Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Featured Replies

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

 

 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=97886

  • தொடங்கியவர்

பிரபாகரனின் பிறந்த தினத்தை அனுஷ்டித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

city-01-8d63626f96a25b6db328475a08f6c8a2d17730e4.jpg

 

(ஆர்.யசி)

வடக்கில் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த தினத்தை அனுஷ்­டித்த நபர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், புல­னாய்வு துறையின் உத­வி­யுடன் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன தெரி­வித்தார்.

வடக்கில் சாதா­ரண மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளாக இதனை கரு­து­வ­தா­கவும்  அவர் தெரி­வித்தார்.  

விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த தினத்தை வடக்கில் சில பகு­தி­களில் கொண்­டா­டி­ய­தா­கவும், மாவீரர் தனத்தை அனுஷ்­டித்­த­தா­கவும் ஊட­கங்­களின் மூல­மாக தக­வல்கள் வெளி­வந்­துள்ள நிலையில் இது குறித்து பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் தெரி­விக்­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

விடு­த­லைப்­புலி பயங்­க­ர­வாத குழுவின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்­த­நாளை கொண்­டாடும் வகையில் வடக்கில் கொண்­டாட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், கேக் வெட்டி பிறந்த தினத்தை கொண்­டா­டி­ய­தாவும் , கொடிகள் ஏற்­றப்­பட்ட சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தா­கவும் எமக்கும் தக­வல்கள் கிடைத்­துள்­ளன . இந்த விவ­காரம் குறித்து பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் என்ற கோணத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டுகள் சட்­ட­வி­ரோ­த­மாகும். விடு­தலைப் புலிகள் தடை­செய்­யப்­பட்ட இயக்­க­மாகும். பயங்­க­ர­வாத பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள இயக்­க­மாகும். இலங்­கையில் புலிகள் சார்ந்த எந்­த­வொரு செயற்­பாட்­டையும் முன்­னெ­டுக்க முடி­யாது என்­பதே சட்­ட­மாகும். அவ்­வாறு இருக்­கையில் வடக்கில் இவ்­வாறு செயற்­பட்ட நபர்கள் குறித்து கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அதற்­கா­கவே இப்­போது நாம் புல­னாய்வு துறையின் உத­வி­களை கொண்டும் பொலி­ஸாரின் உத­வி­யு­டனும் இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­ட­வர்கள் குறித்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க உத்­த­ர­விட்­டுள்ளோம்.

வடக்கில் சாதா­ரண மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளாக இதனை நாம் கரு­து­கின்றோம். இன்று மக்கள் ஜன­நா­ய­கத்தின் பக்கம் திரும்­பி­யுள்ள நிலையில் அவர்­களை மீண்டும் ஆயுத கலா­சா­ரத்தின் பக்கம் கொண்­டு­செல்ல வடக்கின் தமிழ் அடிப்­ப­டை­வாத அர­சி­யல்­வா­திகள் சிலரும் அமைப்­பினர் சிலரும் முயற்­சித்து வரு­கின்­றன. இதற்கு அர­சாங்­க­மாக நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. எனவே விரைவில் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­ய­கத்தின் பக்கம் பிர­தான தமிழ் அர­சியல் கட்­சிகள் செயற்­பட்­டு­வரும் நிலையில் ஒரு­சி­லரின் தேவைக்­காக நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் இவ்­வாறு பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை தோற்­று­விப்­பது கண்­டிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

அத்­துடன் தேர்தல் குறித்தும் பலர் பல்­வேறு கருத்­துக்­களை கூறி வரு­கின்­றனர். எனினும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யாக நாம் தேர்­த­லுக்கு முழு­மை­யான தயார் நிலையில் உள்ளோம். முழு­மை­யாக தேர்­தலை நடத்­த­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே ஐக்­கிய தேசியக் கட்சி செயற்­பட்டு வரு­கின்­றது. எனினும் 93 சபை­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வரி இறு­தியில் அல்­லது பெப்ரவரி முதல் வாரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அதேபோல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கை மீளப்பெற்று சகல தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது. எவ்வாறு இருப்பினும் நாம் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-29#page-1

  • தொடங்கியவர்

பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் தினம் : 30 சம்­ப­வங்கள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கி­றது பொலிஸ்

 

(எம்.எப்.எப்.எம்.பஸீர்)

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வுகள் இம்­முறை பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

  இந்த நிகழ்­வுகள் குறித்தும் அதில் என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலும் முழு­மை­யாக அறிந்­து­கொள்ள தற்­போது பொலிஸார் அந்த நிக்ழ்­வுகள் குறித்து தகவல் சேக­ரித்து வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­பா­க­ரனின் பிறந்த நாள் நிக்ழ்­வு­களும், நேற்று முன் தினம் மாவீரர் நாள் நிகழ்­வு­களும் வடக்கில் பதி­வா­கின. இது தொடர்பில் பல்­வேறு தர்ப்­பி­னரும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரும் நிலையில், பொலி­ஸா­ரிடம் அது தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­னாண்­டோவின் நேரடி கட்­டுப்­பாட்டில், இந்த தகவல் சேக­ரிப்பு மற்றும் அதன் உள்­ள­டக்கம் தொடர்­பி­லான ஆய்வு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு சுட்டிக்காட்டினார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-29#page-1

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மார்டின் வீதிக்கு சென்று அவங்களை பிடித்து சிறையில் அடையுங்கள் சார். அவர்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

பிரபாகரனின் பிறந்த தினத்தை அனுஷ்டித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

 

வடக்கில் சாதா­ரண மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளாக இதனை நாம் கரு­து­கின்றோம்.

 
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுட்டித்தவர்களால் எந்தக் குழப்பங்களோ, அமைதிகுலைவோ ஏற்பட்டதில்லை, ஏற்படப்போவதும் இல்லை. ஆனால்.... மேற்கொண்டு நீங்கள் செய்யப்போகும் காரியங்கள்தான் மக்கள் மத்­தியில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி, அமைதியைக் குலைக்கப் போகிறது. :(
On 11/28/2017 at 11:22 AM, நவீனன் said:

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை மக்கள் பரவலாக வீடுகளில் வைக்கும் நிலைக்கு மக்களை இவர் தள்ளுகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை  , இறந்த உறவுகளை நினைவு கூருதல் என்ற அடிப்படையில், தமிழர்களின் வாக்கு வங்கிக்காக சிங்கள அரசு கண்டும் காணாமலிருந்தது, இடைச்செருகலாக  தலைவரின் பிறந்தநாளை சேர்த்தது யார்?  அதனை நிச்சயம் சிங்களவன் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்ல அத்துடன், மாவீரர்களை நினைவு கூருதலும் எதிர்காலத்தில் முற்றுமுழுதாக தடை செய்யப்படலாம்! தாயகத்தில் சிங்களவனுக்கு நடுவில் வாழ்ந்தபடி தலைவரின் பிறந்தநாள் கொண்டாடுவது, கத்தியின்மேல் கழுத்தை கொண்டுபோய் அழுத்துவதற்கு சமம்! அதுபோக இந்த விஷயத்தில் ஈடுபட்ட பல்கலைகழக மாணவர்கள், இளைஞர்களை காலவரையின்றி உள்ளே தூக்கிபோட்டு அவர்கள் எதிர்காலத்தையே சூனியமாக்கிடுவான்! அப்போது புலத்தில் இருந்தபடி உங்கள் உணர்ச்சிகர போராட்டங்களை புகழ்ந்து தள்ளியவர்கள், லேசா நழுவி அடுத்த செய்திகளுக்கு கருத்து எழுதபோயிடுவார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி அப்படியே பிரபாகரனை பெயரை சொல்லி அரசியல் நடத்தும் அரசியல் வாதிகளையும் கைது செய்யுங்கோ பாதுகாப்பு அமைச்சரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.