Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கு மதுபானம் விற்பதற்கான தடை நீக்கம்..

Dkn_Daily_News_2018_5021892786027.jpg

Dkn_Daily_News_2018_5021892786027_zps8h2

கொழும்பு: இலங்கையில் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிக்கப்பட்டு இருந்த தடையை அரசு திரும்ப பெற்றது. இலங்கையில் கடந்த 1979ம் ஆண்டு முதல் பெண்கள் மதுபானங்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும், மதுபானங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்றவும்  அரசு தடை விதித்திருந்தது. எனினும், பல இடங்களில் பெண்கள் மதுபானங்களை விற்பதிலும், மதுபானங்களை பரிமாறும் சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். 

மேலும், பெண்களுக்கு  தடையை மீறி மதுபானங்களும் விற்கப்பட்டன. இந்நிலையில், பெண்களுக்கு மதுபானங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதிக்கப்பட்ட தடையை 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அரசு நேற்று நீக்கியது. இதற்கான உத்தரவில், அமைச்சர் மங்கல சமரவீரா கயெழுத்திட்டு உள்ளதாக நிதியமைச்சம் தெரிவித்துள்ளது. 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367154

Edited by குமாரசாமி
iKG52/734 §03

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் என்ன எல்லோர் வீட்டிலும் கொண்டாட்டம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மதுபானம் வாங்கவும் விற்கவும் தடை இருந்தது என்பது இண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, புங்கையூரன் said:

பெண்கள் மதுபானம் வாங்கவும் விற்கவும் தடை இருந்தது என்பது இண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்.

எப்பவுமே குடிக்க தடையில்லை.

இனிமேல் குடுத்து குடிக்காவிட்டால் கடை வாசலில் காணலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன எல்லோர் வீட்டிலும் கொண்டாட்டம் தான்.

ஏன்? முந்தியெல்லாம் என்னவாம்????:grin:

1 hour ago, புங்கையூரன் said:

பெண்கள் மதுபானம் வாங்கவும் விற்கவும் தடை இருந்தது என்பது இண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்.

அவை பப்பிளிக்கிலை போய் வாங்கிக்குடிக்கிறேல்லை எண்டு தெரியும்.....ஆனால் வாங்கிறதுக்கு தடையெண்டு எனக்கும் தெரியாது...

  • கருத்துக்கள உறவுகள்

 சட்டி பானை உடையாமல், நடுறோட்ட்ல விழுந்து கிடவாமல் இருந்தால் சரி. எல்லாவற்றிலும் சமஉரிமை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

பெண்கள் மதுபானம் வாங்கவும் விற்கவும் தடை இருந்தது என்பது இண்டைக்குத் தான் எனக்குத் தெரியும்.


இப்படியான...  கலாச்சார,  மாற்றங்கள்,  
பெரிய.. பாதிப்பினை,    ஏற்படுத்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய... அம்மா,  அம்மம்மா.....  அன்ரி, தங்கச்சி  , எல்லாரும் தண்ணி,அடிக்க வேணுமா?

மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானிக்கு ஆப்பு !

 

 

கடந்த வாரம் மதுபானம் தொடர்பில் வெளியான வர்த்தமானியை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

sri-lanka-liquor-shops.jpg

அகலவத்தையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

 

மதுபான நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்கள் நீடிப்பு, மதுபானங்களை பெண்கள் கொள்வனவு செய்வது தொடர்பிலும் மதுபானசாலைகளில் பெண்கள் கடமைாயற்றுவது தொடர்பிலும் கடந்தவாரம் வர்த்தமானியொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29392

  • கருத்துக்கள உறவுகள்

தடைகள் இருந்திருக்கலாம் , ஆனால் அந்த சட்டத்தை யாரும் கடைபிடித்ததில்லை.

இலங்கையில் இருந்த காலத்தில் எம்மில் பலர்  சாராய கடையில் ,கள்ளு தவறணையில் நேரடியாக சென்று மது வாங்கிய பல பெண்களை கண்டிருக்கிறோம். 

அது ஒன்றும் சர்வதேச குற்றமாக தெரியவில்லை, ஆண்கள் குடிக்கலாம், மது கொள்வனவு செய்யலாம் என்றால் பெண்கள் ஏன் அதை செய்வது சட்டவிரோதம்?

பெண்களைவிடுங்க, இலங்கையில் சிறுவர்களை மது கடைகளுக்கு அனுப்பி சாராயம் வாங்கும் தந்தைகள் ஏராளம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.