Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

'சொதப்பல் பந்துவீச்சு; மிரட்டல் பட்லர்' - கடைசி ஓவரில் திரில் வெற்றிபெற்ற டெல்லி டேர்டெவில்ஸ்!

 
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

100_00046.jpg

photo credit: twitter/ipl

ஐ.பி.எல் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்திலேயே மழை பெய்ததால் தாமதமாகத் தொடங்கப்பட்டதுடன், 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியில் சோதி மற்றும் மஹிபால், லாம்ரோர் ஆகியோருக்குப் பதிலாக டிஆர்கி ஷார்ட் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் ராகுல் டீவாட்டியாவுக்குப் பதிலாக ஷாபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். 

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் இளம் வீரர்கள் பிருத்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் சிறப்பாக ஆடினர். மூவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். பிருத்வி ஷா 47 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள், ரிஷப் பாண்ட் 69 ரன்கள் எடுக்க டெல்லி அணி 196 ரன்கள் குவித்தது. ஆனால் 17.1 ஓவரின் போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் டெல்லி அணிக்கு 12 ஓவர்களுக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜாஸ் பட்லர் மிரட்டினார். டெல்லி பந்துவீச்சை புரட்டி எடுத்த பட்லர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அதிவேக அரைசதம் அடித்த ராஜஸ்தான் வீரர் என்ற பெருமையை படைத்தார். 

 

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 26 பந்துகளில் 67 எடுத்திருந்த போது அவுட் ஆனார். பின்னர் வந்த சஞ்சு சாம்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் இருந்த ஷார்ட் அதிரடி காட்டினார். அவினேஷ் கான் வீசிய 9வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த ஷார்ட், அந்த ஓவரிலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பின் வந்த வீரர்கள் சொதப்ப கடைசி ஓவரில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது. ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. 

 

 

ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

 
 
 

ஐபிஎல் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. #IPL2018 #DDvRR #VIVOIPL

 
 
 
 
ஐபிஎல் 2018 - பரபரப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
 
 
புதுடெல்லி:
 
ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
 
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணியளவில் மழை குறைந்தது. இதையடுத்து, மைதானத்தை சோதித்த நடுவர்கள் இரவு 9:30 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என அறிவித்தனர். மேலும் இந்த போட்டியில் 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. 
 
201805030058177192_1_iplpantbat._L_styvpf.jpg
 
 
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெல்லி அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா 47 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், ரிஷப் பாண்ட் 69 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் உனத்கட் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். 
 
மழையின் காரணமாக மீண்டும் ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
 
 
201805030058177192_2_iplbowl._L_styvpf.jpg
 
3-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் பட்லர் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பட்லர் 18 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். பட்லர் 26 பந்தில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார்.
 
 201805030058177192_3_PTI5_3_2018_000005B._L_styvpf.jpg
 
 
அதன்பின் சஞ்சு சாம்சன் இறங்கினார். ராஜஸ்தான் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 59 ரன்கள் தேவைப்பட்டது. சாம்சன் 3 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 9 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. 9-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார், அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் ஷார்ட் சிக்ஸராக மாற்றினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த ஷார்ட் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 
 
அதன்பின் ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 12 ஓவர்களுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி அணியின் ரிஷப் பாண்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 
 
இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. 
#IPL2018 #DDvRR #VIVOIPL

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/03004143/1160428/IPL-Delhi-Daredevils-beat-Rajasthan-Royals.vpf

  • Replies 592
  • Views 76.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

‘‘தோனி படையிடம் சிக்கி தினேஷ் கார்த்திக் அணி என்ன பாடுபடப் போகிறதோ?’’ - கொல்கத்தாவில்  மோதல்

 

 
csk

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : கோப்புப்படம்   -  படம் உதவி: ஐபிஎல் ட்விட்டர்

கொல்கத்தாவில்  நடக்கும் ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் சிங்கமாக வலம் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து களமிறங்குகிறது தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலும் எதிரணிக்கு சிம்ம சொப்னமாக தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது. இதுவரை 8 போட்டிகளில் 2 மட்டுமே தோற்று, 6 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ப்ளே-ஆப் சுற்றையும் ஏறக்குறைய தனக்கு பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

சூதாட்டப் புகாரில் சிக்கி பல்வேறு வீரர்கள் மாற்றத்துடன் சிஎஸ்கே எப்படி வரப்போகிறது எனக் கேட்டவர்களுக்கு, நெத்தியடியாக ஒவ்வொரு போட்டியிலும் தோனியின் படை பதில் அளித்து வருகிறது.

அணிக்கு இருமுறை கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டன் கூல் தோனி, இந்த சீசனிலும் கலக்கி வருகிறார். கடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 51ரன்கள் சேர்த்து அனைத்து அணிகளுக்கும் கிலி ஏற்படுத்தினார் தோனி. இதுவரை 8 போட்டிகளில் 286 ரன்கள், சராசரியாக 71 ரன்களுடன் தோனி சிங்கமாக வலம் வருகிறார்.

அதிலும் கடந்த சில போட்டிகளில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் முன் பந்துவீச வீரர்கள் அலறுகின்றனர். எந்த பக்கம் பந்து வீசினாலும் தோனி தான் நினைத்த பக்கம் அனுப்புகிறார். இதனால், கடைசி நேரத்தில் தோனிக்கு பந்துவீசுபவர்கள் நிலை பரிதாபகரமே.

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியிடம் தோற்றுவிட்டாலும், அடுத்த சுற்றில் நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இப்போது சிஎஸ்கே அணி இருக்கும் ஃபார்ம் முன் எந்த அணியும் முன்நிற்பது கடினமே.

இவருக்கு அடுத்தபடியாக அம்பதி ராயுடு அந்த அணியின் முக்கியத் துருப்புச் சீட்டாகும். எந்த வரிசையில் பேட்டி செய்ய இறங்கினாலும், நொறுக்கி அள்ளுகிறார். இதுவரை 370 ரன்கள் குவித்துள்ல ராயுடு, கடந்த 4 போட்டிகளில் 41, 46, 82, 79 ரன்கள் குவித்து எதிரணியை மிரட்டி வருகிறார்.

தொடக்க வீரராக களமிறங்கும் வாட்ஸன் அடிக்கத் தொடங்கிவிட்டாலே எதிரணிக்கு அடிவயிற்றை கலக்கத் தொடங்கிவிடும். கடந்த 8 போட்டிகளில் ஒருசதம் , இரு அரைசதம் அடித்துள்ளார் டெல்லிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் 78 ரன்களை விளாசி வலிமையாக திகழ்கிறார்.

தற்போது புதிதாக களம் கண்டுள்ள தென்ஆப்பிரிக்க வீரர் டூப்ளிஸிஸ். இவர் எப்போது வெடிப்பார் என்று யாருக்குமே தெரியாது. இதுதவிர ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் என பேட்டிங்கில் எதிரணியை மிரட்டும் வகையில் படையே காத்திருக்கிறது.

பந்துவீச்சில் தாக்கூர் இடத்தை நிரப்பும் வகையில் லுங்கி நிகிடி, ஆசிப் வந்துள்ளனர். சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகிடி பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

இவரின் துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு டெல்லி அணியின் தோல்விக்கு முக்கியக் கராணமாகும். அதுபோல் ஆசிப்பும் முதல் போட்டியில் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சபாஷ் பெற்றுள்ளார்.

இது தவிர ஆல்ரவுண்டர் பிராவோவின் பந்துவீச்சும், பேட்டிங்கும் எந்த நேரத்திலும் எதிரணிக்கு இடியாய் இறங்கும் அளவுக்கு வலிமையானது. இவர்களைச் சாமாளித்து கொல்கத்தா வெற்றி பெறுவது கடினமே.

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் களத்தில் உள்ளது. கம்பீர் கேப்டனாக இருக்கும் வரை இருமுறை கோப்பையை பெற்றுக்கொடுத்தார்.

இப்போது தினேஷ்கார்த்திக் தலைமையில் அந்த அணி கோப்பையை வெல்ல தீவிரம் காட்டுகிறது. குறைந்தபட்சம் ப்ளே ஆப் சுற்றுக்காவது முன்னேற இந்தபோட்டியில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு கட்டாயமாகும்.

KolkataKnightRidersjpg

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின், சுனில் நரேன் அதிரடியான தொடக்கத்தை அளித்தாலும், நிலையாக நின்று பேட்டிங் செய்யும் திறனற்றவர்களாக இருப்பது அந்த அணிக்கு பலவீனமாகும். முதல் 6 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்ச்சி இல்லாமல் ரன்ஸ்கோர் செய்தாலே ஓரளவுக்கு நல்ல எண்ணிக்கையை எட்டலாம். ஆனால், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இருந்ததில்லை.

இது தவிர உத்தப்பா, ராணா, ஆன்ட்ரூ ரஸல், சுப்மான் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பேட்டிங்கில் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், இதில் நிலைத்தன்மையுடன் பேட்டிங் செய்யக்கூடிய வீரரக்ள் என்று பார்த்தால் ஒருவரும் இல்லை. நெருக்கடியான நேரத்தில் அணியின் விக்கெட் சரிவையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு பேட்டிங் இல்லை என்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலவீனமாகும்.

கடந்த 8 போட்டிகளில் கொல்கத்தா அணியின் சராசரி ரன் குவிப்பு என்பது, 150 ரன்களுக்குள்ளாகவே இருந்து வருகிறது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா ஆகிய இரு “ரிஸ்ட்” சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது அந்த அணிக்கு பலமாகும்.

கடந்த லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பந்தில் வெற்றியை பறிகொடுத்தது கொல்கத்தா. இந்த முறை அந்த தவற்றைச் செய்யுமா, தோல்வியில் இருந்து பாடம் கற்று விளையாடுமா என்பது நாளை தெரியும்.

ஆனால், வரலாறு என்னமோ சிஎஸ்கேவுக்குத்தான் சாதமாக இருக்கிறது. இதுவரை இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. அதில் 12 முறை சிஎஸ்கே அணியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article23746525.ece

  • தொடங்கியவர்

கொல்கத்தாவுக்கு தோனி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்! #KKRvCSK PREVIEW

 
 

''எவனாயிருந்தாலும் அடிப்போம்'' என உச்சத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 2000 - 2010 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒரு கெத்தில் இருந்ததே அப்படி ஒரு கெத்து. கடைசி ஓவர், கடைசிப் பந்து வரை சென்று வெற்றியை சாத்தியம் ஆக்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், ஆஸ்திரேலியாவைப் போல பெளலிங்கில் பலம் இல்லாத அணி சென்னை என்பதே தோனியின் கவலை. அதனால் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோனியின் பெளலிங் பிளான் என்னவாக இருக்கும் என்பதுதான் பெரிய சர்ப்ரைஸ்!
 

சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை அணியில் எப்போதும் ஒன்றிரண்டு மாற்றங்கள் மட்டுமே செய்யும் தோனி கடைசியாக நடந்த டெல்லிக்கு எதிரான மேட்சில் நான்கு மாற்றங்களை செய்திருந்தார். டேவிட் வில்லியை எல்லோரும் எதிர்பார்க்க, லுங்கி எங்கிடி உள்ளே வந்தார். சாஹருக்குப் பதிலாக கேரள வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிஃப்பை அழைத்துவந்தார். இம்ரான் தாஹிருக்குப் பதிலாக கான் ஷார்மா. அதேபோல் டுப்பெளஸ்ஸி ரிட்டன்.

''ஹார்ஸஸ் ஃபார் கோர்ஸஸ்'' என்பதுதான் தோனியின் எப்போதைக்குமான லீடர்ஷிப் ஃபார்முலா. அதனால் டெல்லிக்கு எதிராக விளையாடிய அதே அணிதான் இன்றும் விளையாடும் என எல்லோரும் எதிர்பார்க்க, வீரர்களை மாற்றிப்போட்டு நிச்சயம் சர்ப்ரைஸ் கொடுப்பார் தோனி. 

 ஈடன் கார்டனில் யுத்தம்!

இதுவரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 4 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. ஈடன் கார்டன் , சென்னை சேப்பாக்கம்... இரண்டு மைதானங்களின் தன்மையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பேட்டிங் பிட்ச்சா, பெளலிங் பிட்ச்சா என்று கணித்துவிடமுடியாது. இந்த சீசனில் இங்கு நடந்த நான்கில் மூன்று போட்டிகளில் சேஸ் செய்த அணிகள் வெற்றிபெற்றிருக்கின்றன. அதில் இரண்டு ஹை ஸ்கோரிங் மேட்ச்கள். பெங்களூரு அடித்த 176 ரன்களை சேஸ் செய்து வென்றது கொல்கத்தா. பஞ்சாப் அணிக்கு எதிராக முதலில் ஆடிய கொல்கத்தா 200 ரன்கள் அடிக்க, டக்வொர்த் லூயிஸ் முறையில் 13 ஓவர்களில் 125 ரன்கள் அடிக்க வேண்டும் என பஞ்சாபுக்கு டார்கெட் கொடுக்கப்பட்டது. இதை 11-வது ஓவரிலேயே அடித்து வென்றது பஞ்சாப். ஹை ஸ்கோரிங் மேட்சுகள் ஒருபக்கம் இருக்க ஹைதராபாத் அணிக்கு எதிரான மேட்சில் முதலில் ஆடிய கொல்கத்தா 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை 19-வது ஓவரில்தான் சேஸ் செய்து வென்றது ஹைதராபாத். அன்றைய ஆட்டம் முழுக்க முழுக்க பெளலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஈடன் கார்டனில் முதலில் பேட்டிங் செய்து வென்றது ஒரே ஒரு போட்டியில்தான். கொல்கத்தா அணி 200 ரன்கள் செட் செய்ய, டெல்லி அணி 129 ரன்களில் ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது. அதனால் கொல்கத்தா மைதானத்துக்குள் பேட்ஸ்மேன்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு பெளலர்களும் முக்கியம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்



வருவாரா வில்லி?!

சென்னையில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சாம் பில்லிங்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி வெற்றிபெற்றுக்கொடுத்தார். ஆனால், அவர் அந்த ஒரே ஒரு மேட்சில் மட்டுமே சிறப்பாக விளையாடினார். ஃபார்ம் அவுட் ஆன அவரை டெல்லிக்கு எதிரான போட்டியில் வெளியே எடுத்தார் தோனி. இன்றைய கொல்கத்தா மேட்சிலும் அவர் விளையாடுவது டவுட்தான். இன்றைய மேட்சில் தோனி டுப்ளெஸ்ஸிக்குப் பதிலாக ஆல் ரவுண்டரான டேவிட் வில்லியைக் கொண்டுவரலாம். 

இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு ரஸலின் விக்கெட்டுகளைப் பறிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை 9 ஓவர்களுக்கு முடித்துவிட்டால் சென்னையின் வெற்றி மிக எளிதாக இருக்கும். 

சென்னை சூப்பர் கிங்ஸ்


ஜடேஜா வெர்சஸ் கான் ஷர்மா!

கொல்கத்தா மைதானத்தில் ஸ்பின்னர்களுக்குப் பெரிதாக விக்கெட் கிடைத்ததில்லை என்றாலும் அவர்கள்தான் ரன்களைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இன்றைய போட்டியில் ஸ்பின்னர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். இந்த சீஸனில் முதல் போட்டியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜாவை நான்கு ஓவர்கள் வீச வைத்தார் தோனி.  1 விக்கெட்டை மட்டுமே எடுத்தவர் 31 ரன்கள் கொடுத்தார்.  ''அவர் இடது கை பந்துவீச்சாளர் என்பதால் இடதுகை பேட்ஸ்மேன்கள் விளையாடும்போது அவர் பந்துவீசமாட்டார்'' - இதுதான் கடந்த 7 மேட்ச்களாக ஜடேஜாவுக்கு ஓவர் கொடுக்காததற்கு ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் சொன்னக் காரணம். ஆனால், டெல்லிக்கு எதிரான போட்டியில் 7-வது ஓவர் வீசவந்தார் ஜடேஜா. அப்போது விளையாடிக்கொண்டிருந்தவர் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட். களத்தில் பன்ட் இருக்கும்வரை நான்கு ஓவர்களுமே வீசினார் ஜடேஜா. ஆனால், 1 பவுண்டரி 1 சிக்ஸர் அடித்ததைத் தவிர ஜடேஜா ஓவரில் பன்ட் பெரிதாக அடிக்கவில்லை. ஆனால், ஜடேஜாவால் பன்ட்டை வீழ்த்தமுடியவில்லை என்னும்போது இன்னொரு லெக் ஸ்பின்னரான கான் ஷர்மாவை தோனி பயன்படுத்தியிருக்கலாம்.  அன்று தோனி கான் ஷர்மாவுக்கு ஒரு ஓவர்கூட கொடுக்கவில்லை. மிடில் ஓவர்களில் ஹர்பஜன் சிங்கின் ஆஃப் ஸ்பின்னோடு இணைந்து, கான் ஷர்மா லெக் ஸ்பின் வீசினால் ரன்களைக் கட்டுப்படுத்துவதோடு, பார்ட்னர்ஷிப்களையும் உடைக்கலாம். 

கொல்கத்தாவின் குழப்பம்!

கொல்கத்தாவுக்குப் பெரும் குழப்பமே சென்னையின் பேட்ஸ்மேன்களை எப்படி சமாளிப்பது என்பதுதான். சென்னையின் பேட்டிங் ஆர்டரில் யாரை டார்கெட் செய்வது என்பதே குழப்பம்தான். அம்பதி ராயுடு, தோனியின் விக்கெட்டுகள்தான் முக்கியம் என கொல்கத்தா நினைக்கலாம். ஆனால் வாட்சன், டுப்ளெஸ்ஸி, ரெய்னா, பிராவோ என யார் எந்த மேட்ச்சில் அடிப்பார்கள் என்பதையே சர்ப்ரைஸாக வைத்திருக்கிறது சென்னை. பெளலிங்கில் சுனில் நரேன், பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என இந்த மூன்று ஸ்பின்னர்களைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார் தினேஷ் கார்த்திக். சுனில் நரேனின் ஓவர்களில் அடக்கிவாசித்துவிட்டு குல்தீப், பியூஷை வெளுக்க வேண்டும் என்பதுதான் சென்னை பேட்ஸ்மேன்களின் பிளானாக இருக்கும்.

டேவிட் வில்லியை அணிக்குள் இறக்குவாரா இல்லையா என்பதுதான் தோனியின் இன்றைய சர்ப்ரைஸ். அதேப்போல் இன்றைய மேட்சில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் சிக்ஸர்களோடு வியாழன் இரவைக் கொண்டாடத் தயாராவோம்!

https://www.vikatan.com/news/sports/123978-what-will-be-dhonis-surprise-to-kkr-kkrvcsk-preview.html

  • தொடங்கியவர்

அள்ளி வழங்க அவர்களிடம் இன்னும் நிறைய உள்ளன: தோனி, வாட்சன், பிராவோ குறித்து பிளெமிங்

Dhoni-Watson-Bravojpg

படங்கள்: ஏ.எஃப்.பி., பி.ஜோதிராமலிங்கம், ஏபி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வயதானவர்களின் அணி என்று விமர்சித்தவர்களுக்கு தோனி, வாட்சன், பிராவோ ஆகியோர் பாடம் புகட்டியதையடுத்து சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பிளெமிங் வயது ஒரு தடையல்ல என்ற கருத்தை மீண்டுமொரு முறை இம்மூவரும் உறுதி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

“வயது ஒரு தடையல்ல. இந்த பெரிய ஆட்டக்காரர்கள் அளிக்க இன்னும் அவர்களிடம் நிறைய உள்ளன. அணியில் உள்ள அமைதித்துவம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது.

 

இளம் வீரர்கள் உள்ளனர், ஆனால் நெருக்கடி தருணத்தில் அனுபவமே கை கொடுக்கும். நெருக்கடி இல்லாத போட்டிகள் என்பதே ஏறக்குறைய இல்லை.

4 முறை 200 ரன்கள் அடித்திருக்கிறோம், அதுதான் எங்களை முதலிடத்தில் வைத்துள்ளது, 3, 4 போட்டிகளில் தோற்றிருந்தால் அட்டவணையில் கடைசியில்தான் இருப்போம் என்பதை நாங்கள் அறிவோம்.

அம்பாத்தி ராயுடு எந்த நிலையில் இறங்கினாலும் அமைதியாக இருக்கிறார், இந்த சீசனில் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ்.

கொல்கத்தா அணியின் ஆயுதமே ஸ்பின்தான். அவர்களை எதிர்கொண்டு ஆட்கொள்வதற்கான வழிமுறைகளை விரைவில் கண்டடைய வேண்டும். ஒரு கணத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.

ராபின் உத்தப்பா நன்றாக ஆடிவருகிறார், ஒரு பெரிய இன்னிங்ஸுக்காக அவர் காத்திருக்கிறார், இது எங்களுக்கு கவலையளிக்கிறது. அவரை விரைவில் வீழ்த்தினால் எங்களுக்கு நல்லது. அவர் ஆக்ரோஷமாக பேட் செய்யக் கூடியவர் எங்களுக்கு எதிராக நன்றாக ஆடக்கூடியவர், எனவே அவர் விக்கெட் முக்கியம்” என்றார் பிளெமிங்

http://tamil.thehindu.com/sports/article23759437.ece?homepage=true

  • தொடங்கியவர்

டெல்லி “கில்லி” - ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அபாரம்: சபாஷ் ராயல்ஸ்…

 

 
6a2b53e2-b7f8-4b98-aba3-2d36b173cf27jpg

டெல்லி அணியின் ரன் குவிப்புக்கு காரணமான கேப்டன் ஸ்ரேயாஸ், ரிஸ்பா பந்த்

டி20 போட்டின்னா இப்படித்தான் இருக்கனும்… கடைசி பந்துவரை இரு அணிகளும் ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்த இரு அணிகளுக்கும் முதலில் ஒரு சபாஷ்.

ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா ஆகியோரின் காட்டடி பேட்டிங்கால், டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

   

இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி தன்னை ப்ளே ஆப் சுற்றுக்கு மெல்ல தயார்படுத்தி, விராட் கோலி அணிக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்து வருகிறது.

மழை காரணமாக போட்டி 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாகவே நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிட்டால், டக்வொர்த் லீவிஸ் விதி அமலாகும் எனத் தெரிந்து கொண்ட, ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா ஆகியோரின் இரக்கமில்லாத விளாசல் டெல்லி டேர்டெவில்ஸ் 18 ஓவர்களில் 196 ரன்கள் குவிக்க உதவியது.

காம்பீர் தலைமையில் விளையாடாத டெல்லி அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமைக்கு அணி மாறியதில் இருந்து புது உத்வேகத்துடனே விளையாடி வருகிறது. முதல் போட்டி வெற்றிக்கு பின் , சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி கடும் நெருக்கடி கொடுத்தது. இந்த போட்டியிலும் மெச்சும்படியான வெற்றியைப் பெற்றுள்ளது.

அதிரடியாக அரைசதம் அடித்த ரிஷப் பந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, ஆரஞ்சு தொப்பியும் வழங்கப்பட்டது. டிரன்ட் போல்ட்டுக்கு நீலநிறத் தொப்பி வழங்கப்பட்டது.

டக்வொர்த் விதிப்படி12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கை துரத்திய ஜோஸ்பட்லர், ஷார்ட் ஆகியோர் அனல் பறக்கும் அதிரடி பேட்டிங் போட்டிக்கு உயிர் கொடுத்து அனைவரையும் கட்டிப்போட்டது. அதிலும் 12 ஓவர்களில் 150 ரன்களை விரட்டிச் செல்வது மிகக்கடினமானது என்ற போதிலும் அதை கடைசிவரை துரத்திய கவுதமின் பேட்டிங் மிகச்சிறப்பு.

கடைசி பந்துவரை போட்டியின் முடிவு யார் பக்கம் திரும்பும் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் அமைந்திருந்தது. இரு அணிகளும் தங்கள் முழுத்திறமையை பயன்படுத்தி விளையாடினார்கள்.

இதற்கு முந்தைய ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியினர் தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தோடு விளையாடி வந்தனர், ஆனால், இந்த போட்டியில்தான் வெற்றியை நோக்கி பயணித்து அதன் போராட்டக் குணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அதற்கு பாராட்டுக்கள். ஒரு வேளை கடைசி ஓவரில் டிரன்ட் போல்ட் பந்துவீசாமல் இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறி இருக்கும். கடைசியில் இதில் அதிர்ஷ்டம் என்ற அம்சம், டெல்லியின் பக்கம் சென்றுவிட்டது.

மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள், புகழின் உச்சியில் இருக்கும் வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் இதுபோன்ற பரபரப்பு செயற்கையாக  ஏற்படுத்தப்படுவது உண்டு, அல்லது “உஷ் கண்டுக்காதீங்க” தருணங்களும் அதிகமாக ஏற்படும். ஆனால், எந்தவிதமான நட்சத்திர வீரர்களும் இல்லாமல், இளம் வீரர்கள் மோதிய இதுபோன்ற போட்டிதான் கிரிக்கெட்டின் உண்மையான தாத்பரியத்தையும், உணர்ச்சிப்பெருக்கையும் உணர்த்தும்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டத்தால், போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன் பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆட்டம் 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இலக்கு 151 ரன்களாக ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது. விடாமல் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது.

பிரித்வி ஷா, முன்ரோ ஆட்டத்தை தொடங்கினார்கள். குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே ரன் ஏதும் சேர்க்காமல் முன்ரோ ஆட்டமிழந்து நெருக்கடியை ஏற்படுத்தினார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர், களமிறங்கி, பிரித்வி ஷாவுடன் இணைந்தார். முதல் ஓவரில் டெல்லி அணி ஒருவிக்கெட் இழப்புக்கு ஒரு ரன் மட்டுமே எடுத்தது.

குல்கர்னி வீசிய 3-வது ஓவரை பதம்பார்த்தார் பிரித்வி ஷா. 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். கவுதம் வீசிய 4-வது ஓவரில் ஷா, ஸ்ரேயாஸ் ஆளுக்கு ஒரு பவுண்டரி அடித்தனர்.

ஐபிஎல் சீசனில் ரன்களை வாரி வழங்கிவரும் உனத்கட் 5-வது ஓவரை வீசினார். 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என வறுத்துஎடுத்தார் பிரித்வி. கோபால் வீசிய 6-வது ஓவரில் ஸ்ரேயாஸ் இரு சிக்ஸர் அடிக்க ரன் வேகமெடுத்து. “பவர்ப்ளே”யில் டெல்லி அணி 48 ரன்கள் சேர்த்தது.

கோபால் வீசிய 7-வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த ப்ரித்வி அடுத்த பந்தில் கோபாலிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பிரித்வி ஷா 25 பந்துகளில்4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 73 ரன்கள் சேர்த்தனர்.

35b6c64b-7399-4215-a2af-c808f308f1c1jpg

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் பட்லர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

 

அடுத்து வந்த ரிஷப் பந்த் வந்தவுடன் கோபால் ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்து மிரட்டல் விடுத்தார். அதன்பின் ரிஸ்பாவும், ஸ்ரேயாஸும் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிவிட்டனர். இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி,சிக்ஸர் அடித்து10 ரன் ரேட்டில் கொண்டு சென்றனர்.

கவுதம் வீசிய 12-வது ஓவரில் ரிஸ்பா 2பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடித்தார். குல்கர்னி வீசிய 13-வது ஓவரிலும் இதேபோல 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார் ரிஷப் பந்த். ஸ்டோக்ஸ் வீசிய 14-வது ஓவரில் பவுண்டரி அடித்த ரிஸ்பா 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதே ஓவரில் ஒரு சிக்ஸரும் விளாசினார்.

உனத்கட் வீசிய 15-வது ஓவரே திருப்புமுனையாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் உனத்கட் வீசிய பந்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அதே ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்த பந்த் அடுந்த பந்தில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரிஸ்பா 29 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இதில் 5சிக்ஸர், 7 பவுண்டரி அடங்கும்.

அடுத்து தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார். உனத்கட் வீசிய 17-வது ஓவரில் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர், ஒருபவுண்டரி உள்பட 17 ரன்கள் சேர்த்து விஜய் சங்கர் வீழ்ந்தார். ஆர்சர் வீசிய 17வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் மழை பெய்யவே ஆட்டம் நிறுத்தப்பட்டது. களத்தில் பிளங்கெட் ஒரு ரன்னில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

17.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. இந்த 196 ரன்களும் இந்திய வீரர்களான ரிஷப் பந்த், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ், விஜய் சங்கர் ஆகியோர் சேர்த்ததாகும். மேக்ஸ்வெல், முன்ரோ, பிளங்கெட் களமிறங்கியும் ரன் சேர்க்கவில்லை. ராஜஸ்தான் அணித் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் டக்வொர்த் விதிப்படி12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு இலக்கு 151ரன்களாக மாற்றி அமைக்கப்பட்டது. வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்துடன் ஜோஸ்பட்லர், ஷார்ட் களமிறங்கினார். ஜோஸ் பட்லரின் பேட்டிங் குறித்து அறியாதவர்களுக்கு இந்த போட்டியில் அவரின் காட்டடி விளக்கிவிடும்.

நதீம் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸர்,பவுண்டரிக்கு பறக்கவிட்டார் பட்லர். ஆவேஷ்கான் வீசிய 3-வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து பட்லர் மிரட்டினார். ஒருபக்கம் பட்லர் விளாசிக்கொண்டிருக்க ஷார்ட் நிதானமாக அவருக்கு ஒத்துழைத்து பேட் செய்தார். பிளங்கெட் வீசிய 4-வது ஓவரில் மறுபடியும் ஒரு சிக்ஸர், பவுண்டரி என விரட்டினார் பட்லர். இதில் பவுண்டரி அடிக்கப்பட்ட பந்து கீப்பரிடம் கையில் பட்டு சென்றது ஆனால், பந்த் பிடிக்கத் தவறிவிட்டார்.

அணியின் ஸ்கோர் கட்டுக்கடங்காமல் செல்லவே, ரன்வேகத்தை குறைக்க அமித் மிஸ்ரா வரவழைக்கப்பட்டார். மிஸ்ரா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் அடித்து 18 பந்துகளில் பட்லர் அரைசதம் அடித்தார். ராஜஸ்தான் அணியில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் இதுபோல் அதிவேகமாக அரைசதம் அடித்ததுஇல்லை.

6-வது ஓவரை ஆவேஷ்கான் வீச ஒருபவுண்டரி, ஒருசிக்ஸருக்கு பட்லர் மீண்டும் பறக்கவிட்டார். பட்லரின் அதிரடியால் வெற்றிக்கான ரன்கள் குறைந்து கொண்டே வந்தது, ராஜஸ்தான் பக்கம் வெற்றிக்காற்று வீசத் தொடங்கியது.

மிஸ்ரா வீசிய 7-வது ஓவரில் இறங்கி அடிக்க முற்பட்டு ரிஸ்பாவால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். பட்லர். அவர் 26 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 82 ரன்கள் சேர்த்தனர்.

பிளங்கெட் வீசிய 8-வது ஓவரில் ஷார்ட் ஒரு சிக்ஸர் விளாசினார். அடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்ஸன் 3 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பென் ஸ்டோக்ஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராயல்ஸ் தடுமாறியது.

3f39c001-010d-4098-b55d-35dec72fd5f1jpg

கடைசி தருணத்தில் ரசிகர்களுக்கு பரபரப்பை உண்டாக்கிய ராஜஸ்தான் அணியின் ஷார்ட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

 

மேக்ஸ்வெல் வீசிய 10-வது ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஷார்ட் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை பரபரப்புக்கு கொண்டுவந்தார். ஆனால், 4-வது பந்தில் பேட்டின் நுனியில் பட்டு தேர்டு மேன் திசையில் இருந்த ஆவேஷ்கானிடம் கேட்ச் ஆனது. ஷார்ட் 25 பந்துகளில் 44ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி அடங்கும்.

கவுதம், திரிபாதி களத்தில் இருந்தனர். 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 11-வது ஓவரை பிளங்கெட் வீசினார். முதல் பந்தில் திரிபாதி பவுண்டரி அடிக்க, கடைசி இரு பந்துகளை கவுதம் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் தள்ளினார். இதனால்,ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

கடைசி ஓவரில் 15 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. டிரன்ட் போல்ட் வீசினார். முதல் பந்து வைடானது. அடுத்த பந்தில் திரிபாதி ரன் சேர்க்க, 2-வது பந்தில் கவுதம் 2 ரன்கள் சேர்த்தார். 3-வது பந்தில் ஒரு ரன் சேர்த்து திரிபாதியிடம் கொடுத்தார் கவுதம். 4-வது பந்தில் திரிபாதி ரன்அவுட் செய்யப்பட்டு 9 ரன்களில் வெளியேறினார். 5-வது பந்தை கவுதம் சந்தித்தார். 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

டிரன்ட் போல்ட் லெக்திசையில் வீச அதை கவுதம் தூக்கி அடித்தார். அனைவரின் பார்வையும் மேல்நோக்கி இருக்க பந்து பவுண்டரியானது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து என்ன நடக்கும், சிக்ஸராகுமா அல்லது பவுண்டரியாகுமா என்று ரசிகர்கள் அனைவரும் இருக்கையின் நுனையில் அமர்ந்திருந்தனர்.

ஆனால், அனுபவம் மிகுந்த போல்ட் பந்தை ஆப்சைட் விலக்கி வீச அதை கவுதமால் அடிக்க முடியாமல் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.

12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கவுதம் 18 ரன்களுடனும், ஆர்சர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணித்தரப்பில் போல்ட் 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ்வெல், மிஸ்ரா தலா ஒருவிக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

http://tamil.thehindu.com/sports/article23756869.ece

பன்ட் தெறி... பட்லர் மெர்சல்... சிக்ஸர் மழையில் #RRvDD யுத்தம்

 
 

நேற்று டெல்லியின் கோட்லா மைதானத்தில் இரண்டாம் முறையாக டெல்லியும் ராஜஸ்தானும் மோதிக்கொண்டன. இந்த ஐபிஎல்லின் ஆறாவது மேட்ச்சில் முதல் முறை #RRvDD மோதிக்கொண்டன. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 153 ரன்கள் (17.5 ஓவர்) எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆறு ஓவர்களில் 71 ரன்கள் டார்கெட். ஆனால், டெல்லியால் நான்கு விக்கெட்டுக்களை இழந்தும் 60 ரன்கள் தான் எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் D/L முறைப்படி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த முறை டெல்லி முதலில் பேட் செய்தது. " டேய் அஷோக், நீ எப்படி உங்க ஊர்ல மழைய வர வச்சு, உன் டீம ஜெய்க்க வச்சியோ. அதே மாதிரி, நானும் எங்க ஊர்ல மழைய வர வச்சு, என் டீம ஜெய்க்க வைக்கல" மோடில் டெல்லியிலும் மழை வெளுத்து வாங்கியது. ராஜஸ்தான் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், டெல்லி அணி மொத்தமாய் மாறி இருந்தது. புது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, அவேஷ் கான் என இன்னும் கொஞ்சம் இளமையாக மாறி இருந்தது டெல்லி. முடிவும் வேறாக அமைந்ததற்கு அதுவும் ஒரு காரணம். #RRvDD

#RRvDD

எப்போதும் மேட்சுக்கு நடுவே பெய்து, இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடுபவர்களை மட்டும் சோதிக்கும் மழை, இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே பெய்தது. ' காலைல எல்லாம் நல்லாத்தாம் இருக்கா, ராத்திரி ஆனா மோகினி ஆகிடுறா ' என்பது போல், ராஜஸ்தான் டாஸ் வென்று சேஸிங் சொல்லி டீம் அறிவிப்பது வரை அமைதி காத்தது மழை. அதன் பிறகு பெய்ய ஆரம்பித்த மழை, பெய்தது . பெய்து கொண்டேயிருந்தது... முதல் இன்னிங்ஸ் முடியும் நேரமான 9.30 மணியளவில் மழை தன்மை குறைய போட்டியை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தனர் ஐபிஎல் விழா கமிட்டியினர். ஆளுக்கு 18 ஓவர்கள் . 

18 ஓவர்... எப்போது வேண்டுமானாலும், மழை மீண்டும் பெய்யலாம். மீண்டும் D/L என முடிவில் மண் விழலாம் என்பதால், முதலிலிருந்தே அடித்து ஆட வேண்டிய கட்டாயம். முன்ரோ சந்தித்த முதல் பந்திலேயே பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, முதல் ஓவர் முடிவில் 1 ரன்னுக்கு 1 விக்கெட் என இருந்தது டெல்லி. அட, டெல்லி மீண்டும் தன்னோட ' சொந்த' ஃபார்முக்கு வந்துடுச்சு போல, என நினைத்தால், அடுத்து நடந்தவை எல்லாமே அதிரடிதான். ஒட்டுமொத்த போட்டியிலும், குல்கர்னி வீசிய இந்த முதல் ஓவர் மட்டுமே, பவுலர்கள் வசம் இருந்தது. மீதி எல்லாமே பேட்ஸ்மேன்களின் அதிரடிதான். 

#RRvDD

குல்கர்னியின் இரண்டாவது ஓவரில் 16 ரன்கள் எடுத்தார் பிருத்வி ஷா. மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ், மிட் ஆன் திசையில் ஒரு சிக்ஸ் என இந்தப் போட்டிக்கான டோனை செட் செய்தார் 'ஜூனியர் சச்சின்' பிருத்வி.  90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல, 80ஸ், 70ஸ் கிட்ஸ் கூட டெல்லி அணியின் பிருத்வி ஷா பேட்டிங்கைப் பார்க்கும்போது, சொல்லும் ஒரு விஷயம் யார்றா இவன் சச்சின் மாதிரி ஆடுறான் என்பதுதான். அதற்கு அவர் வைத்திருக்கும் MRF பேட் ஒரு காரணம் என்றாலும், அண்டர் 19ல் கோப்பை வென்று கொடுத்தது, 14 வயதிலேயே பள்ளி போட்டி ஒன்றில் 546 ரன்கள் எடுத்தது, ரஞ்சி டிராபி, துலிப் டிராபி போன்ற தொடர்களில் முதல் போட்டியிலேயே சதம் கண்டது என பிருத்வி ஷாவும் தன் வயதுக்கு பல சாதனைகளை தன் வசம் வைத்திருக்கிறார். ஆனால், சச்சினா என்பதையெல்லாம், அவர் நிரூபிக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  

#RRvDD

மொத்தமே 18 ஓவர்கள்தான் என்பதால், இந்தப் போட்டியில் ஐந்து ஓவர்கள் மட்டுமே பவர்பிளே. பவர்பிளேவின் இறுதி ஓவரை வீச வந்தார் ராஜஸ்தான் அணியின் காஸ்ட்லி பௌலரான உனத்கட். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி , ஒரு சிக்ஸர் என 18 பந்துகளில், 37 ரன்கள் எடுத்தார் பிருத்வி. மறுமுனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 11 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இன்னும் அதிரடி மோடுக்கு மாறாமல் இருந்தார். அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்ரேயாஸ் கோபால் பந்து வீசி, அதையும் நிவர்த்தி செய்தார். லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸ், டீப் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார் ஸ்ரேயாஸ் ஐயர். அதுவரை அட்டகாசமாக ஆடி வந்த பிருத்வி ஷா, கோபால் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். 47 ரன்களில் (25b 4x4 4x6) ஷா அவுட்டானபோது, அணியின் ரன் ரேட் பத்தை நெருங்கி இருந்தது. 

#RRvDD

இந்தத் தொடரின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பன்ட், இந்தப் போட்டியிலும், தன் அதிரடியைத் தொடர்ந்தார். ஆர்ச்சர் , ஸ்டோக்ஸ் என யார் பந்துவீசினாலும் அதை சிக்ஸ்க்கு அனுப்பினார் பன்ட். தன் இரண்டாவது ஓவரே 16 ரன்களுக்கு போய்விட, பதற்றத்துடனே 13-வது ஓவரை வீச  வந்தார் குல்கர்னி. அதெப்படி 18 ஓவரில் மேட்ச் முடியலாமென நினைத்தாரோ என்னவோ, அந்த ஓவரில் 9 பந்துகள் வீசினார். ' உன்னால ஹாட்ரிக் பவுண்டரி அடிக்க முடியும்னா, என்னால ஹாட்ரிக் ஒய்டு போட முடியும் ' என தொடர்ச்சியாக ஒய்டு போட்டுக்கொண்டே இருந்தார். 12.5-வது பந்தை அவர் வீசிக்கொண்டே இருக்க, பொறுமையிழந்த பன்ட், ஒய்டாக சென்ற பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பினார். இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தார் குல்கர்னி. ரிஷப் பன்ட் அடிப்பதெல்லாம் கோலி அடிப்பது போல் கிரிக்கெட் ஷாட்களா என்றால் இல்லைதான், ஆனால், டி20 மாதிரியான போட்டிகளில் சிறந்த என்டெர்டெய்னராக வருவார் பன்ட். கெவின் பீட்டர்சன், மேக்ஸ்வெல் ஆடுவது போல் ஸ்விட்ச் ஹிட் , ஏபிடி ஆடுவது போல் பேக் ஷாட் என எல்லாவற்றையும் ஆடுகிறார் பன்ட். அவரது உயரமும் அதற்கு நன்கு உதவுகிறது. 

#RRvDD

பவுண்டரி, சிக்ஸ் மட்டுமல்ல , ஓவர்த்ரோ செய்தெல்லாம் ஐந்து ரன்கள் வழங்கியது ராஜஸ்தான் அணி. அந்த ஐந்து ரன்கள் தான் கடைசியில் ராஜஸ்தானுக்கு வில்லனாக அமைந்தது. ஒரே ஓவரில் ஸ்ரேயாஸ்  50 (35b 3x4 3x6) , பன்ட்  69 (29b 7x4 5x6)  இருவரையும்  அவுட்டாக்கினார் உனத்கட். சென்ற போட்டியில், அடித்த விஜய் ஷங்கர் , அதே முரட்டுத்தனமான குருட்டுத்தனத்துடன் இந்த போட்டியிலும் பவுண்டரி, சிக்ஸ் என அடித்து மீண்டும் உனத்கட் பந்தில் அவுட்டானார். 17 (6b 2x4 1x6) . விஜய் ஷங்கரே இப்படி அடிக்கறார்னா, மேக்ஸ்வெல்  பொளப்பார்ல, என இன்னும் மேக்ஸ் 'நாட்' வெல் சேவல் மீது பந்தயம் கட்டும் சிறார்களைப் பார்த்து ' பொளப்பாரு... பொளப்பாரு ' என்றார் காலா டீசரில் வரும் அந்தப் பெண்மணி. ஐந்து பந்துகளில் ஐந்து ரன்கள் எடுத்து அவுட்டானார் மேக்ஸ்வெல். 18 ஓவர்தானே கேட்டோம் என விழா கமிட்டியினர் வானத்தைப் பார்க்க, 17.1 ஓவரிலேயே மழை மீண்டும் பெய்யத் தொடங்கியது. 

ஊர் உலகமே குட் நைட் சொல்லி தூங்க, 11.30 மணிக்கு ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. 12 ஓவர்களில் 151 ரன்கள் டார்கெட். முதல் முறை மோதியபோது, எப்படி ஓப்பனர் கவுதம் கம்பீர், தன்னைத் தவிர மற்றவர்களை ஒவ்வொருவராய் களமிறக்கினாரோ, அதே வேலையை செய்தார் ரஹானே. 151 ரன்கள் அடிக்க, ரஹானேவுக்கு எப்படியும் 150 பந்துகள் தேவைப்படும் என்பதை உணர்ந்திருந்தார் ரஹானே. 

#RRvDD

டார்சி ஷார்ட், பட்லர் என இருபக்கமும் வெளிநாட்டு வீரர்களை களமிறக்கினார் ரஹானே. மிடில் ஆர்டரில் தடவிக்கொண்டிருந்த பட்லர், ஓப்பனிங் இறங்கியதால் வெளுத்து வாங்கினார். சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாவார் என நினைத்தால், பவுண்டரி , சிக்ஸ் என அடித்தார் பட்லர். கடந்த சில போட்டிகளாக, சிறப்பாக பந்துவீசிய டெல்லியின் அவேஷ் கான் தான் பட்லரின் அதிரடிக்குப் பலியான முதல் ஆடு. மூன்று சிக்ஸ், 1 பவுண்டரி என அதகளப்படுத்தினார் பட்லர். அமித் மிஷ்ரா பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து, 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் பட்லர். மீண்டும் அவேஷ் கான் பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என 24 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார் பட்லர். இறுதியாக மிஷ்ரா பந்தில் பன்ட் ஸ்டம்பிங் செய்ததில் பட்லர் அவுட்டானார்.  ராஜஸ்தானின் அடுத்த நம்பிக்கை வீரரான சஞ்சு சாம்சன் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாக, ' வட்ட செய..லா..ள...ர் வ...ண்..டு....முருகன்' என இழுத்தனர் ராஜஸ்தான் ரசிகர்கள். ' உங்களுக்கு மேக்ஸ்வெல் எப்படியோ, அப்படி எங்களுக்கு ஸ்டோக்ஸ்' என களமிறங்கினார் ஸ்டோக்ஸ். தேவைப்படும் ரன்ரேட் 17ஐ தொட்டது. 'சோ வாட்' என 1 ரன் எடுத்து பெட்டிக்குள் மீண்டும் ஒளிந்துகொண்டார் ஸ்டோக்ஸ். 

#RRvDD

அதுவரை பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டார்சி ஷார்ட், மேக்ஸ்வெல் பந்தில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அவுட்டானார். ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்ப கவுதம் என டீமில் இருக்கும் எல்லோரையும் அனுப்பிய ரஹானே, இறுதிவரை களமிறங்கவே இல்லை. அடியாட்களை ஒவ்வொருவராக அனுப்பும், வில்லனின் லாவகத்தை பின்பற்றினார் ரஹானே. ' நம்ம பெர்பாமன்ஸ் தான் நல்லாயிருக்காதேடா' என ரஹானே தெளிவாக இருப்பது ஒரு வகையில் நல்ல விஷயமே. 

கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை. கௌதம் மீண்டும் மும்பைக்கு எதிராக அடித்தது போல் , ஏதாவது அற்புதம் நிகழ்த்துவாரா என பார்த்துக்கொண்டு இருந்தது ராஜஸ்தான் Dug Out. ஆனால், பந்துவீசியது பௌல்ட். அவரது பந்தில் அப்படி எதுவுமே செய்ய முடியவில்லை. 3 பந்துகளில் பத்து ரன் தேவைப்பட, ரன் அவுட் முறையில் அவுட்டாகி  ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்து நின்றார் கௌதம். ஐந்தாவது பந்தை லாங் ஆன் திசையில் பவுண்டரிக்கு விளாசினார். ஒரு பந்து ஒரே பந்து, அதில் தேவை சிக்ஸ். ஆனால், அதில் கௌதமால் சிங்கிள் தான் தட்ட முடிந்தது. ராஜஸ்தான் ஓவர்த்ரோவில் விட்ட ஐந்து ரன்கள்தான் அந்த அணிக்கு எமனாக வந்து அமைந்தது. இறுதியாக 12 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே ராஜஸ்தானால் அடிக்க முடிந்தது. இரண்டு அணியும் சேர்ந்து 25 சிக்ஸர்கள் அடித்து மழைக்கே வேடிக்கை காட்டினர்.

#RRvDD

 

ஒன்பது போட்டிகளில் விளையாடி இருக்கும் டெல்லி, தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது. 'சின்னக்காலா இருந்தாலும் நல்லா இருக்குடா' என்பது போல் டீமின் நிலைதான் இப்படி. தொடரில் அதிக ரன்கள் எடுக்கும் ஆரஞ்ச் கேப் சொந்தக்காரர் ரிஷப் பன்ட் தான் (375 ரன்கள்).  அதேபோல், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பர்ப்பிள் கேப் சொந்தக்காரரான பௌல்ட்டு இருவருமே டெல்லி தான் (13 விக்கெட்டுகள்)

https://www.vikatan.com/news/sports/123975-pant-butler-score-high-in-rain-spoiled-high-scoring-thriller.html

  • தொடங்கியவர்

முக்கியமான கட்டத்தில் லுங்கி நிகிடி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் பாதி ஆட்டங்களுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி நிகிடி என்ற வேகப்பந்து வீச்சு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. #IPL2018 #CSK

 
முக்கியமான கட்டத்தில் லுங்கி நிகிடி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
 
ஐபில் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் பாதி தூரத்தை கடந்து விட்டது. இரண்டு வருடத்திற்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்களை பார்த்துதான் ஏலம் எடுத்தது. வயதான வீரர்களை கொண்டு சென்னை அணி எப்படி விளையாடப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் வயது ஒரு பிரச்சினை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அம்பதி ராயுடு, வாட்சன், பிராவோ ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகின்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் டோனி அதிரடி ஆட்டதை வெளிப்படுத்தி வருகிறார்.

வேகப்பந்து வீச்சல் தீபக் சாஹர், வாட்சன், பிராவோ, சர்துல் தாகூர். இதில் தீபக் சாஹர் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசினார். தற்போது காயத்தால் அவர் அணியில் இருந்து இரண்டு வாரங்கள் விலகியுள்ளார். வாட்சன், பிராவோ பந்து வீச்சு பெரிய அளவில் எடுபடவில்லை. இதை வெளிப்படையாக டோனியே தெரிவித்துள்ளார். பிளேஆஃப் சுற்றுகளின்போது வேகப்பந்து வீச்சு முக்கிய பங்கு வகிக்கும். அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தால் வெற்றி பெறுவது கடினம் என்றார்.

இதற்கிடையில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக வெளியேறிதால், லுங்கி நிகிடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. சுமார் 6 அடி உயரம், கம்பீரமான தோற்றமுடைய நிகிடி அணிக்கு தயாரான நிலையில், அவரது தந்தை காலமானதால் தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

201805031615046415_1_lungi002-s._L_styvpf.jpg

பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். கடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமானார். ஷார்ட் மற்றும் பவுன்சர் பந்தால் எதிரணியை மிரட்டினார். முதல் இரண்டு ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் நிகிடி பந்து வீசினார். அருமையான யார்க்கர் பந்தால் முதல் மூன்று பந்தில் மூன்று ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

பந்து வீச்சு சரியில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது நிகிடியை ஆயுதமாக பயன்படுத்த இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னும் உள்ள 6 போட்டியில் மூன்றில் வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் சுற்று உறுதியாகிவிடும்.

லுங்கி நிகிடி இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய விக்கெட்டுக்களை சாய்த்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/05/03161505/1160606/IPL-2018-chennai-super-kings-used-Lungi-Ngidi-big.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 178 ரன்கள் நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

 

டோனியின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 178 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். #IPL2018 #KKRvCSK

 
 
ஐபிஎல் 2018- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 178 ரன்கள் நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
 
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார்.

வாட்சன், டு பிளிசிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் வாட்சன், டு பிளிசிஸ் தலா ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் டு பிளிசிஸ் இரண்டு பவுண்டரி விரட்டினார். 3-வது ஓவரை ஷிவம் மவி வீசினார். இந்த ஓவரில் டு பிளிசிஸ் ஒரு புவண்டரி அடிக்க 6 ரன்கள் கிடைத்தது. சுனில் நரைன் வீசிய 4-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 5 ரன்கள் கிடைத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது ஓவரை மிட்செல் ஜான்சன் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி, சிக்ஸ், டு பிளிசிஸ் ஒரு சிக்ஸ் விளாச சென்னைக்கு 19 ரன்கள் கிடைத்தது. இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

6-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டு பிளிசிஸ் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 15 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 27 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து வாட்சன் உடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். ரெய்னா இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி விரட்டினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்தது. அடுத்த ஓவரை ரஸல் வீசினார். இந்த ஓவரில் ரெய்னா இரண்டு பவுண்டரி விரட்டினார்.

201805032158120474_1_rayudu-ss._L_styvpf.jpg

சென்னை சூப்பர் கிங்ஸ் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்திருந்தது. இதனால் 200 ரன்னைத் எட்டிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 11-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

வாட்சன் அவுட்டான சிறிது நேரத்தில் ரெய்னா 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் சரிய ஆரம்பித்தது. 14.4-வது ஓவரில் அம்பதி ராயுடு 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் ஸ்கோரை உயர்த்து பொறுப்பு கேப்டன் டோனியின் தலையில் விழுந்தது. டோனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்துள்ளது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/03215812/1160690/IPL-2018-CSK-178-runs-Targets-to-KKR-won.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்.,: கோல்கட்டாவிடம் வீழ்ந்தது சென்னை
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

‘‘தோனி படையிடம் சிக்கி தினேஷ் கார்த்திக் அணி என்ன பாடுபடப் போகிறதோ?’’ - கொல்கத்தாவில்  மோதல்

 

 

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது கண்ணா ?

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

 

 
 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL

 
 
 
 
ஐபிஎல் 2018 - சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
 
கொல்கத்தா:
 
ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சு தேர்வு செய்தார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நிதிஷ் ராணாவிற்குப் பதிலாக ரிங்கு சிங் சேர்க்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. டோனி 25 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். வாட்சன் 36 ரன்களும், ரெய்னா 31 ரன்களும், டு பிளஸ்சிஸ் 27 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணி பந்துவீச்சில் பியூஸ் சாவ்லா, சுனில் நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
 
201805032336096867_1_cskvkk-msd._L_styvpf.jpg
 
பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லைன், சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரை நிகிடி வீசினார். அந்த ஓவரில் லைன் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் லைன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து உத்தப்பா களமிரங்கினார். அடுத்த ஓவரை ஆசிப் வீச, அந்த ஓவரின் நான்காவது பந்தில் நரேன் சிக்ஸர் அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் நரேன் அடுத்தடுத்து கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார்.
 
நிகிடி வீசிய மூன்றாவது ஓவரில் கொல்கத்தா அணிக்கு மூன்று பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் உத்தப்பா 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷுப்மான் கில் களமிறங்கினார். 6-வது ஓவரை வாட்சன் வீச அந்த ஓவரில் ஷுப்மான் கில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆறு ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்தது. 
 
7-வது ஓவர் ஜடேஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் முதல் மூன்று பந்தில் நரேன் 8 ரன்கள் எடுத்தார். நான்காவது பந்தை நரேன் தூக்கியடிக்க, அந்த பந்தை பிராவோ கேட்ச் பிடித்தார். நரேன் 20 பந்தில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உட்பட 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரிங்கு சிங் களமிறங்கினார். கொல்கத்தா அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் நான்காவது பந்தில் ரிங்கு சிங் போல்டானார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.
 
201805032336096867_2_cskvkk-dk._L_styvpf.jpg
 
15-வது ஓவரை ஆசிப் வீசினார். அந்த ஓவரில் கில் இரண்டு சிக்ஸர்களும், தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸரும் அடித்தனர். இதனால் அந்த ஓவரில் கொல்கத்தா அணிக்கு 21 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில் அரைசதம் அடித்தார். இது அவரது முதல் ஐபிஎல் அரைசதம் ஆகும். கொல்கத்தா அணி 16 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அப்போது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 23 ரன்கள் தேவைப்பட்டது. கில், தினேஷ் கார்த்திக் இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பெற வைத்தனர்.
 
கொல்கத்தா அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. ஷிப்மான் கில் 57 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. #IPL2018 #KKRvCSK #VIVOIPL

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/03233609/1160704/IPL-KKR-beat-CSK-by-6-wickets.vpf

  • தொடங்கியவர்

நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் தோனியின் பெஸ்ட்... சொல்லுது புள்ளி விவரம்

 
 

ஐ.பி.எல் மைதானத்தில் 36 வயதிலும் பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விளாசிக்கொண்டிருக்கிறார்  தோனி. இதுவரை இல்லாத ஃபார்மில் இருக்கும் கேப்டன் கூல், மேட்ச் ஃபினிஷிங் செய்யும் அழகே அழகு. நடப்பு ஐ.பி.எல் சீஸன்தான் இவருக்கு பெஸ்ட் சீஸன் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

சென்னை கேப்டன் தோனி

நடப்பு சீஸனில் இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள தோனி, 286 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 169.23, இதில், 3 அரை சதங்களும் அடக்கம். 4.57 பந்துகளுக்கு ஒரு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிடுகிறார். இதற்கு முன், தோனி 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் சீஸனில் 18 போட்டிகளில் 461 ரன்கள் குவித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 162.89. இந்தத் தொடரில் 4 அரை சதங்களையும் விளாசியிருந்தார். நடப்பு சீஸனில் மஞ்சள் படைத் தலைவர் அபார ஃபார்மில் இருப்பதால், 2013-ம் ஆண்டைக் காட்டிலும் அதிக ரன்கள் குவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சென்னை அணிக்காக இதுவரை 370 ரன்கள் குவித்து அம்பத்தி ராயுடு முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு இரண்டாவது இடம். ஷேன் வாட்ஸன் 281, சுரேஷ் ரெய்னா 205, பிராவோ 118 ரன்கள் எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனி ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் ஸ்டீஃபன் ப்ளமிங் வியக்கவில்லை. மாறாக, 'வயதெல்லாம் ஒரு தடையே கிடையாது. தோனியிடமிருந்து இன்னும் நான் அதிகமாக எதிர்பார்க்கிறேன். இளம் வீரர்கள் அணியில் இருந்தாலும், நெருக்கடி சமயத்தில் அனுபவ வீரரின் ஆட்டம்தான் கை கொடுக்கும்'' என்கிறார். இப்போது தோனி மற்றொரு கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது, மைதானத்துக்கு வெளியே பந்தை அடித்தால் 8 ரன்கள் கொடுக்கணுமாம்!.

https://www.vikatan.com/news/tamilnadu/123999-ms-dhoni-is-having-his-best-ipl-season.html

  • தொடங்கியவர்

ஜடேஜா விட்ட கேட்ச்கள் சென்னையை நொறுக்கியது: ஷுப்மன் கில், கார்த்திக் நேர்த்தியில் கொல்கத்தா வெற்றி

 

 
karthik

சென்னை நொறுக்கிய ஜோடி தினேஷ் கார்த்திக், ஷுப்மன் கில்.   -  படம். | ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 33வது போட்டியில் டாஸ் வென்று முதலில் சென்னை பேட் செய்ய அழைத்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், சில சாதுரியமான கேப்டன்சியில் சென்னையை 177/5 என்று மட்டுப்படுத்தி பிறகு 17.4 ஓவர்களில் 180/4 என்று சென்னை சூப்பர் கிங்ஸை டூப்பர் கிங்ஸ் ஆக்கினார்.

கொல்கத்தா தன் வெற்றி மூலம் 3-ம் இடத்தில் உள்ளது, சென்னை தோற்றதால் நிகர ரன் விகித அடிப்படையில் சன் ரைசர்ஸ் முதலிடம் வகிக்கிறது.

காண்பவற்றை நம்ப வேண்டும்?

இந்தப் போட்டியில் 2 முக்கியமான தருணங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது, அதில் இந்தியாவின் சிறந்த பீல்டர் என்று கருதப்படும் ஜடேஜா 2 கேட்ச்களை, அதுவும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து அதிரடி வீரர் சுனில் நரைனுக்கு நழுவ விட்டது எப்படி? ஆட்டத்தின் போக்கில் இயல்பாக நடப்பதுதான் என்று சிஎஸ்கே ரசிகர் படை கருதலாம். ஆமாம்! ஜடேஜா கேட்சை விட்டது உண்மைதான்! இல்லை... உண்மையாகத்தான் சார் அவர் கேட்சை விட்டார்...நம்புங்க சார் அந்தக் கேட்சை உண்மையாகத்தான் விட்டார்... உண்மையாவே அவர் கேட்ச் விட்டார் சார்... உண்மையான கேட்சை விட்டார் சார்...இன்னும் எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தாலும் கடைசியில் நாம் காண்பவற்றை நம்பித்தானே ஆகவேண்டும்?!

18-19-ம் நூற்றாண்டு முதலாண்மை (கேப்பிடலிசம்) கொடுத்த கொடையான நவீனத்துவம் நமக்களித்த உபகொடையான காட்சி ஊடகத் தொழில்நுட்பங்கள் மூலம் seeing is believing... (be'lie'ving) கண்டதே காட்சி கொண்டதே கோலம்... சிலவற்றை இப்படித்தான் பார்க்க வேண்டும், அது நமக்கு இன்னமாதிரியான உணர்வைத்தான், அனுபவத்தைத்தான் அளிக்க வேண்டும் என்பது ஒருவிதத்தில் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. சிந்தனை ஒன்றைத்தான் முன் கூட்டிய சக்திகளால் தீர்மானிக்க முடியாது, ஏனெனில் அது கேள்வி கேட்கும், சந்தேகப்படும், சம்சயங்களை இடையீடாக, தலையீடாக (intervention) மாற்றி கேள்வி எழுப்பும். நடப்பவற்றை தொகுத்து வழங்குதல் என்பதை காண்பவற்றையெல்லாம் நம்பும் நம் கட்புலன் அனுபவமே வழங்கிவிடும்... எனவே தொகுத்து வழங்குதல் நம் வேலையல்ல, விமர்சன இடையீடு, தலையீடு செய்து நடப்பவற்றின் குறுக்கே புகுந்து கலைத்துப் போட வேண்டும். அதனால்தான் மகாகவி பாரதியார் காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைவதென்றால் காண்பமன்றோ என்று விமர்சன அணுகுமுறையை காண்பவை மறைக்கும் விஷயங்களைப் பார்க்க வலியுறுத்துகிறார்.

அதனால் ஜடேஜா அடுத்தடுத்து விட்ட 2 கேட்ச்கள் எப்படிப்பட்டது என்பது மேற்கூறிய தர்க்கத்தின் படி வாசகர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறோம். அதேபோல் கடைசி ஓவர்... பியூஷ் சாவ்லா வீசுகிறார், ஸ்கோர் 162/4 தான் உள்ளது, ஸ்ட்ரைக் தோனியிடம் உள்ளது, மிட்விக்கெட்டில் 1 ரன் எடுக்கிறார். ஜடேஜா திக்கித் திணறுவதை எதிர்முனையில் இருந்து பார்க்கும் தோனி பிடிவாதமாக அவரிடம் ஸ்ட்ரைக்கை கொடுக்கிறார். அன்று பிராவோ எதிர்முனையில் இருந்த போது சிங்கிள் எடுக்காமல் தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொண்டவர் நேற்று ஜடேஜா ஏதோ பெரிய ஹிட்டர் போல் ஸ்ட்ரைக்கை விட்டுக் கொடுக்கிறார். தோனி ஆடியிருந்தால் 2-3 சிக்சர்கள் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். இந்த ஓவரில் 4 ரன்கள் கூடுதலாக பை மூலம் வந்ததால் 15 ரன்கள் வந்தது. மேலும் கடைசி பந்தை தோனி பவுண்டரி அடித்தார், இல்லையெனில் இந்த ஓவரில் ரன்கள் குறைந்திருக்கும். ஜடேஜா மீது இருக்கும் நம்பிக்கை தோனியின் தனிப்பட்ட நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் அணி என்று வரும்போது ஜடேஜாவிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்கக் கூடாது. அன்று பிராவோவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஒரு ரன்னை மறுத்ததற்கும் இதற்கும் பெரிய முரண்பாடு உள்ளதே? ஜடேஜாவுக்குப் பதில் ஹர்பஜனைக் கூட இறக்கியிருக்கலாம். ஜடேஜா மீது தோனி வைத்திருக்கும் நம்பிக்கை கிரிக்கெட் தகுதிகளையும் தாண்டியதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. இதற்கான பதிலையும் காண்பவற்றை நம்பும் சிஎஸ்கே ரசிகர்களிடத்திலேயே விடுத்து, நாம் மேட்சிற்கு நகர்வோம்..

இந்த மைதானத்தில் பவுண்டரிகள் குறுக்கப்பட்ட நிலையில் குறைந்தது 200 ரன்களாகவது வேண்டும். இந்த மைதானத்தில் 200 ரன்கள் இல்லையெனில் இலக்குகளை வெற்றிகரமாக தடுக்க முடியாது. அதனால்தான் தினேஷ் கார்த்திக் முதலில் சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

ஷேன் வாட்சன், டுபிளெசிஸ் அன்று போல் அதிரடியாகவே தொடங்கினர். டுபிளெசிஸ் மிக அருமையாக 4 பவுண்டரிகள் மிட்செல் ஜான்சனை அடித்த சிக்ஸ் அபாரம். நன்றாக ஆடிவந்த டுபிளெசிஸ் சாவ்லாவின் கூக்ளியை லெக் பிரேக் என்று தவறாகக் கணித்து பவுல்டு ஆகி வெளியேறினார்.

ஷேன் வாட்சனும் அனாயசமாக அதிரடி காட்டினார் என்று கூற முடியாது, கொஞ்சம் தயங்கித்தயங்கி தேர்ந்தெடுத்துத்தான் அடித்தார், அதில் இவரும் மிட்செல் ஜான்சனை அடித்த சிக்ஸ் உண்மையில் டாப் கிளாஸ். 24 பந்துகளில் 36 ரன்களில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி ஆட்ட நாயகன் சுனில் நரைனின் (2/20) முதல் விக்கெட்டாக மிட்விக்கெட்டில் புல்ஷாட்டில் வெளியேறினார்.

ரெய்னாவுக்கு சில இலவச பவுண்டரி பந்துகள் வழங்கப்பட்டதில் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்தார் பந்தை மிடில் செய்ய ரீச் செய்ய முடியவில்லை. ராயுடு 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து இன்னொரு அதிரடிக்குத் தயாராக இருந்த போது சுனில் நரைன் வீசிய ஆஃப் பிரேக் பந்தை தேர்ட்மேனில் ஓடவிட முயற்சி செய்தார், பவுல்டு ஆனார்.

தோனி மீண்டும் விளாசல்...

தோனி இதற்கு முன்னால் 3 அரைசதங்களை அவுட் ஆகாமல் எடுத்திருக்கும் பார்மில் உள்ளதால் அவருக்கு வீசும்போது எச்சரிக்கையுடன் நகர்த்த வேண்டும், ஆனால் ஷிவம் மாவி, மிட்செல் ஜான்சன் இருவருமே ஒன்று புல்லாக வீசினர் இல்லை ஷார்ட் பிட்சாக வீசினர், இதில் ஷிவம் மாவி வீசிய 145 கிமீ வேகப் பந்தை தோனி கண்ணிமைக்கும் நேரத்தில் மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தது அபாரம், அதே போல் மிட்செல் ஜான்சனை தன் இடுப்புயரத்திலேயே ஸ்கொயர் லெக்கில் தோனி அடித்த சிக்சரும் தோனியின் ஹிட்டிங் பவரைக் காண்பிக்கக் கூடியது, மேலும் ‘இப்படீல்லாம் போடாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது’ என்று கூறுவது போன்ற அடியாகும் அது.

முதல் 9 பந்தில் 5 ரன்கள் எடுத்த தோனி அடுத்த 11 பந்துகளில் 4 சிக்சர்களுடம் 30 ரன்கள் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே 56 ரன்கள் எடுத்ததில் தோனி பெரும்பான்மையாக 39 ரன்கள் பங்களிப்பு. தோனி 43 நாட் அவுட். ஜடேஜா 12. 20 ஓவர்களில் 177/5. மிட்செல் ஜான்சன் 4 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டார். சாவ்லா, நரைன், குல்தீப் யாதவ் இணைந்து 12 ஒவர்களில் 89 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸ் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டது சுனில் நரைன்.

கேட்ச்கள் நழுவல், தாக்கமற்ற பந்து வீச்சு... ஷுப்மன் கில், கார்த்திக் அதிரடி

சென்னை சூப்பர் கிங்ஸ் லுங்கி இங்கிடியுடன் பந்து வீச்சைத் தொடங்கியது, ஆனால் கிறிஸ் லின் எதிர்பார்த்தது போலவே புல் ஷாட்டில் ஒரு அரக்க சிக்சரையும் நேராக ஒரு சிக்சரையும் விளாசித் தொடங்கினார், ஆனால் அதே ஓவரில் இங்கிடியிடம் அவுட் ஆனார்.

narinejpg

நரைன். | படம். ஏ.எப்.பி.

 

2வது ஓவர்தான் ஆஸிப் வீச சுனில் நரைன் ஒரு பந்தை கனெக்ட் செய்ய சிக்ஸ். அடுத்த 2 பந்துகளிலும் எளிதான கேட்ச் வாய்ப்பை இந்தியாவின் சிறந்த பீல்டர் ஜடேஜா விட்டார் (அடடே... அப்டியா? தருணம்). அடுத்த இங்கிடி ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசினார் நரைன். ஜடேஜாவின் கேட்ச்களினால் பாதிக்கப்பட்ட ஆசிப் கூடுதல் வேகத்தில் உத்தப்பாவை தவறு செய்ய வைத்தார்.... அப்பாடா கேட்சை பிடித்தாரே என்ற நிம்மதி அவர் முகத்தில் தெரிந்தது, இங்கிலாந்தில் ஏகப்பட்ட கனவுகளுடன் பங்கஜ் சிங் தன் முதல் டெஸ்ட் வாய்ப்பில் பந்து வீச அலிஸ்டர் குக் எட்ஜை ஜடேஜா தவற விட்டது அன்று அவர் கரியரையே பாதித்தது நினைவிருக்கலாம். பங்கஜ் சிங் கனவுகள் சிதைந்து போனது. 9-10 ஆண்டுகள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்தியவின் சிறந்த பீல்டர் ஜடேஜாவினால் குழிதோண்டி புதைக்கப்பட்டது, ஆனால் இன்று ஜடேஜா ஆடிக் கொண்டிருக்கிறார், பங்கஜ் சிங்கைத்தான் காணோம்.

ஷுப்மன் கில் இறங்கி ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் வாட்சனை 3 பவுண்டரிகள் விளாசினார். நரைன் ஜடேஜாவை ஒரு சிக்சருடன் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து 7வது ஓவரில் ஜடேஜாவிடமே அவுட் ஆகி வெளியேறினார். (தோனியைப் பாராட்டலாமே... கேட்ச்கள் விட்ட ஜடேஜாவிடமே நரைனை வீழ்த்த பவுலிங் கொடுத்தாரே!! ஐயோ! ஐயோ)

ரின்கு சிங்கை 16 ரன்களில் ஹர்பஜன் வீழ்த்தினார். இதே ஓவரில் தினேஷ் கார்த்திக் இறங்கி ஹர்பஜன் சிங்கை மிக அருமையான ஒரு கட் ஷாட் பவுண்டர் அடித்தார். 13வது ஓவரில் பிராவோ 8 ரன்களைக் கொடுக்க கொல்கத்தா 109/4 என்று இருந்தது. 7 ஓவர்களில் 69 ரன்கள் வெற்றிக்குத் தேவை எனும்போது ஆட்டம் கொஞ்சம் நெருக்கமாகச் செல்லும் என்று நாற்காலியில் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தால்.. அடுத்த 3 ஓவர்களில் ஷுப்மன் கில்லும், கார்த்திக்கும் 46 ரன்களை விளாசினர்.

குறிப்பாக ஜடேஜா கேட்சை விட்ட ஆசிப் ஓவரில் ஷுப்மன் கில் கடுமை காட்டினார். 2 ஷார்ட் பிட்ச் பந்துகள் ஒன்று புல் ஷாட் சிக்ஸ், மற்றொன்று கட் ஷாட்டில் சிக்ஸ். இதனை கேட்ச் எடுக்க ராயுடு கடும் பிரயத்தனம் செய்தார், பிடித்திருந்தால் விராட் கோலிக்கு ட்ரெண்ட் போல்ட் பிடித்த கேட்சுக்கு அடுத்த சிறந்த கேட்ச் ஆகியிருக்கும், ஆனால் பிடிக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸ் விளாச 15வது ஓவரில் 21 ரன்கள். கில் ஜடேஜாவை 2 ரன்களுக்குத் தட்டி விட்டு தன் அபாரமான அரைசதத்தை எடுத்தார்.

13 ஒவர்கள் முடிவில் 109/4 என்ற நிலையிலிருந்து தாக்கமற்ற பந்து வீச்சு ஒருபுறம் தோனியின் களவியூகத்தை பகடிசெய்யும் கார்த்திக் மற்றும் கில் ஆகியோரின் பேட்டிங் மறுபுறமுமாக அமைய அடுத்த 4.4 ஓவர்களில் 71 ரன்களை எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்சை ஊதியது என்றே கூற வேண்டும்.

தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தும் ஷுப்மன் கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். ஆட்ட நாயகன் சுனில் நரைன்.

http://tamil.thehindu.com/sports/article23767901.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒருவரும் ஒழுங்காக வீசவில்லை, பீல்டிங்... எனக்குத் தெரியும்: தோல்வியினால் தோனி ஏமாற்றம்

 

 
dhonijpg

தோனி. | படம். | ஏ.எஃப்.பி.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது.

இதில் வழக்கம் போல் சென்னை அணியின் பவுலிங் பிரச்சினைகளுடன் பீல்டிங் பிரச்சினைகளும் தலைதூக்கின, குறிப்பாக ஜடேஜா ஒரே ஓவரில் அடுத்தடுத்து சுனில் நரைனுக்கு விட்ட கேட்ச்களினால் நரைன் அதிரடி தொடக்கம் கண்டார்.

 

இதனையடுத்து ஆட்டம் முடிந்து தோனி கூறும்போது,  “எங்கள் பவுலர்களின் பலம்தான் என்ன என்பதைப் பார்த்துக் கணிக்க வேண்டும். பிட்ச் இரண்டாவது இன்னிங்ஸின் போது விளக்கு வெளிச்சத்தினால் கொஞ்சம் பேட்டிங்குக்குச் சாதகமானது, பவுலர்கள் இத்தகைய பிட்சில் வேகமான, வேகம் குறைந்த பந்துகளை வீசினாலும் பந்தின் தையல் தரையில் பட்டு எழும்பும்படி செய்ய வேண்டும்.

மொத்தத்தில் தொல்வி ஏமாற்றமளிக்கிறது. குறிப்பக பவுலிங் ஏமாற்றமளிக்கிறது. பீல்டிங்! நாங்கள் எப்படி பீல்ட் செய்கிறோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் பீல்டர்கள் வினையாற்றுவதுதான் மோசமாக உள்ளது. 

மந்தமாக இருக்கும் போது இன்னும் கூடுதல் கவனத்துடன் பந்துகளை எதிர்பார்க்க வேண்டும், இந்த விழிப்புணர்வில் மைக் ஹஸ்ஸி எனக்கு முக்கியமானவராகத் தெரிகிறார். கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் அவர் எதிர்பார்த்து அதற்கேற்ப நகர்வார், அந்த நுட்பமும் அர்ப்பணிப்பும் தேவை என்று கருதுகிறேன்.

ஆனால் முதலிலிருந்தே எங்கள் பீல்டிங் எப்படியிருக்கும் என்பதை அறிந்தேயிருக்கிறோம். யாருமே ஒழுங்காக வீசவில்லை, அதனால்தான் இறுதி ஓவர்களின் போது பவுலர்களை மாற்றிக் கொண்டிருந்தேன். வீசும் வேகம், திசை பற்றி கொஞ்சம் பவுலர்கள் யோசித்து வீச வேண்டும்.

பேட்ஸ்மென்கள் இப்படி வீசினால் எங்கு அடிப்பார்கள் என்ற யோசனை வேண்டும். பேட்ஸ்மென்களின் வலு என்னவென்பதை பவுலர்கள்தான் கண்டறிய வேண்டும்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article23768549.ece

  • தொடங்கியவர்

ஒவ்வொரு சிக்ஸர் அல்லது பவுண்டரி அடிக்க தோனி எத்தனை பந்துகள் எடுக்கிறார் தெரியுமா?

 

 
ms-dhoni

சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி: கோப்புப்படம்   -  படம்உதவி: ஐபிஎல் ட்விட்டர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஒவ்வொரு சிக்ஸரும் அல்லது பவுண்டரியும் அடிக்க சராசரியாக எத்தனை பந்துகள் எடுத்துக்கொள்கிறார் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

11-வது ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. சூதாட்டச்சர்ச்சையி்ல் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தவிர அனைத்து ஆண்டுகளிலும் அந்த அணியின் கேப்டனாக தோனியே செயல்பட்டு வந்துள்ளார். இப்போதும் தோனியே கேப்டனாக நீடிக்கிறார்.

இதற்கு முன் நடந்த சீசனில் தோனி விளையாடுவதற்கும், தற்போது நடந்து வரும் சீசனில் தோனியின் ஆட்டத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. வழக்கத்துக்கு மாறான ஆக்ரோஷம், ஷாட்களில் நேர்த்தி, ரன் சேர்க்கும் வேகம் ஆகியவை இந்த சீசனில் அதிகரித்துள்ளது. அதாவது இதற்கு முன் நடந்த சீசனில் தோனி பேட் செய்யும் போது, பவுண்டரி அடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார். அதாவது களத்துக்கு வந்து, தான் செட்டில் ஆவதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டு அதற்குபின்புதான் பவுண்டரி குறித்து தோனி சிந்திப்பார்.

கடந்த 2010, 2011ம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணியில் தோனியின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம், அந்த சமயத்தில்கூட தோனி ஒரு சிக்ஸர் அடிக்க 10 பந்துகள் எடுத்துக்கொள்வார். அதாவது தோனி ஒருபோட்டியில் சேர்த்த ரன்னும், அவர் அடித்த சிக்ஸருக்கும் இடையிலான சராசரியைக் கணித்தால் 10 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் அடித்துள்ளதார் என்பது தெளிவானது.

ஆனால், இந்த சீசனில், ஒரு சிக்ஸர் அடிக்க தோனி 8 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். அதாவது தான் சந்திக்கும் 8 பந்துகளில் ஒரு பந்தை சிக்ஸருக்கு உறுதியாக தோனி பறக்கவிடுவார். இந்த சீசனில் தனது அதிரடி ஆட்டத்தையும் மெருகேற்றியிருக்கிறார், சிக்ஸர் அடிக்கவும் அதிகமான பியற்சிகளையும் எடுத்துள்ளார்.

dhonijpg
 

பவுண்டரி அடிக்க தோனி எடுத்துக்கொள்ளும் நேரமும் குறைந்துள்ளது. இதற்கு முன் குறைவான நேரத்தில் பவுண்டரி அடித்த தோனி, இப்போது, தான் சந்திக்கும் ஒவ்வொரு 4 பந்துகளில் ஒருபந்தை பவுண்டரிக்கு தோனி அனுப்புகிறார்.

இதற்கு முன் புனே சூப்பர் ஜெயின்ட் அணியில் தோனி இருந்தபோது, ஒரு பவுண்டரி அடிக்க தோனி 6 பந்துகள் எடுத்துக்கொண்டார், மற்றொரு சீசனில் 8 பந்துகள் எடுத்துக்கொண்டார். இவை அனைத்தும் இந்த சீசனில் 4 பந்துகளாகக் குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய சீசனில் தோனி விளையாடிய விதத்துக்கும், கடந்த 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சிஎஸ்கே திரும்பியுள்ள நிலையில் அதில் இடம் பெற்று விளையாடுவதற்கு வித்தியாசம் அதிகரித்துள்ளது. தோனியின் பேட்டிங்கில் ஆக்ரோஷம், ஷாட்களில் நேர்த்தி, ரன்சேர்க்கும் வேகம் ஆகியவை அதிகரித்துள்ளது. வழக்கமாக அரைசதம் அடிக்க ஐபிஎல் போட்டிகளில் திணறும தோனி இந்த முறை 3 அரைசதம் அடித்துள்ளார். இதே வேகத்தில் தோனியின் பேட்டிங் அமைந்தால், ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணிக்கு வென்று கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

http://tamil.thehindu.com/sports/article23762769.ece

  • தொடங்கியவர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்:வெற்றி நெருக்கடியில் மும்பை இந்தியன்ஸ்; வெளுத்துக்கட்ட கெயில், கே.எல்.ராகுல் ஆயத்தம்

 

 
gayleJPG

கிறிஸ் கெயில்

ஐபிஎல் தொடரில் இன்று இரவு இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

3 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் வெளியேறும் அணிகளில் முதலிடத்தை பிடிப்பதற்கான வரிசையில் நிற்கிறது. 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது. மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் மெதுவாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும் பிளே ஆஃப் சுற்றை நோக்கி காய் நகர்த்தி வருகிறது.

ஒருவார இடைவெளிக்கு பிறகு பஞ்சாப் அணி தனது 8-வது லீக் ஆட்டத்தை இன்று சந்திக்கிறது. இந்த ஓய்வானது கிறிஸ் கெயில், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் புத்துணர்ச்சி பெற உதவியாக இருந்திருக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது. இந்த சீசனில் பஞ்சாப் அணி ஒருங்கிணைத்த செயல்திறனால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

டி 20 ஆட்டங்களில் ‘உலக நாயகன்’ என வர்ணிக்கப்படும் கிறிஸ் கெயில் மனதளவில் காயமடைந்த நிலையில் இந்த சீசனில் பங்கேற்ற போதிலும் ஒரு சதம், 2 அரை சதம் என 252 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் தன் மீது மீண்டும் குவியச் செய்துள்ளார். அதேவேளையில் ஐபிஎல் வரலாற்றில் அதிவிரைவாக அரை சதம் அடித்த கே.எல்.ராகுலும் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இந்த சீசனில் அவர், 2 அரை சதங்களுடன் 268 ரன்கள் விளாசியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ‘சுழல் மாயாவியான’ முஜீப் உர் ரஹ்மான் சிக்கனமாக ரன்கள் வழங்கி (சராசரியாக ஓவருக்கு 6.51) 7 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அவரது திறனை கேப்டனான அஸ்வின் சிறந்த முறையில் மெருகேற்றுவதுடன் சரியான நேரத்தில் அதை வெளிக்கொண்டுவர உதவுகிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களான அங்கித் ராஜ்புத், ஆன்ட்ரூ டை ஆகியோரும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். இவர்கள் முறையே 7 மற்றும் 9 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். இதில் ராஜ்புத் சிக்கனமாக ரன்களை (6.27) வழங்கி உள்ளார். ஆன்ட்ரூ டை சராசரியாக ஓவருக்கு 7.78 ரன்கள் விகிதம் விட்டுக்கொடுத்துள்ளார்.

மும்பை அணியை பொறுத்தவரையில் அந்த அணி 6 தோல்விகளை சந்தித்ததற்கு முதன்மையான காரணம் மோசமான தொடக்க பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பவர்பிளேவில் அதிக ரன்களை வாரி இறைத்ததுதான். மும்பை அணியின் தொடக்க ஜோடி இதுவரை நடைபெற்ற 8 ஆட்டங்களிலும் முறையே சேர்த்த ரன்கள் 7, 11, 102, 0, 1, 12, 69, 5 இவைதான். தொடக்க வீரர் வரிசைக்கு மாற்றப்பட்ட சூர்யகுமார் யாதவ் (8 ஆட்டங்களில் 283 ரன்கள்), எவீன் லீவிஸ் (7 ஆட்டத்தில் 194 ரன்கள்) ஆகியோர் மட்டுமே ஒழுங்கான முறையில் ரன்கள் சேர்த்து வருகின்றனர். ரோஹித் சர்மா தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டதும், சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் மும்பை அணியை பெரிய அளவில் காயப்படுத்தி உள்ளது.

ஆல்ரவுண்டர்களான கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா ஆகியோரது மோசமான செயல்திறனும் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பந்து வீசுவதற்கு முழு உடல் தகுதியுடன் இல்லாத பொலார்டு பேட்டிங்கில் 6 ஆட்டங்களில் வெறும் 76 ரன்களே சேர்த்துள்ளது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவோ 8 ஆட்டங்களில் 111 ரன்கள் சேர்த்த நிலையில் பந்து வீச்சில் 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார். எனினும் வெற்றியை தேடித்தரக்கூடிய அளவிலான இன்னிங்ஸ் அவரிடம் இருந்து ஒரு ஆட்டத்தில் கூட வெளிப்படவில்லை.

இதேபோல் வேகப் பந்து வீச்சில் முஸ்டாபிஸூர் ரஹ்மான், மிட்செல் மெக்லீனகன் ஆகியோர் தொடக்க ஓவர்களிலும் இறுதிகட்ட ஓவர்களிலும் அதிக ரன்களை வாரி வழங்குவது அணியை மேலும் நெருக்கடிக்கு தள்ளுகிறது. இவர்கள் இருவரும் இந்த சீசனில் முறையே சராசரியாக ஓவருக்கு 8.34 மற்றும் 8.66 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர். தாக்கத்தை ஏற்படுத்தாத இவர்களின் பந்து வீச்சால் ஜஸ்பிரித் பும்ராவும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் இளம் ரிஸ்ட் ஸ்பின்னரான மயங்க் மார்க்கண்டேவின் பந்து வீச்சுதான். இந்த சீசனில் 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள அவர், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளார். இன்றைய ஆட்டத்திலும் அவர், சவால் அளிக்கக்கூடும்.

இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கான வரிசையில் மற்ற அணிகளுடன் இணைய முடியும். ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு நாக் அவுட் போன்றது என்பதால் கட்டாயமாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியான வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் ஒட்டுமொத்த வீரர்களும் எழுச்சி காண வேண்டிய நிலையில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/article23767625.ece

  • தொடங்கியவர்

தோல்வி முகத்தில் விழுந்த அறைதான்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்

 

 
fleming

படம். | விவேக் பெந்த்ரே.

கொல்கத்தாவுக்கு எதிராக தோற்ற விதம் குறித்து கடுமையாகப் பேசிய ஸ்டீபன் பிளெமிங் இதற்காக அணியில் பெரிய மாற்றங்கள் தேவை என்ற கருத்தை நிராகரித்தார். மோசமான பீல்டிங் சென்னைக்கு நேற்று பின்னடைவைக் கொடுத்தது.

இளம் வேகப்பந்து வீச்சாளர் கே.எம்.ஆசிப்பின் இருதயம் நொறுங்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா அடுத்தடுத்து கேட்ச்களை அதிரடி வீரர் சுனில் நரைனுக்கு விட்டார்.

 

இந்நிலையில் ஆட்டம் முடிந்து பிளெமிங் கூறியதாவது:

நாங்கள் அம்பலமானோம், மேலும் சிலவேளைகளில் எங்கள் பவுலிங்கில் இது வெளிப்பட்டுவிடுகிறது. நல்ல பீல்டர்களே தவறுகள் இழைக்கும் போது நிச்சயன் நாங்கள் ஓர் அடி பின் வாங்கவே செய்கிறோம். அது கொஞ்சம் அடிகொடுக்கவே செய்கிறது.

நீண்ட தொடரில் இவ்வாறு நடப்பது சகஜம்தான், எந்த ஒரு விதத்திலும் இது நல்ல ஆட்டம் என்று கூறமாட்டேன், சரிசெய்ய மணிநேரங்களே உள்ளன, நாட்கள் இல்லை, தோல்வி என்பது நம் முகத்தில் விழும் அறைதான், இது பாதிக்காது என்றே நம்புகிறேன், இன்னும் கடின உழைப்பு இருக்கிறது.

ஒரு மோசமான ஆட்டத்தையடுத்து மிகவும் தன்னம்பிக்கையற்ற நிலைக்குச் சென்று விடக்கூடாது. ஒரு ஆட்டம் தோல்வி என்றவுடன் நீக்குவதும், மாற்றம் செய்வதும் சுலபம். இதே பவுலர்கள்தான் கடந்த போட்டியில் வெற்றி பெறச் செய்தர். எனவே நாம் எச்சரிக்கையுடன் தான் அணுக வேண்டும், ஒருவரின் நல்ல பார்ம் வெளிவருவதற்கான நீண்ட தொடர்தான் இது.

178 ரன்கள் என்ற இலக்கு எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியற்ற இலக்காகத் தெரியவில்லை, சற்றே சவாலான இலக்குதான். நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை, வாய்ப்புகளைக் கோட்டை விட்டோம்.

கொஞ்சம் தீவிரத்தை இழந்து விட்டோம், கடைசி 4-5 ஓவர்களில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ரன்களைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஜடேஜா இன்னும் கொஞ்சம் பங்களிப்பு செய்ய வேண்டும். பந்துக்கு ஒரு ரன் என்பதை விடவும் அவர் கொஞ்சம் கூடுதலாக அடிக்க வேண்டும், அப்போதுதான் அவரது பங்கை அவர் பூர்த்திசெய்வதாகும்.

ஒரு சில மோசமான நாட்கள், தோல்வி என்று அனுமதிக்கும் அளவுக்கு நாங்கள் அவ்வளவு வலுவான அணியல்ல.

ஷுப்மன் கில் நன்றாக ஆடினார். அவரது ஷாட்களில் சில முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக இருந்தாலும் பார்க்க உற்சாகமாக இருந்தது. அவருக்கு கிடைத்த முதல் நிஜ வாய்ப்பை அவர் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். போட்டியை வென்றதில் பெரிய பங்களிப்பு செய்தார்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங். சிஎஸ்கே அடுத்ததாக சிஎஸ்கே, கோலியின் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/article23772435.ece

  • தொடங்கியவர்

2 கேட்சுகளை விட்ட ஜடேஜா சிஎஸ்கே அணியில் நீடிக்கலாமா?: ரசிகர்கள் கருத்து என்ன?

 

 
jadega%202

கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றை ஆட்டத்தில் அடுத்தடுத்து கேட்ச்சை தவறவிட்டு, அமைதியாக பந்தையே பார்த்துக்கொண்டிருந்த ஜடேஜா   -  படம் உதவி: பிசிசிஐ ட்விட்டர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் 2 கேட்சுகளை கோட்டைவிட்டு, பேட்டிங்கிலும் சொதப்பிய ரவிந்திர ஜடேஜா விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து நீடித்து வருபவர் ரவீந்திர ஜடேஜா. தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்ற சிறப்பாக விளையாடுவதற்காக “ராக் ஸ்டார்” என்ற பட்டத்தை ஷேன் வார்ன் வழங்கினார். அதை அடிப்படையாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.98 லட்சத்துக்கு ஜடேஜாவை ஏலத்தில் விலைக்கு வாங்கியது.

 

அதன்பின் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் இடம்பெற்று விளையாடி வந்த ஜடேஜா அவ்வப்போது மட்டுமே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்தார். சூதாட்டப்புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் இடம் பெற்றுள்ளது.

இந்த சீசனில் தோனியின் உச்சபட்ச பரிந்துரையால் சிஎஸ்கே நிர்வாகம் ரவிந்திர ஜடேஜாவை தக்கவைத்துக் கொண்டது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா மெச்சும்படியான பேட்டிங், பந்துவீச்சு ஏதும் இல்லாமல், விளையாடி வருகிறார். ஒட்டுமொத்தமாக 9 போட்டிகளில் 59 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எந்தவிதமான ஃபார்மிலும் இல்லாத ஜடேஜா சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் இடம் பெற்று இருப்பது ஒவ்வொரு ஆட்டத்தின் போது விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. சிஎஸ்கே அணிக்கு ஒரு “எக்ஸ்ட்ரா லக்கேஜ்” போலவே ஜடேஜா இருந்து வருகிறார்.

இவரின் இந்த சொதப்பலான ஆட்டம் நேற்றைய கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் உச்சத்தை தொட்டு, உள்ளங்கை நெல்லிக்கனி போல் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

சிஎஸ்கே வீரர் ஆசிப் 2-வது ஓவரை வீசியபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சுனில் நரேன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். முதல் வாய்ப்பைத்தான் தவறவிட்டார் என்றால் அடுத்தபந்திலும் கிடைத்த கேட்ச் வாய்ப்பை ஜடேஜா தவறவிட்டார். இது போட்டியை தொலைக்காட்சியிலும், மைதானத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்தையும் தூண்டிவிட்டது.

களத்தில் இருந்த தோனியும் கேட்ச் வாய்ப்பை இரு முறை தவறவிட்ட ஜடேஜாவின் செயலைப்பார்த்துக் கடுப்பாகிவிட்டார். அதன்பின் அம்பதி ராயுடு, ரெய்னா, பில்லிங்ஸ் ஆகியோர் வந்து ஜடேஜாவை சமாதானப்படுத்தி அவருக்கு நம்பிக்கை ஊட்டினர்.

நரேன் அடித்த இருஷாட்களில் ஒரு கேட்சை பிடித்திருந்தால் கூட, நரேன் 32 ரன்கள் விளாசுவதை தடுத்திருக்க முடியும், போட்டியில் கொல்கத்தா ரன் சேர்ப்பை தடுத்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் முடிவு வேறுமாதிரியாகச் சென்றது. சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்க ஜடேஜாவின் மோசமான பீல்டிங்கும் ஒருவிதத்தில் காரணமாகவே அமைந்தது எனக் கூறலாம்.

ஜடேஜா போட்டியில் இரு கேட்ச் வாய்ப்புகளை விட்டதைத் தொடர்ந்து, அவர் அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிஎஸ்கேவின் ட்விட்டர் தளத்தில், “ ஒரு ரசிகர் பதிவிடுகையில், தோனி, பிளமிங்குக்கு அன்பான வேண்டுகோள், அணியில் ஜடேஜாவின் பங்கு என்ன. சிஎஸ்கே அணியில் விளையாடும் லெவனில் அவர் இருக்க வேண்டுமா, அணியில் அவர் பங்கு என்ன, பேட்ஸ்மேனா அல்லது பந்துவீச்சாளரா என்னவென்றே தெரியவில்லை, அவரை தயவு செய்து நீக்குங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஆற்றங்கரையில் மீனை ஒருவர் தூக்கிப்போடுவது போலவும், அதை ஒருபிடிக்காமல் தவறவிடுவதுபோன்ர வீடியோ கிளிப்பை பதிவிட்டு அதில் ஒருவரை தோனியாகவும், மற்றொருவரை ஜடேஜாவாகவும் குறிப்பிட்டு மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் பதிவிடுகையில், ஜடேஜா பந்துவீச மாட்டார், பேட்டிங் செய்யமாட்டார், ஆனால் 8 போட்டிகள் விளையாடிவிட்டார், இதன்பின் தோனி எப்படி ஜடேஜாவை அணியில் வைத்திருக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜடேஜாவை அணியில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக இதுவரை எத்தனை ஜடேஜாக்களை தோனி கழற்றிவிட்டு இருப்பார் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் ஏராளமான சிஎஸ்கே ரசிகர்கள் ஜடேஜாவுக்கு எதிராக புறப்பட்டுவிட்டனர். பெங்களூரு அணிக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பாரா என்பது தோனியும், பயிற்சியாளர் பிளெம்மிங் ஆகியோர் முன் இருக்கும் கேள்வியாகும்.

http://tamil.thehindu.com/sports/article23773575.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் 2018 - வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

 

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் 34-வது லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. #VIVOIPL #IPL2018 #KXIPvMI

ஐபிஎல் 2018 - வாழ்வா, சாவா ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
 
 
இந்தூர்:
 
ஐபிஎல் தொடரின் 34-வது லீக் மத்திய பிரதேசம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
 
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு ஓவரில் கெய்ல் அதிரடி காட்டியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. கேஎல் ராகுல் 20 பந்தில் 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 38 பந்தில் அரைசதம் அடித்த கெய்ல் ஆட்டமிழந்தார்.
 
கடைசி ஓவரில் பஞ்சாப் அணி 22 ரன்கள் விளாசி 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஸ்டாய்னிஸ் 15 பந்தில் 22 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
 
இதையடுத்து  மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடினர். 5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்தது. ஆறாவது ஓவரை முஜீப் உர் ரஹ்மான் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் லெவிஸ் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து இஷான் கிஷான் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 10 ஒவர் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. 12-வது ஓவரை ஸ்டாயின்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். அவர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 42 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். 
 
அதன்பின் இஷான் அதிரடியாக ரன் குவிக்க முயன்றார். முஜீப் வீசிய 13-வது ஓவரின் கடைசி பந்தில் இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவர் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத்தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினார். ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்ட்ரூ டை பந்தில் கிளீன் போல்டானார். அவரைத்தொடர்ந்து குருணல் பாண்டியா களமிறங்கினார்.
 
இறுதிக்கட்டத்தில் குருணல் பாண்டியாவும், ரோகித் சர்மாவும் அதிரடியாக விளையாடினர். 18-வது ஓவரில் மும்பை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. மும்பை அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 24 ரன்களுடனும், குருணல் பாண்டியா 12 பந்தில் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் முஜீப் 2 விக்கெட் வீழ்த்தினார். #VIVOIPL #IPL2018 #KXIPvMI

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/04233743/1160975/IPL-2018-Mumbai-Indians-beat-Kings-XI-Punjab-by-6.vpf

  • தொடங்கியவர்

சென்னை - பெங்களூரு இன்று மோதல்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் விராட் கோலி படை

 

Table-4%204-05-2018col
05CHPMUMSDHONI

மகேந்திர சிங் தோனி   -  PTI

05CHPMURAVINDRAJADEJA
05CHPMUVIRATKOHLI

விராட் கோலி   -  PTI

Table-4%204-05-20181col
Table-4%204-05-2018col
05CHPMUMSDHONI

மகேந்திர சிங் தோனி   -  PTI

வலுவான பேட்டிங்கை கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலவீனம் அடைந்துள்ள பந்து வீச்சுடன் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது.

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் புதுத்தெம்பை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி கடந்த 3 ஆட்டங்களில் இரு தோல்விகளை அடைந்து திடீர் பின்னடைவை சந்தித்துள்ளது.

பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. அதேவேளையில் சென்னை அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது.

சேப்பாக்கத்தில் இருந்து தனது சொந்த மைதானத்தை புனேவுக்கு மாற்றிக் கொண்டுள்ள சென்னை அணி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை சிறப்பாக தகவமைத்துக் கொண்டுள்ளது. இங்கு 3 ஆட்டங்களில் விளையாடி இரு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. டெல்லி, ராஜஸ் தான் அணிகளை வீழ்த்திய நிலை யில் மும்பை அணியிடம் தோல்வி கண்டிருந்தது. மும்பை அணிக்கு எதிராக கடந்த 28-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதி ரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் சென்னை அணி தோல்வியடைந்ததற்கு பலவீன மான பந்து வீச்சு மற்றும் மோச மான பீல்டிங் காரணமாக அமைந்தது.

இந்த சீசனில் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சிறந்த பார்மில் உள்ளனர். அம்பாட்டி ராயுடு, ஷேன் வாட்சன், டுவைன் பிராவோ, தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் அணிக்கு தேவையான நேரங்களில் சிறந்த பங்களிப்பை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அம்பாட்டி ராயுடு தொடக்க வீரரராகவும், 4-வது வீரராகவும் களமிறங்கி இதுவரை 391 ரன்கள் குவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்தில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த தோனி மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றி பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு சவால் கொடுக்கக்கூடும்.

பந்து வீச்சில் சிறந்த வடிவம் பெற்றிருந்த தீபக் ஷகார் காயம் அடைந்தது ஒட்டுமொத்த பந்து வீச்சு திறனையும் பலவீனமடையச் செய்துள்ளது. இதன் காரணமாகவே மும்பை மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டங்களில் மட்டையாளர்கள் சற்று வலுவான இலக்கை கொடுத்த போதிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத பந்து வீச்சால் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போனது. சுழற்பந்து வீச்சில் அனுபவ வீரர்களான ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோரிடம் இருந்து வெற்றிக்கான பங்களிப்பு வெளிப்படவில்லை.

மற்ற அணிகள் ரிஸ்ட் ஸ்பின்னர்களை திறம்பட கையாளும் நிலையில் சென்னை அணியோ அதை கண்டுகொள்ளாமல் பாராமுகமாக உள்ளது. வேகப்பந்து வீச்சில் லுங்கி நிகிடியை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகி உள்ளதால் இம்ரன் தகிரை விளையாடும் லெவனில் சேர்க்க முடியாத நிலை உள்ளது. எனினும் விளையாடும் லெவனில் உள்ள மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான கரண் சர்மாவை அணி நிர்வாகம் சரியாக கையாளவில்லை. அவரைவிட ஹர்பஜன், ஜடேஜாவுக்கு பந்து வீச்சில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அநேகமாக இம்ரன் தகிரை இன்றைய ஆட்டத்தில் சேர்க்கும் விதமாக டுபிளெஸ்ஸிஸ் நீக்கப்படக்கூடும். இந்த நிலை ஏற்பட்டால் அம்பாட்டி ராயுடு தொடக்க வீரராக களமிறங்குவார். 2 ஆட்டங்களில் 6 ஓவர்களை வீசி 75 ரன்களை தாரை வார்த்த கே.எம்.ஆசிப்பும் தனது இடத்தை இழக்கக்கூடும். நேற்றுமுன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் ஆசிப் 21 ரன்களை விட்டுக் கொடுத்தது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரு அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி 8 ஆட்டங்களில் 349 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டி வில்லியர்ஸ் 6 ஆட்டத்தில் 280 ரன்கள் குவித்துள்ளார். காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களிலும் விளையாடாத அவர் முழு குணமடைந்துள்ளதால் இன்று களமிறங்குகிறார். குயிண்டன் டி காக் திருமண வேலையாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத னால் அவர் இடத்தில் பிரண்டன் மெக்கலம் விளையாடக்கூடும்.

204 ரன்கள் சேர்த்துள்ள மன்தீப் சிங், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் ஓரே ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்ட காலின் டி கிராணட் ஹோம் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பை வழங்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை அதிக அளவில் தாரை வார்ப்பது பெங்களூரு அணிக்கு பெரிய தலைவலியாக உள்ளது. 11 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள உமேஷ் யாதவ், 7 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள யுவேந்திரா சாஹல் ஆகியோர் சிறப்பான முறையில் பங்களிப்பு செய்து வருகின்றனர். மேலும் கடந்த இரு ஆட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட்ட டிம் சவுதியும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் பந்து வீச்சில் அந்த அணி சில மாற்றங்களை மேற்கொள்ளக்கூடும்.

 

பிளே ஆஃப் ஆட்டங்கள் மாற்றம்

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் மற்றும் தகுதி சுற்று 2 ஆட்டங்கள் புனேவில் மே 23 மற்றும் 25-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரு ஆட்டங்களும் தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/article23780062.ece

  • தொடங்கியவர்

ஹைதராபாத்துடன் டெல்லி இன்று பலப்பரீட்சை

 

 
Delhi%20Daredevilsjpg

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இளம் பேட்டிங் படையை கொண்டுள்ள டெல்லி டேர்டெவில்ஸ், வலுவான பந்து வீச்சை கொண்டுள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் மோதுகிறது.

டெல்லி அணி வெளியேறுவதற்கான பட்டியலில் இணையக்கூடிய அணிகளுள் ஒன்றாகவே இருக்கிறது. அந்த அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றி, 6 தோல்விகளுடன் பட்டியலில் 6-வது இடம் வகிக்கிறது. பிளேப் ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் எஞ்சியுள்ள 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. இளம் வீரர்களான பிருத்வி ஷா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள ஹைதராபாத் குறைந்த இலக்கை கொடுத்தாலும் அதன் வலுவான பந்து வீச்சு குழு வெற்றியை வசப்படுத்தும் திறனை கொண்டிருப்பது பெரிய பலமாக உள்ளது. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள புவனேஷ்வர் குமார் இன்று களமிறங்கக்கூடும் என கருதப்படுகிறது.

http://tamil.thehindu.com/sports/article23780066.ece

  • தொடங்கியவர்

டி வில்லியர்ஸ் வருகிறார்... டு பிளெஸ்ஸி தேவையா தோனி? #CSKvRCB

 
 

2018 ஐபிஎல் சீசனின் டேபிள் டாப்பராக, நம்பர் ஒன் அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தாவுடனான தோல்வியின் மூலம் நம்பர் 2-வாக கீழே இறங்கியிருக்கிறது. இன்று பெங்களூருடவுனான ஆட்டத்தில் தோல்வியடைந்தால் இன்னும் கீழே இறங்கும். #CSKvRCB

 #CSKvRCB

பெங்களூரு கீழே எல்லாம் போகவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கீழேயே இருப்பதால் இனிவரும் 6 போட்டிகளிலும் கிட்டத்தட்ட வென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறது ஆர்சிபி. 

சென்னை இன்றைய போட்டியில் தோல்வியடைந்தாலும் ப்ளே ஆஃப்க்கு பிரச்னை இல்லை. ஆனால், தோல்வியடைந்தால் அது அணியின் நம்பிக்கையை முழுவதுமாகக் குலைத்துவிடும். சென்னை செம ஸ்ட்ராங்காக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு இனியும் தப்பிக்க முடியாது. அணியில் நிச்சயம் சில மாற்றங்களைச் செய்தேயாக வேண்டும் தோனி!

டு பிளெஸ்ஸி வேண்டுமா?

Du Plessisடி-20 கிரிக்கெட்டில் 30 ரன்கள் என்பது கிட்டத்தட்ட அரை சதம் போலத்தான். ஆனால், வெறும் 30 ரன்கள் அடிப்பதற்காகவே அணியில் ஒருவர் வேண்டுமா?  டு பிளெஸ்ஸியை இன்ஃபார்ம் பேட்ஸ்மேன் என்றும் சொல்லமுடியாது. அவரால் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சாவ்லாவை சந்திக்க ரொம்பவே திணறினார். சாவ்லாவைவிட சிறந்த லெக் ஸ்பின்னர் பெங்களூரு அணியில் இருக்கும் யுவேந்திர சாஹல். இவரைத்தான் பவர்பிளே ஓவர்களில் இறக்குவார் கோலி. அதனால் வாட்சனுடன், ராயுடு ஓப்பனிங் வருவதே சரியாக இருக்கும்.

4 டவுன் பேட்ஸ்மேனாக டெத் ஓவர்களில் 30 ரன்கள் அடிக்ககூடிய, வேகப்பந்து வீசக்கூடிய இடதுகை பெளலர் டேவிட் வில்லியை அணிக்குள் எடுப்பதுதான் சென்னைக்கு பெரும் பலம் சேர்க்கும். சென்னை, பெங்களூரு என இரு அணிகளுமே பெளலிங்கில் வீக்கான அணிகள்தான். ஆனால், ஸ்பின் பெளலிங்கில் பெங்களூருவை விடவும் பலவீனமாக இருக்கிறது சென்னை. பெங்களூரு அணிக்குள் இன்றைய மேட்ச்சில் டி வில்லியர்ஸ் விளையாட வருகிறார் என்பதே பெங்களூருவுக்கு புத்துணர்வு தரும். இதுவரை ஆடிய போட்டிகளில் பெரும்பாலான ஆட்டங்களில் டி வில்லியர்ஸின் விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் எடுத்திருக்கிறார்கள். ஆனால், சென்னைக்கு எதிரான மேட்ச்சில் டி வில்லியர்ஸின் விக்கெட்டை எடுத்தவர் இம்ரான் தாஹிர். அதற்குள் டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்துவிட்டார் என்பது வேறு விஷயம். 

டி காக் பெங்களூரு அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக பார்த்தீவ் பட்டேலை களம் இறக்குகிறது பெங்களூரு. மெக்கல்லம், பார்த்தீவ், டி வில்லியர்ஸ், கோலி, மந்தீப் சிங், கிராந்தோம் என்பதுதான் பெங்களூருவின் பேட்டிங் லைன் அப் ஆக இருக்கும். கோலி, மெக்கல்லம், டி வில்லியர்ஸின் பேட்டிங்கை சமாளிக்க தோனி வேகப்பந்து, ஸ்பின் என மாற்றி மாற்றி பெளலர்களை இறக்க வேண்டும்.

கடந்த இரண்டு போட்டிகளில் ஆசிஃப் ரன்களை அதிகம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக பந்துவீசுகிறார். ஆசிஃப் சென்னை எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷனின் படைப்பு. க்ளென் மெக்ராத்திடம் பெளலிங் கற்றவர். அவரிடம் வேகம் இருக்கிறது. அதனால் அவரை தோனி தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். நிச்சயம் அவர் இன்றைய மேட்ச்சில் முக்கியமான பெளலராக இருப்பார்.

பெங்களூரு அணிக்கு எதிராக இம்ரான் தாஹிர் சிறப்பாக பந்துவீசியிருப்பதால் கரன் ஷர்மாவுக்குப் பதிலாக தாஹிரை அணிக்குள் சேர்க்கலாம். வாட்சன், பிராவோ, வில்லி, தாஹிர் என நான்கு வெளிநாட்டு  வீரர்கள் சரியாக இருப்பார்கள்.  ஆனால், ஜடேஜா? நிச்சயம் அவர் இந்தப் போட்டியிலும் விளையாடுவார். அவரை சென்னை சூப்பர் கிங்ஸின் ஒரு அங்கமாகவே தோனியும், ஃப்ளெமிங்கும் பார்க்கிறார்கள். அதனால் அவர் தொடர்ந்து அணியில் இருப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.

சென்னை அணியின் சிறந்த டெத் பெளலர் பிராவோ. ஆனால், அவரது பெளலிங்கை எதிர் அணியினர் கணிக்க ஆரம்பித்துவிட்டனர் என்பதற்கு சாட்சிதான் கடந்த சில போட்டிகளாக அவரின் பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறப்பது. இன்றைய மேட்ச்சிலும் பிராவோவின் பெளலிங் எடுபடுமா என்பது சந்தேகமே!

MS Dhoni

சென்னையின் பேட்டிங்!

சென்னையின் பேட்டிங் ஸ்ட்ராங்தான் என்றாலும் பியுஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுனில் நரேன் என மூன்று ஸ்பின்னர்களையும் அடிக்கமுடியாமல் அவதிப்பட்டது. சாஹல், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு ஸ்பின்னர்களைத்தான் கோலி பயன்படுத்துவார். கோலி ஸ்மார்ட் கேப்டனாக இருந்தால் இன்னொரு ஸ்பின்னரான முருகன் அஷ்வினை களத்தில் இறக்கலாம். கடந்த போட்டியில் சென்னை கோரி ஆண்டர்சனைப் பதம் பார்த்ததுபோல், இந்த மேட்ச்சில் செய்ய முடியாது. ஏனெனில், அவருக்குப் பதில் டிம் செளத்தி வந்துவிட்டார். இவர் ஏற்கெனவே சென்னை அணியில் இருந்தவர்.

தோனி, ரெய்னா, உள்ளிட்ட வீரர்களுக்கு பயிற்சிகளின்போது அதிகமுறை பந்துவீசியவர் என்பதால் அவர்தான் இன்றைக்கு கோலியின் முக்கிய பெளலர். கடந்த போட்டியில் முகமது சிராஜ் வீசிய 4 ஓவர்களில் 48 ரன்கள் அடித்து துவைத்தது சென்னை. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளாக சிராஜ் மிகச்சிறப்பாக பந்துவீசிவருகிறார். முக்கியமான விக்கெட்டுகளை சரிக்கிறார். அதனால் அவரின் பந்துவீச்சை சென்னை அசால்ட்டாக டீல் செய்ய முடியாது.

செளத்தி, உமேஷ் யாதவ், சிராஜ், சாஹல், வாஷிங்டன் சுந்தர் என்பதுதான் கோலியின் பெளலிங் அட்டாக். இதில் சாஹல், செளத்தியை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களை அடிக்கலாம் என்பதுதான் தோனியின் பிளானாக இருக்கும்.

 #CSKvRCB

டாஸ்!

இரண்டு அணிகளுமே டாஸ் வென்றால் முதலில் பெளலிங்கைத்தான் தேர்ந்தெடுக்கும். சென்னை முதலில் பேட்டிங் ஆடினால் 200 ரன்களுக்கு மேல் டார்கெட் வைத்தால்தான் வெற்றிபெறமுடியும். அதேபோல் பெங்களூரு முதலில் ஆடி கிட்டத்தட்ட 200 ரன்கள் அடித்தால், சென்னை 12 ஓவர்கள் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ரன்ரேட்டை 8-க்குள் மெயின்டெய்ன் செய்தாலே டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கலாம். பத்து ஓவர்களுக்குள் இரண்டு மூன்று விக்கெட்டுகளை சென்னை இழந்தால் அது தோல்விக்குத்தான் வழிவகுக்கும்.

 

கோலியா - தோனியா... உங்கள் சப்போர்ட் யாருக்கு?

https://www.vikatan.com/news/sports/124164-csk-vs-rcb-match-preview.html

  • தொடங்கியவர்

எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம்: தோனிக்கு ஆலோசனை அளித்த சுனில் கவாஸ்கர்

 

 
sunil%20and%20gavas

சிஎஸ்கே கேப்டன் தோனியுடன், முன்னாள் வீரர் கவாஸ்கர் உரையாடும் காட்சி: கோப்புப்படம்   -  படம்உதவி: ஐபிஎல் ட்விட்டர்

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து கேப்டன் தோனிக்கு அனுபவ வீரரும்,முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ஆலோசனை அளித்துள்ளார்.

சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி 2ஆண்டுகள் தடைக்குபின் சிஎஸ்கே அணி, 11-வது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி முன்பிருந்த வீரரக்ளில் 4 பேரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு புதிய வீரர்களுடன் விளையாடி வருகிறது.

பேட்டிங் வரிசையில் வீரர்களை மாற்றி களமிறக்கி, தோனி சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு பலனும் கிடைப்பதுண்டு, சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கிறது. அவ்வாறு கடந்த 9 போட்டிகளில் பல போட்டிகளில் தோல்வியின் தறுவாயில்தான் சென்னை அணி மீண்டுள்ளது.

சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவை முன்வரிசையில் இறக்கி கடைசி வரை ஆல்ரவுண்டர் பிராவோவை களமிறக்காமல் தோனி செய்தது சிஎஸ்கே ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் ரன் சேர்க்க முடியாமலும், பந்துகளும் கடைசி நேரத்தில் ஜடேஜாவால் வீணானது.

இந்நிலையில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியிலும் தோனி ஏதும் சோதனை முயற்சிகள் செய்துவிடக்கூடாது என்பதற்காக அனுபவ வீரர் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை தோனிக்கு வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணியில் உள்ள திறமையான வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸை தொடக்க வீரராக களமிறக்காமல், இன்னும் கூடுதலான வரிசையில் களமிறக்க முயற்சிக்க வேண்டும். தொடக்க ஆட்டத்துக்கு டி20 போட்டியைப் பொறுத்தவரை அதிரடியான தொடக்கமே ரன் குவிப்புக்கு வலுசேர்க்கும்.

4-வது வீரராக களமிறங்கிக்கொண்டிருக்கும் அம்பதி ராயுடுவை, தொடக்க வீரராக களமிறக்கி அதிரடி ஆட்டத்துக்கு பயன்படுத்தலாம். அதேபோல தோனியும், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து, கடைசி அதிரடி ஆட்டம் ஆடுவதைக் காட்டிலும், தொடக்கத்திலேயே அதிரடியைக் கையாள்வது எதிரணியின் திட்டங்களை சிதறடிக்கக்கூடும்.

குறிப்பிட்ட சில போட்டிகளாக ஆல்ரவுண்டர் பிராவோவை பயன்படுத்தாமல் தோனி இருந்து வருகிறார். மிகச்சிறந்த வீரர் பிராவோ அவரை 6-வது வரிசையில் களமிறக்கும்போது, அவர் சந்திக்கும் ஓவர்கள், பந்துகள் குறைவாக இருந்துவிடுகின்றன.

ஸ்டிரைக் ரேட் 196.66 வைத்துள்ள பிராவோவை முன்வரிசையில் களமிறக்குவதுதான் சிறந்ததாகும். கடந்த 9 போட்டிகளில் 6 போட்டிகள் மட்டுமே பிராவோவுக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் சரியாக அமையவில்லை. 118 ரன்கள் மட்டுமே பிராவோ சேர்த்துள்ளார்.

பிராவோவை முன்வரிசையில் களமிறக்கி, ஜடேஜாவை பின்வரிசையில் களமிறக்க தோனி முயற்சிக்க வேண்டும். ஆனால், இப்போது ஜடேஜாவுக்கு அதிகமான வாய்ப்புகளை தோனி கொடுத்து வரும் நிலையில், அதை பிராவோவுக்கு கொடுப்பது அணியின் ஸ்கோர் உயர்வுக்கு வழிவகுக்கும். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திணறிவரும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிப்பதைக் காட்டிலும், பிராவோவை முன்னிலைப்படுத்துவது சிறப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23782249.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து இவர் சொல்வதையும் கேளுங்கள் தோனி ....!  ?

Résultat de recherche d'images pour "kapil dev moving gif"

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

கோலியா - தோனியா... உங்கள் சப்போர்ட் யாருக்கு?

https://www.vikatan.com/news/sports/124164-csk-vs-rcb-match-preview.html

அது தான் யோசித்துக் கொன்டிருக்கிறேன்.நான் மட்ச் முடிந்த பின் கொக்கரிக்கிற ஆள் தானே?.என்டாலும் இந்த முறை முருகனுக்குத்தான்.

  • தொடங்கியவர்
29 minutes ago, நவீனன் said:

எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம்: தோனிக்கு ஆலோசனை அளித்த சுனில் கவாஸ்கர்

 

 
sunil%20and%20gavas

சிஎஸ்கே கேப்டன் தோனியுடன், முன்னாள் வீரர் கவாஸ்கர் உரையாடும் காட்சி: கோப்புப்படம்   -  படம்உதவி: ஐபிஎல் ட்விட்டர்

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் எந்தெந்த வீரர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து கேப்டன் தோனிக்கு அனுபவ வீரரும்,முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் ஆலோசனை அளித்துள்ளார்.

சூதாட்டச் சர்ச்சையில் சிக்கி 2ஆண்டுகள் தடைக்குபின் சிஎஸ்கே அணி, 11-வது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி முன்பிருந்த வீரரக்ளில் 4 பேரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு புதிய வீரர்களுடன் விளையாடி வருகிறது.

பேட்டிங் வரிசையில் வீரர்களை மாற்றி களமிறக்கி, தோனி சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு பலனும் கிடைப்பதுண்டு, சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கிறது. அவ்வாறு கடந்த 9 போட்டிகளில் பல போட்டிகளில் தோல்வியின் தறுவாயில்தான் சென்னை அணி மீண்டுள்ளது.

சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜாவை முன்வரிசையில் இறக்கி கடைசி வரை ஆல்ரவுண்டர் பிராவோவை களமிறக்காமல் தோனி செய்தது சிஎஸ்கே ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் ரன் சேர்க்க முடியாமலும், பந்துகளும் கடைசி நேரத்தில் ஜடேஜாவால் வீணானது.

இந்நிலையில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியிலும் தோனி ஏதும் சோதனை முயற்சிகள் செய்துவிடக்கூடாது என்பதற்காக அனுபவ வீரர் சுனில் கவாஸ்கர் சில ஆலோசனைகளை தோனிக்கு வழங்கியுள்ளார்.

அவர் வழங்கியுள்ள ஆலோசனைகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது அணியில் உள்ள திறமையான வீரர்களை சரியாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸை தொடக்க வீரராக களமிறக்காமல், இன்னும் கூடுதலான வரிசையில் களமிறக்க முயற்சிக்க வேண்டும். தொடக்க ஆட்டத்துக்கு டி20 போட்டியைப் பொறுத்தவரை அதிரடியான தொடக்கமே ரன் குவிப்புக்கு வலுசேர்க்கும்.

4-வது வீரராக களமிறங்கிக்கொண்டிருக்கும் அம்பதி ராயுடுவை, தொடக்க வீரராக களமிறக்கி அதிரடி ஆட்டத்துக்கு பயன்படுத்தலாம். அதேபோல தோனியும், தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்து, கடைசி அதிரடி ஆட்டம் ஆடுவதைக் காட்டிலும், தொடக்கத்திலேயே அதிரடியைக் கையாள்வது எதிரணியின் திட்டங்களை சிதறடிக்கக்கூடும்.

குறிப்பிட்ட சில போட்டிகளாக ஆல்ரவுண்டர் பிராவோவை பயன்படுத்தாமல் தோனி இருந்து வருகிறார். மிகச்சிறந்த வீரர் பிராவோ அவரை 6-வது வரிசையில் களமிறக்கும்போது, அவர் சந்திக்கும் ஓவர்கள், பந்துகள் குறைவாக இருந்துவிடுகின்றன.

ஸ்டிரைக் ரேட் 196.66 வைத்துள்ள பிராவோவை முன்வரிசையில் களமிறக்குவதுதான் சிறந்ததாகும். கடந்த 9 போட்டிகளில் 6 போட்டிகள் மட்டுமே பிராவோவுக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் சரியாக அமையவில்லை. 118 ரன்கள் மட்டுமே பிராவோ சேர்த்துள்ளார்.

பிராவோவை முன்வரிசையில் களமிறக்கி, ஜடேஜாவை பின்வரிசையில் களமிறக்க தோனி முயற்சிக்க வேண்டும். ஆனால், இப்போது ஜடேஜாவுக்கு அதிகமான வாய்ப்புகளை தோனி கொடுத்து வரும் நிலையில், அதை பிராவோவுக்கு கொடுப்பது அணியின் ஸ்கோர் உயர்வுக்கு வழிவகுக்கும். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் திணறிவரும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிப்பதைக் காட்டிலும், பிராவோவை முன்னிலைப்படுத்துவது சிறப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article23782249.ece?homepage=true

இதை சொல்ல கவாஸ்கர் வேணுமா?

யாழ் கள மீராவே இதைத்தானே சொல்கிறார் ?திண்ணையில்

என்ன தோனி யாழ் கள உறுப்பினர் ஆகி திண்ணையை பார்க்க வேண்டும்..?

 

4 minutes ago, சுவைப்பிரியன் said:

அது தான் யோசித்துக் கொன்டிருக்கிறேன்.நான் மட்ச் முடிந்த பின் கொக்கரிக்கிற ஆள் தானே?.என்டாலும் இந்த முறை முருகனுக்குத்தான்.

ஓம் சுவைப்பிரியன் எங்க நேற்று tw_blush:காணவில்லை.

யாரோ அடி வாங்கின மாதிரி கிடந்தது மும்பைகாரர் இடம்.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.