Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூதாகாரமாக மாறும் லண்டன் விவகாரம்! இலங்கைக்கு தப்பியோடிய பிரிக்கேடியர்! வலைவீசும் பிரித்தானியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூதாகாரமாக மாறும் லண்டன் விவகாரம்! இலங்கைக்கு தப்பியோடிய பிரிக்கேடியர்! வலைவீசும் பிரித்தானியா

Report us Vethu 6 hours ago

சமகாலத்தில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கு இடையில் ராஜதந்திர ரீதியான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரின் பதவி விலகல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

லண்டனில் செயற்படும் இலங்கைத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இதனை மறுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, அவர் அடுத்த மாதம் 31ம் திகதி வரையில் பதவியில் தொடர்வார் என அறிவித்துள்ளது.

திருமதி அமரி விஜேவர்தன பதவிக் காலம் அடுத்த மாதம் இறுதியில் நிறைவடையவுள்ள நிலையில், அவரின் பதவி விலகல் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் சமகாலத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த அமரி விஜேவர்தன, ராஜினமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

கடந்த நான்காம் திகதி லண்டன் தூதரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கொலை செய்யப் போவதாக, இராணுவ அதிகாரியான பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தியிருந்தார்.

அவரின் செயற்பாடு பிரித்தானியா உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சர்வதேச ரீதியதாக இலங்கை மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரித்தானியா அறிவித்துள்ளது.

பிரிகேடியரின் செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்படாமல், அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக உயர்ஸ்தானிகர் அமரி விஜேவர்தன கடும் அதிருப்தி வெளியிட்டார். இதற்கு பிரதான காரணமாக பிரித்தானிய அரசாங்கத்தின் செயற்பாடு உள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் பாராட்டப்படாத நபராக (person not appreciated) பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார். இதன் காரணமாக பிரியங்க அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தண்டனை பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதனை உணர்ந்து கொண்ட இலங்கை அரசாங்கம் பிரிகேடியரை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தற்போது அவசரமாக இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிகேடியர் பெர்ணான்டோவை இலங்கைக்கு மீண்டும் அழைத்து அவரை பாதுகாத்தமையினால், இலங்கைக்கு எதிராக பிரித்தானியா அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

திருமதி அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/uk/01/175123?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für பிரியங்க பெர்னாண்டோ

ஒரு.... கோழியின், முட்டையில்..  பொரித்து, வளர்ந்த,   குஞ்சுகள் தான்....
இங்கிலாந்து, இலங்கை, இந்தியா.... எல்லாம்.

செய்தியை... வாசிக்க, நன்றாக உள்ளது. :)
ஆனால்... இவை எல்லாவற்றையும், வெட்டி ஆடும்... சக்தி ஸ்ரீலங்காவுக்கு உள்ளது என்ற,
கசப்பான உண்மையை... நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

கள்ள கடவுச் சீட்டில், இங்கிலாந்துக்கு வந்த, கருணாவை ஒரு கிழமை மறியலில் வைத்து விட்டு,
மற்ற தமிழ் கைதிகள்...  "சுடு தண்ணியால்"  ஊற்ரி, சித்திரவதை செய்கிறார்கள் என்று, அவரை.. பாதுகாப்பாக ஸ்ரீ லங்காவுக்கு அனுப்பியதும், இந்த இங்கிலாந்து தான்.

ஆரம்பத்தில்... சும்மா.... ரீல்  விடுவார்கள். பின்பு... சனம் ஓய்ந்த பின்.....
பிரியங்க பெர்னாண்டோ... ஸ்ரீலங்காவின்  ஒரு பாராளுமன்ற உறுப்பினாக வர சந்தர்ப்பம் உள்ளது.

Bildergebnis für rajiv attacked in sri lanka

ராஜீவ்  காந்திக்கு.... பிடரியில் அடித்த, சிங்களவனும்... பிற்காலத்தில்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதை... நாம் மறக்கவில்லை.    

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

ஆனால்... இவை எல்லாவற்றையும், வெட்டி ஆடும்... சக்தி ஸ்ரீலங்காவுக்கு உள்ளது என்ற,
கசப்பான உண்மையை... நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

ஸ்ரீ லங்கா அரசு புலம்பெயர் தமிழரிலும் பார்க்க சக்தி மிக்க அரசு என்ற உண்மையை தமிழ் மக்கள் இன்றாவது புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.

55 minutes ago, தமிழ் சிறி said:

ஆரம்பத்தில்... சும்மா.... ரீல்  விடுவார்கள். பின்பு... சனம் ஓய்ந்த பின்.....
பிரியங்க பெர்னாண்டோ... ஸ்ரீலங்காவின்  ஒரு பாராளுமன்ற உறுப்பினாக வர சந்தர்ப்பம் உள்ளது.    

"சனம் ஓய்ந்த பின்" என்று எழுதி இருக்கிறீர்களே? ஏன் வாக்கு போடும் சனம் ஓய்ந்து போகிறது? ஓயாமல் கேட்டால் பயன் கிடைக்காதா?  இங்கிலாந்திலேயே இங்கிலாந்து குடிமக்களை மிரட்டியாதாக பிரச்சாரம் செய்து, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தை காட்டி, முக்கியமான தேவையான நிரந்தர தீர்வுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆதரவை பெற்று பொருளாதார அணுகுமுறைகள் மூலம் வெற்றி பெற முயற்சிக்கலாம், இல்லையா?

55 minutes ago, தமிழ் சிறி said:

ராஜீவ்  காந்திக்கு.... பிடரியில் அடித்த, சிங்களவனும்... பிற்காலத்தில்  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பதை... நாம் மறக்கவில்லை.    

இந்தியாவில் புலம்பெயர் தமிழருக்கு உள்ள வாக்கு பலம் தெரிந்தது தானே? செல்வாக்கு இல்லாத இடத்தில் எதை தான் செய்ய முடியும்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Jude said:

ஸ்ரீ லங்கா அரசு புலம்பெயர் தமிழரிலும் பார்க்க சக்தி மிக்க அரசு என்ற உண்மையை தமிழ் மக்கள் இன்றாவது புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.

"சனம் ஓய்ந்த பின்" என்று எழுதி இருக்கிறீர்களே? ஏன் வாக்கு போடும் சனம் ஓய்ந்து போகிறது? ஓயாமல் கேட்டால் பயன் கிடைக்காதா?  இங்கிலாந்திலேயே இங்கிலாந்து குடிமக்களை மிரட்டியாதாக பிரச்சாரம் செய்து, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தை காட்டி, முக்கியமான தேவையான நிரந்தர தீர்வுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆதரவை பெற்று பொருளாதார அணுகுமுறைகள் மூலம் வெற்றி பெற முயற்சிக்கலாம், இல்லையா?

இந்தியாவில் புலம்பெயர் தமிழருக்கு உள்ள வாக்கு பலம் தெரிந்தது தானே? செல்வாக்கு இல்லாத இடத்தில் எதை தான் செய்ய முடியும்?

இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை.  ஜூட்.
யாருக்காக... வக்காலத்து வாங்க,  இந்த.. எடுப்பு, எடுக்கின்றீர்கள்? 

தமிழருக்கு  இப்போ... இருக்கும்,  அவ மரியாதையை... அறியாமல், 
முட்டாள்  தனமான கருத்துக்கள், எழுதுவது  உங்களுக்குத் தான்,   பொருத்தமானது என்பதை...
மீண்டும், மீண்டும்...  நினைவு ஊட்டிக்  கொண்டிருப்பதை நினைத்து....
சிரிப்பு... வருவதை, தவிர்க்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

 தீமை கட்டுக்கடங்காமல்   வளர்ந்துள்ளது, அதனை கட்டுப்படுத்தமுடியாத நிலையில்    அதற்கு பாதுகாப்பு  வழங்கப்படுகிறது என்கின்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. மற்றவர்கள் என்ன செய்யவேண்டும்  என்பதை சொல்வதை விட்டு நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை நாம் செய்வதோடு மற்றவர்களையும் இணைய வைக்கலாம். ஆனால் நாம் யோசனை வைப்பதும், தோற்றுப்போனால் குத்திக்காடுவதையுமே  பொழுது போக்காகக் கொண்டுள்ளோம் .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்  புலிகள்  இருந்த....  நல்ல, சந்தர்ப்பங்களை எல்லாம் இழந்து..... 
கிழக்கில்... வெளிச்சம், வடக்கில்... வசந்தம்  என்ற....
கோசத்துடன் ... ஆரம்பித்த,  ஓட்டுக் குழுக்களின் கோசம்..... 
இப்ப... எங்கே, எங்களை, கொண்டு நிறுத்தி வைத்திருக்கின்றது? என்று... 
உங்களது... மனச்  சாட்சியை தட்டிக் கேளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஸ்ரீ லங்கா அரசு புலம்பெயர் தமிழரிலும் பார்க்க சக்தி மிக்க அரசு என்ற உண்மையை தமிழ் மக்கள் இன்றாவது புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.

ஒரு அரசையும் அதன் சிறுபான்மை மக்களையும் (புலம்பெயர்ந்த அல்லது நாட்டில் வாழும்)ஒப்பிட்ட உங்கள் அறிவை மெச்சுகிறேன்.tw_blush:

Quote

சனம் ஓய்ந்த பின்" என்று எழுதி இருக்கிறீர்களே? ஏன் வாக்கு போடும் சனம் ஓய்ந்து போகிறது? ஓயாமல் கேட்டால் பயன் கிடைக்காதா?  இங்கிலாந்திலேயே இங்கிலாந்து குடிமக்களை மிரட்டியாதாக பிரச்சாரம் செய்து, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தை காட்டி, முக்கியமான தேவையான நிரந்தர தீர்வுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆதரவை பெற்று பொருளாதார அணுகுமுறைகள் மூலம் வெற்றி பெற முயற்சிக்கலாம், இல்லையா?

கனடாவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு என்ன தீர்வு கிடைத்தது??

  • கருத்துக்கள உறவுகள்
On 2/23/2018 at 3:52 PM, தமிழ் சிறி said:

ஆனால்... இவை எல்லாவற்றையும், வெட்டி ஆடும்... சக்தி ஸ்ரீலங்காவுக்கு உள்ளது என்ற,
கசப்பான உண்மையை... நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.  

22 hours ago, nunavilan said:

ஒரு அரசையும் அதன் சிறுபான்மை மக்களையும் (புலம்பெயர்ந்த அல்லது நாட்டில் வாழும்)ஒப்பிட்ட உங்கள் அறிவை மெச்சுகிறேன்.tw_blush:

22 hours ago, nunavilan said:

கனடாவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கு என்ன தீர்வு கிடைத்தது??

எந்த நாட்டு தேர்தலில் இந்த மக்கள் வாக்கு போடுபவர்கள்? அமெரிக்க தேர்தலிலா அல்லது கனேடிய தேர்தலிலா? எந்த போராட்டத்தையும் தோற்கும் வழியில் செய்வதில் எமது மக்கள் சாதனைகள் பல செய்து இருக்கிறார்கள் என்பதை சொல்கிறீர்கள். நான் மறுக்கவா போகிறேன்?

  • கருத்துக்கள உறவுகள்
On 2/24/2018 at 12:02 AM, தமிழ் சிறி said:

இப்ப... உங்களுக்கு, என்ன பிரச்சினை.  ஜூட்.
யாருக்காக... வக்காலத்து வாங்க,  இந்த.. எடுப்பு, எடுக்கின்றீர்கள்? 

தமிழருக்கு  இப்போ... இருக்கும்,  அவ மரியாதையை... அறியாமல், 
முட்டாள்  தனமான கருத்துக்கள், எழுதுவது  உங்களுக்குத் தான்,   பொருத்தமானது என்பதை...
மீண்டும், மீண்டும்...  நினைவு ஊட்டிக்  கொண்டிருப்பதை நினைத்து....
சிரிப்பு... வருவதை, தவிர்க்க முடியவில்லை. 

சரியாய்  சொன்னீர்கள் சிறி.. சிலருக்கு எதை எங்கு எழுதுவது என்ற அடிப்படை அறிவே இல்லை போலுள்ளது. எங்கு அடி  பட்டாலும் பின்னங்காலை தூக்கும் ****** போல .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.