Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும்

Featured Replies

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும்

 

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும்

 

 
 
தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன.

அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது.

அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டன.

அதன்போது, பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகளின் ஆளணிப் பற்றாக்குறையாக உள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா குற்றஞ்சாட்டியுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் பொலிஸார், பொலிஸ் சேவையில் இணைக்கப்பட வேண்டும்.

பொலிஸ் சேவையில் இணைவதற்கு தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வரவில்லை.

பொலிஸ் சேவையில் தெற்கில் உள்ளவர்களை அனுமதிப்பதனால், பாதிப்பு எமக்கு தான். இதுவரை காலமும் பொலிஸ் மீதான அபிப்பிராயம் தப்பாக இருந்ததுள்ளது இது போருடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது.

ஆனால், தற்போது, பொலிஸ் அதிகாரம் எமது கையில் வர வேண்டுமென்றால், எமது இளைஞர்கள் பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்க வேண்டும். தமிழ் பொலிஸாரின் எண்ணிக்கைகளை கூட்டினால், இங்குள்ள சிங்கள பொலிஸாரின் எண்ணிக்கையினை குறைக்க முடியும்.

எமது எண்ணிக்கையினை அதிகரித்தால், எமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென எமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது 500 விண்ணப்பங்கள் இருப்பதாகவும், அந்த விண்ணப்ப படிவங்களை வைத்து பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை எமது இளைஞர் மற்றும் யுவதிகள் எடுக்க வேண்டும்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட உயர் பதவிகளை வகிப்பதற்காக முன்வர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இந்த விண்ணப்பங்களை பூரணப்படுத்த முன்வர வேண்டுமென்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=93368

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும்

அவர் சொல்லுறது சரிதானே...

  • தொடங்கியவர்

சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வோரின் பின்­புலம் தொடர்பில் அறிக்கை வேண்டும்

p29-45bfe45c36da584b4423be3b4a6ed8e157ded17e.jpg

 

வட­மா­காண பொலி­ஸா­ருக்கு முத­ல­மைச்சர் பணிப்பு  

 (ரி.விரூஷன்)

சமூக விரோத செயற்­பா­டு­க­ளிலும் குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­ப­டும்­போது கைது செய்­யப்­படும் இளை­ஞர்­களின் குடும்பப் பின்­னணி மற் றும் அவர்­க­ளுக்கு இருக்கும் வெளி­நாட்டு தொடர்­பு­கள் அதன் மூலம் அவர்­க­ளுக்கு கிடைக்­கப்பெறும்  உத­விகள் என்­பன தொடர்­பாக விரி­வான விசா­ர­ணைகள் செய்­யப்­பட்டு அவை தொடர்­பான பூரண அறிக்­கை­யொன்று தமக்கு சமர்­பிக்­கப்­பட வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் பொலி­ஸா­ருக்கு பணித்­துள்ளார். 

 மேலும் வடக்கில் காணப்­படும் பொலிஸ் சேவை தொடர்­பான வெற்­றி­டங்­க­ளுக்கு அதி­க­ள­வான தமிழ் இளைஞர், யுவ­திகள் விண்­ணப்­பித்து பொலிஸ் சேவையில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் பட்­ட­தா­ரிகள் பொலிஸ் உயர் பத­வி­களை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முனைப்­புக்­காட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வரன் நேற்­றைய தினம் பொலி­ஸா­ரு­ட­னான சந்­திப்பு ஒன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார். இச் சந்­திப்பில் வட­மா­காண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றொஷான் பெனார்ட்டோ , யாழ்.மாவட்ட சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித்த பெனான்ட்டோ மற்றும் யாழ்.மாவட்­டத்தின் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரிகள், தலைமை பொலிஸ் பரி­சோ­த­கர்கள் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

பொலி­ஸா­ரு­ட­னான இச் சந்­திப்பின் போதே முத­ல­மைச்சர் பொலி­ஸா­ருக்கு இவ்வாறு தெரி­வித்தார். இச் சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்ட விட­யங்கள் தொடர்­பாக முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­விக்­கையில்,

இச் சந்­திப்பில் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளி­னதும் பொறுப்­ப­தி­கா­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். குறிப்­பாக இது­வரை காலமும் சிரேஸ்ட பொலிஸ் அதி­கா­ரி­களே தமக்கு கீழான பொலிஸ் நிலை­யங்­களில் காணப்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கேட்­ட­றிந்து எங்­க­ளு­ட­னான சந்­திப்பின் போது தெரி­யப்­ப­டுத்­து­வார்கள். தற்­போது நான் அனைத்து பொலிஸ் நிலை­யங்­களின் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளையும் சந்­தித்து அவர்­க­ளுக்கு இருக்கும் அடி­மட்ட பிரச்­ச­னைகள் தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டினேன்.

குறிப்­பாக தற்­போ­தைய சந்­திப்பில் பொலிஸார் மணல் கடத்தல் பிரச்­சனை தொடர்­பாக கூறி­யி­ருந்­தார்கள். அதா­வது மாவட்ட செய­ல­கத்­தினால் மண­லுக்­கான பேமிட் வழங்­கப்­பட்­டுள்ள போதும் அப்­பே­மிட்டை வைத்­துக்­கொண்டு அள­வுக்கு அதி­க­மான மண்­ணினை எடுத்து செல்­வ­தாக பொலிஸார் தெரி­வித்­தி­ருந்­தார்கள். உண்­மையில் இம் மணல் தொடர்­பான பிரச்­சினை தொடர்­பாக ஜனா­தி­பதி இங்கே வந்­தி­ருந்த போது பேசி­யி­ருந்தோம். அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக நான் கூறி­யி­ருந்தேன்.

 இதே­போன்று குப்பை திண்ம கழிவு பிரச்­ச­னைகள் தொடர்­பாக பொலி­ஸாரால் கூறப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்­பாக தற்­போது ஒர் ஒப்­பந்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் யாழ்.மாவட்­டத்தில் சேரு­கின்ற குப்பை கழி­வுகள் கீரி­ம­லையில் அதற்­கு­ரிய இடத்தில் கொட்­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இச் சந்­திப்பில் முக்­கிய பிரச்­ச­னை­யாக பேசப்­பட்ட விடயம் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் பதின்ம வயது இளை­ஞர்கள் குறிப்­பாக 16தொடக்கம் 18 வயது வரை­யான இளை­ஞர்கள் பாட­சாலை கல்­வியை இடை­நி­றுத்­தி­விட்டு அதிக விலை­சூ­டிய மோட்டார் சைக்­கிள்­களில் மது போதையில் சமூக விரோத செயல்­க­ளிலும், குற்றச் செயல்­க­ளிலும் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும், அவர்­களை கட்­டு­ப­டுத்த முடி­யாத நிலை இருப்­ப­தா­கவும் அது அவர்­க­ளது பெற்­றோர்­க­ளா­லேயே முடி­யாமல் இருப்­ப­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

 இது தொடர்­பாக பார்க்­கின்ற போது இத்­த­கைய சமூக விரோத குற்றச் செயல்­களில் ஈடு­ப­டுவோர் மொத்­தத்தில் 100ற்கும் 200ற்கும் இடைப்­பட்­ட­வர்­க­ளா­கவே உள்­ளனர். ஆனால் இவர்­களால் சமூ­கத்­திற்கு இளைக்­கப்­படும் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. இதற்கு என்ன காரணம் என பார்க்­கின்ற போது வெளி­நா­டு­களில் இருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் அதனை நல்ல காரி­யங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தாமல் குடிப்­ப­தற்­கா­கவும், போதை பொருட்­க­ளுக்­கா­கவும் செலவு செய்து இவ்­வா­றன குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

 இவ்­வா­றான குற்றச் செயல்கள் சமூக விரோத செயல்­களில் ஈடு­ப­டு­வோரை இனி­வரும் காலங்­களில் கைது செய்யும் போது அவர்­க­ளுக்கு வெளி­நாட்டில் இருந்து கிடைக்கும் உத­விகள் தொடர்­புகள் என்­பன தொடர்­பாக விரி­வான விசா­ர­ணை­களை நடாத்தி அது தொடர்­பான பூரண அறிக்­கை­யொன்றை சமர்­பிக்க வேண்டும் என நான் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை பிறப்­பித்­துள்ளேன்.

 மேலும் வடக்கில் தமிழ் பொலி­ஸா­ரது எண்­ணிக்கை குறை­வாக உள்ள நிலையில் அதற்கு தமிழ் இளைஞர், யுவ­திகள் விண்­ணப்பம் செய்­வது குறை­வாக இருப்­ப­தாக வடக்கு மாகாண யாழ்.மாவட்ட பொலிஸ்மா அதி­பர்கள் தெரி­வித்­துள்­ளனர். இது­வி­ட­யத்தில் எமது இளைஞர் யுவ­திகள் ஒன்றை விளங்­கி­கொள்ள வேண்டும். அதா­வது பொலிஸார் எதி­ரா­ன­வர்கள் என்ற எண்­ணத்­துடன் நாம் போர் காலங்­களில் பார்த்­தி­ருந்தோம். தற்­போது யுத்தம் நிறை­வ­டைந்­து­விட்­டது.

 நாம் கூறு­வது போன்று பொலிஸ் அதி­காரம் எங்­க­ளுக்கு கிடைக்­கப்­பட வேண்­டு­மானால் அதனை ஆளக்­கூ­டி­ய­வர்­க­ளாக நாம் இருக்க வேண்டும். அதற்கு அதி­க­ள­வான தமிழ் பொலிஸார் காணப்­பட வேண்டும். நாம் இங்­கி­ருக்கும் வெற்­றி­டங்­க­ளிற்கு விண்­ணப்­பிக்­காது விட்­டு­விட்டால் அதனால் பாதிப்பு எமக்கே காணப்­படும். தற்­போது தமிழ் பொலிஸார் எண்­ணிக்­கையில் குறை­வாக இருப்­ப­தா­லேயே அவர்­க­ளு­டைய ஆதிக்கம் அதி­க­மாக இருக்கும்.

 ஆனால் நாம் மெல்ல மெல்ல எமது தமிழ் பொலி­ஸா­ரது எண்­ணிக்­கையை அதி­க­ரித்தால் காலப் போக்கில் வடக்கில் முழு­மை­யான தமிழ் பொலிஸார் காணப்­ப­டு­வார்கள்.அத்­துடன் பட்­ட­தாரி மாண­வர்­களும் பொலிஸ் சேவை­யிலே உயர் பத­வி­களை பெற்றுக்கொள்ளும் வகையில் விண்ணப்பங்களை மேற்கொள்ளவேண்டும்.

 இவற்றைவிட இச் சந்திப்பில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லைகள் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சாவகச்சேரி ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்திருந்ததுடன் இளவாளை பொலிஸார் தமது பொலிஸ் நிலையம் தனியாரது காணிகளில் இருப்பதால் அவர்கள் காணிகளை மீள வழங்கவேண்டும் என கோரிவருகின்றார்கள் ஆகவே அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தார்கள். இவ்வாறன விடயங்களே இச் சந்திப்பில் பேசப்பட்டிருந்தது என முதலமைச்சர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-15#page-1

  • தொடங்கியவர்
வெளிநாட்டு பணத்தால் மாணவர்கள் போதைக்கு அடிமை’
 

image_c454c888b1.jpgஎஸ்.நிதர்ஷன்

யாழ். மாவட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்; சிலர், பாடசாலை கல்வியை நிறுத்திவிட்டு வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தை கொண்டு அதிகளவு மதுபான பாவனை மற்றும் போதைபொருள் பாவனை மற்றும் பாரிய குற்ற செயல்களில் ஈடுபட்டு வருக்கின்றமை தொடர்பாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 18 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை வட மாகாண முதலமைச்சர், தனது அலுவலகத்தில் நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாவட்டத்தில் 16 வயது தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஒரு தொகுதியினர் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கொண்டிருப்பதுடன், அவர்கள் அதிகளவு மதுபான பாவனை மற்றும் போதை பொருள்பாவனை ஆகியவற்றிலும் பாரிய குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“இவர்களை பெற்றோராலும், தங்களாலும் கூட கட்டுப்படுத்த இயலாத நிலை காணப்படுவதாக கூறுகின்றனர்.

“மேலும், இவர்கள் பாடசாலை கல்வி மற்றும் உயர் கல்வியை நிறுத்திவிட்டு வெளிநாடுகளில் இருந்துவரும் பணத்தை கொண்டே இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் எனக்கு கூறியிருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறான சிறுவர்கள் எமது சமூகத்தில் சிறிய தொகையினர் ஆயினும் அவர்களால் எமது சமூகம் அடையும் பாதிப்புக்கள் மிக பெரியவையாக உள்ளது.

“இந்நிலையில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவது தொடர்பான பூரணமான தகவல்களை பெற்று எனக்கு வழங்குங்கள் என பொலிஸாரை கேட்டிருக்கின்றேன். அதனை கொண்டு வெளிநாட்டிலிருந்து மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாங்கள் ஆராய இருக்கின்றோம் என முதலமைச்சர் கூறியிருக்கின்றார்.

 
 
 
’தமிழ் இளைஞர்கள் பொலிஸில் இணைய வேண்டும்’
 Comments - 0 Views - 0

image_af74f5e070.jpgஎஸ்.நிதர்ஷன்

தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றலாம் என்பதுடன், வெளியாரின் ஆதிக்கத்தையும் குறைக்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள 18 பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளை, வடமாகாண முதலமைச்சர், தனது அலுவலகத்தில் நேற்று (14)  சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மேற்படி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ் சேவையில் தற்போது 500 வெற்றிடங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். அதேசமயம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்காக பொதுமக்களுக்கு போதுமான அறிவுறுத்தலை வழங்கவேண்டியது அவசியமாகும்.

“மேலும், எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையில் போதுமான அளவில் இல்லாமையினால் வெளிமாகாணங்களை சேர்ந்த பெரும்பான்மை இனம் சார்ந்த பொலிஸார் எமது பகுதியில் சேவையாற்றவேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது. எமது இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இருந்தால் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்கள் அவர்களுடைய மாகாணங்களுக்கு திரும்பி சென்று சேவையாற்றுவார்கள்.

“அதேபோல் பொலிஸ் அதிகாரம் எமக்கு வரவேண்டுமாக இருந்தால் கூட எங்கள் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் சேர வேண்டும். கடந்தகாலங்களில் பொலிஸ் தொடர்பான தவறான நிலைப்பாடு எங்கள் மக்களிடம் இருந்தது. ஆனால், அது போர்கால நிலமை. அவ்வாறான நிலமை இன்றிருக்க இயலாது. எனவே, பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொள்ளலாம் அதில் தவறில்லை.

“மாவட்ட செயலகத்திடமிருந்து மணல் அகழ்வுக்கான அனுமதியை பெறுபவர்கள் அவற்றை கொண்டு பல இடங்களில் தேவைக்கு அதிகமாக மணலை கொண்டு செல்கின்றார்கள் என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பான ஜனாதிபதியுடனும் பேசப்பட்டிருக்கின்றது. அது தொடர்பாக மேலும் மாவட்ட செயலாளருடனும் ஜனாதிபதியுடனும் பேசப்படும்.

“யாழ். நகர் பகுதி கழிவுகள் தொடர்பாக பேசப்பட்டது. அதற்கு ஏற்கெனவே மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது கழிவுகளை கீரிமலையில் பிரத்தியேக இடத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றமையை கூறியிருக்கிறேன்.

“பொலிஸார் வசம் உள்ள தனியார் காணிகள் தொடர்பாக பேசியிருக்கின்றோம். குறிப்பாக பொலிஸாரிடம் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் மீள வழங்குவதற்கு பொலிஸார் இணங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாற்று காணிகள் இல்லை. எனவே, மாற்று காணிகளை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக நாங்கள் கூறியிருக்கின்றோம்" என்றார்.

http://www.tamilmirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் சொறீலங்கா பொலீஸ் சேவையில்.. உயர் பதவிகள் பலவற்றை தமிழர்கள் தான் வகிச்சவை.. பாருங்க. அப்பவே எங்களுக்கு அரசியல் பிரச்சனை இருந்தது. அதை ஒடுக்கவும் எங்கட பொலிஸை தான் பாவிச்சவை... உலகத் தமிழர் மாநாட்டுப் படுகொலை மறந்திருக்க மாட்டியள் என்று நினைக்கிறம்.

அதிலும்.. எங்கட போராளிகளை பூண்டோடு ஒழிக்க.. நின்றது... சிங்களவனைக் காட்டிலும்.. எங்க தமிழ் பொலிஸ்காரர்.

ஐயா கூற்று எப்ப உண்மை ஆகும் என்றால்.. எங்கட கைக்குள் பொலிஸ் அதிகாரங்கள் இருக்கும் போது.. எங்க அதிகாரத்துக்குள் எங்கட பொலிஸ் இருக்கும் போது.. உந்த ஆதிக்கம் எங்கட மக்களுக்கு உதவும்.

இன்றேல்.. இன்னும் பல இளைஞர்களை எம்மவர்களே.. எஜமானர்களுக்காவும்.. சொந்தப் பழிவாங்கல்களுக்காகவும்.. வெட்டிப் பெருமைக்காகவும் பலி எடுப்பார்கள். 

எங்கட தமிழீழ காவல்துறை இருந்த போது நடக்காதவை எல்லாம்.. இப்ப நடக்குது.  தமிழீழ காவல்துறையை.. சிங்கள காவல்துறை பாராட்டி இருந்ததோடு.. சில வழக்குகளில்.. சந்தேக நபர்களை கைது செய்து தர.. அவர்களின் உதவியையும் நாடி இருந்தது. அதனை அவர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர். காரணம்.. தமிழீழ காவல்துறை.. பொறுப்பான ஓர் தமிழர் அதிகார மையத்தின் கீழ் இயங்கியது.. அதனால். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருக்கும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை உடைய ஒரு அரசின் கீழியங்கும் போலீஸ் பிரிவுகள் இருந்தாலே ஒழிய, மத்திய அரசின் கீழியங்கும் ஒரு போலீஸ் படையில் தமிழர்களும் சேர்வெதென்பது அதிகாரத்தை எமது கைக்குள் கொண்டுவருவது ஆகாது என்பதுதான் எனது எண்ணம்.

ஏனென்றால் இதுவரையில் இன்றைய ஒற்றையாட்சியின் கீழிருக்கும் எந்த படையாக இருந்தாலும், படைகளில் சேர்வது யாராக இருந்தாலும் சிங்கள பெளத்த அரசின் கட்டளைப்படியே இயங்கவேண்டுமென்பதும், அப்படித்தான் இதுவரைகாலமும் இயங்கிவருகிறார்கள் என்பதும், இனியும் அவ்வாறே இருக்கும் என்பதும்தான் உண்மை. 

இன்றிருக்கும் பேரினவாதத்தினைக் கட்டிக் காக்கும் படைகளில் சேர்ந்த எந்தச் சிறுபான்மையின    அதிகாரியும்   ஒன்றில் அப்பட்டமான எஜமான விசுவாசத்தைக் காட்டினார்கள் அல்லது, நிர்வாகப் பதவிகளில் மட்டுமே பதவி வகித்தார்கள். தமது இனத்துக்கென்று தனது அதிகாரங்களைப் பாவித்த எந்த தமிழ் உத்தியோகத்தவரையும் நாம் கணவில்லை, அப்படி ஒருவர் இருப்பதையும் பேரினவாதம் அனுமதிக்காது.

பஸ்ரியாம்பிள்ளை, தியோப்பிளஸ், ஜெயரட்ணம் போன்ற அப்பட்டமான எஜமான விசுவாசிகளும், பிரிகேடியர் துரைராஜா போன்ற நிர்வாகத்துறை அதிகாரிகளும் காட்டியிருப்பது இதனைத்தான்.

விக்கிணேஸ்வரன் எதை நினைத்து இப்படிச் சொன்னாரென்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ragunathan said:

அவுஸ்த்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருக்கும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை உடைய ஒரு அரசின் கீழியங்கும் போலீஸ் பிரிவுகள் இருந்தாலே ஒழிய, மத்திய அரசின் கீழியங்கும் ஒரு போலீஸ் படையில் தமிழர்களும் சேர்வெதென்பது அதிகாரத்தை எமது கைக்குள் கொண்டுவருவது ஆகாது என்பதுதான் எனது எண்ணம்.

ஏனென்றால் இதுவரையில் இன்றைய ஒற்றையாட்சியின் கீழிருக்கும் எந்த படையாக இருந்தாலும், படைகளில் சேர்வது யாராக இருந்தாலும் சிங்கள பெளத்த அரசின் கட்டளைப்படியே இயங்கவேண்டுமென்பதும், அப்படித்தான் இதுவரைகாலமும் இயங்கிவருகிறார்கள் என்பதும், இனியும் அவ்வாறே இருக்கும் என்பதும்தான் உண்மை. 

இன்றிருக்கும் பேரினவாதத்தினைக் கட்டிக் காக்கும் படைகளில் சேர்ந்த எந்தச் சிறுபான்மையின    அதிகாரியும்   ஒன்றில் அப்பட்டமான எஜமான விசுவாசத்தைக் காட்டினார்கள் அல்லது, நிர்வாகப் பதவிகளில் மட்டுமே பதவி வகித்தார்கள். தமது இனத்துக்கென்று தனது அதிகாரங்களைப் பாவித்த எந்த தமிழ் உத்தியோகத்தவரையும் நாம் கணவில்லை, அப்படி ஒருவர் இருப்பதையும் பேரினவாதம் அனுமதிக்காது.

பஸ்ரியாம்பிள்ளை, தியோப்பிளஸ், ஜெயரட்ணம் போன்ற அப்பட்டமான எஜமான விசுவாசிகளும், பிரிகேடியர் துரைராஜா போன்ற நிர்வாகத்துறை அதிகாரிகளும் காட்டியிருப்பது இதனைத்தான்.

விக்கிணேஸ்வரன் எதை நினைத்து இப்படிச் சொன்னாரென்று தெரியவில்லை.

அதே

நன்றி வரவுக்கும் நேரத்துக்கும்  ரகு...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

அவுஸ்த்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருக்கும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை உடைய ஒரு அரசின் கீழியங்கும் போலீஸ் பிரிவுகள் இருந்தாலே ஒழிய, மத்திய அரசின் கீழியங்கும் ஒரு போலீஸ் படையில் தமிழர்களும் சேர்வெதென்பது அதிகாரத்தை எமது கைக்குள் கொண்டுவருவது ஆகாது என்பதுதான் எனது எண்ணம்.

ஏனென்றால் இதுவரையில் இன்றைய ஒற்றையாட்சியின் கீழிருக்கும் எந்த படையாக இருந்தாலும்,

ஒற்றை ஆட்சியில் மாற்றம் வர வேண்டும்.

4 hours ago, ragunathan said:

விக்கிணேஸ்வரன் எதை நினைத்து இப்படிச் சொன்னாரென்று தெரியவில்லை.

ஒற்றை ஆட்சி தொடராது என்று அறிந்து சொன்னதாகவே தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.