Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே நகர் தேர்தல் சீமானின் கட்சிக்கு வளர்ச்சியா ? உங்களின் கருத்து என்ன ?

Featured Replies

இராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கருதுவது நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்திருக்கிற வாக்குகள். இங்கு அது வெறும் எண்ணிக்கை அல்ல. அந்த எண்ணிக்கையை அடைவதற்கு பயணப்பட்ட திசை தான் முக்கியம். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக வேறு திசைக்கு பயணிக்கிறது. நாம் தமிழர் கட்சியினரின் பிரச்சாரம் ஒரு திட்டமிட்ட தனித்துவமான பாணியில் இருந்தது. திராவிட அரசியல் பாதை வரலாற்றின் தொடக்க நாட்களை அது நினைவுபடுத்துகிறது. இப்போது அவர்களை தமிழகம் பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் திரும்பி பார்க்கும் காலம் விரைவில் வரும். தமிழக அரசியல் அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகிறது. தமிழ் தேசிய அரசியலில் இன்னும் சிலர் களமிறங்க வேண்டியிருக்கிறது. அப்போது இந்த பாய்ச்சல் இன்னும் அதிகமாகும். நமக்கும் பார்வை தெளிவாகும்.

 

நெல்சன் சேவியர் -news17 நெறியாளர்

 

3,800 வாக்குக்கள் ஏளனத்திற்குரியதே அல்ல தமிழகம் எதிர்நோக்கும் ஆபத்து வேகமாக வளரத்தொடங்கியிருக்கிறது
பரிவாரத்தினரைவிட, இஸ்லாமிய அடிப்படைவாதிகளைவிடவும் ஆபத்தானவர்கள் இந்த இனவாதிகள்
டுபாங்கூர் பேர்வழி மீது ஆங்காங்கே இளைஞர்களுக்கு மோகம் எழுந்து வருகிறது
திராவிடக் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து இவர்கள் பக்கம் திரும்புகின்றனர்
இந்து/இஸ்லாமிய  அடிப்படைவாதமாயினும் சரி இன வெறியாயினும் சரி அத்தகைய சவால்களை எதிர்கொள்ளவேண்டிய கடமை சிபிஎம் மிற்குத்தான் 
சிபிஐ காலாவதியாகிவிட்டது பெரியாரிஸ்டுகள் பார்ப்பனர்களை சாடுவதைத் தாண்டி எதையும் சிந்திக்கப்போவதில்லை 

கோபாலன் - BBC முன்னாள் செய்தியாளர் 

 

  • தொடங்கியவர்

 நாம் தமிழர் கட்சி ஆர்கே நகர் தேர்தலில் 2 சதவீத வாக்குகளைப் பெற்று 4வது இடத்தை பெற்ற நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்த இளைஞர் படையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல, உயர்தர ஏசி அறைகளில் தங்கி களமாடிய வாக்குகள் அல்ல ஆர்கே நகர் வெற்றி மண்டபத்தில் நாங்கள் தங்கி காளமாடி பெற்ற வாக்குகள் என்று சமூக வலைதளங்களில் அவர்கள் பெருமைபட்டு வருகின்றனர்.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் கடந்த முறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கை தேவி 2 ஆயிரத்து 513 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஆனால் அப்போது இருந்த நிலைமை வேறு ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியிலேயே எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரத்து 500 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.

தற்போது நடந்து முடிந்த இடைத்தேர்தலும் வேறு விதமான தேர்தலே. ஜெயலலிதாவின் தொகுதி அவர் இல்லாத தேர்தல் களம் என்பதால் சுமார் 50 சுயேச்சை வேட்பாளர்கள் களமிறங்கினார். இவர்களோடு ஒரு போட்டியாளராக தேர்தல் களம் கண்டது நாம் தமிழர் கட்சி.

 
 
  • வீதிவீதியாக

    மக்களை சந்தித்து

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதே போன்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலைக்கோட்டுதயத்திற்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

  •  
    பண, அதிகார பலம் இல்லை

    இளைஞர் படை

    நாம் தமிழர் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரத்தில் பண பலம் இல்லை, படை பலம் இல்லை, அதிகார பலமும் இல்லை என்ற போதும் அவர்கள் 4 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் அவர்களிடம் இருந்த இளைஞர் படை.

  •  
    அரசின் அவலங்கள்

    பாட்டாக சொன்ன இளைஞர்கள்

    பிரச்சாரத்தின் போது வீதி நாடகங்கள் போல தாரை, தப்பட்டைகளை கழுத்தில் போட்டுக் கொண்டு அரசின் அவலங்களை பாடல்களாக பாடிச் சென்றனர் இளைஞர்கள். இதே போன்று இளைஞர்களுடன் மாற்றுத் திறனாளிகளும் நாம் தமிழர் கட்சிக்காக தேர்தல் களத்தில் பணியாற்றினர்.

  •  
    களமாடிய வாக்குகள்

    கிடைத்த இடத்தில் ஓய்வு


    திராவிட கட்சியினர் போல் காசு கொடுத்து வாங்கிய வாக்குகள்அல்ல, குவாட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல
    உயர்தர ஏசி அறைகளில் தங்கி களமாடிய வாக்குகள் அல்ல. ஆர்கே நகர் வெற்றி மண்டபத்தில் நாங்கள் தங்கி காளமாடி பெற்ற வாக்குகள் என்று அவர்கள் பெருமையோடு இந்த தேர்தல் பணியாற்றியதை குறிப்பிட்டுள்ளன

     

    Tamil.oneindia.com

  • கருத்துக்கள உறவுகள்
ஆர்.கே.நகரில் அந்த 6 ஆயிரத்து 140 வாக்குகள் எங்கே?!" - கொதிக்கும் வெடிக்கும் சீமான்

சீமான்

Chennai: 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசி

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகளால் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசியல் வட்டாரம். நாம் தமிழர் கட்சிக்கு விழுந்த வாக்குகளும், நோட்டாவைவிடவும் பா.ஜ.க பின்னுக்குத் தள்ளப்பட்டதும் அரசியல் விமர்சகர்களால் அலசப்பட்டு வருகிறது. ' என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது' எனக் கொந்தளிக்கிறார் சீமான். 

ஆளும்கட்சி வட்டாரத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள். அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். அதேநேரம், நோட்டா பெற்ற வாக்குகளுக்கும் குறைவாக பா.ஜ.க ஓட்டு வாங்கியதும் நாம் தமிழர் கட்சிக்கு நான்காம் இடம் கிடைத்ததும் அரசியல் பார்வையாளர்களால் உற்று கவனிக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்துக்காக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்கள் உள்பட பெரும்படையே களத்தில் இறங்கி தேர்தல் வேலை பார்த்தது. பெரும் கட்சிகளின் வேட்பாளர்கள், பணபலம் என அனைத்தையும் தாண்டி நாம் தமிழர் கட்சி 3 ஆயிரத்து 860 வாக்குகளைப் பெற்றது. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். " என்னுடைய உழைப்புக்குக் குறைந்தது பத்தாயிரம் வாக்குகளாவது வந்திருக்க வேண்டும். இவ்வளவு கேவலமாக இந்த நாடு போய்விட்டது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது. இந்த நாடு மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மக்களுக்குக் காசு கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலை இருக்கும் வரையில் வெற்றி பெறுகிறவர், சேவை செய்யும் மனநிலையில் இருக்க மாட்டார். பணம்தான் பிரதானம் என்றால், நேர்மையான நிர்வாகம், சேவை என்பதையெல்லாம் மக்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஐம்பது ஆண்டுகளாக மாறி மாறி ஆண்ட இந்தக் கட்சிகள் எல்லாம், 'காசு கொடுத்தால் போதும்' என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளிவிட்டார்கள். இதுதான் இவர்கள் இத்தனை ஆண்டுளாக செய்து வரும் சாதனை. மக்களும் தங்களுடைய உரிமையை விற்கும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். வாக்கை விற்பது என்பது மானத்தை விற்பது போன்றது என்பதை மறந்துவிட்டார்கள். இவ்வளவு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு, பணம் எப்படி வந்தது என்பதை யோசிக்கும்போதுதான் நல்ல சிந்தனை பிறக்கும். பணம் பெறுகிறவரையில் மக்களிடமும் நேர்மை இருக்காது. ஆள்பவர்களிடமும் நேர்மை இருக்காது. ' நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள், எனக்குப் பணம் கொடு' என்ற மனநிலையை எப்படிப் பார்ப்பது? இது ஒரு குற்ற சமூகமாகத்தான் மாறிப் போகும். 

 

2ஜி வழக்கில் சரியான ஆதாரங்களை முன்வைக்க அரசு தவறிவிட்டதால் விடுதலை செய்துவிட்டார்கள். சங்கர்ராமன் படுகொலையில் சரியான ஆதாரம் இல்லை; தா.கிருஷ்ணன் கொலை, லீலாவதி கொலை எனப் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வழக்குகளின் தீர்ப்புகள் எதைக் காட்டுகிறது? நீ என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து கொள். சாட்சி இல்லாமல் பார்த்துக் கொள் என்பதுதானே. சமூகமே குற்ற சமூகமாக இருக்கும்போது நல்ல சிந்தனைகள் எப்படிப் பிறக்கும்? ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்கெல்லாம் வாக்கு செலுத்துவார்களா என சிலர் தொடர்ந்து பேசி வந்தனர். அதையும் மீறி எதற்காக தினகரனுக்கு இவ்வளவு வாக்குகளைச் செலுத்தினார்கள்? அவர் மக்களுக்காக எத்தனை போராட்டங்களை நடத்தினார்? அவர் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என இந்த மக்கள் எப்படி நம்பினார்கள்?

தினகரன் வெற்றிக்கு ஒரே காரணம், பணம் மட்டும்தான். பணத்தை பிரதானமாக வைத்துக் கட்டமைக்கிற ஒரு சமூகம், எப்படி சரியான சமூகமாக இருக்கும். ஒரு முதலீட்டாளன் லாபத்தைப் பெறுவதற்கு வருவாரா? மக்கள் சேவைக்காக வருவாரா? 100 கோடி, 200 கோடி என செலவிட்டு வெற்றியைப் பெறுகிறவர், எப்படி சேவை செய்வார்? ஒரு சட்டமன்ற உறுப்பினராகி சேவை செய்யும் அளவுக்கு இவர்கள் நல்லவர்களா? ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று அம்மையார் தமிழிசை தெருவில் இறங்கி போராடுகிறார். நீங்கள்தான் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட்டீர்களே...பிறகு இவ்வளவு பணம் எப்படி வந்தது? கேஸ்லெஸ் எகானமி என அறிவித்த பிறகும், முழுக்க 2 ஆயிரம் ரூபாய் தாள்களாக தொகுதியில் விளையாடியது எப்படி? சமூகப் பொறுப்பு என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. பணம்தான் பிரதானம் என்றால் இது முதலாளிகளின் வேட்டைக்காடாகத்தான் இருக்கும். மக்கள் வாழ்கிற நாடாக இது இருக்காது. 

இந்தமுறை தினகரன் கொடுத்த பணத்துக்காக மட்டும் மக்கள் வாக்களிக்கவில்லை. கடந்தமுறை தினகரனுக்காக எடப்பாடி பழனிசாமி வாக்குக் கேட்க வந்தபோது, 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தப் பணமும் தினகரனுக்கான வாக்கு கணக்கில் சேர்ந்துவிட்டது. ' கடந்தமுறை நான்காயிரம் வாங்கிவிட்டோம். இந்தமுறையும் நான்காயிரம் வாங்கிவிட்டோம். அவருக்குத்தான் வாக்கு செலுத்த வேண்டும்' என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இந்த ஒரு விஷயத்தில்தான் மதுசூதனன் தோற்கிறார். இந்தப் பணத்தை தினகரன் எப்படி சம்பாதித்தார் என மக்கள் கேள்வி எழுப்பவில்லை. திருடர்களில் அதிகப் பணம் கொடுக்கிறவர் நல்லவர் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள். கடந்தமுறை தினகரனுக்காக காசு கொடுத்த எடப்பாடி பழனிசாமி, இந்தமுறை மதுசூதனனுக்காக வாக்கு கேட்கப் போகும்போது, ' கடந்தமுறை அவருக்காகப் பணம் கொடுத்தீர்கள். தேர்தலும் நின்று போய்விட்டது. இந்தமுறை தினகரனுக்கே ஓட்டு போடுகிறோம்' என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டனர். இது மக்களிடம் இருக்கும் தர்மம். 

தினகரன் வீட்டில் எவ்வளவு ரெய்டு நடத்தினார்கள். அதையும் மீறி இவ்வளவு பணம் எப்படி வெளியில் வருகிறது? எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது? இந்த நாட்டில் என்ன நடக்கிறது? வருமான வரித்துறை வேட்டை என்ற பெயரில் சேகர் ரெட்டி, நத்தம் விஸ்வநாதன், அன்புநாதன் வீட்டுக்குச் சென்றார்களே, அவர்கள் வீட்டில் என்னதான் எடுத்தார்கள்? எவ்வளவு எடுத்தோம் என நீங்கள் ஏன் மக்களிடம் சொல்லவில்லை? போனமுறை 89  கோடி கொடுத்தது குற்றம் எனத் தேர்தலை ரத்து செய்தார்கள். இந்தமுறையும் பணம் கொடுத்துத்தான் வெற்றி பெற்றார். கேரளாவில் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் அடி விழும். இங்கு காசு கொடுக்கவில்லையென்றால் அடி விழும். இதை மாற்ற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடிமகனும் நினைத்தால்தான் முடியும். ஆர்.கே.நகர் முதலமைச்சர் ஜெயலலிதா தொகுதி என்கிறார்கள். அவருடைய கால் அந்த நிலத்தில் ஒருமுறையாவது தொட்டிருக்குமா? நூறு ஏக்கரில் குப்பை நிறைந்திருக்கும் தொகுதி. எவ்வளவோ நம்பிக்கைகைளை அந்த மக்களிடம் விதைத்தோம். எங்களை ஏமாற்றிவிட்டார்கள். அதேபோல், இந்த நோட்டா என்பதே ஒரு மனநோய். குரங்கு கையில் பூ மாலை என்பதுபோல இவர்கள் கையில் வாக்கு. நன்றாக சமைத்து நானும் சாப்பிட மாட்டேன். மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன் என்பது போலத்தான் நோட்டா வாக்குகளும். இவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களைத்தான் பிடிக்கவில்லை. எங்களை ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது?" என ஆதங்கத்தோடு பேசி முடித்தார் சீமான். 

https://www.vikatan.com/news/tamilnadu/111776-where-are-those-6-thousand-140-votes-in-rk-nagar-seeman-reaction.html

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு... இது வளர்ச்சி   என்பதில் சந்தேகமில்லை.
அதுகும்... ஆளும்  தேசியக் கட்சியான பா. ஜா. க.  வை... பின் தள்ளி,   நாலாம் இடத்திற்கு.... சீமான் வந்தது மகிழ்ச்சி.  
அடுத்த தேர்தலில்....  தினகரன் +  சீமான் கூட்டு  அமைவது பரிசீலிக்கப் பட வேண்டியது.
தினகரனும் தமிழன், சீமானும் தமிழன்.... அதில் பெரிய பிரச்சினை  இருக்காது என நம்புகின்றேன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சிறையில் இருந்து வந்த பின்னர் ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றிவேல் தனது பதவியை விட்டு விலகி ஜெயலலிதா போட்டியிட வழிவகை செய்தார். அந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. மாறாக கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் மட்டுமே போட்டியிட்டார். ஆனாலும் ஜெயலலிதா 1,60,000 வாக்குகளைப் பெற.. மகேந்திரன் 10,000 வாக்குகளைப் பெற்றார். இதுதான் இடைத்தேர்தல்களில் அதிகாரத்தில் உள்ளவர்களின் பலம் என்பது.

சீமானுக்கு சாதகமாகவே இந்த தேர்தல் முடிவுகள் இருக்ககின்றது. இதில் சீமானுக்கு பின்னடைவு என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. 

தினகரன், அதிமுக , திமுக போல் பணத்தை செலவுசெய்வது நமதமிழர் கட்சிக்கு சாத்தியமில்லை. இரண்டாவது மக்களை கேடடால் தொகுதியில் யார் நிறகின்றார்கள் என்பதை அறியாதவர்கள் பலர் ஆனால் இரட்டை இலைக்குதான் ஓட்டுபோடுவோம் ! அநதக் காலததில் இருந்து எம்ஜிஆருக்குத் தான் போடுகின்றறோம் அவருக்குதான் போடுவோம், அம்மாவுக்குத்தான் போடுவோம் , இது ஒரு நிரந்தர மனநிலை போனறது. சீமான் போன்றவர்கள் இந்த மனநிலையை உடைத்தே ஒவவொரு ஓட்டையும் பெற்றாக வேணடியுள்ளது இதனடிப்படையில் நம்தமிழர் பெற்ற 3860 ஓட்டுக்களுக்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றது என்றே கருதமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்டா குண்டா கூசாவில் தண்ணீர் குடித்த காலம் போய் பைக்கற் தண்ணீர் குடிக்க தொடங்கியுள்ளனர்.

எனவே இனிவரும் காலம் சீமானுடன் கை கோர்க்க வேண்டிய தேவை ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.

வயது போன பலர் அதிமுக திமுகவில் வேட்பாளராக எருமை மாட்டை நிற்க வைத்தாலும் நாம் அந்தக் கட்சிக்கு போட்டோம் இந்த சின்னத்திற்கு போட்டோம் என்ற சந்தோசத்துடனேயே இருந்திடுவார்கள்.சிந்தித்து செயலாற்றக் கூடிய இளைஞர் யுவதிகள் களத்துக்கு வரும் போது சீமானுக்கான காலம் வரும்.

மேலேயுள்ள காணெளியை பாருங்கள்.ஒரு வாக்கு சாவடியிலேயே இவ்வளவு என்றால் மொத்த தொகுதியும் என்னவாகியிருக்கும?

  • கருத்துக்கள உறவுகள்

நம்வீட்டு அரசியலே நாறிபோய் கிடக்கும் சூழ்நிலையில், எல்லை கடந்த அரசியல் ஒன்றுக்காக நாங்கள்  உத்தியோகபற்றற்ற கொள்கை பரப்பு செயலாளர்களாய் இருப்பது எந்த வகையில் ஏற்புடையதென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை!

சகித்துகொள்ள முடியாத தோல்வியின் பின்...

நமது நாட்டு மக்களுக்கே அறிவில்லை என்று சீமானே , ஆர்கே நகர் தோல்வியின்பின் சொந்த மாநில மக்களை திட்டும்போது.. எந்த வகையில் எங்கோ இருக்கும் நாங்கள் ... சீமானுக்கு இது தோல்வியில்லை என்று கருத்து கூறமுடியும்?

 

பெயர் கூற விரும்பலைனாலும் பொதுவாய் என் ஆதங்கத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்...

யாழ்களத்தில் உள்ள கல்விமான்களில் ஒருவர்...

பல திறமை வாய்ந்தவர்...

பண்பாளன்..

நகைச்சுவை ,இசை உணர்வு உணர்வு அதிகமுள்ளவர்...

 

இப்படி உயரிய குணங்கள் உள்ள ஒரு மனிதர் எதுக்கு இப்படி உதவாகரை தமிழக அரசியலுடன் கைகோர்க்கிறார் என்பதே   நம்மில் பலருக்கு உள்ள  ஜீரணிக்க முடியாத மன அழுத்தம்!

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

நம்வீட்டு அரசியலே நாறிபோய் கிடக்கும் சூழ்நிலையில், எல்லை கடந்த அரசியல் ஒன்றுக்காக நாங்கள்  உத்தியோகபற்றற்ற கொள்கை பரப்பு செயலாளர்களாய் இருப்பது எந்த வகையில் ஏற்புடையதென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை!

சகித்துகொள்ள முடியாத தோல்வியின் பின்...

நமது நாட்டு மக்களுக்கே அறிவில்லை என்று சீமானே , ஆர்கே நகர் தோல்வியின்பின் சொந்த மாநில மக்களை திட்டும்போது.. எந்த வகையில் எங்கோ இருக்கும் நாங்கள் ... சீமானுக்கு இது தோல்வியில்லை என்று கருத்து கூறமுடியும்?

 

பெயர் கூற விரும்பலைனாலும் பொதுவாய் என் ஆதங்கத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்...

யாழ்களத்தில் உள்ள கல்விமான்களில் ஒருவர்...

பல திறமை வாய்ந்தவர்...

பண்பாளன்..

நகைச்சுவை ,இசை உணர்வு உணர்வு அதிகமுள்ளவர்...

 

இப்படி உயரிய குணங்கள் உள்ள ஒரு மனிதர் எதுக்கு இப்படி உதவாகரை தமிழக அரசியலுடன் கைகோர்க்கிறார் என்பதே   நம்மில் பலருக்கு உள்ள  ஜீரணிக்க முடியாத மன அழுத்தம்!

சும்மா கிடைக்கிற மாட்டினை பல்லை இழுத்துப் பார்க்கிறமாதிரி இருக்குதய்யா உங்கள் கதை.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழ் அவலம் குறித்து குரல் தரும் ஒரே ஆளுமை சீமான் மட்டுமே.

அந்த ஒரு காரணமாகவே சீமான் மீதான ஈர்ப்பு.

அதனை விடுத்து, அவர் வைக்கும் அரசியல் நியாயபூர்வமானது. என்றாவது வெல்லும். நீங்கள் சொல்லும் படித்த பண்பாளர்கள் ஆதரவு தருவதில் தப்பு என்ன உள்ளது?

EPS, OPS, TTV, சசிகலா, ஸ்டாலின் போன்ற பக்கா ஊழல் வாதிகளிலும் பார்க்க, சக தமிழன் என்ற வகையில், சீமானுக்கு நானும் ஆதரவு தான் நண்பரே.

முக்கியமாக, சீமானை உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற உரிமை உள்ளது போல, அடுத்தவர்களுக்கு பிடிக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் மதிக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சும்மா கிடைக்கிற மாட்டினை பல்லை இழுத்துப் பார்க்கிறமாதிரி இருக்குதய்யா உங்கள் கதை.

இன்று தமிழகத்தில் ஈழத்தமிழ் அவலம் குறித்து குரல் தரும் ஒரே ஆளுமை சீமான் மட்டுமே.

அந்த ஒரு காரணமாகவே சீமான் மீதான ஈர்ப்பு.

அதனை விடுத்து, அவர் வைக்கும் அரசியல் நியாயபூர்வமானது. என்றாவது வெல்லும். நீங்கள் சொல்லும் படித்த பண்பாளர்கள் ஆதரவு தருவதில் தப்பு என்ன உள்ளது?

EPS, OPS, TTV, சசிகலா, ஸ்டாலின் போன்ற பக்கா ஊழல் வாதிகளிலும் பார்க்க, சக தமிழன் என்ற வகையில், சீமானுக்கு நானும் ஆதரவு தான் நண்பரே.

சீமான் வாழும் தமிழக மக்களின் ஆதரவு இன்றி,,  வெறுமனே  எமது உணர்வுபூர்வ கூச்சல் ............

 அவருக்கான அரசியல் அங்கீகாரம் தமிழ்நாட்டில்  கிடைக்க  ஒருபோதும்  வழிவகுக்காது என்பதை ஏற்று கொள்வீர்களா நீங்கள் நாதமுனி?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

சீமான் வாழும் தமிழக மக்களின் ஆதரவு இன்றி,,  வெறுமனே  எமது உணர்வுபூர்வ கூச்சல் ............

 அவருக்கான அரசியல் அங்கீகாரம் தமிழ்நாட்டில்  கிடைக்க  ஒருபோதும்  வழிவகுக்காது என்பதை ஏற்று கொள்வீர்களா நீங்கள் நாதமுனி?

உங்களது அங்கலாப்பு புரிகிறது. 

அவருக்கான காலம் வரும்....

தான் ஒரு 5000 மீட்டர் ஓட்டக்காரன். எனக்கு கடைசி சுற்று தான் முக்கியம். அந்த சுற்று வரும் போது நான் மட்டுமே ஓடி கொண்டு இருப்பேன் என்று தெளிவாக இருக்கிறாரே.

இந்த தேர்தலில், தினகரன் வெல்ல வேண்டும் என்ற நிலையை திமுக கூட விரும்பி உள்ளது. சீமானும் கூட விரும்பி இருக்கலாம்.

காரணம்: EPS, OPS அதிமுக வென்றால், அடுத்த 4 வருடங்களுக்கு தேர்தல் இல்லை. அவர்களை மக்கள் அங்கீகரித்து விட்டார்கள் என்று சொல்லியே காலத்தினை  ஓட்டி விடுவார்கள். 

அது எதிர்க் கட்சிகளுக்கு சர்ர்ப்பானது அல்ல.

இன்றய நிலையில், தினகரன் நோக்கி, அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் பாயப் போகின்றனர். இறுதியில் அரசு களைய தேர்தல் வரும்.

இதனையே திமுக வின் ஸ்டாலின், சீமான் உட்பட பலரும் விரும்பும் அரசியல் நிலை. இதனை புரிந்தால், அரசியல் சூட்ச்சுமம் புரிந்த மாதிரித் தான். இந்த நிலைப்பாட்டில் சீமான் வென்றாரா, ஸ்டாலின் வென்றாரா என்ற கதையே பிரயோசனம் இல்லாதது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

 

அவருக்கு ஓட்டுபோடும் இந்திய அரசியல் வாக்குரிமை உள்ளவர்களாலயே முடியாததை... ஓவர்ஸீஸில் இருந்து கொந்தளீப்பவர்களால் சாத்தியமாக்க முடியுமா என்பதையே மறைமுகமா கேட்டிருந்தேன்... இப்போதும் கேட்கிறேன்... நீங்கள் சரியான பதில் தந்துவிட்டதா நம்புகிறீர்களா நாதமுனி?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, valavan said:

அவருக்கு ஓட்டுபோடும் இந்திய அரசியல் வாக்குரிமை உள்ளவர்களாலயே முடியாததை... ஓவர்ஸீஸில் இருந்து கொந்தளீப்பவர்களால் சாத்தியமாக்க முடியுமா என்பதையே மறைமுகமா கேட்டிருந்தேன்... இப்போதும் கேட்கிறேன்... நீங்கள் சரியான பதில் தந்துவிட்டதா நம்புகிறீர்களா நாதமுனி?

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்திரா காந்தி இறந்தவுடன், ராஜிவ் வெல்ல வேண்டுமென இலங்கையர் சகலரும் கொந்தளித்தார்கள்.  கருணாநிதிக்கு எதிராக களம் குதித்த எம் ஜி ஆர் வெல்ல வேண்டும் என்று இலங்கையர் சகலரும் விரும்பினார்.

இது தார்மீக ஆதரவு.

அதேபோல, 2015 ல்  மகிந்த தோற்கடிக்கப் பட வேண்டும் என தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கொந்தளித்தார்கள். அதுவும் தமிழர்களுக்கான தார்மீக ஆதரவு.

அதுமட்டுமல்ல, புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கூட அதனையே விரும்பினார்கள்... வாக்குகள் இல்லா நிலையிலும். இது தார்மீக ஆதரவு.

தமிழகத்தில் எம்மீதான அனுதாபத்தினை, அதனால் அவர்களுக்கு பிரயோசனம் இல்லை என்று தெரிந்தும்,  வெளிப்படுத்தப்பவர்களை ஆதரிக்கக் கூடாதா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இந்திரா காந்தி இறந்தவுடன், ராஜிவ் வெல்ல வேண்டுமென இலங்கையர் சகலரும் கொந்தளித்தார்கள்.  

இது எப்போ நடந்தது? யார் விருப்பமும் அறியாமலே அதிகாரபூர்வ அடுத்த பிரதமரா காங்கிரஸ் கட்சியால் ராஜீவ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பதே நான் கேள்விபட்டது... ஒருவேளை  நான் கேள்விபட்டதில் 

 தவறு இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

இது எப்போ நடந்தது? யார் விருப்பமும் அறியாமலே அதிகாரபூர்வ அடுத்த பிரதமரா காங்கிரஸ் கட்சியால் ராஜீவ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் என்பதே நான் கேள்விபட்டது... ஒருவேளை  நான் கேள்விபட்டதில் 

 தவறு இருக்கலாம்!

தவறு. :101_point_up:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தவறு. :101_point_up:

அப்போ யார் கொந்தளித்ததால், ராஜீவ்காந்தி அதிகாரபூர்வமான பிரதமர் ஆனார்?

 

51 minutes ago, valavan said:

நம்வீட்டு அரசியலே நாறிபோய் கிடக்கும் சூழ்நிலையில், எல்லை கடந்த அரசியல் ஒன்றுக்காக நாங்கள்  உத்தியோகபற்றற்ற கொள்கை பரப்பு செயலாளர்களாய் இருப்பது எந்த வகையில் ஏற்புடையதென்று புரிந்துகொள்ளவே முடியவில்லை!

சகித்துகொள்ள முடியாத தோல்வியின் பின்...

நமது நாட்டு மக்களுக்கே அறிவில்லை என்று சீமானே , ஆர்கே நகர் தோல்வியின்பின் சொந்த மாநில மக்களை திட்டும்போது.. எந்த வகையில் எங்கோ இருக்கும் நாங்கள் ... சீமானுக்கு இது தோல்வியில்லை என்று கருத்து கூறமுடியும்?

 

பெயர் கூற விரும்பலைனாலும் பொதுவாய் என் ஆதங்கத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்...

யாழ்களத்தில் உள்ள கல்விமான்களில் ஒருவர்...

பல திறமை வாய்ந்தவர்...

பண்பாளன்..

நகைச்சுவை ,இசை உணர்வு உணர்வு அதிகமுள்ளவர்...

 

இப்படி உயரிய குணங்கள் உள்ள ஒரு மனிதர் எதுக்கு இப்படி உதவாகரை தமிழக அரசியலுடன் கைகோர்க்கிறார் என்பதே   நம்மில் பலருக்கு உள்ள  ஜீரணிக்க முடியாத மன அழுத்தம்!

 

 

 

 

நல்ல அரசியல் உதவாககரை அரசியல் என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை. இலஙகை சிங்கள, தமிழ் அரசியல், தமிழக இந்திய அரசியல், ரோகிங்கிய இஸ்லாமியர்கள் வதைபடுவதை வேடிக்கை பாரக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசுபெற்ற அன்சாங் சுகியின் அரசியல் ஜெருசலோம் குறித்த டிரம்பின் அரசியல் என எங்கும் நல்லது கெட்டது என்ற அளவுகோலுடன் ஆர்வம் காட்டுவதோ இல்லை ஒதுங்குவதோ சாத்தியம் இல்லை. 

எல்லை கடந்த அரசியல் என்பது மிக வேடிக்கையான வசனம். ஈழத்தமிழர் அரசியலும் தமிழக அரசியலும் பிரிக்க முடியாத இணைப்பை உடையது. எம்மவர்களால் சினிமா சினிமா பாடல்கள் இதர விசயங்கள் என்ற நுகர்வில் இருந்து எவ்வாறு விடுபட முடியாதோ அவ்வாறே இந்த அரசியல் தன்மையும் அதில் உள்ள ஆர்வமும். 

புலிகளின் வீழ்ச்சி பின் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் என்று எதுவும் இல்லை. புலிகளே ஈழததமிழர்களின் அரசியல் தளம். தளமற்ற அரசியல் என்பதே தற்போதைய நிலை. தமிழ்த்தேசீயம் தனக்கான தளத்தை தேடும் காலமாக இக்காலம் உள்ளது. அது ஒன்றும் யாழ்பாணம் வன்னி கிழக்கு என்ற பிரதேசத்தில் தொலைந்த பொருளோ இல்லை கனடா லண்டனில் தொலைந்த பொருளோ இல்லை. அது ஒரு பொது தன்மை சார்ந்த உணர்வு. அந்த உணர்வின் விஸ்தரிப்பும் பலமும் தான் ஒரு தளம் அமைப்பதற்கான அடிப்படையை உருவாக்கும். இவ் உணர்வு சார்ந்த விடயத்தில் யாரும் குறுக்கிடுவதற்கு இடமில்லை. அவரவருக்கு ஏற்ப ஆர்வம் இயல்பாக நகரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சண்டமாருதன் said:

 

 

எல்லை கடந்த அரசியல் என்பது மிக வேடிக்கையான வசனம்.

பல எல்லைகள் கடந்து வாழ்ந்தும் சொந்த நாட்டின் அரசியலில் சிறு துரும்பு அளவுகூட நகர்தல் எம்மால் செய்ய முடியவில்லையே,  அகம், புலம் என்ற இந்த இருவெளிகளை கடந்து மூன்றாம் ..அரசியல் ஒன்றில் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று நாம் உறுதியாக நம்புவதுதான் வேடிக்கை என்று நான் நினைக்கிறேன்..!

பலமுள்ள வாக்குவங்கிகள் கொண்ட தமிழக அரசியல் தலமைகளே  மத்திய அரசின் முன்னால் மண்டியிட்டு எம்மை கைவிட்டபோது... பலம்பெறும் என்ற எந்த சமிஞ்சையும் இன்னும் சில தசாப்தங்கள்வரை காணப்படாத ஒரு கட்சி... வெறும் ஆவேசமான பேச்சுக்களை மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு தலைமை... எமக்கான எதிர்காலம் என்று நாங்கள் நம்புவது...புரிந்துகொள்ள சிரமமானதொன்று  !

ஒருவேளை. நான்  புரிந்துகொள்வது எனக்குமட்டும்   வேடிக்கையா இருக்கலாம்  அந்த வேடிக்கையோடு வாழ்வு நகரட்டும்!

4 minutes ago, valavan said:

பல எல்லைகள் கடந்து வாழ்ந்தும் சொந்த நாட்டின் அரசியலில் சிறு துரும்பு அளவுகூட நகர்தல் எம்மால் செய்ய முடியவில்லையே,  அகம், புலம் என்ற இந்த இருவெளிகளை கடந்து மூன்றாம் ..அரசியல் ஒன்றில் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று நாம் உறுதியாக நம்புவதுதான் வேடிக்கை என்று நான் நினைக்கிறேன்..!

பலமுள்ள வாக்குவங்கிகள் கொண்ட தமிழக அரசியல் தலமைகளே  மத்திய அரசின் முன்னால் மண்டியிட்டு எம்மை கைவிட்டபோது... பலம்பெறும் என்ற எந்த சமிஞ்சையும் இன்னும் சில தசாப்தங்கள்வரை காணப்படாத ஒரு கட்சி... வெறும் ஆவேசமான பேச்சுக்களை மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு தலைமை... எமக்கான எதிர்காலம் என்று நாங்கள் நம்புவது...புரிந்துகொள்ள சிரமமானதொன்று  !

ஒருவேளை. நான்  புரிந்துகொள்வது எனக்குமட்டும்   வேடிக்கையா இருக்கலாம்  அந்த வேடிக்கையோடு வாழ்வு நகரட்டும்!

 

//மூன்றாம் அரசியல் ஒன்றில் மாற்றம் ஏற்படுத்தலாம் என்று நாம் உறுதியாக நம்புவதுதான் வேடிக்கை என்று நான் நினைக்கிறேன்..!

வெறும் ஆவேசமான பேச்சுக்களை மட்டுமே மூலதனமாக கொண்ட ஒரு தலைமை... எமக்கான எதிர்காலம் என்று நாங்கள் நம்புவது...புரிந்துகொள்ள சிரமமானதொன்று  !//

மேலே உள்ள உங்கள் கருத்தின் இருவசனங்கள் குழப்பமானது. ஈழத் தமிழர்கள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதில்லை. உறுதியாக நம்புவதும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவர்கள் அரசியலை அவர்கள் சூழல் தான் தீர்மானிக்க வேண்டும். அதே போல் ஈழத்தமிழர்கள் தமக்கான எதிர்காலமாக தமிழகத்தில் பேசசைமட்டும் மூலதனமாகக் கொணட தலமையை நம்பவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை. எங்கள் வலிக்கு நாங்கள் தான் மருந்து போடவேண்டும். இந்த சிந்தனை முறை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருத முடியும்.

ஒரு கலத்தில் புலமபெயர் தேசத்தில் இருந்து பணத்தை புலிகளுக்கு அனுப்பி அவகள் ஊடாக தமிழீழம் பெற்றுவிடலாம் என்பது நடமுறையில் இருந்தது. இது மறைமுகமாக ஒரு முதலாளி தொழிலாளி என்ற நிலைதான். இது தேசீயம் விடுதலை என்ற விடயத்தில் சாத்தியம் இல்லை என்பதை வரலாறு முகத்தில் அடித்து நிருபித்துள்ளது.  அதே மனநிலையுடன் அரசியலை அணுகுவதால் தான்  தமிழகத்தில் இருந்து வைக்கோ நெடுமாறான் சீமான் தமிழீழத்தை பெற்றுத தருவார் என்ற கருத்து திணிப்பும் சிந்தனை முறையும் ஏற்படுகின்றது. இங்கு அவ்வாறான சிந்தனை முறை இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. 

சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையுடன் இந்திய மையவாத அரசியலும் இணைந்துகொள்கின்றது. ஒடுக்குமுறைக்கு உட்படட எமககான ஆதரவுககுரலகளை நாம் ஆதரிப்பது இயல்பானது. அவர்கள் பலம் பெற விரும்புவது இயல்பானது. இந்த இயல்புத் தன்மையை நீங்கள் உஙகள் கறபனைககு ஏற்றவாறு வேறு அதீத எலலைகளுக்கு எடுத்துச் செலவது உஙகள் புரிதலில் சிக்கல் என்றே கருத முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சண்டமாருதன் said:

 

 

. ஈழத் தமிழர்கள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முனைவதில்லை. உறுதியாக நம்புவதும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அவர்கள் அரசியலை அவர்கள் சூழல் தான் தீர்மானிக்க வேண்டும். அதே போல் ஈழத்தமிழர்கள் தமக்கான எதிர்காலமாக தமிழகத்தில் பேசசைமட்டும் மூலதனமாகக் கொணட தலமையை நம்பவும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை. எங்கள் வலிக்கு நாங்கள் தான் மருந்து போடவேண்டும். இந்த சிந்தனை முறை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருத முடியும்.

 

 

ஹா..ஹா.. சண்டமாருதன்... 

ஈழதமிழர்களால் தமிழக அரசியலிலோ, தமிழகத்தால் ஈழ அரசியலிலோ எந்த மாற்றமும் கொண்டுவரமுடியாது, அதுதான் யதார்த்தம்..வெறும் பேச்சுக்கள்மட்டுமே மூலதனம்... நேரவிரயம்!! 

... நான் சொன்னதை மீள நீங்கள் உங்களுக்கே உரிய கருத்து சாணக்யத்துடன் மீள்பதிவிடுகிறீர்கள்,  அனைத்தையும் தாண்டி பல தலைப்புக்களில் ,உங்கள் எழுத்துக்களின் பரம ரசிகன் நான் என்பதை மட்டும் சொல்லி  ஒதுங்கி கொள்கிறேன், ஒரே விஷயத்தை எதுக்கு அதிகமா பேசவேண்டும் என்பதால் மட்டுமே, உங்களை உதாசீனம் பண்ணியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை போடதீங்கப்பூ .. :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.