Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது

Featured Replies

மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது

Yameen-Abdul.jpg?resize=800%2C450
மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது  செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது.

Yameen-Abdul-4.jpg?resize=687%2C457

இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன் பாராளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரச அலுவலகங்கள் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. நீதிபதிகளின் உத்தரவை ஏற்க கூடாது என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து ஐ.நா சபையும், சர்வதேச நாடுகளும் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஜனாதிபதி யாமீன் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சிகளால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால், எப்போது வேண்டுமானாலும் ராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், 15 நாட்கள் அவசரகால நிலையை ஜனாதிபதி யாமீன் பிரகடனப்படுத்தியுள்ளார்.  அதேவேளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பிர்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளதுடன் குடிமக்களின் அனைத்து அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Yameen-Abdul-2.jpg?resize=800%2C532Yameen-Abdul-7.jpeg?resize=647%2C363

http://globaltamilnews.net/2018/65457/

  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகார உலக நாடுகளின் அரசதலைவர் சங்கத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் அப்துல்லா யாமீனுக்கு வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்

மாலத் தீவில் 'அவசர நிலை': இந்தியர்களுக்கு முக்கிய அறிவுரை

99900027hi044546965jpg

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மாலத் தீவு அரசு 15 நாட்கள் அவசர நிலையைப் பிரகடனம் செய்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவை, அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது.

தலைமை நீதிபதி அப்துல்லா சையத் மற்றும் மற்றொரு நீதிபதியான அலி ஹமீத்தும் செவ்வாய்க்கிழமை அதிகாலை விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

விசாரணை மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் தரப்படவில்லை.

திங்கட்கிழமை மாலை நீதிமன்றத்தை போலீஸார் சுற்றி வளைத்தது முதல், மற்ற நீதிபதிகள் தங்களின் விருப்பத்திற்கு மாறாக நீதிமன்றத்திற்குள்ளே இருக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாலத் தீவு அரசு ஏற்கனவே 15 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளதுடன், முன்னாள் அதிபரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

99896462mediaitem99896461jpg

இந்த அவசர நிலை அறிவிப்பானது பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களைத் தருவதோடு சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யவும் உதவும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிநீக்கம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனால் அந்த 12 உறுப்பினர்களோடு எதிர் கட்சி பெரும்பான்மை பெரும் நிலை ஏற்பட்டது.

முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மீதான விசாரணை அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டது உச்சநீதிமன்றம். வெள்ளிக்கிழமை வெளியான உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த உறுதிமொழி தந்த காவல்துறை ஆணையரை அரசு பதவி நீக்கம் செய்தது. மேலும் மாலத் தீவுக்கு திரும்பிய இரண்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறை வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியர்கள் மாலத் தீவுக்கு தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனைத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article22664976.ece

  • தொடங்கியவர்

'மாலத்தீவில் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண இந்திய ராணுவ உதவி தேவை'

NASHEEDjpg

முன்னாள் அதிபர் நசீத்

மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இந்திய ராணுவத்தின் உதவி தேவை என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமத் நசீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதாக கூறி மாலத்தீவில் அவசர நிலை பிரகடனத்தை தற்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் நேற்றிரவு அறிவித்தார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி முகமது நசீத் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி ஏற்றார். அதன்பிறகு, நசீத் மற்றும் அவரது முக்கிய ஆதரவாளர்கள் 9 பேர் மீது தீவிரவாதிகளுடன் தொடர்பு, ஊழல், கொலை சதி உட்பட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டன. அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன்பின், உடல்நலக் குறைபாட்டை காரணம் காட்டி மாலத்தீவை விட்டு வெளியேறினார் நசீத். லண்டனில் சில காலம் தங்கியிருந்த நசீத், தற்போது இலங்கையில் தங்கியிருக்கிறார்.

இந்நிலையில், நசீத் உட்பட 9 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ''9 பேரையும் விடுவிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்'' என்று கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், அதிபர் யாமீனின் மாலத்தீவு முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி எழுப்பினர். இதனால் அதிபர் யாமீனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க அதிபர் யாமீன் மறுத்துவிட்டார். மேலும், உத்தரவைத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிபர் யாமீன் உத்தரவிட்டார். அதை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து அதிபர் யாமீனைப் பதவி நீக்கம் செய்யவோ அல்லது கைது செய்யவோ உச்ச நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது.நேற்றிரவு திடீரென மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் மாலத்தீவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இந்திய ராணுவம் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முகமத் நசீத் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆதரவாளர்கள் 9 பேரை விடுதலை செய்ய இந்திய ராணுவம் உதவ வேண்டும். அத்துடன் அமெரிக்க இதேபோல் அரசியல் குழப்பத்துக்குத் தீர்வு காண, இந்தியா உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/article22666836.ece

  • தொடங்கியவர்

''மாலத் தீவு நிலைமை குறித்து உன்னிப்பாக கவனிக்கிறோம்''- இந்தியா

மொஹம்மத் நஷீத்படத்தின் காப்புரிமைAFP/GETTY

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மாலத் தீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலையை மாலத் தீவு அரசு பிரகடனம் செய்துள்ளதால் நாங்கள் தொந்தரவு அடைந்துள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகள் கைதுகள் கவலை தருகின்றன. எங்கள் அரசு தொடர்ந்து உன்னிப்புடன் மாலத் தீவுகள் நிலையை கவனித்துவருகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அரசியல் நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கும் மாலத் தீவுகளில் மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என மாலத் தீவுகளின் முன்னாள் அதிபர் மொஹம்மத் நஷீத் அழைப்பு விடுத்தார்.

இந்தியா மாலத் தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு தலைவர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா தடை போடவேண்டும் எனவும் நஷீத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்ததையடுத்து கொந்தளிப்பு தொடங்கியது. போராட்டங்கள் வெடித்தது.

''நாம் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்'' என நஷீத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு அவசர நிலையை அறிவித்தது மட்டுமின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கைது செய்துள்ளது. கைது செய்ததற்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் சொல்லப்படவில்லை.

Security forces stand guard outside the Supreme Court in Male, Maldives, 5 Februaryபடத்தின் காப்புரிமைAFP

அரசின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்துள்ளன. அமெரிக்கா இந்நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதேவேளையில் அதிபர் யாமீன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி பேசுகையில் நீதிபதிகள் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்றார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்கள் மாலத் தீவுகளுக்கு அவசியமின்றி சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன.

முன்னாள் அதிபர் என்ன உதவி கேட்டார்?

ட்விட்டரில் நஷீத் எழுதுகையில் இந்திய அரசு ராணுவத்தோடு ஒரு தூதரை அனுப்பி அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கைதுகள் அரசியல் நெருக்கடிகளை மேலும் சிக்கலுக்குளாக்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MohamedNasheed
 
On behalf of Maldivian people we humbly request:
1. India to send envoy, backed by its military, to release judges & pol. detainees inc. Prez. Gayoom. We request a physical presence.
2. The US to stop all financial transactions of Maldives regime leaders going through US banks.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MohamedNasheed

''மாலத் தீவுகளின் மக்களின் சார்பாக எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால்'' எனத் துவங்கும் அந்த ட்வீட்டில் ''நாங்கள் இந்தியாவிடம் இருந்து இங்கே மனித இருப்பை கோருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

மாலத் தீவுபடத்தின் காப்புரிமைREUTERS

மேலும் அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத் தீவுகளின் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க அரசு முடக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

ஓர் அறிக்கையில் '' அதிபர் யாமீன் சட்டத்துக்கு புறம்பான நிலையில் ராணுவ ஆட்சியை அறிவித்து வரம்பு மீறியுள்ளார் . அவரை நாம் பதவியில் இருந்து நீக்கவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42966508

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நவீனன் said:

''மாலத் தீவு நிலைமை குறித்து உன்னிப்பாக கவனிக்கிறோம்''-

இந்தியா

சீனா அங்கை மாலைதீவிலை அத்திவாரம் போட்டு கோப்பிசமே போட்டுட்டுதாம்....இதுக்கை  வேறை மாலதீவை கிந்தியா   உன்னிப்பாய் கவனிக்குதாம்.
கிந்தியாவின்ரை கெப்பர் முழுக்க சினிமாவிலை மட்டும் தான்.....மிச்சம்  எல்லாம் பக்கோடாவிலைதான்....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு...உன்னிப்பாக இருக்குமோ?

main-qimg-656199b698e243558ad7e794db9dc3

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நவீனன் said:

''மாலத் தீவு நிலைமை குறித்து உன்னிப்பாக கவனிக்கிறோம்''- இந்தியா

மொஹம்மத் நஷீத்படத்தின் காப்புரிமைAFP/GETTY

உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்து மாலத் தீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலையை மாலத் தீவு அரசு பிரகடனம் செய்துள்ளதால் நாங்கள் தொந்தரவு அடைந்துள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகள் கைதுகள் கவலை தருகின்றன. எங்கள் அரசு தொடர்ந்து உன்னிப்புடன் மாலத் தீவுகள் நிலையை கவனித்துவருகிறது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக அரசியல் நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கும் மாலத் தீவுகளில் மற்ற நாடுகள் தலையிட வேண்டும் என மாலத் தீவுகளின் முன்னாள் அதிபர் மொஹம்மத் நஷீத் அழைப்பு விடுத்தார்.

இந்தியா மாலத் தீவுகளில் சிறை வைக்கப்பட்டவர்களை விடுவிக்க உதவ வேண்டும் என்றும் அந்நாட்டு தலைவர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா தடை போடவேண்டும் எனவும் நஷீத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி கருத்து வேறுபாடு கொண்ட அரசியல்வாதிகளை சிறையில் இருந்து விடுவிக்க தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் மறுத்ததையடுத்து கொந்தளிப்பு தொடங்கியது. போராட்டங்கள் வெடித்தது.

''நாம் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்'' என நஷீத் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசு அவசர நிலையை அறிவித்தது மட்டுமின்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் கைது செய்துள்ளது. கைது செய்ததற்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் சொல்லப்படவில்லை.

Security forces stand guard outside the Supreme Court in Male, Maldives, 5 Februaryபடத்தின் காப்புரிமைAFP

அரசின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்துள்ளன. அமெரிக்கா இந்நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது. அதேவேளையில் அதிபர் யாமீன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி பேசுகையில் நீதிபதிகள் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என்றார்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள், தங்களது குடிமக்கள் மாலத் தீவுகளுக்கு அவசியமின்றி சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளன.

முன்னாள் அதிபர் என்ன உதவி கேட்டார்?

ட்விட்டரில் நஷீத் எழுதுகையில் இந்திய அரசு ராணுவத்தோடு ஒரு தூதரை அனுப்பி அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கைதுகள் அரசியல் நெருக்கடிகளை மேலும் சிக்கலுக்குளாக்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @MohamedNasheed
 
On behalf of Maldivian people we humbly request:
1. India to send envoy, backed by its military, to release judges & pol. detainees inc. Prez. Gayoom. We request a physical presence.
2. The US to stop all financial transactions of Maldives regime leaders going through US banks.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @MohamedNasheed

''மாலத் தீவுகளின் மக்களின் சார்பாக எனது பணிவான வேண்டுகோள் என்னவென்றால்'' எனத் துவங்கும் அந்த ட்வீட்டில் ''நாங்கள் இந்தியாவிடம் இருந்து இங்கே மனித இருப்பை கோருகிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

மாலத் தீவுபடத்தின் காப்புரிமைREUTERS

மேலும் அமெரிக்க வங்கிகள் வழியாக மாலத் தீவுகளின் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளையும் அமெரிக்க அரசு முடக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .

ஓர் அறிக்கையில் '' அதிபர் யாமீன் சட்டத்துக்கு புறம்பான நிலையில் ராணுவ ஆட்சியை அறிவித்து வரம்பு மீறியுள்ளார் . அவரை நாம் பதவியில் இருந்து நீக்கவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42966508

சிறிலங்கா இராணுவத்திடம் உதவி கேட்டிருக்கலாம் பிரச்சனையை இலகுவாக முடித்திருப்பார்கள்

  • தொடங்கியவர்

என்ன நடக்கிறது மாலத்தீவில்? - அ முதல் ஃ வரை

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம் தனது அதிகாரத்தை இறுகப் பற்றி கொள்ள விரும்புவதால் அந்த தீவு தேசத்தில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் வளர்ந்து `அவசர நிலை` பிரகடனப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது.

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் கயூம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல, அப்துல்லா யாமீன் கயூம் அதிபராக பொறுப்பேற்றப் பின் 2013 ஆம் ஆண்டு ஒரு முறை அவசர நிலையை பிரகடனப்படுத்தி இருக்கிறார்.

என்ன நடக்கிறது அந்த தீவு தேசத்தில்?

பிப்ரவரி 5ஆம் தேதி அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கிய அப்துல்லா யாமீன், இந்நிலை 15 நாள் வரை தொடரும் என்று அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபரின் சகோதரருமான அப்துல்லா கயூம் கைது செய்யப்பட்டார்.

மாலத் தீவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்நாட்டின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது எதிர்கட்சி தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத புகாரினை ரத்து செய்து அண்மையில் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முகமது நஷீத் மாலத்தீவிலிருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பதவி பறிக்கப்பட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியது இந்த தீர்ப்பு.

இது மட்டுமல்லாமல், அந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் முகமது நஷீத், இந்த ஆண்டு அந்த நாட்டில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் தேர்தலில் போட்டியிட வழி வகை செய்தது இந்த தீர்ப்பு.

முகமது நஷீதை தனது போட்டியாளராக கருதுகிறார் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன்.

தொடரும் போராட்டம்

அப்துல்லா யாமீன் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டின் தலைநகர் மாலேவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மாலத்தீவு அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அவர் வளைந்து கொடுக்கவில்லை. இந்தப் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளார்.

யார் இந்த அப்துல்லா யாமீன்?

இப்போது அதிபராக இருக்கும் ஐம்பத்து எட்டு வயதான அப்துல்லா யாமீன் அந்த நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரின் தந்தை அப்துல் கயூம் இப்ராஹிம், மாலத்தீவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல். அவரின் சகோதரர் அப்துல் கயூம், அந்த தீவு தேசத்தில் அதிபராக 1978 முதல் 2008 வரை இருந்தவர். ஆசிய கண்டத்தில் அதிக நாட்கள் அதிகாரத்தில் இருந்த தலைவர்களில் அவரும் ஒருவர்.

மாலத் தீவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மாலத்தீவின் முற்போக்கு கட்சியின் உறுப்பினராக, 1993 ஆம் ஆண்டு, அப்துல்லா யாமீன் தனது அரசியல் அத்தியாயத்தை தொடங்கினார். பின் தெற்கு மிலாதுன்மடுலு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் அப்துல்லா.

பின், 2013 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்று அந்நாட்டின் அதிபரானார். இத்தேர்தலில் தோல்வியுற்ற முகமது நஷீதின் ஆதரவாளர்கள், அப்துல்லா யாமீன் பெற்ற வெற்றி மோசடிகளால் பெற்ற வெற்றி என்று கூறினர்.

அப்துல்லா லெபனானில் உள்ள பெய்ரூட் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக மேலாண்மையும், கலிஃபோர்னியாவில் உள்ள க்ளார்மொண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர்.

மாலத் தீவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சர்ச்சை நாயகன்

அப்துல்லாவின் அரசியல் வளர்ச்சி, சர்ச்சைகள் நிறைந்த ஒன்று. அவர் அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, மாலத்தீவின் ஜனநாயகத்தில் பல மாறுதல்களை கொண்டு வந்தார். தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக தனது அதிகாரத்தை பயன்படுத்த அவர் என்றும் தயங்கியதில்லை என்கிறது மாலத்தீவின் உள்ளூர் ஊடகமான அவாஸ்.

அப்துல்லாவின் அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்று வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று வாழ்ந்து வருகிறார்கள் அல்லது சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் மீதும் பயங்கரவாத குற்றசாட்டுகளை சுமத்திதான் சிறையில் அடைத்தார் அப்துல்லா. பிப்ரவரி 1-ஆம் தேதி அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவர்களை விடுவிக்கக் கோரி தீர்ப்பளித்தது.

என்ன சொல்கிறார்கள்?

அப்துல்லா யாமினின் எதிர்ப்பாளர்கள், அப்துல்லா சட்டத்தை மதிக்காதவர் என்று தொடர்ந்து தாக்கி வருகிறார்கள்.

அப்துல்லா மாலத்தீவை படுகுழியில் தள்ளிவிட்டதார் என்று முன்னாள் அதிபர் நஷீத் கூறியதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது அவாஸ்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி, நஷீத் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் அப்துல்லாவை பதவி விலக கோரி இருந்தார். நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பது ஆட்சிகவிழ்ப்புக்கு வழிவகுக்கும் என்று கூறி இருந்தார்.

முன்னாள் அதிபர் நஷீத்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"இப்போதைய அதிபர் வஞ்சகம் நிறைந்த, மோசமான அதிபர். அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாம் அனைத்து வகையிலும் முயற்சி செய்ய உறுதி எடுக்க வேண்டும். நாம் நிச்சயம் அதனை செய்வோம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் முகமத் கூறியதாக ராஜ்ஜி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அதே நேரம் அதிபரின் ஆதரவாளர்கள், இதனை மறுக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்புக்கும் அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற வாதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள்?

"அதிபர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பு கூறவில்லை." என்கிறார்கள்.

http://www.bbc.com/tamil/global-42962868

  • தொடங்கியவர்

மாலத்தீவு விவகாரத்தை தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட மோடி - ட்ரம்ப்!

பிரதமர் மோடியைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார். 

modi_trump_12306.jpg

மாலத்தீவில் ஏற்பட்டிருக்கும் உச்சகட்ட அரசியல் குழப்பத்தினால், மாலத்தீவு அதிபர் யாமீன் அங்கு அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இதனால், மாலத்தீவு தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதனிடையே, இந்த விவகாரத்தில் உதவுமாறு இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மாலத்தீவு விவகாரம்குறித்து பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசி மூலமாக ஆலோசனை நடத்தினார். 

இதுகுறித்து வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாலத்தீவில் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள்குறித்து இருதலைவர்களும் ஆலோசித்தனர். ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளை மாலத்தீவில் நிலைநாட்டவும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புகுறித்தும் இருவரும் ஆலோசித்தனர். இதுதொடர்பாக, ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கி டையே நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல, ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் தொடர்ந்து தங்களது பங்களிப்பை மேற்கொள்ளவும் இருவர் தரப்பிலும் முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/india/115925-pm-modi-donald-trump-over-phone-discuss-maldives.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.