Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

Featured Replies

வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு

 
வெள்­ளி­யன்று வடக்­கில் முழு­மை­யான அடைப்பு
 

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வட­மா­கா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

பொது அமைப்­புக்­கள், அர­சி­யல் கட்­சி­கள் இணைந்து கூட்­டாக இந்த அடைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளன.

அன்­றைய தினம் காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கத்­தின் முன்­னால் கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

போராட்­டம் தொடர்­பில் 19 அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் ஒப்­ப­மிட்டு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்­துள்­ளன.

அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்பு சட்­ட ­ரீ­தி­யான விட­யம் என்­ப­தைக் கடந்­து ­விட்­டது. நியா­யத்­தின் அடிப்­ப­டை­யில் அணு­கப்­பட வேண்­டிய ஓர் விட­ய­மாக ஆகி­விட்­டது.

ஓர் அர­சி­யல் தீர்­மா­னத்­தின் ஊடா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய அடிப்­ப­டை­யான பிரச்­சி­னை­க­ளுள் ஒன்று என்ற பரி­மா­ணத்­தை­யும் அடைந்­து­விட்­டது.

12 ஆயி­ரம் முன்­னாள் விடு­த­லைப் புலி­களை, குறு­கி­ய­கா­லத் தடுப்புக்குப் பிறகு, மீள­வும் சமூ­கத்­து­டன் இணைய வழி­வகை செய்த ஓர் அரச பொறி­மு­றை­யா­னது, வெறும் 132 பேர்­களை மட்­டும் தொடர்ந்­தும் சிறை­க­ளில் அடைத்­தி­ருப்­ப­தா­னது எவ்­வித சட்ட அர்த்­த­மும் இல்­லாத செயற்­பாடு.

எமது வாக்­கு­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­கள், அர­சின் பங்­கா­ளி­க­ளா­க­ மாறி, அனைத்து விட­யங்­க­ளி­லும் அர­சுக்கு உறு­து­ணை­யாக இருக்­கின்­றார்­கள்.

நாடா­ளு­மன்­றச் செயற்­பா­டு­கள் அனைத்­தி­லும் அரசை நியா­யப்­ப­டுத்தி ஆத­ரிக்­கின்­றார்­கள்.

ஆத­ர­வுக்­கான பிர­தி­யீ­டா­கத்­தன்­னும் – உறு­தி­யான தளம்­ப­லற்ற வார்த்­தை­க­ளால் பேசி – சிறை­க­ளில் வாடும் தமிழ் அர­சி­யல் கைதி­களை விடு­விக்க அவர்­க­ளால் முடி­யும்.

உற­வு­கள் சிறை­க­ளில் வாடி­னா­லும் பர­வா­யில்லை, தாம் அர­சைச் சங்­க­டப்­ப­டுத்­தக்­கூ­டாது என்­ப­தற்­கா­க­வும், அர­சு­ட­னான தமது உற­வு­கள் பாதிப்­பு­றக் கூடாது என்­ப­தற்­கா­க­வும், மென்­மை­யா­கப் பேசி எமது பிர­தி­நி­தி­கள் காலத்­தைக் கடத்தி வரு­கின்­றார்­கள்.

தமது வழக்­கு­களை மீண்­டும் தமிழ்ப் பகுதி நீதி­மன்­றங்­க­ளுக்கு மாற்­ற ­வேண்­டும் என்ற உட­ன­டிக் கோரிக்­கை­யை­யும், அவ்­வாறு மாற்­றப்­பட்­ட­தன் பின்பு, தமது வழக்­கு­க­ளைத் துரி­த­மாக விசா­ரித்து முடிவு காண­ வேண்­டும்.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் கால­வ­ரை­ய­றை­யற்ற உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரின் கோரிக்­கை­களை இழுத்­த­டிப்­பின்றி உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும்.

முழுத் தமிழ் அர­சி­யற் கைதி­க­ளை­யும் ஓர் அர­சி­யற் தீர்­மா­னத்­தி­னூ­டாக விடு­விக்­கு­மாறு அரசை வலி­யு­றுத்­தி­யும், அச­மந்­தப் போக்­கைக் கைவிட்­டும் – மழுப்­பல் பதில்­களை வழங்­கா­ம­லும் – அனைத்து தமிழ் அர­சி­யல் கைதி­க­ளை­யும் விடு­விப்­ப­தற்­கான நேரடி அழுத்­தத்­தினை அர­சுக்கு வழங்­கு­மாறு எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­களை வற்­பு­றுத்­தி­யும் வடக்கில் முழுமையான அடைப்பை நடத்தவுள்ளோம்.

எதிர்­வ­ரும் சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் வரு­கை­த­ர­வி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, தாம­த­மற்­ற­தீர்வு காண­வேண்­டிய இந்த விவ­கா­ரத்­தின் தீவி­ரத் தன்­மையை உணர்த்­து­வ­தற்­கு­மாக, நாளை­ ம­று­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் முழு அடைப்­புப் போராட்­டத்தை மேற்­கொள்ள தமிழ் மக்­களை உரி­மை­யு­டன் அழைக்­கின்­றோம்.

அவ­சர மருத்­துவ சேவை­கள் தவிர்ந்த ஏனைய அனைத்­துச் செயற்­பா­டு­க­ளை­யும் முழு­ம­ன­தோடு நிறுத்தி – நியா­யத்­தோ­டும் சாவோ­டும் போரா­டு­கின்ற தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு எமது ஆத்­ம­ப­லத்­தைக் கொடுப்­போம்.

தமிழ் அர­சி­யற் கைதி­க­ளுக்கு நிரந்­தர விடு­தலை கிடைக்­கும்­வரை நாம் ஓய­மாட்­டோம் என்ற செய்­தியை – இந்த நாட்­டின் அர­சுக்­கும், எமது நாடா­ளு­மன்­றப் பிர­தி­நி­தி­க­ளுக்­கும், இதன் பொறுப்­பு­டைய ஒவ்­வொரு தரப்­புக்­கும் உறு­தி­யா­கத் தெரி­விக்க நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் செய­ல­கம் முன்­பாக அணி திரள்­வோம் -­என்­றுள்­ளது.

தமிழ் மக்­கள் பேரவை, யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக ஆசி­ரி­யர் சங்­கம், இலங்கை ஆசி­ரி­யர் சங்­கம், அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு, வட­மா­காண புதிய அதி­பர் சங்­கம், யாழ்ப்­பாண பல்­க­லைக்­கழ ஊழி­யர் சங்­கம், சமூக விஞ்­ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்­பா­ளர் சங்­கம், சமூக நீதிக்­கான வெகு­சன அமைப்பு, தமிழ் மக்­கள் வாழ்­வு­ரி­மைக்­கான செயற்­பாட்டு மையம், வலி. வடக்கு மீள்­கு­டி­யேற்ற மற்­றும் புனர்­வாழ்­வுக் குழு, யாழ்ப்­பாண பொரு­ளி­ய­லா­ளர் சங்­கம், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி, புதிய சன­நா­யக மாக்­சிச லெனி­னி­சக் கட்சி, சன­நா­யக மக்­கள் விடு­தலை முன்­னணி, தமிழ் சிவில் சமூக அமை­யம், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்­புக்­க­ளுமே முழு அடைப்­புப் போராட்­ட­துக்­கான அழைப்பை விடுத்­துள்­ளன.

http://newuthayan.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

 

அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்தால் மற்றும் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

வடபகுதியிலுள்ள பல பொது அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இன்று காலை 09:30 க்கு நடத்தப்படவுள்ளது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

தமிழ் மக்கள் பேரவை , யாழ்ப்பாணபல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ,இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம்,யாழ்ப்பாண பல்கலைக்கழ ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞாக ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ்ர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகியன இணைந்து இந்த அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

இந்நிலையில் யாழ் நகர் வெறிச்சோடி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

களையிழந்த யாழ் நகர்:பூரண ஹர்த்தால் -முழுக்கடையடைப்பு

வடக்கு முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.பாடசாலைகள் அனைத்தும் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/-Purnana-Hartal-Full-Bandh-in-jaffna

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் பூரண கடையடைப்பு :

jaff-2-3.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளுகுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் , பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளதுடன் , போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை

http://globaltamilnews.net/archives/45025

jaff-3-3.jpgjaff-4-2.jpgjaff-5-1.jpgjaff-10.jpg

  • தொடங்கியவர்

முடங்கியது வடக்கு

 
முடங்கியது வடக்கு
 
 

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகின்றது.

அத்தியாவசியச் சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பிரதான நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.

நாளை (சனிக்கிழமை) அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் தாமதமற்றுத் தீர்வு காண வேண்டிய இந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்காக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இன்று வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் நிலையில் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

jaffna1-750x400.jpgjaffna2-750x400.jpg

 

திருநெல்வேலி

Thiru-750x400.jpgThiru2-750x400.jpgThiru3-750x400.jpg

 

அச்சுவேலி

achuveli-1-750x400.jpgachuveli2-750x400.jpg

 

நெல்லியடி

nellijadi1-750x400.jpgnellijadi2-750x400.jpgnellijadi3-750x400.jpg

 

மந்திகை

manthikai1-750x400.jpgmanthikai2-750x400.jpg

 

பருத்தித்துறை

point-pedro1-750x400.jpgpoint-pedro2-750x400.jpgpoint-pedro3-750x400.jpgpoint-pedro4-750x400.jpg

 

வல்வெட்டித்துறை

valvettithurai1-750x400.jpgvalvettithurai2-750x400.jpgvalvettithurai3-750x400.jpg

 

முல்லைத்தீவு

mullai1-750x400.jpgmullai2-750x400.jpgmullai3-750x400.jpgmullai4-750x400.jpg

 

தண்ணீரூற்று

Thanneruru1-750x400.jpgThanneruru2-750x400.jpgThanneruru3-750x400.jpgThanneruru4-750x400.jpgThanneruru5-750x400.jpg

http://newuthayan.com/story/36405.html

  • தொடங்கியவர்
வடக்கில் பூரண ஹர்த்தால்
 

அநுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் கோரி வடக்கு மாகாணத்தில் இன்று (13) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

போக்குவரத்து சேவைகள், வர்த்தக நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் - எம்.றொசாந்த்

image_44e0cbd44b.jpgimage_0c7660966e.jpgimage_dfab99ccbd.jpg

கிளிநொச்சி - சுப்பிரமணியம் பாஸ்கரன்,சண்முகம் தவசீலன்

image_b1713466c7.jpgimage_9f29891781.jpg

மன்னார் -  எஸ்.றொசேரியன் லெம்பேட்

image_91efa42db6.jpgimage_000c3fafcc.jpgimage_0d71d8f4fe.jpgimage_73cb232ec1.jpg

வவுனியா - க.அகரன்

image_63402a14c9.jpgimage_b7457b97c2.jpgimage_f2450c8c27.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/வடக்கில்-பூரண-ஹர்த்தால்/46-205495

  • தொடங்கியவர்

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

 

thumb_large_jaffna.jpg

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்த முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. நேற்றுமுன்தினம் 19 அமைப்புகள் இணைந்து அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நேற்று 40க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் அதற்கு ஆதரவு வழங்கின.

தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்  தவிர்ந்த  ஏனைய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கின.

  • தொடங்கியவர்

**

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் : இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்

 

 

வடக்கில் பூரண ஹர்த்தால் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

22450754_981720181979351_796932444_o.jpg

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்று வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

22450789_981720261979343_230884189_o.jpg

இந்நிலையில், வடமாகாண ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏ-9 வீதியை வழிமறித்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திலல் ஈடுபட்டு வருகின்றனர்.

22473540_981720241979345_2014239521_o.jp

இதேவேளை, வடமாகாண அளுநர் அலுவகம் முன்பு கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22522071_981730835311619_1676907319_o.jp

 

 

http://www.virakesari.lk/article/25706

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு

அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு
 
 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக் கோரியும் கிளிநொச்சியில் நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மதத்தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் கவனவீர்ப்பில் பங்குகொண்டனர்.

அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய அரச தலைவருக்கான மனு கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று வடக்கு மாகாணமும் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வடக்கின் இயல்பு நிலைமை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

22405808_862008583965388_33632623385761922449732_862008683965378_190113310841073

http://newuthayan.com/story/36521.html

  • தொடங்கியவர்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்பு

 
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் உணவு தவிர்ப்புவெறிச்சோடியுள்ள வவுனியா நகர்ப் பகுதி
 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மு.ப. 10 மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தப்படுகின்றது. வவுனியாவில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டதை நடத்துகின்றனர்.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, அந்தப் பிரச்சினையின் தீவிரத் தன்மையை அரசுக்கு உணர்த்துவதற்காக வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

http://newuthayan.com/story/36506.html

  • தொடங்கியவர்

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்

north.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது.

வடமாகாண ஆளூநர் அலுவலகம் முன்பு இன்று காலை 9.30 மணியளவில் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் உறவினர்கள் , அரசியல்வாதிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

north2.jpgnorth3.jpgnorth4.jpgnorth5.jpgnorth7.jpgnorth8.jpgnorthththth.jpg

http://globaltamilnews.net/archives/45105

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

  • தொடங்கியவர்
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
 

image_8c40d4cd76.jpgஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல்கைதிகளுக்கு ஆதரவாக, வவுனியாவிலுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று (13) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து,  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா கந்தசாமி கோவில் மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் தொடர்ச்சியாக 233 ஆவது நாளாக தங்கள் உறவுகளை விடுதலை செய்யக்கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_e23a05fad2.jpgimage_6117fa8f95.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியல்-கைதிகளுக்கு-ஆதரவாக-உண்ணாவிரதம்/175-205515

28 minutes ago, Kadancha said:

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

ம்ம் அப்படி இதுவரை செய்தி இல்லை. இருந்தான் இணைப்பேன்.

  • தொடங்கியவர்

 

வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

  • தொடங்கியவர்

முல்லைத்தீவும் முடங்கியது

 

 

அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 19 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், வவுனியா நீதிமன்றில் உள்ள அரசியல் கைதிகளின் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றவேண்டாம் என தெரிவித்தும் தமிழர் தாயக பகுதிகள் எங்கும் இன்று முழுமையான ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

22405986_1802368969792816_16945331260719

இந்த நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கபட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டமும் ஹர்த்தாலால் பூரணமாக முடங்கியது.

22365642_1802368983126148_64084392973778

முல்லைத்தீவு மாவட்டம் தழுவிய ரீதியில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

IMG_0897.JPG

முல்லைத்தீவுநகரம், முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, ஒட்டிசுட்டான், மாங்குளம், மல்லாவி துணுக்காய், விசுவமடு, பாண்டியன்குளம் போன்ற பிரதேசங்களில் வணிக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது .

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் அரச பேரூந்துக்களும்  போக்குவரத்து பணிகள் அனைத்தையும் நிறுத்தி ஆதரவு வழங்கியுள்ளார்கள்.

http://www.virakesari.lk/article/25719

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி வட மாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்தவித அமைப்புகளோ அல்லது சமூக ஆவலர்களோ ஹர்த்தாலை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கிழக்கு மாகாணத்தில், அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளும் வழமை போல் நடைபெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அரச திணைக்களங்கள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் போக்குவரத்து அனைத்தும் வழமைபோல் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பூரண கடையடைப்பினால் கிளிநொச்சி முழுமையாக முடங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கிழக்கிலும் அரசியல் கைதிகளுக்காக  ஹர்த்தால் என்பது உண்மையா?

கிழக்கில் இல்லை ஆனால் வெள்ளிக்கிழமையென்ர படியால் முஸ்லீம்கள் கடைகளை பூட்டினார்கள் தமிழர்கள் திறந்தார்கள்  எப்போது வட க்கு, கிழக்கு என பிரிக்கப்பட்டதோ அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தொடர்புகளை இழக்குறோம் என நினைக்கிறன் இதன் வெற்றிக்கு தமிழ் எம்பிக்கு நன்றி கூற வேண்டும்  மகிந்த காலத்தில்  பிரிக்க்கும் வேடிக்கை பார்த்ததை  இணைக்காத வரைக்கும் வெவ்வேறுதான் போல் இருக்கு இதற்கு  என்ன செய்யலாம் ??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம்  தவிர்ந்த  ஏனைய அமைப்புக்கள் முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கின.

Bild könnte enthalten: 2 Personen, Text  1.jpg.07e29169a214c01b466f788c116ada98.jpg

தமிழரசு கட்சியின் ஆதரவு இல்லாமல்.... இந்தக்  கடையப்புக்கு, அனைத்து தரப்பு  மக்களும்,
ஒத்துழைப்பு வழங்கியுள்ளதை பார்த்தால்.....
அடுத்த தேர்தலில்.... தமிழரசு கட்சிக்கு,   கட்டுக்காசும் கிடைக்காது போலுள்ளது.
சம்பந்தன், சுமந்திரன், மாவை... எல்லாரும்.... வீட்டில் இருந்து, தனித் தவில் வாசிக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்தால்.. கடையடைப்பு எல்லாம் சிங்களவனுக்கு புரியும் பாசைன்னா.. எங்களுக்கு எப்பவோ விடிவு வந்திருக்கும்.

இப்படியான நிகழ்வுகள் தமிழ் மக்கள் ஒற்றுமையா இருக்கினம் என்பதைக் காட்ட உதவுமே தவிர.. சிங்களவனுக்கு ஒரு சொட்டு.. அழுத்தமும் கொடுக்காது.

குறைஞ்சது.. இந்த ஹர்த்தால் சமயத்தை பாவிச்சு.. யாழ் நகரை.. மாநகர சபை சுத்தமாவது செய்திருக்கலாம். :rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.