Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர்

Featured Replies

விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர்

 

DBS-Jeyaraj-Apologized-About-His-Article
 

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

அத்துடன் குறித்த செய்திக் கட்டுரையைத் தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரும், நீதியரசருமான விக்னேஸ்வரன் கடந்த ஜனவரி மாதம் கனடா விஜயம் செய்திருந்தார். இதன் போது 'முதலமைச்சருடன் ஒரு மாலை' எனும் விருந்து நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

கனடியத் தமிழர் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட்ட நிதியானது வடமாகாண முதலமைச்சருடைய ஆலோசகர் நிர்மலன் கார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டதாகவும், மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை நிர்மலன் கார்த்திகேயன் தவறாகக் கையாண்டாரெனவும், இலங்கையின் பணமோசடிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இது தொடர்பான புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் உண்மைக்குப் புறம்பான செய்திக் கட்டுரையொன்றை டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தனது இணைய வலைத் தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சர் தொடர்பான குறித்த நிதி மோசடிக் குற்றச்சாட்டு இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கனடிய தமிழர் சமூக அமையம் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தது.

வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அவதூறாக எழுதிய டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ்ஜிற்கு எதிராகச் சட்ட ரீதியான சில நடவடிக்கைகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் தான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனத் தெரிவித்து அவர் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

மேற்படி நிகழ்வை ஏற்பாடு செய்த கனடியத் தமிழர் சமூக அமையம் இன்று (27) இது தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

http://www.thinakaran.lk/2017/10/27/உள்நாடு/20804/விக்னேஸ்வரன்-மீது-அவதூறு-பகிரங்க-மன்னிப்புக்-கோரிய-பத்தியாளர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜெயராஜ் என்ற பெயர் உள்ளவர்கள் வில்லங்கம் பிடிச்சவர்கள் போல் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இருந்து கொண்டே, இலங்கையில், மேசைக்கு கீழ ஒளிந்திருந்து கதை கேட்டு எழுதுவது போல எழுதுகிறார் என்று சிங்கள பக்கமிருந்தும் அடிக்கடி முறைப் பாடுகள் வரும்..

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கடின உழைப்பு, உண்மை, தன்னலம் அற்ற சேவை அடிப்படையில் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் பொய், புரளி, அவதூறு பரப்புவதன் மூலம் இடம் பிடிக்க முயற்சிக்கிறார்கள். போலியை கண்டு மக்களும் மயங்குகிறார்கள். காரணம் போலிக்கு கவர்ச்சி அதிகம். ஆனால் நீண்ட காலம் அது நிலைத்து நிற்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, satan said:

சிலர் கடின உழைப்பு, உண்மை, தன்னலம் அற்ற சேவை அடிப்படையில் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். சிலர் பொய், புரளி, அவதூறு பரப்புவதன் மூலம் இடம் பிடிக்க முயற்சிக்கிறார்கள். போலியை கண்டு மக்களும் மயங்குகிறார்கள். காரணம் போலிக்கு கவர்ச்சி அதிகம். ஆனால் நீண்ட காலம் அது நிலைத்து நிற்காது. 

இது இலங்கையில் என்றால் சிங்கன், கனடாவில் இருந்து கொண்டே, போடு வழக்கை எண்டு சொல்லி இருப்பார். 

இதில ஒரு பார்ட்டி கனடா, விஷயம் நடந்தது அங்கைதான்.... அவரும் அங்கைதான்.... கனடாவில் வழக்கு எண்டால்....???

பகிடி, பகிடிதான்... எண்டு பார்த்தால், பறிக்குள்ள கை என்ன, போர்க்ளிப்ட் வைச்சு அள்ளுவாங்கள் என்று... புறகிராசியார் சொல்லியிருப்பார்...

அதுதான் சிங்கன் லபக் எண்டு மடங்கீட்டார்....tw_confused:

Edited by Nathamuni

On 10/27/2017 at 4:15 PM, நவீனன் said:

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

காலம் காலமாக பிரபல பொய் வாந்தி எடுக்கும் ஊடகவியலாளர் டேவிட் புயல் சபாபதி ஜெயராஜின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

இவருடன் சமாதானம் செய்யாமல் சட்டரீதியாக உரிய நட்ட ஈடுகளை பெற்றிருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.