Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள்

Featured Replies

இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள்

 

குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்பட்டக் கருத்துக்களும் தெரிவிக்கப்படுகின்றன.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இந்தியாவில் தனி நாடு கோரும் சீக்கிய பிரிவினைவாதிகள் பலருக்கு கனடா பிரதம் தனது அமைச்சரவையில் இடமளித்துள்ளார் என்பதும் அவர்கள் அனைவரும் தற்போது அவருடன் இந்தியா வந்துள்ளார்கள் என்பதும் இதுவே இந்தியப் பிரதமர் கனடா பிரதமரை வரவேற்கச் செல்லாததன் பின்னணியாக இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகமும் பெரிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி 1.4 மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வசிக்கும் நிலையில் பொறுப்பேற்ற பிறகு இதுவரை கனடா பிரதமர் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

ஆனால் இதைப்பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்ளாத கனடா பிரதமர், இந்தியாவில் கால் பதித்ததும் இந்திய முறைப்படி அவரும் அவரது மொத்தக்குடும்பமும் வணக்கம் என கை குவித்து வணங்கியது அற்புதமான காட்சியாக இருந்தது.

அதுமட்டுமின்றி அவரது இளைய மகனான 3 வயது Hadrien, இந்தியப் பயணத்தை வெகுவாக ரசிக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பூங்கொத்து ஒன்றை அம்மாவிடம் கொடுக்காமல் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவன் நடக்க அவன் பெற்றோர் மெதுவாக அவன் பின்னே நடப்பது காண்போர் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இரு நாட்டுப் பிரதமர்களும் சிவில் அணு ஆயுத ஒத்துழைப்பு, விண்வெளி, பாதுகாப்பு, ஆற்றல் மற்றும் கல்வி தொடர்பான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com/canada/03/172307?ref=tamilwin

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் வேறை ஒன்றும் நினைத்திருக்கமாட்டான்     பாம்பாட்டி கூட்டம் இன்னும் அறிவில் வளரவில்லை என்று நினைத்திருப்பான். 

(பொற்கோவில் சின்குகளின் கிட்டத்தட்ட நம்மடை யாழ் நூலகம் போன்றதை கிந்தி வல்லாதிக்கம் இந்திராவின் தலைமையில் எரித்தபின்னர் பழையதை விட மிக திறமாக சேமிப்பு கருவூலம் ஒன்றை கனடாவில் கட்டமைத்து உள்ளார்கள் பொற்கோவில் அடிபாட்டு சிங்குகள் அநேகர் கனடா புகலிடம் ) இங்கு  நாம் ஒவ்வொன்றாய் மறக்கடிக்கப்பட்டு கொண்டு உள்ளோம் உதாரணத்துக்கு 85ல் நடந்த கொக்கிளாய் சண்டை போன்ற விபரங்கள் வலை உலகில் இருந்து காணாமல் போயுள்ளன .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ragunathan said:

நன்றி ரகுநாதன் மேலும் தமிழில் கொக்கிளாய் நோக்கி என எழுதபட்ட புத்தகம் யாரிடமும் எடுக்கலாமா ?

85களில் அந்த தாக்குதல் பலரின்  கடுமையான  விமர்சனத்தை கொண்டு வந்தது. அந்த புத்தகம் வந்து பலரின் வாயை மூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தாக்குதலில் பங்குகொண்ட ஒருவர் இங்கே இருக்கிறார். அவரிடம் இத்தாக்குதல் பற்றி பேசியிருக்கிறேன். புலிகளின் இழப்பு என்று இங்கே கூறப்படும் 16 என்பது சரியானதுதான். தாக்குதலில் ஈடுபட்ட அணி கடுமையான சேதங்களுக்கு உள்ளானதாக அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ராணுவ இழப்புகள் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன். 

நீங்கள் கூறிய கொக்கிளாய் நோக்கி என்கிற புத்தகம் பற்றிக் கேட்டுப் பார்க்கிறேன், சிலவேளை அவர் அறிந்திருக்கலாம்.

டர்ந்த காடுகளூடு நாட்கணக்கில் ஆயுதங்களையும், உணவுப் பொட்டலங்களையும் சுமந்துகொண்டு இரவு பகலாக தாம் முகாம் நோக்கிப் பயணித்ததுபற்றி அடிக்கடி உணர்வு பொங்கப் பேசுவார்.

நீங்கள் கேட்டதன்பிறகு அவரிடமிருந்து இன்னும் சில தகவலக்ளை பெற முடியுமா என்று பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவர்களை இந்தியாவுக்கு பிடிக்காதே, பிரதமர் Justin Trudeau , அரசியல் விவகாரங்களை கடந்து ஒரு மனிதனாக எவ்வளவு அற்புதமான, எளிமையான, நாகரிகமான மனிதன், மேற்கத்தையே நாகரிகத்தில் பிறந்தாலும் சிம்பிளான குடும்ப தலைவர்..

சொந்த குடிமக்களுக்கே கழிப்பறை கட்டி கொடுக்காமல், அந்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழும் அரசியல்வியாதிகள் வாழும் இந்தியா எனும்  நாட்டிலிருந்து ,  பல லட்சம் இந்தியர்களை தனது நாட்டுக்கு அழைத்து,கல்வி,வியாபாரம்,முதலீடு என்று வாழ்வும் வளமும் தரும் கனேடிய நாட்டின் உன்னத தலைவர் , அவரை அவமதிப்பது உங்களுக்கு மட்டுமே பெருமையாக இருக்கும்,

ஆனால் அவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தெரியாது, ஏனென்றால் வெள்ளைக்காரர்கள் ‘இவர்கள் இப்படித்தான்’ என்று அனைவரையும் புரிந்து வைத்திருப்பவர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

கொக்கிளாய் நோக்கி எனும் புத்தகம் அல்லது  PDF ஆக இருப்பது நல்லது .

7 minutes ago, பெருமாள் said:

கொக்கிளாய் நோக்கி எனும் புத்தகம் அல்லது  PDF ஆக இருப்பது நல்லது .

கொக்கிளாய் நோக்கி என்பது சரியா பெருமாள். 

விடியலுக்கு முந்திய மரணங்கள் என்று நினைக்கின்றேன். https://www.scribd.com/document/368448133/விடிவிற-கு-முந-திய-மரணங-கள

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, மோகன் said:

கொக்கிளாய் நோக்கி என்பது சரியா பெருமாள். 

விடியலுக்கு முந்திய மரணங்கள் என்று நினைக்கின்றேன். https://www.scribd.com/document/368448133/விடிவிற-கு-முந-திய-மரணங-கள

நன்றி மோகன் பிழையான தலைப்பாக இருக்கலாம் நண்பர் ஒருவர் இடம் விசாரித்தபோது கொக்கிளாய் நோக்கி என்று வரணும் தேடிப்பார் என்று விட்டார் மீண்டும் நன்றி .

  • தொடங்கியவர்

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

 

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

தாஜ்மஹால் ட்ரிப்... சபர்மதி விசிட்... கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவின் இந்திய டூர்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு வருகை புரிந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா?

 

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழக்கமாக மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளும் நாடுகளில் எப்போதும் பெரும் வரவேற்பைப் பெறுவது மட்டுமல்லாமல் தலைப்புச் செய்திகளிலும் தவறாமல் இடம்பெறும். ஆனால், இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணம் அவ்வளவு ஒன்றும் உவப்பானதாக இல்லை.

ஜஸ்டின் ட்ரூடோபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜஸ்டின் ட்ரூடோ

தாஜ் மஹால் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது குடும்பத்தினர் சென்றபோது இந்திய அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலராலும் அவர் புறக்கணிப்புக்கு உள்ளானார்.

அவர் டெல்லி வந்து சேர்ந்தபோது கீழ்நிலையில் உள்ள அமைச்சரான வேளாண்மைத் துறை இணை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வரவேற்றது அவரை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோதி பல தருணங்களில் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை நேரில் சென்று வரவேற்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார். தனது வெளிநாட்டு சகாக்களை அவர் கட்டியணைத்து வரவேற்கவும் செய்வார்.

மிகச் சமீபமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் நேரில் சென்று, விமான நிலையத்தில் கட்டியணைத்து வரவேற்றார்.

ஆனால், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மோதி அவரை இன்னும் நேரில் சந்திக்கக் கூட இல்லை. திங்களன்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு ட்ரூடோ சென்றபோது, அங்கும் பிரதமர் மோதி செல்லவில்லை.

பிரதமர் மட்டுமல்ல, ஞாயிறன்று ட்ரூடோ தாஜ் மஹால் சென்றபோது, அந்த உலகப் பாரம்பரிய சின்னம் அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சரும் அவரைச் சந்திக்கவில்லை.

Canadian Prime Minister Justin Trudeau Taj Mahal in Agra, India,படத்தின் காப்புரிமைEPA

ஒரு கீழ்நிலையுள்ள அமைச்சரை ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்க அனுப்பிவைத்தது நிச்சயமாக அவரை அவமதிக்கும் செயல் என்று பிபிசியிடம் கூறினார் பொருளாதார வல்லுனரும், பத்தி எழுத்தாளருமான விவேக் தெஹேஜியா.

"இந்திய மாநிலமான பஞ்சாபை தனியாகப் பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு அமைக்கக் கோரும் காலிஸ்தான் இயக்கத்துடன் ட்ரூடோவின் அரசில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்புடன் இருப்பதே காரணம்,"என்று அவர் கூறுகிறார்.

கனடாவில் வாழும் சீக்கியர்கள் ட்ரூடோவின் தாராளவாதக் கட்சிக்கு பெரும் வாக்கு வங்கியாக உள்ளனர். சில அமைச்சர்கள் காலிஸ்தான் பிரிவினைவாதிகளிடம் நெருக்கமானவர்களாக உள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்ற நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்ற நரேந்திர மோதி

கடந்த 1985இல் 329 பேர் கொல்லப்பட்ட கனடாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான குண்டு வெடிப்பில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனட அதிகாரிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு சீக்கியர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

'காலிஸ்தான் ஆதரவாளர்' என்று காரணம் கூறி, ஏப்ரில் 2016இல் இந்தியா வந்த கனடப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்-ஐ பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் சந்திக்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Canadian Prime Minister Justin Trudeauபடத்தின் காப்புரிமைREUTERS

கனடப் பிரதமர் இந்தியா வந்தபோது அவமானப்படுத்தப்படவில்லை என்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் கனடாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

"மத்திய அமைச்சரவையின் ஒரு உறுப்பினர் அவரை வரவேற்க வேண்டும் எனும் விதிமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சில வெளிநாட்டு தலைவர்களை மோதி நேரில் சென்று வரவேற்றார் என்பதற்காக எல்லோரையும் அவ்வாறே வரவேற்க முடியாது," என்கிறார் அவர்.

"காலிஸ்தான் குறித்த இந்தியாவின் கவலைகளை கனடாவின் உயர் மட்டத்தில் இருப்பவர்களிடம் எழுப்பாமல், ட்ரூடோவின் வருகையை, காலிஸ்தான் குறித்த கனடாவின் நிலைப்பாடு குறித்து முன்முடிவுடன் அணுகக்கூடாது," என்று பிபிசியிடம் தெரிவித்தார் முன்னாள் வெளியுறவு அதிகாரி கன்வல் சிபல்.

"உள்நாட்டு அரசியல் காரணங்களால் காலிஸ்தான் பிரிவினைக்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை. எனினும், ட்ரூடோவின் இந்தப் பயணத்தை கனடா செயல்படுவதற்கான உத்தரவாதம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும்," என்றார் அவர்.

Canada's Defence Minister Harjit Singh Sajjan (படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionகடந்த ஆண்டு இந்தியா வந்திருந்தார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன்

ஜஸ்டின் ட்ரூடோ அவமானப்படுத்தப்படவில்லை என்று கருதும் சிபல் சமீபத்தில் இரு நாட்டு உறவுகளும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறுகிறார்.

இந்தியாவுக்கு அணுமின் உற்பத்திக்காக யுரேனியம் அளிக்க 2015இல் கனடா உடன்படிக்கை செய்துகொண்டது இருநாட்டு உறவுகளில் முக்கியத்துவம்வாய்ந்த முன்னேற்றமாகக் கருதப்பட்டது.

கீழ்நிலை அமைச்சர் ஒருவர் வரவேற்க அனுப்பட்டது பெரிதுபடுத்தப்படுவதாகக் கூறும் சிபல், "ஒரு அரசுமுறைப் பயணத்தை சீரழிக்க யாரும் விரும்ப மாட்டார்கள். இருநாட்டு நலன் கருதி அதை வெற்றியடையச் செய்யவே விரும்புவார்கள்," என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-43114273

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளில் உள்ள தலைவர்களில் எனக்கு கனடிய பிரமரை மட்டும் ஏன் பிடிக்கிறது என்று மட்டும்  தெரியவில்லை ஒரு வேளை ஈழ த்தமிழ் மக்களை அள்ளி அணைத்துக்கொண்டவர் என்ற ரீதியிலா அல்லது அவரின் சிறந்த ஆளுமையையா என தெரியவில்லை 

வாழ்த்துக்கள் பிரதமர் இந்தியாவை விட உங்கள் குடும்பம் அழகாக இருக்கிறது :100_pray:

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் முதல் இணைத்த செய்திகளின் பின் ஒரு சில கருத்தாடல்கள் நடைபெற்றன அதன் பின் கருத்துக்கள் வளரும் நேரம் மேல் இணைத்த அதே செய்திகளை கீழே இணைத்து கருத்துக்களை நீர்த்து போக செய்கிறிர்கள் யாழின் அநேக திரிகள் இப்படி உங்களால் மலுங்கடிக்கபடுது என்பதாவது உங்களுக்கு புரியுதா ? 

  • கருத்துக்கள உறவுகள்

2017 இல் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் 1984 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசினால் திட்டமிடப்பட்ட வகையில் சீக்கிய இனத்தவர் மீது நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்று தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 

இம்மானிலத்தில் ஆட்சியில் இருப்பது தற்போதைய பிரதமரின் கட்சியென்பதும், பிரதமர் சுதந்திர காலிஸ்த்தான் விரும்புவோரின்மேல் பரிவான கருத்தைக் கொண்டுள்ளார் என்பதும் பல இந்திய தேசியவாதிகளுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அடிப்படையிலேயே தற்ப்பொது பிரதமரின் இந்திய விஜயமும் பார்க்கப்பட வேண்டும். 

தொடர்ச்சியான இந்திய அரசுகளின் திட்டமிட்ட அழுத்தங்களினாலும், ஆக்கிரமிப்புப் போக்கினாலும் பஞ்சாப்பில் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கும் சுதந்திர காலிஸ்த்தான் வேட்கையை கனடாவில் துளிர்விட வைக்கும் முயற்சியை பிரதமரும் அவரது கட்சியும் ஆதரிக்கின்றனர் என்பதே போலித்தேசியவாத ஹிந்தி வெறியர்களின் கோபத்திற்குக் காரணமாகியிருக்கிறது.

தியுடோர் போன்ற நியாயமான பிரதமர்களின் இருப்பென்பது பாதிக்கப்பட்ட பல தேசிய இங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது இந்திய மற்றும் இலங்கைபோன்ற பேரினவாத ஏகாதிபத்தியங்களுக்குச் சவாலாகவே இருக்கப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் சுதந்திரக் காலிஸ்த்தான் வேணும் என்ப்கிற சர்வஜ வாக்கெடுப்பினை கனடாவில் நடத்துவதற்கு அங்குள்ள சுதந்திரக் காலிஸ்த்தானை விரும்புவோர் முற்பட்டு வருகையில், அதை எப்படியாவது தடுத்து நிறுத்த இந்திய அரசு முயன்று வருகிறது.

உள் நாட்டில் சீக்கியர்களின் குரலினை நசுக்கி வெற்றி கண்ட இந்திய அரசுகள், கனடாவிலிருந்து சுதந்திர தாகம் ஒலிப்பதைத் தடுக்க முடியாமல் இருப்பது வேடிக்கை.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அதே மாநிலத்தில் யாழ் பெரியாஸ்பத்திரி படுகொலைகள் பிரம்படி போன்ற படுகொலைகளை கிந்திய இன அழிப்பு என்று  வழக்கு தொடரனும் பலன்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்துக்கு பயன்படும் .

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப்  முதலமைச்சரை ஜஸ்டின் ரூடோ இன்று சந்திக்கிறார் என  நினைக்கிறேன்.

57 minutes ago, பெருமாள் said:

அப்படியே அதே மாநிலத்தில் யாழ் பெரியாஸ்பத்திரி படுகொலைகள் பிரம்படி போன்ற படுகொலைகளை கிந்திய இன அழிப்பு என்று  வழக்கு தொடரனும் பலன்கள் பெரிதாக இல்லாவிட்டாலும் எதிர்காலத்துக்கு பயன்படும் .

நீங்கள் சொல்வது நல்ல விசயம். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்ப்பார்ப்பதை விட இனவழிப்பு சம்பவங்களை சர்வதேசத்தில் எங்கெல்லாம் வழக்காக பதிவுசெய்ய முடியுமோ அங்கெல்லாம் பதிவு செய்தல் எதிர்காலத் தலமுறைக்கு அவசியமானது. பதிவுசெய்த வழக்குகளை அடிப்படையாக்கொண்ட வரலாற்றுப் பதிவுகளே சிறிதளவேனும கவனத்தில் வரும். 

  • தொடங்கியவர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் விருந்தில் கலந்துகொள்ளும் திருநங்கை மாணவர்

 
அ-அ+

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள உள்ளார். #JustinTrudeau

 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் விருந்தில் கலந்துகொள்ளும் திருநங்கை மாணவர்
 
சண்டிகர்:
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் நேற்று தாஜ்மஹாலுக்கு சென்று சுற்றிப்பார்த்தார். குஜராத் மாநிலம் சமர்பதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு இன்று சென்ற ஜஸ்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று கண்டு களித்தார். பின்னர், பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அவர் புறப்பட்டார்.
 
அப்போது விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவரை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
மனித உரிமைகள் மற்றும் கடமைகள் படித்து வரும் தனஞ்ஜெய் சக்‌ஷாம் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருகிறார். இதன் மூலம் திருநங்கைகளுக்கு பல உதவிகள் அவர்களின் நலனுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கனடா தூதர் நாதிர் படேலை தனஞ்ஜெய் அழைத்திருந்தார்.
 
இதன் காரணமாக, தற்போது ஜஸ்டின் உடன் விருந்து உண்பதற்காக தனஞ்ஜெய் சவுஹானுக்கு கனடா தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. #JustinTrudeau #TamilNews

https://www.maalaimalar.com/News/TopNews/2018/02/19203837/1146713/PU-transgender-student-to-join-Canadian-PM-for-dinner.vpf

  • தொடங்கியவர்

வரும் 21-ம் தேதி பஞ்சாப் முதல்வரை அமிர்தசரஸ் நகரில் சந்திக்கிறார் கனடா பிரதமர்  

 

 
panjab_cm

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்  இந்தியா வந்துள்ளார்.

 கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின்றன. 

மேலும் அவர் வரும் 21ம் தேதி பஞ்சாப் முதலவர்  அமரீந்தர் சிங்கை அமிர்தசரஸ் நகரில் சந்தித்க்க உள்ளார்.  பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், தில்லி ஜும்மா மசூதியையும் அவர் பார்வையிடுகிறார். 

http://www.dinamani.com/latest-news/2018/feb/19/canadian-prime-minister-justintrudeau-to-meet-punjab-cm-captain-amarinder-singh-on-february-21-in-amritsar-2866466.html

  • தொடங்கியவர்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

 

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

இந்திய நாட்டின் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்தியா சென்றார் கனடாவின் பிரதமர் Justin Trudeau. அங்கு சென்ற பிரதமர் முதலில் டெல்லியில் உள்ள காதல் சின்னமான தாஜ் மஹாலிற்கு குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து, வட இந்தியாவில் உள்ள வணிகத் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை சந்தித்துள்ளார் பிரதமர். மேலும், மும்பை சென்ற அவர் பாலிவுட் பிரபலங்களை சந்தித்தார்.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

அதில் ஷாருக்கான், அமீர் கான், ஃபர்ஹான் அக்தர் மற்றும் அனுப்பம் கெர் ஆகிய பிரபலங்களுடன் Justin Trudeau எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய உடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து பல பிரபலங்களை சந்தித்து கனடாவின் சினிமா துறை பற்றியும் பேசியுள்ளார் பிரதமர் Justin Trudeau.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

மேலும், இவரை சந்தித்த கோலிவுட் நடிகர் மாதவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்: உங்களை சந்தித்தது மகிழ்ச்சி, இப்போது தான் தெரிகிறது உங்களுக்கு ஏன் இவ்வளவு புகழ் இருக்கிறது என்று., இவ்வளவு எளிமையாக, வெளிப்படையாக, அழகாக பழகும் நீங்கள் என்னை கவர்ந்துவிட்டீர்கள். மேலும், உங்களின் அடுத்து வரக்கூடிய சுற்றுலா பயணங்களும் நன்றாக அமைய நான் விரும்புகிறேன், என்று பதிவு செய்துள்ளார் மாதவன். இவ்வாறு பல பிரபலங்களும் பிரதமர் Justin Trudeau-வை சந்தித்தது குறித்து சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நமது கனடாவின் பிரதமர் ஜஸ்டின், இந்தியாவில் தற்போது இங்கு தான் இருக்கிறாராம்.!

https://news.ibctamil.com/ta/world-affairs/Justin-Trudeau-went-india-for-tour

 

 

 

என் குழந்தைகளுக்கு இந்தியாவின் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்கிறேன்' - கனடா பிரதமர் நெகிழ்ச்சி!

 
 

இந்தியாவின் பன்முகத்தன்மையை என் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் தெரிவித்துள்ளார். 

 

ஜஸ்டின் ட்ரூடேவ்

 

ஒருவார கால சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ், குஜராத் சபர்மதி ஆசிரமம், தாஜ்மகால் என விசிட் அடித்துக்கொண்டிருக்கிறார். இதேபோல், பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், அமீர் கான், அனுபம் கெர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசிய அவர், மும்பையில் நேற்று நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்திலும் பங்கேற்றார். 

 

அப்போது, "இந்தச் சுற்றுப்பயணத்தின் மூலம் என் குழந்தைகளுக்கு நான் காட்ட விரும்பிய விஷயங்களில் ஒன்று, இந்தியாவின் பன்முகத்தன்மை. இங்கே மசூதிக்குச் செல்ல முடியும் அதே வேளையில் கோயிலுக்கும் செல்ல முடிகிறது. இது இந்தியாவின் சிறப்புக்குரிய பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நான் ஆசிரியராக இருந்ததால் இதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இங்கே என் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களிடம் இந்தியா குறித்துப் பகிர்ந்து கொள்வது பெருமையாக இருக்கிறது. இந்தியா - கனடா உறவுகளை மேலும் வளப்பதற்கு இப்பயணம் உதவும். ஒன்றுபட்ட இந்தியா தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட போராடி வருகிறது" என்றார். 

https://www.vikatan.com/news/india/117071-india-visit-has-helped-us-to-learn-the-diversity-of-the-country-says-canadian-pm-justin-trudeau.html

 

 

 

அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் வழிபாடு

 
அ-அ+

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலில் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். #JustinTrudeau

 
 
 
 
அமிர்தசரஸ் பொற்கோவிலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் வழிபாடு
 
சண்டிகர்:
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். பின்னர், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார்.
 
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்தடைந்த அவர் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை சந்தித்து பேசினார். இதனை அடுத்து, அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தினருடன் சென்றார். 
 
201802211335054557_1_amrii._L_styvpf.jpg
 
அங்கு சிறப்பு வழிபாடு நடத்திய அவர் பின்னர் உணவு தயாராகும் இடத்திற்கு சென்று சப்பாத்தி செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
#JustinTrudeau #TamilNews
 

 

Edited by நவீனன்

On 2/20/2018 at 3:49 AM, பெருமாள் said:

நவீனன் நீங்கள் முதல் இணைத்த செய்திகளின் பின் ஒரு சில கருத்தாடல்கள் நடைபெற்றன அதன் பின் கருத்துக்கள் வளரும் நேரம் மேல் இணைத்த அதே செய்திகளை கீழே இணைத்து கருத்துக்களை நீர்த்து போக செய்கிறிர்கள் யாழின் அநேக திரிகள் இப்படி உங்களால் மலுங்கடிக்கபடுது என்பதாவது உங்களுக்கு புரியுதா ? 

நவீனன் இணைக்கும் செய்திகள் பெரும்பாலும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த ஒரே செய்திகள். இச்செய்திகளை நவீனன் வாசிக்கிறாரோ என்பது சந்தேகம்தான்.  யாழ் இணையம் என்பது கருத்துக்களம். கருத்துக்களை எழுத ஊக்குவிக்கப்பட வேண்டுமேயன்றி , அதனை தீர்ந்து போக செய்யக்கூடாது. எங்களுக்கு செய்திகளும் வேண்டும். அதேநேரத்தில் கருத்துக்களும் வேண்டும்.  அண்மைக்காலங்களில் கருத்துக்கள் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கியமாக நவீனன் அதே செய்திகளை மறுபடியும் இணைப்பது ஒருகாரணம்.  இதே போல கதை கதையாம் பகுதியில், ஏனைய தளங்களில் இருந்து பிரதி செய்யப்படும் பதிவுகள் தோட்டத்து மல்லிகையில் இணைக்கபடல் வேண்டும். ஆனால் நவினன் பெரும்பாலும் அங்கு இணைப்பதில்லை. நாம் முற்றத்து மல்லிகையினை ஊக்குவிக்க வேண்டும். அண்மைக்காலங்களில் சொந்த ஆக்கங்கள் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.  முன்பு அரசியல் அலசல் பகுதியில் பலர் கருத்துக்கள் எழுதுவதுண்டு.  இப்பொழுது அங்கும் கருத்துக்கள் ஒருவரும் எழுதுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.