Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இருக்கை என்றால் என்ன ?

Posted on January 14, 2018 AuthorComments Offon தமிழ் இருக்கை என்றால் என்ன ?

தமிழ் என்றால்  நம்ம எல்லோருக்கும் தெரியும்.அதென்ன தமிழ் இருக்கை ?

பல்கலைகழகங்களில் ஒரு துறை தொடர்பான விடயத்தை கற்பிக்க பீடங்களை அமைப்பார்கள் அல்லவா ? அது போன்ற ஒரு ஒதுக்கீடு தான் இந்த இருக்கை.வெறும் கற்றல் கற்பித்தலுக்கு மட்டுமல்ல  அதையும் தாண்டி குறித்த துறை தொடபான ஆய்வுகள் ,மாநாடுகளை இவிருக்கை முன்னெடுக்கும்.இதற்கான விதை இடப்பட்டு அததற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

ஏன் தமிழுக்கு இப்படியொருமுன்னெடுப்பு தேவை தானா ?

தமிழ் ஏற்றகனவே பிரபலயமான மொழி தானே ? இதற்க்கு எதற்கு என்று கேட்டு ஒதுக்கி விட முடியாது.காரணம் இன்றைய தமிழர்கள் கூட தமிழின் நுணுக்கங்கள் ? அதன் வரலாறு போன்றவற்றை இன்னும் முழுமையாக அறிந்து வைத்து இருக்கவில்லை.

என்றோ தோன்றிய நம் தமிழ் மொழி அன்றே ஒலி அறிவியல் ,உடல் கூறு அறிவியல் என பல தந்திரங்களை தன்னகத்தே கொண்டு தான் இன்று எம்மை அடைந்து இருக்கிறது.அதன் பெருமை இரகசியம் வரலாறு என்பவற்றை மேலும் அறிந்து கொள்ள கண்டிப்பாக  இப்படியான  ஒரு தமிழ் இருக்கை தேவை தான்.அதுவும் சகல வசதிகள் தொழில்நுட்ப சாத்தியங்கள் கிடைக்க கூடிய ,அவற்றை பயன்படுத்தும் அங்கீகாரம் உடைய ஒரு இடத்தில் இருப்பது இன்னும் சிறந்தது.

அந்த வகையில் தமிழ் இருக்கை அமைக்க தெரிவு செய்யப்பட்டு இருக்கும் இடம் மிக சிறந்த தெரிவு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை

ஹார்வார்டு பல்கலைக்கழகம் உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 382 ஆண்டுகள் (2018) பழமையான இது  அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம். நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கி வழங்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்துக்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உள்ளன. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று இருப்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழாய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.மேலும் தமிழ்,தமிழர்கள்     தொடர்பான ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்தவும்,குறித்த ஆய்வுகள் உலகால் அங்கீரிகப்படும் நிலையை உருவாக்கும்.

சரி இந்த கருத்து /முயற்சி எங்கு யாரால் ஆரம்பிக்கப்பட்டது?

வைதேகி ஹெர்பர்ட் - தமிழ் இருக்கை வைதேகி ஹெர்பர்ட்

ஒருவர் பதினெட்டு சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருகின்றார்  என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம்.அமெரிக்க ஹவாய் தீவில் வசிக்கின்ற வைதேகி ஹெர்பர்ட் என்பவர்  இந்த சாதனையை ,சேவையை ஏற்கனவே      செய்து இருக்கின்றார். ஐவரும் அமெரிக்காவில் இருக்கும்.மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்கான அழைப்புக் கிடைத்தது. ஜானகிராமனும், அவரது நண்பரான திருஞானசம்பந்தமும் சந்திப்பில் கலந்துகொண்டனர். இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாகத் தமிழுக்கு ஒரு இருக்கையை நிறுவுவதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகம் முன்வந்தது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகக் கொடுக்கப்படவேண்டும்.

குறித்த தொகைக்காக தான் சமுக வலைத்தளங்கள் உட்பட பலவகையில் நிதி கோரப்படுகின்றது.குறித்த தமிழ் இருக்கை தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுபர்களால் உத்தியோக பூர்வ இனையத்தளம்நடத்தப்படுகின்றது.

இணையத்தள இணைப்பு http://harvardtamilchair.org இங்கே சொடுக்கவும் 

இன்றைய நிலைப்பாட்டை பொறுத்த வரை 6 மில்லியன் அமெரிக்க டாலரில் 4.85 மில்லியன் அமெரிக்க டாலர் சேர்ந்து உள்ளது.இத்தனை கோடி தமிழர்கள் இருக்கின்றோம் .முடியாதா ?   என்ன ?

பிராந்திய ரீதியான உத்தியோக பூர்வ தொடர்புகளை இங்கே நீங்கள் பெற்று கொள்ள முடியும்.

http://harvardtamilchair.org/state-chapters

குறித்த தமிழ் இருக்கை தொடர்பாக உத்தியோக பூர்வமாக ஒரு பாடலை தமிழ் இருக்கை கீதம் என உருவாக்கி இருகின்றார்கள்.

http://thuruvi.com/தமிழ்-இருக்கை-என்றால்-என/

மேலும் இணைப்புகள் https://ta.wikipedia.org/wiki/ஹார்வார்டு_பல்கலைக்கழகத்தில்_தமிழ்_இருக்கை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோராலும் பார்க்கப்பட வேண்டியது. வேறு இனத்தவர்கள் எம் வரலாற்றையும் தொன்மையையும் எழுதுவதற்கு அனுமதிக்க முடியாது. இவ்வாறே எமது வரலாறு பிரித்தானியரால் திரிக்கப்பட்டு, புதைக்கப்பட்டது.  

உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும், மற்றும் தாம் படித்தோர் என்று தம் பெருமை பேசுபவர்களிடமும் வெளிப்படுத்துங்கள்.

மேலுள்ள காணொலி இன்று எமது பாடசாலை வாட்ஸ் அப் குழுமத்தில் பகிரப்பட்டது. கட்டாயம் எல்லோரும் பார்க்கவேண்டிய ஒரு காணொலி என்று நான் நினைக்கின்றேன்.

இங்கே காணொலியில் கூறப்படும் ஒரு விடயம் என்ன என்றால் இந்தப்பல்கலைக்கழகம் தமிழ் ஆவணங்களை digitize செய்தால் எவ்வாறான ஆபத்துக்கள் வரும் என்பது. நிச்சயம் இது சிந்தித்து பார்க்கப்படவேண்டிய ஒரு விடயம்.

ஹார்வாட் பல்கலைக்கழகம் மேட்டுக்குடிகளின் ஓர் கெளரவ ஸ்தானம். நோபல் பரிசுகளை ஹார்வாட் மாத்திரம் பெறவில்லை. அமெரிக்காவுக்கு வெளியில்  உள்ள பல்கலைக்கழகங்களும் பெறுகின்றன. தவிர, நோபல் பரிசே ஒரு பித்தலாட்டம். அது திறமைசாலிகளை பார்த்து கொடுக்கப்படுவது இல்லை, தமக்கு தேவையானவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. இந்தவகையில் ஹார்வாட் நிறைய நோபல் பரிசுகள் எல்லாம் பெறுகின்றது.. எனவே, அங்கு தமிழுக்கு நாங்களும் ஒரு இடத்தை பிடிக்கவேண்டும் என்பது சில மேட்டுக்குடி சிந்தனையாளர்களின் விருப்பமாய் இருக்கலாம்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை உண்மையில் தமிழை வளர்க்குமா அல்லது அழிக்குமா என்று மேலுள்ள காணொலியை பார்த்தபின்பு என்னால் கூறமுடியவில்லை.

கட்டாயம் எல்லோரும் ஒரு தடவை பாருங்கள், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி~!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கலைஞன் said:

கலைஞன் எனது மகள் யுபென் என்ற யூனியில் படிக்கும் போது இரண்டாவது பாசை என்பதில் தமிழ் இருந்தது.படித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருக்கும் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் விளங்கி கொள்வதற்கு அறிவியல் சொத்து பற்றிய புரிதல் வேண்டும்.  

இதில் இருக்கும் முக்கியமான பிரச்னை யார் துணிவது உண்மை என்பதை வெளி உலகு ஏற்றுக் கொள்ளும் என்பதே.

தற்போது தமிழ் அறிஞர்கள் துணிவதே (விஞ்ஞான ஆராய்ச்சி அடிப்படையில்) உண்மை என்பது வெளி உலகு ஏற்கும், ஏனெனில் தமிழர்களிடமே தமிழின் வரலாறு, மானிடவியல், தொல்பொருள், மொழியியல் தடயங்கள் தமிழர்களிடமே உள்ளன.

ஹார்வாட்ர்ட் தமிழின் தொன்மை பற்றி துணிந்து சொல்வதை பரந்த உலகு ஏற்குமாயினும், ஹாவர்டிடம் அந்த தடயங்கள் இல்லை.

இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கை தோற்றத்தில் செய்யப்படும் தவறு என்னவென்றால், தமிழின் தொன்மையையும், வரலாற்றையும் துணிவதத்திற்கும்,  ஓர் தமிழ் சாராத அமைப்பிடம்  எதுவித மேற்பார்வையும். கட்டுப்பாடுகளுமின்றி தமிழ் அறிஞர்களே அனுமதி வழங்குவது.

அதில் ஆபத்து என்னவென்றால், ஹார்வர்ட் தமிழ் இருக்கை  தமிழை பற்றி சொல்வதை ஏனைய அறிஞர், கல்விமான்கள், புத்திஜீவிகளில் பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வார்கள். நாளடைவில், ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழை பற்றி சொல்வது பரந்து, வியாபித்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாக (அப்படி இல்லாவிட்டாலும்) மாறிவிடும் அல்லது மாற்றப்படும்.    

Dr. ஷிவா ஐயாத்துரை, ஹார்வர்ட்இன் இயங்கு முறையை ஏற்றுக்கொள்ளவிட்டாலும்,  தமிழ் இருக்கை எவ்வாறு, யாரால் இயக்கப்பட போகிறது என்பதை பற்றியே மிகவும் கரிசனையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.     

Dr. ஷிவா ஐயாத்துரை, ஹார்வர்ட் சீன இருக்கையும், அதன் இயங்கு கட்டுப்பாடுகளையும் மேற்கோள் காட்டியே, ஹார்வர்ட் தமிழ் இருக்கையில் உள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

இதை பற்றிய பிறிதொரு கண்ணோட்டம்.

Edited by Kadancha
change font style.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கலைஞன் எனது மகள் யுபென் என்ற யூனியில் படிக்கும் போது இரண்டாவது பாசை என்பதில் தமிழ் இருந்தது.படித்தார்.

இதை நீங்கள் இங்கு எழுதுவதற்கு காரணம்?

22 hours ago, ஈழப்பிரியன் said:

கலைஞன் எனது மகள் யுபென் என்ற யூனியில் படிக்கும் போது இரண்டாவது பாசை என்பதில் தமிழ் இருந்தது.படித்தார்.

இவர்கள் ஹார்வாட் தமிழ் இருக்கை வந்துதான் இனி தமிழ் வளரப்போகிது எனும்படியல்லவோ கூவுகின்றார்கள்.

எமது ஈழத்தமிழ் தனித்துவம் மிக்கது. நாங்கள் ஏன் யாழ் பல்கலைக்கழத்தில் இப்படி செய்யக்கூடாது? மேலுள்ள காணொலிகளை பார்க்கும்போது இந்தியர்களின் நிகழ்ச்சிநிரல் விளங்குகின்றது. இது ஈழத்தமிழர்களுக்கு எவ்விதம் நன்மை பயக்கப்போகின்றது? ஈழத்தமிழர்கள் நாங்கள் எமது தனித்துவம் மிக்க தமிழை யாழ் பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாக்கலாமே.

இங்கு கனடாவில் ஹார்வாட் தமிழ் இருக்கைக்கு பெருத்த எடுப்பில் ஈழத்தமிழர்களிடம் ஆதரவு கேட்கப்படுகின்றது. எங்கள் தமிழ் இருக்கை யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கியதாக அமையலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கலைஞன் said:

கலைஞன்...எமது கண் முன்னாலேயே...எமது வரலாற்றுச் சுவடுகள்...அழிந்து போவதைக் காணும் தலைமுறை எம்முடையது!

முன்னர் ..யாழ்ப்பாணம் பிரதான வீதியில்..ஒரு நூதனசாலை இருந்தது!

அங்கு ஏராளமான சைவ மத....புத்த மதச் சுவடுகள்...தொல்லியல் சின்னங்கள் நிறைய இருந்தன!

அந்தச் சின்ன வயசிலேயே...(?) பல விடயங்களை நானும்...நண்பர்களும் அவதானித்து இருந்தோம்!

அங்கிருந்த புத்தர் சிலைகள் பலவற்றின் பாதங்கள்...எமது சைவத் தெய்வங்களின் பாதங்களைப் போல அழகாக இருந்தன!

எனினும் சிங்களப் பகுதிகளிலிருக்கும் நூதன சாலைகளில் உள்ள புத்தர்களின் பாதங்கள்..பெரும்பாலும்...யாழ்ப்பாணத்து மலசலகூடங்களின் படிகளைப் போல...வெட்டி அமைந்திருக்கும்!

இவையெல்லாம்...எம்மிடையே பௌத்தம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்!

இவை எல்லாம் இப்போ எங்கே போய் விட்டன என்று தெரியாது!

இதே போலவே...இந்தியாவில் சான்றுகள்...திட்டமிட்டு அழிக்கப்படும் போது ....ஈழத்திலும் அவை மறைந்து விடும் சாத்தியங்களே அதிகம் உண்டு! அந்த அழிவுகளை...இந்தியாவே...முன்னின்று நடத்தும்!

இறுதிக் கடற்கோளின் போது....தென்னிந்தியக் கடல் வெகுதூரத்துக்குத் தற்காலிகமாகப் பின் வாங்கியது! அப்போது..கோவில்களும்..நகர அமைப்புகளும்..கடலினுள் இருந்து வெளியே தெரிந்தன!

அடுத்த சில நாட்களுக்கு ...இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு...அந்தப் பகுதியில்...அவரச வேலை இருந்தது!

எனவே....இந்தியாவிலும்...ஈழத்திலும்....ஒரே நேரத்தில்....சுவடுகளின் அழிவு நிறுத்தப்பட வேண்டும்!

http://www.downtoearth.org.in/coverage/tsunami-uncovers-ancient-sculptures-in-mahabalipuram-in-tamil-nadu-8006

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கலைஞன் said:

இவர்கள் ஹார்வாட் தமிழ் இருக்கை வந்துதான் இனி தமிழ் வளரப்போகிது எனும்படியல்லவோ கூவுகின்றார்கள்.

எமது ஈழத்தமிழ் தனித்துவம் மிக்கது. நாங்கள் ஏன் யாழ் பல்கலைக்கழத்தில் இப்படி செய்யக்கூடாது? மேலுள்ள காணொலிகளை பார்க்கும்போது இந்தியர்களின் நிகழ்ச்சிநிரல் விளங்குகின்றது. இது ஈழத்தமிழர்களுக்கு எவ்விதம் நன்மை பயக்கப்போகின்றது? ஈழத்தமிழர்கள் நாங்கள் எமது தனித்துவம் மிக்க தமிழை யாழ் பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தி பாதுகாக்கலாமே.

இங்கு கனடாவில் ஹார்வாட் தமிழ் இருக்கைக்கு பெருத்த எடுப்பில் ஈழத்தமிழர்களிடம் ஆதரவு கேட்கப்படுகின்றது. எங்கள் தமிழ் இருக்கை யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கியதாக அமையலாமே.

யாழ் நூலகத்தை எரித்து கலாச்சார கொலைகள் செய்தவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தை அழிக்க எவ்வளவு நேரமாகும், அதை தடுக்க அங்கிருக்கும் மக்களுக்கு சக்தி இருக்கிறதா..? தொல்லியல் சான்றுகளை அந்நியர் ஆக்கிரமிப்பிலிருந்து தடுத்து சேமிக்க இன்னமும் தமிழர்களுக்கு நம்பிக்கையான இடம் அமையவில்லை. அது பற்றி தற்பொழுது அக்கறையும் சற்று குறைவு.

புங்கையூரன், ராஜவன்னியன்,

ஆவணங்களை பேணி பாதுகாப்பதற்கு யாழ்ப்பாணம் லாயக்கு அற்றது என்றால் அது எப்படி மக்கள் வாழ்வதற்கு தகுந்த பிரதேசமாகலாம்?  இப்படி பார்த்தால் இலங்கையில் தமிழர்கள் வாழவே முடியாதே. ஆனால், வாழ்ந்துகொண்டுதானே இருக்கின்றார்கள். 

ஒன்லைனில் ஆவணங்களை பதிவேற்றுவது, பகிர்வது இதுபற்றி மேலே முதலாவது காணொலியில் கலாநிதி சிவா ஐயாத்துரை அவர்கள் விபரிக்கின்றார். இந்த வழி பயன்படலாம் ஈழத்தமிழர்களுக்கு.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.