Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்

Featured Replies

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். 

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர்

இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில் சக உறுப்பினர்கள் இருவரையும் விலக்குப்பிடித்ததாகவும் எமது செய்தியாளர் கூறினார்.

நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பில் ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் வாக்களிக்கவில்லை.  இதனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் மேற்படி கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்ப்பதாகவும் எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினாா்.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை சம்பந்தன் பாராட்டிப் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/MPs

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எதிர்பார்க்கிறம் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் எதிர்பார்க்கிறம் 

வியாழேந்திரன்  வளர்கிறார்  என்று அர்த்தம்

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

வியாழேந்திரன்  வளர்கிறார்  என்று அர்த்தம்

வளர்ந்தென்ன வளராமல் விட்டால் என்ன நம் மக்களை  திருத்த வேண்டும் கிழக்கை பொறுத்தவரைக்கும் யார் மீதும் இனி நம்ம்பிக்கை இல்லையென்ற கருத்து நிலவுகிறது  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வளர்ந்தென்ன வளராமல் விட்டால் என்ன நம் மக்களை  திருத்த வேண்டும் கிழக்கை பொறுத்தவரைக்கும் யார் மீதும் இனி நம்ம்பிக்கை இல்லையென்ற கருத்து நிலவுகிறது  

நம்பிக்கை வரமட்டும் வாக்கு போடமாற்றேன் என்று அடம்பிடிக்க முடியாது, சமுக நலம் கருதி ஒருத்தருக்கு வாக்கு போடத்தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நம்பிக்கை வரமட்டும் வாக்கு போடமாற்றேன் என்று அடம்பிடிக்க முடியாது, சமுக நலம் கருதி ஒருத்தருக்கு வாக்கு போடத்தான் வேண்டும்

நம்பி வாக்கு போட்டால் நாமம் போட்டு விட்டு கதிரைக்கு சென்று அங்கேயும் சண்டை  கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு இன்று கீரைக்கறிக்கு அலைந்து திரிந்த கதை போல் இருக்கு நிலமை  புட்டும் குழலும் சீ புட்டும் தேங்காய் பூவும்மாம்

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனுக்கு தனிப்பட ரொம்பவும் மதிப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்ச்சித் தலமை இருக்கு. வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். மலையகத்தான் மட்டக்களப்பான் என்றபடி யாழ்பாண அடியாட்கள் வரவேண்டியதில்லை. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வியாழேந்திரனுக்கு தனிப்பட ரொம்பவும் மதிப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

சொல்கிறவர்கள் மட்டுமே சொல்வார்கள் மதிப்பு இருக்ககென ஆனால் நாணயத்தில் இரு பக்கங்களிருப்பது போல் எல்லோருக்கும் இருபக்கமும் உண்டு  அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது   அடிமரத்தில் பிழை இருக்கும் போது கிளைகளை  என்ன செய்ய முடியும் கிழக்கை பொருத்த வரைக்கும் 

1 hour ago, poet said:

கட்ச்சி மட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க கட்ச்சித் தலமை இருக்கு. வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். மலையகத்தான் மட்டக்களப்பான் என்றபடி யாழ்பாண அடியாட்கள் வரவேண்டியதில்லை. தமிழரசுக் கட்ச்சி இதுபற்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இருக்கலாம் இன்று மகிந்தவுக்கு சிங்கள மக்கள் சார்ப்பில் ஆதரவு பெருகி வரகிறது  ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர் பாராளுமன்றம் செல்வதில்லை  இருந்தாலுமிவர் மீது எந்த கோப மும் இல்லை இவர் நினைத்தால் இன்னும் கிழக்கை நன்கு அபிவிருத்தி பாதையில் எடுத்து செல்லலாம் ஆனால் அவரால் முடியவில்லை  சில நடக்கும் சம்பவங்களுக்களை பார்த்துக்கொண்டு  மொனியாக இருக்கிறார் கிழக்கில் அடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் உப்புக்கு சப்பாணி  ம்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சொல்கிறவர்கள் மட்டுமே சொல்வார்கள் மதிப்பு இருக்ககென ஆனால் நாணயத்தில் இரு பக்கங்களிருப்பது போல் எல்லோருக்கும் இருபக்கமும் உண்டு  அதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது   அடிமரத்தில் பிழை இருக்கும் போது கிளைகளை  என்ன செய்ய முடியும் கிழக்கை பொருத்த வரைக்கும் 

 இருக்கலாம் இன்று மகிந்தவுக்கு சிங்கள மக்கள் சார்ப்பில் ஆதரவு பெருகி வரகிறது  ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவர் பாராளுமன்றம் செல்வதில்லை  இருந்தாலுமிவர் மீது எந்த கோப மும் இல்லை இவர் நினைத்தால் இன்னும் கிழக்கை நன்கு அபிவிருத்தி பாதையில் எடுத்து செல்லலாம் ஆனால் அவரால் முடியவில்லை  சில நடக்கும் சம்பவங்களுக்களை பார்த்துக்கொண்டு  மொனியாக இருக்கிறார் கிழக்கில் அடுத்து மாகாண சபை உறுப்பினர்கள் உப்புக்கு சப்பாணி  ம்கும்  

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

 கையில்   இருந்த சாட்டையை கொடுத்து விட்டு அடி வேண்டுகிறோம் இது யதார்த்தமான உன்மை :104_point_left:

இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்றில் சகோதர மோதல்களும்,ஒற்றுமையின்மையுமே தனிநாடு என்ற தமிழர் 
இலக்கினை அடையமுடியாமல் போனதற்கான முழுக்காரணங்கள் எனச் சொன்னால் அதில் எந்த தவறுகளும் இருக்காது.
ஆனால் இன்றுவரைக்கும் அவற்றைத் தமிழர்கள் உணர்ந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனையானது.

எத்தனையோ அழிவுகளைக் கடந்து நிர்க்கதியான போதிலும் பழைய கதைகளைப் பேசி எமக்குள்ளேயே தியாகி எனவும்,துரோகி எனவும் அடிபடுவது மற்றைய இனத்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கிறது.
தமிழர்களின் ஒற்றுமையின்மையைச் சரியாகப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள ஏனைய இனங்கள் இரண்டும் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளன.
இனிமேலும் அது தொடரும் என்பதும் தமிழ் இனம் மட்டும் இந்த நாட்டில் இன்னும் மோசமான நிலைக்கே செல்லும் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

இரண்டு சம்பவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் அறிந்த விடயம்.
மற்றையது சில நாட்களுக்கு முன்னர் அறிந்த விடயம்.
எம் இனத்தைப் பற்றி மற்றைய இனத்தவர்கள் எவ்வாறு கணிப்பிட்டு வெற்றி காண்கின்றனர் என்பது இதன் மூலம் புலனாகும்.

சம்பவம்:1
1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டு தெற்கில் இருந்த தமிழர்கள் வடக்கு கிழக்குக்கு அகதிகளாக ஓடிக்கொண்டிருந்த நேரம்...
வடக்கு கிழக்கில் தமிழ் இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் இணைவதாகவும், பயிற்சி பெற இந்தியா செல்வதாகவும் செய்தி பரவுகிறது.

தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஒரு அரச அதிகாரி பதட்டமான நிலையில் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் சென்று கூறுகிறார்.
தமிழர்கள் பயிற்சி பெற இந்தியாவுக்குச் செல்கின்றனர்.
இந்தியாவும் அவர்களுக்குச் சார்பாகவுள்ள நிலையில் பங்காளதேஷ் உருவானது போல தமிழர்களுக்கு நாடு உருவாகப் போகிறது. எமது நாடு ஆபத்தில் உள்ளது.
எமது நாடு பிளவடையப் போகிறது.
ஏதாவது நடவடிக்கைகளை இப்போதே எடுத்தாக வேண்டும்.
தமிழ்த் தலைவர்களோடு பேசி உடன்பாட்டுக்கு வரவேண்டும்.
இல்லாவிட்டால் நாடு பிளவடைவதைத் தடுக்க முடியாது என ஆலோசனையும் சொல்கிறார்.

உடனே அசால்ட்டாகச் சிரித்த ஜனாதிபதி ஜே.ஆர் பின்வருமாறு சொன்னாராம்.

அவர்கள் போகட்டும்..
பயிற்சி பெற்று வரட்டும்.
மூன்று வருடங்களில் அவர்கள் அவர்களுக்குள்ளேயே அடிபட்டு பாதிக்கும் மேல் அழிவடைவார்கள்.
பலர் எம்மிடம் வந்து தஞ்சமடைவார்கள்.
அதன் பின்னர் எஞ்சியவர்களை அவர்கள் பக்கமிருந்து வந்தவர்களை வைத்தே அடுத்த மூன்று வருடங்களில் நான் முடித்துவிடுவேன் என்றாராம்.

அவர் சொன்னது நடைபெற்றது.
ஆனால் அதற்கு முப்பது வருடங்களானதும் அவரால் சாத்தியமாகாமல் வேறு ஒருவரால் சாத்தியமானதும் வேறு கதை.

சம்பவம்:2
மட்டக்களப்பில் ஏட்டிக்குப் போட்டியாக அடிபட்டுக் கொள்ளும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் அண்மையில் சில முக்கியஸ்தர்களால் இரகசியமாக ஒரு இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டார்களாம்.
அப்போது கலைக்கப்படவுள்ள கிழக்கு மாகாண சபை தொடர்பாக பேசப்பட்டதாம்.
மீண்டும் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற என்ன நடவடிக்கை என்பது பற்றியதாகவே அந்த இணைவுக் கூட்டம் இடம்பெற்றதாம்.
(கிழக்கு மாகாணசபையின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எந்தவிதச் சிந்தனையுமற்று தமிழர் தரப்பு இருப்பது வேறு விடயம்)

அப்போது தமிழர் தரப்பு அனைவரும் ஒன்றிணைவது தொடர்பாக பேசப்படுவதைப் பற்றியும் அவ்வாறு இணையும் பட்சத்தில் முஸ்லிம் முதலமைச்சர் என்பது சாத்தியமில்லை எனவும் பேசப்பட்டதாம்.

அதற்கு ஒரு அரசியல்வாதி சொன்னாராம்..
தமிழர்கள் இனிமேல் ஒற்றுமையாக ஓரணியில் நிற்பது சாத்தியமில்லை.
அன்று புலிகள் இருந்தமையால் இவர்களை கண்டிப்பாக இணைத்தார்கள்.
இன்று இவர்கள் இணைய முயற்சித்தாலும் நான்கு பேரை வைத்து மீண்டும் துரோகிகள் என்று பரப்புரை செய்தாலே போதும்.
அதை நமக்கு இலவசமாக நான்காயிரம் பேர் முழு நேரமாக நின்று பிரச்சாரம் பண்ணித் தருவார்கள்.
இப்போது கூட்டமைப்புக்குள் உள்ளவர்களையே துரோகிகள் எனச் சொல்லி ஓரம்கட்டவும் முடியும்.
புலிகள் என்ற பெயரும் துரோகிகள் என்ற வார்த்தையும் இருக்கும் வரை கிழக்கில் நாம் மட்டும்தான் ராஜாக்கள்.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்..
அடுத்த முதலமைச்சரும் முஸ்லிம்தான்.
இதுதான் நடக்கும் என்று அசால்டாக சொன்னாராம்.

முகநூலில் படித்தது நன்றி நவநீதன் 

16 minutes ago, விசுகு said:

இந்தக்கோபம் 

எனக்கு  எல்லா  மக்கள் பிரதிநிதிகள்  (மாகாணசபை  உட்பட)  மேலும்  உண்டு

எவ்வளவோ   எதிர்பார்ப்புக்களுடன் இருந்தோம்

நாசமாப்போவார்

முழுக்க  முழுக்க சுயநலவாதிகளாகவும்

செயலற்ற  பிண்டங்களாகவும் ஆகிப்போனார்கள்

விக்கி அடுத்த முறை தேர்தலில் நிற்காமல் அரசியலில் இருந்து விலக வேண்டும், ஏன் என்றால் அவர் அரசியலில் இருந்தால் கூத்தமைப்பு கூத்தாடிகள் அவரை உருப்படியாக எதுவும் செய்ய விட போவதில்லை, அதை விட அவர் வெளியில் வந்து ஒரு அரசியல் சாராத Lobby ஒன்றுக்கு தலைமை தாங்க வேண்டும். அப்படியானால் தான் ஏதாவது உருபடியாக நடக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.