Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை: பௌத்த பீடாதிபதிகள் கருத்து

Featured Replies

புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை: பௌத்த பீடாதிபதிகள் கருத்து

 

 

தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன.

11_Asgiriya_Malwatta.jpg

பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகளே மேற்படி கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் - முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் - இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் எதுவித மாற்றங்களை ஏற்படுத்தும் தேவை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்றும் அஸ்கிரிய - மல்வத்தை பீடாதிபதிகள் இணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/25972

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தீவில் அமைதியும், சமாதானமும், சுபீட்சமும் சிங்கள தேசம்  விரும்புவது போன்றே நெடுங்கால போக்கில்  நிலவுவதற்கு நீங்கள் ஆற்றும் சேவைக்கு புத்த பெருமானால் கூட முடியாதது. நீங்களே வருங்கால சிங்கள பௌத்தத்திற்கு சிங்கள தேசத்தால் புத்தராக்கப்படுவீர். 

சமஷ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை, பெளத்த மதமே அரச மதம் என்பதில் மாற்றமும் இல்லை,  காணி பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைக்கு கொடுக்கப்படாது என்பதிலும் கூட திருத்தம் இல்லை, ஆயினும் கூட சிங்கள பெளத்த மேலாதிக்கம் ஒரு அதி குறைந்த பட்ச அதிகாரப் பரவலாக்கத்துக்கும் தயார் இல்லை

அனேகமாக பெளத்த பீடங்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கும். தீர்வுக்கான வரைவு குப்பையில் போடப்படும்

எந்த தீர்வுக்கும் வராத சிங்கள தரப்பை உலகம் மீண்டும் பார்க்க போகின்றது. தமிழர்கள் தான் எப்பவும்  தீர்வுக்கு தடை என்று 30 வருடங்களுக்கும் மேலாக சொல்லிக் கொண்டு இருந்த சர்வதேசம் இனி என்ன முயற்சிகளை செய்யப் போகின்றது? விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து குறைந்த பட்ச தீர்வுக்கு தமிழர்கள் இணங்கினாலும் அதைக் கூட சிங்களம் தராது என்பதை புரிந்து தமிழர்களுக்கு எதை வழங்கப் போகின்றது?

மகாபாரதத்தில் ஐந்து குடிசைகளும் கூட மறுக்கப்பட இறுதியில் பாண்டவர்களிற்கு  அனைத்தும் கிடைத்தன. இந்த இதிகாசத்தை எம் வரலாறாக எழுத ஒரு சந்தர்ப்பம் மீண்டும் வருகின்றது.

அரசியல் ரீதியிலான அனுகூலங்களை வைத்து அடுத்த படிக்கு முன்னேற எம்மிடம் தலைவர்கள் தான் இல்லை. வெற்றிடங்களை இயற்கை விடாது எனும் விஞ்ஞானம் எம் விடயத்தில் தோற்றுப் போகுமா?

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

 

அரசியல் ரீதியிலான அனுகூலங்களை வைத்து அடுத்த படிக்கு முன்னேற எம்மிடம் தலைவர்கள் தான் இல்லை. வெற்றிடங்களை இயற்கை விடாது எனும் விஞ்ஞானம் எம் விடயத்தில் தோற்றுப் போகுமா?

தோற்றுப்போகாத வகையில் துணிவுமிக்கதொரு தலைமை தோற்றம்கொள்ளுமா?

சரியான முறையிலே ஏட்டிப்போட்டியான அனைத்தையும் அனைத்துத் தரப்பும் களைந்துவிட்டு, சரியானதொரு இராயதந்திர நகர்வை செய்யமுடியுமாயின் வாய்ப்பாக அமையும். தமிழீழம் என்ற இலக்கிற்குப் போகவிட்டாலும் உள்ள சுயநிர்ணய உரிமைக்காவது நகர்த்தலாம். அதற்கு கடினமாகவும் தொடர்ச்சியாகவும் உழைக்கவேண்டும். அவை தாயகம் புலம் தமிழகம் என்று அனைத்துத் தரப்பும் ஒரு சங்கிலித்தொடராகச் செயற்படவேண்டும். கொழும்பை மையப்படுத்திய தீர்வுகள் சாத்தியப்படாதென்பதை மேற்குலக நாடுகள் ஆசியான அமைப்பு போன்ற உலக மற்றும் பொருளாதார அமைப்புகள்வரை தெளிவுபடுத்துவது அவசியமாகும். கூட்டமைப்பு கொழும்பிலே கொக்கரிப்பதைவிடுத்து பல குழுக்களாகப்பிரிந்து ஒரே கருத்தை சம காலத்தில் உலக வல்லாதிக் சக்திகளுக்கு உரைக்கவாவது முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஆட்சியை புத்த பிக்குக்களிடம் கொடுத்து விடலாம்!

இடையில ஒரு மீடியேற்றர்  எதுக்கு?

கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையின் இணைய பதிப்பில் பல சிங்களவர்கள் பௌத்த பீடத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

 

http://www.dailymirror.lk/article/No-need-of-a-new-Constitution-or-Amendments-Malwatu-Asgiriya-Chapters-138718.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.