Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்..

Featured Replies

இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும்..

bishap-canada.jpg

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கைக்கு கனேடிய அரசு அழுத்தங்களை வழங்கவேண்டும் என கனடாவின் இலங்கைக்கான தூதுவரிடம் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தினார் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன் யாழ்ப்பாண ஆயரை அவரது இல்லத்தில் இன்று காலை சந்தித்தார்.

“போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் போர் நிறைவுக்கு வந்த பின்னரும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடி உறவுகள் சொல்லணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு உரிய பதிலை அரசு இன்னும் வழங்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இழுத்தடிக்காமல் காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு கனடா உரிய அழுத்தத்தை வழங்கவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கூடியவகையில் கனடா அரசு யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்யவேண்டும்” என்று யாழ்ப்பாண ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கனடாத் தூதுவரிடம் எடுத்தரைத்தார்.

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கிவருகிறது. தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்” என்று கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் அதற்கு பதிலளித்தார்.

http://globaltamilnews.net/archives/52108

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3 hours ago, நவீனன் said:

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கனடா அரசு, இலங்கைக்கு நேரடியாகவும் ஐ.நாவிலும் அழுத்தங்களை வழங்கிவருகிறது. தமிழ் மக்களின் விடயத்தில் கனடா தொடர்ந்தும் கரிசனையாக இருக்கும்” என்று கனடா தூதுவர் டேவிட் மைக்கின்னன் அதற்கு பதிலளித்தார்.

ஸ்ரீலங்கா கனடாவுக்கு அழுத்தம் கொடுத்தபோது எடுத்த படம். tw_blush:

6f6827_9a1a9dee00c74294a4eb003608c8e47a.jpg_srz_400_267_85_22_0.50_1.20_0.00_jpg_srz

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஸ்ரீலங்கா கனடாவுக்கு அழுத்தம் கொடுத்தபோது எடுத்த படம். tw_blush:

6f6827_9a1a9dee00c74294a4eb003608c8e47a.jpg_srz_400_267_85_22_0.50_1.20_0.00_jpg_srz

சாமியோவ்...! அந்தாள் காட்சட்டை பட்டன் அவிண்டுபோச்சுது எண்டு அந்தரப்படுது....:shocked: நீங்கள் அழுத்தம் கிழுத்தம் எண்டு......!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மன்னார் மாவட்ட ஆண்டகையாக சிங்களவர் ஒருவரை  வத்திகான் நிறுத்தியுள்ளதாக வானொலி செய்தி ஒன்றில் கேட்டிருந்தேன். யாழ்ப்பாணத்துக்கும் இதே நிலை  கூடிய விரைவில்  வரலாம். அதன் பின் இத்தகைய அழுத்த குரல்கள் ஒலிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சரி, தவறுகளுக்கப்பால், யுத்தகாலங்களிலும் சரி , யுத்தம் முடிந்த பின்பும் சரி மதம் என்ற ஒன்றைக்கடந்து உள் நாட்டிலும்,அனைத்துலக சமூகத்திற்கு தெரியப்படுத்தியும் இனத்திற்கான தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கிய, வழங்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ மத குருமார்கள் ஏராளம், அதனால் உயிரை இழந்தவர்கள் இன்றுவரை எங்கே என்று தெரியாமல் போனவர்கள்  ஏராளம்! பெரும்பான்மையாக இருக்கும் நமது குருமார்கள் பிளைட் ஏறி புலம்பெயர் நாடுகளுக்கு கும்பாபிஷேகம் பண்ண வருகிறார்கள் என்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, valavan said:

சரி, தவறுகளுக்கப்பால், யுத்தகாலங்களிலும் சரி , யுத்தம் முடிந்த பின்பும் சரி மதம் என்ற ஒன்றைக்கடந்து உள் நாட்டிலும்,அனைத்துலக சமூகத்திற்கு தெரியப்படுத்தியும் இனத்திற்கான தம்மால் முடிந்த பங்களிப்பை வழங்கிய, வழங்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ மத குருமார்கள் ஏராளம், அதனால் உயிரை இழந்தவர்கள் இன்றுவரை எங்கே என்று தெரியாமல் போனவர்கள்  ஏராளம்! பெரும்பான்மையாக இருக்கும் நமது குருமார்கள் பிளைட் ஏறி புலம்பெயர் நாடுகளுக்கு கும்பாபிஷேகம் பண்ண வருகிறார்கள் என்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டால் சர்ச்பாதிரியார் வந்து மதக் காரியங்கள் செய்கிறார். 
ஒரு இஸ்லாமியன் இறந்து போனால் மசூதி மவுல்வி வந்து மதக் காரியங்களை நிறைவேற்றுகிறார்.
ஆனால் ஒரு இந்து இறந்து போனால் அருகில் வராத பார்ப்பனர் 16நாள் காரியத்தில் மட்டும்வந்து பணம் பறிப்பது ஏன்.?.

DPxr1qTWsAA9lAT.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நாய்க்கு செத்தவீடு நடத்திய கனடா தமிழர்!
********************************************

ஜயர் பிடித்து மந்திரம் எல்லாம் ஓதி நடத்திய இந்த செத்தவீட்டிற்கு பல பிரபலங்களும் சென்று துக்கம் விசாரித்தார்களாம்.

அந்தளவுக்கு லண்டன் தமிழர் சிலரும் தாங்கள் கனடா தமிழருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கின்றார்கள்.
கனடா தமிழர் நாய்க்கு செத்தவீடு நடத்தினார் என்றால் லண்டன் தமிழர் எலிக்கு செத்தவீடு நடத்தியுள்ளார்.

லண்டன் வாழ் தமிழர் ஒருவர் தன் மகளின் ஆசைப்படி வளர்ப்பதற்கு வெள்ளை எலி வாங்கி கொடுத்துள்ளார். அதற்கு பல செலவுகள். 35 பவுண்ட்ற்கு ஊசி போட வேண்டும். இருந்தும் சில நாட்களில் அந்த எலி செத்துவிட்டது.

பின்னர் மகளின் விருப்பப்படி மனிதர்களுக்கு செய்வது போல் ஒரு நிறுவனம் மூலம் மரியாதையுடன் அந்த எலி அடக்கம் செய்யப்பட்டது. எலி வாங்கிய காசைவிட அதன் செத்தவீடு செலவு அதிகமானது.
 
-PAXP-deijE.gif
 
adsupplylogo_purplered.svg
Close Ad
 
Show Ad
 
CancelSend
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவன் இறந்துவிட்டால் சர்ச்பாதிரியார் வந்து மதக் காரியங்கள் செய்கிறார். 
ஒரு இஸ்லாமியன் இறந்து போனால் மசூதி மவுல்வி வந்து மதக் காரியங்களை நிறைவேற்றுகிறார்.
ஆனால் ஒரு இந்து இறந்து போனால் அருகில் வராத பார்ப்பனர் 16நாள் காரியத்தில் மட்டும்வந்து பணம் பறிப்பது ஏன்.?.

DPxr1qTWsAA9lAT.jpg:large

அதுதான் நீங்களே சொல்லிட்டீங்களே ‘’பணம் பறிக்க’’ என்று! அதையேதான் மறைமுகமாக நானும் சொல்லியிருந்தேன் பெரும்பான்மையான இந்து குருமார்கள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டு புலம்பெயர் தேசங்களுக்கு கும்பாபிஷேகம் பண்ணவென்றால் மட்டும் பிளைட் ஏறுகிறார்கள் என்று! இரண்டுபேருமே ஒன்றைதான் சொல்லியிருக்கிறோம், பாராட்டணும் என்று நான் சொன்னது.......... வஞ்சக புகழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இங்கை ஒரு கோவிலை தொடங்கினால் எல்லாரும் குருக்கள் தான்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப இங்கை ஒரு கோவிலை தொடங்கினால் எல்லாரும் குருக்கள் தான்.:unsure:

என்னையா சொல்றீங்க அதுவும் சரிதான் அவர் சொல்லுற மந்திரம் நமக்கு என்ன விளங்கவா போகுது  மண்டய மண்டய  ஆட்டிடுவம் தானே tw_blush:

On 11/29/2017 at 6:11 PM, குமாரசாமி said:

ஸ்ரீலங்கா கனடாவுக்கு அழுத்தம் கொடுத்தபோது எடுத்த படம். tw_blush:

6f6827_9a1a9dee00c74294a4eb003608c8e47a.jpg_srz_400_267_85_22_0.50_1.20_0.00_jpg_srz

மிக சிறப்பு குமாரசாமி அண்ணை ஆனால் எந்த நாடு அழுத்தம் கொடுத்தாலும் இலங்கைக்கு  உறைக்காது :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.