Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி

Featured Replies

புறமுதுகு காட்டி ஓட வேண்டாம்

sumanthiran-new-44e488f944895b04ec0ad18930ca882d4864ed53.jpg

நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

சம­யத்­த­லை­வர்கள் நான்கு பேர் கூறு­வதால் அர­சாங்கம் முக்­கிய விட­யங்­களை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றதா என்ற பாரிய சந்­தேகம் எமது மக்­க­ளுக்கு எழுந்­துள்­ளது. அவ்­வாறு கூறு­வ­தனால் தான் விட­யங்கள் நிறுத்­தப்­ப­டு­மாக இருக்கும் என்றால் இந்­தப்­ பா­ரா­ளு­மன்றம் தேவை­யில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்­டு­மென சட்­ட­மி­யற்றிக் கொண்­டி­ருக்­கலாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்திரன் சபை யில் காட்­ட­மாக தெரி­வித்தார்.

எழு­பது வருட பிரச்­சி­னைக்கு ஓரிரு வரு­டங்­களில் தீர்­வினை பெறு­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கின்­ற­போது ஏற்­படும் தடங்­கல்­களை கண்டு புற­மு­துகு காட்டி ஓடாது மக்கள் ஆணையை நிறை­வேற்­ற­வேண்டும் எனவும் வலி­யுத்­திய சுமந்­திரன் எம்.பி இச்­சி­றப்­பான செயற்­பாடு தோல்­வியில் முடி­யு­மாக இருந்தால் இந்த நாட்டில் நல்­லி­ணக்கம் தோல்­வி­ய­டைந்த சரித்­தி­ரமே எழு­தப்­படும் எனவும் சுட்­டிக்­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கடற்­றொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்­தச்­சட்ட மூலத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், நேற்­றை­ய­தினம்(நேற்று முன்­தினம்) கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருந்த வலுக்­கட்­டா­ய­மாக காணமல் போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்றி சர்­வ­தேச சம­வா­யச்­சட்­ட­மூலம் பிறி­தொரு தினத்தில் கொண்­டு­வ­ரப்­ப­டு­மென சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல கூறி­யதை நாங்கள் வர­வேற்­கின்றோம். ஏன் நேற்­றை­தினம் பின்­வாங்­கி­னார்கள் என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் தற்­போது எழுந்­துள்­ளது. இந்த நாட்டில் இருக்கும் முக்­கிய சம­யத்­த­லை­வர்கள் கூறு­வ­தனால் தான் அர­சாங்கம் அவ்­வாறு பின்­வாங்­கு­கின்­றதா என்ற சந்­தேகம் எழுந்­தி­ருக்­கின்­றது. அவ்­வாறு இருக்­க­மு­டி­யாது. அவ்­வாறு இருக்­கவும் கூடாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.  

அவ்­வாறு சம­யத்­த­லை­வர்கள் கூறு­வ­தானால் தான் நிறுத்­தப்­ப­டு­மாக இருக்கும் என்றால் இந்தப் பார­ளு­மன்றம் தேவை­யில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்­டு­மென சட்­ட­மி­யற்றிக் கொண்­டி­ருக்­கலாம். இந்­தப்­பா­ரா­ளு­மன்றம் தான் முதன்­மை­யா­னது. மக்­களின் இறைமை, சட்­ட­வாக்க அதி­காரம் இந்தப் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாகத் தான் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதை தொடர்ச்­சி­யாக பலர் இங்கு கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

ஆகவே இந்­தப்­பா­ரா­ளு­மன்­றத்­தினை விடமும் மேலான சபை இருக்க முடி­யாது. வலுக்­கட்­டா­ய­மாக காணமல் போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்றி சர்­வ­தேச சம­வா­யச்­சட்­ட­மூல விட­யத்தில் முன்­வைத்த காலை சற்று தாம­தப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றீர்கள். ஆனால் அந்த விட­யத்­தினை அர­சாங்கம் நிச்­சயம் செய்­ய­வேண்டும்.

அதே­போல புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். நேற்­றை­ய­தினம் (நேற்று முன்­தினம்) அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் தெட்­டத்­தெ­ளி­வாக அறி­வித்­தி­ருக்­கின்­றமை நல்­ல­தொ­ரு­வி­டயம். அர­சாங்­கத்­திற்கு கொடுக்­கப்­பட்­டுள்ள ஆணையை நாம் மதித்து புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நாம் கொண்டு வந்தே தீருவோம் என்று அறி­வித்­தி­ருக்­கின்­ற­மையை நாங்கள் வர­வேற்­கின்றோம்.

நாங்கள் ஒன்­றைரை வரு­டங்­க­ளாக நேரத்­தினை செல­வ­ழித்து வழி­ந­டத்தல் குழு­விலும், உப­கு­ழுக்­க­ளிலும், வெவ்­வேறு இடங்­க­ளிலும் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டு இந்த நாட்டில் அனைத்து மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தினை ஏற்­ப­டுத்த முடியும் என்ற செயற்­பாட்­டிலே இறங்­கி­யி­ருக்­கின்றோம்.

அத­னைச்­செ­யற்­ப­டுத்­திக்­கொண்­டி­ருக்­கின்றோம். இது முழு நாட்­டிற்கும் தெரிந்­த­வொரு விடயம். சிறப்­பான அச்­செ­யற்­பாடு தோல்­வியில் முடிந்­த­தாக இருக்க கூடாது.

அந்த முயற்சி தோல்­வி­ய­டை­கி­ற­தாக இருந்தால் இந்த நாட்­டிலே நல்­லி­ணக்கம் தோல்­வி­ய­டைந்­த­தா­கவே சரித்­திரம் எழுத்­தப்­படும். நல்ல, முற்­போக்குச் சிந்­த­னை­யோடு செயற்­ப­ட­வேண்டும். இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இருக்­கின்­ற­மையே அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கா­க­வாகும். சில, பல தாம­தங்கள், இடை­யூ­றுகள், குழப்­பங்கள் வரு­கின்­றன. இவை வர­மு­டி­யாது என்று கரு­தப்­ப­ட­மு­டி­யாது. காரணம் ஏழு­பது வரு­டங்­க­ளாக தீர்க்க முடி­யாது காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னையை ஓரிரு வரு­டங்­களில் தீர்க்க முயல்­வது கடி­ன­மான விடயம். தடங்கள் என்­பது நாம் எதிர்­பார்க்­கின்ற விட­ய­மாகும்.

தடங்­கல்கள் வரு­கின்­ற­போது புற­மு­துகு காட்டி ஓடி­வி­டாது, செய்­ய­மு­டி­யாது என்று மனம் தளந்து விடாமல் மக்­களால் வழங்­கப்­பட்ட ஆணை­யையும், இந்த நாட்டின் அனைத்து மக்­களின் எதிர்­கா­லத்­தி­னையும் நினைவில் கொண்டு செயற்­ப­ட­வேண்டும். இவ்­வா­றா­ன­தொரு இனங்­க­ளுக்­கி­டை­யி­லாக சிக்கல் இங்கு ஏற்­ப­டாது விட்டால் இந்த நாடு எவ்­வ­ளவு சுபீட்­ச­மான நிலை­மையில் இருந்­தி­ருக்கும். இந்த நாட்டில் அனைத்து இன மக்­களும் ஏற்­றுக்­கொள்ளும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான சமுக ஒப்­பந்­த­தினை புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­திலே உரு­வாக்க வேண்டும்.

அப்­பொ­ழு­துதான் இந்த நாடு சுபீட்­ச­மான பாதையில் முன்­னேறும். அது­வ­ரையில் எத்­த­கைய பூசி மெழு­கல்­களைச் செய்­தாலும் அடிப்­ப­டையில் காணப்­படும் பிரச்­சி­னைகள் அவ்­வா­றுதான் இருக்கும். மக்­களின் ஆணையை மீறி அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை என்று பறை­சாற்­று­கின்­றார்கள். இந்­தப்­ப­ணியை செய்து முடிப்­ப­தற்­காக தேசிய அர­சாங்­க­மாக பொறுப்­பேற்­றுள்ள அர­சாங்கம் பின்­வாங்க வேண்­டிய அவ­சியம் கிடை­யாது. பின்­வாங்­கக்­கூ­டாது.

ஏனென்றால் எதிர்க்­கட்­சியில் அமர்ந்­தி­ருக்கும் நாமும் அதற்­கான பூரண ஆத­ரவை கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். மாற்­றத்­துக்­காக ஆயுத மேந்­திப்­போ­ரா­டிய மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஆத­ர­வ­ளித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஆகவே எதிர்த்­த­ரப்­பு­களும் ஒத்­து­ழைப்­புடன் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த விட­யத்தில் வெற்­றி­காண வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

இந்த நாட்டில் பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்திருக்கு ஒரேயொரு முதற்சந்தர்ப்பத்தினை பிரயோசனப்படுத்தாது விட்டோம் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகாது ஒவ்வொரு பொதுமகனின் அடிப்படை அபிலாஷையையும் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு பொறுப்புடன் செயற்படவேண்டும். அவ்வாறானதொரு அரசியலமைப்புச் சட்டம் உருவாகுவது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல. வழிநடத்தல் குழுவின் அங்கத்தவர் என்ற வகையில் அதனை நான் அச்சமின்றிக் கூறுகின்றேன்.

அதேநேரம் இவ்வாறான செயற்பாடொன்றை முன்னெடுத்துள்ள தலைவர்கள் மக்கள் பிழையாக வழிநடத்தப்படுவதற்கோ, புரிந்துகொள்வதற்கோ இடமளிக்காது அவர்களை தொடர்ச்சியாக தெளிவுபடுத்தி வழிடத்தவேண்டிய பாரிய பொறுப்பினையும் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-07#page-1

694_thumb_cartoon_07-07-2017.jpg

3 hours ago, நவீனன் said:

புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் - நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி

பல தசாபத்தங்களாக சொறிலங்காவில் நடக்கும் கூத்துக்களை கொஞ்சமும் அறியாதவர் என்பதை சுமந்திரனின் இந்தக் கூற்று தெரிவிக்கிறது.

இந்த பாராளுமன்றம் தமிழர்களுக்கு தீர்வு வழங்காது என்பதாலேயே தனிநாட்டுக் கோரிக்கை ஏற்பட்டது, ஆயுதப்போராட்டமும் நடந்தது.

இவை ஒன்றையும் அறியாத முட்டாளாக இருந்துகொண்டு சிங்கள அரசுடன் சேர்ந்து சதிசெய்துவந்த  சுமந்திரன் இன்று திடீர் என்று பாராளுமன்றம் எதற்கு என்று கேட்பது வேடிக்கையிலும் வேடிக்கை!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2017 at 4:53 AM, Rajesh said:

ஆயுதப் போராட்டம் தோற்றுவிட்டது என்பதையும் அந்த போராட்டம் காரணமாக இலட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் கொடூரமாக அழிந்து போனார்கள்   என்பதையும்  இந்த தனிநாட்டு போராட்டம் காரணமாக  இன்று தமிழ் மக்கள் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களாக மாறிப்போனார்கள் என்பதையும்   அறிந்தும் அறியாதவர் போல் நீங்கள் சுமேந்திரனை முட்டாள் என்கிறீர்கள். அவர் உங்களை போன்று முட்டாளாக தன்னை காட்டிக்கொள்ளாமல் இனியும் சாத்தியம் இல்லாத  ஆயுதப் போராட்டம்  பற்றியும் தனி நாடு பற்றியும் கனவு காணாமல்   நடைமுறைச்சாத்தியமான தீர்வு பற்றி முயற்சி செய்கிறார். நீங்கள் அன்று போல் இன்றும் "வேடிக்கை" பார்க்கிறீர்கள்.   உங்களால் முடிந்ததது வேடிக்கை பார்ப்பது. அவர் தன்னால்   முடிந்ததை செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Jude said:

எந்த  பாராளுமன்றத்தில்

இவர் என்ன பேசுகின்றார் என்பதே அவருடைய  கேள்வி?

நீங்கள் போராட்டம்

மக்கள்  அழிவு

ஆயுதம் என

நீங்க  ஆட்டுக்குள்ள மாட்டை விடுகிறீர்கள்?

இந்த பாராளுமன்றத்தால் பௌத்த துறவிகளின் ஆசியற்று  இயங்கமுடியுமா?

முடிவுகளை  எடுக்க முடியுமா?

நீங்கள் சொல்வது போல் முடிந்ததை செய்பவராயின்

அந்த பௌத்த  துறவிகளை  ஏற்றுக்கொண்டு

அதன் மூலம் ஏதாவது  பெறுவதற்கு தானே  முயலவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

இவர் என்ன பேசுகின்றார் என்பதே அவருடைய  கேள்வி?

நீங்கள் போராட்டம்

மக்கள்  அழிவு

ஆயுதம் என

நீங்க  ஆட்டுக்குள்ள மாட்டை விடுகிறீர்கள்?

On 7/7/2017 at 4:53 AM, Rajesh said:

பல தசாபத்தங்களாக சொறிலங்காவில் நடக்கும் கூத்துக்களை கொஞ்சமும் அறியாதவர் என்பதை சுமந்திரனின் இந்தக் கூற்று தெரிவிக்கிறது.

இந்த பாராளுமன்றம் தமிழர்களுக்கு தீர்வு வழங்காது என்பதாலேயே தனிநாட்டுக் கோரிக்கை ஏற்பட்டது, ஆயுதப்போராட்டமும் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2017 at 10:32 AM, Jude said:

ஆயுதப் போராட்டம் தோற்றுவிட்டது என்பதையும் அந்த போராட்டம் காரணமாக இலட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் கொடூரமாக அழிந்து போனார்கள்   என்பதையும்  இந்த தனிநாட்டு போராட்டம் காரணமாக  இன்று தமிழ் மக்கள் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களாக மாறிப்போனார்கள் என்பதையும்   அறிந்தும் அறியாதவர் போல் நீங்கள் சுமேந்திரனை முட்டாள் என்கிறீர்கள். அவர் உங்களை போன்று முட்டாளாக தன்னை காட்டிக்கொள்ளாமல் இனியும் சாத்தியம் இல்லாத  ஆயுதப் போராட்டம்  பற்றியும் தனி நாடு பற்றியும் கனவு காணாமல்   நடைமுறைச்சாத்தியமான தீர்வு பற்றி முயற்சி செய்கிறார். நீங்கள் அன்று போல் இன்றும் "வேடிக்கை" பார்க்கிறீர்கள்.   உங்களால் முடிந்ததது வேடிக்கை பார்ப்பது. அவர் தன்னால்   முடிந்ததை செய்கிறார்.

On 8.7.2017 at 8:02 PM, Jude said:

யதார்த்தமான கருத்து - நன்றி ஜூட் 

  • கருத்துக்கள உறவுகள்
On 09/07/2017 at 3:46 AM, Jude said:

பாவம்  நீங்கள்

நித்திரை போல் நடிக்கவும் தெரியவில்லை

நேரம் பொன்னானது

நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2017 at 9:32 AM, Jude said:

ஆயுதப் போராட்டம் தோற்றுவிட்டது என்பதையும் அந்த போராட்டம் காரணமாக இலட்சக்கணக்கான இலங்கை தமிழ் மக்கள் கொடூரமாக அழிந்து போனார்கள்   என்பதையும்  இந்த தனிநாட்டு போராட்டம் காரணமாக  இன்று தமிழ் மக்கள் இலங்கையில் மிகவும் பின்தங்கிய மக்களாக மாறிப்போனார்கள் என்பதையும்   அறிந்தும் அறியாதவர் போல் நீங்கள் சுமேந்திரனை முட்டாள் என்கிறீர்கள். அவர் உங்களை போன்று முட்டாளாக தன்னை காட்டிக்கொள்ளாமல் இனியும் சாத்தியம் இல்லாத  ஆயுதப் போராட்டம்  பற்றியும் தனி நாடு பற்றியும் கனவு காணாமல்   நடைமுறைச்சாத்தியமான தீர்வு பற்றி முயற்சி செய்கிறார். நீங்கள் அன்று போல் இன்றும் "வேடிக்கை" பார்க்கிறீர்கள்.   உங்களால் முடிந்ததது வேடிக்கை பார்ப்பது. அவர் தன்னால்   முடிந்ததை செய்கிறார்.

யதார்த்தமானதும்  ...........
சாத்தியமானதும் தானாக நடக்கும்தானே ?
ஏன் சுமந்திரனும் நீங்களும் வில் வித்தை காட்டுகிறீர்கள் ?

சுமந்திரன் காட்டுற வில்வித்தை 1950 60 களில் காட்டிய பழைய வித்தை என்பதைதான் 
அவர் எழுதுகிறார்.
அது  கூட புரியவில்லை 

மக்களுக்கு  தேவையானதை பெறுவதட்குத்தான் 
அரசியல் கட்சிகள் தலைவர்கள் வேண்டும்.

தருவதை பெறுவது என்றால் ....
அதை மக்களே பெற்று கொள்வார்கள். 

நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம் ........
நீங்கள் என்ன சுமந்திரனுக்கு டவுள் ஆக்ட்டிங் செய்யிறீங்களோ ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.