Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

Featured Replies

கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

 

 

கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்
 

இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் காணியை இம்மாதம் 23 ஆம் திகதிக்குள் விடுவிக்க வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் தங்கியிருப்பதை நியாயப்படுத்த முடியாதெனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தமது மூதாதையர் வாழ்ந்த காணிகளுக்கு பதிலாக மாற்றுக்காணிகளை பெறுவதற்கோ அல்லது நட்ட ஈட்டைப் பெறுவதற்கோ விருப்பமுடையவர்களாக இல்லை எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணிகளில் அவர்களுக்குரிய உரிமை மிக வலுவானது என சுட்டிக்காட்டியுள்ள இரா. சம்பந்தன், எத்தகைய மாற்றீடுகளும் அவர்களுக்கு திருப்தியளிக்காது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

தமது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி காணிகளின் வாசலில் 250 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிள்ள கடிதத்தில் தௌிவுபடுத்தியுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/11/கேப்பாப்பிலவு-காணியை-விர/

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளைக்கு முதல் தானே இது சம்பந்தமா ஜனாதிபதியுடன் கதைக்கபோறன் எண்டவர் இப்ப லவ் லெட்டர் அனுப்புறார் என்ன நடக்குது நல்லூர் கந்தா ..................................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

கொஞ்ச நாளைக்கு முதல் தானே இது சம்பந்தமா ஜனாதிபதியுடன் கதைக்கபோறன் எண்டவர் இப்ப லவ் லெட்டர் அனுப்புறார் என்ன நடக்குது நல்லூர் கந்தா ..................................

ஐயாவின் கடிதம் வேலைசெய்யுமென்று நினைக்கிறேன். ஐயாவைக் காப்பாற்ற என்றாலும் சிங்களம் விடலாம். தேர்தல் வரப்போகுது டும்...டும்.... டும்....டும்...டும்.... டும்.... 

  • தொடங்கியவர்

கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­களை மீளவும் ஒப்­ப­டைக்க வேண்டும்

22-48a70c2775f0600b971b3ebd80dca49eade874ac.jpg

 

ஜனா­தி­ப­திக்கு சம்­பந்தன் மீண்டும் கடிதம்

(நமது நிருபர்)

கேப்­பாப்­பு­லவில் பொது­மக்­களின் காணி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யேறி மீளவும் காணி­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­க­வேண்டும். மக்­களின் காணியை மீளப்­பெறும் சட்­ட­பூர்­வ­மான உரி­மையை மறுப்­பது இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பாரிய தடை­யாக அமையும். இது இன நல்­லி­ணக்­கத்­திற்கு பாரிய அளவில் பொது­வான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.  

இது குறித்து அவர் அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

(1) முல்­லைத்­தீவு மாவட்டம் கேப்­பாப்­பு­லவு காணி தொடர்பில் 2017 ஜுலை 20 ஆந் திக­தியும், 2017 ஆகஸ்ட் 11ஆந் திக­தியும் நான் மேதகு தங்­க­ளுக்கு அனுப்­பிய கடி­தங்­க­ளுக்கு மேல­தி­க­மாக இதனை எழு­து­கின்றேன். பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கிய மாவை சேனா­தி­ராஜா அவர்­களும் எம்.ஏ.சுமந்­திரன் அவர்­களும் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் 22 ஆந் திகதி இது விட­ய­மாகத் தங்­களைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளனர்.

(2) இந்தச் சந்­திப்­பின்­போது 132 ஏக்கர் தனியார் காணிகள் விடு­விக்­கப்­படும் எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 3 மாத காலத்­தினுள், அதா­வது 2017 ஆகஸ்ட் 22 இலி­ருந்து 2017 நொவம்பர் மாதம் 23 ஆம் திக­திக்­கி­டையில் இக்­கா­ணி­களைத் தங்­களால் விடு­விக்க முடியும் என இரா­ணுவம் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது.

(3) பாது­காப்பு அமைச்சின் மேல­திகச் செய­லாளர் தனது 2017 ஒக்­டோபர் 10 ஆந் திக­தி­யி­டப்­பட்ட கடித மூலம் குறித்த 133 ஏக்­கர்­களும் 2017 ஆம் ஆண்டு முடி­வ­தற்கு முன்பு விடு­விக்­கப்­படும் என எனக்கு அறி­வித்­தி­ருந்தார்.

(4) குறித்த காணிகள் மிக விரைவில் தங்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரி இக்­கா­ணியின் வாசலில் கடந்த 250 நாட்­க­ளுக்கும் மேலாக மக்கள் வெய்­யி­லையும் மழை­யையும் பொருட்­ப­டுத்­தாது தமது போராட்­டங்­களைச் செய்து வரு­கின்­றனர். மேலே (2) ஆம் மற்றும் (3) ஆம் பந்­தி­களில் குறிப்­பி­டப்­பட்ட 133 ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்ட காணிகள் மிகக் கூடிய விரைவில் விடு­விக்­கப்­பட வேண்­டு­மென நான் வலி­யு­றுத்திக் கேட்டுக் கொள்­கிறேன். இக்­கா­ணிகள் 2017, நொவம்பர் 23 திக­தி­ய­ளவில் விடு­விக்­கப்­படும் என மக்கள் மிகுந்த எதிர்­பார்ப்­புடன் காத்­தி­ருக்­கின்­றனர்.

(5) மிகு­தி­யா­க­வுள்ள தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி 73 ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்­டது. இக் காணி மக்­களின் சம்­ம­த­மின்றி இரா­ணு­வத்தால் அடாத்­தாகக் கையேற்­கப்­பட்­டுள்­ள­தோடு, பொதுத் தேவை­யொன்­றிற்­காக காணி சுவீ­க­ரிக்­கும்­போது தேவைப்­ப­டுத்­தப்­பட்­ட­வாறு அவை கையேற்­கப்­ப­ட­வில்லை. இரா­ணுவம் இக்­கா­ணியில் தங்­கி­யி­ருக்க ஆரம்­பித்த காலம் தொடக்கம் அக்­கா­ணி­களைத் திருப்பித் தரு­மாறு மக்கள் தொடர்ச்­சி­யாகக் கோரி வரு­கின்­றனர். இக்­கா­ணியில் இரா­ணுவம் தொடர்ந்தும் தங்­கி­யி­ருப்­பதை நியா­யப்­ப­டுத்த முடி­யா­தென்­பதை நான் தொிவித்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன். பல பரம்­ப­ர­ரை­க­ளாக தமது மூதா­தை­ய­ரான தமிழ்ப் பிர­ஜை­க­ளுக்கச் சொந்­த­மாக இருந்து வந்த இந்தத் தனியார் காணி­களில் இம்­மக்கள் வலு­வான பிணைப்பைக் கொண்­டுள்­ளனர். இந்தக் காணி­களில் தான் அவர்­க­ளு­டைய மூதா­தை­யர்கள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்து, தமது சமூக, சமய, தொழில் மற்றும் வதி­விட நோக்­கங்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தி வந்­துள்­ளனர். இந்தப் பிர­ஜைகள் வேறு மாற்றுக் காணி­களைப் பெறு­வ­தற்கோ அல்­லது நட்­ட­ஈட்டைப் பெறு­வ­தற்கோ விருப்­ப­மு­டை­ய­வர்­க­ளாக இல்லை. இக்­கா­ணி­களில் அவர்­க­ளுக்­கு­ரிய உரிமை மிக வலு­வா­னது. அதனால் எத்­த­கைய மாற்­றீ­டு­களும் அவர்­க­ளுக்குத் திருப்­தி­ய­ளிக்­காது. இந்தப் பிர­ஜை­களின் விருப்­பங்கள் தட்­டிக்­க­ழிக்­கப்­ப­டாமல் மதிக்­கப்­பட வேண்­டி­ய­தென்­பதை நான் வலி­யு­றுத்திக் கூறு­கின்றேன். தமக்­கு­ரிய இக் காணி­களை மீளப் பெறு­வ­தற்­காக அவர்கள் அதிக துன்­பங்­களை அனு­ப­வித்­துள்­ளார்கள் என்­பதால் அவர்­க­ளுக்கு ஏமாற்றம் ஏற்­ப­டக்­கூ­டாது.

இரா­ணு­வத்­துக்குத் தேவை­யாக இருந்தால் போதி­ய­ளவு வேறு காணிகள் அங்­கே­யுள்­ளன. அங்கே நட்­ட­ஈடு எதுவும் செலுத்­தாது அவர்கள் தங்­கி­யி­ருக்க முடியும்.

இந்தக் காணி­களை மீளப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இம்­மக்கள் காட்­டி­வரும் துணிச்­ச­லான உறு­திப்­பாட்டின் அடிப்­ப­டையில், தமது காணி மீளப்பெறும் சட்டபுர்வமான அவர்களது உரிமையை மறுப்பது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் பாரிய தடையாக அமையும். இது இன நல்லிணக்கத்துக்குப் பாரியளவில் பொதுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே, குறிப்பிட்ட 73 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட காணிகளும் கூடிய விரைவாக அவற்றிற்குரிய பிரஜைகளுக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டுமென்பதை மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தில் மேதகு தாங்கள் தலையீடு செய்யுமாறு கோருகிறேன்.

http://epaper.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா வரப்போகிற தேர்தலுக்கு கட்டியம் சொல்லுறார். இதைச் சொல்லித்தானே பிச்சை கேக்கவேணும்  

11 hours ago, பெருமாள் said:

கொஞ்ச நாளைக்கு முதல் தானே இது சம்பந்தமா ஜனாதிபதியுடன் கதைக்கபோறன் எண்டவர் இப்ப லவ் லெட்டர் அனுப்புறார் என்ன நடக்குது நல்லூர் கந்தா ..................................

சம்பந்தன் ஜயா சதாரணமான ஆளா, ஒரு வேளை My3 தமிழ் மக்களிடம் சம்பந்தன் தன்னிடம் இது பற்றி கதைக்கவில்லை என்றால் பிறகு தேர்தல் நேரம் என்ன செய்வது, அதான் உசாராக இப்பொழுதே எழுத்து மூல ஆதாரம் வைக்கிறார்.

ஆனால் நான் இதை நம்ப மாட்டன், எனக்கு இதை பதிவு தபாலில் அனுப்பியதற்கான பற்று சீட்டு வேண்டும்!!!!! அப்ப தான் நம்புவன்!!

  • கருத்துக்கள உறவுகள்

 சம்பந்தன் என்ன லேசுப்பட்ட ஆளா. வெறும் வாய் பேச்சால் அறுபது வருடமாய் தேரோட்டுறார் தெரியேல்லையே அவரின் சாமர்த்தியத்தை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின்ற நிலமைக்கு வந்துட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் அனுப்பிவிட்டேன் அது எங்குபோய்ச் சேருமோ...??? Bildergebnis für காதல் கடிதம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

 ஐயா வரப்போகிற தேர்தலுக்கு கட்டியம் சொல்லுறார். இதைச் சொல்லித்தானே பிச்சை கேக்கவேணும்  

அவர் எப்படி பிச்சை கேட்டாலும் நாம தானே வாக்குப் போடப் போறம்.அதுக்கு ஏன் குத்தி முறிவான்.அது சரி இங்கை எத்தினை பேருக்கு வாக்குரிமை இருக்கு.(எனக்கு சம்பதனின் அரசியலில் சமரசம் இல்லை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.