Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"இலங்கையை மற்றுமொரு சிங்கப்பூராக மாற்றுவோம்" - சீனா உறுதி

Featured Replies

"இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக மாற்­றுவோம்" - சீனா உறுதி

இலங்­கையின் நலனில் சீனா அக்­க­றை­யுடன் உள் ளது. எதிர்­வரும் 15 ஆண்டு­க­ளுக்குள் இலங்­கையை மற்­று­மொரு சிங்­கப்­பூ­ராக அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு ஏற்ற வகையில் சீனா செயற்­ப­டு­கின்­றது. இதற்கு தேவை­யான அனைத்து உத­வி­க­ளையும் தொடர்ந்தும் வழங்­குவோம்  என  இலங்­கைக்­கான சீன தூதுவர் யூ ஷியான்­லியாங் தெரி­வித்தார். 

சீன உதவி திட்­டத்தின் கீழ் ஆயிரம் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு1.8 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான பாட­சாலை உப­க­ர­ணங்­களை வழங்கும் நிகழ்வு தங்­கா­லையில் நடைப்­பெற்­றது. இதன் போது உரை­யாற்றும் போதே சீன தூதுவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில் ,

இலங்கை சீனாவின் மிகச் சிறப்­பான நண்­ப­ராகும். இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான நட்பு 70 ஆண்­டு­க­ளுக்கும் மேலான பழை­மை­யான ஒன்­றாகும். இரு நாடு­களின் நீண்­ட­கால உற­விற்கு கார­ண­மா­கிய இறப்பர்- அரிசி ஒப்­பந்­தத்தை  இரண்டு நாடு­களின் மக்­களும் நன்­றாக அறி­வார்கள். இந்த நட்பின் அடை­யா­ள­மாக கடந்த பல ஆண்­டு­க­ளாக சீனா தனது அனைத்­து­லக உதவி திட்­டத்தில் அதி­கூ­டிய பங்கை இலங்­கைக்கு வழங்கி வரு­கின்­றது. இலங்­கையின் அபி­வி­ருத்தி மற்றும் இந்த மக்கள் மீது சீனா­விற்கு தனிப்­பட்ட அக்­க­றையும் பொறுப்பும் உள்­ளது.

தற்­போ­தைய சூழலில் இலங்­கைக்கு அபி­வி­ருத்தி என்­பது மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான ஒன்­றாகும். ஆகவே நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­துடன் மக்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும். இலங்­கையின் தென்­ப­கு­தியில் தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழ­கத்தை ஆரம்­பிக்க சீனா ஒத்­து­ழைப்பு வழங்கும். இந்த பகுதி வாழ் இளை­ஞர்­களின் தொழில்­நுட்ப ஆற்­றலை விருத்தி செய்தல் , மீன்­பிடி மற்றும் ஏனைய துறை­களில் தொழில்­நுட்ப வச­தி­களை அதி­க­ரித்தல் போன்ற விட­யங்­க­ளுக்கு சீனா உதவு உள்­ளது. 

சீன - இலங்கை நட்­பு­றவு சங்­கத்தின் மூலம், 1300 இலங்கை மாண­வர்­க­ளுக்கு சீனா புல­மைப்­ப­ரிசில் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளது.  இது எதிர்­கா­லத்தில் 2000 ஆக அதி­க­ரிக்­கப்­ப­தற்கு சீன அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இவ்­வாறு பல­வேறு திட்­டங்கள் தொடர்பில் சீனா மிகவும் ஈடுப்­பா­டுடன் செயற்­ப­டு­கின்­றது. குறிப்­பாக தென்­ப­கு­தியில் உள்ள மீன­வர்­க­ளுக்­கான வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தற்­கான திட்­டத்தை ஆரம்­பிக்­கவும் உத்­தே­சித்­துள்­ளது. 

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான  உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

http://www.virakesari.lk/article/23457

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

சீனாவின் ஷங்காய் நக­ரத்தைப் போன்று இலங்­கையின் தென்­ப­கு­தியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு சீனா தொடர்ந்தும் தேவையான  உதவிகளை வழங்கும். அடுத்த 15 ஆண்டுகளில் இலங்கை சிங்கப்பூரின் நிலைக்கு தரமுயர்த்துவதற்காக சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் . இலங்கையின் நலனில் சீனா அக்கறையுடன் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

கிந்தியாக்காரர் வடபகுதியை இப்பிடித்தான் முன்னேற்றி வைப்பினம்....

Ähnliches Foto

சீனாக்காரன் அப்பிடி இப்பிடி முன்னேற்றுவம் எண்டாவது சொல்லுறான்....ஆனால் இதுகளை பாருங்கோ.... தோட்டக்காணியள்ளை சமாதி கட்டிக்கொண்டு திரியுதுகள்.....

DHlH4DZXsAAh4to.jpg

DHlHt8SW0AADxSP.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூராக இலங்கை மாறினால் அங்கு தமிழனுக்கும் ஒர் இடமிருக்கும்... :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

சிங்கப்பூராக இலங்கை மாறினால் அங்கு தமிழனுக்கும் ஒர் இடமிருக்கும்... :grin:

இலங்கை சிங்கப்பூராக மாறினால் அதில் தமிழனின் உழைப்பு அதிகமிருக்கும்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அவன் சிங்கப்பூராக மாற்றட்டும் வடக்கு கிழக்கை யார் மாற்றப்போகிறோம் என்று வரப்போகிறார்களோ தெரியாது  ஆனால் வருபவனையும் விடமாட்டோம் என்று கொஞ்சம் கங்கணம் கட்டிக்கொண்டு திரியுது அரசியல் வட்டாரத்தில் 

எல்லாத்துக்கும் கமிஷன் கேட்கிற கூட்டமும் இருக்கு  இன்னும்  பின்ன வட கிழக்கு எப்ப அபிவிருத்தி காணும் யுத்தம்  முடிந்த காலம் தொடக்கம்  வெளிநாட்டில் வசிக்கும் எத்தனையோ பேர் கட்டியெழுப்ப நினைத்திருந்தால் இந்த நேரம் வடகிழக்கு தனி ஓர்  அலகாக தெரியும் இலங்கையில்  ஆனால் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனி ஒருவன் said:

முதலில் வடகிழக்கில் தேவையில்லாமல் குந்தியிருக்கும் ராணுவம் வெளியேறட்டும் போலிஸ் என்பவர்கள் சாதி வளர்ப்பிலும் ,சமூக விரோதிகளையும் ,கஞ்சா விற்பவர்களையும் பாதுகாப்பது மாறி மக்களுக்கு சேவை செய்பவர்களாக மாறனும் இவ்வளவும் நடக்க வக்கில்லை அரசியல் வாதிகள் மாறட்டும் என்று கிண்டி விளையாட வேண்டாம் மேல் சொன்னது நடந்தாலே புலம்பெயர் கூட்டம் தானாகவே தாங்கி பிடிக்கும் வடகிழக்கை ஆனால் நடப்பது என்ன போலிஸ் உதவியுடன் யாழில்  உள்ள பாடசாலைகளுக்கு  கஞ்சா விப்பது முஸ்லிம் நபர் அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும் தெரிந்தும் நல்லாஅழியட்டும் தமிழன் எனும் இனவாத போக்கு இருக்கும் மட்டும் இலங்கை சிங்கபூர் ஆவது கனவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இன்னும் எத்தினை வருஷம் வரைக்கும் சொல்ல போறியள் பொலிஸிம் இருக்கும் நீங்கள் இப்படி இன்னும் பல வ்வருடம் பல்லவி பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் பிறகு காத்தான்குடி அபிவிருத்தி அடையுது அவன் கள்ளக்காணீ பிடிக்கான் என்று இன்னும் கத்திக்க்பொண்டும் திரியலாம் 

யாராவது வெளிநாட்டு தமிழன் அல்லாத எவனாவது வந்து ஏதாவது தொழிற்சாலைகளை அமைத்தால் தான் உண்டு தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியாவது காணும் காடாய் இருக்கிற நிலம் கட்டிடமாகவாவது மாறும் 

அப்ப கஞ்சா விற்பது பொலிசா இதென்ன புது  புரளி tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனி ஒருவன் said:

தனி 
எது காலியாகாட்டிலும் பரவாயில்லை,  ஆனால் ஊழல் என்பது கட்டாயமாக காலியாக்கப்பட வேண்டிய விடயம் ,மாகாண சபையாக இருந்தாலும் சரி ,நாட்டு முழுமைக்கும் என்றாலும் சரி ஊழல் என்பது நாட்டின் சொத்தாக இருக்கும் இக்காலகட்டத்தில் புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து அபிவிருத்தி செய்ய சொல்வது ,அவர்கள் சிறுக சிறுக சேர்த்தவற்றை  ஊழல் முதலைகளுக்கு தின்னக்கொடுப்பதாகவே அமையும், சிங்கப்பூர் என்பது வாயால் வடை சுட்டு உருவாகிய நாடில்லை அங்கே அதிகபட்ச தண்டனை  பொருளாதார குற்றத்திற்கே (Economical Offence)
 வழங்கப்படும் . ஏனென்றால் இந்தக்குற்றம் மற்றைய எல்லக்குற்றங்களையும் துணைக்கு அழைத்துவரும் (இங்கேயும் தங்களது ஊழல்களை மறைக்க  இனவாதம் தூண்டப்படுவதை  போன்று)     
 எனவே புலம் பெயர் உறவுகளை இங்கே  அழைத்து பிறகு சிவாஜி போன்று ஒத்தை ரூபாயுடன் திருப்பி அனுப்ப வேண்டாமே 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உருப்படியான தொழிலை தொடங்கி வெற்றிகரமாக அதை நடத்த.. அந்தத் தொழிலுக்கான இடம் எடுப்பதில் இருந்து.. அதன் இலாபத்தில்.. ஒரு பங்கு வரை.. சிங்கள ஆட்சியாளர்களுக்கும்.. நிர்வாகிகளுக்கும்.. அடிவருடிகளுக்கும் பகிரப்பட்டால் தான் சொறீலங்காவில்.. தொழில் செய்து பிழைக்கலாம். 

இப்படியான ஒரு சூழலில்... எந்த வெளிநாட்டு மானத் தமிழன்.. அங்க முதலிடுவான். முதலிட்டுள்ள எல்லாருமே..  பக்கா கள்ளன்கள். விலாங்கு மாதிரி.. நடந்து கொண்டிருக்கிறார்கள்.  அது எல்லோருக்கும் அமையாது.  இது தான் அங்குள்ள பிரச்சனையே...

சீனா தலைகீழாக நின்று முயற்சித்தாலும்... சொறீலங்கா சிங்கப்பூர் ஆக முடியாது. காரணம்.. சொறீலங்காவின் ஆட்சி.. மற்றும் நிர்வாக முறைமைகள் அதற்கு உதவாது. 

மாத்தளனில் இருந்து.. சொறீலங்காவுக்காக சற்றலைட் விட்டது வரை என்ன நடந்தது என்று.. பார்க்கிறமில்ல. tw_blush: அதுக்கு அப்புறமும்.. இதை நம்பிறமென்றால்.. நாங்கள் படு முட்டாள்கள். 

அதுவும் தமிழர் நிலத்தில் இராணுவத் தலையீடு இல்லாத நிர்வாகம் என்பது அடுத்த சில தசாப்தங்களுக்கு கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இந்த இலச்சணத்தில்.. சொறீலங்கா சிங்கப்பூர் ஆகும்..??! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனி ஒருவன் said:

யாராவது வெளிநாட்டு தமிழன் அல்லாத எவனாவது வந்து ஏதாவது தொழிற்சாலைகளை அமைத்தால் தான் உண்டு தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியாவது காணும் காடாய் இருக்கிற நிலம் கட்டிடமாகவாவது மாறும்

வடகிழக்கில் அதுவும் வடக்கு போன்ற இடங்களில் நீர் ஆதாரம் அங்குஉள்ளவர்களுக்கே காணாது இந்த லட்சனத்தில் ஒரு தொழில் சாலை அமைப்பது குறுகிய சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே சரியாகும் ஏனென்றால் மறைநீர் விரயம் என்பது உலக நாடுகளில் பாரிய விடயமாக பார்க்கபடுகிறது அச்சுறுத்தும் விடயமும் கூட அதை விட தொழில்நுட்பசார்பு அறிவியல் என்பது படிச்ச மேதாவிகளுக்கு கூட இருகின்றதா என்பது சந்தேகமே உதாரணம் மின்பிறப்பாக்கியின் கழிவு ஒயிலை நிலத்துக்குள் ஊத்தி ஒரு தலை முறைக்குரிய நீர் ஆதாரத்தை இல்லாமல் பண்ணி விட்டினம் அதுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு அறிக்கைகள் விட்டினம் பாருங்க அதுதான் கொடுமையின் உச்சம் .

போர் முடிந்தபின் கோல் சென்ரர் போன்ற நுண் அறிவு சார்பு நிறுவனம்கள் யாழில் தொடங்க போகினம் என்று செய்தித்தாள்களில் காணக்கூடியதாக இருந்தது பின் அந்த கதையே இல்லாமல் போய்விட்டது ஏன் தமிழனை காசில் மிதக்கவிடுவான் எனும்  குறுகிய  நோக்கமோ தெரியவில்லை இங்கு நம்மவர்களின் கோல்சென்ரர்களும் பங்களூரில் இருந்து இயங்குகின்றது காரணம் தெரியவில்லை ஒரு சிலரிடம் விசாரித்த போது அங்குள்ள பாதுகாப்பு பெண்பிள்ளைகளை இரவு ஆறுமணிக்கு பின் வெளியில் நடமாட விடுவது தற்கொலைக்கு சமமானது என்கின்றனர் இப்ப சொல்லுங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் வைத்திருக்க இந்த அரசாங்கமும் காரணம் தங்கடை ஆட்களுக்கு வெட்டுவிழும்போது மட்டுமே நித்திரையால் எழும்பி ஓடித்திரிகிணம் இவ்வளவு நாட்களா இயல்பு வாழ்க்கை இல்லாமல் சனம் கஷ்ட்டப்பட்டபோது இதே நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே ?

இந்த கேட்டுகுள்ளை சிங்கப்பூராவது ஜப்பானாவது முதலில் இந்த நாடுகளின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இருக்கா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

தனி 
எது காலியாகாட்டிலும் பரவாயில்லை,  ஆனால் ஊழல் என்பது கட்டாயமாக காலியாக்கப்பட வேண்டிய விடயம் ,மாகாண சபையாக இருந்தாலும் சரி ,நாட்டு முழுமைக்கும் என்றாலும் சரி ஊழல் என்பது நாட்டின் சொத்தாக இருக்கும் இக்காலகட்டத்தில் புலம் பெயர் உறவுகளை இங்கே அழைத்து அபிவிருத்தி செய்ய சொல்வது ,அவர்கள் சிறுக சிறுக சேர்த்தவற்றை  ஊழல் முதலைகளுக்கு தின்னக்கொடுப்பதாகவே அமையும், சிங்கப்பூர் என்பது வாயால் வடை சுட்டு உருவாகிய நாடில்லை அங்கே அதிகபட்ச தண்டனை  பொருளாதார குற்றத்திற்கே (Economical Offence)
 வழங்கப்படும் . ஏனென்றால் இந்தக்குற்றம் மற்றைய எல்லக்குற்றங்களையும் துணைக்கு அழைத்துவரும் (இங்கேயும் தங்களது ஊழல்களை மறைக்க  இனவாதம் தூண்டப்படுவதை  போன்று)     
 எனவே புலம் பெயர் உறவுகளை இங்கே  அழைத்து பிறகு சிவாஜி போன்று ஒத்தை ரூபாயுடன் திருப்பி அனுப்ப வேண்டாமே 

ஊழல் என்பது நமது ஆசியா நாட்டில் ஒன்றையொன்றை பார்த்து கொடுத்து வந்தது இதை  தடுப்பதென்பது முடியாத காரியம்  இலங்கையில் அதற்க்கான சட்ட நடவடிக்கை என்பது எடுக்க இயலாத ஒன்று ஒரு வர் இன்னொருவரை மாட்டுவார் அவர் இன்னொருவரை மாட்டுவார் இப்படி கோர்வையாக தொடர்ந்தே செல்லும்  அதை ஊக்குவித்தது என்னவோ அடிமட்டத்திலானவரே ஒரு காரியம் ஆக வேண்டுமானால் அவருக்கு கையூட்டல் வழங்குவது சிறு  தொகை பெருந்தொகையாகி பெரு முதலாளிகள் கூட செய்கிறார்கள் உங்களுக்கு தெரியாததா என்ன ஒரு பில்டிங் வந்தால் அதன் பங்குகள் யார் யாருக்கெல்லாம் செல்லும் என்பது  இப்படி இருக்க சிவாஜி போல பெரும் முதலீடு செய்து  இடச்சொல்லவில்லை நமக்கு அதாவது இன்று அடுத்த சமூகம் வளர்ர்சியடைகிறது நாமும் குற்றம் சாட்டுகிறோம் அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று அது அவர்கள் முயற்ச்சி  இன்று காத்தான் குடி மருதமுனை என்ற பிரதேசங்களுகுள் சென்று பார்த்தால் தெரியும் ஓவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலை  நீங்கள் பார்த்திருப்பீர்களோ தெரியாது நான் சொல்ல வந்தது இதைத்தாம்ன் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

4 hours ago, பெருமாள் said:

வடகிழக்கில் அதுவும் வடக்கு போன்ற இடங்களில் நீர் ஆதாரம் அங்குஉள்ளவர்களுக்கே காணாது இந்த லட்சனத்தில் ஒரு தொழில் சாலை அமைப்பது குறுகிய சிந்தனை உள்ளவர்களுக்கு மட்டுமே சரியாகும் ஏனென்றால் மறைநீர் விரயம் என்பது உலக நாடுகளில் பாரிய விடயமாக பார்க்கபடுகிறது அச்சுறுத்தும் விடயமும் கூட அதை விட தொழில்நுட்பசார்பு அறிவியல் என்பது படிச்ச மேதாவிகளுக்கு கூட இருகின்றதா என்பது சந்தேகமே உதாரணம் மின்பிறப்பாக்கியின் கழிவு ஒயிலை நிலத்துக்குள் ஊத்தி ஒரு தலை முறைக்குரிய நீர் ஆதாரத்தை இல்லாமல் பண்ணி விட்டினம் அதுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு அறிக்கைகள் விட்டினம் பாருங்க அதுதான் கொடுமையின் உச்சம் .

போர் முடிந்தபின் கோல் சென்ரர் போன்ற நுண் அறிவு சார்பு நிறுவனம்கள் யாழில் தொடங்க போகினம் என்று செய்தித்தாள்களில் காணக்கூடியதாக இருந்தது பின் அந்த கதையே இல்லாமல் போய்விட்டது ஏன் தமிழனை காசில் மிதக்கவிடுவான் எனும்  குறுகிய  நோக்கமோ தெரியவில்லை இங்கு நம்மவர்களின் கோல்சென்ரர்களும் பங்களூரில் இருந்து இயங்குகின்றது காரணம் தெரியவில்லை ஒரு சிலரிடம் விசாரித்த போது அங்குள்ள பாதுகாப்பு பெண்பிள்ளைகளை இரவு ஆறுமணிக்கு பின் வெளியில் நடமாட விடுவது தற்கொலைக்கு சமமானது என்கின்றனர் இப்ப சொல்லுங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பாமல் வைத்திருக்க இந்த அரசாங்கமும் காரணம் தங்கடை ஆட்களுக்கு வெட்டுவிழும்போது மட்டுமே நித்திரையால் எழும்பி ஓடித்திரிகிணம் இவ்வளவு நாட்களா இயல்பு வாழ்க்கை இல்லாமல் சனம் கஷ்ட்டப்பட்டபோது இதே நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாமே ?

இந்த கேட்டுகுள்ளை சிங்கப்பூராவது ஜப்பானாவது முதலில் இந்த நாடுகளின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இருக்கா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது .

சீனன் வாங்கிய  காணியை அபிவிருத்தி செய்த பின்  பார்ப்பீர்கள் ஆனால் நாம் யாழ் களத்தில் சொல்ல்வதெல்லாம் நடப்பதில்லை நடந்த பிறகு  வந்து சத்தம் போடுவோம் அவன் அடுத்த கட்ட வேலைக்கு போய்டுவான் அண்ணை  சிறிலங்கா மீதும் எனக்கு அக்கறை இல்லை ஆனால் இங்க இருக்கிற சனம் மீது கொஞ்சம்  (தமிழ்) அக்கறை அவ்வளவுதான்  நீங்க வெட்கப்பட்டாலும்  இங்க எங்களுக்கு பாஸ்போட் அவிங்க தான் தரவேணும் நாட்டை விட்டு ஓடுறதெண்டாலும் 

சீனன் போட்ட பாதைகளே தற்போது வட கிழக்கில் பயணம் செய்ய கூடியாதாக இருக்கிறது  அது மகிந்த காலத்தில் 

நான் சொல்ல வந்தது இதைத்தான் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

பெரிய தொழிற்ச்ச்லைக்கே உடனே இறங்குவது இல்லை இப்படியும் செய்யலாம்  

5 hours ago, nedukkalapoovan said:

ஒரு உருப்படியான தொழிலை தொடங்கி வெற்றிகரமாக அதை நடத்த.. அந்தத் தொழிலுக்கான இடம் எடுப்பதில் இருந்து.. அதன் இலாபத்தில்.. ஒரு பங்கு வரை.. சிங்கள ஆட்சியாளர்களுக்கும்.. நிர்வாகிகளுக்கும்.. அடிவருடிகளுக்கும் பகிரப்பட்டால் தான் சொறீலங்காவில்.. தொழில் செய்து பிழைக்கலாம். 

இப்படியான ஒரு சூழலில்... எந்த வெளிநாட்டு மானத் தமிழன்.. அங்க முதலிடுவான். முதலிட்டுள்ள எல்லாருமே..  பக்கா கள்ளன்கள். விலாங்கு மாதிரி.. நடந்து கொண்டிருக்கிறார்கள்.  அது எல்லோருக்கும் அமையாது.  இது தான் அங்குள்ள பிரச்சனையே...

சீனா தலைகீழாக நின்று முயற்சித்தாலும்... சொறீலங்கா சிங்கப்பூர் ஆக முடியாது. காரணம்.. சொறீலங்காவின் ஆட்சி.. மற்றும் நிர்வாக முறைமைகள் அதற்கு உதவாது. 

மாத்தளனில் இருந்து.. சொறீலங்காவுக்காக சற்றலைட் விட்டது வரை என்ன நடந்தது என்று.. பார்க்கிறமில்ல. tw_blush: அதுக்கு அப்புறமும்.. இதை நம்பிறமென்றால்.. நாங்கள் படு முட்டாள்கள். 

அதுவும் தமிழர் நிலத்தில் இராணுவத் தலையீடு இல்லாத நிர்வாகம் என்பது அடுத்த சில தசாப்தங்களுக்கு கண்ணுக்குத் தெரிவதாக இல்லை. இந்த இலச்சணத்தில்.. சொறீலங்கா சிங்கப்பூர் ஆகும்..??! :rolleyes:

சீனன் செய்து காட்டட்டும் நாம் ஏன் குத்தி முறிவான்  உன்மையில் வட கிழக்கை கொடுத்தால் செய்த்து காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

நமக்கு அதாவது இன்று அடுத்த சமூகம் வளர்ர்சியடைகிறது நாமும் குற்றம் சாட்டுகிறோம் அவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று அது அவர்கள் முயற்ச்சி  இன்று காத்தான் குடி மருதமுனை என்ற பிரதேசங்களுகுள் சென்று பார்த்தால் தெரியும் ஓவ்வொரு வீடும் ஒரு தொழிற்சாலை  நீங்கள் பார்த்திருப்பீர்களோ தெரியாது நான் சொல்ல வந்தது இதைத்தாம்ன் .

ஆடைக்கான துணியை எடுத்து வருகிறார்கள் அதை சேட்டாகவும்  சகல உடுப்புத்தேவைகளியும் செய்கிறார்கள் , தறிகள் சகலரது வீட்டிலும் இருக்கிறது சாரன் நெய்கிறார்கள் , பாட்டா ( செருப்பு ) காத்தான் குடிக்குள்ள நான் போன போது அங்கே பல தமிழ் பெண்கள் வேலைகிறார்கள் வெட்டுவது ஒட்டுவது  இப்படி ஒவ்வொரு பொருளையும் அவர்கள் மொத்தமாக சிறு தொகை பணத்திற்கு இறக்கி அதை பலருக்கு பிரித்து உழைகிரார்கள் அதனால் அவர்கள் அவர்கள் சமூகம் வளர்ச்சி அடைகிறது பொருளாதாரத்தில் நாம் இப்படியே குற்றம் கண்டு பிடித்து காலத்தை கழிக்கிறோம் 

  தனி 
 இதனைச்செய்ய புலம்பெயர் தமிழர் எதற்கு , நமது மக்களே செய்யலாமே ...? முன்னேறவேண்டும் என்ற கொள்கை இருந்தால் 
ஆயிரம் வாய்ப்புகள் உண்டே ...நம்மவர்கள் சோம்பேறிகள் ,சமீபத்தில் முகநூலிலும் முஸ்லிம் ஒருவர் முடிந்தால் தமிழன் ஒருவன் மட்டக்களப்பில் உடுப்புக்கடை ஒன்றை திறந்து 
அதற்க்கு என்று வாடிக்கையாளர்களை தொடர்ந்து பேணிக்காட்டுங்கள் என்று நேரடி சவால் விடுத்துள்ளார் . ஏற்கனவே மாகாநதிக்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் 
தமிழ்ப்பற்று இருக்கலாம் அதற்காக யானை விலை குதிரை விலைக்கு மூக்கால் அழுதுகொண்டு பொருட்களை வாங்க முடியாது. இன்றும் கல்முனை தமிழ்ப்பகுதியில் தரமான தமிழ் சாப்பாட்டுக்கடை இல்லை 
எல்லாவற்றிற்க்கும் மருதமுனை இல்லாவிட்டால் கல்முனைக்குடிக்கு ஓட வேண்டும். பெருமெடுப்போடு திறக்கப்பட்ட கடைகள் எல்லாம் சில மாதங்களே இயங்கின ,அவர்கள் செத்தைக்குள் இயங்கினாலும் 
அவர்கள் முயற்ச்சியில் ,தொழிலில் கவனமாக இருக்கிறார்கள். தமிழர்களின் கடைகளில் வியாபாரம் அதிகரிக்க தரம் குறைவது அப்படியே கண்கூடாக தெரியும் 
அவர்கள் முயற்ச்சித்து முன்னேறுகிறார்கள் ,நாம் மற்றவர்களை எதிர்பார்க்கிறோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.