Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல்

Featured Replies

இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல்

 

 

இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச்  சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

19732195_1853536668230971_30159668288549

இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். 

Capture.JPG

இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. 

19665247_1853536358231002_70815955313198

இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த பயம் ஏற்படும்.நில்திய பொக்குன என்று சொல்லப்படும் இராவணின் மாளிகை நிலத்திற்கு கீழேயே அமைந்துள்ளது.

எல்ல வெல்லவாய பாதையில்  கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் உள்ளே செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.

19875514_1853536444897660_64539049123312

முதலில் கயிற்றின் உதவியுடனேயே இங்கு செல்ல முடியும். கயிற்றைப் பிடித்து சுமார் 40 அடி தூரம் இறங்க வேண்டும். பின்னர் சிறிய அறை ஒன்று அங்கே காணப்படும். பின்னர் அங்கிருந்து மேலும் 30 அடி கயிற்றின் உதவியுடன் கீழே இறங்க வேண்டும். அதன்பின்னர் 500 மீற்றர் தூரம் வரையான சாய்வுப் பகுதியில் நடந்து சென்றால் நல்ல விசாலமான மண்டபம் ஒன்றினைக் காண முடியும்.

19732298_1853536408230997_49546666131546

அந்த மண்டப சுவரின் அடுத்தபக்கத்துக்குச் சென்று பின்னர் அங்கிருந்து 700 - 800 அடிவரை கீழே இறங்கும் போது பேச்சு அரங்கு போன்ற ஒன்றை காணலாம்.அங்கே நீர் வீழ்ச்சி ஒன்றின் சத்தம் கேட்டு கொண்டிருக்கின்றது. அதில் இருந்து மேலும் 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறக் குளம் ஒன்று காணப்பட்டது.

19732235_1853536641564307_74412740895969

சூரிய ஒளியைக் கண்டிராத இந்த இடத்தில் மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வந்தது என்பதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

19875280_689533897902065_829855391608568

அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு  வந்த கிராமவாசி தெரிவித்தார்.ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம் என்று குறித்த தேரர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/21690

  • தொடங்கியவர்

நிலத்துக்கு கீழாக 3,000 அடி ஆழத்தில் காணப்படும் இராவணன் மாளிகை நோக்கிச் சென்ற பிக்கு; நீல நிறமாக மிளரும் அலங்கார பொய்கை: சுற்றிக் கொண்டிருக்கும் இரண்டு தீப்பந்துகள்

 

(ரெ.கிறிஷ்­ணகாந்)

 

Devananda-Thera

நிலத்­துக்கு கீழாக கற்­குகை ஒன்­றினுள் சுமார் 3,000 அடி ஆழத்தில் காணப்­படும் இரா­வணன் மாளி­கை­யு­ட­னான “நில்­திய பொகுன” எனும் பொய்கை ஆகி­ய­வற்றை நோக்கி ஹெந்­தலை ரஜ­மஹா விகா­ரையின் தேவா­னந்த தேரர் ஆபத்­து­மிக்க பயணம் ஒன்றை மேற்­கொண்டார்.

Devananda-Thera-of-Hendala

நில்திய பொகுன என்­ற­ழைக்­கப்­படும் இந்த குள­மா­னது நிலத்­துக்கு கீழாக காணப்­ப­டு­கி­றது. எல்ல – வெல்ல­வாய வீதியில் கரந்­த­கொல்ல பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள வீதி­யொன்றின் ஊடாக சுமார் ஒன்­றரை கிலோ மீற்றர் செல்லும் தூரத்தில் இக்­ கற்­குகை அமைந்­துள்­ளது. இந்தக் குகைக்குள் பிர­தே­ச­வாசி ஒரு­வரின் உத­வி­யுடன் குறித்த பிக்கு பிர­வே­சித்­துள்ளார்.

Devananda-Thera-of

எனினும் இந்த கற்­குகை மிகவும் அபா­ய­க­ர­மா­னதும் ஆழ­மா­ன­து­மாகும். இதனுள் தவறி வீழ்ந்தால் சுமார் 3 கிலோ­மீற்றர் ஆழத்தில் விழ நேரிடும் எனவும் தெரி­வித்தார்.

Devananda-Thera4

தனது பயணப் பாதை பற்றி தேவா­னந்த தேரர் குறிப்­பி­டு­கையில், முதல் 30 தொடக்கம் 40 அடி­வரை கயிறு ஒன்றின் உத­வி­யுடன் செல்­ல­வேண்டும். அதன்­பின்னர் சிறிய அறை­போன்ற பகு­தி­யொன்று தென்­படும். அங்­கி­ருந்து கயிற்றின் உத­வி­யுடன் 30 அடி கீழி­றங்க வேண்டும். 

Devananda-Thera4

பின் மெது­வாக அடி­யெ­டுத்து வைத்து 500 மீற்றர் சென்ற பின்னர்  நன்கு விசா­ல­மான மண்­ட­ப­மொன்றை காண­மு­டியும். அங்­குள்ள சுவர் ஒன்றின் வழி­யாக மறு­புறம் செல்ல முடியும். அங்­கி­ருந்து சுமார் 700 – 800 அடி வரை கீழி­றங்கும் போது போதனை அறை போன்­ற­தொரு அமைப்­பி­லான அறை காணப்­ப­டு­கி­றது.  

Devananda-Thera-of-Hendala-Rajamaha-Vihara

அப்­ப­கு­தியில் இருக்கும் போது நீர்­வீழ்ச்­சி­யொன்றின் சத்தம் கேட்­டது. அவ்­வி­டத்­தி­லி­ருந்து சத்தம் கேட்­ட­தி­சையில் 1,500 அடி­வரை செல்­லும்­போது நீல நிற­மாக மிளிரும் அலங்­கார பொய்­கை­யொன்று அமைந்­தி­ருந்­தது.

Devananda-Thera3

பிக்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், சூரிய ஒளியை கண்­டி­ரா­த­மை­யினால் அப்­ பொய்கை நீர் மிகவும் சுவை­யா­கவும் நீல நிற­மா­கவும் காட்­சி­ய­ளித்­தது.

Devananda-Thera6

இப்­ பொய்­கையின் எல்லைப் பகு­தி­யொன்றில் மேற்­படி இரா­வணன் மாளிகை காணப்­ப­டு­வ­தா­கவும் அந்த மாளி­கையை அடைய முடி­யாத வண்ணம் அவ்­வி­டத்தில் இரு தீப்­பந்­துகள் சுற்­றிக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் பிர­தே­ச­வா­சிகள் அதனை கண்­டுள்­ள­தா­கவும் தன்­னுடன் துணைக்கு வந்த பிர­தே­ச­வாசி தெரி­வித்தார்.

எனினும், அதன் உண்மைத் தன்மை பற்றி தன்னால் கூற முடி­யாது என தேவா­னந்த பிக்கு தெரி­வித்தார். எனினும் கிரா­ம­வா­சி­களின் நம்­பிக்­கைக்­க­மைய தொடர்ந்து பய­ணிக்­கும்­போது பல வித­மான அமா­னுஷ்ய அனுபவங்களை சந்திக்க நேரிடும் என அறிய கிடைத்தமையால் அங்கிருந்து பயணத்தை மேற்கொண்டு தொடராமல், 3,000 அடி வரை தொடர்ந்திருந்த பயணத்தை நிறைவு செய்து மீண்டும் மேலே வந்ததாக வண. தேவானந்த தேரர் தெரிவித்தார்.

http://metronews.lk/?p=9858

  • கருத்துக்கள உறவுகள்

 மேலும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு எம்மவ்ர்களுக்கு இல்லை அதுவும் பின்னடைவு

22 minutes ago, putthan said:

மேலும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு எம்மவ்ர்களுக்கு இல்லை அதுவும் பின்னடைவு

புத்தா இது என்ன பிதற்றல். இராவணனுக்கும் பிக்குவுக்கும் இடையே எப்படி முஸ்லீம்கள் வந்தார்கள்.

இதைத்தான் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவாங்களோ.

18 hours ago, நவீனன் said:

அந்த குளத்திற்கு அருகில் மிகவும் அலங்காரமிக்க மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக என்னோடு  வந்த கிராமவாசி தெரிவித்தார்.ஆனாலும் அது ஆபத்தான பகுதி என்று நினைத்து திரும்பிவிட்டோம் என்று குறித்த தேரர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான பிக்கு தான்!

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பிக்குகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.போன பிக்கு அந்த அமானுஷ்யத்தையும் அறிந்து வந்திருக்கலாம்.....!  tw_blush:

41 minutes ago, suvy said:

பிரயோசனமான பிக்குகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.போன பிக்கு அந்த அமானுஷ்யத்தையும் அறிந்து வந்திருக்கலாம்.....!  tw_blush:

 

2 hours ago, putthan said:

 மேலும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு எம்மவ்ர்களுக்கு இல்லை அதுவும் பின்னடைவு

ஆமா அந்த பிக்குக்கும் முஸ்லீமுக்கும் என்ன சம்பந்தம்.

புரியாமலே எழுதுறாங்கள் பலர் - நிச்சயம் முன்னுக்கு வந்துடுவாங்க 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

 

ஆமா அந்த பிக்குக்கும் முஸ்லீமுக்கும் என்ன சம்பந்தம்.

புரியாமலே எழுதுறாங்கள் பலர் - நிச்சயம் முன்னுக்கு வந்துடுவாங்க 

வேறொரு திரிக்கான பதில் இங்கு பதியப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன், ஆனால் தாங்கள் அதனை காவித்திரிவது கீழ்தரமானது.

ஆமா நீங்க முன்னுக்கு வந்து யாருக்கு என்ன பிரயோசனம்??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

 மேலும் முஸ்லிம்களுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு எம்மவ்ர்களுக்கு இல்லை அதுவும் பின்னடைவு

 

1 hour ago, ஜீவன் சிவா said:

 

ஆமா அந்த பிக்குக்கும் முஸ்லீமுக்கும் என்ன சம்பந்தம்.

புரியாமலே எழுதுறாங்கள் பலர் - நிச்சயம் முன்னுக்கு வந்துடுவாங்க 

என்னுடைய மவுசிலிருந்த பதிவு இதில பதியப்பட்டுவிட்டது தவறுதலாக .....கொப்பி பெஸ் விளையாட்டால் வந்த விபரிதம்.....நேற்று தாஸ் என்பவருக்கு எழுதிய பதிவு மவுஸிலிருந்து இன்றைய பதிவுக்கு கொப்பி பண்ணுப்படாமல் பேஸ்டாகிவிட்டது.

இதனால் முஸ்லிம் சகோதர்களும் பிக்கு சகோதரயாக்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பகிரங்க மண்ணிப்பு கேட்டுகொள்கிறேன்.:10_wink:

Image result for மண்ணிப்பு

19 hours ago, putthan said:

இதனால் முஸ்லிம் சகோதர்களும் பிக்கு சகோதரயாக்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பகிரங்க மண்ணிப்பு கேட்டுகொள்கிறேன்.:10_wink:

யோவ் பாதிக்கப்பட்டது அவங்களில்லை // நானப்பா. :grin:

மன்னிப்பு என்னட்டதான் கேட்கணும். சும்மா தேவை இல்லாமல் மண்டையை குடைய வச்சதுக்கு. :grin::grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

யோவ் பாதிக்கப்பட்டது அவங்களில்லை // நானப்பா. :grin:

மன்னிப்பு என்னட்டதான் கேட்கணும். சும்மா தேவை இல்லாமல் மண்டையை குடைய வச்சதுக்கு. :grin::grin:

எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு.....:grin:

இங்கிலிசில் பிடிச்ச வார்த்தை:10_wink:Sorry 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.