Jump to content

தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்.

முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும்.

இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்றாம் கட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்சி அல்லது சுயேட்சை குழுக்களினால் பெற்ற வாக்குகள் வெவ்வேறாக எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும்போது சந்தேகம் தொடர்பாக ஏதேனும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுக்களின் முகவரினால் முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைவாக வாக்குகள் எண்ணும் முகவரினால் வாக்குகள் மீள எண்ணப்படும் . இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக வாக்குகள் இரண்டு தடவை மாத்திரமே எண்ணப்படும்.

 

http://oorukai.com/?p=1602

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளைக்கு...  7 மணிக்கு,  செய்ய இருந்த அலுவல் எல்லாவற்றையும் நிறுத்தி,
சம்பந்தன், சுமந்திரனுக்கு... தமிழ் மக்கள், தமது வாக்குகளால்...  கொடுக்கப் போகும்  மரண அடியை,
ரசித்து பார்க்க.... ஆவலாக உள்ளேன். :)

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜாக்பொட் விழப்போகின்றது என்று வாங்கி வைத்த ஐம்பது லொட்டரி ரிக்கெட்களையும், வென்றதைக் கொண்டாட வாங்கிய 24 பியர் கான்களையும்  வரிசையாக அடுக்கி வைத்துக் காத்திருந்த நண்பனின் நினைவுதான் வந்தது.

அடுத்தநாள் 24 பியர் கான்களும் காலியாக இருக்க சிங்கன் பித்தம் தெளிய இரண்டு நாள் எடுத்தது. 

தமிழ் சிறி அண்ணா எத்தனை கான் வாங்கப் போகின்றீர்கள்??

 

Bild könnte enthalten: Text

கிருபன் ஜீ....  புலிகள் ஆயுதத்தை,  கீழே வைத்த பின், 
தமிழ் மக்களுக்கு...  சம்பந்தன் கும்பல் செய்த துரோகங்களை, வரலாறு மன்னிக்காது.

நாளைக்கு... சம்மந்தன் கும்பல் தோற்றால், 
கிடாய் வெட்டி, ஊருக்கே... விருந்து வைக்க வேணும் போல் உள்ளது.
எக்ஸ்ராவாக... பியரும் கொடுக்கலாம். அவ்வளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.
ஆனால்.... தமிழ் மக்கள்,  "கூழ்  பானையில், விழும், "பல்லி "  தானே...". :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

 

Bild könnte enthalten: Text

கிருபன் ஜீ....  புலிகள் ஆயுதத்தை,  கீழே வைத்த பின், 
தமிழ் மக்களுக்கு...  சம்பந்தன் கும்பல் செய்த துரோகங்களை, வரலாறு மன்னிக்காது.

நாளைக்கு... சம்மந்தன் கும்பல் தோற்றால், 
கிடாய் வெட்டி, ஊருக்கே... விருந்து வைக்க வேணும் போல் உள்ளது.
எக்ஸ்ராவாக... பியரும் கொடுக்கலாம். அவ்வளவு சந்தோசமாக இருக்கும் எனக்கு.
ஆனால்.... தமிழ் மக்கள்,  "கூழ்  பானையில், விழும், "பல்லி "  தானே...". :grin:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ஆள் ஒண்டுக்கு மேல அடிக்கிறேல.

அது... அமெரிக்காவில், உள்ள ஈழப் பிரியனுக்கு  தெரியுறது. :grin:

2 hours ago, கிருபன் said:

?

அடி ஆத்தி. அவ்வளவு கட்டுப்பாடா!?

இங்கிலாந்தில் உள்ள, கிருபனுக்கு.... தெரியவில்லையோ..... :grin:
நாங்கள் இப்ப,  டயட்டில் இருக்கிறோம். :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இது உள்ளூராட்சித் தேர்தல்தானே. கூரை ஏறி கோழி பிடிக்க வழி தெரியாத மற்றைய கட்சிகள் வைகுண்டம் போகமுடியுமா என்ன? தமிழ் மக்கள் தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசைத்தான் தேர்வார்கள். என்ன கொஞ்ச சீட் குறையலாம்.?

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போன்றவர்கள் தான்.... சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டி.
அவர்கள்.... மகிந்தவுக்கும், மைத்திரிக்கும்..... மாறி, மாறி   தலை ஆட்டும்,  தற் குறிகள்.

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

எந்த தலைப்புக்களின் கீழும்  ஒரு கட்டுப்பாட்டுக்கு மேல் அதிகம் எழுதாத, கிருபனின்மேல்தான் பியர்கான் தொடர்பான சந்தேகம் எனக்கு <_< தமிழ்சிறி சார் எனக்கு தயங்காம ஒரு லைக் போடலாம் நீங்க, ஹெல்ப் பண்றோம்ல,,  உங்களுக்காக யாழின் மிக சிறந்த கருத்தாளர்களில் ஒருவரான கிருபன்கிட்ட மோதுறோம்ல <_<

வளவன் அண்ணா....  பகிடி, விடுகின்றீர்களா?
சிவனே... என்று இருந்த எனக்கு,  நீங்கள் இரண்டு பேரும்  தான், பிரஷர் ஏத்திநீங்கள்.
ஐ... திங்க்,   சம்  திங்க்  ரோங்.....   (நாங்களும்  இங்கிலீஸ் கதைப்பம்) :love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

நான் லொட்டரி எடுப்பதில்லை?

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது கஜேந்திரகுமாராவது வெல்லக்கூடும் என்று நினைத்தேன். அப்படி நடக்கவில்லை. தாயகத்தில் இருக்கும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் இருந்து எடைபோடமுடியாது.

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கக்கூடிய வசீகரமான தலைவர்கள்  வரும்வரை சம்பந்தரையும் சுமந்திரரையும் மக்கள் தூக்கியெறியமாட்டார்கள்.

அவர்களை தூக்கியெறிக்கூடாது ...ஆனால்  நாங்கள்(தாயகமக்கள்)நினைத்தால் தூக்கியெறிவோம் என ஒரு பயத்தை ஏற்படுத்த வேண்டும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

அதிலும்... பார்க்க, நாங்கள் நேரடியாகவே.....
ஸ்ரீலங்கா  ஐக்கிய தேசிய  கட்சியிலோ, ஸ்ரீமாவோவின்  சுதந்திர கட்சியிலிலோ இணைந்தால்....
நேரடி பலன், எமக்கு கிடைக்கும் தானே....   என்ன.... மாதிரி, உங்கள் ஐடியா?   

பிறகு என்ன... இழவுக்கு,  சம்பந்தனும், சந்திரனும் ... புறோக்கர்  வேலை பார்க்க வேணும். 
நான்... ரெடி, நீங்கள்... ரெடியா...? 

எனக்கும் சம்பந்தரையும் சுமந்திரரையும் அவர்கள் செய்யும்/செய்யாத அரசியலுக்காகப் பிடிப்பதில்லை.  தெரிந்தே தமிழ் மக்களை அரசியல் படுகுழியில் கொண்டுசென்று தள்ளுகின்றார்கள்.  

பிறரின் மகுடிக்கு ஆடும் பாம்புகள் அவர்கள். ஆனால் மக்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.