Jump to content

எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு

இன்று இணையப்பரப்பில் அலம்பும் கூட்டங்களுக்கு ஒரு கருவாக அமைந்து விட்டது சாதி. அதுவும் ஈழத்தமிழர்களிடையே சாதியம் பற்றி பல ஆய்வாளர்கள் ஆய்வெழுதி தள்ளுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் என்ன செய்கின்றனர்? முதலில் இந்;த சாதிய பிரச்சினைகள் பற்றி விவாதம் “உணர்வுகள்” என்ற இணையத்தில் ஆரம்பித்தது. என்று நினைக்கிறேன் சாதியம் இல்லை என்று அவர் வாதிட, அது இருக்கிறது என்று இன்னும் சிலர் வாதிட வாதாட்டம் இணையங்களிலும் தொற்றி கொண்டது. கருத்துக்களத்தில் கருத்துக்கள் பல பரவின. இதற்காகவே பலர் பல பிறவிகள் எடுத்து கருத்தை வைத்தனர். அனைவரும் சாதியத்தை அழிக்க பிறப்பெடுத்தவர்கள் என்றால் அது பொய். உண்மையில் சாதியத்தை அழிக்க நினைப்பவன் அதை கூட்டம் போட்டு தான் சொன்னது சரி என்றும், ஏதோ ஒரு மாற்று சக்தியிடம் குறிப்பிட்டு சொன்னால் மதம், நாவலர், யாழ்ப்பாணம் என்று எங்கோ ஒரு பகுதியில் தூக்கி போட்டு விட்டு தாம் ஏதோ சாதியத்தை அழிக்கப்பிறந்த கதாநாயகர்களா காட்டிக்கொள்ள முயல்கின்றனர்

இங்கே அடிபட்டு போவது ஈழத்தின் பெயரும், அவற்றை வழி நடத்தும் விடுதலைப்புலிகளது பெயருமே. சாதியம் இல்லை என்று நான் வாதிட இதை எழுதவில்லை ஆனால் அதை இணையத்தில் இப்படி விவாதிப்பதால் என்ன பலன்? எனக்கு சாதி பற்றி எதுவும் தெரியாது. நான் தாயகத்தில் வாழ்ந்த காலத்திலோ புகலிடத்தில் வாழ்கின்ற போதோ அதனால் நான் பாதிக்கபடவும் இல்லை என்னால் யாரும் பாதிக்கபடவும் இல்லை. என்னை சூழ உள்ள உறவினர்கள், நண்பர்களும் அப்படியே, ஆனால் சில நண்பர்கள் சொல்ல கேட்டுள்ளேன். ஆனாலும் ஈழத்தின் நான் வாழ்ந்த காலத்தில் சாதியால் பிரச்சினை எங்கள் சமூகத்தில் வரவில்லை. நான் பிறந்தது முதல் கடந்த 2004 வரை தாயகத்தில் இருந்தவன். என்பதால் அதை சொன்னேன். கோவில் திருவிழாவிலோ, கிணற்று தண்ணியிலோ, இல்லை வீதியிலோ இங்கே கற்பனையில் கவிவடிப்பது போல ஆயவுகளை, கருத்துக்களை சொல்பவர்கள் போல் நான் எதையும் 2004 வரை அறியவில்லை. அதே நேரம் முதல் முதலாக, சாதியம் பற்றிய அறிவை திரு சிவா சின்னப்பொடி அவர்களது ஆய்விலிருந்து அறிந்து கொண்டேன். ஏனக்கு அறியாத ஒன்றை அவர் பள்ளியில் பாடம் எடுப்பது போல்,சாதி என்றால் என்ன? ஏன் உருவானது? யாரால் வளர்க்கப்பட்டது என்று விரிவாக பார்த்தார். இல்லை கற்பித்தார். இவர்களை போல பலர் இளைய சமூகத்தில் இதை பற்றி விரிவுரை நடாத்த வேண்டும் வேண்டுமெனில் ரொரன்ரோ பல்கலைக்கழக தமிழ் பிரிவில் சாதியத்தையும் ஒரு பாடமாய் கற்பிக்க ஆலோசனை வழங்க வேண்டும் ஏனெனில் சாதியைப்பற்றி அடிப்படையே தெரியா என் போன்ற இளைஞர்கள் அதை எப்படி நடை முறைப்படுத்துவது என்று திக்கு முக்காடி கொண்டிருக்கின்றனர். சாதியப்பிரிவுகளை அழிக்க ஆலோசனை கட்டுரை சாதிகள் பற்றி விரிவான விரிவுரை நடத்தியது, வருந்தத்ததக்கது.

அது மட்டு மன்றி, இக்கட்டுரையின் பல கர்ண தந்திர, அதாவது வாய்வழி கதைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக தெரிகின்றது. இவற்றை எல்லாம் விட குறிப்பட்ட பிரதேசங்களை சார்ந்தவர்களை குறித்து அதற்க்குள் ஒரு பிரிவினையை காட்டியுள்ளார் இவர். சாதிய பிரிவினையை அழித்து பிரதேசத்தை பிரிக்கிறார். அடுத்து, சாதியத்தை அழிக்க முடியாது என்று தானே முடிவுக்கு வந்தாரா,? ஆல்லது முயன்று தோற்றாரா? ஏனக்கு தெரியாது அவர் மூன்றாவது சக்தி ஒன்றிடம் அதற்கான பழியை போடுவது அவரின் இயலாமையை குறிக்கிறது எனலாம்.

சாதியம் வளர்க்கப்பட்டாயிற்று. அவை வளர்ந்து இப்போது காய்ந்து கொண்டிருக்கிறது. அது காய்ந்து அழிந்து போக என்ன செய்யலாம் என்ற ஆலோசனைக்கு பதில், சாதியம் மதங்களால் உருவாக்கப்பட்டது. அன்று சட்டமாக்கப்பட்டது என்று கதை விடுவதை என்ன சொல்ல முடியும்? என்னை பொறுத்தவரை சாதியத்தின் உருவாக்கம் பற்றி பேசுவது முட்டாள்த்தனம், எழுத்தில் மட்டும் சாதியை அழிக்க முடியும் என்று நினைப்பதும் அடி முட்டாள் தனம். அதிலிருந்து கருத்தாளர்கள் மீள வேண்டும் விவாதங்கள் செய்து சாதியத்தை தூண்டுவதிலும் தர்க்க ரீதியான, ஆய்வுகளை தமது சமூகத்துள் செய்து, அதை ஒழிக்க வழி தேட வேண்டும். அதை விடுத்து என் வீட்டில் சண்டை என்று அடுத்த நாலு வீட்டு காரரையும் கூப்பிடுவது எமக்கே இழுக்கு. அது நண்பராய் இருந்தாலும். திடீரென்று இந்த சாதிய கருத்து தோன்ற என்ன காரணமோ தெரியவில்லை. சாதி பார்த்து திருமணம் செய்தவர்கள் எல்லாம், சாதியம் அழிக்கப்பட வேண்டும் என்று கதை விடுகின்றார்.

இது இளைஞர்களின் காலம் காலம் கடந்த ஞானத்தை வைத்து கடந்ததை கிளற வேண்டிய அவசியம் எவருக்கும் இல்லை. இன்றைய இளைஞர்களுக்கு, இனி வரும் தலைமுறைக்கு தமது சந்ததியை வழிநடத்தும் தைரியமும், நம்பிக்கையும் இருக்கின்றது. ஐயர் வைத்து திருமணம் செய்தவன், பகுத்தறிவு பேசுவர்;கள். ஏன் என்றால் அறியாமை என்பார்கள், அன்று அறியாதவர்கள் இன்று அறிய முடியுமானால், இன்று மூட நம்பிக்கைக்குள் இருப்பவர்கள் நிச்சயம் மீள்வார்கள். ஆனால் இங்கே இன்னோரு வகையில் மக்களை இவர்கள் பிரிக்க முயல்வதும் சாதியை பற்றி பேசும் இவர்களது கருத்துக்களை நகைப்புக்கிடமாக இருக்கின்றது. இந்து மதம் இன்று ஈழத்தில் இருக்கும் இடமே தெரியவில்லை எனலாம். மற்றைய மதங்கள் போல் மத அடையாளங்களையோ, கட்டுப்பாடுகளையோ ஈழத்தில் இந்து மதம் போடவில்லை.

முழுமையான சுதந்திரத்தை ஈழத்து இந்து மதம் கொடுத்திருந்தது. ஆனால் இங்கு பலர் சாதியத்துக்கு அடிப்படை இந்து மதம் என்று கூறுவது உண்மை எனிலும், இன்றைய சாதிய பிரச்சினைகளுக்கு அது எவ்வாறு துணை நிற்க்கின்றது என்று அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். இந்து மதம் ஊட்டிய சாதியை வளர்த்த, தமிழனுக்கு அது ஊட்டிய நற்பழக்க வழக்கங்களை வளர்க்க தெரியவில்லை. மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஏன் தமிழர்கள் தொடர்ந்து வரவில்லை? அந்த நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு அன்பு, கொல்லாமை, ஏகபத்தினி விரதன் போன்றவற்றை ஏன் இவர்கள் வளர்க்கவில்லை. சாதியம் சாதியம் என்று அழிந்து வரும் ஒன்றை ஏன் மீண்டும் புனரமைப்பு செய்கின்றீர்கள் என்று கேட்டு கேட்டு களைத்து விட்டது. சாதியம் பற்றி பேசுபவர் நிச்சயமாக அந்த சாதியத்தை அரவனைத்தவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால், அதை வைத்து விவாதம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. சாதியத்தை வைத்து விரிவுரை நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. சாதியத்தை வைத்து தங்கள் எழுத்தை நிலை பெற செய்ய முனைவதில் எனக்கு உடன்பாடில்லை. சாதியத்தை வைத்து தாம் சொல்வது தான் சரி என்று அறை கூவல் விடுவதில் எனக்கு உடன்பாடில்லை.

எனக்கு தெரிந்து விடுதலைப்போருக்கு ஒரு போதும் சாதி தடையாக இருந்ததில்லை. எனக்கு தெரிந்து மாற்று சாதி என்ற கருத்தியலின் அடிப்படையில், காட்டிக்கொடுப்புக்கள் இடம் பெறவில்லை. மாறக. போராளிகள் வீரச்சாவடைந்தால் ஒரு போராளி வீரச்சாவடைந்தான் என்றே சொல்வார்கள். இன்றும் கூட ஆங்காங்கே கொல்லப்படும் இளைஞர்களை நினைத்து அனைவருமே கண்ணீர் வடிக்கின்றனர். ஈழத்தில் ஒரு அசம்பாவிதம் நடைபெற்ற மறு நிமிடம் அனைவரும் ஒன்றாய் உறவுகளுக்காய் குரல் கொடுக்கின்றனர். அதனுள் சாதி பாரட்டப்படவில்லை. அங்கே சாதியின் அடிப்படையில் யாரும் செயற்ப்படவில்லை. வந்த புலத்திலும் சரி நிலத்திலும் இன்றைய தலைமுறை சாதியம் பார்த்து திருமணம் செய்ததாய் எனக்கு தெரியாது. காதல் செய்யும் போது சாதி பார்த்தாய் எனக்கு தெரியாது. வந்த புலத்து கோவில்களில் சாதி அடிப்படையில் திரு விழா செய்வதாயும் நான் அறியவில்லை. ஏன் தாயகத்தில் கூட இன்று அப்படி நடைபெறுவதாய் நான் அறியவில்லை.

ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை ஆனால் அதன் வீச்சு முழமையாக குறைந்துள்ள இந்த வேளையில் விவாதங்கள் அவசியம் என்று நினைக்கவில்லை. குறிப்பாக முன்னார் நான் குறிப்பிட்டது போல, இளைஞர்கள் பலர் உலாவும் இணையத்தில் இப்படிப்பட்ட விவாதங்கள் சில சமயங்களில் எதிர் மறையான விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடும். சாதி இல்லை என்று பாரதியார் சொன்னதையும். பெரியார் சொன்னவற்றையும் கொண்டு தான் ஈழத்து சாதியத்தை அழிக்க வேண்டுமென்பதல்ல. இன்று ஈழத்து சாதியம் பற்றி ஈழத்துடன் தொடர்பில்ல பலர் கருத்து வைக்கின்றனர். விவாதிக்கின்றனர், நக்கலடிக்கின்றனர். தனிப்பட்ட ரீதியில் என்னை பொறுத்த வரை ஈழத்தமிழரின் பிரச்சினைகளில் மாற்றவர்கள் தலையிட்டு கருத்து கூறுவதையோ, மற்றவர்களை உதாரணப்படுத்துவதையோ நான் விரும்பவில்லை. எங்கள் தமிழீழம் எல்லாவற்றுக்கு மேலாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

இது என் நாட்டின் மீது நான் வைத்திருக்கும் அளவு கடந்த பற்றின் வெளிப்பாடே அன்று வேறெதுவும் இல்லை. தமிழீழப்பிரச்சினைகளுக்குள் தமிழீழத்தவனுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்ற கருத்தை கொண்டவன் நான். ஈழத்த பிரச்சினைகளின் மற்றவார்கள் மூக்கை நுழைப்பது என்பது என் வீட்டு பிரச்சினையில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடுவது போல நான் உணர்கின்றேன். அதனால் தான் முன்னார் சொன்னேன், எங்கள் வீட்டு பிரச்சினைகள் எங்கள் வீட்டுக்குள் பேசி தீர்க்கப்பட வேண்டும். தீர்க்கபட முடியாத பிரச்சினையாக நான் இதை பார்க்க வில்லை. இவற்றை “தமிழ் தேசியம்” என்ற அடிப்படைக்குள் நிச்சயம் தீர்hக்க வேண்டும் தீர்க்கப்படும். ஏனெனில் அனைத்து மக்களும் தேசியம் என்று வரும் போது சாதிகளுக்கு அப்பால் அணிதிரள்வதை குறிப்பிடலாம். எனவே எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கென்று மீண்டும் கூறி விடைபெறுகின்றேன்.

Link to comment
Share on other sites

சரியாக சொன்னீர்கள். இங்க சாதியம் பற்றி கதைப்பவர்கள் பலர் சாதியத்தை இங்கு வளரும் எமது பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அதை வளர்ப்பதற்கு நிற்கிறார்கள்.

உ+ம் எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் மகள் ஒரு பையனைக் காதலித்தார் வீட்டுக்கு இது தெரிய வர அவர்கள் அந்த பையனின் சாதியத்தை சொல்லி இது கூடாது விட்டுவிடு என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். மகள் அது என்ன பிரச்சனை நான் விட மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டார்.

இப்போ ஆவணி மாதம் திருமணத்திற்கு ஒழுங்கு செய்து விட்டார்கள். முடிந்த பிறகுதான் உண்மை. அனால் மகள் அவரைத்தான் செய்து வைப்பீர்கள் என்று உறுதி மொழி கேட்டு அப்படி ஏதும் பிரச்சனை வந்தால் பொலிஸ் இல் முறைப்பாடு செய்வேன் என்று சொல்லிவிட்டார்.

சாதியத்தை வைத்து தான் புலம் பெயர் நாடுகளிலும் காதல் தடை செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

நிதர்சன்! உங்களை நினைக்க பாவமாக இருக்கிறது. உங்களுடைய நிலை யாருக்கும் வரக் கூடாது. ஒரு குழந்தையை பிறந்தவுடனேயே ஆமிக்காரன் பிடித்துக் கொண்டு போய் இருட்டறைக்குள் 2004 வரை சிறை வைத்திருந்தது பெரிய கொடுமை.

தமிழை எங்கே கற்றீர்கள்?

Link to comment
Share on other sites

நிதர்சன் நீங்கள் ஊரில் ஒரு அப்பிரானியாக வாழ்ந்திருக்கிறீர்கள். வெளிநாடு என்று வெளிக்கிட்டுதான் பல விடயங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஊரில் சர்வசாதாரணமாக பார்க்ககூடியவற்றை கூட நீங்கள் பார்கவில்லை, உங்கள் ஊரிற்குள்மட்டுமே நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரிற்க்குள் மட்டும் நீங்கள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வந்திராது, ஏன் என்றால் ஊரிற்கு ஊர்தானே சாதி இருக்கிறது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன்! உங்களை நினைக்க பாவமாக இருக்கிறது. உங்களுடைய நிலை யாருக்கும் வரக் கூடாது. ஒரு குழந்தையை பிறந்தவுடனேயே ஆமிக்காரன் பிடித்துக் கொண்டு போய் இருட்டறைக்குள் 2004 வரை சிறை வைத்திருந்தது பெரிய கொடுமை.

தமிழை எங்கே கற்றீர்கள்?

சபேசன், நீங்கள் சொல்வது போல நான் ஒன்றும் கிணற்றுக்குள் கிடக்கவும் இல்லை என்னை சூழ இருட்டும் இருந்ததில்லை. நீங்கள் சொல்லும் சாதி எனும் மாயை எம்மை, என் சார்ந்த சூழலை சூழவில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இல்லை. ஏனெனில் அதை வைத்து விவாதம் என்ற மாயைக்குள் நீங்கள் கட்டுண்டு கிடக்கிறீர்கள். தமிழை நான் கற்றது ஈழத்தில் ஏன் அதில் என்ன சந்தேகமோ?

தமிழை தமிழாத்தான் கற்றேன். அதே போல சூழலையும் அதற்கேற்றது போலவே கற்றேன். அதானால் தான் எனக்கு சாதிய அடிப்படை பற்றி தெரியாமலே போய் விட்டது. என்வோ, நல்ல விடையம் நான் உங்களை போன்றவர்களை சந்திதத்தால் அதையும் அறியும் பாக்கியம் பெற்றுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் நீங்கள் ஊரில் ஒரு அப்பிரானியாக வாழ்ந்திருக்கிறீர்கள். வெளிநாடு என்று வெளிக்கிட்டுதான் பல விடயங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஊரில் சர்வசாதாரணமாக பார்க்ககூடியவற்றை கூட நீங்கள் பார்கவில்லை, உங்கள் ஊரிற்குள்மட்டுமே நீங்கள் வாழ்ந்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரிற்க்குள் மட்டும் நீங்கள் இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வந்திராது, ஏன் என்றால் ஊரிற்கு ஊர்தானே சாதி இருக்கிறது,

பிருந்தன் உங்கள் ஊர் வேண்டுமாயால் அப்படியிருந்திருக்கலாம். அல்லது நீங்கள் அப்படி வாழ்ந்திருக்கலாம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு பிரதேசத்தில் வாழ்ந்தவன் நான். ஒரு ஊருக்குள் மடங்கியிருக்கும் அளவுக்கு நாள், முட்டாளக இல்லை. அதை விடவும். எனது ஊரை பிரதேசத்தை விட, மற்றைய இடங்களையு நான் நன்றாக அறிந்திருக்கின்றேன்.

ஆனால் உண்மையில் எனக்கு சாதி பற்றி தெரிந்திருக்கவில்லை. சில வேளை தமிழீழ நிர்வாக பகுதி என்பதாலே தெரியவில்லை.

சபேசன் முன்னோரு கருத்தில் கூறியிருந்தார். வன்னியில் மாடுகளுக்கு சாதி குறியிருக்கிறது என்று. அது தவறான கருத்து. அதற்க்கு சாதிக்குறி என்று சொல்வது என்று எனக்கு இவர் சொல்லி தான் தெரியும். அதை "பட்டிக்குறி" என்று அங்கே அழைப்பார். அதாவது அங்கு மாடுகளை மேய்பதற்க்கு ஆக்கள் வைப்பதில்லை. காலையில் பட்டியை திறந்து விட்டால், மாலையில் அவை தன் பாட்டில் பட்டி திரும்பும். சில வேளையில் மற்றை மாடுகளுடன் சேர்ந்து வேறு பட்டிகளுக்கு சென்று விடும். அப்போது குறிப்பிட்ட பட்டிக்கு சொந்தக்கார் அந்த குறியியை வைத்து யாரின் மாடு என்று அறிந்து கொள்வதற்காகவே அக்குறி பயன் படுகின்றது. அதை சாதி குறி என்று யாரோ தவறான அர்த்தம் கற்ப்பித்துள்ளனர்.

இப்படி சில வேளை நீங்களும் தவறான புரிதல்களுடன் வாழலாம்.

Link to comment
Share on other sites

வன்னியில் மாடுகளுக்கு சாதிரீதியான குறியீடுகள் இடப்படுவது குறித்து பல இடங்களில் விசாரித்து விட்டேன். வன்னியை சேர்ந்த பலர் அதை ஒத்துக் கொண்டுள்ளார்கள். வன்னியில் உள்ள சிலருடனும் பேசினேன். அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் உள்ள 50.000இற்கு மேற்பட்ட மாடுகளும் சாதிக் குறியீடுகளோடுதான் திரிகின்றன.

இதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இவைகள் சாதி வேறுபாடை காட்டுகின்றனவே தவிர சாதிரீதியான அடக்குமுறையை அல்ல. விடுதலைப்புலிகள் முதலில் சாதிரீதியான அடக்குமுறையை ஒழித்த பின்னரே, சாதி வேறுபாட்டையும் ஒழிக்க முடியும்.

சாதிரீதியான அடக்குமுறையை ஒழித்தாலும், சாதி அடையாளத்தை ஒழிக்க நீண்ட காலம் எடுக்கும்.

ஆகவே இந்த சாதி அடையாளங்களை ஒழிப்பதற்கும் இன்னும் காலம் கனியவில்லை என்பதாலே இந்த விடயத்தில் விடுதலைப்புலிகள் கண்டும் காணாது இருக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன்.

இனி மாடுகளில் உள்ள குறியீடு குறித்து விளக்கம்

உதாரணமாக கந்தையா செல்வன் என்பவருடைய மாட்டில் க-செ என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் அவர் என்ன சாதியை சேர்ந்தவரோ அதற்கான ஒரு அடையாளமும் இடப்பட்டிருக்கும்.

castemarkat0.jpg

Link to comment
Share on other sites

ஐயகோ சபேசன் என்ன இது. இதெல்லாம் நாம் அறியாதவையே! ஆனால் இதை இத்தனை பாடுபட்டு அழியாமல் பாதுகாத்து அடுத்ததலைமுறைக்கு கொண்டு செல்வதை விட வேறு என்ன பயன் உள்ளது. உங்கள் பகுத்தறிவு என்பது பொதுஅறிவுக்கு எதிரானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சன் 2004 மட்டும் தமிழீழப் பகுதியில் வாழ்ந்தும் சாதியத் பிரச்சினைகளைத் தரிசிக்கவில்லை என்பதை வாசித்தபோது அந்த புண்ணியபூமி எங்கு இருக்கின்றது என்று அறிய ஆவல் வந்தது. அறியத் தந்தால் நன்றாக இருக்கும்..

நாங்களும் தமிழீழத் தாயகப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பலகாலம் வாழ்ந்தவர்கள்.. பல சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள்.. புலிகளின் தலையீடுகளையும் மீறி சாதியத்தைக் கட்டிக் காக்க புதுப்புது வியாக்கியானங்களைப் புலிகளுக்குச் சொன்னதை நேரில் பார்த்தவர்கள்.. நிறைய எழுதமுடியும்.. ஆனால் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.. ஒன்றை மட்டும் சொல்கின்றேன்.. இன்றும் (2007 இலும்) நான் வாழ்ந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் நுழைவதற்கு எல்லோருக்கும் அனுமதியில்லை (புலிகள் இருந்தபோது ஐயர்களையும், சில தெரிந்தெடுக்கப்பட்ட பணியாளர்களையும் தவிர எல்லோரும் வெளியில் நின்றுதான் கும்பிடவேண்டும் என்று சொல்லி சாதியம் காப்பாற்றப்பட்டது. 96 இல் புலிகள் வெளியேறிய பின்னர், பழைய நடைமுறை வந்துவிட்டது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கு

எனவே எங்கள் வீட்டு பிரச்சினையை சந்தியில் நின்று கதைப்பது எங்களுக்கு தான் இழுக்கென்று மீண்டும் கூறி விடைபெறுகின்றேன்.

<<<<<<<<,

நிதர்சன், உங்கள் தலைப்பை பலரும் புரிந்துகொள்ளவில்லையென்றே நினைக்கின்றேன். எமக்கான இழுக்கை நாமே ஏன் தேடிக்கொள்ளவேண்டும் அதுவும் பலரும் கூடுமிடத்தில் என்பதை மிகத் தெளிவாகவே சொல்லி இருக்கின்றீர்கள்.

உங்களைப்போலவே நானும் சாதி என்ற வேறுபாட்டை எங்கள் ஊரில் உணரவில்லை. நான் பிறந்தது திருகோணமலை நகரம் அங்கு சாதி வேறு பாடு பெரிதாக்கப்படுவதில்லை. அத்தோடு என் அன்னையிடம் இருந்து நான் கற்றவையும் அப்படித்தான் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது.

செய்யும் தொழிலுக்கேற்பத்தானே 'சாதி" என்று வரையறுத்தார்கள்! ஆனால் இப்பொழுது பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலையேவா செய்கின்றார்கள்!. !

இதனால் என்ன நன்மை என்றுதான் புரியவில்லை! நல்ல சாதி, உயர்ந்த சாதி. கீழ்ச்சாதி/ மேல்சாதி!!....

ஏன் இத்தனை பிளவுகளோ தெரியவில்லை.

பாரதியார் சொன்னது போல் குல உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்!. இங்கு வளரும் இளம் தலைமுறை இந்த அசுத்தத்தில் இருந்து விடுபடுவது போலத்தான் எனக்குத் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

<<<<<<<<,

நிதர்சன், உங்கள் தலைப்பை பலரும் புரிந்துகொள்ளவில்லையென்றே நினைக்கின்றேன். எமக்கான இழுக்கை நாமே ஏன் தேடிக்கொள்ளவேண்டும் அதுவும் பலரும் கூடுமிடத்தில் என்பதை மிகத் தெளிவாகவே சொல்லி இருக்கின்றீர்கள்.

உங்களைப்போலவே நானும் சாதி என்ற வேறுபாட்டை எங்கள் ஊரில் உணரவில்லை. நான் பிறந்தது திருகோணமலை நகரம் அங்கு சாதி வேறு பாடு பெரிதாக்கப்படுவதில்லை. அத்தோடு என் அன்னையிடம் இருந்து நான் கற்றவையும் அப்படித்தான் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது.

செய்யும் தொழிலுக்கேற்பத்தானே 'சாதி" என்று வரையறுத்தார்கள்! ஆனால் இப்பொழுது பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலையேவா செய்கின்றார்கள்!. !

இதனால் என்ன நன்மை என்றுதான் புரியவில்லை! நல்ல சாதி, உயர்ந்த சாதி. கீழ்ச்சாதி/ மேல்சாதி!!....

ஏன் இத்தனை பிளவுகளோ தெரியவில்லை.

பாரதியார் சொன்னது போல் குல உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்!. இங்கு வளரும் இளம் தலைமுறை இந்த அசுத்தத்தில் இருந்து விடுபடுவது போலத்தான் எனக்குத் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழுக்காய் இருப்பதை ஒத்துக்கொண்டால்தானே குளிப்பதைப் பற்றி பேசமுடியும்!

தப்பு சார். தவறாச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். குளிக்கனும் என்று தீர்மானிக்கிறது வெறும் அழுக்கல்ல. காலையும் மாலையும் குளி என்றால் போதும். குளிக்கும் போது அழுக்கும் போகும் புத்துணர்வும் பிறக்கும். அலுப்பும் போகும். ஆக அழுக்கைக் காட்டி தான் குளிக்க வேணும் என்ற அவசியமில்லை.

உங்களின் குறியீடுகளை வாழ்நாளில் கண்டதே இல்லை சார். மாடுகளில் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கண்டிருக்கின்றோம். மேற்குலகில் காதில் கழுத்தில் லேபில் இடப்பட்ட மாடுகளைக் கண்டிருக்கின்றோம். ஆனால் சார் நீங்க சொன்னது போல குறியீடுகளைக் காணவும் இல்லை... அந்தக் குறியீடுகளுக்கு அதுதான் விளக்கம் என்பதற்கும் ஆதாரமில்லை..!

சில சாதிப் பிரியர்கள் உருவாக்கியவற்றை இங்கு சாதி எதிர்ப்பு என்ற போர்வையின் கீழ் சாதி இருப்புக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றீர்கள். நீங்கள் யாழில் உள்ளதுகளுக்கு சுய புத்தி இல்லை என்று புலம்பித் திரியும் ஒருவர் என்பது யாவரும் அறிந்த விடயம். மறந்திடாதீங்கோ சார். பெரியார் வழியில் பகுத்தறிவு என்று பகுத்து அரிவு வாதம் பேசும் விலங்கு நிலையில் உள்ளது நீங்களே அன்றி வேறெவரும் இல்லை..! :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, பெரிசு வந்திட்டிது! தம்பிமாரெல்லாம் தள்ளி நில்லுங்கோ!

என்ன பெரிசு என்றால் நக்கலா. 95 வருட கால வாழ்க்கையில் காணாத சங்கதியை தம்பி சபேசுப் பொடி எங்க இருந்து கொண்டாரார் என்று பார்க்க வேணாமோ.. கேட்க வேணாமோ..?! :icon_idea:

குளிக்கிறதுக்கும் அசுத்தத்துக்கும் தொடர்பு பண்ணினா.. கையில உள்ள அசுத்ததுக்கு சபேசுத் தம்பியிட கணக்குப்படி குளிச்சிட்டு எல்லோ இருக்கனும். கண்ணுக்குத் தெரியாத அழுக்குகள் கூட இருக்கு அதுக்கு சபேசுத் தம்பி என்ன விளக்கம் கொடுக்கப் போறார். ஆக குளியுங்கோ என்று சொல்லிட்டா எல்லாம் போயிடுமெல்லோ. அழுக்கைப் பற்றி ஏன் ஆராய்ச்சி பண்ணுவான்..!! :lol::D

Link to comment
Share on other sites

சபேசன் நீங்கள் போட்டிருந்த மாடுகளின் மீதான சாதி குறியீடுகளை பார்த்தேன் ஆனால் நான் வன்னி பிரதேசங்கள் பல இடங்களிலும்திரிந்திருக்கிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்பு சார். தவறாச் சொல்லிக் கொடுக்கிறீர்கள். குளிக்கனும் என்று தீர்மானிக்கிறது வெறும் அழுக்கல்ல. காலையும் மாலையும் குளி என்றால் போதும். குளிக்கும் போது அழுக்கும் போகும் புத்துணர்வும் பிறக்கும். அலுப்பும் போகும். ஆக அழுக்கைக் காட்டி தான் குளிக்க வேணும் என்ற அவசியமில்லை.

உங்களின் குறியீடுகளை வாழ்நாளில் கண்டதே இல்லை சார். மாடுகளில் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கண்டிருக்கின்றோம். மேற்குலகில் காதில் கழுத்தில் லேபில் இடப்பட்ட மாடுகளைக் கண்டிருக்கின்றோம். ஆனால் சார் நீங்க சொன்னது போல குறியீடுகளைக் காணவும் இல்லை... அந்தக் குறியீடுகளுக்கு அதுதான் விளக்கம் என்பதற்கும் ஆதாரமில்லை..!

சில சாதிப் பிரியர்கள் உருவாக்கியவற்றை இங்கு சாதி எதிர்ப்பு என்ற போர்வையின் கீழ் சாதி இருப்புக்கான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றீர்கள். நீங்கள் யாழில் உள்ளதுகளுக்கு சுய புத்தி இல்லை என்று புலம்பித் திரியும் ஒருவர் என்பது யாவரும் அறிந்த விடயம். மறந்திடாதீங்கோ சார். பெரியார் வழியில் பகுத்தறிவு என்று பகுத்து அரிவு வாதம் பேசும் விலங்கு நிலையில் உள்ளது நீங்களே அன்றி வேறெவரும் இல்லை..! :lol::D

புத்துணர்ச்சிக்காக குளிப்பவன் தனக்குதேவை என்றால் குளிக்கலாம் அல்லது குளிக்காமல் விடாலாம், ஆனால் அழுக்கோடு இருப்பவன் கட்டாயம் குளிச்சுத்தான் ஆகனும், அல்லது பக்கத்தில் போக முடியாது, போனால் கப்பு தாங்கமுடியாது. :lol::lol::lol::icon_idea:

Link to comment
Share on other sites

நம்மட ஆட்கள் மாட்டின் உடம்பில் குறிபோட்டது போல் தங்கள் உடம்பிலும் குறி போட்டிருந்தால் சூப்பராக இருந்திருக்கும். அதிலும் குறியை நெற்றியில் போட்டிருந்தால் ஏறிப்போயிருக்கும். :icon_idea::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மட ஆட்கள் மாட்டின் உடம்பில் குறிபோட்டது போல் தங்கள் உடம்பிலும் குறி போட்டிருந்தால் சூப்பராக இருந்திருக்கும். அதிலும் குறியை நெற்றியில் போட்டிருந்தால் ஏறிப்போயிருக்கும். :icon_idea::D:lol:

ஏன் வாயில குறி போட்டிருந்தால் ஆராவது சாதியைப்பறி கதைச்சிருப்பாங்களோ? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

எனது நெற்றியில் ஒரு குறி இருக்கிறது. எனது நெற்றியைப்பார்த்து யாராவது நான் என்ன சாதியென்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? சரியான பதிலைச் சொல்பவர்களிற்கு உடம்பில் குறிபோடாத ஒருசோடி மாடு இனாமாகத் தரப்படும்! Diploma in தலித்தியம் என்ற Certificateம் தரப்படும்! :icon_idea::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி மாடுகளில் உள்ள குறியீடு குறித்து விளக்கம்

உதாரணமாக கந்தையா செல்வன் என்பவருடைய மாட்டில் க-செ என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அத்துடன் அவர் என்ன சாதியை சேர்ந்தவரோ அதற்கான ஒரு அடையாளமும் இடப்பட்டிருக்கும்.

சபேசன் அவர்களே, நீங்கள் சொல்லும் அதே வன்னி பகுதியில் தான் நான் பிறந்தது முதல் இருந்தேன். நான் நீங்கள் சொன்ன குறியீடுகளுக்குரிய விளக்கத்தை ஏற்கனவே தந்துள்ளேன். அதை விட நீங்கள் சொல்லும் சாதிக்குறியீடுகள் என்றும் எனக்கு தெரிந்து இருந்ததில்லை. மாறாக பட்டிக்குறியாக X ,வேல், அல்லது வேறு ஏதாவது ஆங்கில எழுத்துக்கள், காணப்படும். சரி அப்படி இக்குறியீடுகள் சாதியை அடிப்படையாக கொண்டு போடப்பட்டிருப்பின் உங்களிடம் சொன்னவர்கள் அதை என்னிடம் சொல்லட்டும். ஏனெனில் என்னிடம் பொய்ய சொல்ல முடியாது. அதை விட இந்த குறியீடுகள் மாட்டின் எந்த பகுதியில் போடப்படும் என்று அந்த வியாக்கினம் பேசுபவர்களிடம் கேட்டு பாருங்கள். இல்லை எனில் உங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்படா விட்டால் தனிப்பட்ட ரீதியில் தொடர்பு கொள்ளுங்கள் அதை உறுப்படுத்தவும் நான் தயார் நான் அப்படி செய்ய வேண்டு மெனில், நீங்கள் உங்களிடம் இந்த தகவலை சொன்னதாக சொல்பவர்களையும், நீங்கள் கதைத்து உறுத்திப்டுத்தியவர்களையும் என்னுடன் பேச சொல்ல வேண்டும்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் 2004 மட்டும் தமிழீழப் பகுதியில் வாழ்ந்தும் சாதியத் பிரச்சினைகளைத் தரிசிக்கவில்லை என்பதை வாசித்தபோது அந்த புண்ணியபூமி எங்கு இருக்கின்றது என்று அறிய ஆவல் வந்தது. அறியத் தந்தால் நன்றாக இருக்கும்..

கிருபன் அவர்களே, நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. அதைப்பற்றி எனக்கு அக்கறையும் இல்லை ஆனால் என்னால் அதை உணர முடியவில்லை.நான் வன்னியில் தான் பிறந்தது முதல் இருந்தேன். வன்னி என்று கூறும் போது குறிப்பிட்ட ஒரு இடத்தை என்னால் குறித்தாக முடியாது காரணம் வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு பின் தொடர்ந்து வருடாந்தம் ஒவ்வொரு ஊராக, மாறி மாறி இறுதியில் எங்கள் பிரதேசம் சென்று அங்கிருந்தே இங்கு வந்தேன். அதாவது வன்னியை ஒரு சுற்று சுற்றி வட்டத்தன் முடிவில் மீண்டும் அதே இடத்துக்கு வந்தேன். என்று சொல்லாம். நான் சென்ற எந்த இடத்திலும் சாதியம் பாரட்டப்படவில்லை. எமக்கு தெரியாத இடங்களில் எல்லாம் நாங்கள் போன போது எமம்மை அவர்கள் உபசரித்தார். நாங்களும் அவர்களுடன் நன்நாக பழகினோம். மாநாக அவர்கள் சாதியையோ, எங்களை சாதியையோ எவரும் கேட்டதில்லை. ஆனால் இங்கு சிலர் ஒப்பாரி வைப்பது போல் அங்கு நடந்ததில்லை.

இங்கே சிலர் மண் படத்தில் வந்த கதையை தூக்குகின்றனர். புதைந்து போகின்ற ஒன்றுக்கு உயிர் கொடுக்க முளைகின்றனர். அதுவும் வீதியில் நின்று இது நமக்கு இழுக்கு என்று சொல்லவே அந்த கட்டுரை வரைந்தேன். அதை புரியாமல். இத்தலைபிலை சாதிய விவாதத்தை ஆரம்பிக்கும் அறிவிலிகள் இருக்கும் போது எமது சமூகம் கிட்டடியில் திருந்தும் என்ற எண்ண கருவே இல்லாமல் போகின்றது.

அழுக்காய் இருப்பதை ஒத்துக்கொண்டால்தானே குளிப்பதைப் பற்றி பேசமுடியும்!

அழுக்கு பற்றி பேசிய படி சேற்றை அள்ளி கொட்டுபவர்கள் அழுக்குள் பற்றி கதைப்பது நகைப்புக்கிடமானது. அவர்களால் அழுக்கை கண்டு பிடிக்கவும் முடியாது. தங்கள் அழுக்கை போக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அவர்களே, நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. அதைப்பற்றி எனக்கு அக்கறையும் இல்லை ஆனால் என்னால் அதை உணர முடியவில்லை.நான் வன்னியில் தான் பிறந்தது முதல் இருந்தேன். வன்னி என்று கூறும் போது குறிப்பிட்ட ஒரு இடத்தை என்னால் குறித்தாக முடியாது காரணம் வன்னியில் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக்கு பின் தொடர்ந்து வருடாந்தம் ஒவ்வொரு ஊராக, மாறி மாறி இறுதியில் எங்கள் பிரதேசம் சென்று அங்கிருந்தே இங்கு வந்தேன். அதாவது வன்னியை ஒரு சுற்று சுற்றி வட்டத்தன் முடிவில் மீண்டும் அதே இடத்துக்கு வந்தேன். என்று சொல்லாம். நான் சென்ற எந்த இடத்திலும் சாதியம் பாரட்டப்படவில்லை. எமக்கு தெரியாத இடங்களில் எல்லாம் நாங்கள் போன போது எமம்மை அவர்கள் உபசரித்தார். நாங்களும் அவர்களுடன் நன்நாக பழகினோம். மாநாக அவர்கள் சாதியையோ, எங்களை சாதியையோ எவரும் கேட்டதில்லை. ஆனால் இங்கு சிலர் ஒப்பாரி வைப்பது போல் அங்கு நடந்ததில்லை.

எதிர்பார்த்த மாதிரியே பதில் வந்திருக்கின்றது. வன்னியிலும் கிழக்கிலும் சாதியம் பெரிதாக இல்லையென்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எனினும் ஒரு காலத்தில் 10 இலட்சம் மக்கள் வாழ்ந்த (தற்போது 4 - 5 லட்சம் வாழும்) யாழ் குடாநாட்டில் இறுக்கமான சாதிக்கட்டுப்பாடுகள் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்துள்ளன. இறுக்கங்கள் தளர்ந்தபோதும் இன்னும் மறைந்து விடவில்லை. யாழ் குடாநாடும் தமிழீழத்தின் முக்கிய பகுதி. இதுவும் வன்னி போன்று சாதியம் அற்ற பிரதேசமாக மாறவேண்டும் என்பதுதான் பலரது விருப்பம்.

இங்கே சிலர் மண் படத்தில் வந்த கதையை தூக்குகின்றனர். புதைந்து போகின்ற ஒன்றுக்கு உயிர் கொடுக்க முளைகின்றனர். அதுவும் வீதியில் நின்று இது நமக்கு இழுக்கு என்று சொல்லவே அந்த கட்டுரை வரைந்தேன். அதை புரியாமல். இத்தலைபிலை சாதிய விவாதத்தை ஆரம்பிக்கும் அறிவிலிகள் இருக்கும் போது எமது சமூகம் கிட்டடியில் திருந்தும் என்ற எண்ண கருவே இல்லாமல் போகின்றது.

அழுக்கு பற்றி பேசிய படி சேற்றை அள்ளி கொட்டுபவர்கள் அழுக்குள் பற்றி கதைப்பது நகைப்புக்கிடமானது. அவர்களால் அழுக்கை கண்டு பிடிக்கவும் முடியாது. தங்கள் அழுக்கை போக்கவும் முடியாது.

சாதியத்தின் தாக்கத்தை நேரடியாகத் தரிசிக்காமல், வன்னி போன்றே யாழும் இருந்திருக்கும் என்று நினைத்துத்தான் நீங்கள் கட்டுரை வடித்துள்ளதுபோல் தெரிகின்றது... சந்தியில் நின்று பேசுவது இழுக்கென்றால், சில ஐரோப்பிய நாடுகளில் நேரடியாகப் பேசுகின்றார்களே... அதை என்னவென்பது??

நான் தற்போது வசிக்கும் பிரித்தானியாவில் சாதிப் பெயர் நேரடியாக உச்சரிக்கப்படுவதில்லை. நேரடியாக சாதியை ஒரு பொதுவிடயமாகக் கதைப்பதில்லை.. எனினும் கல்யாணப் பேச்சுக்களில் நிறையவே பார்த்துள்ளேன். அதே நேரத்தில் ஒரு ஐரோப்பிய நாட்டுக்குச் சென்றபோது, நேரிடையாகவே பார்த்தேன்.. எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் என்னுடன் கதைத்து விட்டுச் சென்றபின்னர் (அறிமுகமில்லாதவர்கள் கூட ஐரோப்பாவில் தமிழர் என்று ஊகித்தால் வந்து தயங்காமல் கதைப்பார்கள்) கூட நின்ற ஒருவர் அவர் இன்ன ஊர், இன்ன சாதி என்று சொன்னார். இது பல தடவைகள் மீண்டும் அரங்கேறின. அது மட்டுமல்ல அங்கு பிறந்த பிள்ளைகளும் சாதிகளை நன்கு அறிந்துள்ளார்கள்.. ஒரு பெண்பிள்ளை (16 வயதிருக்கும்), தன் காதலனை (அவரும் ஐரோப்பாவில்தான் பிறந்தார்) என்ன சாதியென்று கேட்டுத்தான் காதலைத் தொடர்ந்ததை நேரே பார்த்த அனுவபம் உள்ளது.. இப்படியான விடயங்கள் புலம்நாடுகளில் நடப்பது மிகவும் அவமானகரமானது.. அதை இழுக்கென்று சொல்லி மூடிமறைப்பது மிகவும் ஆபத்தானது.

Link to comment
Share on other sites

முதலில் இங்கே மாடுகளுக்கு அப்படியான குறிகள் எதுவும் இல்லை என்று வாதிட்டார்கள். பின்பு நிதர்சன் பட்டிக்குறி இடுவார்கள் என்று சொன்னார்.

இப்பொழுது வேல் குறி இடுவதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நிதர்சன்! நீங்கள் வேளாள சமூகம் மட்டும் வாழும் பகுதியில் வாழ்ந்திருக்கிறீர்கள்: அதனால் அவர்களுடைய மாடுகளில் வேல் குறியை கண்டிருக்கிறீர்கள். வேளாள சமூகம் மட்டும் வாழுகின்ற பகுதியில் வாழ்ந்ததால்தான் உங்களுக்கு "சாதிப் பிரச்சனை" பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

நீங்கள் ஈழத்தில் 2004 வரை சாதி பற்றியே அறியவில்லை என்கிறீர்கள். உங்களுக்கு மாடுகளில் உள்ள குறிகள் பற்றி தெரிந்திருக்க நியாயம் இல்லை.

சரி! இன்னொரு தகவல் சொல்கிறேன். இதையாவது ஒத்துக் கொள்கிறீர்களா என்று பார்ப்போம்

புதுக்குடியிருப்பில் இருந்து சில மைல் தூரத்தில் முள்ளிவாய்க்கால் என்று ஒரு இடம் இருக்கிறது. அப் பகுதியில் வேளாள சமூகமும் கடற்தொழிலாள சமூகமும் அதிகமாக வாழ்கிறார்கள். வேளாள சமூகம் வாழுகின்ற பகுதியை "வெள்ளாம் முள்ளிவாய்க்கால்" என்றும் கடற்தொழிலாள சமூகம் வாழுகின்ற பகுதியை "கரையாம் முள்ளிவாய்க்கால்" என்றும் அழைப்பார்கள்.

நீங்கள் அங்கு வாழுகின்று பகுதிக்கு கடிதம் போடுகின்று போது வெறுமனே முள்ளிவாய்க்கால் என்று எழுதினால் போய்ச்சேராது. எந்த முள்ளிவாய்க்கால் என்று எழுத வேண்டும்.

நான் இது போன்ற தகவல்களை சொல்வதற்கு காரணம், எம்மிடம் உள்ள அழுக்குகளை ஒத்துக் கொள்ளவம் இனம் காணவும் நாம் பழக வேண்டும். அந்தப் பக்குவம் இருந்தால்தான், அழுக்குகளை களைவது குறித்தும் பேச முடியும்.

"சாதி இப்பொழுது இல்லை" என்று பீலா விட்டுக்கொண்டிருந்தால், சாதி தொடர்ந்தும் இருந்தே தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனுக்கு நிறையக் குழப்பம், அல்லது குழப்பும் எண்ணங்கள் இருக்கலாம். மாட்டிற்கு குறி வைப்பதே இல்லையே என்று நிதர்சன் சொல்லவே இல்லையே! அவர் சொன்னது, மாட்டிற்கு ஜாதி அடிப்படையில் குறி வைப்பதில்லை என்று. ஒவ்வொருவரும் தங்களின் மாடுகளை இனம் காண, குறி வைப்பார்கள். அது ஒவ்வொரு பெயரில் இருக்கும். ஆனால் எப்போதுமே சொல்லக் கூடியது என்னவென்றால், அது ஜாதி அடிப்படையில் அல்ல. மாட்டின் பின் புறத்தில் திருநீறு போல 3 கோடுவார்கள். அதற்கும் மதச் சாயம் பூசவில்லையா சபேசன்!

முள்ளிவாய்க்காலில் இப்படிப் பெயர்கள் உள்ளதா? நான் 3 வருடங்களுக்கு மேல், முள்ளியவளை, தண்ணீருற்று, அலம்பில், புதுக்குடியிருப்பு என்று உலாவித்திரிந்த போதிலும், இப்படி முள்ளிவாய்க்காலில் இடம் இருப்பதை இப்போது தான் அறிகின்றேன்.

முள்ளியவளையில் யாரும் ஜாதி கதைத்தில்லை. நான் தங்கியிருக்க இடம் தந்தவர்களாகட்டும், என்னோடு நெருக்கமான அனைவர்களாகட்டும் என்னை எச்சந்தர்ப்பதிலும், ஜாதி பற்றி அறிய முற்படவும் இல்லை. அதைக் கேட்கின்றமாதிரி மறைமுகக் கேள்வி ஏதும் கேட்கவுமில்லை.

உண்மையில் இச் சந்தர்ப்பத்தில், முள்ளியவளை மக்களை பெருமிதத்தோடு பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்   வாழ்க ❤️ வளத்துடன்
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.