Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலித்தியம் பேசாத தேசியம்

Featured Replies

ஐயா நாரதரே! நான் போலி வாழ்க்கை வாழவில்லை!உள்ள பிரச்சனையை நீங்கள் உற்று நோக்குங்கள்.யார் இந்த பிரச்சனையை கொண்டு வருகிறார்கள்.எந்த ஊடகத்தில் சாதியைப்பற்றி கதைக்கின்றார்கள் அல்லது விவாதிக்கின்றார்கள்.சரி வெளிநாடுகளில் சாதிப்பிரச்சனை இருக்கின்றது.அந்த சாதிப்பிரச்சனையை அவர்கள் தங்களுடனேயே வைத்திருக்கட்டுமே!மேலை நாடுதானே சகல சுதந்திரமும் இங்குள்ளதே?சாதி குறைந்தவர்கள் என எண்ணுபவர்கள் அவர்கள் எந்த விதத்தில் இங்கு குறைக்கப்பட்டர்கள்?யாரால் எந்த விதத்தால் குறைக்கப்பட்டார்கள்?சிலவேளைகளில் ஒரு சிலரின் தனிப்பட்ட விழாக்களாயிருக்கலாம்.அது அவர்கள் தனிப்பட்ட பிரச்சனை.சாதிப்பிரச்சனை என்பது ஒருமணி நேரத்தில் அல்லது நாட்கணக்கில் ஒழியக்கூடியதல்ல.இதற்கு பல சந்ததிகள் மாற வேண்டும்.இந்தப்பிரச்சனை மனிதருக்கு வரும் தலைவலி போல் அல்ல மாத்திரை எடுத்தவுடன் அரைமணி நேரத்தில் மாறுவதற்கு.நான் எனது வதிவிடத்தில் கள்ளுக்கொட்டில் என குறிப்பிட்டுள்ளேன்.அது என் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு!நான் சிறுவயதில் இத்தொழில் செய்பவர்களுடன் பழகியதாலும்,அவர்கள் வீடுகளில் உணவு உண்டதாலும் என் உறவினர்களால் அவமதிக்கப்பட்டேன்.என் பெற்றோர்,சகோதர்கள் ஊரில் ஒருசிலரால் அவமதிக்கப்பட்டனர்.இத்துடன் பாடசாலையிலும் ஒருசில பிரச்சனைகள் வந்தவுடன் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தேன்(குடும்பத்தினரால
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோபாசக்தி கதை எழுதக்கூடியவராக இருக்கலாம்,ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்றும், புலிகள் யாழ்ப்பாணி வேளாளர்களைப் பிரதினிதுவப்படுதுகிறார்கள் என்றும் சோபா சக்தி கூறுவதுடன் ஒருங்கு படுகிறீர்களா?

ஷோபாசக்தியின் படைப்புலகத்துக்குள் எனது சொந்த அரசியலை ஒரு மயிரளவேனும் உள்நுழைத்து என்னால் பார்க்க முடியவில்லை. அது ஒரு வேளை என்னிடம் உள்ள தமிழ் தேசிய உணர்வைவிட பலமான தலித் உணர்வால் ஏற்பட்டிருக்கலாம்.

புலிகள் சாதிகள் அற்ற சம்தர்ம தமிழ் ஈழத்துக்கே போராடுகிறர்கள் என்பதையும், புலிகள் இயக்கத்துக்கள் சாதிய வேறுபாடுகளோ சமய அடையாளங்களோ இல்லை என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

''சாதி சமயம் அற்ற சமதர்ம தமிழ் ஈழம்'' என்பது ஒரு தேசிய விடுதலை இயக்கத்தால் அடைந்துவிடக்கூடியதா என்பது குறித்து விரிவான விவாதம் வேண்டும். நீர் குறிப்பிடும் 'சமதர்மம்' என்றால் என்ன? அதை அடைவதற்கான போராட்டம் யாருக்கு எதிராக யாரின் தலைமையில் முன்னெடுக்க வேண்டும்? சினிமா பாடல் வரிகளில் வரும் 'சமதர்மம்' என்ற சொல்லின் அர்த்தத்தில் நீரும் குறிப்பிட்டிருந்தால் நான் மேற்கேட்ட கேள்விகளுக்கு உம்மிடம் இருந்து பதில் எதிர்பார்க்கவில்லை.

புலிகள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழ் அடையாளத்துக்காகவே பாடுபடுகிறர்கள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து என்பன குறித்து எனக்கு சில முரண்பட்ட பார்வை இருப்பினும் புலிகள் தமிழ் அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதில் உடன்படுவேன்.

புலிகளின் தலமையினாலான தேசிய விடுதலைப் போரே எம் எல்லோருக்கும் விடுதலையைத் தரும் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

எம் எல்லோருக்கும் என்ன விடுதலையை பெற்றுத்தரும் என்பதை முதலில் நீர் தெளிவாக குறிப்பிட வேண்டும்?

எமது உள் முரண்பாடுகளால் நாம் பிளவு படுவது எல்லோருக்குமே பேரழிவைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?எதிரி இவ்வாறான உட் பிழவுகளைப் பயன் படுத்துவான் ஏன்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

யாருக்கு இடையில் முரண்பாடு ? யாருக்கு யார் எதிரி? சாதிய பிரச்சினை இல்லையென சொல்லும் (யாழ் வெள்ளாள சைவ) தமிழ் தேசியத்தை ஆதரிப்பது தலித்துகளின் தற்கொலைக்கு சமன்.

புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் நிலவும் பிற் போக்கான கருதுக்களையே இங்கு எழுதி வருகின்றனர். இவை புலிகளின் கருதுக்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து இருந்து கொண்டே இவ்வாறான பிற் போக்குதனங்களுக்கு எதிராகாப் போராட வேண்டி உள்ளது.புலிகளின் தலமையில் இவ்வறான பிற் போக்குத் தனங்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் தலித் மக்களின் குரல்களுக்கு அடையாளம் தராதவரை புலம் பெயர்ந்த மக்களின் பொதுக்கருத்து என்பது யாழ் சைவ வேளாள பிற்போக்கின் எச்ச சொச்சங்களாகவே இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தலித் தண்ணி போட்டுட்டு கதைக்கிறான் எழுதுறான் என்பதில் இருந்து உமது ஆழ் மனத்தை விளங்கிக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஓம்.! தலித் தண்ணி போட்டுட்டுதான் எழுதுவான். இப்ப அதுக்கு என்ன?

நண்பரே!

நீர் தண்ணி போட்டு எழுதுகின்றீரா, இல்லையா என்பது உம் பிரச்சனை. ஆனால் உம் சாதி வாதத்துக்கு உயிரூட்டல் செய்ய யாழ்களம் இடமில்லை.

ஜாதி வட்டத்தில் நின்று எழுதுபவர்கள், எழுத்தாளர்களே அல்ல. சோபாசக்தி போன்றவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் முக்கியமல்ல. அவர்களுக்குத் தேவை, எப்படியாவது தமிழரின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்பதே. அதனால் தான் இந்தியாவில் மட்டும் புலங்கிவந்த "தலித்" என்ற பதத்தை தமிழீழத்திற்குள்ளும் புகுத்த முனைகின்றார். அதன் மூலம தலித் தலைவனாக, புலத்தில் புது ஜாதிவகுப்பிற்குத் தலைவனாகி மாண்டு போகலாம் என்ற கனவு அவருக்கிருக்கலாம். அப்படி ஒரு ஆசையில் தானே, போராளியாகி, முடியவில்லையென்றவுடன், எதிர்ப்புக் குரல் என்ற பாணியில் தப்பியோடிடியவர். அவரின் குறுகிய வட்டம் என்றைக்குமே நிலைக்காது.

தலித் என்ற பதமே, விடுதலைப் போராட்டத்தில் உபயோகிக்கப்படாத போது, அதைச் சாத்திரியார் குழப்ப முனைகின்றார் என்று குறித்த நபர் கதைப்பது பொருத்தமற்றது மட்டுமல்ல, தமிழ் தேசியப் போராட்டம் அனைத்து தரப்பினாலும், எவ்வித சாதி, மதப் பிரிவினைகள் இல்லாத நிலையில் முன்னெடுக்கப்படுவதை, அவமானப்படுத்துகின்ற செயலுமாகும். இவ்வாறன வகுப்பு வாதத்தை ஊக்குவிக்கலாம் என்ற சிந்தனைகள் கொண்டவர்கள் குறித்து மக்கள் அவதானமாக இருப்பது மட்டுமல்ல, களையப்பட வேண்டியதுமாகும்.

சாத்திரியார் ஜாதி வாதமே வேண்டாம் என்று சொல்கின்ற போது, குறித்த நபர் தலித் என்ற குறுகிய வட்டத்தில், ஆரியனால், தமிழனை அவமதிக்கச் சொல்லப்பட்ட பெயரைத் தூக்கிக் கொண்டு, பாடுபடுகின்றாராம். பெயரே, அடிமைச் சின்னமாக இருக்கினற்போது, இவர்களின் சிந்தனை மட்டும் உயர்வாகவா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா பெரியவர்களே இந்த தலித் என்ற சொல் தமிழ் ஈழபகுதியில் எப்பவாவது பயன்படுத்தி இருக்கிறோமா?நான் அறிந்தவரை இல்லை..நீங்கள் அறிந்திருந்தால் தயவு செய்து அறியதரவும்......

சோபாசக்தி கதை எழுதக்கூடியவராக இருக்கலாம்,ஆனால் புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்றும், புலிகள் யாழ்ப்பாணி வேளாளர்களைப் பிரதினிதுவப்படுதுகிறார்கள் என்றும் சோபா சக்தி கூறுவதுடன் ஒருங்கு படுகிறீர்களா?

ஷோபாசக்தியின் படைப்புலகத்துக்குள் எனது சொந்த அரசியலை ஒரு மயிரளவேனும் உள்நுழைத்து என்னால் பார்க்க முடியவில்லை. அது ஒரு வேளை என்னிடம் உள்ள தமிழ் தேசிய உணர்வைவிட பலமான தலித் உணர்வால் ஏற்பட்டிருக்கலாம்.

அப்படியானல் உங்கள் அரசியல் நிலைப்படு தான் என்ன?

புலிகள் சாதிகள் அற்ற சம்தர்ம தமிழ் ஈழத்துக்கே போராடுகிறர்கள் என்பதையும், புலிகள் இயக்கத்துக்கள் சாதிய வேறுபாடுகளோ சமய அடையாளங்களோ இல்லை என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

''சாதி சமயம் அற்ற சமதர்ம தமிழ் ஈழம்'' என்பது ஒரு தேசிய விடுதலை இயக்கத்தால் அடைந்துவிடக்கூடியதா என்பது குறித்து விரிவான விவாதம் வேண்டும். நீர் குறிப்பிடும் 'சமதர்மம்' என்றால் என்ன? அதை அடைவதற்கான போராட்டம் யாருக்கு எதிராக யாரின் தலைமையில் முன்னெடுக்க வேண்டும்? சினிமா பாடல் வரிகளில் வரும் 'சமதர்மம்' என்ற சொல்லின் அர்த்தத்தில் நீரும் குறிப்பிட்டிருந்தால் நான் மேற்கேட்ட கேள்விகளுக்கு உம்மிடம் இருந்து பதில் எதிர்பார்க்கவில்லை.

//அனைவரும் சமம், வீதியில், சமூக அமைப்பில், கோயிலில்.... என எல்லா இடங்களிலும் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள். உயர்குலம், தாழ்ந்த குலம் என பிறப்பில் இல்லை என்பதை நடைமுறையாக்குவோம். இதை மறுக்கிற கொள்கை, மதங்களை மறுசீரமைப்போம். அப்போது இந்த மனிதநேய கனவு மெய்படும்.//

புலிகள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழ் அடையாளத்துக்காகவே பாடுபடுகிறர்கள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து என்பன குறித்து எனக்கு சில முரண்பட்ட பார்வை இருப்பினும் புலிகள் தமிழ் அடையாளத்தை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதில் உடன்படுவேன்.

புலிகளின் தலமையினாலான தேசிய விடுதலைப் போரே எம் எல்லோருக்கும் விடுதலையைத் தரும் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

எம் எல்லோருக்கும் என்ன விடுதலையை பெற்றுத்தரும் என்பதை முதலில் நீர் தெளிவாக குறிப்பிட வேண்டும்?

தமிழ் மக்கள் அனைவருக்கும்.சிங்களப்பேரின வாதத்தில் இருந்தும் சமூக அடக்குமுறைகளில் இருந்தும்.

எமது உள் முரண்பாடுகளால் நாம் பிளவு படுவது எல்லோருக்குமே பேரழிவைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?எதிரி இவ்வாறான உட் பிழவுகளைப் பயன் படுத்துவான் ஏன்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

யாருக்கு இடையில் முரண்பாடு ? யாருக்கு யார் எதிரி? சாதிய பிரச்சினை இல்லையென சொல்லும் (யாழ் வெள்ளாள சைவ) தமிழ் தேசியத்தை ஆதரிப்பது தலித்துகளின் தற்கொலைக்கு சமன்.

புலிகள் யாழ் வேளாள சைவத் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபலிக்கவில்லை.மாற்றாக அந்தச் சமூக அமைப்பைக் கட்டுடைதுள்ளனர், கட்டுடைத்தும் வருகின்றனர்.புலிகளின் இந்த அரசியல் நிலைப்பாட்டைப் பலப் படுதுவதே அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையைப் பெற்றுத் தரும்.மாற்றாக யாழ் வெள்ளாள சைவத் தமிழ்க்குறுந்தேசியத்திற்கு எதிராகபோராடுவதாகச் சொல்லிக் கொண்டு, புலிகளை எதிர்ப்பது ,எம் எல்லோரது நலங்களுக்கும் பாதிப்பை உண்டு பண்னும்.புலிகளைத் தத்து எடுக்க வெள்ளாளக் குறுந் தேசியம் படாத பாடு படுகிறது, காரணம் அதன் முன்னைய அரசியற் தலமையான தமிழர் விடுதலைக் கூட்டணி இப்போது சாகடிக்கப்பட்டு விட்டது.இந்தத் தருணத்தில் புலிகளை வெள்ளாளத் தமிழ்த் தேசியமாக காட்ட விழைவது எங்கனம் 'தலிதுக்களுக்கு' விடுதலையைத் தேடித் தரும்?

புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் நிலவும் பிற் போக்கான கருதுக்களையே இங்கு எழுதி வருகின்றனர். இவை புலிகளின் கருதுக்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். நாங்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து இருந்து கொண்டே இவ்வாறான பிற் போக்குதனங்களுக்கு எதிராகாப் போராட வேண்டி உள்ளது.புலிகளின் தலமையில் இவ்வறான பிற் போக்குத் தனங்கள் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் தலித் மக்களின் குரல்களுக்கு அடையாளம் தராதவரை புலம் பெயர்ந்த மக்களின் பொதுக்கருத்து என்பது யாழ் சைவ வேளாள பிற்போக்கின் எச்ச சொச்சங்களாகவே இருக்கும்

புலத்தில் உள்ள ஊடகங்கள் சாதிய,சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழ்த் தேசியத்தை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்பதில் எனக்கு ஒத்த கருத்து உண்டு.அவ்வாறான ஊடகங்களும் இல்லாமல் இல்லை.புலத்தில் உள்ள ஊடகங்களுக்கு வழிகாட்ட ஒரு அரசியற் தலமை இல்லை என்பதுவும், புலிகளால் எல்ல இடத்திலும் அவ்வாறான தலமையை வழங்க முடியாது இருப்பதுவும் , நடைமுறையில் இது சாத்தியம் அற்றதாக இருப்பதுவும் துரதிஸ்ட்டமான நிலைகள்.இந்த நிலையில் மாற்றம் ஏற்படாத வரையில் புலத்தில் பெரும்பாலானோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையே வளரும்.களத்தில் இருக்கும் ஊடகங்களும், ஏன் போராளிகளும் கூட சமூக விடுதலை பற்றியும் ,சாதிய சமய வேறுபாடுகளைக் கடந்த தமிழத் தேசியம் பற்றி எழுதியும், பேசியும் வருகிறார்கள்.இந்த நிலை புலத்தில் இல்லை என்பதுவும், புலம் பெயர்ந்த பலர் இன்னும் யாழ்ப்பாணி வெள்ளாள மனோ பாவத்துடனையே வாழுகின்றனர் என்பதுவும் உண்மையான நிதர்சனக்கள்.

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

தலித் என்ற பதம் இந்தியாவில்தான் பாவிக்கப்படுகின்றது. பல பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட "brand" ஆக இருக்கலாம். இதற்காக தலித் என்பது கெளவரத்தைத் தரும் என்பது அபத்தமானது. ஈழத்தில் தாழ்த்தப்பட்டோர் அல்லது பஞ்சமர் (இலக்கியங்களில் மட்டும் பார்த்த ஞாபகம்) என்ற சொற்களே பாவிக்கப்பட்டது. தமிழீழப் போராட்டம் உக்கிரமடைந்த காலங்களில் இப்படியான விடயங்கள் பின்னுக்குப் போய்விட்டன.. எனினும் சாதியம் முற்றாக ஒழிய இன்னும் காலம் எடுக்கும்..

பாதத்தடம் அழிக்க காவோலை கட்டியிழுத்த காலம் மலையேறிவிட்டது. மூக்குப் பேணியில் தேநீர் கொடுத்த காலமும் போய்விட்டது. நாட்கூலிகளுக்குப் போத்தலில் தேநீர்/தண்ணீர் கொடுத்த காலமும் போய்விட்டது.. கோவில்களுக்குள் நுழையவிடாமல் தடுத்த நிகழ்வுகளும் போய்விட்டன (ஒன்றிரண்டு இடங்களில் தற்போதும் உள்ளது).. இப்படிக் காலவோட்டத்தில் திருமணத்திலும் சாதி பார்க்கப்படாமல் போகக் கூடிய சாத்தியம் உண்டு.. ஆனால் ஒரு தலைமுறையாவது பிடிக்கும்..

சிலர் ஐரோப்பாவில் சாதியத்தைத் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மீண்டும் தூசி தட்டி எழுப்பி, அதை நிலைக்கவைக்கப் பகீரதப் பிரயத்தனப்படுகின்றனர். அவர்களின் வலைகளில் விழாது ஆரோக்கியமாக சிந்தித்து கருத்தாடுவது நல்லது.

Edited by kirubans

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீர் உமது சாதித்திமிரை இங்கு காட்டவேண்டாம். தலித் குடிச்சிட்டு கத்தினாலும் குடிக்காமல் சொன்னாலும் சொல்லுறதுக்கு கைவசம் வெள்ளாளப் பதில் வைச்சிருப்பியள் ...சாத்திரி நைனார்.

இங்கே சாதிசண்டையை உருவாக்குவதுதான் உமது நோக்கமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(.....)ஜாதி வட்டத்தில் நின்று எழுதுபவர்கள், எழுத்தாளர்களே அல்ல. சோபாசக்தி போன்றவர்களுக்கு தமிழ் எழுத்துக்கள் முக்கியமல்ல. அவர்களுக்குத் தேவை, எப்படியாவது தமிழரின் ஒற்றுமையைக் குலைக்க வேண்டும் என்பதே. அதனால் தான் இந்தியாவில் மட்டும் புலங்கிவந்த "தலித்" என்ற பதத்தை தமிழீழத்திற்குள்ளும் புகுத்த முனைகின்றார். அதன் மூலம தலித் தலைவனாக, புலத்தில் புது ஜாதிவகுப்பிற்குத் தலைவனாகி மாண்டு போகலாம் என்ற கனவு அவருக்கிருக்கலாம். அப்படி ஒரு ஆசையில் தானே, போராளியாகி, முடியவில்லையென்றவுடன், எதிர்ப்புக் குரல் என்ற பாணியில் தப்பியோடிடியவர். அவரின் குறுகிய வட்டம் என்றைக்குமே நிலைக்காது.(...)

நூற்றுக்கு நூறு சரியாகச்சொன்னீர்கள். சாதிவெறி பிடித்த மிருகங்களுக்கெல்லாம் இது விழங்கவா போகிறது? தொடர்ந்தும் தமது விதண்டவாதத்தை முன்வைப்பர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த வகையில் 15 வருடங்ககளுக்கு முன்பே பல மாற்று திருமணங்கள் நடைபெற்்றுவிட்டது. கல்வி, பொருளாதாரமே திருமணத்தை நிர்ணகிக்கிறது. சாதி என்னும் சொல் பல வருடங்களாக பாவனையிலில்லை. ஏன் இப்போது? இளைய தலைமுறைக்கு இது தெரியாது. மறப்போம்.

இதுவரைக்கும் பார்ப்பணரை இங்கை இழுக்காததை இட்டு கவலை கொள்கிறேன்....!

தலித் என்ற பதம் இந்தியாவில்தான் பாவிக்கப்படுகின்றது.

"தலித்" எண்டுறது தமிழ் சொல்லே இல்லையாம்... அது சுத்தமான வட மொழிச்சொல்.....! வடக்கிலை இருந்து பிடிச்சுக்கொண்டு வந்து ஆந்திராவில் சேர்ந்து. அப்பிடியே தமிழர் நலனுக்காய் தமிழ்நாட்டுக்கை வந்து சேர்ந்தது...! (அந்த மாதிரி கிருஸ்ணா நதியையும் கொண்டு வாங்கப்பா எண்டால் மாட்டாங்களாம்)

அதை கடல் கடத்தி ஈழத்துக்கையும் கொண்டுவந்தால், தமிழ் மண் செழிக்கும் எண்டால் ஏன் வேண்டாம் எண்டுறீங்கள்...!!

இதுவரைக்கும் பார்ப்பணரை இங்கை இழுக்காததை இட்டு கவலை கொள்கிறேன்....!

பார்ப்பனரால் தங்கள் சொந்த இலாபத்துக்காக எங்கள் தலைமீது தூக்கி வைக்கப்பட்ட சுமையை "சுகமாக" நினைத்து சாதி்யத்தை இன்னமும் தூக்கிக் கொண்டு அலையும் " அப்பாவிகளாகவே" இருக்கிறோம்.

முக்கிய குறிப்பு:

சிலர்தான் "அப்பாவிகள்".

பலர் "பாவிகள்" அழிந்து கொண்டிருக்கும் சாதியத்தை தோண்டி எடுத்து தீ மூட்டீ அதில் குளிர் காய நினைக்கிறார்கள்.

பார்ப்பனரால் தங்கள் சொந்த இலாபத்துக்காக எங்கள் தலைமீது தூக்கி வைக்கப்பட்ட சுமையை "சுகமாக" நினைத்து சாதி்யத்தை இன்னமும் தூக்கிக் கொண்டு அலையும் " அப்பாவிகளாகவே" இருக்கிறோம்.

பார்பணியம் தோண்றியதாக நீங்கள் சொல்லும் காலப்பகுதியை எனக்கு ஒருக்கா சுட்டி காட்டுவீங்களா..???

கற்காலத்திலை குழுத்தலைவர்களின் வாரிசுக்கள் எப்படி தொடர்ந்து தலைவர்களாக்க பட்டார்களோ அதன் அடிப்படையில்தான் இந்த சாதியம் வந்தது எண்டு நான் சொல்லுறன்... ஆனால் அதுக்கு பிறகு வந்த மதம்தான் சாதியதை கொண்டுவந்தது எண்டு நீங்கள் சொல்லுறீங்கள், எது சரியாய் இருக்கும் எண்டுறீங்கள்...??

மக்களை வகைப்படுத்தியது அரசியலே தவிர , மதமோ பார்ப்பணியமோ கிடையாது... அது நீங்களாக திணித்து கொண்ட கட்டுக்கதைகள்....

சாதியத்தை உருவாக்கியது யாரேன்டு எனக்கு தெரியாது. ஆனால் கட்டிக் காத்தது மதமும் பார்ப்பினியமும்தான்.

ஆனால் தற்போது சாதி பேசி பிரிவினையை உருவாக்கி அதில் இலாபம் அடைவது வேறு துரோகிகளே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பூமியில் பிறக்கும் போது நீ என்ன கொண்டு வந்தாய்?

எல்லாமே இரவல்..... உனது பிறப்பிற்கு காரணமாகிய தயும்தான் இரவல்

என்கிறது ஆண்மீகம்.

உனது உயிருக்குள் ஒளிந்திருக்கிறது என்றுமே அழியாத பிரமை அதை அடையே

தனியே சென்று தவம் செய் என்கிறது வேதம்....... ஆகவே

அடியேன் அவ்வாறே சென்று தனியாக தவம் புரியலாமே?

ஏன் தலித் எனும் பெயரில் குழு கூட்டம்...... புரட்சியெல்லம் இந்த நிலையற்ற வாழ்வில்?

சாணக்கியனின் கருத்து உமது "தலித்" வாதத்திற்கானது. அதை அரசியலோடும்..... தேசிய போராட்டத்தோடும் இணைப்பது ஒவ்வாமை. அதை நீர் புரிந்து கொள்ளவே நான் இதை எழுத வேண்டியாயிற்று.

ஈழத்தில் இல்லாத ஒரு பிரச்சனையை நீர் நிறுவ முயற்சி செய்வதாகவே எனக்கும் படுகிறது.

கடந்த காலங்கள் கடந்து சென்றுவிட்டன...... அவைகள் அனுபவங்களை மட்டுமே தரமுடியும் இந்த நாட்களில். அதை நாம் தெளிவாக புரிய வேண்டும்.

அதற்காக ஈழத்தில் இப்போதும் திருமணமென்று வரும் போது சாதி என்பது இழுக்கப்படுகிறது என்பதை நான் மறுப்பதற்கில்லை. 'சாதி" என்பது ஒரு நிழல் அதில் நிஜமான எந்த தகுதியும் இல்லை. ஆகவே அப்படியான ஓரு முட்டாள் குடும்பத்தில் இருந்து "சம்பந்தம்"கிடைக்காது போய்விடின் அது முன்னாளில் செய்த ஒரு நல்வினையாகவே கருத முடியும். Naதொழில்நுட்ப நாட்களில.... பொருளாதாரம் நாளுக்கு நாள் ஏறுவதும் சரிவதும் எமது சொந்த வாழ்வை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பதை ஒரு துளிகூட அறியாமலிருப்பது (அவமானமல்ல வாழும் சூழலும் ஒரு காரணம்) ஆனால் அறியவே மாட்டேன் நான் உயர்ந்த சாதியை உடையவன் ஆகவே எனக்கு வேறெந்த தகுதியும் வேண்டாம் என்று அடம் பிடிப்பவனுடன் ஏன் பந்தம் வைக்க வேண்டும்????

இந்த பருப்பெல்லாம் நாம் ஓரு கிராமத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி ஒருதவளை போல் வாழ்ந்த நாட்களில் வேகியிருக்கலாம்! இப்போது கிரமத்திற்குள் இருந்து இணையம் நடத்தும் காலமிது.

இப்போதும் வெளியில் வராது வேலிக்குள்தான் நிற்பேன் என்று யாராவது அடம்பிடித்தால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்னதே சாணக்கியனின் கேள்வி இதை நீர் விழங்கிவிட்டு விழங்காத மாதிரி நடிக்கின்றீரா? இல்லை உண்மையில் உமக்கு இன்னமும் விழங்கவில்லையா?

அல்லது தாழ்த்தப்பட்டிருப்பதில் ஏதாவது சுகம் காண்கின்றீரா?

நீர் தாழ்த்தப்பட்ட தலித்துக்களுக்காக குரல் கொடுப்பதுபோல. மறை முகமாக அதை பூச்சூடி பூஜை செய்வது போல்தான் எனக்கு படுகிறது.

சாதியத்தை உருவாக்கியது யாரேன்டு எனக்கு தெரியாது. ஆனால் கட்டிக் காத்தது மதமும் பார்ப்பினியமும்தான்.

ஆனால் தற்போது சாதி பேசி பிரிவினையை உருவாக்கி அதில் இலாபம் அடைவது வேறு துரோகிகளே.

உருவாக்கினது மட்டும் இல்லை.... தனிமனித தலைமைத்துவதை நிலை நிறுத்தி வைக்க. வேற்றுமைகளை கட்டிகாத்ததும் அரசியல்தான்...!

இது இந்துக்களுக்கும், சைவர்களுக்கும் மட்டுமானது இல்லை...! உலகம் எல்லாமே வேறு வேறு வடிவத்திலை இருப்பது... ஏதோ இந்துக்கள் மட்டும்தான் கடைப்பிடிக்கிற மாதிரி எல்லாம் கதை விடுவது சரியானதுதானா...????

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'தலித்' னயவநஸ்ரீ'ஆயச 2 2007இ 09:46 யுஆ' pழளவஸ்ரீ'264959'ஸ

தமிழ் தேசியத்தில் தலித்திற்கு தனி இடம் தரப்படமாட்டாதுஇ என்கிறீர் நீர். அதைத்தான் சிங்களவரும் சொல்கிறார்கள் தமிழருக்கு தனியான தாயகம் இல்லை என்கிறார்கள்.

தலித்துக்கள் என்பதனால் பெருமையடைபவரும் சரி சிறுமையடைபவரும் சரிஇ

தங்கள் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வாருங்கள். என்கிறீர் நீர். அதைதான் ஜேவிபி கட்சியும் சொல்லுகிறது தமிழர் என்னும் வேலியை உடைத்துக்கொண்டு இலங்கையர் என எல்லோரும் சேர்ந்து ஒன்றாக 'வடம் பிடிப்போம் வாரீர்! ' வாருங்கள் என்கிறார்கள்.

சிவா சொன்னதுபோல 'சிங்களப் பார்வை' வேண்டாம். யதார்த்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதற்கு பரிகாரம் காணுங்கள்.

ஜஃஙரழவநஸ

மேலே எளுதியவை இந்த வரிகளுக்கான பதில்!

(யெ தொழில்நுட்ப நாட்கள்) நானோ தொழில்நுட்பம். "Nano technology" todays world feels MICRO is too big for them. my friend "Thalith" wake up! we try to touch and feel at least the micro technology. dont waste your time with the shadow things. yeup! never be afraid with shadows. come to see and feel the true.

சாதியம் இல்லை என்றோ அல்லது ஒத்துக் கொண்டாலும் அது பற்றி மிக மிக மென்மையான பார்வையை கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர்கள் சதியத்தால் நிச்சயமாக பாதிக்கப்படாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாதிக்கப்படாதவர்கள் அந்த கட்டமைப்பில் உயர்நிலையில் இருந்தவர்கள் அல்லது சாதியம் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படாத பகுதியில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.

இது வந்து சிங்களவரிடம் சென்று தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதா அடடிக்கி ஒடுக்கப்படுகிறார்களா என்றால் வரும் பதில் போன்றது. அல்லது கொழும்பில் நல்ல தொடர்புகளோடு இருந்த தமிழர்களிடம் இருந்து வரும் பதில் போன்றது.

எமது பலவீனங்களை தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தினால் தான் நாம் ஒற்றுமையாக பலமாக அணி திரளலாம். மூடிமறைப்பது அப்படி ஒன்று பெயரளவில் தான் இருக்கு நடைமுறையில் எவரையும் பாதிப்பது இல்லை என்ற திமிரான கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களை கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டவர்களை மேலும் அவமதிப்பதாக இருக்கும். இந்த தற்காலிகமான போலியான பூசி மெழுகல்கள் எம்மை மேலும் பலவீனமாக்கத்தான் உதவும்.

ஆனாலும் தலித் என்பவரின் கருத்துகளில் எனக்கு சந்தேகமாகத் தான். தலித்தியத்தை ஈழத்திலுள்ள சாதிய கட்டமைப்பிற்கு பொருத்தும் அவருடைய நோக்கம் என்ன என்பதும் மிகவும் சந்தேகத்துக்குரியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தெரியாமலா கருத்து களத்தில் உலக விசயங்கள் எல்லாத்திலும் ஓடியோடி கருதெழுதுகிறீர்.

பீ அள்ளும் மனிதனுக்கும் வாழ்வு கோரும் அரசியல் அறம் - தலித்தியம்

புலத்திலை இந்த வேலைகளை சாதி வேறுபாடில்லாமல் செய்கிறார்கள் . அவர்கள் எல்லாம் தலித்துகளா?

உருவாக்கினது மட்டும் இல்லை.... தனிமனித தலைமைத்துவதை நிலை நிறுத்தி வைக்க. வேற்றுமைகளை கட்டிகாத்ததும் அரசியல்தான்...!

இது இந்துக்களுக்கும், சைவர்களுக்கும் மட்டுமானது இல்லை...! உலகம் எல்லாமே வேறு வேறு வடிவத்திலை இருப்பது... ஏதோ இந்துக்கள் மட்டும்தான் கடைப்பிடிக்கிற மாதிரி எல்லாம் கதை விடுவது சரியானதுதானா...????

உங்கள் கருத்தில் பெரிதாக மறுப்பதற்கு ஒன்றும் இல்லை.

எனது கருத்து என்னெவென்றால் இந்திய அரசியலில் காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு மதம் செல்வாக்கு செலுத்தியே வந்துள்ளது. (இந்து மத தலைவர்களால் பேணிக் காக்கப்பட்ட சாதிய வேறுபாடுகள் பிற்காலத்தில் மதங்களைத் தாண்டி இந்திய கலாசாரம் ஆகிவிட்டது வேறுகதை.) மதங்களின் செல்வாக்கு இல்லாத அரசுகள் பெரும்பாலும் முன்னைய காலங்களில் நிலைத்து நின்றதில்லை. இந்திய அரசியலைப் பொறுத்த மட்டில் இந்து மத தலைவர்களே அவர்கள் நேரடியாக ஆளாவிட்டாலும் கூட ஆள்பவர்களை ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றிருந்தார்கள். அவர்களின் ஆலோசனையிலேயே அரசியலும் வளர்ந்தது சாதியமும் தழைத்தது.

சாதியம் இல்லை என்றோ அல்லது ஒத்துக் கொண்டாலும் அது பற்றி மிக மிக மென்மையான பார்வையை கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர்கள் சதியத்தால் நிச்சயமாக பாதிக்கப்படாதவர்களாகத்தான் இருக்க வேண்டும். பாதிக்கப்படாதவர்கள் அந்த கட்டமைப்பில் உயர்நிலையில் இருந்தவர்கள் அல்லது சாதியம் இறுக்கமாக கடைப்பிடிக்கப்படாத பகுதியில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும்.

இது வந்து சிங்களவரிடம் சென்று தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதா அடடிக்கி ஒடுக்கப்படுகிறார்களா என்றால் வரும் பதில் போன்றது. அல்லது கொழும்பில் நல்ல தொடர்புகளோடு இருந்த தமிழர்களிடம் இருந்து வரும் பதில் போன்றது.

எமது பலவீனங்களை தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தினால் தான் நாம் ஒற்றுமையாக பலமாக அணி திரளலாம். மூடிமறைப்பது அப்படி ஒன்று பெயரளவில் தான் இருக்கு நடைமுறையில் எவரையும் பாதிப்பது இல்லை என்ற திமிரான கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களை கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டவர்களை மேலும் அவமதிப்பதாக இருக்கும். இந்த தற்காலிகமான போலியான பூசி மெழுகல்கள் எம்மை மேலும் பலவீனமாக்கத்தான் உதவும்.

ஆனாலும் தலித் என்பவரின் கருத்துகளில் எனக்கு சந்தேகமாகத் தான். தலித்தியத்தை ஈழத்திலுள்ள சாதிய கட்டமைப்பிற்கு பொருத்தும் அவருடைய நோக்கம் என்ன என்பதும் மிகவும் சந்தேகத்துக்குரியது.

உங்கள் முதலாம் இரண்டாம் பந்திகளை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

முன்றாம் பந்தியில் நீங்கள் குறிப்பிடுவதன்படி,

1) எவ்வாறான தவறுகள் இழைக்கப்பட்டன?

2) அதற்கான தீர்வாக பாதிக்கப்பட்டவர் முன்வைப்பது என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்காலத்திலை குழுத்தலைவர்களின் வாரிசுக்கள் எப்படி தொடர்ந்து தலைவர்களாக்க பட்டார்களோ அதன் அடிப்படையில்தான் இந்த சாதியம் வந்தது எண்டு நான் சொல்லுறன்...

இதுபோலத்தான் நானும் கருதுகிறேன். ஆரம்பத்தில் அதாவது குடும்ப நடைமுறைக்கு முன் குழுக்களாகத் தானே இருந்தோம். ஒவ்வொரு குழுவும் ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னொரு குழுவைத் தங்கியிருந்திருக்க வேண்டியிருந்திருக்கலாம். இந்தக் குழுக்கள் பின்னர் சாதிகளாக மருவியிருக்கலாம். ஆனால் குழுக்களுக்கிடையில் உயர்வு தாழ்வு எவ்வாறு ஏற்பட்டதென தெரியவில்லை. அதற்கு ஒருவேளை மதங்கள் காரணமாயிருந்திருக்கலாம். இது பற்றி ஏதாவது தெரியுமா..

  • கருத்துக்கள உறவுகள்

எமது பலவீனங்களை தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தினால் தான் நாம் ஒற்றுமையாக பலமாக அணி திரளலாம். மூடிமறைப்பது அப்படி ஒன்று பெயரளவில் தான் இருக்கு நடைமுறையில் எவரையும் பாதிப்பது இல்லை என்ற திமிரான கருத்துக்கள் பாதிக்கப்பட்டவர்களை கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டவர்களை மேலும் அவமதிப்பதாக இருக்கும். இந்த தற்காலிகமான போலியான பூசி மெழுகல்கள் எம்மை மேலும் பலவீனமாக்கத்தான் உதவும்.

மூடி மறைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இவர்கள் செய்கின்ற எந்தவிவாதம் உருப்படியான முடிவைத் தந்தது. நிச்சயம், தூபம் தான் போடும். அதிலும் எழுந்தமானமாக, இந்து மதம் தான் காரணம் என்று சொல்லித் திரிபவர்கள் கூட எவ்வாறு விவாதிக்க முடியும். இன்றைக்கு இந்து மதம் அழித்தால் ஜாதிகள் இல்லாமல் போய்விடுமா? அவ்வாறு மதநம்பிக்கையை மனங்களில் இருந்து அழிக்க முடியும் என்று கருதுவார்களாக இருந்தால், ஏன் ஜாதியை மட்டும் மனங்களில் இருந்து அகற்ற முடியாது? இந்த 100 வருடங்களில் பகுத்தறிவு என்று போராடி எவ்விதமான தீர்வுகளையும் இவர்களால் காணமுடியவில்லை. இன்றைக்கு தமிழ் சமூகம் எப்படிச் சிதைந்து போய் நிற்கின்றது.

யாருக்கும், ஜாதிப் பிரிவுகள் அழிய வேண்டும் என்று நோக்கம் கிடையாது. அதை வைத்து தங்களின் சிந்தனைகளை எப்படி நியாயப்படுத்தலாம் என்றே திரிகின்றார்கள். அப்படித் திரிபவர்களோடு நியாயமாக விவாதிக்க முடியாது. அவர்கள் செய்வது எல்லாம் விதாண்டாவாதம் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.