Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்

Featured Replies

பிரபாகரனை புகழ்ந்த ஞானசார தேரர்

 

(ஆர்.யசி)

பிரபாகரனின் போராட்டம் தவறானது அல்ல, எனினும் அவர் போராட்டத்திற்காக தெரிவு செய்த பாதையே தவறானது. எனினும் இன்றைய அரசியல் வாதிகளை விடவும் பிரபாகரன் நேர்மையாக செயற்பட்டார் என  பொது பல சேனா பௌத்த அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் புலிகளை நினைவு கூறுவது ஆச்சரியாமான விடயம் அல்ல எனவும் அவர் தெரிவித்தார். 

பொதுபல சேன பௌத்த அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இதனைக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/27671

  • தொடங்கியவர்

சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்;ஞானசார தேரர்

 

சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்;ஞானசார தேரர் 

ஸ்ரீலங்காவிலுள்ள சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக தென்னிலங்கையில் செயற்பட்டுவரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் பிரதான அமைப்பான பொதுபல சேனா தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் இதனைக் கூறினார்.

பொதுபல சேனா ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – கிருலப்பனையில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.

தமிழர் தாயகப் பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டார்.

 “விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், ஸ்ரீலங்கா இராணுவத்தில் இருந்தாலும் அனைவரும் அதேபோல சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். போராட்டம் ஏற்படுகிறது. அது முற்போக்கானதா அல்லது வேறொன்றா என்பது எமக்கு அவசியமில்லை. விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்தாலும் போராட்ட நோக்கம் சிறந்ததாக இருக்கலாம். எமது சிங்களத் தலைவர்களை விடவும் விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைவர். அவருக்கு நேர்மை இருந்தது. அந்த நோக்கத்திற்கு உண்மைத்தன்மை இருந்தது. எமது தலைவர்கள் அனைவரையும் ஏமாற்றுகின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் தலைவர் தெரிவுசெய்த வழிதான் பிழை. ஆயுதத்தை கையில் ஏந்தியது தவறல்லவா. எனவே அனைவரும் மக்கள்.

யுத்த வெற்றியை கொண்டாடுவதைப் போன்று, தமிழ் மக்கள் பறிபோன உயிர்களும் இந்த நாட்டு மக்களுடைய உயிர். வடக்கில் இருப்பவர்கள் இந்தியாவின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். விடுதலைப் புலிகளின் போராட்டமும், ஜே.வி.பி போன்ற போராட்டத்தை ஒத்ததாகும்.

இந்த உள்ளகப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களும் எமது மக்களாகும். எனினும் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாக தெற்கு மக்களுக்கு கூறிவிட்டு வடக்கில் வேறு ஒன்றை செய்வதை ஏற்கமுடியாது. இதனூடாக இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுகிறது. சாதாரண மக்கள் இதனை செய்யமாட்டார்கள். இதனைத் தூண்டி ஏற்பாடு செய்கிறவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/gnanasara-thero-comment-on-LTTE

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நவீனன் said:

சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்;ஞானசார தேரர்

சிங்களத் தலைவர்களை விடவும் பிரபாகரன் சிறந்த தலைவர்;ஞானசார தேரர் 

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்...! :(

ஆனாலும் அது வாலை ஆட்டும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது...!! :grin:  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்...! :(

ஆனாலும் அது வாலை ஆட்டும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது...!! :grin:  

பாஞ்ச் அண்ணை.... இலங்கை  முஸ்லீம்களை  விட, 
சிங்கள புத்த  பிக்குகள் எவ்வளவோ.... பரவாயில்லை.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்...! :(

ஆனாலும் அது வாலை ஆட்டும்போது ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது...!! :grin:  

இந்த சுவைதான் அவ்வப்போது இந்திய அரசியலிருந்தும் சொட்டுகின்றது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

யுத்த வெற்றியை கொண்டாடுவதைப் போன்று, தமிழ் மக்கள் பறிபோன உயிர்களும் இந்த நாட்டு மக்களுடைய உயிர். வடக்கில் இருப்பவர்கள் இந்தியாவின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்லர். விடுதலைப் புலிகளின் போராட்டமும், ஜே.வி.பி போன்ற போராட்டத்தை ஒத்ததாகும்.

இந்தியா என்ற நாடு பொத்தி கொண்டு இருந்தால் நல்லது போல் இந்த கணம் தோன்றும் .

  • கருத்துக்கள உறவுகள்

 முறிஞ்சு கதைக்கிறார். திருப்பிப் போட்டிட்டு எதையோ கவிழ்க்கப்போறார். முஸ்லீம்களை ஒருகை பாத்தாலும் பாப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.