Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி

Featured Replies

கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி

பதிவு: ஆகஸ்ட் 28, 2017 00:57

 
 

லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்.

 
 
 
 
கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி
 
லண்டன்:

லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள்.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன். அங்கு பக்கிங்ஹாம்ஷயர் என்ற இடத்தில் எம்-1 நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3.15 மணிக்கு 2 கன்டெய்னர் லாரிகள் அதிவேகமாக வந்து கொண்டிருந்தன.

201708280057340853_1_london._L_styvpf.jp

அப்போது அந்த நெடுஞ்சாலையில் நாட்டிங்ஹாமில் இருந்து வெம்பிளேவுக்கு ஒரு மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அந்த மினி பஸ் மீது 2 கன்டெய்னர் லாரிகளும் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் அந்த மினி பஸ் அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணம் செய்தவர்கள் மரண ஓலமிட்டனர்.

இந்த விபத்தால் சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்து முடங்கியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசாரும், நெருக்கடி கால பணியாளர்களும் விரைந்து வந்தனர்.

அதற்குள், மினி பஸ்சை ஓட்டிய டிரைவர் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாகினர். அவர்களில் 6 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெருக்கடி கால பணியாளர்களும், போலீசாரும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மில்டன் கேனஸ், கவண்ட்ரி மற்றும் பர்மிங்ஹாமில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 5 வயது சிறுமி ஒருவர், ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

விபத்தை ஏற்படுத்திய 2 கன்டெய்னர் லாரிகளின் டிரைவர்கள் ரிஸ்சார்டு மேசிராக் (வயது 31), டேவிட் வேக்ஸ்டாப் (53) ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் ரிஸ்சார்டு மேசிராக் அளவு கடந்த மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

201708280057340853_2_londonlondon._L_sty
              பன்னீர் செல்வம்                             அறச்செல்வம், தமிழ்மணி தம்பதி.


இந்த விபத்தில் சிக்கிய மினி பஸ்சில் சென்றவர்கள் தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் 8 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் தமிழ்நாட்டையும், ஒருவர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரில் 3 பேர் காஞ்சீபுரம் மாவட்டம், பிள்ளையார் பாளையம் மண்டப தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (63), இவரது தங்கை தமிழ்மணி (50), தங்கை கணவர் அறச்செல்வம் (60) ஆகியோர் ஆவார்கள்.

பன்னீர்செல்வத்தின் மகன் மனோரஞ்சன், லண்டனில் பிரபல ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்கள் லண்டனில் வசித்து வருகின்றனர்.

இவர்களை பார்த்து விட்டு, அப்படியே ஐரோப்பாவில் சுற்றுலா மேற்கொள்வதற்காக பன்னீர்செல்வம், அவரது மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி, தங்கை கணவர் அறச்செல்வம் ஆகியோர் இங்கிலாந்து சென்றிருந்தனர். அவர்களுடன், லண்டனில் உள்ள பன்னீர் செல்வத்தின் மகன் மனோரஞ்சன், மருமகள் சங்கீதா ஆகியோரும் மினி பஸ்சில் சுற்றுலா சென்றிருந்தபோதுதான் விபத்தில் சிக்கி உள்ளனர்.

வள்ளி, மனோரஞ்சன், சங்கீதா ஆகியோருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல கண் மருத்துவர் டாக்டர் ஏ. சிவக்குமாரின் உறவினர்கள். விபத்தில் மரணம் அடைந்த பன்னீர்செல்வம், தமிழ்மணி, அறச்செல்வம் ஆகிய 3 பேரின் உடல்களை சொந்த ஊரான பிள்ளையார்பாளையம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் டாக்டர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

4 பேர் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மினி பஸ்சை ஓட்டி பலியான டிரைவர் பென்னி என்ற சிரியாக் ஜோசப், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து, சொந்தமாக மினிபஸ் வாங்கி அதை ஓட்டி வந்தார். அவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி பாதித்துள்ள அனைவருக்கும் தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படுகிறது என லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/28005734/1104762/UK-road-accident-Indians-among-8-dead-as-2-trucks.vpf

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ! 
மின்னல் வேகத்தில் மரணம் வந்திருக்கிறது ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  அனுதாபங்கள்.
அதிலும்... சுற்றுலா பயணிகளாக வந்த தமிழர்கள், மரணத்தை தழுவிக் கொண்டது மிகப் பெரும் சோகம்.

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் 4 இந்தியர்கள் பலியான சம்பவம்: லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு

LNP / BBCபடத்தின் காப்புரிமைLNP / BBC

இங்கிலாந்தின் நியூபோர்ட் பேக்னெல் நகர நெடுஞ்சாலையில் மினி பஸ்ஸுடன் இரண்டு லாரிகள் மோதிய சம்பவத்தில், அவற்றின் ஓட்டுநர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பக்கிங்காம்ஷயரில் உள்ள நியூபோர்ட் பேக்னெல் நகரில் உள்ள 15 மற்றும் 14-ஆவது சந்திப்புகளுக்கு இடையிலான நெடுஞ்சாலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் மினி பஸ்ஸுடன் இரண்டு கன்டெய்னர் லாரிகள் மோதின.

அந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட மொத்தம் எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஐந்து வயது சிறுமி ஒரு ஆண் ஒரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றொரு நபர் குறைவான பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் மினி பஸ் ஓட்டுநர் உள்பட நான்கு பேர் பேர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

நோட்டிங்காமைச் சேர்ந்த ஏபிசி டிராவல்ஸுக்கு சொந்தமான மினி பஸ் ஓட்டுநரும் அன் உரிமையாளருமான சிரியாக் ஜோசஃப், தனது பகுதிவாசிகளால் அசாதாரண தந்தை என்றும் சிறந்த தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் இருந்து லண்டனுக்கு வந்தவர்களை ஐரோப்பா சுற்றுலாவுக்காக சிரியாக் ஜோசஃப் அழைத்துச் செல்வதாக இந்தது.

இந்நிலையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஜோசஃப் சிரியாக் உள்பட நான்கு இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

அதில் மூன்று பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ ஊழியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LNPபடத்தின் காப்புரிமைLNP

"இந்த விபத்தில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கார்த்திகேயன் ராமசுப்ரமணியம் புகளூர், ரிஷி ராஜீவ் குமார், விவேக் பாஸ்கரன் ஆகிய மூவரும் பலியாகினர். மேலும் ஒரு ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்" என்று பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் கைதான இரு லாரி ஓட்டுநர்களான வூர்ஸ்டெர்ஷெரை சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்ஸார்ட் மாஸியரக் (31), டெர்வென்ட் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த மற்றொரு லாரி ஓட்டுநர் டேவிட் வேக்ஸ்டாஃப் (53) ஆகியோர் மீது அபாயகரமான முறையில் உயிரைப் பறிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டியதாக தலா எட்டு புள்ளிகளும், கடுமையான காயங்களை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டியதாக தலா நான்கு புள்ளிகளும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இருவரும் மில்டன் கீன்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-41072543

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.