Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

Featured Replies

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

உலகம் முழுவதும் பிரபலமுடைய கவர்ச்சி இதழான 'பிளேபாய்'-யின் நிறுவனர் ஹக் ஹெப்னர் (91) வயோதிகம் காரணமாக இன்று காலமானார்.

பிரபல கவர்ச்சி இதழான 'பிளேபாய்' நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்
 
நியூயார்க்:

அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'பிளேபாய்' இதழுக்கு, உலகம் முழுவதும் வாசகர்கள் உண்டு. இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சி படங்கள் இடம் பெறுவது வழக்கம். இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை, பிரபலங்கள் பலரும், கவுரவமாக கருதினர்.

1953-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இதழானது, உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனையை படைத்தது. 1975-ம் ஆண்டுகளில் 70 லட்சம் பிரதிகள் வரை விற்ற இந்த இதழானது, தற்போது இணையதளத்தின் கிடுகிடு வளர்ச்சியால் மாதம் எட்டு லட்சம் பிரதிகள் அளவுக்கு மட்டுமே விற்பனையாகிறது. 

இதற்கிடையே, 2016-ம் ஆண்டிலிருந்து 'பிளேபாய்' அட்டையில் கவர்ச்சி படங்கள் இடம் பெறாது என நிர்வாகம் அதிரடியாக அறிவித்தது. கடைசியாக வெளியான, 'பிளேபாய்' இதழின் அட்டையில், பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சனின், கவர்ச்சி படங்கள் இடம் பெற்றன. 

தனது 86-வது வயதிலும் தன்னைவிட 60 வயது குறைவான கிறிஸ்டன் ஹாரீஸ் என்பவரை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார் ஹெப்னர். இந்நிலையில், தற்போது வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்துகொண்டிருந்த ஹெப்னர் இன்று மரணமடைந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.

1990-வது ஆண்டில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'பிளேபாய்' இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/28110757/1110376/Playboy-founder-Hefner-dies-aged-91.vpf

  • தொடங்கியவர்

பிளேபோய் சஞ்சிகை நிறுவனர் ஹக் ஹெஃப்னர் மரணம்

பிரபல சஞ்சிகையான ‘பிளேபோய்’ இதழின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது 91வது வயதில் நேற்று (27) லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ‘பிளேபோய் மென்ஷன்’ எனப்படும் தனது ஆடம்பர வீட்டில் காலமானார். 

4_Playboy.jpg

பிளேபோய் இதழ் மூலம் 1960களில் பாலியல் புரட்சியொன்றை ஏற்படுத்தியவர் ஹெஃப்னர். ஹெஃப் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் 1926 ஏப்ரல் 9ஆம் திகதி சிக்காகோவில் பிறந்தவர்.

உளவியல் பட்டதாரியான ஹெஃப், ஆரம்பத்தில், புகழ்பெற்ற ‘எஸ்குயர்’ இதழில் பணியாற்றினார். ஐந்து டொலர் ஊதிய உயர்வு கிடைக்காததால் அங்கிருந்து விலகி, நாற்பத்தைந்து பேரின் பங்களிப்புடன் பிளேபோய் இதழை 1953 டிசம்பர் மாதம் வெளியிட்டார். கடும் இறைபக்தி உடைய குடும்பச் சூழலில் பிறந்த ஹெஃப், அச்சூழலில் இருந்து வெளிவர விரும்பினார். அதுவே பிளேபோய் இதழாகப் பரிணமித்தது.

முதல் இதழில் திகதியோ, இதழ் எண்ணிக்கையோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. காரணம், இரண்டாவது இதழ் வெளிவருமோ, வராதோ என்ற சந்தேகம்தான்!

எனினும், ஹொலிவுட்டின் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ, திரையுலகில் புக முன்னர் கொடுத்திருந்த நிர்வாண போஸை நடுப்பக்கத்தில் தாங்கி வந்த பிளேபோய் முதலாவது இதழ், ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனை ஆகி சாதனை படைத்தது.

அதன் பின்னர், இன்று வரை பிளேபோய் இதழ் தொடர்ந்து வெளிவருகிறது, முயல் குட்டியொன்றின் இலச்சினையுடன்! மேலும், கிளப்கள், உணவகங்கள் என்று பிளேபோயை அடிப்படையாக வைத்து பல வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு முறை திருமணம் முடித்தபோதும் அவை விவாகரத்திலேயே முடிந்தன.

“திருமணத்துக்குப் பிறகும் பெண் தோழிகள் இருந்தால் அதை மறைக்கக் கூடாது. வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எத்தனை வயதானவராக இருந்தாலும், நீங்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் காதலியின் வயதுதான் உங்களுக்கும்” என்பது ஹெஃப்பின் தாரக மந்திரம்!

http://www.virakesari.lk/article/25027

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

திருமணத்துக்குப் பிறகும் பெண் தோழிகள் இருந்தால் அதை மறைக்கக் கூடாது. வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எத்தனை வயதானவராக இருந்தாலும், நீங்கள் காதலிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் காதலியின் வயதுதான் உங்களுக்கும்” என்பது ஹெஃப்பின் தாரக மந்திரம்!

மனுசன் பயங்கர‌ சுழியன் போலகிடக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

மனுசன் பயங்கர‌ சுழியன் போலகிடக்கு....

ஒரு சோகமான செய்தி 
காசுக்காக கடந்த 6 வருசமா இந்த கிழவனுடன் கிடந்த 31 வயது பெண்ணுக்கு 
சொத்து ஒன்றும் சேராது போல இருக்கு.

வீட்டில் மிஞ்சினதுக்களை சுருட்டிக்கொண்டு போக வேண்டியதுதான் போல இருக்கு, 

  • தொடங்கியவர்

செத்தும் சளைக்காத ‘பிளேபோய்’ ஹெஃப்!

தனது 91 வயதில் காலமான, ‘பிளேபோய்’ சஞ்சிகையின் நிறுவனர் ஹக் ஹெஃப்னர் தனது சடலத்தைப் புதைக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுடனான உறவுகளைப் பகிரங்கமாகவே வைத்துக்கொண்ட ஹெஃப், மரணத்தின் பின் தனது உடலை, முன்னாள் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் சமாதிக்கு அருகிலேயே புதைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

7_Playboy.jpg

இதற்காக, மர்லின் மன்றோவுக்கு அருகாமையில் தனது சமாதிக்கான இடத்தை சுமார் 75 ஆயிரம் ஸ்டேர்லிங் பவுண்களுக்கு அவர் வாங்கியிருந்தார்.

இச்செய்தி, மக்களிடம் இருவேறு கருத்துக்களைத் தோற்றுவித்திருக்கிறது.

தனது ‘கொள்கையை’ தான் மரணித்தபோதும் ஹெஃப் கடைப்பிடித்திருப்பதாகவும், பிளேபோயின் முதல் இதழில் எந்த நடிகையை நிர்வாணமாகப் பிரசுரித்திருந்தாரோ, அதே நடிகைக்கு அருகையிலேயே அவர் மீளாத் துயில் கொள்ள நினைத்தது பாராட்டத்தக்கது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

Merilyn.jpg

(பிளேபோய் முதல் இதழின் அட்டைப் படம்)

அதேவேளை, உயிருடன் இருக்கும்போதும் பெண்களைத் தனது பாலியல் அடிமைகளாக நடத்திய ஹெஃப், இறந்த பிறகும் மர்லின் மன்றோவின் ஆத்மாவை நிம்மதியாக இருக்க விடாமல் செய்துவிட்டார் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தனது வாழ்க்கை வரலாற்றில், “எனது நிர்வாணப் படத்தை வைத்து பணம் பண்ணியவர்கள் ஒரு நாகரிகத்துக்காகவேனும் எனக்கு நன்றி கூறியதில்லை. எனது புகைப்படம் தாங்கிய அந்த இதழ்களைக் கூட நான் காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டியிருந்தது” என்று மர்லின் மன்றோ குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.virakesari.lk/article/25090

  • கருத்துக்கள உறவுகள்
On 9/28/2017 at 11:46 AM, putthan said:

மனுசன் பயங்கர‌ சுழியன் போலகிடக்கு....

வாழத் தெரிந்த மனுசன். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

வாழத் தெரிந்த மனுசன். tw_blush:

ஒரு அரசியல்வாதி அல்லது ஆத்மீகவாதி மறைந்த பின்பு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இவருக்கும் கொடுக்கப்பட்டது .....எப்படி வாழ்ந்தான் என்பதை விட எப்படி பிரபலமாய் வாழ்ந்தான் என்பது தான் முக்கியம் என்ற காலம் இது...:10_wink:

  • தொடங்கியவர்

பிளே பாய்' ஹெஃப்னரின் வாழ்க்கை முறை பற்றி, அவரின் தோழிகள் என்ன சொல்கிறார்? ஓர் அலசல்! #PlayBoy

‘'நீங்கள் ஹெஃப்னரை நேசித்தாலும் வெறுத்தாலும், அவர் அமெரிக்க கலாசாரத்தில் உருவாக்கிய தாக்கத்தை மட்டும் மறுக்க முடியாது'' - 91 வயதில் உயிரிழந்த ஹூக் ஹெஃப்னர் (Hugh Hefner) மறைவுக்கு இப்படி இரங்கற்பா எழுதியிருக்கிறது அமெரிக்க பத்திரிகையான, நியூயார்க் டைம்ஸ். 'பாலியல் புரட்சியாளர்' என்கிறது பி.பி.சி. 'அரசியல் ஆர்வலர் மற்றும் கொடை வள்ளலான ஹெஃப்னர் வெறும் பத்திரிகையை உருவாக்கவில்லை. ஒரு முழுமையான வாழ்வியல் முறையையே உருவாக்கியவர்' என்கிறது இன்னொரு பத்திரிகை. 

ஹூக் ஹெஃப்னர்... கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட  பெயர்களில் ஒன்று. யார் இந்த ஹெஃப்னர்? ஏன் ஹெஃப்னரின் இறப்பைச் சமூக வலைதளங்களும் பத்திரிகைகளும் துயரத்துடன் சொல்கிறது. 

ஹெஃப்னர் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. அமெரிக்காவில், 'ஆண்களுக்கான பிரத்யேக பொழுதுபோக்கு பத்திரிகை' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட 'பிளே பாய்' பத்திரிகையின் நிறுவனர். 1953-ம் ஆண்டில், 600 டாலரை முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்ட 'பிளே பாய்', 1960-ம் ஆண்டில் ஒரு மில்லியன் பிரதிகள் விற்றது. 1970-களில் அது ஏழு மில்லியனைத் தொட்டது. 'பிளே பாய்' பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது இருந்த அமெரிக்கா, தற்போது நாம் பார்க்கும் அமெரிக்காவாக இல்லை. அது நிறைய பழைமைவாதங்களைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில்தான் உடலுறவைப் பற்றி வெளிப்படையாக எழுதியது 'பிளே பாய்'. பெண்களின் அரை நிர்வாண, முழு நிர்வாணப் படங்கள் நடுப்பக்கத்தில் வெளியானது. ஹெஃப்னரின் வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இருட்டில் வைக்கப்பட்டிருந்த செக்ஸை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

பிளே பாய்

அமெரிக்காவில் மட்டுமன்றி, 1950-ம் ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுக்க உருவான பாலியல் தொடர்பான உரையாடலுக்கு ஏதேனும் ஒரு வகையில் காரணமாயிருந்தது, 'பிளே பாய்.' பல பத்திரிகைகளின் நடுப்பக்கங்களுக்கு இந்த பிளே பாய்தான் ‘ஹெட்மாஸ்டர்’. 

”பொதுவெளிகளில் பாலியல் வெளிப்பாட்டை ஊக்குவிக்காவிட்டால், தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரோக்கியமில்லாத பாலியல் வெளிப்பாடுகள் நடக்கும். நீங்கள் செக்ஸைப் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும் அடக்கிவைப்பதினால் ஒரு புண்ணியமும் இல்லை” என்பது ஹெஃப்னரின் நிலைப்பாடு. 

பழைமைவாதத்தில் உழன்ற அமெரிக்காவில் ‘யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் உடலுறவுகொள்ளலாம்’ என்பதை வலியுறுத்துவதாக இருந்தது 'பிளே பாய்'. அதில் விளம்பரப்படுத்தப்பட்ட செக்ஸ் பொம்மைகள் அமோகமாக விற்றன. இன்றைக்கு இருக்கும் ஆபாச வலைதளங்களின் மொத்த வருமானம் 100 பில்லியனைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் 10 பில்லியன் ஆண்டு வருமானம். செக்ஸ் டாய்களின் ஆண்டு வருமானம் 15 பில்லியனைத் தாண்டுகிறது. இவை எல்லாவற்றுக்கும் ‘அ’ எழுதியவர் ஹெஃப்னர்.

ஹெஃப்னர்

அமெரிக்க அரசியலில் ஹெஃப்னரின் செல்வாக்கு நம்மால் யூகிக்க முடியாதது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற உள்நாட்டுக் குழப்பங்களைச் சமாளிக்க, அமெரிக்க அரசாங்கத்துக்கு ஹெஃப்னர் தேவைப்பட்டார். அமெரிக்க அரசாங்கத்தை மட்டுமன்றி, ஹாலிவுட் உலகத்தையே கையில் வைத்திருந்தார். தனது பத்திரிகைபோலவே வாழ்க்கையையும் அனுபவித்தார். 'பிளே பாய் மேன்ஷன்' என்கிற ஒரு மாளிகையைக் கட்டி, கேர்ள் ஃப்ரெண்டுகளுடன் வாழ்ந்தார். இதற்காகவே கொண்டாடப்படுபவராக மாறியிருக்கிறார் ஹெஃப்னர். 

தன் காதலிகளிடம் போதை மருந்துகளை உட்கொள்ளக் கட்டாயப்படுத்துவதும், கூட்டு உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவதும், ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது என்பதும், அவர்களை வீட்டிலேயே பூட்டிவைப்பதும் பெரிய பாலியல் விடுதலை அல்லவா? 

ஆம்... இதுதான் அந்த பிளே பாய் மேன்ஷனின் விதிகள். மேன்ஷனில் ஹெஃப்னருடன் சேர்ந்து வாழும் யாருக்கும் வேறு ஆண் நண்பர்கள் இருக்கக் கூடாது. போதை மருந்தை எடுத்துக்கொண்டால், கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதுதான் ஹெஃப்னரின் தீராத நம்பிக்கை. ஹெஃப்னரால் வயாகரா இல்லாமல் வாழ முடியாது. ஒரு நாளைக்கு 17 பெண்களிடம் உடலுறவில் ஈடுபடும் ஹெஃப்னர், எந்த காண்டமும் பயன்படுத்த மாட்டார். பால்வினை நோய்க்கான சோதனையையும் எடுத்துக்கொள்ள மாட்டார். ஒரு பெண்ணுடன் உடலுறவில் இரண்டு நிமிடமே செலவழிப்பார். இதையெல்லாம் ஹெஃப்னர்கேட்கும்போது ஒரு சைக்கோ தோற்றம் மனதில் உண்டாகிறது அல்லவா? 

இதையெல்லாம் சொல்வது, மேன்ஷனில் அவருடன் வாழ்ந்த பெண்கள்தாம். ஹெஃப்னர் அவருடைய வாழ்க்கையில் ஒரு முழுமையான உடலுறவுகொண்டதே கிடையாது. முத்தமில்லா காமம்தான் ஹெஃப்னருடையது. இப்படித்தான் வயது முதிர்ந்தும் வாழ்ந்தார். இப்படித்தான் கேர்ள் ஃபிரெண்டுகளைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார். அவருடைய எல்லாப் புகைப்படத்திலும் ஒரு போலியான புன்னகை தெரியும். ஹெஃப்னர் வாழ்ந்தது ஒரு போலியான வாழ்க்கை. பிளே பாய் பத்திரிகையின் வாசகர்களையும் போலியான வாழ்க்கையைக் காட்டி அதற்குள் தள்ளினார்.

ஹெஃப்னர் கனவு காணச் செய்தார். ஒரு கோடீஸ்வரனின் வாழ்க்கையை, ரிக்‌ஷாகாரனிடம் விற்று அதைக் கனவு காணச் செய்தார். ஒரு கனவு உலகத்தில் அனைவரையும் வாழவைத்தார். நடைமுறை வாழ்வில் சாத்தியமே இல்லாத உடலுறவைக் காட்டினார். இன்றைக்கு ஆபாசப் படங்களால், இருபாலருக்கிடையே இருக்கும் மனரீதியிலான குழப்பங்களுக்கும், வக்கிரமான மனநிலைக்கும் இந்த மாகா பிரபுதான் காரணம். உண்மையில், 'பிளே பாய்' பாலியல் விடுதலையைப் போதிக்கவில்லை. ‘ஒரு பெண்ணுடன் எவ்வளவு வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். அவள் கல்யாணம் என்றவுடன் தள்ளிவிட்டுவிடுவது’ என்ற பெண்ணுடல் சுரண்டல் தத்துவத்தை ஹெஃப்னரின் 'பிளே பாய்' சொன்னது. பெண்ணின் உடலை வணிகப்படுத்தியது. பெண்ணின் உடல்மீதான சந்தைப் பொருளாதாரத்துக்கு ஹெஃப்னருக்கும் மிகப்பெரிய சம்பந்தம் இருக்கிறது. 

 இதற்காக இவரை இப்போது குற்றம்சாட்டுவது இந்தக் கட்டுரையின் நோக்கம் கிடையாது. ஆனால், அவர் பெயரை கூகுளில் தேடினால், 'புரட்சியாளர்' என்றும் வருவது வேதனையளிக்கிறது. அந்த வருத்தத்தை அழுத்தமாக பதிய வைக்க வேண்டுமென்பதே என் எண்ணம்..!

http://www.vikatan.com/news/world/104288-girl-friends-of-playboy-magazine-founder-hugh-hefner-tell-shocking-rules-in-playboy-mansion.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

இந்த கட்டுரை என்னைக்கொஞ்சம் சிந்திக்க வைத்துவிட்டது....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

இந்த கட்டுரை என்னைக்கொஞ்சம் சிந்திக்க வைத்துவிட்டது....:cool:

இருக்கட்டும் தம்பிக்கு பிளே பாய் என்றால் தமிழில விளங்கப்படுத்த இயலுமோ என்ன ??:rolleyes::unsure:tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கட்டும் தம்பிக்கு பிளே பாய் என்றால் தமிழில விளங்கப்படுத்த இயலுமோ என்ன ??:rolleyes::unsure:tw_blush:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்......
:grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்......
:grin:

bbm_lucu_-_telur_ayam.gif

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருக்கட்டும் தம்பிக்கு பிளே பாய் என்றால் தமிழில விளங்கப்படுத்த இயலுமோ என்ன ??:rolleyes::unsure:tw_blush:

Résultat de recherche d'images pour "அனிருத் தனுஷ் சிம்பு "

இப்ப இவர்கள்தான், இது போதாது என்றால் சொல்லவும்.......!  tw_blush:

  • தொடங்கியவர்

இது அநியாயம்.tw_blush: தெரியாமல் ஒருவர் கேட்கும்போது உண்மையான படத்தை போடவேணும்.

படம் போடுபவருக்கு அன்றுதான் யாழ் கடைசிநாளாக இருக்கும் என்பது வேறுவிடயம்

3 minutes ago, suvy said:

Résultat de recherche d'images pour "அனிருத் தனுஷ் சிம்பு "

இப்ப இவர்கள்தான், இது போதாது என்றால் சொல்லவும்.......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ச்ச இவங்கள் ஒருத்தரும் நமக்கு விளக்கம்  கொடுக்க மாட்டினம் விளங்கிற மாதிரி  ஒரு வேளை இவங்களுக்கும் தெரியாது என்னவோ spointing_left_100-103.gif

  • தொடங்கியவர்

இன்னும் ஓன்று டுபாயில் ஆச்சிரம் வைத்து இருந்தவர் ப்ளேபோய் தெரியாது என்பது எல்லாத்தையும் விட அக்கிரமம்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

இது அநியாயம்.tw_blush: தெரியாமல் ஒருவர் கேட்கும்போது உண்மையான படத்தை போடவேணும்.

படம் போடுபவருக்கு அன்றுதான் யாழ் கடைசிநாளாக இருக்கும் என்பது வேறுவிடயம்

ஏன் இந்தக் கொலைவெறி....,படங்கள் இருக்குது அதை தேடித் பிடிக்கிறது அவரின் சாமர்த்தியம்.

4 minutes ago, நவீனன் said:

இன்னும் ஓன்று டுபாயில் ஆச்சிரம் வைத்து இருந்தவர் ப்ளேபோய் தெரியாது என்பது எல்லாத்தையும் விட அக்கிரமம்..:grin:

அவருக்கு தெரியாது போலத்தான் இருக்குது. தெரிந்திருந்தால் துபாயை விட்டு ஏன் வரப்போகிறார்.

6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ச்ச இவங்கள் ஒருத்தரும் நமக்கு விளக்கம்  கொடுக்க மாட்டினம் விளங்கிற மாதிரி  ஒரு வேளை இவங்களுக்கும் தெரியாது என்னவோ spointing_left_100-103.gif

குதிரைக்கு குளத்தைக் காட்டலாம் ஆனால் குதிரைதான் தண்ணி குடிக்க வேணும். உங்க இல்லாத குளமா,பாடும் மீன்களுக்கு பேர்போன இடமல்லவா....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நவீனன் said:

இன்னும் ஓன்று டுபாயில் ஆச்சிரம் வைத்து இருந்தவர் ப்ளேபோய் தெரியாது என்பது எல்லாத்தையும் விட அக்கிரமம்..:grin:

ஹாஹாஹாtw_blush:

2 minutes ago, suvy said:

ஏன் இந்தக் கொலைவெறி....,படங்கள் இருக்குது அதை தேடித் பிடிக்கிறது அவரின் சாமர்த்தியம்.

அவருக்கு தெரியாது போலத்தான் இருக்குது. தெரிந்திருந்தால் துபாயை விட்டு ஏன் வரப்போகிறார்.

குதிரைக்கு குளத்தைக் காட்டலாம் ஆனால் குதிரைதான் தண்ணி குடிக்க வேணும். உங்க இல்லாத குளமா,பாடும் மீன்களுக்கு பேர்போன இடமல்லவா....!  tw_blush:

கடைசில நம்மள பிளே பாய் ஆக்கிடாங்கள்   நான் நினைக்கிறன் நல்லா ஓடி விளையாடுற பொடியன் என நம்ம இங்கிலிசு ரான்சிலேற் எப்புடிtw_blush: 

குளமோ குட்டையோ இறங்கினவர்களுக்குத்தானே அனுபவம் தெரியும் நான் கால் வைக்க பயப்படுறன் அவ்வளவுதான் tw_blush: மீன்களை  தொட்டால் வெட்டு நிட்சயம்  வெட்டு நிட்சயம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.