Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்

Featured Replies

அக்.6-ல் கோவாவில் நாக சைதன்யா - சமந்தா திருமணம்

 

நாக சைதன்யா - சமந்தா இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் | கோப்புப் படம்
நாக சைதன்யா - சமந்தா இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படம் | கோப்புப் படம்
 
 

அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நாக சைதன்யா மற்றும் சமந்தா திருமண நடைபெறவுள்ளது. இதற்கு திரையுலகினர் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இரு வீட்டார் சம்மதத்துடன் ஜனவரி 29-ம் தேதி நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இருவரின் திருமணம் இந்தாண்டிற்குள் நடைபெறும் என்று தகவல் மட்டுமே வெளியானது. எப்போது திருமணம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், நாக சைதன்யா - சமந்தா இருவரின் திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் இருவரின் குடும்பத்தினர் சுமார் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார்கள்.

அக்டோபர் 6-ம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு, மீண்டும் அக்டோபர் 10-ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் - பொன்ராம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சமந்தா திட்டமிட்டுள்ளார். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்களின் படப்பிடிப்பு அனைத்தையும் முடித்துவிட்டு தேன்நிலவு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள் நாகசைதன்யா - சமந்தா ஜோடி.

தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் படம், 'மெர்சல்', பொன்ராம் - சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.

http://tamil.thehindu.com/cinema/south-cinema/அக்6ல்-கோவாவில்-நாக-சைதன்யா-சமந்தா-திருமணம்/article9755292.ece?widget-art=four-all

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எனக்கு எனக்கு கரிநாள்.

  • தொடங்கியவர்
10 minutes ago, colomban said:

அன்று எனக்கு எனக்கு கரிநாள்.

அக்டோபர் 6 நினைத்து  இப்பவே கொழும்பானுக்கு தடுமாற்றம்.tw_blush:

12 hours ago, colomban said:

அன்று எனக்கு எனக்கு கரிநாள்.

விடிய காலையில் இப்படி மனசு உடைந்து போகும் செய்தியா ??

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

சமந்தாவுக்கு நாக சைதன்யா திருமண புடவை பரிசளித்தார்

 
சமந்தாவுக்கு நாக சைதன்யா திருமண புடவை பரிசளித்தார்
 

தனது வருங்கால மனைவியான நடிகை சமந்தாவுக்கு, நாக சைதன்யா திருமண புடவையை பரிசாக வழங்கியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6-ம் தேதி கோவாவில் திருமணம் நடக்க வுள்ளது. திருமண நிகழ்ச்சிகள் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தடபுடலாக நடைபெற உள்ளன. முதலில் இந்து முறைப்படியும், பின்னர் கிறுஸ்தவ முறைப்படியும் திருமணம் நடக்கவுள்ளது.

இவர்களின் திருமண நிச்சய தார்த்தத்தின்போது சமந்தா கட்டியிருந்த புடவையில் அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை வடிவமைத்திருந்தார். இது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் திருமணத்தின் போது உடுத்திக்கொள்ள சமந்தாவுக்கு, நாக சைதன்யா தனது பாட்டிக்கு சொந்தமான ஒரு பட்டுப் புடவையை பரிசளித்துள்ளார். இது சமந்தாவுக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளதாகவும் திருமணத் தின்போது அந்தப் புடவை யையே கட்டிக்கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப் படுகிறது.

http://newuthayan.com/story/16415.html

  • கருத்துக்கள உறவுகள்

இனி வாழ்ந்து வேல இல்லவா

  • தொடங்கியவர்
11 minutes ago, colomban said:

இனி வாழ்ந்து வேல இல்லவா

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இனி வாழ்ந்து வேல இல்லவா

உறவு என்று ஒன்று இருந்தால் பிரிவு என்று ஒன்றும் இருக்கும்தானே கொழும்பான்...., ஏன் நீங்கள் சிரத்தா ஸ்ரீ நாத் துக்கு மாறக்  கூடாது....! tw_blush:

Image associée

  • கருத்துக்கள உறவுகள்

நாக சைதன்யா. பேரிலேயே நாகம் இருக்கின்றது. இந்த நாகம் படமெடுத்து ஆடி என் செல்லத்தை 6ம் திகதி கொத்தப்போகின்றது. கொத்தி உதிரம் காணப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

நாக சைதன்யா. பேரிலேயே நாகம் இருக்கின்றது. இந்த நாகம் படமெடுத்து ஆடி என் செல்லத்தை 6ம் திகதி கொத்தப்போகின்றது. கொத்தி உதிரம் காணப்போகின்றது.

 

உதிரமா  ?
ஏதும் டப்பாவிலே கொண்டுபோனால்தான் உண்டு.

இன்னும் மூன்று  நாலு மாதத்தில் டிவோர்சிலதான் முடியும். 

  • தொடங்கியவர்

On 4.8.2017 at 11:46 AM, colomban said:

இனி வாழ்ந்து வேல இல்லவா

 

inv.jpg

tw_blush:tw_blush:

சமந்தா - நாகசைத்தன்யா திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியானது

8385-samanthas-wedding-invitation806943617.jpg

இது colombanக்கு மேலதிக இணைப்பு..

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஐசே என்னவா இது, ப்ரஷர் கூடிட்டுவா. இனி ஒன்னும் புடுங்க எலாதுவா. எந்த நாளும் மாறி சாரத்தை நனைத்து கட்டிக்கொண்டு படுக்க வேண்டியதுதான்.

வெள்ளைப் புறா ஒன்ரு போனது கையில் வராமலே

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2017 at 7:55 PM, colomban said:

அன்று எனக்கு எனக்கு கரிநாள்.

உங்களுக்கு மட்டுமல்ல.. உங்களைப் போல பலருக்கு கரிநாள். tw_blush:

  • தொடங்கியவர்

சமந்தா திருமணம் சமயத்தில், இவரை பார்த்ததும் காதல் என்று சொல்ல காரணம்..!

5991dcc52dbb9-IBCTAMIL.jpg

 

5991dcc56de72-IBCTAMIL.jpg

 

தமிழ் நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. நான்கு நாட்களுக்கு அந்த ரிசார்ட்டில் உள்ள அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நாயகியாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, திருமணத்திற்கப் பின்னும் நடிக்க உள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சமந்தா, நாகசைதன்யாவுடனான காதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். “ஏ மாய சேசவே படத்திற்காக அவரை முதன் முதலில் சந்தித்த போதே எனக்குள் காதல் வந்துவிட்டது.

தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகி வந்தோம். அவரை விட இப்போதைக்கு என் வாழ்வில் வேறு எதுவும் பெரிதில்லை. 30வது வயதில் திருமணமாகும் என்று முன்னரே நினைத்திருந்தேன், அது இப்போது நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு என் குணமும் மாறாது. திருமணமாகிப் போக இருக்கும் குடும்பத்தினரும் நான் நானாக இருக்க அனுமதி அளித்துள்ளனர். அது மிகவும் அழகானது,” எனத் தெரிவித்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/celeberities/Samantha-marriage-fixed-in-resort-with-temple

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை: நாகசைதன்யா

 


உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை: நாகசைதன்யா
 

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை என நடிகர் நாகசைதன்யா கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றது. திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் ஹைதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

தெலுங்கில் முதல் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக அறிமுகமானபோதுதான் அவரைப் பார்த்தேன். அந்த முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் வயப்பட்டு விட்டேன். மனதளவில் எங்களுக்கு எப்போதோ திருமணம் முடிந்து விட்டது. வெளி உலகத்திற்காகத்தான் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். என்னிடம் நிறைய பேர் நீங்கள் இருவரும் அழகான ஜோடி என்று கூறுகிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது

என சமந்தா கூறியுள்ளார்.

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை. அவர் எனக்கு மனைவியாக அமைவது அதிர்ஷ்டம். அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. கோபம் வந்தால் மட்டும் என்னை முறைத்து பார்ப்பார். திட்ட மாட்டார். எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானது, நாங்கள் சந்தித்தது முதல் திருமணம் வரை எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் தொகுத்து யாராவது சினிமா படமாக எடுத்தால் சந்தோஷப்படுவேன். அந்த படத்தில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம்.

என நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/08/உலகில்-சமந்தாவை-விட-அழகா/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சமந்தா திருமணத்துக்கு அழைப்பில்லை!!

 
 
சமந்தா திருமணத்துக்கு அழைப்பில்லை!!
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இருவருக்கும் அக்டோபர் 6 ஆம் திகதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்கவிருக்கும் இத் திருமணத்துக்கு இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்களாம். தமிழ், தெலுங்குத் திரையுலகத்தினருக்கு அழைப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், அதன் பின் நடக்கவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மட்டும் திரையுலகத்தினரை அழைக்க உள்ளார்களாம். இது பற்றிய விவரத்தை நாகசைதன்யாவின் அப்பா நாகார்ஜுனாவே தெரிவித்துள்ளார்.

திரையுலகத்தில் சமந்தாவிற்கும், நாக சைதன்யாவிற்கும் பல நெருங்கிய நண்பர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு அழைப்பு இல்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.

நாகசைதன்யா – சமந்தா இருவரும் காதலர்களாக மாறுவதற்குக் காரணமாக இருந்த ‘ஏ மாய சேசவே’ படத்தின் இயக்குனர் கௌதம் மேனனையாவது அவர்கள் அழைப்பார்களா..

maxresdefault-8.jpg

http://newuthayan.com/story/23923.html

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2017 at 10:18 AM, நவீனன் said:

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை: நாகசைதன்யா

 


உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை: நாகசைதன்யா
 

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை என நடிகர் நாகசைதன்யா கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகியுள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றது. திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது.

சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் ஹைதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

தெலுங்கில் முதல் படத்தில் நாகசைதன்யா ஜோடியாக அறிமுகமானபோதுதான் அவரைப் பார்த்தேன். அந்த முதல் பார்வையிலேயே அவர் மீது காதல் வயப்பட்டு விட்டேன். மனதளவில் எங்களுக்கு எப்போதோ திருமணம் முடிந்து விட்டது. வெளி உலகத்திற்காகத்தான் இப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். என்னிடம் நிறைய பேர் நீங்கள் இருவரும் அழகான ஜோடி என்று கூறுகிறார்கள். இது மகிழ்ச்சியாக இருக்கிறது

என சமந்தா கூறியுள்ளார்.

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை. அவர் எனக்கு மனைவியாக அமைவது அதிர்ஷ்டம். அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. கோபம் வந்தால் மட்டும் என்னை முறைத்து பார்ப்பார். திட்ட மாட்டார். எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் இனிமையானது, நாங்கள் சந்தித்தது முதல் திருமணம் வரை எங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் தொகுத்து யாராவது சினிமா படமாக எடுத்தால் சந்தோஷப்படுவேன். அந்த படத்தில் நானும், சமந்தாவும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறோம்.

என நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/08/உலகில்-சமந்தாவை-விட-அழகா/

முதல் 60 நாளுக்கு அப்பிடித்தான் பலருக்கும் தோன்றி இருக்கு 
அதுக்கு பிறகுதான் ..........

On 30/08/2017 at 8:27 AM, Maruthankerny said:

முதல் 60 நாளுக்கு அப்பிடித்தான் பலருக்கும் தோன்றி இருக்கு 
அதுக்கு பிறகுதான் ..........

பொறாமை ....!!!!!????

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

பொறாமை ....!!!!!????

இதிலே பொறாமைப்பட என்ன இருக்கு ?
ஊர் உலகத்தில் நடைமுறையில் அப்படிதான் இருக்கு 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சமந்தா திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

  • தொடங்கியவர்

திருமண லெஹங்காவில், 'தென்னிந்திய கரீனா கபூர்' எனப் பாராட்டப்படும் சமந்தா!

 

சமந்தா

ரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நாக சைதன்யா-சமந்தாவின் திருமணத்தை, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகம் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த ஜோடிகளின் திருமணத்துக்காக, சமீபத்தில் நடந்த ஃபோட்டோ ஷூட்தான் ஆன் லைன் ஹிட்ஸ்ஸில் டாப் எனச் சொல்லலாம். அந்த அளவுக்கு, சமந்தா தன் திருமணத்துக்கான லெஹங்காவை அணிந்து, ஃபோட்டோ ஷூட் செய்திருக்கிறார். இதற்கெனத் தனியே டாப் காஸ்ட்யூம் டிசைனரைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த லெஹங்கா. 

இதற்கு முன்பு, தன் நிச்சயதார்த்தப் புடவையில், தனக்கும் நாக சைதன்யாவுக்குமிடையே உருவான காதலை மையப்படுத்தி, படங்களுடன் டிசைன் செய்திருந்தார். இந்தப் புடவை, ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோலத்தான், சமீபத்தில் திருமணத்துக்கென தயாராகியிருக்கும் லெஹங்காவும் பலரைக் கவர்ந்திருக்கிறது. 

சமந்தா

 

தன்னுடைய ஃபோட்டோ ஷூட் படங்களை, சமந்தா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிந்ததும் எக்கச்சக்க லைக்ஸை எகிறியிருக்கிறது. விலையுயர்ந்த லெஹங்காவில் செய்யப்பட்டுள்ள டிசைன்கள் மற்றும் வேலைப்பாடுகள்குறித்தும் நெட்டிசன்கள் பேசிவருகின்றனர். அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் நிறைய ட்விட்ஸ் கவனம் ஈர்த்திருந்தது. அதில் ஒருவர், தென்னிந்திய கரீனா கபூர் எனப் பாராட்டியுள்ளனர். அனைத்து ட்விட்களுக்கும் சமந்தா தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். 

21903460_1603724789687496_205085013_n.pn

21935230_1603727303020578_611078037_n.pn

http://www.vikatan.com/news/cinema/102902-actress-samantha-called-as-south-kareena-kapoor.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நடிகை சமந்தா - நாக சைதன்யா காதல் ஜோடிக்கு கோவாவில் திருமணம்! நாளை நடைபெறுகிறது!

 

 
samanatha_recep1_new1

 

அக்டோபர் 6. கோவா.

நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யா திருமணம்.

100 பேர்களுக்கு (மட்டும்) அழைப்பு. திருமண பட்ஜெட் - ரூ. 10 கோடி!

நாளை ஹிந்து முறைப்படியும் அடுத்த நாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம். 

தென்னிந்தியத் திரையுலகம் எதிர்பார்க்கும் மிகப் பெரிய திருமணத்தின் அட்டவணை இதுதான். 

திருமணம் குறித்து நாக சைதன்யாவின் தந்தையும் நடிகருமான நாகர்ஜூனா கூறியதாவது: எங்கள் மகனுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. எங்கள் குடும்பத்துக்கு இதை விடவும் வேறு மகிழ்ச்சி கிடையாது. 100 விருந்தினர்களைக் கொண்டு நடத்தப்படும் எளிமையான திருமணம் இது. முதல் திருமண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அடுத்த நிகழ்ச்சி சனியன்று நடைபெறும். இதற்குப் பிறகு ஹைதராபாத்தில் திருமணம் வரவேற்பு நடைபெறவுள்ளது. திருமணத்துக்குப் பிறகு இருவருமே படப்பிடிப்புகளில் மும்முரமாக இருப்பார்கள். அவர்கள் வசதிக்கேற்ப வரவேற்புத் தேதி முடிவு செய்யப்படும். 

Raju Gari Gadhi 2 படத்தில் நானும் சமந்தாவும் நடித்துள்ளோம். அந்தப் படம் தீபாவளி சமயத்தில் வெளிவரவுள்ளது. நான் சொல்லித்தான் சமந்தா அந்தப் படத்தில் நடிக்கிறார் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. நான் அவரைப் பரிந்துரைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் திருமணத்துக்கு முன்பு பேய் வேடத்தில் அவர் நடிக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். இந்நிலையில் இருவருக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/oct/05/samantha-and-naga-chaitanyas-beautiful-goan-wedding-budget-and-other-details-revealed-2784941.html

❤️❤️❤️

The @KOECSH Lovestory Lehenga 2.0 by @kreshabajaj . . This beauty @samantharuthprabhuoffl owning this super edgy #koëcsh blouse! Shot by the brilliant @rohanshrestha, jewels by @vanrajzaveri, makeup by @tokala.ravi, hair by @chkrapu.madhu . . #love #lovestorylehenga #koecsh #koecshlovestorylehenga #mumbai #bridal #koecshbykreshabajaj #kreshabajaj

If there is one person I know who has all the talent all the sass all the beauty with her heart in the absolutely right place it is my doll of a friend @kreshabajaj . Her love story lehangas are straight out of a fairy tale and if there is anyone I would trust for my wedding it would be her ,and so I have ??? . Can't wait ? @koecsh . Love you @kreshabajaj

The @KOECSH Lovestory Lehenga 2.0 by @kreshabajaj . . Another day, another picture of this beautiful bride-to-be @samantharuthprabhuoffl playing muse for our new Lovestory Lehenga. Lenses by the brilliant @rohanshrestha and jewels by @vanrajzaveri. . . What Lovestory details can you spot? . . Hair and makeup by the lovely @tokala.ravi, @chkrapu.madhu . . #love #koëcsh #lovestorylehenga #koecsh #studio #mumbai #bridal #koecshbykreshabajaj #kreshabajaj

The @KOECSH Lovestory Lehenga 2.0 by @kreshabajaj . . This beauty @samantharuthprabhuoffl giving us goddess feels in this edgy blouse and traditional lehenga, lensed by the magician @rohanshrestha and jewels by @vanrajzaveri . . #love #koëcsh #lovestorylehenga #bridal #mumbai #koecshbykreshabajaj #kreshabajaj

  • தொடங்கியவர்

ஹிந்து முறைப்படி நடந்த நாக சைத்தன்யா, சமந்தா திருமண புகைப்படங்கள்

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

 

625.0.560.320.100.600.197.800.1600.160.90.jpg

வாழ்க வளமுடன் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.