Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .எனக்கும் அப்படி அனுபவங்கள் உண்டு அனால் இப்பொழுது அப்படியல்ல .வீட்டிலிருந்த படியே எழுதியதை இந்த உலகில் குறைந்தது ஒலு நூறு பேராவது படிக்க கிடைக்க செய்யமுடியும். அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்.என்ன சாத்திரி புலம்பகிறான் எண்டு நினைக்கிறீர்கள் உண்மைதான் புலம்புகிறேன் காரணம். ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம்என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.

புலத்தில் உள்ள சிலரோ தற்சமயம் தங்கள் புலைமைகளை எழுத்தில் காட்டுவதற்கு என்று சிலரும். இந்த சாதியை எதிர்க்கிறேன் என்கிற பெயரில் மீண்டும் அந்த சாதிஆயுதத்தை கூர்தீட்டி அதை எம்மவர் கைகளில் கொடுத்து எமக்குள் நாங்களே அடிபட்டு மடிந்து போகஎன்று ஒரு பெரிய சதியை தீட்டி சிலர் தலித்துகளிற்காக பேராடுகிறோம் என்றும் பறப்பட்டு இருக்கின்றனர்.அந்த போலி தலித்துகளிற்கான போராட்டத்தில் பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார்.ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்.இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும்.இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர்.

சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மாட்டை தொழுவத்தில் கட்டி அடிக்கவேணும்

அப்ப தான் சிந்தாமல் சிதறாமல் அடிக்க முடியும்"

சாதியம் என்ற மாட்டையும் தமிழீழம் என்ற தொழுவத்தில் தான் கட்டி அடி(ழி)க்க முடியும்

எனவே

தேசியம் என்ற கண்ணாடியை அனைவரும் அணிந்துகொள்ளுவோம்

அப்போதுதான்

சிங்கள பேரினவாதம் என்ற கொடிய அரக்கன் கண்ணுக்குத் தெரிய

நம்முள்உள்ள மற்றைய வேறுபாடுகள் சிறிதாகித் தெரியும்

புலத்தில் நாம் புலிப்பாய்ச்சல் செய்யவேண்டிய நேரமிது

புத்தியை அதற்காகத் தீட்டுவோம்

நாம் தாக்குதல் மனநிலை (offensive mode) இற்கு மாறி சிங்கள பேரினவாதத்தின் பிரச்சார யந்திரத்தை செயலிழக்கச் செய்ய வேண்டும்.

ஆறுதலாக அமர்ந்து 2000 வருடங்களுக்கு முன் சாதி எப்படித் தோன்றியது என்று வாதாடும் நேரம் இதுவல்ல.

கவனமாயிருங்கள்

2000 வருடங்களுக்கு முன் தோன்றிய சாதிப் பேயை நீங்கள் நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது

50 வருடங்களுக்கு முன் தோன்றிய பேரினவாதமும்

2 வருடங்களுக்கு முன் தோன்றிய பிரதேசவாதமும்

எமது தேசியத்துக்குச் சடங்கு பண்ணிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாத்திரி உங்களின் கட்டுரைக்கு.

தங்களின் மத எதிர்ப்பைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளவும், தங்களை சமூகத்தில் உயர்த்திக் காட்டவும் தான் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன. இதன் மூலம் தங்களைச் சமூக ஆர்வலராக காட்டிக் கொள்ளும் எண்ணம் இருக்கலாம். ஆனால் சமூகத்தில் எவ்வித பிரிவினைவாதங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பது குறித்து இவர்களுக்கு எவ்விதத்திலும், கவலையில்லை.

இங்கே, சில பிரபல்யப்படுத்தும் கூத்துக்களையும் அவதானிக்கலாம். ஒருவர் கட்டுரை எழுதுவார். மற்ற ஒருவர் தான் இங்கே பிரசுரிப்பார். ஆனால் எழுதியவரும் யாழ்கள உறுப்பினர் தான். இந்தக் கூத்தை எங்கே போய் முட்டிக் கொள்வது.

நாளைக்கு பொன்னாடை போர்த்திப் பெயர் வாங்க இது தானே நல்ல வழி. ஆனால் பொன்னாடை போர்த்துவதும், அக்காலத்தில் சைவமன்னர்மார்களே செய்தார்களாம்.

Edited by தூயவன்

தமிழரிற்குச் சரியான தலைமை இல்லாத காலம் ஒன்றிருந்திருக்கலாம். ஆதில் பிற மொழியார் தலைமைத்துவ வெற்றிடங்களை நிரப்பியிருக்கலாம். ஏன் தமிழன் சிந்திக்கத் தெரியாது கூட ஒரு காலத்தில் இருந்திருக்கலாம், இருந்திருக்கலாம் என்ன இருந்தான், அல்லாவிடின் தமிழ் அரசைச் சிங்களம் ஆளச் சம்மதித்தா இருப்பான் ?ஆனால் நடப்பது தமிழீழத் தேசியத் தலைவரின் காலம். இங்கு தமிழரல்லாதோர் தலைமை வகிக்கவேண்டிய வெற்றிடம் ஏதுமில்லை.

மேலும் வெறும் பிரசங்கங்களும் செப்படி வித்தைகளும் நடாத்திய பழைய காலத் தலைமை எங்கே செயலில் செய்து நிரூபித்து விட்டு, சொற்ப வார்த்தையில் விளக்குகின்ற இன்றைய நிலைமை எங்கே.

தமிழன் உலகெங்கும் பரந்து தொழில் நுட்ப ஆராய்ச்சி மையங்களில் பொறியியல் விற்பன்னர்களாகவும், அறிவியலில், மருத்துவத்தில், பொருளியலில், முதலீட்டில் என அனைத்துத் துறையிலும் கோலோச்சும் இன்றைய காலத்தில், பகுத்தறிவு பற்றித் தமிழனிற்கு வகுப்பெடுக்க முயலுது ஒரு கூட்டம். சிந்திக்கத் தெரியாத தமிழனா சிறப்புகள்கள் பெறுகிறான்?

மேற்குலகில் உள்ள, அடக்குமறைச் சிந்தனை பரம்பரையாகவுள்ள, மேதாவிக் களுகுகள் கூட தொழிலிடங்களில் தமிழனின் உயர்வை ஒடுக்க முடியாது திணறுகிறார்கள். கீபுரூவும் தமிழும் செம்மொழிகள் என்பதனால் தானோ தமிழனும் யூதன் போல் வியப்பேற்றித் தடையின்றி முன்னேறுகிறான் என மேற்கின் வலதுசாரிப் பத்திரிகைகளே மூக்கில் விரலை வைக்குது. நுPங்கள் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட இனமென்றும் அதனால் தான் அகதிகளாக புலம்பெயர்ந்தீர்கள் என்றும் கூறுகிறீர்கள் ஆனால் இந்த மேற்கில் உங்களின் வாழ்வியலைப் பாத்தால் வியப்புத் தான் வருகுதொளிய நீங்கள் பாதிக்ப்பட்ட படுகின்ற ஒரு இனமாக எமக்குத் தெரியவில்லையே என மேற்கின் கொள்கை வகுப்பாளர்கள் கூறுகையில்... மதநம்பிக்கையால் தமிழன் பகுத்தறிவின்றி அழிகிறான் என கொக்கரிக்குதுகள் சிலது.

தமிழன் மத்தைத் தனக்கேற்ற வழியில் தனது உயர்விற்கான நம்பிக்கைகாக ஏதோ ஒரு உளவியலில் பயன் படுத்துகிறான் விடுங்கள் என்றால் கேட்குதுகளா? இராமனும் அவனும் இவனும் எண்டு தமிழன் கும்பிடாத சாமி எல்லம் துணைக்கழைத்து விதண்டாவாதம் போடுதுகள். இதுகளிற்குச் சாதியமும் பிரச்சினை இல்லை சமூக நலனும் அக்கறை இல்லை, ஆரோ ஒண்டு கடந்தகாலத்தில் ஏதோ சொன்னதாம் எண்டு குருட்டுத்தன விசுவாம் மட்டுந்தான் இதுகளிற்கு.

இதுகளைத் திருத்தமுடியாது. ஆனால் ஒரு நிம்மதி இதுகளின் கூச்சலைக் கேட்பதற்கு பெரிதாய் ஆரும் எங்கும் தயாரில்லை.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அவர்களுக்கு வணக்கம்!

உங்கள் கட்டுரையில் பொதிந்து இருக்கும் விடயம் சரிதான். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இந்துத்துவம் வளர்ந்து வருகிறது. சாதி மதமற்ற தமிழ்த் தேசியத்தையே நாங்கள் விரும்புகிறோம். இது ஒரு கலந்துரையாடல்தான் நீங்கள் சொல்லுவது இங்கு நடக்காது கவலைப் படவேண்டாம். உதாரணமாக நெடுக்காலபோவான் தூயவன் போன்றவர்கள் இந்துமதப் பற்றாளர்கள் நானும் சபேசனும் இந்து மதத்தை எதிர்க்கிறோம் ஆனால் தமிழீழ விடுதலையில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன்தான் இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதியம் புலம் பெயாந்த நாடுகளில் இன்னும் இருப்பதால்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரம் ஒரு உண்மையை கூறிக் கொள்ள விரும்புகிறேன். சாதியத்தை எதிர்க்கும்போது நான் பல தடவை யோசிக்சிறேன் அதற்கு சாத்திரி குறிப்பிட்டதுதான் காரணம். அது மட்டமல்ல சாதி உணர்வு குறைந்து கொண்டு வருகிறது என்ற யதார்த்த உண்மை எனக்கு சரியாகவே படுகிறது. இருப்பினும் முற்றிலுமாக ஒழியவில்லை என்பதுதான் எங்களின் வருத்தம். ஒருவேளை கால ஓட்டத்தில் அது ஒழிந்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே!

ஆனால் இந்துத்துவத்தை எதிர்க்கும்போது நாங்கள் கொஞ்சமும் யோசித்தது கிடையாது. காரணம் அது வளர்ந்து கொண்டு வருகிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அது முழுவீச்சோடு பரவுகிறது. தமிழின அடையாளங்களை மங்கச் செய்கிறது. அதனால்தான் அதன் மீது எங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.

சாதியம் குறைந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்துத்துவம் வளர்ந்து கொண்டு வருகிறது. அதனால் தமிழினத்திற்கு ஏற்படும் பண்பாட்டு இழப்புக்களை எங்களால் காணக் கூடியதாக உள்ளது.

Edited by இளங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அவர்களே! ஷோபா சக்தியைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. தேசியம் கற்பிதம் என்று கூறும் அவரது கருத்தில் என்னைப் போன்றவர்களுக்கு உடன்பாடில்லை. ஆத நேரம் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களான சிவா சின்னப்பொடி, நக்கீரன் (கனடா) போன்றவர்கள் சாதியத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். சிவா சின்னப்பொடி, நக்கீரன் போன்றவர்களின் கருத்துக்கள் சரியாகவே படுகின்றன.

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

இன்று புலத்தில் சாதிகள் என்றால் என்னவென்றே தெரியமல் நாம் எல்லோரும் மனித சாதி என்று நினைத்து கொண்டிருக்கும் இளையசமுதாயத்தினரிடம் .மெல்ல செத்துகொண்டிருக்கும் சாதியை அதை எதிர்க்கிறேன் என்று சொல்லி கொண்டேஅதற்குள் மதத்தையும் இழுத்து அவற்றை இளையசமுதாயத்திடம் அறிமுகபடுத்தி அவர்கள் கைகளிலும் ஆயுதத்தை கொடுக்காதீர்கள்.காரணம் எமது இனவிடுதலையுடன் இந்த சாதிவிடுதலைக்காகவும் நாம் கொடுத்த விலை அதிகம் நன்றி சாத்திரி

புலத்தில் சாதி என்றால் என்னவென்றே தெரியாமல் நாம் எல்லாம் மனித குலம் என்று நமது இளைய சமூகம் நினைத்துக்கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வதும் இலங்கையில் இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையாது தமிழரும் சிங்களவர்களும் ஒற்றுமையாக இலங்கையர்கள் என்ற அடிப்படையில் வாழ்கின்றர்கள் விடுதலைப்புலிப்பயங்கரவாதிக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியின் கருத்துக்களுடன் நான் முழுவதுமாக உடன்படுகிறேன். இது பற்றி எழுதலாம் என்றிருந்தேன். சாத்திரி எழுதிவிட்டார் நன்றி.

எங்கள் தாயகத்தில் சாதிப்பாகுபாடுகள் இருந்தது உண்மை. அதன்பேரால் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும் உண்மை. புலத்தில்கூட அதன் பிரதிபலிப்புக்கள் உண்டு. ஆனால் சோபா சக்தி என்ற வக்கிரபுத்தி கொண்ட கிறுக்கன் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அது அழிந்து வருகிறது.

எனக்கு என் சாதிபற்றித் தெரியும் இருப்பினும் எனது தந்தை அளவுக்கு தெரியாது எனது பாட்டானார் எனது தந்தையை விட அதிகம் சாதி பார்த்திருப்பார். எனது மகளுக்கு தான் இலங்கைத்தமிழ் பெண் என்பது மட்டும்தான் தெரியும். இப்படியாக அருகி வரும் இந்த பாகுபாட்டை ஏன் வளர்க்க எத்தனிக்கிறார்கள்?

சோபா சகதிக்கு வேறு Platform கிடையாது. தலித் என்ற சொல்லை கட்டிப்பிடித்துக் கொண்டு திரிகிறார். ஒரு சிலர் அவரை தலித்துக்களின் தலைவராகக்கூட அரழைக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. முன்பு நம்மூர் கம்யூனிஸ்டுகள் மொஸ்கோவில் மழை பெய்தால் மழையின்றி வரண்டுபோயிருந்த யாழ்ப்பாணத்தில் குடைபிடிப்பார்கள். அதுபோல இந்தியாவில் பிரபலமடைந்து வரும் தலித் இயக்கங்களைப்பார்த்து பிரான்சிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தலித் இயக்கம் நடாத்த முற்படுகிறார்கள்.

இந்த சாதிப்பிரிவினை தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தை காயப்படுத்தும் என்பதால் தமிழர்களுக்குள் இருக்கும் சில கயவர்களால் நீருற்றி வளர்க்கபடுகிறது.

தமிழீழ அரசியல்துறையைச் சேர்ந்த ஒருவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று சோபா சகதி (சக்தி அல்ல சகதி) சத்தியெடுத்த கடதாசியைப்பார்க்கும்வரை எனக்கு தெரியாது. அவர் எச்சாதியை சேர்ந்தவர் என்று அறியும் நினைப்பே என்னிடமிருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சுபீட்சம், தேனி போன்ற இணையத்தளங்கள் அந்த உயரிய போராளியை சாதியின் பெயர்சொல்லி இழிவுபடுத்தின.

இன்னுமொன்று, எனது நண்பர் ஒருவர் தனது வலைப்பதிவை பார்வையிடுமாறு எனக்கு அதன் URL ஐ அனுப்பினார் அவரும் இந்த பெரியார் பேராண்டிகளில் ஒருவர். உணமையில் அந்தப்பதிவுகளை வாசிக்கும் வரை அவர் எந்தசாதி என்று எனக்குத் தெரியாது. அதை அறிய வேண்டிய அவசியமுமிருக்கவில்லை.

ஆக சாதிகளைச் சொல்லி மீள தமிழர்களை பிரிக்கப்பார்க்கிறீர்களா? இவர்களையிட்டு அவதானம் தேவை.

ஆறுமுகநாவலர் சாதி வெறியராக இருந்திருக்கலாம் அந்தக் குப்பைகளை கிளறி என்னத்தை காணப்போகிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை

புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம்.

1. பேனா என்பது .......... அதனால் எல்லோருமே எழதுகிறார்கள் என்னவெல்லாமோ எழுதுகிறார்கள்........... ஈழதமிழரை பொறுத்தவரை சா(தீ) யம் என்பது மெல்ல மெல்ல மறக்க பட்டு அதன் கூர்கள் மழுங்கடிக்கபட்டு அது புலத்திலும் நிலத்திலும் மறைந்து கொண்டிருக்கின்ற நேரம்.

2. ....பிரான்சில் தானும் ஒரு எழுத்தாளன் என்று அடையாளபடுத்தி கொண்டு சோபாசக்தி என்பவர் எழுதிதள்ழுகிறார். ஈழத்தில் தலித்துகள் என்கிற சொற்பதம் இருந்ததாக இவர்எழுத்துக்கள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன். இவர் எதிர்ப்பது உண்மையில் ஈழத்து மண்ணின் மேல்சாதியினரையல்ல அந்த போர்வையில் எல்லாவற்றிற்கும் மேலான எமது விடுதலை போராட்டத்தையே என்பது இவரது எழுத்தக்களை படித்தவர்களிற்கு நன்கு புரியும். இதற்கு மேல் இவரை பற்றி எழுதி இவரை ஒரு பெரியவராக்க நான் விரும்பவில்லை.

3. அடுத்ததாக சாதிகள் இந்து மதத்தாலும் அதன்வருண வேதத்தால்தாலும் தான் வந்தது எனவே இந்து மதத்தை எதிர்ப்போம் என்று பெரியார் பாதையில் சிலர். சரி இந்துமதத்தின் வரண வேதத்தால் தான் சாதிவந்ததாகவே இருக்கட்டும். இதை எழுதுபவர்கள் எத்தனை பேரிற்கு இந்த வருண வேதத்தை பற்றி தெரியும் அல்லது எத்தனை பேரிற்கு அது எழுதபட்டிருக்கும் மொழியான சமஸ்கிருதம் தெரியும் என்று பார்த்தால் எவருக்குமே சுத்தமாக தெரியாது. எப்போதோ செத்து போன சமஸ்கிருத மொழியில் எழுதபட்டதாக சொல்லபடுகின்றகின்ற சாதியத்தை மட்டும் சாக விடாமல் அதை எதிர்க்கிறேன் பேர்வழியென்று நீறூற்றிவழர்க்கிறீர்கள்.இந்

எனக்கு என் சாதிபற்றித் தெரியும் இருப்பினும் எனது தந்தை அளவுக்கு தெரியாது எனது பாட்டானார் எனது தந்தையை விட அதிகம் சாதி பார்த்திருப்பார். எனது மகளுக்கு தான் இலங்கைத்தமிழ் பெண் என்பது மட்டும்தான் தெரியும். இப்படியாக அருகி வரும் இந்த பாகுபாட்டை ஏன் வளர்க்க எத்தனிக்கிறார்கள்?

ஐயா நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறீர்கள் என்பதையிட்டு மிகவும் சந்தோசம். ஆனால் உங்களைப் போல எத்தனை அப்பாமார் இருக்கிறார்கள்?.சிங்களவர்களில் இனவாதம் பார்க்காத நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள்.அவர்கள் ‘இனவாதம் பாக்கிறது கொஞ்சப்பேர் தான். நாங்கள் அவை சொல்லுறதை பற்றி கணக்கிலை எடுக்காமல் ஒற்றுமையாக வாழலாம் எதுக்கு நீங்கள் உங்கடை பிரச்சனையை பெரிது படுத்தறியள்’; என்ன சொல்கிறார்கள்.ஆனால் சிங்கள பேரினவாதத்தால் ஏற்பட்ட பாதிப்பு தமிழர்களான எங்களுக்குத் தானே தெரியும்.அது போலத் தான் ஐயா சாதியத்தால் நேரடியாக பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தானே அதின்ரை வேதனையும் வலியும் தெரியுது. உங்கடை மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கோ ஒரு சாதி குறைந்த பொடியனை அல்லது பெட்டைய தங்கடை பிள்ளைகள் காதலிச்சிட்டால் தமிழ்தேசிய உணர்வோட அதை எத்தனை பேர் எற்றுக்கொள்ளுகிறார்கள்.ஒருத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. எல்லாரும் எழுதுறாங்கள் என்ற உமது கவலையில் சாதித்திமிர் புதுவேசமிட்டு விரக்தியாக வருகிறது.

2. ஈழத்தில் சாதி இருந்ததென்பதை ஷோபாசக்தி எழுதித்தான் எனக்கு தெரிய வந்தது என்று எழுதாத வரை உமது நேர்மையை மதிக்கிறேன். ஆனால் தலித் என எம்மை நாம் அழைப்பது உமக்கு ரொம்ப அசவ்கரியமாக இருப்பதை உமது எழுத்தில் சொல்லியுள்ளீர். சாத்திரி நைனாருக்கு தலித் என்பதன் வரலாறு தெரியாவிட்டாலும் பள்ளர், பறையர், நளவர், கரையார் என்பது தெரிந்திருக்கும். ஆரம்பத்தில் யாழ் வெள்ளார் அப்படிதான் எம்மை அழைத்தார்கள். பின்பு நாமாக எம்மை சிறுபான்மை தமிழர்கள் என்று பிரகடனப்படுத்தினோம். அதன் பின்பு இலக்கிய தளத்தில் எழுதப்பட்ட 'பஞ்சமர்' என்பது அரசியல் தளத்திலும் பேசப்பட்டது. இன்று எம்மை தற்போதைய அரசியல் சூழலில் தலித் என்று பிரகடனப்படுத்துகிறோம். தமிழ் ஈழம் என்ற சொல்லுக்கு வரலாறு தேடாதவை தலித் என்றவுடன் உந்த சொல்லின் மூலம் என்ன கேட்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

சிலரின் வயிற்றுப் பிரச்சினைகள் ஒதுங்கக் கிடைத்த வாசல்கள் தான் புலி எதிர்ப்புக் கோட்பாடு.

எனவே போராட்டத்தின் ஒன்று திரண்ட மக்கள் சக்தியை சிதற வைப்பதற்காக சமூகப் பிரச்சினையின் பால் முதலைக் கண்ணீர் வடிக்கும் இவர்களது அநுதாபம்.

ஆரம்ப பதிவுகளிலேயே பார்த்தோம் இந்த தலித் என்பவரின் தேசப் பற்றை, இப்போது சமூகப் பிரச்சினைகளின் பால் அவருக்குள்ள ஈடுபாட்டை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்கிறார்.

எனக்கொரு சந்தேகம் இந்த தலித்மேளம் உள்ளூரா, இல்லை அயல் நாட்டானா? ஏன் என்றால் தலித் எமது நாட்டில் வழக்கத்தில் இல்லாத சொல்லல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறீர்கள் என்பதையிட்டு மிகவும் சந்தோசம். ஆனால் உங்களைப் போல எத்தனை அப்பாமார் இருக்கிறார்கள்?.சிங்களவர்களில் இனவாதம் பார்க்காத நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள்.அவர்கள் ‘இனவாதம் பாக்கிறது கொஞ்சப்பேர் தான். நாங்கள் அவை சொல்லுறதை பற்றி கணக்கிலை எடுக்காமல் ஒற்றுமையாக வாழலாம் எதுக்கு நீங்கள் உங்கடை பிரச்சனையை பெரிது படுத்தறியள்’; என்ன சொல்கிறார்கள்.ஆனால் சிங்கள பேரினவாதத்தால் ஏற்பட்ட பாதிப்பு தமிழர்களான எங்களுக்குத் தானே தெரியும்.அது போலத் தான் ஐயா சாதியத்தால் நடத்த காரணமாயிருக்கு.

ஒரு வசதி படைத்த குடும்பம் வெறும் ஏழை என்ற காரணத்தால் தன் உறவுக்குள் கூட பெண் எடுக்காமல் வெளியால் பார்க்கிறார்கள். இந்தக் குற்றத்துக்கு யார் பொறுப்பு?

படித்தவன் படிக்காதவனை கேவலமாகப் பார்க்கிறான் இந்தக் குற்றத்துக்கு யார் பொறுப்பு?

மனித இயற்கையின் உணர்வியல்பு இப்படியாகவே இருக்கிறது.

சாதிவகுப்புக்கள் ஏணிப்படிகளாக இருக்கிறது, கடைசிப்படிக்கு மேலே உள்ளவனுக்கு கூட தனக்கு கீழே உள்ளவனை அணைக்க வெறுக்கிறான், மேலே உள்ளவனை ஏன் இந்த பாக்குபாட்டு பாதகம் என்கிறான்.

அப்போது இவனிடம் உள்ள இந்த சாதிவெறிக்கு யார் பொறுப்பு என்று சொல்ல போகிறீர்கள்?

என் இளமையின் அநுபவங்களை வைத்து நான் என்னுள் பார்க்கிறேன். என்னுள் இருக்கும் அந்த வகுப்பு இடைவெளியின் மதிப்பை சொல்லித்தரும் அலகு என்ன?

தாழ்ந்த பொருளாதார வலயங்களுக்குள் கிடக்கும் அவர்களது சீவியங்கள், சமூகத்தின் மதிப்பை இழக்கவைக்கும் ஏழ்மை நிலை.

எனவே பழையவர்களின் நெஞ்சுக்குள்ளே அந்த பழைய அலகு வேற்றுமைக்கு முழம் போட்டுக் கொண்டேதான் இருக்கும், ஆனால் வருங்கால சந்ததியின் இந்த அலகு இந்த வர்க்கபேதம் அறியாதது.

பொருளாதார மலர்ச்சி அந்தக் காயங்களைக் குணப்படுத்தி இருக்கும்.

அதுவரைக்கும்:

தன்மனைவியின், பிள்ளைகளின் உணர்வுகளின் நியாயதன்மையைக்கூட மதிக்காதவர்களிடத்தில்

சாதிக்கு நீதி தேடுவது பொருத்தமில்லாதது. சட்டத்தின் எல்லைக்குள் இருப்பதை மட்டும் தான் எம்மால் செய்யலாம்.

//சோபா சகதிக்கு வேறு Platform கிடையாது. தலித் என்ற சொல்லை கட்டிப்பிடித்துக் கொண்டு திரிகிறார். ஒரு சிலர் அவரை தலித்துக்களின் தலைவராகக்கூட அரழைக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. முன்பு நம்மூர் கம்யூனிஸ்டுகள் மொஸ்கோவில் மழை பெய்தால் மழையின்றி வரண்டுபோயிருந்த யாழ்ப்பாணத்தில் குடைபிடிப்பார்கள். அதுபோல இந்தியாவில் பிரபலமடைந்து வரும் தலித் இயக்கங்களைப்பார்த்து பிரான்சிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் தலித் இயக்கம் நடாத்த முற்படுகிறார்கள்.

இந்த சாதிப்பிரிவினை தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தை காயப்படுத்தும் என்பதால் தமிழர்களுக்குள் இருக்கும் சில கயவர்களால் நீருற்றி வளர்க்கபடுகிறது.

தமிழீழ அரசியல்துறையைச் சேர்ந்த ஒருவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று சோபா சகதி (சக்தி அல்ல சகதி) சத்தியெடுத்த கடதாசியைப்பார்க்கும்வரை எனக்கு தெரியாது. அவர் எச்சாதியை சேர்ந்தவர் என்று அறியும் நினைப்பே என்னிடமிருக்கவில்லை. அதனைத் தொடர்ந்து சுபீட்சம், தேனி போன்ற இணையத்தளங்கள் அந்த உயரிய போராளியை சாதியின் பெயர்சொல்லி இழிவுபடுத்தின.//

சாத்திரியின் கருத்தை நான் வரவேற்கிறேன்,

சோபா சக்தி சாதி பற்றிப் பேசட்டும் அவன் விசரன், நாங்கள் பேசாம இருப்பம், பிரச்சினை தானப் போயிடும்.

ஏன் புஸ்பராசா புத்தகம் எழுதட்டும், நாங்கள் பேசாம இருக்கலாம் தானே? ஏன் அதுக்கு ஒரு பதிற் புத்தகம் எழுதவேணும். நாங்கள் எனது பொய் சாட்சியம் எண்டு ஏன் வேலை மினக்கெட்டு புத்தகம் எழுத வேணும்.இதால ஒருத்தருக்கும் யார் எண்டு தெரியாம இருந்த புஸ்பராசவுக்கு விளம்பரம் கிடைச்சிட்டுது.

நாங்கள் எல்லாரும் எங்கட எங்கட வேலையைக் குடும்ப அலுவல்களைப் பாத்துக் கொண்டு இருப்பம்,சும்மா தேசியமும் சாதியும் எண்டு ஏன் வேலை மினக்கெட்டு எழுதுவான்?

நாங்கள் வேலை மினக்கேடு எழுதிறது எங்களப் பிரபலமாக்கத் தானே.பிரபலமாக்கி என்னத்தைக் காணப்போகிறம்?

சிலரின் சொந்த கோப தாபங்கள் இவ்வாறு தனி நபர் தூற்றலாக வருவது அவர்களின் கருதியல் நிலை வறட்சியே அன்றி வேறொன்றும் அல்ல.இது யாழ்க் காளத்திற்கு புதிதான விடயமும் இல்லை.

பேசாம புலத்தில் தங்கட தங்கட அலுவல்களைப் பாத்துக் கொண்டிருக்கிற அறிவுஜீகள்,புலமையாளர்களைப்ப

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இப்போ அதிகம் இடம் பெறும் சொல் சாதியம் ஆகத்தான் இருக்கு

சாதியத்தை பற்றி பேசவே பயந்து பூசி மெழுகி அப்படி ஒன்று இல்லவே இல்லை என்ற மனேபாவத்தோடு நடந்து கொண்டால் அது பிரதேசவாதம் போல் ஒரு பலவீனமாகவும் எதிரிக்கு ஆயுதமாகவும் மாறிவிடும் என்ற ஆதங்கம் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு தரப்பிற்கு.

ஆனால் அதனால் தூண்டப்படும் சாதியம் பற்றிய விவாதங்கள் எல்லாம் சரியான திசையில் போகவில்லை என்பதால் அது எம்மை பிரித்தாள ஒரு ஆயுதமாகிவிடும் என்று தேசியத்தை ஆதரிக்கும் இன்னொரு தரப்பினர் பயப்படுகிறார்கள்.

சாதியம் பற்றிய விவாதங்களை சரியான திசையில் கொண்டு போக முடியாது திணறுவதே எமது பலவீனத்தின் தெளிவற்ற நிலைகளின் வெளிப்பாடே. கேவலம் நாமாக வலிந்து ஆரம்பித்த விவாதப் பொருள் ஒன்றையே ஆக்கபூர்வமான திசையில் கொண்டு போக முடியாது திண்டாடுகிறோம். எதிரியின் initiative இல் ஒன்று தொடக்கப்பட்டால் அதை எப்படி காத்திரமாக எதிர்கொள்ளப் போகிறோம்?

யாழ்களத்தில் இப்போ அதிகம் இடம் பெறும் சொல் சாதியம் ஆகத்தான் இருக்கு

உண்மைதான். சாதி, சாதியம், தலித்தியம் என்று வந்துவிட்டால் ஆளுக்கால் மல்லுக்கட்டிக் கொண்டு கருத்து எழுதுகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை. விரைவில் நான் தலித்தியம் டாட் காம் (www.தலித்தியம்.com) என்ற ஒரு பெயரில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கலாமா என்று இப்போது தீவிரமாக யோசிக்கின்றேன்! இதன்மூலம் நிறைய வாசகர்களை கவர முடியும் என நினைக்கிறேன்! :rolleyes:

யாரங்கே? வெளியே மிதக்கும்வெளி அய்யாவை (1) அழைத்து வாருங்கள். மாதம் மும்மாரி மழை பொழிகிறதோ இல்லையோ அமெரிக்கா-ஈராக், இஸ்ரேல்-பலஸ்தீனம், இலங்கை-புலிகள், தலித்-பார்ப்பனியம், பின்நவீனத்துவம்-முன்நவீனத்துவம் என்று வலையுலகப் பெருமக்கள் போர் (2) அடித்துப் போயிருக்கையில், இதையெல்லாம் தாண்டிப் புனிதமான மன்னர் காலத்திற்கு பனங்காட்டுநரிகள் எம்மை அழைத்துச் செல்ல வழிசமைத்த வள்ளல் அல்லவா அவர். பா(சி)ச உணர்வுகளின் சைவத் தமிழ் வெள்ளாளத் தோள்கள் தினவெடுத்துப் பொங்கியெழ வைத்த மிதக்கும் வெளி அய்யாவுக்கு ஒரு பரிசு தர அழைக்கின்றேன்.

அன்று இமயத்திலே சேரன் கோவணம் பறந்த அந்தக் காலம் தெரிகிறது (3). ஆகா எத்தனை கொடிகள் !! பிறந்து, வளர்ந்த மண்ணைவிட்டு 24 மணிநேரத்தில் உடுத்த துணியுடன் முஸ்லீம்மக்கள் துரத்தப்பட்டபின், சோழர்கொடி ஈழத்தில் கம்பீரமாக அசைந்தது (4). தமிழ்மக்களுக்கு முழுதாக மொட்டை (5) போட்டபின் அண்டைநாட்டு ஆதரவுடன் பல்லவர் கொடி ஈழத்தில் ஏறியது. கடலால், தரையால் வானால் கொலைக்கரங்கள் நீட்டி குருதி குடித்தபடி ஈழத்தில் விஜயபாகுக்களின் கொடியும் ஏறியது.

ஆண்ட பரம்பரைகள் ஏராளம். அவையெல்லாம் மறுபடி பறுபடி எம்மை ஆள நினப்பதில் என்ன குற்றம் கண்டீர்?நீரென்ன மாமனா மச்சானா? அல்லது எங்கள் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தீரா?? (6)

கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ். (அப்போது கக்கூசுக்குப் போயிருந்தால் எதனால் குண்டி துடைத்திருப்பார்கள் (7) என்று துரோகத்தனமாகக் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்கவேண்டாம்). அதற்கும் முன்னாலுக்கும் முன்னால் தோன்றியது சைவம். அதன்மீதா கைவைக்கின்றீர்கள்.

ஆண்ட கதைகளை கிளறியெடுக்க வழிசமைத்த பதிவுபோட்ட மிதக்கும் வெளி அய்யாவே, உமது முஸ்லீம் திமிரைப் பாராட்டி இதோ ஒரு கவிதையைப் பரிசாக அளிக்கிறேன். இந்தாரும். (இங்கே மண்டபத்தில் எழுதிக் கொடுத்தார்கள்)

மீண்டும் மீண்டும்

கனவாய்.. பழங்கதையாய்..

பட்டியில் மாடாய் மீண்டும் நாங்கள்.

பருவம் தவறாமல்,

பறுவத்தில்

கத்தினால் மட்டுமே,

அவன் “அதுக்கும்” விடுவான்.

புல்லை மட்டுமே எமக்குக் காட்டுவான்.

எல்லாப் பாலையும் அவனே கறப்பான்.

எங்கள் கன்றுகள்… (?)

வெறும் முலை சப்பும்!

எங்களிற் பலரிடம் கேள் இதைப் பற்றி

சொல்லுவர்:

பிறவிப்பயனை முழுதாய் அடைந்ததாய்.

பாலைக் குடித்த அவனின் பிள்ளைகள்

பள்ளியில் மீண்டும்

முப்பாட்டன் படித்ததை

காது கிழிய அழுத்திப் படிக்கும்:

“பசு ஒரு சாதுவான பிராணி”

“பசுவுக்கு நான்கு கால்கள் உண்டு”

“பசு கன்று போடும், சாணமும் போடும்”

“பசு பால் தரும் (?)”

இது,

காப்பியமாகத் தொடர்ந்து வளரும்.

தமிழ்க்கொடி பறந்து வானை அளையும்.

“அளைஞ்சிட்டுப் போ” (8)

அடிக்குறிப்புகள்:

1. நன்றி: பாலா

2. போர்: Bore, War

3. அன்பே வா படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆரின் பாடலைத் தழுவியது.

4. புலிகளால் முஸ்லீம் மக்கள் யாழிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

5. இந்திய அரசின் துணையுடன் ஈபிஆர்எல்எவ் பலவந்தமாக மக்களை லொறியில் அள்ளிக் கொண்டு போய் மொட்டையடித்து படைக்குச் சேர்த்தது.

6. கட்டப்பொம்மனில் சிவாஜி பேசியதில் நினைவில் இருந்தது.

7. ஒஸ்ரேலியாவிலிருந்து வெளியான அக்கினிக்குஞ்சு சஞ்சிகையில் எஸ்.பொ எழுதியது

8. இரா.றஜீன்குமார் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப்

http://porukki.weblogs.us/2007/02/24/kodi_parakkuthu/

மேலே பொறுக்கி உணர்வுகள் ஆருரன் எழுதியதற்கு எழுதிய எதிர்ப் பதிவு, சாத்திரி இது எந்த வகையில் செல்கிறது என்பதை வாசித்து விளங்கும் பக்குவம் உமக்கு இருக்குன்மென்று நம்புகிறேன்.

இவ்வாறான ஒரு பாதையில் தான் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் எதிரிகளால் காட்டப் படப்போகிறது என்று நான் எழுதியவற்றிற்கு பொறுக்கியின் பதிவு கட்டியம் கூறி உள்ளது.

நாங்கள் பேசாம இருப்பம்.அவங்கள் பேசட்டும்.எல்லாம் தன்னால நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். சாதி, சாதியம், தலித்தியம் என்று வந்துவிட்டால் ஆளுக்கால் மல்லுக்கட்டிக் கொண்டு கருத்து எழுதுகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை. விரைவில் நான் தலித்தியம் டாட் காம் (www.தலித்தியம்.com) என்ற ஒரு பெயரில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கலாமா என்று இப்போது தீவிரமாக யோசிக்கின்றேன்! இதன்மூலம் நிறைய வாசகர்களை கவர முடியும் என நினைக்கிறேன்! :rolleyes:

ஏன் உங்கடை செல்வன் தொடருக்கு வந்ததை விடவோ?

ஏன் உங்கடை செல்வன் தொடருக்கு வந்ததை விடவோ?

அது வியாபாரம்! இது சேவை! :P :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலித்து அய்யா நிங்கள் கேட்டதற்கு பதில்கள் 1) எல்லாரும் எழுதிறார்கள் என்பது அல்ல எனது கவலை அவர்கள் என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்பது தான் எனது கவலை

2) சோபா சக்தியின் புத்தகங்களை பாரிசில் உள்ள கடைகளில் வாங்கி படிக்க சொன்னீர்கள் அவற்றை நான் படித்து தான் எழுதுகிறேன் அவரின் கெரில்லாவும் ம்.....என்கிற புளுகு புனைகதைகள் தான் அவரது இலக்கியங்கள் என்று நீர் நினைத்தால் நான் என்ன செய்ய முடியும் அது மட்டுமல்ல சோபா சக்தியை பற்றி அவரது புத்தகங்களில் படித்துதான் நான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை காரணம் அவரை நான் ஊரிலேயே நன்றாக அறிவேன் அவரை மட்டுமல்ல அவரது குடும்பத்தையும் தான்

3)சாதி இருந்ததை பற்றி சோபா சக்தியின் புத்தகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவில்லை தலித் என்கிற சொற்பதம் ஈழத்தில் பாவிக்க பட்டது இல்லை என்பதை தான் குறிப்பிட்டிருந்தேன் புரியா விட்டால் கட்டுரையை இன்னொரு தடைவை படிக்கவும்.

4)சாதிகளை ஆரியன் மட்டுமல்ல நாமும் தான் உருவாக்கினோம் அதை நாம் தான் அழிக்க வேண்டும் என்று எழுதியதில் என்ன தவறு அதை பற்றியே எழுதி கொண்டிராமல் அதை இல்லாமல் பண்ண நடைமுறையில் நீர் என்ன செய்தீர் என்று கூறும்

5)வழிபாட்டு தலங்களில் இந்து மதத்தை தவிர ஈழத்தில் எத்தனை கிறீஸ்தவ தேவாலயங்களிலும் அவை பின் பற்ற பட்டு வந்தது என்னால் ஆதாரங்களுடன் நிருபிக்க முடியும்

6)உம்மை போன்று சாதிகள் பெயரை இன்னமும் சொல்லி கொண்டிருப்பவர்களிடையே சாதி குறை்ந்து வரகிறது என்று சொன்னால் அது பம்மாத்து ஆக தான் இருக்கும்

கடைசியாக ஒன்று ஓசி பேப்பர்களில்தான் எங்களால் ஓசியாய் எழுத முடியும் காரணம் சோபா சக்தியை போன்று புரட்டுகதைகளை எழுதி அதைவிற்று ஈழ போராட்டத்தையும் சேத்து விற்று காசு சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு இன்னமும் வரவில்லை

உண்மைதான். சாதி, சாதியம், தலித்தியம் என்று வந்துவிட்டால் ஆளுக்கால் மல்லுக்கட்டிக் கொண்டு கருத்து எழுதுகிறார்கள். எனக்கு இவர்கள் என்ன எழுதுகின்றார்கள் என்றே புரியவில்லை. விரைவில் நான் தலித்தியம் டாட் காம் (www.தலித்தியம்.com) என்ற ஒரு பெயரில் ஒரு இணையத்தளத்தை உருவாக்கலாமா என்று இப்போது தீவிரமாக யோசிக்கின்றேன்! இதன்மூலம் நிறைய வாசகர்களை கவர முடியும் என நினைக்கிறேன்! :rolleyes:

இந்த களத்தில தாயகம் எண்ட பகுதியில் ஈழவன் 85 என்பவருக்கு லக்கி 007 என்பவர் விடுத்த மிரட்டல் கடிதம் பார்த்தேன் தயவு செய்து அதை ஒருக்கால் எல்லோரும் படிச்சுக் பாருங்கோ. இங்கே புலம் பெயாeத நாட்டில இப்படிப்பட்ட மனநோயாளிகளும் இருக்கினம் என்டது தெரியும்

இந்த களத்தில தாயகம் எண்ட பகுதியில் ஈழவன் 85 என்பவருக்கு லக்கி 007 என்பவர் விடுத்த மிரட்டல் கடிதம் பார்த்தேன் தயவு செய்து அதை ஒருக்கால் எல்லோரும் படிச்சுக் பாருங்கோ. இங்கே புலம் பெயாeத நாட்டில இப்படிப்பட்ட மனநோயாளிகளும் இருக்கினம் என்டது தெரியும்

அந்த கடிதம் எங்கே இணைக்கப்பட்டுள்ளது? தேடிபார்த்தேன், காணவில்லை. அதன் லிங்க்கை இணைத்துவிட்டால் கடிதத்தை எல்லோரும் வாசிக்ககூடியதாக இருக்கும்.

நான் 20 வருடங்களாக பிரான்ஸில் வசிக்கிறேன். என் குடும்பத்தவர்களில் பெரும்பான்மையினரைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்கிறேன்.

1) எல்லா விரதங்களையும் தவறாமல் பிடிப்பார்கள். ஆனால் சைவ சமயத்தைப் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. சிலருக்கு ஒரு தேவாரம் கூடத் தெரியாது. எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு கடவுளை வணங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

2) விடுதலைப் போராட்டம் என்பது புலத்திலுள்ளவர்களிடம் பணம் பறிக்கும் தொழில். பிரபாகரன் போராளிகளை போருக்கு அனுப்பிவிட்டு சொகுசாக இருக்கிறார்.

3) சாதி. இந்த விசயத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள். எந்த ஊரில் எந்த திசயில் எந்த சாதியினர் உள்ளனர் என்பது இவர்களுக்கு அத்துப்படி.

அந்த கடிதம் எங்கே இணைக்கப்பட்டுள்ளது? தேடிபார்த்தேன், காணவில்லை. அதன் லிங்க்கை இணைத்துவிட்டால் கடிதத்தை எல்லோரும் வாசிக்ககூடியதாக இருக்கும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18895

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.