனனியள் போல....இன்னமும் ஏதாவது வருமான வழி இருக்கா...ரிசாத்துவோடை ஒப்பந்தம் போட்டா இன்னும் இலாபம்..கிளீநொச்சியையும் வித்து விடலாம்...

  • தொடங்கியவர்

வடமாகாண சபையில் தலையிடமாட்டேன்: சம்பந்தன்

 

வடமாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். அதில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.

வடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் லங்காசிறியின் ஊடக சேவைக்கு அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

 

வடமாகாண சபையின் நிலைமை தொடர்பில் அதன் உறுப்பினர்களே முடிவு எடுக்க வேண்டும். எனினும் இது வரையில் வடமாகாண முதலமைச்சரினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டுள்ளன.

இதில் பொதுவான கருத்து என்னவென்றால் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மாத்திரமே முதலமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியும். ஏனைய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்பதே இந்த பிரச்சினைக்கு காரணம்.

அத்துடன், நான் அவருடன் இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கதைத்திருந்தேன். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தொடர்பில் நீங்கள் சுதந்திரமாக செயற்படலாம். ஆனால் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என நான் கூறினேன்.

அதன்போது இந்த விடயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/149219

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.