Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ?

Featured Replies

பூநகரியில் டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வு – தொழிற்சாலை நிறுவ திட்டமா ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Cement-Factory.jpg
 
பூநகரி பகுதியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளதாக வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
 
வடமாகாண சபையின் இன்றைய அமர்வின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
 
 பூநகரி பொன்னவழி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று சீமெந்து தொழிற்சாலையை நிறுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
 
அந்த ஆய்வுகளுக்காக நிலங்களில் பாரிய துளையிட்டு பாரிய இயந்திரங்களை பொருத்தி நீரினை இறைக்கின்றார்கள். அவ்வாறு இறைக்கப்படும் உவர் நீர் அப்பகுதி வயல் நிலங்களில் பாய்ச்சுகின்றார்கள். அதனால் வயல் நிலங்கள் உவராக மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு அதனால் , வயல் நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்ற நிலமில்லாமல் போய்விடும். அதனால் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுத்தார்.
 
ஆய்வுகளை மாத்திரமே மேற்கொண்டார்கள். 
 
 
அது தொடர்பில் மற்றுமொரு மாகாண சபை ஆளும்உறுப்பினரான அரியரட்ணம் தெரிவிக்கையில் ,
 
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கதைக்கப்பட்டது. அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள சக மாகாண சபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை தலைமையில் குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
 
நான் அந்த இடத்திற்கு சென்று பார்த்து இருந்தேன். அது டோக்கியோ சீமெந்து நிறுவனம் மத்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற்று அப்பகுதியில் சீமெந்து தயாரிக்க கூடிய கற்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டார்கள்.
 
தற்போது பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்று விட்டார்கள். பரிசோதனை அறிக்கையின் பிரகாரமே அவர்கள் முடிவெடுப்பார்கள் அந்த இடத்தில் கற்களை அகழ்வதா இல்லையா என அதற்கு இடையில் அடுத்த கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.
 
கடந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிக்கின்றார்கள். 
 
அதனை அடுத்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி உறுப்பினர் வை.தவநாதன் , கடந்த ஆட்சி காலத்தில் சீமெந்து உற்பத்தி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் தற்போது அதற்கு ஆதரவாக செயற்பட தொடங்கியுள்ளார்கள். அவர்கள் தற்போது அவ்வாறு செயற்பட காரணம் கையூட்டு பெற்று விட்டார்களா என சந்தேகிக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/36270

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ காஞ்கேசன் துறை தொழிற்சாலை யின் நிலை என்னவோ அதையும் அபிவிருத்தி செய்தால்  இன்னும்  நன்றே

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

அப்போ காஞ்கேசன் துறை தொழிற்சாலை யின் நிலை என்னவோ அதையும் அபிவிருத்தி செய்தால்  இன்னும்  நன்றே

ஏற்கனவே சுண்ணக்கல் அகழ்வால் யாழ் குடாநாடு பெருமளவு உப்புநீரினை உள்வாங்கிவிட்டது எதிர்கால சந்ததிக்கு எண்ணத்தை விட்டுவைக்கபோறம் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செழிப்பான பூமிக்கு அடியிலை இருக்கிறதெல்லாத்தையும் தோண்டியெடுத்து மண்ணை பாலைவனமாக்கிறதெண்டே திரியுறாங்கள்....

தோட்டம் கீட்டம்....கமம் செய்தால் சனம் வாழாது எண்டுறீங்கள்????? 

பூநகரி - சங்குப்பிடி பாலம் வழியாக செல்பவர்கள் 20 கு மேற்பட்ட பாரிய ஆழ்துளைக் கருவிகள் மூலம் நிலத்தை துளையிட்டு ஆய்வுகள் நடப்பதைக் காணலாம். இவர்கள் 750 அடியின் கீழுள்ள மண்ணை எடுத்து சீமெந்து செய்யப் போறார்களாம். இது ஆபத்தான விளையாட்டு. பொருளாதார அபிவிருத்தி இல்லை!

முன்னர் முருங்கன் பகுதியை நாசம் செய்தது போலவே இப்போது பூநகரியையும் நாசம் செய்ய நினைக்கிறார்கள்! பாரிய நிறுவனங்கள் வழங்கும் அன்பளிப்புக்களைப் பெற்றுக்கொண்டு இதற்கு அனுமதி வழங்குவதோ, ஆய்வுகள் செய்ய அனுமதிப்பதோ மிகவும் தவறான குறுகிய கண்ணொனோட்டம் ஆகும்.

ஆய்வுகள் செய்ய அனுமதித்ததே பாரிய தவறாகும். இவை உடனடியாக நிறுத்தத்தப்பட வேண்டும்.

சூழலை அழிக்கும் சீமெந்து தொழிற்சாலையை நிறுத்தி, காற்றின் வேகம் கூடுதலான அப்பகுதியில் சூழலுக்கு ஆபத்தில்லாத காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களையும், சூரிய மின்னுற்பத்தி நிலையங்களையும் நிறுவுவது பொருத்தமானது.

அத்துடன் தூர்ந்து போயுள்ள பல ஏரிகளை மீள நிர்மாணித்து குமாரசாமி கூறியது போல தொழில்களில் உயர்ந்த தொழிலான விவசாயத்தையும் ஊக்குவிக்கலாம்.

ஊர் மக்கள் ஒன்று கூடி சீமெந்துத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

ஏற்கனவே சுண்ணக்கல் அகழ்வால் யாழ் குடாநாடு பெருமளவு உப்புநீரினை உள்வாங்கிவிட்டது எதிர்கால சந்ததிக்கு எண்ணத்தை விட்டுவைக்கபோறம் ?

புதிதாய் அமைப்பதால் இன்னும் அதிக வளத்தை இழக்கப்போகிறோம்  இருப்பதை  புதுப்பித்து பாவித்தால் என்ன ??  எதிர்கால சந்ததிகள் நிட்சயம் விவசாயம் செய்ய முன்வருவார்களா எனப்து சந்தேகம் இருந்தாலும்  நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருந்தால் தான் விவசாயம் கூட செய்யலாம்  மாற்றுவழிகள் தான் இன்னும் கிட்ட வில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

புதிதாய் அமைப்பதால் இன்னும் அதிக வளத்தை இழக்கப்போகிறோம்  இருப்பதை  புதுப்பித்து பாவித்தால் என்ன ??  எதிர்கால சந்ததிகள் நிட்சயம் விவசாயம் செய்ய முன்வருவார்களா எனப்து சந்தேகம் இருந்தாலும்  நிலத்தடி நீர் பாதுகாப்பாக இருந்தால் தான் விவசாயம் கூட செய்யலாம்  மாற்றுவழிகள் தான் இன்னும் கிட்ட வில்லை 

எதிர்கால சந்ததி சாப்பிடும் மட்டும் விவசாயத்தின் முக்கியத்துவம் உணரபட்டு அது பாட்டுக்கு தொடரும் கவலை வேண்டாம் பழைய ஆலை மூலமான பாதிப்புகளை கண்ணெதிரே உணர்ந்து பார்க்கிறம் இந்த லட்சனத்தில் பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் கொள்கையே மிக நல்லது.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாடு.. உட்பட்ட வடக்கு மாகாணத்திலோ.. கிழக்கிலோ.. சீமெந்துந் தொழிற்சாலை அமைவது எமது வளத்துக்கு ஆபத்தாகும்.

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். மாற்றீடாக.. அந்தத் துறைமுகத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவதன் மூலம்.. சர்வதேச கடற்பாதைகளின் அளவைக் குறைக்கலாம். இது வடக்கிற்கு பெரும் பொருண்மியத்தை ஈட்டித்தரும். குறிப்பாக சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறினால்..!

ஒரு சுண்ணாம்புக்கல் (limestone)  பாறை உருவாக எத்தனையோ நூறு ஆண்டுகள் தேவை. அதனை இலகுவாக அகழ்ந்து எடுப்பதன் மூலம்.. எமது நிலத்தடி நீர் உவராவது மட்டுமன்றி.. எமது தரையின் இரசாயன பெளதீக கட்டமைப்புக்களும் மாற்றி அமைக்கப்படும். இதனால் யாழ் குடா பெரும் கடல் உள்வாங்கலை சந்திக்கலாம். இது யாழ் குடாநாடு கடலுக்குள் செல்வதை துரிதப்படுத்தும். குறிப்பாக.. சூழல் வெப்ப உயர்வானது சுண்ணாம்புக்கல் உருவாக்கும் நுண் உயிரிகளின் வாழ்வில் தாக்கம் செய்வதாலும்.. கடல் மட்ட அதிகரிப்பாலும்.. ஏலவே பல சூழல் சிக்கல்களை சந்தித்து நிற்கும் யாழ் குடா மற்றும் அதனை ஒட்டிய பிற வடக்குக் கரையோரங்கள்.. இருக்கும் சுண்ணாம்புக்கல்லையும் ஜப்பானுக்கும் சிங்களவனுக்கும் அள்ளக் கொடுத்தால்..

விளைவு.. போர் தந்த விளைவை விட மிக மோசமாக இருக்கும்.

ஜப்பான்.. எப்பவுமே தமிழரின் நிலத்தைக் கபளீகரம் செய்யும் கள்ள நோக்கத்தோடு தான் செயற்பட்டு வந்துள்ளது. இணைத்தலைமை நாடுகளை உருவாக்கி.. எமது இன அழிப்புப் போரை முன்னெடுத்துச் செல்ல ஜப்பானும் ஒரு உந்து சக்தியாக சொறீலங்காவுக்கும்... ஹிந்தியாவுக்கும் துணை நின்றது.

அப்படியாப்பட்ட ஜப்பானின்.. எமது வளம் சுரண்டும்.. வரவு என்பது எமக்கு எப்போதும் ஆபத்தாகவே இருக்கும்.

இதில் நாம் தெளிவாக இருப்பது மிக அவசியம்.

எமது வளமும் மண்ணும் மொழியும் இல்லையேல்.. தமிழர் நாம் இல்லை. tw_angry::rolleyes:

Image result for formation of limestone in north sri lanka

சுண்ணாம்புக்கல் என்பது எமது தாயக பூமியின் அடிப்படை.. பிரதான பலம்.. வளம். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.