Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள்

Featured Replies

திரை விமர்சனம்: களவாடிய பொழுதுகள்

 

 
kalavajpg

கோவையில் டாக்ஸி ஓட்டும் பிரபுதேவா, விபத்தில் சிக்கும் பிரகாஷ்ராஜை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். மனிதாபிமானத்துடன் தன் உயிரைக் காப்பாற்றியவரைப் பார்க்க விரும்புகிறார் விபத்தில் இருந்து மீண்ட பிரகாஷ்ராஜ். இதற்காக தன் மனைவி பூமிகாவை, பிரபுதேவாவின் குடும்பத்துக்கு உதவிகளைச் செய்துவருமாறு அனுப்புகிறார். ஆனால், பூமிகாவை பார்க்க மறுத்ததோடு, அவர் கொடுத்துவிட்டுச் சென்ற பணத்தையும் திருப்பி அனுப்புகிறார் பிரபுதேவா. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார்? அவருக்கும், பிரகாஷ்ராஜ் குடும்பத்துக்குமான உறவு என்ன? இவர்கள் மூவரும் நேரில் சந்தித்தார்களா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு உணர்வுபூர்வமான காட்சிகள் மூலம் விடையை விரித்திருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.

காதலின் உன்னதம் அதன் நேர்மையிலும், கண்ணியத்திலும் அடங்கியிருக்கிறது என்ற உண்மையை, நம் நினைவுகளைக் கிளறிச் சொல்கிறது இப்படம். திசைமாறிப்போன காதலர்களை வாழ்க்கை திரும்பவும் சந்திக்க வைக்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்ற எதிர்பார்ப்பையும், அதில் ஒளிந்திருக்கும் திருப்பங்களையும் இயல்பும் நேர்மையுமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் திரைக்கதை – உரையாடலை இணைந்து எழுதியிருக்கும் தங்கர் பச்சான், ஆர்.டி.தமிழ்செல்வி ஆகிய இருவரும்.

‘அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை’ என்று அம்பாசிடர் காரில் எழுதி வைத்திருக்கும் ஓட்டுநர் பிரபுதேவா. முன்பின் தெரியாத ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும்போது வேடிக்கை பார்க்காமல், தன்னிடம் இருக்கும் சொற்ப பணத்தைக் கட்டி அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிந்தபிறகு நிம்மதி அடைகிற சகமனித பேரன்பில் தொடங்குகிறது பிரபுதேவா கதாபாத்திரத்தின் அறிமுகம்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, தன் காதலுக்கு கைநிறைய விலை கிடைத்தும், அதை விற்றுவிடாமல் தன் முன்னாள் காதலியை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்து, காதலியின் கண்களைத் தவிர்க்கும்போதெல்லாம் செழியனாக வாழ்ந்திருக்கிறார் பிரபுதேவா. ‘‘நீங்க அழுதா எங்களால தாங்கமுடியாது. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்’’ என்று கூறும் மனைவியின் மடியில் கவிழ்ந்து குமுறும் காட்சியில் பிரபுதேவா மட்டுமல்ல, பார்வையாளர்களின் கண்களும் குளமாகின்றன.

பிரபுதேவா கதாபாத்திரம், காதலின் காயத்துக்கு தன் உதவிகளால் மருந்திட முடியாதா என ஏங்கும் பூமிகாவின் கதாபாத்திரம், உதவிகளை மறுக்கும் ஒருவனை தன் அருகில் வைத்துக்கொள்ளத் துடிக்கும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் என மூன்று முதன்மைக் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் போராட்டத்துக்கு நடுவே, காதலின் கண்ணியத்துக்கு அரியணை அளித்திருக்கிறார் தங்கர் பச்சான்.

அவர்கள் மூவருமே கதாபாத்திரங்களுக்கான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். ‘‘அப்பா, நாம மறுபடியும் ஏழையாகிட்டோமா? நான் திரும்பவும் அந்த ஓட்டப் பள்ளிக்கூடத்துக்குத்தான் போகணுமா?’’ என்று கேட்கும் குழந்தை நட்சத்திரம் ஜோஷிகாவும் கவனிக்க வைக்கிறாள்.

பரத்வாஜின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு முதுகெலும்பாக தாங்கிப் பிடிக்கின்றன. ‘அழகழகே’, ‘சேரன் எங்கே’ ஆகிய 2 பாடல்களின் இசையும், வரிகளும் திரையரங்குக்கு வெளியே வந்தபிறகும் செவிகளுக்குள் ஒலிக்கின்றன.

தங்கர் பச்சானின் ஆர்ப்பாட்டம் இல்லாத ஒளிப்பதிவும், கே.கதிரின் கலை இயக்கமும் படத்துக்கு கூடுதல் பலம்.

தேர்தலும், அரசியலும் வருமானத்துக்குரிய ஒரு நிகழ்வாக மாறிப்போனதை, காதல் கதைக்கு இடையே சாடியிருக்கிறார் இயக்குநர். பொழுதுபோக்கு என்ற பெயரில் தமிழ் சினிமாவும், தொலைக்காட்சியும் ஆபாசக் கிடங்காக ஆகிவிட்டதையும் கடிந்து கூறியிருக்கிறார். பெரியாரும் ஜீவாவும் உயிருடன் வந்து தமிழர்களைக் கடிந்துகொள்வது போன்ற பாடல் காட்சி, படத்தில் ஒட்டவைத்த ஒன்றாக இருக்கிறது.

காதலை முன்புபோல, முக்கிய உள்ளடக்கமாக தற்கால தமிழ் சினிமா கையாள்வதில்லை. முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும்கூட, ஒரு வெளிநாட்டுப் பாடல் காட்சி என்பதோடு முடிந்துவிடுகிறது காதல். அது கண்மூடித்தனமான பொழுதுபோக்கு, விடலைகளின் பருவகால பாலின்ப விளையாட்டு என்று காட்டிக் காட்டி, அதன் நேர்மையை முடிந்த அளவுக்கு நீர்த்துப்போகச் செய்துவிட்டு ஓய்ந்திருக்கிறது நம் திரையுலகம். இந்த சூழலில், காதலின் மென்மையை, அது கற்றுத்தரும் நேர்மையை மிகவும் உணர்வுபூர்வமாகக் கடத்துகிறது இந்தப் படம். காதலைக் கடந்து வந்தவர்கள், காதலில் வாழ்பவர்கள், காதலை தன்வசமாக்க விரும்புகிறவர்கள் ஆகிய அனைவரையும் இந்தப் படம் களவாடும்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article22330905.ece

  • தொடங்கியவர்

''உங்க பாணில மனசைக் களவாடிட்டீங்க தங்கர்!'' - ‘களவாடிய பொழுதுகள்’ விமர்சனம்.

 
 
Chennai: 

வாழ்க்கையின் ஓட்டத்தில் முன்னாள் காதலர்களைச் சந்திப்பதென்பது, அவ்வளவு எளிதாய்க் கடந்துவிடக்கூடிய விசயமில்லை என்ற 'அழகி'யலை மற்றொருமுறை உணர்வுபூர்வமாக 'களவாடிய பொழுதுகளி'ன் வழியே சொல்லியிருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான். 

விபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் சௌந்தரராஜனைக் (பிரகாஷ்ராஜ்) காப்பாற்றி, தன் கையிலிருக்கும் பணத்தை வைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார் கார் டிரைவர் பொற்செழியன் (பிரபுதேவா). பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயந்தி(பூமிகா)தான், பொற்செழியனின் முன்னாள் காதலி. பழைய நினைவுகள் மீண்டும் துளிர்க்க, பூமிகாவையும் பிரகாஷ்ராஜையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார் பிரபுதேவா. அவர் எவ்வளவு விலகிச் சென்றாலும், பூமிகா அவருக்கு வலிய வந்து உதவ விரும்புகிறார். ஒருகட்டத்தில் பூமிகாவின் உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை பிரபுதேவாவுக்கு. அதற்குப்பிறகு பிரச்னைகள் வேறொரு வடிவமெடுக்கின்றன. இரண்டு முன்னாள் காதலர்களும் ஒரே இடத்தில் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இருக்க முடிந்ததா, இருவரின் குடும்பத்தின் மனநிலை என்ன என்பதை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான். 

 

களவாடிய பொழுதுகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு படம் வெளியானாலும், நம்மைக் காட்சிகளின் வழியே கட்டிப்போட்ட வகையிலும், பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டவகையிலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள்! பொற்செழியன் என்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் பிரபுதேவா. பொற்செழியன் - ஜெயந்தி இருவரது வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்; இந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அவரது நேர்மை, போன்றவை காட்சி வாயிலாக அலசப்படுகிறது. அந்த இடத்தில் இருப்பது, அவருக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல என நினைத்துப் பதபதைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பிரபுதேவாவின் நடிப்பு படத்தின் போஸ்டர்களில் இருப்பதுபோல் ,'உன்னத நடிப்பு'தான். பிரபுதேவாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் சவால்விட்டு நடித்திருக்கிறார் பூமிகா. இரண்டு முன்னாள் காதலர்களின் மன அவஸ்தைகளைச் சொல்லமுடியாத உணர்வுகளைத் தங்கள் சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இருவரது முன்னாள் காதலைப் பற்றித் தெரியவந்ததும், பிரகாஷ்ராஜ் தரும் முகபாவனைகளும், எடுக்கும் முடிவும் அற்புதம். 

கதையை மையப்படுத்தி நடிகர்களிடம் மிகச்சிறப்பான நடிப்பைப் பெறுவதில் மற்றுமொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார், தங்கர் பச்சான். பொற்செழியனின் மனைவியாக வரும் ராணியின் (இன்பநிலா) நடிப்பில் அவ்வளவு வெகுளித்தனம் கலந்த யதார்த்தம். மேடை நாடகம் போன்ற செட்டப்பில், ரியாலிட்டி ஷோக்கள் தலையிலும் ஒரு கொட்டு வைத்திருக்கிறார் தங்கர் பச்சான். அதற்கடுத்து வரும் பெரியார், தோழர் ஜீவா காட்சிகள் நல்லதொரு தொடக்கம். அதேபோல், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் வரும் காட்சி குழந்தைகளுக்கானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், இடைத்தேர்தல் வசனங்களும், டாஸ்மாக் காட்சிகளும் (படத்தில் ஒயின்ஷாப்) இன்றளவுக்கும் பொருந்தி வருவதுதான் தமிழகத்தின் சாபக்கேடான சூழல். காதல் காட்சிகள்தாம்  ஏனோ 80-களில் வெளிவந்த சினிமா போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.

களவாடிய பொழுதுகள் விமர்சனம்

தங்கர் பச்சான் படங்களில் பேசப்படும் அரசியல் இதிலும் தொடர்கிறது. ஒரு படத்திற்குள் இயக்குநரின் அனைத்து அரசியல் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டு வந்துவிடவேண்டும் என்று ஏன் இவ்வளவு பிரயத்தனங்கள் இயக்குநரே?. இந்தப் படத்தில் அத்தகைய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.  படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவது ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகிறது. 'ஹோட்டல்ல  தமிழ் பாடல் போட்டிருக்கீங்க; தமிழ்ல கோயில் அர்ச்சனை நடக்குதா; தமிழர்களுக்குப் பெங்களூருல எதுவும் பிரச்னையில்லையே' எனப் பிரகாஷ்ராஜ் ஒருபுறம், 'மூளை வேலை செய்பவனுக்கு அதிகச் சம்பளம், உடல் வேலை செய்பவனுக்குக் கம்மி சம்பளமா' என பெரியாரிஸத்தையும், கம்யூனிஸத்தையும் உச்சஸ்தாயியில் முழங்கிவிட்டு அடுத்தநாளே முதலாளித்துவத்துக்குத் தாவுகிறார் பிரபுதேவா. மளிகைக்கடைக்கார அண்ணாச்சியிலிருந்து பக்கத்து வீட்டுப்பெண்கள் வரை இயல்பான வசனங்கள் பேசி பளிச்சிடும் ராணி கதாபாத்திரம்கூட ஒரு காட்சியில், 'பிரபாகரன் என்னும் பெயர் யாருக்குத்தான் பிடிக்காது?' என்கிறார். அவ்வளவு ஏன், படத்தில் வரும் காதல் பாடலில் கூட குறுந்தொகை, திருக்குறள்தான். தங்கர் பச்சானின் தமிழ் உணர்வைப் பாராட்டும் அதேநேரத்தில், அவை பாத்திரங்களின் இயல்புக்கு மாறாகத் துருத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிரகாஷ்ராஜின் தொழிலதிபர் பாத்திரத்தை அதற்கேயுரிய பின்னணியோடும் இயல்போடும் சித்திரித்திருக்கலாம்.

கார்த்திக் குரலில் வரும் 'அழகழகே..' பாடல் பரத்வாஜின் பழைய மெலடிகளை நினைவூட்டுகிறது. மறைந்த பாடகர் திருவுடையான் குரலில் வரும் 'ஆளுக்கொரு விடுகதையா...' பாடல் வாழ்க்கையின் புதிர்தன்மை குறித்த பயத்தை விதைக்கிறது. 'சேரன் எங்கே, சோழன் எங்கே?' பாடல் தமிழுணர்வு, பகுத்தறிவு, சமதர்மம் என்று பல அரசியல் விஷயங்களைப் பாடுகிறது. 

 

'காதலில் வெற்றி பெறுவது கல்யாணத்தில் முடியும், தோல்வியில் முடியும் காதல்தான் காவியமாகும்' என ஒரு வசனம் படத்தில் வரும். படம், இன்னும் சற்று கச்சிதமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தியிருந்தால், நமக்கு தங்கர் பச்சானிடமிருந்து மீண்டும் ஓர் 'அழகி' கிடைத்திருக்கும்.

https://cinema.vikatan.com/movie-review/112253-kalavaadiya-pozhuthugal-movie-review.html

  • கருத்துக்கள உறவுகள்

26112293_1547398422020742_63125585272977

*தி இந்து* நாளிதழில் களவாடிய பொழுதுகள் திறனாய்வு.

நீங்கள் என்னை வாழ்த்தினால் மட்டும் போதாது. 
உடனடியாக குடும்பத்தினருடன் திரையரங்கு சென்று இந்த திரைப்படத்தை காணவும் முயலுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

நீங்கள் என்னை வாழ்த்தினால் மட்டும் போதாது. 
உடனடியாக குடும்பத்தினருடன் திரையரங்கு சென்று இந்த திரைப்படத்தை காணவும் முயலுங்கள்.

 

லவ்வருடன் பார்க்க முடியாதா குடும்பத்தினருடன் தான் பார்க்கலாமா?? tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லவ்வருடன் பார்க்க முடியாதா குடும்பத்தினருடன் தான் பார்க்கலாமா?? tw_blush:

அதெல்லாம்  இருப்பவன் யோசிக்கணும் ராசா...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

லவ்வருடன் பார்க்க முடியாதா குடும்பத்தினருடன் தான் பார்க்கலாமா?? tw_blush:

ஏன் முடியாது.... நீங்கள் லவ்வருடன் அவரின் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போகலாம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதெல்லாம்  இருப்பவன் யோசிக்கணும் ராசா...:grin:

சரி சரி எப்ப பாரு பட்ட இடத்தில ஏறி மிதிக்கிறதே வேலையாப்போச்சு :unsure:

1 minute ago, suvy said:

ஏன் முடியாது.... நீங்கள் லவ்வருடன் அவரின் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போகலாம்.....!  tw_blush:

நம்மட் வண்டில் தனி மாட்டுடன் ஓடுது இதுல       பட்டியாம் ம்கும் ஆளை விடுங்க சாமி tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி சரி எப்ப பாரு பட்ட இடத்தில ஏறி மிதிக்கிறதே வேலையாப்போச்சு :unsure:

நம்மட் வண்டில் தனி மாட்டுடன் ஓடுது இதுல       பட்டியாம் ம்கும் ஆளை விடுங்க சாமி tw_blush:

எலி  தான் போக வழியைக்காணலையாம்

காவோலையும் இழுத்துக்கொண்டு   போச்சாம் என்று நாங்க சொன்னால்  

ஏறி  மிதிக்கிறம் என்பார்கள் ராசா...:grin:

  • கருத்துக்கள உறவுகள்

 பரத்வாஜின் இசையில் 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.