Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது +  பிடித்தது 

இப்பெயரில் தொடர்ந்து பதியலாம் என முனைகின்றேன்.

முடிந்தவரை ஊக்கம் தாருங்கள்

உங்கள்  கருத்துக்களையும் இடுங்கள்.

நன்றி

1- எதற்காக  ஒவ்வொரு நாளும் மாவீரர்களுக்கு  அஞ்சலிகளை  செலுத்துகிறீர்கள் என்றொரு கேள்வியுண்டு என் மேல்.

பாடசாலை செல்லும் போதும் சரி

வேறு அலுவல்களாக செல்லும் போதும்  சரி

  கோயிலுக்கு  முன்னால் செல்லும்  போது

செருப்பை களட்டிவிட்டு

ஒருமுறை  தலை குனிந்து மீண்டும் செருப்பை மாட்டி  செல்வதும்

சைக்கிளில் சென்றால் சீற்றிலிருந்து எழுந்து ஒருமுறை  தலை குனிந்து  தொடர்ந்து செல்வதும்

சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம்  என்னிடம்.

அதுவே மாவீரர்கள்  சார்ந்தும்.

  • Replies 339
  • Views 51k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகிருங்கள் படிக்கிறோம்....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 2

யூலை 1983...

படித்துக்கொண்டிருந்த என்னை

தெருவில் ஓடத்துரத்தியநாள்

இலங்கையனாக இருந்த என்னை

தமிழனாக மாற்றியநாள்

இலங்கை என் தாய்நாடு என்பதை

வடக்கு கிழக்கு என்றநாள்

தமிழன் என்று அடையாளமிட்டு

கொல்லப்படவேண்டியவனாக்கியநாள்..

இசுலாமிய சகோதரர்களின் சுயரூபத்தை

நான் தரிசித்தநாள்

அகப்பட்டிருந்தால்

இன்று 34வது நினைவஞ்சலி நாள்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கு என்பதன் அடிப்படையில் அவரைப்போன்றோரும் எமக்குத்தேவை என்ற கால ஓட்டத்துக்கேற்ப நாமும் அடக்கி வாசிப்பம். ஆனால் இனி வரும் காலங்களில் நீதிபதி தீர்ப்பை வளங்கும் போது நீங்கள் சுற்றவாளியா? 
கொலையாளியா? என்ற கேள்வி வருமே..??

இந்தக்கிழமை அதிகம் கடுப்பேத்திய நிகழ்வாக இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இருப்பது இந்த வீரவணக்கம்

நான் அடிக்கடி சொல்வது தான் முகங்கள் தெரியும் காலமிது.
இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்
ஒன்றில் போராட்ட காலத்தில் மாவீரர்களிலிருந்து தள்ளியிருந்தோர் அல்லது மாவீரரை உதாசீனம் செய்தோர். இப்போ தங்களாலும் பட்டம் கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கின்றார்கள். தரத்தை பார்த்தால் புரியும்.

நீங்கள் கூறுவதில் உண்மைகள் உண்டு.....அவருக்கு வீரவணக்கம் செய்வதை விட அஞ்சலி செய்வது தான் அழகு....வீரவணக்கம் மாவீரர்களுக்கே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 4
 
நீதிபதி நெடுஞ்செழியன் தன்னைக்காத்து உயிர் துறந்ததாக தான் நம்பும் காவலாளியின் இரு பிள்ளைகளையும் தனது ஆயுட்காலம் வரை பொறுப்பெடுப்பதாக அறிவித்துள்ளார். என்ன தான் விமர்சனங்கள் இருந்தாலும் நல்லவற்றை எங்கும் பொறுக்குபவர்களுக்கு நல்லதொரு விடயமிது.
 
இதேபோல்
எம்மைக்காக்க உயிர் கொடுத்தவர்களின் குடும்பங்களை புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடும்பமாக பொறுப்பெடுத்திருந்தால்....?? இன்று அவர்கள் தத்தமது சொந்தக்காலில் நிற்கும் நிலையை அடைந்திருப்பர். இப்பொழுதும் காலம் கரைந்துவிடவில்லை.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
புலிகள் யார் என்பது எல்லாத்தமிழ் மக்களுக்கும் தெரியும். மற்றவர்களின் பரிந்துரைகள் ஏற்றல் கவுட்டல் என்பன அவரவர் சொந்த லாபநட்டம் கருதி மட்டுமே அமையும்.
ஆனாலும் சுயமாக நாம் செயற்பட இத்தீர்ப்பு எமக்கொரு சட்டப்பாதுகாப்புத்தரும்.
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 6
 
Bigboss
 
நெடுக சீரியசாகத்தான் பேசணுமா என்ன?
 
Bigboss நிகழ்ச்சியில் தம்பிமாரெல்லாம் ஓவியா ஓவியா என்று புலம்பித்திரிகிறார்கள்.
 
பாவமா இருக்கு பார்க்க...
 
40 வருசமா நம்ம மன்மதனை புரிஞ்சுக்கவே மாட்டமா?
 
நம்ம நாயகனின் புற்றுக்குள்ள போன எந்த எலியாவது கடிபடாமல் போயிருக்கா...???:grin::grin::grin:

Edited by விசுகு

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.

எங்கையோ உதைக்குது அண்ணை.

தீர்ப்பு வராமலா போகும். வரும் ரொம்ப கடினமா வரும்.

12 hours ago, விசுகு said:
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.

உண்மை

சட்டி சுடுகுது எண்டு அடுப்புக்குள்ள விழ எவருமே தயாரில்லைத்தான்.:grin:

On 26.7.2017 at 2:58 PM, விசுகு said:

இந்த வீரவணக்கத்தை செய்பவர்கள்

மறுபடியும் ஆயிரம் வீர வணக்கங்கள் இந்த மாவீரருக்கு.

Bilderesultat for death funeral

RIP  Sgt. Hemaratne

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 8

ராஜீவ் காந்தி கொல்லப்படாதிருந்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று ஐயா சம்பந்தர் சொல்லியிருக்கிறார்.
31-12-2016க்கு முன் தீர்வு என்றார்
இப்பொழுது ராஜீவ் காந்தியை கொல்லாதிருந்தால் தீர்வு வந்திருக்கும் என்கிறார்.
கூட்டிக்கழிச்சு பார்த்தால் தீர்வுக்கு இந்தியா தான் தடை என்பது புரியும்
சம்பந்தர் ஐயா மைக்கையும் இந்தியா போவதையும முதலில் நிறுத்துவது நல்லது. அதன் பின்னர் தான் தீர்வைப்பற்றி ஏதாவது நாம் சிந்திக்கமுடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/07/2017 at 6:54 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 7
 
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே? அவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை?? நாட்டு மக்கள் மீது பாரபட்சமற்ற நீதி இருந்திருந்தால் இருந்தால் அவர் ஏன் போராடப்போறார்? ஆட்களை சேர்க்கப்போறார்??
காரணம் அப்படியே இருந்தால் அவருக்கு தான் செய்தது இப்பவும் சரியாகத்தானே தெரியும்.

1 minute ago, விசுகு said:
புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த புலிகளின் நுண்கலைக்கல்லூரி அதிபருக்கு இலங்கை நீதிமன்றம் ஆயுட்தண்டனை விதித்திருக்கிறது.
உண்மையில் அவர் இதற்காக கவலைப்படப்போவதில்லை. தான் செய்தது தப்பென்று அவருக்கும் புலிகளுக்கும் தெரியும். காலம் இட்ட கட்டளை அந்த நேரம் அது தேவையாக இருந்தது. அதற்கான தண்டனையை அவர்கள் மனதார ஏற்பார்கள்.
 
இங்கே கேள்வி என்னவென்றால் அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிள்ளைகள் கைகளை உயர்த்தியபடி ஆயிரக்கணக்கில் சரணடைந்தார்கள். அவர்கள் எங்கே?

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கருத்துக்களாக எதிர்பார்த்தேன்

இலங்கை ஒரு  கொலைகார  அரசு

கொல்வது அதன் இயல்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 9

ஒருவரை வளர்த்து விடுதலின் பலன்???

எந்த ஒரு படைப்பாளியையோ

கலைஞரையோ

இணைய நண்பர்களையோ

நாம் மிக மிக கவனமாக ஆராய்ந்து

அவர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுக்கணும். 

எமது இனம் இவ்வாறு அவசரப்பட்டு வளர்த்துவிட்டு

கொடுத்தவிலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

எமது மேடைகளில் வளர்த்துவிட்டு மிதித்த கடாக்கள் பல உண்டு.

அந்த அனுபவங்களால் மிக மிக கவனமாக இருப்பேன்.

இந்தக்கிழமை எனது தம்பிமார் ரொம்ப பாடம் படித்திருப்பார்கள்.tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
On 26.7.2017 at 11:28 AM, விசுகு said:

பட்டது + படிச்சது + பிடித்தது - 3

நீதி தள்ளாடுதலும் - வீரவணக்கமும்

நீதிபதி ஒருவர் நீதிமன்றை தெருவில் அதுவும் போதையிலிருந்தோருக்கு நடாத்த முற்பட்டதும் அதனைத்தொடர்ந்து அவரது பாதுகாப்பாளர் தனது துப்பாக்கிக்கு பலியாகியதும் 
நீதி காலில் விழுந்ததும் இந்தவாரச்சம்பவங்கள்.

உண்மையில் பலி கொடுத்த நீதிபதி நீதியை காலில் போடாது பதவி விலகியிருக்கணும்.
.

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
On 27.7.2017 at 2:42 PM, விசுகு said:
பட்டது + படிச்சது + பிடித்தது - 5
 
ஐரோப்பிய நீதி மன்றத்தீர்ப்பு
 
இப்போ கேள்வி என்னவெனில் இதை பயன்படுத்தி எமது இலக்கை அடைய நாம் அடைய நாம் தயாரா??
இல்லை என்பதே பதில்.
காரணம் இருந்த அனைத்தையும் நாம் உடைத்து விட்டோம். பிரித்து விட்டோம்.
ஒரு சிலர் செய்த களவாணி வேலைகளுக்காக
எம்மோடு நின்றவர் எமக்காக உழைத்தவர் அத்தனை பேரையும் ஒரே கூடையில் போட்டு ஒதுக்கிவிட்டோம்.
முடிவு??? எமக்காக எதுவுமில்லை.
எமக்காக குரல் கொடுக்க பலமான எந்த அமைப்புமில்லை.
 
இப்பவும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.
அமைப்புக்களில் சேரணும் பலப்படுத்தணும்
நல்லது கெட்டவற்றை உள்ளிருந்து பேசணும். தயாரா???
தயாரில்லை எனில் எமக்கு விடிவே இல்லை.

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/07/2017 at 11:44 PM, ஜீவன் சிவா said:

இதைத்தான் நானும் கேட்கின்றேன்

உங்கள் பிள்ளைகளில் ஒருவரை அவரின் விருப்பமே இல்லாமல் வலுக்கட்டாயமா தூக்கிச் சென்று ஒரு கொலைஞனிடம் ஒப்படைத்து விட்டு பின்னர் அவன் கொன்றுவிட்டான் என்றா கதறுவீர்கள் 

கடத்தினவன் கேவலமானவன் 

கொன்றவன் - அவன் இயல்பு

அவன் இயல்பு தெரிந்தும் கடத்தி அவனிடம் கொடுத்த மிருகம்தான் கேவலமானது.

ஜீவன் சூப்பர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாத்தியார் said:

ஒருவர் நீதிபதியாக இருப்பதால் அவரிடம் மனிதாபிமானம் இருக்கக் கூடாது என்பது தவறான கண்ணோட்டம். நீதிபதி என்றால் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்....... அவர் எங்கேயோ இருக்க வேண்டும் என்பதும்  அல்ல .

இங்கே அவர் நீதியைக் காலில் போடவில்லை. மனிதாபிமானத்தையும் தோழமையையும் கையில்    எடுத்திருந்தார்.

தன்னுடன் பதினேழு வருடங்கள் தனக்கான  பாதுகாப்புக்கு கடமையில் இருந்த ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது . நீதிபதியின் கூற்றின் படி தன்னைப் பாதுகாக்க முனைந்தபடியால் தான் அவருடைய உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் நீதிபதியின்  உயிர்காத்துதன் உயிரைக் கொடுத்த அந்த நல்ல மனிதனுக்காக அவருடைய இல்லாளின் காலில் வீழ்வது என்பது மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனுக்கும் உள்ள இயல்பாகும்.
அப்படியான செயலை எல்லோராலும் செய்யமுடியாது.

அந்தக் காட்சிகளை பார்த்தபோதும் அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட அந்த வீரனின் பிள்ளைகளை நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் தான் தத்தெடுப்பதாகக் கூறிய போதும் கடவுள் ஒருவர் கண் முன்னால் தெரிந்தால் எப்படி இருப்பாரோ அப்படியேதான் நீதிபதி அவர்களும் கண்களில் தெரிந்தார்

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாத்தியார் said:

இந்த விடையத்தில் பொதுவாக எல்லாச் செயற்பாட்டாளர்களும் ஒரே தராசில் நிறுத்தப்பட  முடியாது.

இருப்பினும் இறுதிக்கட்டத்தில் அநேகமான செயற்பாட்டாளர்கள் நடந்து கொண்ட விதம் எல்லாச் செயற்பாட்டாளர்களுக்கும்  கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது. போர் முடிகின்ற நிலையிலும் பல செயற்பாட்டாளர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த நிதி எங்கே எப்போது எப்படி யாரிடம் சேர்ந்தது என்பது ஒரு பெரிய கேள்விக்குறி???

அதைவிட சில பொறுப்பாளர்கள் உண்மையிலேயே தங்கள் சக பொறுப்பாளர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்தார்.
அதற்கு போட்டியும் பொறாமையும் கூடாக காரணமாக இருந்திருக்கலாம்.
பிழைகள் நடந்துள்ளன. அவற்றை ஏற்றுக்கொண்டு அதற்கான விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு மேலே செல்லலாம்.
ஆனால் காலம் கடந்து விட்டது.

தரம் பிரித்து யார் நல்ல செயற்பாட்டாளர் யார் கெட்ட  செயற்பாட்டாளர் என்று அறிந்து கொள்ளும் ஆவல் மக்களிடம் இன்று இல்லை.

மக்களை நம்ப வைப்பதும் அவர்களை ஒரே அணியில் இணைய வைப்பதும்  இனி வருங்காலங்களில் செயற்படும் செயற்பாட்டாளர்களின்  முறையிலேயே தங்கியுள்ளது 

அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்

பிழைகள்

விமர்சனங்களை  நாமும் செயற்பாட்டாளர்களாக இருந்து கொண்டே  வைக்கணும்

அதுவே தீர்வைத்தரும்

பார்வையாளர்களால் ஒரு   போதும் தீர்ப்பை தரமுடியாது

அது  சரியாகவும் இருக்காது

என்னைப்பொறுத்தவரை காலம்  கடந்து செல்லவில்லை

ஆனால் அவ்வாறு நாம் தோடர்ந்து காலம் கழித்து வருகின்றோம்

ஒரு  சிலரது தலையில் போட்டுவிட்டு நாம் வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கும்வரை......???

இதையே  எழுதினேன்.

நன்றி வாத்தியார்  சகோதரா

 நேரத்துக்கும்  கருத்துக்கும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இளஞ்செழியனாக அவர் அங்கு   செயற்படவில்லை

வீதியில்   போதையிலிருந்த இருவரது சண்டைக்கு நீதி  வழங்க முனைந்து

தனது பாதுகாப்பாளரை பலி  கொடுத்தமையே

அவரது குற்ற  உணர்வுக்கும்  மனக்குமுறலுக்கும் காரணம்

இனி  அவரது தீர்ப்புக்கு  அழுது காலில் விழுபவர்களை  என்ன  சொல்லப்போகிறார்  இந்த  குற்றவாளி  என்பதே எனது கருத்து

நன்றி வாத்தியார் கருத்துக்கும் நேரத்துக்கும்....

போதை, வீதித்த தகராறு என்பதெல்லாம் நீதிபதி அவர்களின் உயிரைப் பறிப்பதற்காக விரிக்கப்பட்ட வலையாகவே எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அது எவ்வாறாயினும் நீதிபதி ஒருவரின் கண் முன்னே வீதியில் ஒரு தகராறு நடக்கும் பொது நீதிபதி அவர்கள் தனது பாதுகாப்புக்கு கருதி  கண்டும் காணாதது போலச் செல்வதே குற்றமாகும்.

உண்மையான நீதிபதியாக நடந்து அந்த இடத்தில் வாகனத்தை வீட்டுக் கீழிறங்கியதும் தனது பாதுகாப்பு அதிகாரிகளை சம்பவத்தைக் கட்டுப்படுத்த அனுப்பியதும்  அவரது குற்றமென்றால் அது எப்படி ???

அப்படியென்றால் காவல் அதிகாரியைக் குறிவைத்துச் சுட்டவரை எப்படி அழைப்பது??? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

வித்தியா கொலை  உட்பட 

அவரது இன்றைய  பொறுப்புக்களை

ஆபத்துக்களை அவர்  உணரணும் முதலில்.

அதை விடுத்து நீதி  மன்றத்தை  

வீதியில்  போதையிலிருப்பவர்களிடம் நடத்த நினைத்தது எப்படி  சரியாகும்??

 போதையில் வீதியில் நிற்பவர்களுக்கு  நாம் சமாதானம் செய்வோமா?? 

தேவையற்று  ஒரு போதையிலிருந்தவரிடம்  தனது பணியாளரை பறி  கொடுத்ததே அவரது மனச்சாட்சியை  உறுத்தி  வருகிறது

அதன் தொடர்ச்சியான  அவரது செயல்களும் அந்த குற்ற  உணர்வே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 10

தமிழரசுக்கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்களுக்கு பவளவிழா கொண்டாடப்படுகிறது.

அந்த விளம்பரத்தை பார்த்தபோது தமிழரசுக்கட்சி புலம்பெயர் மக்களால் நடாத்தப்படுகிறதா என்றே எண்ணத்தோன்றுகிறது.

விழாவில் வாழ்த்துரை வழங்குபவர்கள் அத்தனை பேரும் புலம் பெயர்ந்தவர்கள்.

விழாவை நடாத்துவது கனடா அமைப்பு.

சரி விழா நடக்கும் இடம் புலம் என்றால் அது தான் இல்லை.

நடப்பது யாழ்ப்பாணத்தில்.

20525709_1859840321000923_21343749343676
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பட்டது + படிச்சது + பிடித்தது - 11
 
வரலாற்றில் இன்றைய நாள்.
 
ஒரு மக்கள் தலைவன் எப்படி இருக்கணும் என்பதற்கும் ஒரு போராளி எப்படி இருக்கணும் என்பதற்கும் தலைவரே உதாரணம்.
 
நாலாவது உலக வல்லரசின் இராணுவத்துக்கு முன்னால் என் மக்கள் கவனம் என்று சொல்ல எம் தலைவரால் மட்டுமே முடியும். அந்தளவுக்கு எதையும் விட மக்களை நேசிப்பவர் அவர்.
 
L’image contient peut-être : 2 personnes, personnes debout et plein air
Inuvaijur Mayuran

வரலாற்றில் இன்றைய நாள்
********************************

04.08.1987 - 04.08.2017
(30வது ஆண்டில்)

சுதுமலை பிரகடனம்.

“எனது பேரன்பிற்குரிய மக்களே! இந்தியா எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பினை வழங்குவதை தவிர வேறு வழியில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குகிறோம். எனினும் இந்த ஒப்பந்தத்தின்மூலம் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிட்டுமென்று நான் நம்பவில்லை. சிங்களப் பேரினவாத வேதாளம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழீழம் அமைவதிலேயே தங்கியுள்ளது என்பது எனது மாறுபடாத நம்பிக்கையாகும். இடைக்கால அரசை ஏற்றுக்கொள்ள தேர்தல் ஒன்றில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமக்கு ஏற்படலாம். அதேவேளை, எந்த சந்தர்ப்பத்திலும் நான் தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, அல்லது முதல் மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளவோ மாட்டேன் என்பதை உறுதியாக உங்களிடம் கூறிகொள்ள விரும்புகிறேன்.”

- வே. பிரபாகரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டது + படிச்சது + பிடித்தது - 11

ஏன் இங்க வந்தனீ??? - குறும்படம்

ஒவ்வொரு தமிழரையும் நித்திரை கொள்வது போல் நடித்தபடி உலகம் கேட்கும் கேள்வி இது.

அதே கேள்வியை குறும்படம் மூலம் முன் வைத்தபடம்.

தம்பி ஐனா போன்ற தாயகப்பற்றுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்ச்சி.

இந்த குறும்படத்தை நாவலர் குறும்படப்போட்டிக்கான தெரிவின் போது பார்க்க முடிந்தது.

பரிசுகளை அள்ளிச்சென்ற படம் என்று சொல்வதைவிட

எந்த பரிசை இதற்கு தவிர்க்கலாம் என நடுவர்கள் திண்டாடிய தமிழரின் வரலாற்று காவியமிது.

நாவலர் விருதை எதற்காக உருவாக்கினார்களோ அதற்கான முழுத்திருப்தியை தந்தபடம்.

தொடரட்டும் தங்கள் கலைப்பணி. வாழ்க வளமுடன்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.