Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி!

Featured Replies

என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி!

என்னை பலவீனப்படுத்தினால்  மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

என்னைப் பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் கூத்தாடும்; யாழில் சனாதிபதி!

இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவ்வாறு கருத்தை முன்வைத்துள்ளார்.

யாழ் வரும் போது சில சம்பவம், சில போராட்டம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

நான் பல வருடம் அரசில் செய்து வருகிறேன். எனக்கு நன்றாக தெரியும்.என்னை ஜனாதிபதியாக எல்லாரும் தெரிவு செய்தீர்கள்.

பிரச்சனை தீர்க்க தான் ஜனாதிபதி ஆக்கினார்கள்.தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழ்மை இல்லாமல் செய்ய வேண்டும்.

அத்தனை  பேரும் என்னுடன் வந்து கலந்துரையாடி பிரச்சனைகளை தீர்க்க வாருங்கள். நான் உங்களுக்கு அழைப்புவிடுகிறேன்.

கறுப்பு கொடி காட்டினார்கள். இரத்து சத்தம் இட்டார்கள்.அது எனக்கு எதிர்ப்பாக இருக்கலாம்.

நான் அவர்களை பார்க்க போனேன். ஏன் என்று கேட்டேன் சொன்னார்கள்.பிரச்சனைகள் இருந்தால் பேச்சு வார்த்தைக்கு வர சொல்லிகேட்டேன்.அது முடியாது இப்ப கோரிக்கைக்கு முடிவு தாருங்கள் என கோருகிறார்கள்.

எந்த பிரச்சனை என்றாலும் அனைத்து தரப்புடன் பேசித்தான் ஆக வேண்டும்.என்னுடன் பேசலாம். முரண்பாடு ஏற்படுத்த கூடாது, வன்முறை வேண்டாம் .

இந்த நாட்டில் இனி யுத்தம் ஏற்படுத்த முடியாது யுத்தத்தால்அனுபவப்பட்டுள்ளோம்.

செல்வந்தர்கள் வெளிநாடு போய்விடுவார்கள்,  ஆனால் ஏழைகள்தான் கஷ்ரப்படுகிறார்கள்.

அவர்களின் தலைவர் இறந்து விட்டார். அதனால் ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும்.

எனவே இங்கு கறுப்பு கொடி உயர்த்த தேவை இல்லை சமாதானத்துக்கு வெள்ளை கொடி உயா்த்த வேண்டும்.

விரோதம் வன்முறை ஏற்படுத்தினால் சக்தி பெறுவது வேறு ஆட்கள் தான்.

எல்லா இனம் மத்தியில் சகோதரம் ஏற்படுத்த தான் நான் செயற்பட்டு வருகிறேன்.

அனைவருக்கும் ஒரு நியாயம் ஏற்படுத்த தான் செயற்படுகிறேன்.

என்னை பலவீனப்படுத்தினால்  மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என்று மேலும் குறிப்பிட்டார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

என்னை பலவீனப்படுத்தாதீர்கள் ! பேய்கள் பலம் பெற்றுவிடுவார்கள் !

maithri-1-300x181.jpg

இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனா கோரிக்கை விடுத்துள்ளார்.

 
யாழ்.இந்துக்கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தனது உரையில் தெரிவிக்கையில் ,
 

யாழ்.வருகை தந்த போது சில போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. நான் பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயக உரிமை என்பது எனக்கு தெரியும்.

 
என்னை எல்லோருமாக வாக்களித்தே ஜனாதிபதி ஆக்கினீர்கள். அது எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று தான் ஜனாதிபதி ஆக்கினீர்கள். அதுவும் எனக்கு தெரியும்.
 
இந்த நாட்டிலே தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். பொருளாதரத்தை மேம்படுத்தி ஏழ்மைய இல்லாமல் செய்ய வேண்டும். அதற்காக என்னுடன் கலந்துரையாட வாருங்கள் என உங்களிடம் அழைப்பு விடுக்கிறேன்.
 
இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது எனக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நான் எனது வாகனத்தை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்னையை கேட்டேன். அவர்கள் தமது கோரிக்கையை என்னிடம் கூறினார்கள்.
 
அதன் போது நான் அவர்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அவர்கள் அதற்கு வர தயாராக இல்லை. தமது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள் என என்னிடம் கோருகின்றார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் , பேசித்தான் தீர்க்க முடியும். வன்முறையால் தீர்க்க முடியாது.
 
முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வன்முறைகளை ஏற்படுத்த வேண்டாம். இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுத்த முடியாது. யுத்தத்தால் பலவற்றை இழந்து அனுபவங்களை பெற்று உள்ளோம். யுத்தம் ஏற்பட்டால் செல்வந்தர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விடுவார்கள் ஏழைகளே கஷ்டங்களை அனுபவிப்பார்கள். மீண்டும் யுத்தம் ஏற்பட அனுமதிக்க முடியாது.
 
இங்கே கறுப்புக்கொடி உயர்த்த தேவையில்லை. சமாதனத்திற்கான வெள்ளைக்கொடிகளையே உயர்த்த வேண்டும். எமக்கிடையில் விரோதங்கள் வன்முறைகள் ஏற்பட்டால் , சக்தி பெறுவது வேறு நபர்கள் தான்.
 
எல்லா இன மத மக்கள் மத்தியில் , சகோதரத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் என செயற்பட்டு வருகிறேன். அந்நேரத்தில் என்னை பலவீனப்படுத்தினால் , பேய்களுக்கு தான் பலம் கூடும். உங்கள் வாழ்வினையும் நாட்டினையும் ஒளிமயமாக்க ஒன்று பட்டு செயற்படுவோம். என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/45306

  • தொடங்கியவர்

யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆற்றிய உரை... 01

 

யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆற்றிய உரை... 02

 

யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தின போட்டி விருது வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆற்றிய உரை... 03

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

என்னை பலவீனப்படுத்தினால்  மீண்டும் பேய்களுக்கதான் பலம் கூடும் என்று மேலும் குறிப்பிட்டார்.

  நீங்கள் எல்லோருமே தமிழினத்திற்கு எதிரான பேய்கள் தான்

  • தொடங்கியவர்

தமிழும் சிங்களமும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவை; யாழில் ஸ்ரீலங்கா சனாதிபதி!

 

தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை என்று ஸ்ரீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும் மொழியினூடாக மக்களை கூறுபோட முனைபவர்கள் மனிதர்களே இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வில்  பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடையத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

தமிழும் சிங்களமும் இரண்டாயிரம் ஆண்டு பழமையானவை; யாழில் ஸ்ரீலங்கா சனாதிபதி!

"இந்த தமிழ் மொழியைப் பற்றி முக்கியமாக நான் கூற விரும்புகிறேன். நாம் ஆசியப்பகுதியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் தெரியும். மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் குடியேறினார்கள். அந்தக்காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டார்கள்.

தென்னிந்தியாவிலே வாழ்கின்ற மக்களின் முக்கிய மொழியாக தமிழ் மொழி உருவானது. தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இரண்டு மொழிகள். உங்களுக்குத் தெரியும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள சம்மந்தங்கள் சடங்குகள் எல்லாம் ஆயிரத்து ஐநூறு வருடங்களையும் தாண்டி பின்னோக்கிச் செல்கின்றது.

Image may contain: 10 people, people smiling, people standing

மத ரீதியாக எங்களுக்குள் ஒரு நெருக்கம் இருக்கிறது. அதன்மூலமாக பெரிய கலாசாரத் தொடர்புகளும் இருக்கத்தான் செய்கிறது. உங்களுக்குத் தெரியும் இந்தியாவிலே பல மொழிகள் பேசப்படுகின்றன. முழு உலகத்தையும் எடுத்துப் பார்த்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால் எண்ணூறு மொழிகள் இருக்கின்றன. அதேபோன்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்கு பழகிய பல மொழிகள் அங்கே இருக்கின்றன. அதிலே ஒருமொழிதான் தமிழ் மொழி.

இன்னொரு மொழிதான் சிங்கள மொழி, இன்னொரு மொழிதான் பாளி மொழி, இன்னொரு மொழிதான் சமஸ்கிருதமொழி, அதேபோல் இன்னொரு மொழிதான் ஹிந்தி மொழி. இந்த மொழிகளுக்கிடையே மிகவும் நெருக்கம் இறுக்கம் சமாந்தரம் இருக்கிறது. சிங்கள தமிழ் மொழிகளைப் பார்த்தால் 20 வீதமான சொற்கள் நெருக்கமானவையாகத்தான் இருக்கின்றன. மொழி என்பது மக்களை வேறுபடுத்துவதோ கூறுபடுத்துவதோ அல்ல. மொழியென்பது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான ஒரு ஊடகம். மொழியென்பது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான பாலம். ஆனால் மொழி மூலமாக மக்களைப் பிரிக்கவேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள. அது முற்றுமுழுதான தவறு. அது மக்களின் கொள்கையாக இருக்கமுடியாது. ஆகவே மொழிமூலமாக அனைவரும் சகோதரர்களாக மனிதர்களாக அனைவரும் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் வாழவேண்டும். எனவே எல்லா மொழிகளுக்கும் நாங்கள் கௌரவம் செலுத்தவேண்டும். முடியுமானால் எல்லா மொழிகளையும் நான் நன்றாகப் படிக்கவேண்டும். தமிழ் மொழியைப் படிக்கமுடியாதமைபற்றி நான் மிகவும் மனவருத்தப்படுகிறேன்.

Image may contain: 2 people, people standing

பௌத்த இந்து தத்துவங்களுக்கிடையில் இடம்பெற்ற நெருக்கம் இறுக்கம் உங்களுக்கு தெரியும். இந்து தர்மத்தில் சொல்லப்படுகிறது விஷ்ணுவின் அவதாரத்தால்தான் புத்தர் உருவானார் என்று சொல்லப்பட்கிறது. பகவத்கீதையையும் பௌத்த போதனைகளையும் நாங்கள் நன்றாகப் படிக்கவேண்டும், ஆராயவேண்டும். கடந்தகாலங்களில் மொழிகளினூடாகவும் தத்துவங்களினூடாகவும் மக்களொன்றுபட்டார்கள்.

உங்களுக்கு இலங்கையின் சரித்திரம் பற்றியும் அனுராதபுர யுகத்தைப் பற்றியும் நன்றாகவே தெரியும். அதேபோல இந்த நாட்டில் பொலனறுவை யுகத்தைப் பற்றியும் தெரியும். இன்றைய காலத்தில் நாங்கள் தேசிய நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். சிங்கள தமிழ் முஸ்லிம் எனும் சகோதரத்துவ சொல்லப்பற்றிப் பேசக்கூடிய நட்புறவினைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு பல தடைகளைக் கொண்டுவருபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மனிதர்கள் அல்ல.

Image may contain: 9 people, people smiling, people standing

மனிதாபிமானமுள்ள அத்தனைபேரும் இந்த மொழிகளினூடாக ஒன்றிணைய முன்வரவேண்டும். நான் இந்த பொலனறுவை அனுராதபுர யுகங்கள் பற்றி ஏன் சொன்னேன் என்று இப்பொழுது சொல்கிறேன். தேசிய நல்லிணக்கத்தைப் பற்றிய நல்ல சிந்தனைகளைக் கொண்டிருந்த யுகம் தான் அந்த பொலனறுவையை ஆண்ட மகா பராக்கிரமபாகுவின் யுகம். பொலனறுவையில் பௌத்த விகாரைகள் பல இருக்கின்றன. அது பதினொராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலே கட்டப்பட்டது. மகா பராக்கிரமபாகு பல ஆண்டுகளாக இந்த நாட்டிலே ஆட்சிபுரிகின்றார். முழு நாடும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்த பொலனறுவையில் விகாரைகள் இருக்கின்ற அத்தனை இடங்களிலும் இந்துக் கோவில்கள் இருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். இன்று போனால்கூட உங்களுக்குத் தெரியும் பௌத்த விகாரைக்கு அண்மையில் ஒரு இந்துக் கோவில் இருக்கிறது.

Image may contain: 8 people, people smiling, people standing

அதேபோல சிங்கள மன்னர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்து திருமணம் செய்துகொண்டார்கள். அதேபோல சிங்கள இளவரசிகள் இந்தியாவில் இருக்கக்கூடிய இளவரசர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். பராக்கிரமபாகுவின் காலத்திலே நாங்கள் மியன்மாரிலே ஒரு பகுதியைப் பிடித்து வைத்திருந்தோம். இந்த விவாகம் சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினையினால்தான் அந்த நாடு கைப்பற்றல் ஏற்பட்டது. மஹா பராக்கிரமபாகு காலத்தில் எங்கள் போதி மாதவனான கௌதம புத்தனின் புனித தந்தத்தினை இங்கே கொண்டுவந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து வேலையாட்கள் படை வந்ததென்று சொல்லப்படுகிறது. அதைவிட மிக முக்கியமான ஒரு விடயத்தினை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் ஒரு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார். அதில் இந்துமக்கள் வசிக்கின்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருந்தாலும் அவர்களால் அவற்றிற்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருந்தது.” என்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Image may contain: 1 person, standing

https://news.ibctamil.com/ta/internal-affairs/sl-president-said-about-tamil

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு தெரிந்ததையே எல்லாம் சொன்னீர்கள். விஜயன் தோணியில் வைத்து தந்தையால் அனுப்ப அவன் இலங்கையில் கரைதட்டி குடியேறியதை சொல்ல மறந்திட்டீன்களோ, மறைச்சிட்டீன்களோ. உங்கட மொழியை இந்தியாவில யாரும் பேசுவதில்லை என்பதையும் அறியீர்களோ. தீர்வு கேட்டால்  கதை சொல்லுகிறீர்கள்.

  • தொடங்கியவர்

நிலையான தீர்வை நோக்கிய அரசின் பயணத்தைத் தடுக்க மனிதாபிமானம் அற்றவர்கள் முயற்சி: யாழ். இந்துவில் ஜனாதிபதி

 

 

“மக்களை இணைக்கும் பாலமாக மொழிகள் இருக்க வேண்டுமே தவிர, மக்களைப் பிரிக்கும் கருவியாக இருக்கக்கூடாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ். இந்துக் கல்லூரியில், நேற்று (14) நடைபெற்ற தேசிய தமிழ் மொழித் தின விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2_Prezident.jpg

“இன்று சிலர் மக்களிடையே பேதமையை உருவாக்கும் கருவியாக மொழியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால், மனிதாபிமானம் உள்ள எவரும் அனைத்து மொழிகளையும் மதிப்பதுடன் அவற்றைக் கற்றுக்கொள்ளவும் முன்வர வேண்டும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் முன்னொரு காலத்தில் பல்லினத்தவரும் தத்தமது இன, சமய, மொழி பேதத்தைத் தாண்டி மக்கள் நெருங்கிப் பழகிவந்ததை நினைவுபடுத்திய ஜனாதிபதி, எல்லா இனத்தவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்வை ஏற்படுத்த முனையும் தற்போதைய அரசின் பயணத்தை, மனிதாபிமானம் அற்ற சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

“இன, சமய, மொழி வேறுபாடுகளைத் தாண்டி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான கல்வி உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு உயர் கல்வியறிவை வழங்கி இந்நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது” என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வடபகுதி விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த தனது கருத்துக்களையும் வெளியிட்டார்.

“வடபகுதி கிழங்கு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கிழங்கு இறக்குமதியைத் தடைசெய்வது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதற்காக உரிய அதிகாரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவுசெய்துள்ளது. அத்துடன், யாழ்ப்பாண விவசாயிகளுக்கான கடன் உதவிகள் குறித்து அரச, தனியார் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் பெற்றுத் தரவும் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25798

 

 

 

“என்னை பலமிழக்கச் செய்தால் பேய்கள் மீண்டும் பலம்பெறும்”: ஜனாதிபதி

 

 

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அப்போது, அவரது வருகையை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்த தனது விமர்சனத்தை முன்வைக்கவும் அவர் தவறவில்லை.

3_Prez_Jaffna.jpg

“எனது வருகையை எதிர்த்து இங்கு சிலர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். என்னை எதிர்க்கும் விதமாக உரத்துக் குரல்கொடுத்தார்கள், கத்தினார்கள். அதைக் கண்டு நான் அஞ்சவில்லை. அவர்களை நேருக்கு நேர் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிய முற்பட்டேன்.

“ஆனால் அவர்கள் பிரச்சினை குறித்துப் பேசவிரும்பவில்லை. உடனடியாகத் தீர்வு வழங்கவேண்டும் என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? எந்தப் பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியுமே தவிர, வன்முறையாலோ, முரண்பாடுகளை ஏற்படுத்துவதனாலோ முடியாது.

“ஏற்கனவே வன்முறையால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இந்த நாடு முகங்கொடுத்துள்ளது. வசதியுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பிச் சென்றுவிடுவார்கள். ஆனால் வறியவர்கள்தான் சிக்கிக்கொள்வார்கள். 

“வன்முறையைப் பயன்படுத்தினால் நிச்சயமாக அரசாங்கமோ, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களோ எந்தவித லாபமும் அடையப் போவதில்லை. ஆனால் அதை வைத்து வேறு சிலர் இலாபம் அடைவது உறுதி.

“என் மீது நம்பிக்கை வைத்துத்தான் நீங்கள் அனைவருமே எனக்கு வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் தீர்வு ஏற்படுத்தித் தரவே நான் முயற்சிக்கிறேன். இந்த நிலையில், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் மூலம் என்னை, எனது முயற்சிகளை பலவீனப்படுத்தினால் மீண்டும் பேய்கள் தான் பலம் பெறும். அது இந்த நாட்டுக்கே பெரும் ஆபத்தாக அமைந்துவிடும்.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25799

கெளரவமான பிளாக் மெயில். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தம் தம் பாணியில் பயமுறுத்துவார்கள். கிறிஸ் பூதம், சத்தம் போட்டால் தீர்வு குழம்பிப் போய்விடும், ஜெனீவாவுக்கு போனால் சர்வதேசம் ஒண்டும் செய்யாது. பேய் வந்துவிடும். இப்பிடி எத்தனைய கண்டும் கேட்டும் விட்டோம். 

  • தொடங்கியவர்

 யாழ்.இந்து மாண­வர்­களால் நாட்­­டுக்கும் கல்­லூ­ரிக்கும் பெரு­மை

அரச தலைவர் மைத்திரிபால புக­ழா­ரம்

 
 யாழ்.இந்து மாண­வர்­களால் நாட்­­டுக்கும் கல்­லூ­ரிக்கும் பெரு­மை
 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.

அவர்கள் ஊடாக இந்தப் பாடசாலைக்கும் பெருமை. எமது நாட்டுக்கும் பெருமை. இப்போது கல்வி கற்கின்ற மாணவர்களும் எதிர்காலத்தில் அவ்வாறு நாட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்கவேண்டும்.இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் தேசிய தமிழ்மொழித் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவித்ததாவது:இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் 16 நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். இந்தக் கல்லூரியில் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். அவர்களால் இந்தப் பாடசாலைக்கும் பெருமை. நாட்டுக்கும் பெருமை. இங்கு கற்றுக் கொண்­டி­ருக்­கின்­ற மாணவர்களும் எதிர்காலத்தில் அவ்வாறு வரவேண்டும்.

மாணவர்களுக்கு கல்வித் துறையில் வகுப்பறையில் மட்டுமல்ல, பாடசாலையில் மட்டுமல்ல, நாட்டில் மட்­டுமல்ல இந்த உலகத்துடன்தான் போட்டியிருக்கின்றது. அதை வெற்றி கொள்ள வேண்டும். அந்தப் புதிய உலகுக்குள் நீங்கள் செல்லவேண்டும் – – என்றார்.

http://newuthayan.com/story/37339.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதிக்கு   பலமான வரவேற்புத்தால் போல் இருக்கு யாழில் ஐ மீன் யாழ்ப்பாணத்தில் tw_blush:

ஒல்லாந்தர் ஆங்கிலேயர் ஆட்சியானாலும் சரி சிங்கள ஆட்சியானாலும் சரி ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்துக்கொள்க் கூடியவர்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றார்கள். இந்த நிலை இருக்கும் வரை தமிழரும் விமோசனம் பெற முடியாது சிங்கள பேரினவாதமும் எதையும் விட்டுகொடுக்கப் போவதில்லை. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அவர்களின் பெரும் படைகளை வைத்து நாட்டை கட்டுப்படுத்தவில்லை. இந்தியர்களையே கவலர்களாக வைத்து இந்தியர்களையே கட்டுப்படுத்தியது. தற்போது அதிகாரத்தில் உள்ள அரசியல் சக்திகளும் காவல் துறையை அதே பாணியல் தான் பயன்படுத்துகின்றது.  ஈழத்தில் தமிழர் நிலமையும்  அவ்வாறுதான். ஒரு பக்கம் மேல்தட்டுகள், அரச உத்தியோகம் சார்ந்தவர்கள் ஊடாக தமிர்களை கட்டுப்படுத்துதல், என்னுமொருபக்கம் தமிழ் அரசியல் வாதிகள் ஊடாக தமிழர்களை ஏமாற்றுதல், என்னுமொரு பக்கம் ஆவா குழுக்கள் வாழ்வெட்டுக்குளுக்கள். அதற்கும் மேல் நேரடியான ராணுவம். சிறைப்பிடிக்கப்பட்டவர்களை தொடர்ந்து அடைத்து வைத்திருப்பதற்கு தனியே ராணுவச் சிறைகள் மட்டும் போதாது அரசை அண்டிப்பிழைக்கும் தமிழர்கள் தமிழ் அரசியல் வாதிகளின் மறைமுக அனுமதியும் தேவை. அது தாராளமாக சிங்களத்திற்கு கிடைக்கின்றது. புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழர்கள் மற்றும் தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள் தான் புலிகளின் பேராட்ட நியாயத்தை உயர்த்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ஜனாதிபதியாகும் முன்பு 
கூடியிருந்து ஆடியது ? பேய்களுடனா ? பிசாசுகளுடனா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.