Jump to content

சர்வதேசத்திற்கு காணொளி விற்பனை செய்யும் நோக்கில் வித்தியா வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை// வித்தியா படுகொலை வழக்கின் செய்திகள்


Recommended Posts

சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளதா ?

மாணவியின் அண்ணா எனது நண்பன்...

சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது என்பது இந்த நீதிமன்றில் கூறும் போது தான் எனக்கு தெரியும் என மாணவி கொலை வழக்கின் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் நீதாய விளக்கம் முன்பாக தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.

சட்டத்தரணிகள் முன்னிலை.

வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், முஸ்லி மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.

எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.

எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்

ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.

13ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.

வழக்கின் ஏழாவது எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,

நான் கொழும்பு மோதரை பகுதியில் வசிக்கின்றேன். இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை என என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவற்றை நான் மறுக்கிறேன்.

இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த சான்று பொருட்களும் , சாட்சியங்களும் இல்லை. குற்ற சம்பவம் நடைபெற்ற கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி நான் கொழும்பில் நின்றேன் என மதுபான சாலை ஊழியர் மற்றும் வெள்ளவத்தை லொட்ஜ் உரிமையாளர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

மாணவியின் அண்ணா எனது நண்பன்.

நான் கொழும்பில் கடை ஒன்றில் வேலை செய்கிறேன். படுகொலை செய்யப்பட்ட மாணவியின் ஒன்று விட்ட அண்ணா காண்டீபன் என்பவர் கொழும்பில் முச்சக்கர வண்டி ஓடுபவர். அவர் எனது நண்பன். அவருக்காகவே மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 15ஆம் திகதி புங்குடுதீவு வந்தேன். உயிரிழந்த மாணவியை எனக்கு தெரியாது. நான் அவரை நேரில் கண்டதே இல்லை. காண்டீபனின் தங்கை என்பதானால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தேன். அத்துடன் புங்குடுதீவில் உள்ள எமது கோயிலில் 17ஆம் திகதி பூஜை இருப்பதனால் அதில் கலந்து கொள்ளும் நோக்குடனும் எனது அம்மாவையும் அன்றைய தினம் கொழும்பில் இருந்து அழைத்து வந்திருந்தேன்.

கோயில் தேருக்கு சென்றோம்.

17ஆம் திகதி புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தேருக்கு சென்று விட்டு வந்த போதே எம்மை போலீசார் கைது செய்தனர். கைது செய்து எம்மை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு அழைத்து சென்று , காவலரணுக்கு பின்னால் உள்ள ஆல மரம் ஒன்றில் எனது கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி பத்தடி உயரத்திற்கு தூக்கி கட்டி விட்டு அடித்து சித்தரவதை புரிந்தார்கள்.

சித்திரவதை செய்தனர்.

அதன் போது 18 கேள்விகள் இருக்கின்றன. அதற்கு பதில் சொல் என கேட்டார்கள். நான் சம்மதித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். திரும்பவும் என்னை மேலே தூக்கி கட்டி விட்டு தாக்கினார்கள். பிறகு மீள இறக்கி விட்டு அதே கேள்வியை திரும்ப கேட்டார்கள் நான் ஒரே பதிலையே திரும்பவும் சொன்னேன்.

பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எம்மை அழைத்து வந்து 18ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தினார்கள். அதேபோல 19ஆம் திகதியும் சட்ட வைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தினார்கள். பின்னர் நீதவான் முன்னிலையில் முற்படுத்தி நீதவானின் உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டோம்.

அண்ணாவுடன் சேர்ந்து மது அருந்துவதில்லை.

எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு ஆனால் அண்ணாமாருடன் சேர்ந்து குடிப்பதில்லை. எனது சித்தப்பாவின் மகன்மாரே மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ் குமார்) மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்.

எனது அண்ணாவான சசிக்குமார் சுவிஸ் நாட்டில் இருந்து வந்திருந்தார். அவர் 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருடத்திற்கு ஒரு முறை இலங்கை வந்து செல்வார். எங்கள் ஊரில் உள்ள கண்ணகி அம்மன் ஆலய திருவுழாவுக்காக அவ்வாறே 2015ஆம் ஆண்டு இலங்கை வந்தார்.

நாம் எந்த திட்டமும் போடவில்லை.

வரும் போது எந்த திட்டத்துடனும் வரவில்லை. மாணவியை கடத்தி , வன்புணர்ந்து கொலை செய்யும் எந்த திட்டமும் எம்மிடம் இருக்கவில்லை. அது எம் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்ற சாட்டு.

புங்குடுதீவில் குற்ற செயல் நடைபெறுவதற்கு முதல் நாள் 12ஆம் திகதி எம்மை வானில் கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்து இருந்தார். அது பொய் நாம் 12ஆம் திகதி கொழும்பில் நின்றோம்.

குற்ற புலனாய்வு துறையினரிடம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை என்ன செய்தேன் எங்கே போனேன் என சகல தரவுகளையும் வாக்கு மூலத்தில் வழங்கி இருந்தேன். என சாட்சியம் அளித்தார்.

அதன் போது மன்று ,

கேள்வி :- 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் என்ன செய்தீர் என வாக்கு மூலத்தில் கூறினீரா ?

பதில் :- ஆம்.

கேள்வி :- நீர் குற்ற புலனாய்வு துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலம் மூல வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் 13ஆம் திகதி என்ன செய்தீர் என அனைத்து தகவலும் உண்டு. அது ஏன் குற்ற சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதியை மாத்திரம் குறிப்பிட்டு அனைத்து தகவல்களையும் வழங்கினீர் ?

பதில் :- நான் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான சகல தகவல்களையும் வழங்கினேன். அந்த தகவல்களை வாக்கு மூலமாக பதியவில்லை. அது ஏன் என எனக்கு தெரியாது.

என பதிலளித்தார். அதை தொடர்ந்து 7ஆவது எதிரியின் சாட்சிபதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.

மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள புங்குடுதீவு வந்தேன்.

அதனை தொடர்ந்து 8ஆவது எதிரியான ஜெயதரன் கோகிலன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,

நான் கொழும்பில் வசிக்கிறேன். இணையத்தள வடிவமைப்பு உள்ளிட்ட கணணி சார் வேலைகளை செய்து வந்தேன். நான் கொழும்பில் இருந்து மாணவியின் இறுதி சடங்குக்காக 15ஆம் திகதி புங்குடுதீவுக்கு வந்திருந்தேன். 17ஆம் திகதி புளியங்கூடல் ஆலய தேர் திருவிழாவுக்கு போட்டு வேட்டியுடன் வாகனத்தில் இருந்த போதே எம்மை சிவில் உடையில் வந்த நான்கு போலீசார் என்னையும் , என்னுடன் சசீந்திரன் , சந்திரஹாசன் , குகநாதன் துஷாந்த் ஆகியோரை கைது செய்தனர்.

எம்மை கைது செய்து மதியம் 2.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் காவலரனுக்கு கொண்டு சென்றனர். அங்கு என்னை கதிரையில் இருத்திவிட்டு , சந்திரஹாசனையும் , துஷாந்தையும் , கோபி எனும் பொலிஸ் கான்ஸ்டபிளும் , இரான் எனும் உப பொலிஸ் பரிசோதகரும் காவலரணுக்கு பின் புறமாக உள்ள பற்றை காட்டுக்குள் இழுத்து சென்றனர்.

45 நிமிடம் அடித்து துன்புறுத்தினார்கள்.

அதன் பின்னர் சந்திரஹாசன் , துஷாந்த் கத்தும் சத்தம் கேட்டது. 45 நிமிடங்களுக்கு பின்னர் இரு பொலிசாரும் என்னிடம் வந்து என்னையும் அந்த பற்றை காட்டுக்குள் இழுத்து சென்று கடுமையான பாரதூரமான சித்திரவதைகளை புரிந்தனர்.

எமக்கு பவுடர் பூசி வீடியோ எடுத்தார்கள்.

பின்னர் எம்மை மீண்டும் காவலரணுக்கு அழைத்து வந்து எம்மை வீடியோ எடுத்தனர். அப்போது அவர்கள் புரிந்த சித்திரவதையால் எனது முகத்தில் இருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. அதனை கழுவ சொல்லி எனது முகத்திற்கு பவுடர் பூச சொன்னார்கள். அதன் பின்னர் என்னை வீடியோ எடுத்தார்கள்.

சித்திரவதை தாங்க முடியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தேன்.

நான் தான் மாணவியை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்தேன் என வாக்கு மூலம் அளிக்க சொல்லி துன்புறுத்தினார்கள். நான் வலி தாங்காமல் ஒப்புக்கொண்டேன்.

எனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரும் இல்லை.

எனக்கு நடந்த சித்திரவதைகள் துன்புறுத்தல்கள் தொடர்பில் என்னால் இதற்கு முதல் நீதிமன்றங்களில் கூற முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. எனக்காக நீதவான் நீதிமன்றிலோ அல்லது மேல் நீதிமன்றிலோ சட்டத்தரணிகள் எவரும் முன்னிலை ஆகவில்லை.

இலங்கேஸ்வரன் சொன்னது பொய்

12ஆம் திகதி இலங்கேஸ்வரன் என்னை புங்குடுதீவில் கண்டேன் என சொன்னது பொய் நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.

மாணவி கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இந்த குற்றத்திற்கு உடந்தையாக எப்போதும் இருந்ததில்லை. என் மீதான குற்ற சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன்.

என் மீது பொய் குற்ற சாட்டு சாட்டப்பட்டதனால் இன்று எனது குடும்பமே சீரழிந்து காணப்படுகின்றது. நான் சசிக்குமருடன் (சுவிஸ் குமார்) சேர்ந்து எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன். அன்றைய தினம் நெட் கபே ஒன்றுக்கு சென்று எனது மின்னஞ்சலை பார்த்தேன்.

கைது செய்யும் போது சுமத்திய குற்றசாட்டு வேறு. தற்போது சுமத்தப்பட்டு உள்ள குற்ற சாட்டு வேறு.

ஊர்காவற்துறை போலீசார் என் மீது சுமத்திய குற்ற சாட்டு மாணவியை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்தேன். என ஆனால் தற்போது அந்த குற்றங்களை நான் செய்வில்லை. அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது மாறும் சதித்திட்டம் தீட்டியது என என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. என் மீதான அனைத்து குற்ற சாட்டுக்களையும் நான் முற்றாக மறுக்கிறேன்.என சாட்சியம் அளித்தார்.

அதனை அடுத்து 8ஆவது எதிரியின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.

சுவிஸில் இருந்து விடுமுறையை கழிக்கவே இலங்கை வந்தேன்.

தொடர்ந்து 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.

அதன் போது,

நான் சுவிஸ் நாட்டில் சமையல் வேலை செய்து வந்தேன். நான் 2015ஆம் ஆண்டு விடுமுறைக்கு வந்த போது மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவன் என கைது செய்தனர்.

என் மீது மாணவி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை , குற்றத்திக்கு பங்களித்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. அவை அனைத்தையும் நான் முற்றாக மறுக்கிறேன்.

சிறையில் பழக்கம்.

எனக்கு எதிராக சாட்சியம் அளித்த இப்லான் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் தான் பழக்கம் அவரும் சக கைதி எனும் அடிப்படையில் , அதற்கு முன்னர் அவரை எனக்கு தெரியாது.

வவுனியா சிறைச்சாலையில் என்னிடம் மாணவி கொலை வழக்கு தொடர்பில் குற்ற புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த சில்வா விசாரணை செய்து கொண்டு இருந்த வேளை இப்லான் நிஷாந்த சில்வாவிடம் பை (Bag) ஒன்றினை வாங்கி சென்று இருந்தார்.

விசாரணை முடிந்து நான் மீண்டும் சிறைக்கூடத்திற்கு சென்ற போது , தனக்கு நிஷாந்த சில்வாவுடன் பழக்கம் உண்டு எனவும் ஏதேனும் உதவி தேவையா என என்னிடம் இப்லான் கேட்டார். அதற்கு நான் எனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்றேன்.

25 இலட்சம் பணம் கேட்டார்.

பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட இப்லான் மீண்டும் ஒரு மாத காலம் கழித்து வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் இருந்து விடுவித்தது விடலாம் 25 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு கேட்டார். செய்யாத குற்றத்திற்காக பணம் தர முடியாது என நான் மறுத்தேன். அதன் போது எமக்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு நான் அவரை தள்ளி விட்டேன். அதற்கு அந்த நேரம் எங்கள் கூட சிறை கூடத்தில் இருந்த சக கைதிகள் சாட்சி. ஆனால் அவர்கள் அனைவரும் தற்போது விடுதலை ஆகி சென்று உள்ளதால் அவர்களை சாட்சியமாக அழைக்க முடியாது.

வழக்கில் இருந்து விடுவிக்க 2 கோடி ரூபாய் கேட்டனர்.

பின்னர் மீண்டும் இப்லான் என்னிடம் மாணவி கொலை வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடலாம் அதற்கு 2 கோடி ரூபாய் தருமாறும் , அதில் முதல் கட்டமாக முற்பணமாக 25 இலட்சம் ரூபாய் தருமாறு கோரினார். நான் அதற்கு சம்மதிக்க வில்லை. இப்லானுக்கு அந்த நேரம் பணம் தேவைப்பட்டது. பணம் இல்லை எனில் அவர் நீதிமன்றினால் தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் எனவே என்னிடம் பணத்தை பெற முனைந்தார்.

சக கைதிக்கு எதிராக முறைப்பாடு செய்ய விரும்பவில்லை.

என்னிடம் இப்லான் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பில் நான் சிறைச்சாலை அத்தியட்சகரிடமோ அல்லது , நீதிமன்றிலோ முறையிட்டு இருக்காலம் ஆனால் என்னுடன் உள்ள சக கைதியை நான் காட்டி கொடுக்க விரும்பவில்லை. அதனால் அது தொடர்பில் எந்த முறைப்பாடும் எவரிடமும் தெரிவிக்கவில்லை.

ஆசிய பெண்ணை கடத்தும் திட்டம் இருக்கவில்லை.

அவரிடம் நான் ஆசிய பெண் ஒருவரை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்வதை நேரடியாக வீடியோ எடுத்தோம் என நான் இப்லானிடம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

எனது மச்சானும் ஆறாம் எதிரியுமான சிவதேவன் துசாந் எனக்கு தொலைபேசியில் பெண் பிள்ளையின் படம் அனுப்பவும் இல்லை நான் அவரிடம் படம் அனுப்பு என கேட்கவும் இல்லை. அதேபோன்று எந்த சந்தர்ப்பத்திலும் நிஷாந்த சில்வாவிற்கோ அல்லது வேறு விசாரணை அதிகாரிகளுக்கோ நான் பணம் கொடுக்க முற்படவில்லை. இப்லானுக்கு கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை.

இலங்கேஸ்வரன் என்பவர் 12ஆம் திகதி என்னை ஆலடி சந்தியில் வானில் கண்டேன் என சொன்னது பொய். நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.

சுவிஸில் திருமணம் முடித்தேன்.

நான் 1988ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு சென்று விட்டேன். 1998ஆம் ஆண்டு அங்கு திருமணம் முடித்தேன். இரண்டு பிள்ளைகள் உள்ளன.பின்னர் நான் சட்ட ரீதியாக எனது திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன்.

புங்குடுதீவிலும் திருமணம் முடித்தேன்.

2012ஆம் ஆண்டு புங்குடுதீவை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்தேன். சுவிஸ் நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை இலங்கைக்கு வருவேன். அவ்வாறே 2015ஆம் ஆண்டு 4ஆம் மாதம் இலங்கை வந்தேன்.

மீண்டும் 5ஆம் மாதம் 6ஆம் திகதி சுவிஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் விமானத்தை தவற விட்டமையால் கொழும்பில் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை தங்கி இருந்தேன்.

மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டோம்.

மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 15ஆம் திகதி புங்குடுதீவு வந்தோம். 17 ஆம் திகதி புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தேருக்கு சென்று இருந்தோம். நான் கோயிலினுள் இருந்த போது எனது நண்பனின் தொலைபேசிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் அழைப்பை ஏற்படுத்தி என்னுடன் கதைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நண்பன் நான் கோயிலினுள் இருப்பதாகவும் வந்தவுடன் கூறுவதாகவும் கூறியுள்ளான்.

ஸ்ரீகஜன் கதைத்தார்.

நான் கோயிலால் வந்த உடன் ஸ்ரீகஜன் கதைக்க சொன்ன விடயத்தை நண்பன் சொன்னான். நான் தொலைபேசியில் அவருடன் கதைத்தேன். அப்போது என்னிடம் சிறிய விசாரணை செய்ய வேண்டும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார். நான் நீங்கள் எங்கே நிற்கிறீங்க என கேட்டேன். அதற்கு அவர் தான் புங்குடுதீவில் நிற்பதாக சொன்னார். நான் அங்கே வருவதாக கூறி ஸ்ரீகஜன் சொன்ன இடத்திற்கு சென்றேன்.

போகும் வழியில் சந்திரஹாசனின் வீடு இருந்ததால் அவரையும் அழைத்து சென்றோம். ஸ்ரீகஜன் எம்மை வர சொன்ன இடம் மாணவியின் வீட்டுக்கு பின்புறமாக சற்று தொலைவில் உள்ள தபால் நிலையத்திற்கு , அங்கு சென்ற போது என்னுடன் வந்தவர்கள் வானில் இருந்தார்கள்.

எனது சகோதரர் மற்றும் நண்பர்களை கைது செய்தனர்.

அவ்வேளை அங்கு வந்த ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கோபி என்பவரும் மேலும் நால்வரும் வந்து என்னுடன் வந்து வானில் இருந்தவர்களை கைது செய்தனர். அப்போது ஸ்ரீகஜனிடம் நான் கேட்டேன் ஏன் கைது செய்கிறார்கள் என அதற்கு அவர் எனக்கு தெரியாது நான் உன்னை தான் வர சொன்னனான் அவங்களை கைது செய்வது தொடர்பில் கைது செய்கிரவங்களை கேள் என சொன்னார். ஸ்ரீகஜன் என்னிடம் விசாரணை செய்யும் போது சிவில் உடையில் தான் இருந்தார்.

போல் தோழருடன் தொடர்பு கொண்டேன்.

பின்னர் 17ஆம் திகதி மாலை கைது செய்து கொண்டு என்ற எனது தம்பி உட்பட்டவர்கள் தான் மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அதனை நான் கேட்டதும் போல் தோழர் என்பவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தேன். தான் உடனே வருவதாக என்னிடம் கூறினார். பின்னர் தொலைபேசி எடுத்த போது அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.

வேலணையில் மின் கம்பத்தில் கட்டி வைத்தார்கள்.

அதனால் நான் எனது நண்பனுடன் வாகனத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வோம் என சென்ற போது புங்குடுதீவு பாலம் முடிவடைந்த வேலணை பகுதியில் பொது மக்கள் நீ தானே மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள சசியின் அண்ணா என கேட்டு தாக்கி என்னை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.

விஜயகலா காப்பற்றி விட்டார்.

அப்போது விஜயகலா என்பவர் அங்கு வாகனத்தில் வந்து இருந்தார். அக்கால பகுதியில் அவர் யார் என எனக்கு தெரியாது. அவர் வந்து மக்கள் என்னை அடிக்க விடாது தடுத்து எனது கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு கோரினார். நீயா சசியின் அண்ணா ? என என்னிடம் கேட்டார் நான் ஆம் என்றேன்.

பின்னர் பொதுமக்கள் என்னை அடிக்க விடாது தடுத்து நிறுத்தி எனக்கு மக்கள் அடிக்காமல் தடுப்பதற்காக இரண்டு மணி நேரம் அந்த இடத்தில் அவர் நின்றார். அப்போது அடிக்கடி தொலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டு இருந்தார் . அன்று அவர் போலீசார் உடன் தான் கதைத்தார் என்பது எனக்கு இந்த மாதம் தான் பத்திரிகையில் செய்தி பார்த்து தெரிந்து கொண்டேன்.

இரண்டு வருடத்தின் பின்னர் வழக்கு எடுத்தால் ?

அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வருடத்திற்கு பின்னர் இப்பவா தெரிந்து கொண்டீர் என கேட்டார். இரண்டு வருடத்திற்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் இப்பதானே வழக்கு ஆரம்பித்து அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு உள்ளது அதனால் எனக்கு இப்ப தான் தெரியும் என ஒன்பதாம் எதிரி பதிலளித்தார்.

விஜயகலா இரண்டு மணிநேரம் சம்பவ இடத்தில் நின்றார்.

மக்கள் இடம் இருந்து என்னை காப்பாற்றிய விஜயகலா என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முனைந்தார். அதற்காக அவர் அந்த இரவு நேரத்திலும் அந்த இடத்தில் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் நின்றார். அப்போது வேலணையில் பஸ் ஓடுபவர்கள் புங்குடுதீவில் உள்ள எனது உறவினர்களுக்கு என்னை பிடித்து கட்டி வைத்து அடிப்பதை தெரிவித்து உள்ளனர்.

அதனால் புங்குடுதீவில் இருந்து என்னை அழைத்து செல்ல எனது மனைவி , அம்மா மற்றும் சில உறவினர்கள் பஸ்ஸில் வந்தார்கள் அப்போது இரவு 11 மணி இருக்கும். அந்த நேரம் விஜயகலா அங்கிருந்து சென்று விட்டார்.

யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் மறுநாள் காலை எங்கள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் வந்த ஸ்ரீகஜன் எனக்கு ஆபத்து எனவும் பத்து நிமிடத்தில் இங்கிருந்து வெளியேறினால் தன்னால் என்னை காப்பாற்ற முடியும் என மனைவியிடம் கூறி சென்றார்.

அவர் மீண்டும் பத்து நிமிடத்தில் வாகனம் ஒன்றில் வந்தார். என்னையும் , மனைவி தாய் மற்றும் மகள் ஆகியோரை வாகனத்தில் ஏற்றிகொண்டு யாழ்ப்பாணம் வந்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் எம்மை கதிரையில் இருத்தி வைத்து விட்டு ஸ்ரீகஜன் எங்கோ சென்று விட்டார். பின்னர் மாலை 5 மணிக்கே வந்தார். அப்போது நான் எங்களை இங்கே கூட்டி வந்து விட்டு போய் விட்டீர்கள் மனைவி பிள்ளை எல்லாம் பசியில் இருக்கின்றார்கள் என கூறினேன். அதற்கு அவர் தான் மறந்து விட்டதாகவும் , பொதுமக்கள் என்னை தாக்கியது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சொன்னார் நான் சாப்பிட்டு வந்து முறைப்பாடு செய்வதாக கூறி கண்டீனுக்கு சென்று சாப்பிட்டேன்.

மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தேன்.

பின்னர் வந்து என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்தேன். பின்னர் எனக்கு போலீசார் முறைப்பாடு பதிவு செய்தமைக்கான துண்டும் வைத்திய சாலைக்கு செல்ல துண்டு ஒன்றும் தந்தனர்.

அந்த நேரம் தம்பியாட்களை பொலிஸ் நிலையம் கொண்டு வந்தாங்க அப்போது பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் பெறும் சன கூட்டம் காணப்பட்டது. இந்த நேரம் வெளியில் செல்வது ஆபத்து என கூறி பொலிசார் எம்மை தடுத்து வைத்திருந்தனர்.

இரவு கொழும்பு சென்றேன்.

பின்னர் இரவு என்னை வைத்திய சாலைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அப்போது எனது படங்கள் முகநூலகளில் வந்ததால் நான் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு செல்வது ஆபத்து என கொழும்புக்கு சென்று சிகிச்சை எடுப்போம் என கொழும்பு சென்று விட்டேன்.

கொழும்பில் கைது செய்யப்பட்டேன்.

கொழும்பில் 19ஆம் திகதி காலை தங்கி இருந்த வேளை என்னை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முதலில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நான் மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவனா என கேட்டார்கள் அவர்கள் இல்லை என கூறினார்கள். பின்னர் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக கேட்டார்கள் அவர்களும் இல்லை என பதில் அளித்தார்கள்.

அதனால் என்னை மதியம் பதிவுகளை மேற்கொண்டு விட்டு விடுவிக்க இருந்த சமயம் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு நான் அவர்களுக்கு தேவை படுவதாகவும் என்னை விடுவிக்க வேண்டாம் எனவும் கூறினார்கள். அதனால் என்னை தொடர்ந்து வெள்ளவத்தை போலீசார் தடுத்து வைத்து இருந்தார்கள்.

யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டேன்.

பின்னர் அன்றைய தினம் 19ஆம் திகதி என்னை கொடிகாமம் போலீசார் வெள்ளவத்தை பொலிசாரிடம் இருந்து பாரம் எடுத்து யாழ்.நோக்கி வந்தார்கள்.

இடையில் அனுராதபுரத்தில் தமது வீட்டுக்கு சென்று குளித்து தேநீர் அருந்தி என்னை அழைத்து வந்தார்கள். இடையில் வவுனியா அல்லது கிளிநொச்சி பகுதி எது என எனக்கு சரியாக தெரியவில்லை அதில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி பாரிய முகாம் ஒன்றுக்கு பின்னல் என்னை அழைத்து சென்றார்கள்.

ஹெலியில் என்னை யாழ் அழைத்து வர முயற்சித்தனர்.

அங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை , இராணுவம் நின்றனர் அத்துடன் ஹெலி இரண்டும் நின்றது. அங்கு இருந்த வரை படம் ஒன்றை சுட்டிக்காட்டி சிங்களத்தில் கதைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழ் தெரிந்த ஒருவர் எனக்கு சொன்னார். வீதியால் என்னை அழைத்து செல்வது பாதுகாப்பு இல்லை எனவும் அதனால் ஹெலியில் அழைத்து செல்ல உள்ளதாகவும் , ஆனாலும் ஹெலியை இறக்க கூடிய ஸ்ரேடியத்தடியும் பாதுக்காப்பு இல்லை என கதைப்பதாகவும் கூறினார்.

பின்னர் என்னை அங்கே தடுத்து வைத்து இருந்து விட்டு நள்ளிரவு கொடிகாம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தர்கள்.

வாகன தொடரணி பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டேன்.

பின்னர் அங்கிருந்து 20 ஆம் திகதி என்னை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த அழைத்து சென்றார்கள். ஆங்கில படங்களில் வாறது போன்று பல வாகன தொடரனி பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்படி ஒரு பாதுகாப்பை நான் என் வாழ்நாளில் அதற்கு முதல் பார்த்ததில்லை. என தெரிவித்தார்.

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை தெரியாது.

அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் , உங்களை அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரா அழைத்து சென்றார் என கேட்டார். அதற்கு 9ஆம் எதிரி அவர் யார் என தெரியாது என்னை பல வாகன தொடரணி பாதுகாப்புடன் தான் அழைத்து சென்றனர். என தெரிவித்தார்.

சுவிஸ் நாட்டில் குடியுரிமை இல்லை.

இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறேன். எனக்கு அந்த நாட்டு குடியுரிமை கிடைக்கவில்லை. 5 வருடங்களுக்கு மேல் அந்த நாட்டில் தங்கி இருந்தால் தங்குமிட விசா தருவார்கள் அந்த விசாவில் தங்கி நின்றே வேலை செய்கிறேன்.

மாதாந்தம் 10 லட்சம் உழைப்பேன்.

நான் அங்கு சமையல் வேலை செய்வதனால் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் 8 இலட்சம் சம்பளம் பெறுவேன், அத்துடன் பிற கொடுப்பனவுகள் என மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் 10 இலட்சம் சம்பாதிப்பேன். எனக்கு அங்கு மாதாந்தம் 6 இலட்சம் அளவிலையே செலவாகும்.

இலங்கை வந்து போக 20 இலட்சம் செலவு.

வருடத்திற்கு ஒரு முறை இலங்கை வந்து போவேன். அவ்வாறு வந்து போகும் போது 20 இலட்சம் ரூபாய் வரையில் செலவாகும்.

இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாணவியை கடத்தி , வன்புணர்ந்து , கொலை செய்வதை நேரடி வீடியோ பதிவு செய்வதற்கு நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை.

சுவிஸ் நாட்டில் மாபியா கும்பலா ?

சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் இருக்கிறது எனும் விடயமே எனக்கு இந்த நீதிமன்றில் கூறும் போது தான் தெரியும். சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் இருப்பதே எனக்கு தெரியாது. என் மீதான குற்ற சாட்டுகள் அனைத்தையும் நான் முற்றாக மறுக்கிறேன். என சாட்சியம் அளித்தார்.

எதிரி தரப்பு சார்பில் அழைக்கப்பட்ட சாட்சியங்கள் அணைக்கப்படவில்லை.

மாணவி கொலை வழக்கில் எதிரிகள் தரப்பு சாட்சிப்பதிவுகளுக்காக 5ஆம் எதிரி சார்பில் அழைக்கபட்ட சி.குகரூபன் எனும் சாட்சியத்தை அணைக்க வில்லை என 5ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மன்றினால் மன்றினால் குறித்த சாட்சி விடுவிக்கப்பட்டது.

அதேபோன்று வவுனியா சிறைச்சாலையில் இருந்து விளக்க மறியல் கைதியான எஸ்.தயாபரன் என்பவரை எதிரி தரப்பு சாட்சியத்திற்காக 9ஆம் எதிரி தரப்பில் அழைக்கப்பட்டவரை பின்னர் 9ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணி சாட்சியாக அணைக்கவில்லை என மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து குறித்த சாட்சியம் மன்றினால் விடுவிக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம்.

அதேவேளை 5ஆம் எதிரி தரப்பில் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் இன்றைய தினம் சாட்சியம் அளித்தார்.

அதன் போது , 5ஆம் எதிரி தரப்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி சட்ட வைத்திய அதிகாரியிடம் , நீங்கள் 5ஆம் எதிரியை பரிசோதீத்தீர்களா ? என கேட்டார். அதற்கு சட்ட வைத்தியர் ஆம் என பதில் அளித்தார். அதன் போது அவரிடம் ஏதாவது கேட்டீரா ? என சட்டத்தரணி கேட்டார். ஆம். சாதரணமாக ஒருவரை பரிசோதிக்கும் போது வைத்தியர் என்ன கேட்பார்களோ என்ன கதைப்பார்களோ அதை செய்தேன். விசேடமாக எதனையும் அவரிடம் கேட்கவில்லை என சட்ட வைத்தியர் பதில் அளித்தார்.

அதனை அடுத்து தான் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தை முடிவுறுத்துவதாக 5ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்ததை அடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.

சுவிஸ் குமாரின் மனைவி சாட்சியம்.

அதனை அடுத்து 9ஆம் எதிரி சார்பில் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் மனைவி மகாலக்சுமி சசிக்குமாரை 9ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சி. கேதீஸ்வரன் சாட்சியம் அளிக்க அழைத்தார்.

தனது கணவனான சசிக்குமார் 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் என்னுடன் கொழும்பில் ஒன்றாகவே தங்கி இருந்தார் என சாட்சியம் சசிக்குமாரின் மனைவி அளித்தார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.

மறுதலிப்பு சாட்சியமும் அணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து 7ஆம் எதிரியினால் வழங்கப்பட்ட வாக்கு மூலம் முழுவதுமாக குற்ற புலனாய்வு துறையினர் பதியவில்லை. என மன்றில் தெரிவித்து இருந்தார். அதற்கு மறுதலிப்பு சாட்சியமாக குற்ற புலனாய்வு துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவை சாட்சியமாக அணைக்க பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதனை மன்று ஏற்றுக்கொண்டது. அதன் போது குறித்த வழக்கின் 42ஆவது சாட்சியமாக சாட்சி அளித்த குற்ற புலனாய்வு துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.

அதன் போது , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதனின் வாக்கு மூலத்தினை குற்றபுலனாய்வு திணைகள பொலிஸ் கான்ஸ்டபிள் கன்னங்கரா என்பவரே பெற்றார். அதில் 7ஆம் எதிரி 13ஆம் திகதி காலை முதல் இரவு வரை என்ன செய்தார் என சொல்லி உள்ளார். ஆனால் 12ஆம் திகதி தான் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வசிக்கும் கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்யும் பிரியன் என்பவரிடம் கைத்தொலைபேசியை அடகு வைத்து 15ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டேன் என்பதனை மாத்திரமே தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். வேறு எந்த தகவல்களையும் கூறவில்லை என சாட்சியம் அளித்தார்.

அதன் போது 7ஆம் எதிரிதரப்பு சட்டத்தரணி , எதிரி தரப்பில் நான் கூறுகிறேன். 7ஆம் எதிரி சொன்ன அனைத்து விடயத்தையும் நீங்கள் பதிவு செய்ய வில்லை என தெரிவித்தார்.

அதனை அடுத்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.

சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன.

குறித்த வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இன்றைய தினத்துடன் முடிவுறுத்தப்பட்டது.

தொகுப்புரைக்காக திகதியிடப்பட்டது.

வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பு தொகுப்புரைக்காக எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வாய் மொழி மூலமாக இரு தரப்புக்களும் தமது தொகுப்புரைகளை மன்றில் வழங்க வேண்டும்.

மேலதிக சமர்ப்பணங்கள் செய்வதாயின் அதனை அன்றைய தினமே இரண்டு தரப்பினரும் எழுது மூலம் மன்றுக்கு வழங்க வேண்டும். எழுத்து மூலம் வழங்கப்படும் சமர்ப்பணம் மூன்று பிரதிகளாக மன்றில் வழங்கப்பட வேண்டும் என மன்று கட்டளையிட்டது.

9 எதிரிகளுக்கும் விளக்கமறியல்

அதனை தொடர்ந்து 9 எதிரிகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.

மாத இறுதிக்குள் தீர்ப்பு.

அதேவேளை எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி இரு தரப்பு தொகுப்புரைகளும் முடிவடைய தீர்ப்புக்கு மன்று திகதியிடும். அது பெரும்பாலும் அடுத்த மாத இறுதிக்குள்ளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.canadamirror.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 184
  • Created
  • Last Reply

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு. வார இறுதிக்குள் தீர்ப்பு ?

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொகுப்புரைக்காக நாளைய தினம் செவ்வாய்கிழமை நீதாயவிளக்கம் ( ரயலட் பார் )  கூடவுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாயவிளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் நாளை நடைபெற்றவுள்ளது.

 
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி பதிவுகள் , மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை  இரு தரப்பின் தொகுப்புரைக்காக கூடவுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் புதன்கிழமை இரு தரப்பு தொகுப்புரைக்காகவும் மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது.
 
இரு தரப்பின் தொகுப்புரைகளும் முடிவடைந்த பின்னர் தீர்ப்பு வழங்குவதற்கான திகதியினை நீதிபதிகள் அறிவிப்பார்கள். பெரும்பாலும் வார இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்க படுகின்றது.
 
பின்னணி. 
 
புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டார்.
 
இக் குற்ற செயலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 9 பேரினை சட்டமா அதிபர் திணைக்களம் எதிரிகளாக கண்டு நீதாயவிளக்கம் ( ரயலட் பார் )  முறைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

http://globaltamilnews.net/archives/40615

Link to comment
Share on other sites

வித்தியா வழக்கு – 1ஆம், 7 ஆம் எதிரிகளுக்கு எதிராக ஆதாரமில்லை!!

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும், எதிரித் தரப்பினரும் தொகுப்புரைகளை வழங்குகின்றனர்.

வழக்குத் தொடுநர் தரப்பு சாட்சிய தொகுப்புரை இன்று வழங்கப்படுகின்றது. 1ஆம் எதிரிக்கும், 7 ஆம் எதிரிக்கும் எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தொகுப்புரையில் பிரதி மன்றாடியார் அதிபர் குறிப்பிட்டார்.

ஏனைய 7 எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தனது தொகுப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுவதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/28137.html

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

 

அதேவேளை, 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுவதால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://newuthayan.com/story/28137.html

7 ஆம் எதிரி  பழனி ரூபசிங்கம் குகநாதனின் என தெரியும்.ஆனால் 1 ஆம் எதிரி யார்?

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை: 7 சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம்

 


 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கின் 7 சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வழக்கின் இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், எட்டாம் மற்றும் ஒன்பதாம் இலக்க சந்தேகநபர்கள் மாணவியைக் கடத்தி து‌ஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பிலான Trial at Bar விசாரணையில் இன்று தொகுப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்குத்தொடுநர் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமாரரட்ணம் தொகுப்புரையாற்றினார்.

வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி தொடக்கம் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உருத்திரபசுபதி மயூரதன் வரை வழங்கப்பட்ட சாட்சியங்கள் குறித்து அவரது தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

http://newsfirst.lk/tamil/2017/09/வித்தியா-படுகொலை-7-சந்தேக/

Link to comment
Share on other sites

சுவிஸ் குமாருக்கு 2 கோடி ரூபாய் பெரிதல்ல – வழக்கு தொடுனர் தரப்பு 5 மணித்தியாலங்கள் தொகுப்புரை:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
swisskumar.jpg
சுவிஸ் நாட்டில் மாதாந்தம் இலங்கை பெறுமதியில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியில் உழைப்பவர், வருடாந்திரம் இலங்கை வந்து 20 இலட்ச ரூபாய் செலவழிப்பவருக்கு 2 கோடி ரூபாய் பெரிய பெறுமதி இல்லை என பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும்  எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில்   இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  கூடியது.
 
சட்டத்தரணிகள் முன்னிலை. 
 
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் தரப்பில்  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ,  மற்றும் சட்டத்தரணி லியகே  ஆகியோரும்,  5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
வழக்கேட்டில் திருத்தம். 
 
அதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன,  முதலில் வழக்கேட்டில் சில திருத்தங்கள் செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பில்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் விண்ணப்பம் செய்தார். அதனை அடுத்து திருத்தங்கள் செய்வதற்கு மன்று அனுமதித்தது. அதன் பிரகாரம்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் சில திருத்தங்களை தெரிவித்தார்.
 
அதனை தொடர்ந்து எதிரி தரப்பு சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும் சில திருத்தங்கள் செய்வதற்கு மன்றில் விண்ணப்பம் செய்தார். அதற்கு மன்று அனுமதித்ததை அடுத்து அவரும் சில திருத்தங்களை செய்தார்.
 
அதனை தொடர்ந்து வழக்கு தொடுனர் தரப்பில்   பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தொகுப்புரையை ஆரம்பித்தார். அதன் போது ,
 
எதிரிகளுக்கு எதிராக 41 குற்ற சாட்டுக்கள். 
 
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா எனும் மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டார்.
 
அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் தற்போது குற்றவாளி கூண்டில் நிற்கும் ஒன்பது பேரையும் சட்டமா அதிபர் எதிரிகளாக கண்டு அவர்களுக்கு எதிரான குற்ற சாட்டுக்களை முன்வைத்து , குற்ற பகிர்வு பத்திரத்தை மன்றின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த விசேட மன்றிலே எதிரிகளுக்கு  குற்றபகிர்வு பத்திரம் தனித்தனியாக வாசித்து காட்டப்பட்டது. அதன் போது , கடத்த திட்டம் தீட்டியமை , கடத்தியமை , வன்புணர்வுக்கு உட்படுத்தியமை , படுகொலை செய்தமை , உடந்தை அளித்தமை உள்ளிட்ட 41 குற்ற சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. அத்தனை குற்ற சாட்டுக்களையும் எதிரிகள் தனித்தனியே மறுத்து தாம் நிரபராதிகள் என மன்றில் தெரிவித்தனர்.
 
மகளை காணவில்லை என தேடினார். 
 
அதனை தொடர்ந்து இந்த மன்றில் நடைபெற்ற சாட்சி பதிவுகளின் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் மன்றில் சாட்சியம் அளிக்கையில் , தனது மகள் 13ஆம் திகதி பாடசாலையில் கூட்டு முறை என்பதனால் காலை 7 .15 மணியளவில் வீட்டில் இருந்து பாடசாலை நோக்கி புறப்பட்டதாகவும் , பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் , மாலை மாணவியை தேடி அலைந்த பின்னர் குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது , அங்கு முறைப்பாட்டை ஏற்க முடியாது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலைத்திற்கு சென்று முறைப்பாடு செய்யுமாறு கூறியதை அடுத்து தாம் இரவு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாட்சியம் அளித்ததாகவும் ,
 
மறுநாள் 14ஆம் திகதி காலை வேளையில் மகளை தேடி சென்ற போது பாழடைந்த வீடொன்றின் பின் பகுதியில் உள்ள பற்றைக்குள் மகளின் சடலத்தை முதலில் மகன் கண்டதாகவும் , மகன் சடலத்தை கண்டு கதறி அழுத சத்தத்தை கேட்டு தான் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது மகள் சடலமாக கிடந்தார் என சாட்சியம் அளித்து இருந்தார்.
 
11ஆவது சந்தேக நபருக்கு பொது மன்னிப்பு. 
 
அதேபோன்று இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் 11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவருக்கு சட்டமா அதிபர் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர் அரச தரப்பு சாட்சியமாக மாறி சாட்சியம் அளித்தார்.
 
காதலுக்கு உதவி செய்யவே சென்றனர். 
 
அதன் போது இந்த குற்றவாளி கூண்டில் 6ஆவது எதிரியாக உள்ள பெரியாம்பி என அழைக்கபப்டும் சிவதேவன் துஷாந்த் , படுகொலை செய்யப்பட்ட மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அக்கால பகுதியில் துஷாந்தின் மோட்டார் சைக்கிளில் தான் பின்னால் இருந்து சென்று , மாணவி பாடசாலை செல்லும் நேரம் , வீடு திரும்பும் நேரங்களில் மாணவியின் பின்னால் செல்வதாகவும் , ஒரு நாள் மாணவி தனது சப்பாத்தினை கழட்டி துஷாந்தை நோக்கி வீசியதாகவும் ,
 
அதன் பின்னர் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் என்பவரின் வீட்டில் கள்ளு குடிக்க சென்ற வேளை தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோரிடம் வித்தியா துசாந்துக்கு சப்பத்தால் எறிந்த சம்பவத்தை கூறியதாகவும் , அப்போது , ஜெயக்குமார் மற்றும் தவக்குமார் ஆகியோர் 25ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் வித்தியாவை தூக்கி தருவதாக கூறினார்கள்.அதன் பிரகாரம் அவர்களுக்கு 23ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தோம். எனவும் ,
 
மாணவியை கடந்த 3 நாளாக முயற்சி. 
 
வித்தியாவை கடத்துவதற்காக 11ஆம் திகதி காத்திருந்த வேளை அன்றைய தினம் வித்தியா வேறு ஒரு மாணவியுடன் வந்ததால் அன்றைய தினம் திட்டத்தை கைவிட்டோம் , மறுநாள் 12ஆம் திகதி காத்திருந்த போது வித்தியா பாடசாலைக்கு வரவில்லை. மறுநாள் 13ஆம் திகதி தானும் (சுரேஷ்கரன்) பெரியாம்பி எனும் துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் ,  3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் மற்றும் மாப்பிள்ளை எனும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் மாணவிக்காக சின்ன ஆலடி எனும் பகுதியில் காத்திருந்தோம்.
 
அவ்வேளை மாணவி அந்த வீதி வழியாக தனியாக வந்து கொண்டிருந்த வேளை துஷாந்த் மாணவியின் துவிச்சக்கர வண்டியினை மறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினான். அதற்கு மாணவி சம்மதிக்காததால் , மாணவியின் கன்னத்தில் கைகளால் அடித்தான் அதன் போது மாணவி போட்டு இருந்த மூக்கு கண்ணாடி நிலத்தில் விழுந்தது. அதன் பின்னர்,  துஷாந்த் , 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன் 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார் மற்றும் 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார் ஆகியோர் மாணவியை பலவந்தமாக அருகில் இருந்த  பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்று மாறி,  மாறி  வன்புணர்ந்தார்கள். அவ்வேளை ஜெயக்குமார் மாணவியின் உள்ளாடையை எடுத்து வாய்க்குள் திணித்து தடி ஒன்றினால் வாய்க்குள் தள்ளினார்.
 
அதன் பின்னர் மாணவியை அங்கிருந்து தூக்கி சென்று அருகில் இருந்த பற்றைக்குள் உள்ள மரம் ஒன்றின் கீழ் வைத்து கால் ஒன்றினை இழுத்து மரத்தில் கட்டினார்கள். அதனோடு நான் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன்.
 
நான் அவர்களுடன் சென்றது காதலுக்கு உதவி பண்ணும் நோக்குடனையே . இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என தெரிந்து இருந்தால் நான் அன்றைய தினம் அவர்களுடன் சென்று இருக்க மாட்டேன் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
 
அதேபோன்று இந்த சம்பவத்தை நேரில் கண்ட மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் என்பவர் தான் இவர்களுடன் சென்றது துஷந்தின் காதலுக்கு உதவும் நோக்குடன் தான் ஆனால் இவர்கள் இவ்வாறு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை.
 
வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். 
 
இவர்கள் மாணவியை வன்புணர்வு செய்ததை மாறி மாறி பெரிய தொடுதிரை கைத்தொலைபேசியில் (டச் போன்) புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். அதனை தனது மச்சானுக்கு அனுப்ப வேண்டும் என துஷாந்த் சந்திரகாசனுக்கு கூறியதை தான் கேட்டார் என சாட்சியம் அளித்துள்ளார்.
 
இந்த குற்ற சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்காவது கூறினால் என்னை படுகொலை செய்வோம் என கூறியதனால் தான் , தான் யாருக்கும் முதலில் சொல்ல வில்லை என சாட்சியம் அளித்தார்.
 
சம்பவ தினத்தன்று கடமைக்கு தாமதமாக வந்தார். 
 
அதேபோன்று வேலணை பிரதேச சபை பொறுப்பதிகாரி சாட்சியம் அளிக்கையில் சம்பவ தினமான 13ஆம் திகதி தமது பிரதேச சபையில் சாரதியாக கடமையாற்றும் 6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்த் காலை 9.15 மணியளவில் தான் வேலைக்கு வந்தார். என சாட்சியம் அளித்துள்ளார்.
 
மாணவியின் தாயின் சாட்சியம் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தின் பிரகாரம் மாணவி பாடசாலை செல்லும் நேரத்தில் அதாவது காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தபப்ட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
 
அவ்வாறு எனில் இந்த வழக்கின் 6ஆவது எதிரி இந்த குற்றத்தினை செய்து விட்டு காலை 9.15 மணிக்கு கடமைக்கு சென்று இருக்கலாம். அதேபோன்று 5ஆம் எதிரி சம்பவ தினத்தன்று காலை 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் சாரத்தினை மடித்து கட்டியவாறு வேகமாக நடந்து சென்றதை பெண் ஒருவர் கண்ணுற்று உள்ளார் அவரும் இந்த மன்றில் சாட்சியம் அளித்தார்.
 
2ஆம் எதிரிக்கு எதிரான கண்கண்ட சாட்சியம் உண்டு. 
 
அதேபோல இரண்டாம் எதிரியான ஜெயக்குமாரை பாடசாலை மாணவன் ஒருவன் பாடசாலை செல்லும் நேரம் காலை 7.45 மணியளவில் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுள்ளான்.அவனும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்தான்.
 
அதேவேளை 2ஆம் எதிரியின் மனைவியின் அண்ணன் 2ஆம் மற்றும் 3ஆம் எதிரிகளை சம்பவ இடத்திற்கு அருகில் சம்பவ தினத்தன்று கண்டுள்ளார். அதேபோல் சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி ஆலடி சந்தியில் சுவிஸ் குமார் என அழைக்கபப்டும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்டவர்களை வாகனம் ஒன்றில் இருத்ததை கண்ணுற்று உள்ளார். அவரும் இந்த மன்றில் தோன்றி சாட்சியம் அளித்துள்ளார்.
 
சாட்சியங்கள் முரண்படவில்லை.
 
இந்த வழக்கில் வழக்கு தொடுனர் தரப்பினால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் எவையும் முரண்பாடாக இருக்கவில்லை.
 
முதலாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
 
முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாருக்கு எதிராக வழக்கு தொடுனர் தரப்பினால் சாட்சியங்கள் ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) தன்னை தனது தம்பியான மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் பஸ் நிலையம் எற்றி சென்றது தொடர்பில் தனது சாட்சியத்தில் குறிப்பிடவில்லை.
 
இரண்டாம் எதிரியின் மச்சான் மிரட்டப்படவில்லை. 
 
இரண்டாம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தனது மச்சான் தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி) சம்பவ இடத்திற்கு எதிராக கண்டதாக கூறியது குற்ற புலனாய்வு பிரிவினர் எனது மச்சனுடையதும் மனைவியினதும் வாய்க்குள் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதனால் தான் தனக்கு எதிராக சாட்சியம் அளித்ததாக கூறினார். அவ்வாறு தாம் மிரட்டப்பட்டதனை மச்சானும் மனைவியும் வவுனியா சிறைச்சாலையில் தன்னை கண்டு கூறியதாகவும் மன்றில் தனது சாட்சியத்தின் போது தெரிவித்தார்.
 
இவ்வாறு மனைவி மச்சான் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் வேறு எங்காவது வாக்கு மூலத்தில் கூறினீரா என கேட்ட போது இல்லை என்றார். இந்த மன்றில் குற்ற புலனாய்வு பிரிவினர் சாட்சியம் அளிக்கையில் இந்த சம்பவம் தொடர்பில் உமது சட்டத்தரணி குறுக்கு விசாரணையில் கேட்டாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதிலளித்ததுடன் , சட்டத்தரணியிடம் தான் கூறியதாகவும் , சட்டத்தரணி கேட்கவில்லை எனவும் கூறினார். அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 
மூன்றாம் எதிரிக்கு வித்தியாவை தெரியாது. 
அண்ணாவை எப்படி தெரியும். ?
 
மூன்றாம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் தனக்கு வித்தியாவை தெரியாது என சாட்சியம் அளித்தார். பின்னர் தான் தனது அண்ணாவான இந்திரகுமாரை சம்பவ தினத்தன்று பஸ் ஏற்றி விட சென்ற போது வித்தியாவின் அண்ணா கண்டதாக சாட்சியம் அளித்தார். அவருக்கு வித்தியாவை தெரியாது ஆனால் வித்தியாவின் அண்ணாவை தெரியும் என கூறியுள்ளார்.
 
நாலாம் எதிரி கடற்படை மீது குற்றம் சுமத்தினார். 
 
நாலாம் எதிரியான மகாலிங்கம் சசீந்திரன் இந்த குற்ற கடற்படை தான் செய்துள்ளது என இந்த மன்றில் சாட்சியம் அளித்தார். சாரதாம்பாள் மற்றும் தர்சினி எனும் பெண்களை தீவகத்தில் கடற்படை தான் படுகொலை செய்தது. அதேபோல இந்த கொலையையும் கடற்படை தான் செய்தது என தெரிவித்தார். அவர் இதற்கு முதல் எந்த வாக்கு மூலத்திலையோ நீதிமன்றிலையோ இந்த தகவலை தெரிவிக்க வில்லை. முதல் முதலாக நீதாய விளக்கத்தில் எதிரிகள் தரப்பு சாட்சியம் அளிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.
 
ஐந்தாம் எதிரி தனக்கு எதிராக சாட்சியம் சொன்னவருக்கும் தனக்கும் முரண்பாடு  என்பது பொய் ?
 
ஐந்தாம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் தான் சம்பவ தினத்தன்று கடற்தொழிலுக்கு சென்று விட்டதாகவும் , தன்னை சம்பவ தினத்தன்று (13ஆம் திகதி ) காலை கண்டதாக சாட்சியம் அளித்த சாந்த ரூபிணி என்பவருக்கும் தனக்கும் முரண்பாடு இருந்ததலையே அவர் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தார் என தெரிவித்தார்.  அவரும் அதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தகவலை தெரிவிக்க வில்லை. எதிரி தரப்பு சாட்சி பதிவின் போதே தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
 
ஆறாம் எதிரி வித்தியாவை கண்டதே இல்லை என்பது பொய் ?
 
ஆறாம் எதிரியான சிவதேவன் துஷாந்தன் தனக்கு வித்தியாவை தெரியாது ஆனால் அவரின் அண்ணாவை நன்கு தெரியும் என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
 
ஏழாம் எதிரிக்கு எதிராக சாட்சியம் இல்லை. 
 
ஏழாம் எதிரியான பழனிரூபசிங்கம் குகநாதனுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை.
 
எட்டாம் எதிரி 12 ஆம் திகதி புங்குடுதீவில் நின்றார். 
 
எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் தன்னை போலீசார் சித்திரவதை புரிந்து வீடியோ வாக்கு மூலம் எடுத்ததாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். ஆனால் அவர் அதற்கு முதல் எங்கேயும் அது தொடர்பில் குறிப்பிடவில்லை. சம்பவ தினத்திற்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனம் ஒன்றில் அமர்ந்திருந்து வித்தியாவை பார்த்தார் என இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்தார்.
 
ஆனால் தான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாகவும் , அன்றைய தினம் நெட்கபே ஒன்றிக்கு சென்று மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பியதாக தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.  ஆனால் இதற்கு முதல் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் 12ஆம் திகதி தான் கொழும்பில் நின்ற என்ற விடயத்தினை கூறவில்லை.
 
சுவிஸ் குமாருக்கு 2 கோடி பெரிய காசில்லை. 
 
ஒன்பதாம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் 17ஆம் திகதி தன்னை பொதுமக்களிடம் இருந்து காப்பற்றி விட்டது.எனவும் பின்னர் தான் வீட்டுக்கு சென்றதாகவும் சாட்சியம் அளித்தார். அது பொய் ஏனெனில் வீ.ரி.தமிழ்மாறன் தனது சாட்சியத்தில் சுவிஸ் குமார் என்பவர் வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை எனவும் அவருடைய மனைவி மகாலக்சுமி தான் நின்றதாகவும் சாட்சியம் அளித்தார்.
 
அதேவேளை சிறைச்சாலையில் தான் இப்லான் என்வருடன் கதைத்த விடயத்தினை ஒப்புக்கொண்டு உள்ளார். இப்லான் தான் தன்னிடம் 25இலட்சம் பணம் கேட்டதாகவும் , தான் அதனை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
 
அது தொடர்பில் ஏன் எங்கும் முறையிடவில்லை என கேட்டதற்கு , தானும் கைதி ,அவரும் கைதி , அதனால் சக கைதியை தான் மாட்டிவிட விரும்பவில்லை என தெரிவித்தார்.
 
சுவிஸ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் சமையலளராக வேலை செய்வதாகவும் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் பத்து இலட்சம் வரை சம்பாதிப்பதாகவும் , அங்கு மாதாந்தம் 5 தொடக்கம் 6 இலட்சமே செலவு எனவும் சாட்சியம் அளித்தார். அத்துடன் வருடத்திற்கு ஒரு தடவை இலங்கை வந்து போவதாகவும் , அதன் போது 20இலட்சம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் சாட்சியம் அளித்தார்.
 
அவ்வாறான ஒருவருக்கு 2 கோடி ரூபாய் என்பது பெரிய தொகையில்லை எனவே சுவிஸ் குமார் இந்த வழக்கில் இருந்து தப்பி செல்ல இப்லான் ஊடாக குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவிற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்தார்,
 
7 எதிரிகளுக்கு எதிராகவும் குற்றசாட்டு நிரூபணம். 
 
இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகளாக கண்ட ஒன்பது பேரில் முதலாம் எதிரியான பூபாலசிங்கம் இந்திர குமார் மற்றும் ஏழாம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் ஆகியோருக்கு எதிரான குற்ற சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. அதற்கான போதிய சாட்சி ஆதாரங்கள் இல்லை.
 
ஏனைய 7 எதிரிகள் மீதான குற்ற சாட்டுக்கள் அனைத்தும் வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இரண்டாம் எதிரியான ,  பூபாலசிங்கம்
ஜெயக்குமார், மூன்றாம் எதிரியான  பூபாலசிங்கம் தவக்குமார் , நான்காம் எதிரியான  மகாலிங்கம்  சசிதரன் , ஐந்தாம் எதிரியான     தில்லைநாதன் சந்திரகாசன் , ஆறாம் எதிரியான  சிவதேவன் துஷாந்த் , எட்டாம் எதிரியான ஜெயதரன் கோகிலன் , மற்றும் ஒன்பதாம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றசாட்டுக்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு தொடுனர் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. என தனது தொகுப்புரையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தெரிவித்தார்.
 
நாளை எதிரி தரப்பு தொகுப்புரை. 
 
நாளைய தினம் புதன்கிழமை எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரைக்காக மன்றினால் திகதியிடப்பட்டு உள்ளது. அதனை அடுத்து ஒன்பது எதிரிகளையும் நாளைய தினம் வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.
 
ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை. 
 
வழக்கு தொடுனர் தரப்பில் , பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் ஐந்து மணித்தியாலங்கள் தொகுப்புரை நிகழ்த்தி இருந்தார். அதன் போது வழக்கு தொடுனர் தரப்பினரால் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் தொடர்பில் பல விடயங்களை சுட்டிக்காட்டி எதிரிகள் மீதான குற்ற சாட்டை நிரூபிக்கும் முகமாக வாதங்களை முன்வைத்தார்.

http://globaltamilnews.net/archives/40858

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு – செப்ரெம்பர் 27 அன்று தீர்ப்பு!!

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று வழக்குத் தொடநர் தரப்பு சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்ட நிலையில் இன்று எதிரி தரப்பின் சாட்சியங்களின் தொகுப்புரை வழங்கப்பட்டது.

அதன்பின்னர் தீர்ப்பாயம் எதிர்வரும் 27ஆம் திகதி கூடும் என்று திகதியிடப்பட்டது. அன்று தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/28343.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு திகதி அறிவிப்பு

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் இறுதித் தீர்ப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு வழங்கப்படுமென யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் அறிவித்துள்ளது.

vidya.jpg

மாணவி வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரயல் அட்பார் நீதி­மன்றில்  திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரேம்­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

 

கடந்த ஜுன்மாதம் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் இடையிடையே ஒத்திவைக்கப்பட்ட போதிலும் இது வரை 17 வழக்குகள் இடம்பெற்றுள்ளன.

44 அரச தரப்பு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதுடன் 27 சான்றுப்பொருட்களும் அரசதரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளன.

9 எதிரிகளும் சாட்சிக் கூண்டில் நின்று சத்தியப்பிரமாணம் செய்து சாட்சியமளித்தனர்.

சுவிஸ் குமார் சார்பில் அவரது மனைவி சாட்சியமளிக்கு மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

5 ஆவது எதிரிகள் சார்பில் சட்டவைத்திய அதிகாரி மயூரதன் அழைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு வழக்குத் தொடுநர் தரப்பு, எதிரிதரப்பு தொகுப்புரைகள் இன்றும் நேற்றும் மன்றில் இடம்பெற்று வந்தன.

இதன் நிறைவில் எதிர்வரும் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படுமென மன்று உத்தரவிட்டது.

இதேவேளை, அன்றைய தினம் கொலைசெய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24381

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டது

 


 
 

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

வழக்கின் இரண்டு தரப்பினரதும் தொகுப்புரைகள் நிறைவுபெற்றதை அடுத்து, இன்று பிற்பகல் 2.15 அளவில் மன்று இதனை அறிவித்துள்ளது.

வழக்கு தொடுநர் தரப்பு நேற்று (12) தொகுப்புரையாற்றியிருந்த நிலையில், பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளான மஹிந்த ஜயவர்தன, ஆறுமுகம் ரகுபதி மற்றும் கேதீஸ்வரன் ஆகியோர் இன்று தமது தொகுப்புரைகளை வழங்கியிந்தனர்.

வழக்குத்தொடுநர் சார்பில் எழுத்துமூல ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு, பிரதிவாதிகள் தரப்பு எழுத்துமூல ஆவணத்தினை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அல்லது அதற்கு முன்னதாக பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரச தரப்பு சாட்சியாளராக மாறி, வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவரையும் அன்றைய தினம் மன்றில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலைகள் அதிகாரிக்கு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு தினத்தன்று பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதனையும் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற பிரதிவாதிகள் தரப்பு தொகுப்புரையின் போது, சந்தேகநபர்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமது கட்சிக்காரர்களை விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்துடன் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் கூறியுள்ளனர்.

வழக்கில் சாட்சியமளித்த மாப்பிள்ளை எனப்படும் நடராசா குகநேசன் என்பவர் பிரதிவாதிகளுடன் கைது செய்யப்பட வேண்டியவர் எனினும், அவர் அரச தரப்பில் சாட்சியமளித்துள்ளமை தவறான விடயம் எனவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச தரப்பு சாட்சியாளர் உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவை அல்ல எனவும் பிரதிவாதிகள் தரப்பு தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு சுவிஸ்குமார் வித்தியாவை பார்த்தார் என யாராலும் கூற முடியாது எனவும், கறுப்புக்கண்ணாடி போட்டிருக்கும் ஒருவர் யாரைப் பார்க்கிறார் என்பது தெரியாது எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், கறுப்புக்கண்ணாடி ஒன்றை அணிந்து மன்றில் சட்டத்தரணி கேதீஸ்வரன் பாவனை செய்து காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில், ஏழாவது சாட்சியமாக சாட்சி வழங்கிய இலங்கேஸ்வரனின் சாட்சியங்கள் பொய்யானவை எனவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் தொகுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உரிய வகையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது, நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், சட்டத்தரணி கேதீஸ்வரனை மீண்டும் அந்த கறுப்புக்கண்ணாடியை அணியுமாறும், பார்வையாளர் ஒருவரிடம் சட்டத்தரணி எதனை நோக்கிப் பார்க்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டத்தரணி நீதிபதிபகளை நோக்குகிறார் என பார்வையாளர் பதில் வழங்கிய போது, ஒருவர் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு குறிப்பாக எதை நோக்குகின்றார் என கூற முடியாது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

எனினும், கண்ணாடி அணிந்திருப்பவர் திரும்பும் திசையை வைத்து எதைப் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, குறித்த கறுப்புக்கண்ணாடியை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனும் அணிந்து பாவனை செய்து காட்டியுள்ளார்.

குற்றம் இடம்பெறுவற்கு முன்னரும், அதன் பின்னருமான நடத்தைகளில் 4,7, 8, 9 ஆகிய பிரதிவாதிகளுடன் 5 ஆம் இலக்க பிரதிவாதி கூட்டாகவே இருந்துள்ளார் என சாட்சியங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2015 மே மாதம் 12 ஆம் திகதி காலை 11 மணியளவில் 5 ஆம் இலக்க பிரதிவாதி, ஏனைய பிரதிவாதிகளுடன் ஹயஸ் வாகனத்தில் இருந்துள்ளமை தொடர்பில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பைப் பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாதம் 27 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/09/வித்தியா-படுகொலை-வழக்கி-2/

Link to comment
Share on other sites

43 minutes ago, நவீனன் said:

 

ஆகவே, இந்தக் குற்றத்தைப் புரிவதற்கு பிரதான சூத்திரதாரி சம்பவ இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு மற்றும் தாக்குதல்தாரியை நேரடியாக அனுப்பி வைத்தவர் பிரபாகரன் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பிரபாகரனுக்கு கொழும்பு தெரியாது. கொழும்பைப் பார்க்காத பிரபாகரன், சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாவது சந்தேகநபர் என்பதால், இலங்கையின் நீதிமன்றத்தால் அவருக்கு 200 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

எனவே, சதித்திட்டம் தீட்டிய சூத்திரதாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக வரவேண்டும் என அவசியம் இல்லை எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இம்மாதம் 27 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/09/வித்தியா-படுகொலை-வழக்கி-2/

...அதாவது சுவிஸ் குமாருக்கு ஆப்பு ரெடியாகிட்டு என்று நீதிபதி சொல்கின்றார்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

...அதாவது சுவிஸ் குமாருக்கு ஆப்பு ரெடியாகிட்டு என்று நீதிபதி சொல்கின்றார்..

இன்றைய காலை செய்தி காதில் இப்படித்தான் வீழ்ந்தது 

Link to comment
Share on other sites

வழக்கு தொடுனர் தரப்பு சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றது. உண்மை குற்றவாளிகள் தப்பி விட்டனர். – எதிரி தரப்பு சட்டத்தரணி

court4.jpg
குளோபல்  தமிழ்ச் செய்தியாளர்
வழக்கு தொடுனர் தரப்பினால் மன்றில் அணைக்கப்பட்ட சாட்சியங்கள் நம்பகத்தன்மை அற்றது. எனவும் தமது தரப்பினர் அனைவரும் நிரபராதிகள் எனவும் , உண்மை குற்றவாளிகள் தப்பித்து விட்டார்கள் எனவும் , எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் தமது தொகுப்புரையில் தெரிவித்துள்ளனர்.
 
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும்  எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில்   நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , வழக்கு தொடுனர் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.
 
இன்றைய தினம் புதன்கிழமை  எதிரிகள் தரப்பு தொகுப்புரைக்காக  யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும்  மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் )  கூடியது.
 
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது  பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி  மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
 
எதிரிகள் தரப்பில்  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன ,  மற்றும் சட்டத்தரணி லியகே  ஆகியோரும்,  5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதியும் , 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
 
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
 
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார்,  பூபாலசிங்கம் ஜெயக்குமார்,  பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம்  சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
 
வழக்கு தொடுனர் தரப்பு சாட்சி நம்பகத்தன்மையற்றது. 
 
அதனை தொடர்ந்து  1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி  மஹிந்த ஜெயவர்த்தன தனது தொகுப்புரையின் போது , இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இப்ரான் என்பவரின் சாட்சியத்தை வழக்கு தொடுனர் தரப்பு முன் நிறுத்தி உள்ளது.
 
குறித்த சாட்சி ஏற்கனவே மோசடி குற்றசாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நபராவார். அவரது சாட்சியத்தை முன்னிலைப்படுத்த முடியாது. அந்த சாட்சியம் நம்பகத்தனைமை அற்றது. 
 
சுவிஸ் குமார், குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார் எனில் , ஏன் பொறுப்புள்ள பொலிஸ் அதிகாரி அந்து தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை. 
 
முரண்பாடான சாட்சியங்கள். 
 
அதேபோன்று மன்றில் குற்ற செயலை கண்ணால் கண்ட சாட்சியம் என முற்படுத்தப்பட்ட இரு சாட்சிகளும் , முரண்பாடான சாட்சியங்களை அளித்துள்ளன. 
 
சுரேஷ்கரன் என்பவர் சாட்சியம் அளிக்கையில் வன்புணர்வை வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். அதே இடத்தில் நின்ற மற்றுமொரு சாட்சியான மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் வீடியோ புகைப்படம் எடுத்தது என சாட்சியம் அளித்துள்ளார். இந்த இரு சாட்சியங்களும் முரணான சாட்சியங்களை வழங்கி உள்ளது. 
 
எனவே இந்த குற்ற சம்பவம் தொடர்பில் எனது தரப்பினருக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி குற்ற சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை. என தெரிவித்தார். 
 
மதுபோதைக்கு அடிமையானவரின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
அதனை தொடர்ந்து ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி  ஆறுமுகம் ரகுபதி தொகுப்புரையின் போது , இந்த வழக்கின் கண்கண்ட சாட்சியாக முற்படுத்தபப்ட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் என்பவர் தினமும் ஒரு போத்தல் சாராயமும் 4 போத்தல் கள்ளும் குடிப்பேன் என சாட்சியம் வழங்கும் போது தெரிவித்து இருந்தார்.
 
தினமும் மதுபோதையில் இருக்கும் குடிக்கு அடிமையான ஒருவர் குடிபதற்காக எதுவும் செய்ய துணிந்தவர். அவருக்கு குடிக்க கொடுத்து தமக்கு வேண்டிய காரியங்களை எவரேனும் செய்து கொள்ள முடியும். எனவே அவரின் சாட்சியம் நம்பகத்தன்மை அற்றது என தெரிவித்தார். 
 
அதன் போது மன்று குடிகாரன் சாட்சி சொல்ல கூடாது என சட்டம் சொல்லி இருக்கா ? என கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த சட்டத்தரணி அவ்வாறு இல்லை இந்த சாட்சியத்தின் நம்பகத்தன்மை அற்றதாக உள்ளது என கூறினார். 
 
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவரின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
தொடர்ந்து தொகுப்புரையில் தெரிவிக்கையில் , அடுத்த கண்கண்ட சாட்சியமாக முற்படுத்தப்பட்ட மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் , இவர் சட்டவிரோதமாக வீட்டில் கள்ளு விற்பனை செய்பவர். அதற்காக பல தடவைகள் போலீசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தண்டம் செலுத்தி உள்ளார். 
 
அவர் தனது சாட்சியத்தில் 2ஆம் ,  3ஆம் , 5 ஆம் , மற்றும் 6ஆம் எதிரிகள் தன்னுடைய வீட்டில் இருந்து கள்ளு அருந்தும் போது தான் வித்தியாவை கடத்த திட்டம் தீட்டியதாகவும் , தன்னுடைய வீட்டில் வைத்து தான் பொறுப்புக்கள் பகிரப்பட்டதகவும் சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன் மாணவி கடத்தப்பட்டு , வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , படுகொலை செய்யப்படும் வரையில் கூட இருந்ததாகவும் சாட்சியம் அளித்துள்ளார். அவ்வாறு எனில் அவர் சாட்சியமாக இந்த மன்றில் முற்படுத்தப்பட்டு இருக்க வேண்டியவர் இல்லை எதிரியாக மன்றில் நிற்க வேண்டியவர். ஏன் அவரை எதிரியாக சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. 
 
மோசடி காரனின் சாட்சி நம்பகத்தன்மையா ?
 
அடுத்த முக்கிய சாட்சியாக முற்படுத்தப்பட்ட இப்ரான் , இவர் மோசடி வழக்கில் குற்றவாளியாக கண்டு தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர். அவ்வாறான மோசடி குற்ற சாட்டில் உள்ள ஒருவரின் சாட்சியம் நம்பகத்தன்மை உடையதா ?
 
இக் குற்றத்திற்கு இரு நோக்கங்களா ?
 
ஒரு குற்றத்திற்கு ஒரு நோக்கம் இருக்கலாம் ஆனால் இந்த குற்றத்திற்கு இரு நோக்கங்கள் உள்ளதாக வழக்கு தொடுனர் தரப்பு குற்றம் சாட்டுகின்றது. 6ஆம் எதிரி மாணவியை ஒரு தலையாக காதலித்ததாகவும் , அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து அவமானப்படுத்தியதால் பழிவாங்க செய்யப்பட்டதாகவும். மற்றையது சுவிஸ் நாட்டில் வசிக்கும் நபர் அங்குள்ள மாபியா கும்பல் கேட்டதற்கு இணங்க ஆசிய பெண் ஒருவர் கடத்தபப்ட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யும் நேரடி வீடியோ காட்சியாக இக் குற்றம் புரியப்பட்டதாகவும். 
 
இதில் முதாலவது நோக்கமாக கூறப்படும் ஒரு தலை காதல் பிரச்சனை தொடர்பில் மாணவியின் தாய் சாட்சியம் அளிக்கவில்லை. அவரிடம் பிரதான விசாரணையின் போது , மாணவி பாடசாலை சென்று வரும் போது பிரச்சனை ஏதேனும் இருந்ததா ? மாணவிக்கு காதல் தொடர்பு இருந்ததா ? என கேட்ட போது இல்லை என பதில் அளித்துள்ளார். குறுக்கு விசாரணையின் போது பாடசாலை சென்று வரும் போது யாரேனும் தொந்தரவு செய்வதாக வீட்டில் கூறியுள்ளாரா என கேட்ட போது அதற்கும் இல்லை என பதில் அளித்துள்ளார். 
 
மாணவியை 6ஆம் எதிரி ஒரு தலையாக காதலித்து தொந்தரவு பண்ணி இருந்தால் , மாணவியின் வீட்டாருக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும். 
 
முரணான சாட்சியம். 
 
அடுத்து சம்பவ இடத்தில் நின்றதாக கண்கண்ட சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை எனும் புவனேஸ்வரன் ஆகியோர் முரணான சாட்சியங்களை அளித்துள்ளனர். 
 
சுரேஷ்கரன் வீடியோ எடுத்தது தெரியாது என சாட்சியம் அளிக்கின்றார். மாப்பிள்ளை வீடியோ எடுத்தார்கள் என சாட்சியம் அளித்தார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியை இழுத்து சென்றதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளை மாணவியை நால்வர் கைகள் மற்றும் கால்களை பிடித்து தூக்கி சென்றதாக சாட்சியம் அளித்துள்ளார். அதேபோன்று சுரேஷ்கரன் மாணவியின் உடைகளை பாழடைந்த வீட்டுக்குள் வைத்து கழட்டியதாக சாட்சியம் அளித்தார். மாப்பிள்ளை பற்றைக்குள் வைத்து உடைகளை கழட்டியதாக சாட்சியம் அளித்தார். 
 
உண்மை குற்றவாளிகள் தப்பி விட்டனர். 
 
சட்ட வைத்திய அதிகாரி சாட்சியத்தின் போது மாணவியின் நகங்கலினுள் தசை துண்டுகள் இருந்ததாகவும் அதனால் அதனை பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் கூறி இருந்தார். 
 
நகங்கலினுள் தசைகள் இருந்து இருப்பின் மாணவி எதிரிகளுடன் போராடியதால் அவர்களுக்கு நக கீறல்கள் ஏற்பட்டமையால் தான் எதிரிகளின் தசைகள் நகங்கலினுள் இருந்து இருக்கும். அவ்வாறு எனில் மாணவியின் கைகள் சுதந்திரமாக எதிரியுடன் போராட கூடிய நிலையில் இருந்து இருக்கு.அவ்வாறு எனில் மாணவியின் கைகளை அழுத்தி பிடிக்கவில்லை. ஆனால் கண்கண்ட சாட்சியம் என சாட்சி அளித்தவர்கள் கைகளை எதிரிகள் பிடித்து இருந்ததாக கூறினார்கள். 
 
அதேபோன்று மாணவியின் தலையில் ஏற்பட்ட காயம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார். ஏனெனில் விழுந்து இருந்தால் மண்டையோடு வெடித்து இருக்கும் என , தலையில் ஏற்பட்ட காயம் மட்டமான ஆயுதத்தால் தாக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார். அதனால் மனைவியை தலையில் தாக்கிய பின்னர் வன்புணர்வு செய்துள்ளனர். 
 
போதுமான ஆதாரங்கள் இல்லை. 
 
இந்த குற்ற செயலுடன் தொடர்புடைய போதுமான சான்று பொருட்கள் ஜின்டேக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கபப்ட்டு இருந்தது. அதன் பரிசோதனையில் எந்த அறிக்கையும் எதிரிகளுடன் ஒத்து போகவில்லை. 
 
எனவே இந்த குற்ற சாட்டுகள் தொடர்பில் எதிரிகள் மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை. உண்மை குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர்.  என தெரிவித்தார். 
 
பொய் சாட்சியம் வழங்கினார். 
 
அதனை தொடர்ந்து 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் தொகுப்புரையின் போது ,
 
கண்கண்ட சாட்சி என சாட்சியம் அளித்த சுரேஷ்கரன் மாணவியின் கையை யார் பிடித்தது , காலை யார் பிடித்தது என தெளிவாக சாட்சியம் அளித்தவர் , வீடியோ புகைப்படம் எடுத்தது தொடர்பில் தெரியாது என சாட்சியம் அளித்துள்ளார். 
 
வீடியோ எடுத்த பார்த்ததாக கூறிய மாப்பிள்ளையின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றது என 5 ஆம் எதிரியின் சட்டத்தரணி கூறியள்ளார். அதனையே நானும் கூறுகிறேன். 
 
ஆலடி சந்தியில் 12ஆம் திகதி (மாணவி கடத்தப்படுவதற்கு முதல் நாள்) சுவிஸ் குமார் உள்ளிட்டவர்களை வாகனத்தில் கண்டதாக சாட்சியம் அளித்த இலங்கேஸ்வரன்,  தான் கடையில் நின்று பார்த்த போது சுவிஸ்குமார் கறுத்த கண்ணாடி அணிந்து வித்தியாவை பார்த்ததை பார்த்தேன் என சாட்சியம் அளித்தார். 
 
கறுப்பு கண்ணாடியினால் பார்க்க முடியாது. 
 
பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் கறுப்பு கண்ணாடி அணிந்து பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். ஏனெனில் அவர்கள் யாரை எங்கே பார்க்கின்றார்கள் என்பதனை எதிரில் உள்ளவர்கள் அவதானிக்க முடியாது என்பதனால் , அப்படி இருக்கையில் சுவிஸ் குமார் கறுப்பு கண்ணாடி போட்டு வித்தியாவை தான் பார்த்தார் என எவ்வாறு அவரால் சாட்சியம் அளிக்க முடிந்தது. என தெரிவித்தார். 
 
அதன் போது சட்டத்தரணி மன்றுக்கு கறுத்த கண்ணாடி கொண்டு வந்து அதனை தான் அணிந்து காட்டி தன்னுடைய கருமணி எங்கே பார்க்கின்றது என அவதானிக்க முடியாது என மன்றில் கூறினார். 
 
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் பார்க்கும் திசையை வைத்து யாரை பார்க்கிறீர் என கூற முடியும். என தெரிவித்தனர். அதன் போது நீதிபதி மா.இளஞ்செழியனும் கறுத்த கண்ணாடியை அணிந்து பார்த்தார். 
 
மோசடி செய்தவர் மன்றில் பொய் சாட்சி அளித்தார். 
 
அதனை தொடர்ந்து மற்றுமொரு முக்கியமான சாட்சியமாக முற்படுத்தபப்ட்ட இப்ரான் என்பவர் மோசடிக்காரன். அவர் மோசடி வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிப்பவர். அவர் இந்த கௌரவ மன்றிலும் மோசடி சாட்சி அளித்துள்ளார். 
 
தனக்கு இந்த குற்ற செயல்கள் தொடர்பில் சுவிஸ் குமார் மாத்திரம் தான் கூறியதாகவும் வேறு எந்த எதிரிகளும் இந்த குற்ற சம்பவம் தொடர்பில் தன்னுடன் கதைக்க வில்லை என சாட்சியம் அளித்துள்ளார். 
 
அதேபோன்று தான் சிறையில் , சிறைசாலை அத்தியட்சகரின் அறையில் வைத்திய பரிசோதனையை முடித்து வெளியே வந்த போதே குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகரை கண்டதாக சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில் ,அவ்வாறு மருத்துவர்கள் எவரையும் தான் காணவில்லை என சாட்சி அளித்தார்.
 
அதேபோன்று தான் கடனட்டை (கிரடிட்கார்ட்) மோசடி வழக்கில் தான் தண்டனை பெற்றதாகவும், அதுவும் தான் செய்யாத குற்றம் எனவும் , தனது நண்பன் செய்த குற்றத்திற்காகவும் தான் சிறை தண்டனை அனுபவிப்பதாக சாட்சியம் அளித்தார். ஆனால் குற்றபுலனாய்வு திணைக்கள பொலிஸ் பரிசோதகர் சாட்சியம் அளிக்கையில் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதனால் தான் சிறை தண்டனை அனுபவிப்பதக சாட்சியம் அளித்தார்.
 
ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா ?
 
இப்ரான் தனது சாட்சியத்தில் சொல்கின்றார் , சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் உள்ளது. அவங்கள் ஆசிய பெண்ணை கடத்தி கற்பழித்து படுகொலை செய்வதனை நேரடி வீடியோ எடுக்க வேண்டும் என சுவிஸ் குமாருடன் ஒப்பந்தம் செய்ததாக , 
 
ஏன் ஆசியாவில் அழகான பெண் புங்குடுதீவில் தான் உள்ளாரா ? சிங்கப்பூரில் எந்த அழகான பெண்கள் உள்ளனர். அவ்வாறு இருக்கையில் இலங்கையில் புங்குடுதீவில் பாடசாலையில் கற்கும் மாணவி தான் வேண்டுமா ? அந்த சுவிஸ் மாபியா கும்பலுக்கு, இந்த கதை எல்லாம் திரைப்பட கதை போன்று உள்ளது. இந்த கதையை மோசடி குற்ற சாட்டில் சிறை தண்டனை பெற்றவர் சட்சியமாக கூறியுள்ளார். இதனை நம்பவே முடியாது. 
 
12ஆம் திகதி சுவிஸ்குமார் கொழும்பில் நின்றார். 
 
அத்துடன் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் எனது தரப்பான 4ஆம் எதிரி , 7ஆம் எதிரி மற்றும் 9ஆம் எதிரி ஆகியோர் கொழும்பில் தான் நின்றனர். 12ஆம் திகதி புங்குடுதீவில் வாகனத்தில் எனது தரப்பை சேர்ந்தவர்களை கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் இந்த மன்றில் கூறிய சாட்சி சொல்லிக்கொடுக்கபப்ட்ட பொய் சாட்சி ஆகும். 
 
இந்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய 1 தொடக்கம் 22 வரையிலான சான்று பொருட்கள் எவையும் எனது தரப்பினர் குற்றவாளிகள் என காண்பதற்கு எதுவாக இல்லை. எனது தரப்பினர் மீதான குற்ற சாட்டுக்கள் எவையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என தனது தொகுப்புரையில் தெரிவித்தார். 
 
எழுத்து மூல சமர்ப்பணங்களை 15ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க உத்தரவு. 
 
அதனை தொடர்ந்து எதிரிகள் தரப்பு தொகுப்புரை முடிவுறுத்தப்பட்டது. வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகள் எழுத்து மூலம் சமர்ப்பணங்கள் இருப்பின் அதனை எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பதிவாளரிடம் ஒப்படைக்குமாறு மன்று உத்தரவு இட்டது. 
 
27ஆம் திகதி தீர்ப்பு. 
 
அதனை அடுத்து எதிர்வரும் 27ஆம் திகதி மாணவி கொலை வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தீர்ப்பாயம் அறிவித்தது. அன்றைய தினம் மாணவியின் தாயாரை மன்றுக்கு வருமாறு மன்று அறிவித்தது. 
 
11ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்ட உதயசூரியன் சுரேஷ்கரன் தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டு உள்ளார். அவரை 27 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு மன்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு இட்டது. 
 
அதனை தொடர்ந்து ஒன்பது எதிரிகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி  வரையில் விளக்க மறியிலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது. 

http://globaltamilnews.net/archives/40986

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வித்தியா படுகொலை: பரபரப்பின் மத்தியில் நாளை தீர்ப்பு

 

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு நீதாய விளக்க நீதிபதிகளால் நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலை சென்ற  மாணவி சிவலோகநாதன் வித்தியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் 9 பேர் எதிரிகளாக இனங்காணப்பட்டனர்.

 

அந்த வகையில் முதலாம் எதிரியான பூ.இந்திரகுமார், 2 ஆம் எதிரியான பூ.ஜெயக்குமார், 3 ஆம் எதிரியான பூ.தவக்குமார், 4 ஆம் எதிரியான ம.சசிதரன், 5 ஆம் எதிரியான நி.சந்திரகாந்தன்,  6 ஆம் எதிரியான சி.துசாந்தன், 7 ஆம் எதிரியான ப.குகநாதன், 8 ஆம் எதிரியான ஜெ.கோகிலன்,  9 ஆம் எதிரியான ம.சசிகுமார் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றச்சாட்டு பத்திரம் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை  நீதாய விளக்க நீதிமன்றில்  (ட்ரயலட்பார்) விசாரணை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்ததையடுத்து, பிரதம நீதியரசரால் நீதாய விளக்க நீதிமன்றுக்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

அந்த வகையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்க மன்று யூன் மாதம் முதன்முறையாக யாழ் மேல் நீதிமன்றில் கூடியது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை   கற்பழிக்கும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியமை, பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்தியமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்தமை, கூட்டாக சேர்ந்து பலாத்காரம் செய்து கொலை செய்தமை போன்ற பிரதான குற்றங்களும், மேற்குறித்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட 41 குற்றச்சாட்டுக்கள் எதிரிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டது.

இதில் 9 ஆம், 4 ஆம் எதிரிகளுக்கு எதிரான பிராதான குற்றச்சாட்டாக, வித்தியாவை பலாத்காரம் செய்யும் நோக்கத்துக்காக கடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்  சாட்டப்பட்டிருந்தது.

2 ஆம், 3 ஆம், 5 ஆம் 6 ஆம் எதிரிகளுக்கு எதிராக மேற்குறித்த நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களும் சாட்டப்பட்டிருந்தன.

7 ஆம் 8 ஆம் எதிரிகளுக்கு  எதிராக மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக பிரதான குற்றச்சாட்டுக்களாக முன்வைக்கப்பட்டது.

மேற்குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு தாம் சுற்றவாளிகள் என 9 எதிரிகளும் மன்றுரை செய்திருந்தனர்.

அதனையடுத்து கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து நீதாய விளக்க நீதிபதிகள் மூவர் முன்னிலையில் விளக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

வழக்கு தொடுநர் தரப்பு எதிரிகள் தரப்பு சாட்சியங்கள் என அனைத்து சாட்சியங்களின் விசாரணைகள் முடிவுறும் வரை ஒவ்வொரு முறையும் மன்றில் எதிரிகள் 9 பேரும் ஆயர்படுத்தப்பட்டனர்.

அனைத்து விசாரணைகளும் கடந்த செப்ரம்பர் மாதம் 13 ஆம் திகதி முடிவுற்றிருந்த நிலையில் நாளைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/vithya-murder-Tomorrow-is-the-judgment

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று : நீதிமன்றத்தைச் சூழ விசேட பாதுகாப்பு

 

 

 

Local_News.jpg

நாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. 

யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து யாழ்.நீதிமன்ற கட்டித் தொகுதியை சூழவும், நீதிமன்றின் உள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 50 பொலிஸார் பாதுகாப்பு சேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் பூங்குடுதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற உயர்தர வகுப்பு மாணவி தன் வீட்டிலிருந்து காலை பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு மிகக்கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச் சம்பவத்தினையடுத்து இலங்கை முழுவதும் இந்த மாணவியின் கொலைக்கு நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன.

இக் குற்றச் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளினூடாக பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார் ஆகிய சகோதரர்கள் மூவரும் 14.05.2015 அன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளினூடாக மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதஞவன் துஷாந்தன், பழனிரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் ஆகிய ஐவரும் 17.05.2015 அன்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் இக் குற்றச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் 18.05.2015 அன்று யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனிடம் சரணடைந்த அல்லது அவரால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

இதன்பின்னர் அன்றைய தினம் சுவிஸ்குமார் யாழ்.பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர் சில மாதங்கள் கடந்து ஊர்காவற்றுறை பொலிஸார் மேலும் ஒருவரை பத்தாவது சந்தேகநபராக கைதுசெய்திருந்தனர்.

இதேவேளை குறித்த குற்றச்சம்பவம் தொடர்பான விசாரணையானது 2015.05.20 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் பாராப்படுத்தப்பட்டது. இவர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இவ் வழக்கின் 11 ஆவது மற்றும் 12 ஆவது சந்தகே நபர்களாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன் இது தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

சுமார் ஒன்றரை வருடங்களாக இவ் வழக்குத் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு இவ்வழக்கின் கோவைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாராப்படுத்தப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் இவ் வழக்கானது பரிசீலிக்கப்பட்டு இவ்வழக்கின் 12 சந்தேக நபர்களில் 11 வது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் சட்டமா அதிபரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு அரச தரப்பு சாட்சியாக மாற்றப்பட்டார். அத்துடன் 10 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேக நபர்கள் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இதன் பின்னர் இவ்வழக்கின் ஏனைய 9 சந்தேக நபர்களுக்கும் எதிராக ஆட்கடத்தல், சதித்திட்டம் தீட்டியமை, கற்பழித்தமை, கொலை செய்தமை ஆகிய நான்கு பிரதான குற்றச்சாட்டுக்களுடன் 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வுப் பத்திரமானது சட்டமா அதிபரால் தயார் செய்யப்பட்டது. அத்துடன் பிரதம நீதியரசரால் இவ்வழக்கை விசாரணை செய்ய ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூன்று தமிழ்மொழிபேசும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட இந்த நீதிபதிகள் உள்ளடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணையானது கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானது. அன்றிலிருந்து குறிப்பிட்டகால இடைவெளியில் வழங்கு ஒத்திவைக்கப்பட்டு கடந்த 13ஆம் திகதி வரை 17 நாட்கள் இவ்வழக்கானது விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது இவ்வழக்கினை சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடன் பிரதிசொலிஸிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

இதன்படி இவ் வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவுறுத்தப்பட்டு வழக்கின் தீர்ப்புக்காக மன்றால் திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் காலை 9 மணிக்கு இத் தீர்பபானது ட்ரயல்அட்பார் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது..

இதேவேளை இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் யாழ்.நீதிமன்ற கட்டித் தொகுதியில் விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக வித்தியாவின் வழக்கு நடவடிக்கை இடம்பெறும் போது நீதிமன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதாற்காக கடமையில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மேலும் 50 பொலிஸார் பாதுகாப்பு சேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்தாகும்.

http://www.virakesari.lk/article/24958

வித்தியா கொலை வழக்கு – தீர்ப்பு இன்று – சந்தேகநபர்கள் நீதிமன்றில்

 
வித்தியா கொலை வழக்கு – தீர்ப்பு இன்று – சந்தேகநபர்கள் நீதிமன்றில்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தில் நடைபெற்ற விசாரணைகளை அடுத்து இன்று வழக்கின் தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

IMG-ae2b03f6f2dbb8252b9fee870b20b297-V-7IMG-aea79a882b3bd9bdf73dd66fa10cea3e-V-7IMG-ca087e904759e180d7a0e971a44e0b95-V-7IMG-d1ec476a161dde3ba5a22c3cf3c64da1-V-7

வழக்கின் சந்தேகநபர்கள் சற்றுமுன்னர் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

நீதிமன்றுக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/32357.html

நீதிமன்றுக்கு வந்தார் வித்தியாவின் தாய்

 
நீதிமன்றுக்கு வந்தார் வித்தியாவின் தாய்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மாணவியின் தாய் சற்றுமுன்னர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.

1-17-750x400.jpg3-10-750x400.jpg

 

http://newuthayan.com/story/32367.html

Link to comment
Share on other sites

வித்தியாவின் தாயின் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டது தீர்ப்பாயம்!!

வித்தியாவின் தாயின் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டது தீர்ப்பாயம்!!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாய் வழங்கிய சாட்சியத்தையும், அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டு வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தண்டனைத் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

தற்போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் 332 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

தீர்ப்பை எதிர்பார்த்து திறந்த நீதிமன்றில் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டுள்ளனர்.

http://newuthayan.com/story/32434.html

Link to comment
Share on other sites

புவனேஸ்வரனின் (மாப்பிள்ளை) சாட்சியத்தை ஏற்றது தீர்ப்பாயம்

 
Oபுவனேஸ்வரனின் (மாப்பிள்ளை) சாட்சியத்தை ஏற்றது தீர்ப்பாயம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வித்தியா படுகொலை வழக்கின் மற்றொரு கண்கண்ட சாட்சியான மாப்பிள்ளை என்று அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தை தீர்ப்பாயம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது.

அரச சாட்சியாக மாறிய உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியத்தின் முக்கிய விடயங்களுடன் நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியமும் ஒத்துப்போவதால் அந்தச் சாட்சியம் உண்மை என தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது

http://newuthayan.com/story/32452.html

Link to comment
Share on other sites

வித்தியா கொலை வழக்கு – சிறுவனின் சாட்சியத்தை ஏற்றது தீர்ப்பாயம்

 

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் 13 வயதுப் பாடசாலை மாணவன் வழங்கிய சாட்சியத்தைத் தீர்ப்பாயம் உண்மை என ஏற்றுக் கொண்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

இந்த வழக்கில் இரண்டாம் எதிரியை வீதியில் கண்டதாக சிறுவன் வழங்கிய சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றபுலனாய்வு பிரிவு பிரதான விசாரணை அதிகாரிக்கு வழக்கின் சந்தேகநபர் லஞ்சம் கொடுக்க முற்பட்டமை தொடர்பாக சாட்சியமளித்த இப்லானின் சாட்சியத்தையும் தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அவர் குற்றம் நடத்த இடத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்ற ரீதியும், குற்றத்துடன் தொடர்பற்றவர் என்ற ரீதியிலும் தீர்ப்பாயம் சாட்சியத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

http://newuthayan.com/story/32474.html

Link to comment
Share on other sites

காணொலி எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டது தீர்ப்பாயம்

 
காணொலி எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டது தீர்ப்பாயம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

நடராசா புவனேந்திரனின் (மாப்பிள்ளை) சாட்சியத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலும், முதன்மை விசாரணைகளின் போது கிடைத்த தடயங்களின் அடிப்படையிலும் குற்றச் செயல் காணொலி எடுக்கப்பட்டதை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டுள்ளது.

http://newuthayan.com/story/32479.html

 

கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தது தீர்ப்பாயம்

 
கூட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தது தீர்ப்பாயம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம் மற்றும் மற்றொரு கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட வைத்திய அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும் மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்பதைத் தீர்ப்பாயம் உறுதி செய்தது.

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

http://newuthayan.com/story/32487.html

Link to comment
Share on other sites

2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளே வன்புணர்வை மேற்கொண்டனர்

 
2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளே வன்புணர்வை மேற்கொண்டனர்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

கூட்டு வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படுகின்றது. யாழ். மேல் நீதிமன்றில் கூடியுள்ள தீர்ப்பாயத்தில் அதன் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் தான் இந்த வன்புணர்வை மேற்கொண்டனர் என்று தீர்ப்பாயம் முடிவுக்கு வந்துள்ளது.

http://newuthayan.com/story/32490.html

Link to comment
Share on other sites

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்

 
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தீர்ப்பாயத்தின் தலைவர் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் தனது தீர்ப்பை நிறைவு செய்தார்.

நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கள் தீர்ப்பாயத்தின் தலைவரின் தீர்ப்பே தனது தீர்ப்பு என்று அறிவித்தார்.

தற்போது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

http://newuthayan.com/story/32499.html

Link to comment
Share on other sites

gavel

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், நான்கு எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர் என்பதை, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

அரச தரப்புச் சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சியம் மற்றும் மற்றொரு கண்டகண்ட சாட்சியான நடராஜா புவனேஸ்வரனின் சாட்சியத்தின் அடிப்படையிலும், சட்ட மருத்துவ அதிகாரி மயூரதனின் சாட்சியத்தின் அடிப்படையிலும்,  மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு தீர்ப்பாயம் வந்துள்ளதாக, நீதிபதி சசிமகேந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டு வன்புணர்வில், 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் , 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் , 5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன் , 6ஆம் எதிரியான சிவதேவன் துசாந்த் ஆகியோர்  ஈடுபட்டுள்ளனர் என்பதையும் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2017/09/27/news/26276

Link to comment
Share on other sites

வித்தியா வழக்கில் ஏழு பேர் குற்றவாளிகள்
 

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்தது.

இதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அரசாங்கத் தரப்புத் தொகுப்புரையில், முதலாம், ஏழாம் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளை, சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வித்தியா-வழக்கில்-ஏழு-பேர்-குற்றவாளிகள்/150-204565

Link to comment
Share on other sites

விஜயகலாவின் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை

 
விஜயகலாவின் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தற்போது தீர்ப்பை வாசிக்கின்றார்.

அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நடவடிக்கை சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.

பொதுமக்கள் சுவிஸ்குமாரைக் கட்டி வைத்து அடிக்கும்போது அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அவரிடம் நீ சசியின் (இந்தப் பெரும் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4ஆம் எதிரி) அண்ணாவா என்று கேட்டு, சுவிஸ்குமார் ஆம் என்றவுடன் விஜயகலா மகேஸ்வரன் பொதுமக்களை அவிழ்த்து விடுமாறு கூறியுள்ளார். அது நல்ல விடயம்.

 

9ஆம் எதிரியைப் பொலிஸாரிடம ஒப்படைக்கவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ நாடாளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை நீதிமன்றில் சாட்சியமாகத் தெரிவித்தது 9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார்.

பொதுமக்களிடம் ம.சசிக்குமாரை அவிழ்த்து விடுமாறு கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சசிக்குமாரின் உறவினர்கள் வந்து அவரை அழைத்துச் செல்லும் வரை சுமார் 2 மணி நேரம் இரவு 11 மணியில் இருந்து 1 மணி வரை வீதியில் காத்திருந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இந்தச் செயல் ம.சசிக்குமாரை தப்பிக்க வைக்கும் முதலாவது நடவடிக்கை.

இரண்டாவது நடவடிக்கை

ம.சசிக்குமரைத் தப்பிக்க வைக்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜனின் நடவடிக்கை

என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்

 

http://newuthayan.com/story/32503.html

7 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபணம்!

7 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபணம்!
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தண்டனைத் தீர்ப்பு சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தற்போது தீர்ப்பை நிறைவு செய்தார்.

1ஆம், 7ஆம் எதிரிகளை விடுவிப்பதற்கு தீர்ப்பளித்துள்ள அவர் ஏனைய ஏழு எதிரிகள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பளித்தார்.

எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகள் வழக்கை மறந்து நடந்து கொண்டனர். ஒரு மாணவி கொடூரமாக – மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிரிகள் மீது சித்திரவதை செய்யப்பட்டது என்பதையே 200 பக்க விசாரணைக்கு கொண்டு வந்தனர்.

http://newuthayan.com/story/32508.html

 

ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என கேள்வி

 
ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என கேள்வி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்த்து ஏனைய 7 எதிரிகளிடமும் ஏன் உங்களுக்குக் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயம் தற்போது கேட்டுள்ளது.

http://newuthayan.com/story/32510.html

 

 

திறந்த நீதிமன்றில் மயங்கினார் வித்தியாவின் தாய்!

 

எதிரிகள் மன்றில் தற்போது தமது கருத்துக்களைக் கூறுகின்றனர்.

நீதிமன்றத்துக்கு வந்திருந்த மாணவி வித்தியாவின் தாய் திறந்த நீதிமன்றில் மயங்கிச் சரிந்தார்.

http://newuthayan.com/story/32511.html

 

 

வித்தியா கொலை – 7 பேருக்குத் தூக்கு!!

 
 
  •  
  •  
  •  
  •  
  •  

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

http://newuthayan.com/story/32513.html

Link to comment
Share on other sites

வித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை

முதலாம் ஏழாம் இலக்க சந்தேகநபர்கள் தவிர்ந்த சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் சற்று முன்னர் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ஆவது எதிரி மகாலிங்கம் சசிதரன், 5 ஆம் இலக்க எதிரி தில்லை நாதன் சந்திரதாசன், 6 ஆம் இலக்க எதிரி பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன், 8 ஆம் எதிரி  ஜெயநாதன் கோகிலன், 9 ஆம் எதிரி சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோருக்கு இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/24981

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.