Jump to content

கப்பல்பயணியின் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

எனது அன்பு தமிழ் உள்ளங்களுக்கு,

83 கலவரத்தின் போது,

என் பள்ளியிலே அகதிகளாக வந்து படித்த ஈழத்தமிழ் மாணவர்களுடன் மிகுந்த அன்புடன் பழகியவன் என்ற முறையிலும்,

பள்ளி மூடப்பட்ட நீண்ட விடுமுறைக் காலங்களிலே ,தன் வகுப்பிலே மாணவனாகப் படித்த ஈழத்தமிழ் மாணவனும் அவனது தம்பியும் போக இடமின்றித் தவித்த போது, தன் வீட்டிற்குக் கூட்டிச்சென்று தன்

குடும்ப சகிதமாக அன்புடன் பராமரித்த ஒரு எளியவரின் மகன் என்ற முறையிலும்,

ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளை சிறு வயது முதலே உன்னிப்பாகக் கவனித்து அந்த மக்களுக்காக பரிதாபம் மட்டுமே பட முடிந்ததே என்ற வருத்தத்தில் இருப்பவன் என்ற முறையிலும்

தமிழ்ப்போராளிகள் வெல்லும் செய்திகளை மிகுந்த கழிப்புடன் படித்து வருபவன் என்ற முறையிலும்

எங்கள் தமிழகத்திலே சினிமா/அரசியல் என்ற இரு பெயர்களிலே நடக்கும் தமிழ்ப் பயங்கரவாதத்தின் சூழலில் அனுபவப்பட்டவன் என்ற முறையிலும்

தமிழ் என்ற சொல்லை உலகம் முழுமைக்கும் பரவ விட்டு,மொழி,பண்பாடு,கலாச்சார?்தை உண்மையாக பிரதிபலிக்கக் கூடிய ஈழத்தமிழினத்தைப் பார்த்துபெருமை அடைபவன் என்ற முறையிலும்,

நான் உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்வு கொள்கிறேன்.

என்னுடைய கருத்துக்களையும் உணர்வுகளையும் உங்களுடன் பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நட்புடன்,

கப்பல்பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் கப்பல்! :lol::lol:

என்ன மாப்ள!

என்னை வரவேற்காமல் நான் பயணிக்கும் கப்பலை வரவேற்கிறீங்க?? :D

Posted

வணக்கம் கப்பல் பயணி வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Posted

வணக்கம்..வாருங்கள் :lol: தொடர்ந்து களத்தில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்..

Posted

வாருங்கள் பயணி. கப்பலை விட யாழில் நிரந்தரமாகப் பயணிக்க எனது வாழ்த்துக்கள்.

Posted

வணக்கம் கப்பல், ஒரு மூத்தவர் அதுவும் அயலவர் நம் கூட பயணிப்பதில் நமக்குத்தானே பெருமை, வரவேற்கிண்றோம்

Posted

வாங்க பயணி அவர்களெ, உங்கள் வரவு நல் வரவு ஆகட்டும்.

Posted

வருக நண்பரே உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம்... வாருங்கள்...அறிமுகமே நல்லா எழுதி இருக்கீங்க.. உங்க கருத்துக்களை ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருக வருக என இருகங்கூப்பி உங்களை வரவேற்கின்றோம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ கப்பல்பயணி :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் கப்பல், ஒரு மூத்தவர் அதுவும் அயலவர் நம் கூட பயணிப்பதில் நமக்குத்தானே பெருமை, வரவேற்கிண்றோம்

வானவில்,

மூத்தவர் என்று சொல்லி என்னைக் கிழவனாக்கியதற்கும்,அயலவர் என்று சொல்லி யாழ் மனதில்(மண்ணில் அல்ல !!! )அனுமதிக்காது, என் கப்பலோடு என்னையும் மனத் துறைமுகத்திலேயே நிறுத்தி விட்டதற்கும் நன்றி!!

Posted

வணக்கம் சகோதரா...எல்லோருடனும் சேர்ந்து நானும் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்சியடைகிறேன். வாருங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களுடன் மோதுவோம் தளத்தில்.

Posted

தமிழ் நண்பா,

உங்கள் பங்களிப்பு இங்கே காயப்பட்ட எம் தோழர்களுக்கு போடப்படும் மருந்து போன்றது. 82 களில் உங்கள் பாசரையில் உங்கள் மண்வாசனையில் வாழ்ந்து வந்தவர்கள் கட்டிய புலிப்பாசரையில் இருந்து நான் கூறுகிறேன். உங்கள் ஆதரவு விலைமதிக்கமுடியாதவை. விஞ்ஞான உலகில் கொடிகட்டிப்பறக்கும் உங்களிப்போன்றவர்களில் கள வருகை என்னைப்போன்ற விஞ்ஞானம் பற்றிய சிறிய அறிவு கொண்ட பலரை அறிவாளியாக்கட்டும்.

வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் யாழ் களபங்களிப்பு.

Posted

வானவில்,

மூத்தவர் என்று சொல்லி என்னைக் கிழவனாக்கியதற்கும்,அயலவர் என்று சொல்லி யாழ் மனதில்(மண்ணில் அல்ல !!! )அனுமதிக்காது, என் கப்பலோடு என்னையும் மனத் துறைமுகத்திலேயே நிறுத்தி விட்டதற்கும் நன்றி!!

கப்பல் உங்களை நான் கிழவனென்று சொல்லவில்லை, நம்மைவிட வயது மூத்தவர் என்ற ரீதியில்தான் மூத்தவர் என்று சொன்னேன் 83கலவரங்களின் போது இந்தவுலகத்தில் நானில்லை, அயலவர்களிற்க்கு உள்ளே வர அனுமதியிருக்கிண்ரது நண்பரே

Posted

அப்ப நான் சொல்லப்போற சில சுவாரஸ்ஸ இயக்க உறுப்பினர்கள் கதைகள் உங்களுக்கு பிடிக்கும் இல்லையா வானவில். 83 ல் நான் இப்ப நீங்கள் இருந்து தமிழீழத்துக்கு உதவுவது போல நானும் இருந்தேன் இன்றும் குடும்பம், வாழ்க்கை, சோதனைகள், போராட்டங்கள் என்று வரும் போதும் அயராது நிற்கின்றேன் என்று சொன்னால் போட்ட அத்திவாரம் நல்ல உறுதி. அது போல நீங்களும் , மற்றவர்களும் இருக்க வாழ்த்துக்கள். என் வயது நீங்கள் வர நான் இருக்கிறேனோ தெரியாது ஆனா தமிழீழம் கட்டாயம் உருவாகி இருக்கும் என்பது மட்டும் தெரியும். :(

Posted

அப்ப நான் சொல்லப்போற சில சுவாரஸ்ஸ இயக்க உறுப்பினர்கள் கதைகள் உங்களுக்கு பிடிக்கும் இல்லையா வானவில். 83 ல் நான் இப்ப நீங்கள் இருந்து தமிழீழத்துக்கு உதவுவது போல நானும் இருந்தேன் இன்றும் குடும்பம், வாழ்க்கை, சோதனைகள், போராட்டங்கள் என்று வரும் போதும் அயராது நிற்கின்றேன் என்று சொன்னால் போட்ட அத்திவாரம் நல்ல உறுதி. அது போல நீங்களும் , மற்றவர்களும் இருக்க வாழ்த்துக்கள். என் வயது நீங்கள் வர நான் இருக்கிறேனோ தெரியாது ஆனா தமிழீழம் கட்டாயம் உருவாகி இருக்கும் என்பது மட்டும் தெரியும். :lol:

ஏன் உங்களுக்கு எத்தினை வயது தாத்தா???

கிழட்டு காங்கில சேருங்கோ lol

யாரு நம்ம சின்னப்பு,குமரசாமி டாட்டா,கறுப்பி பாட்டி,கந்தப்பு என ஒரு காங்கே இருக்கு

Posted

83 ல் ஏல் பரீட்ச்சை கெமிஸ்ட்ரி பாடத்துக்கு முன்னால யாழ் சாவகச்சேரி முன்னள் பொருப்பாளர் மேஜர் கேடியுடன் சேர்ந்து ஓகானிக் மாற்றீடுகள், பாஸ் பேப்பர் எம்.சி.கூக்கள் என்று கதைத்துக்கொண்டு இருக்கேக்க. இரவு 10 மணி. அப்ப இடைவேளை என்றா மொக்கன் கடை என்ற இடத்துக்கு யாழ் மத்திய கல்லூரி தாண்டி லைபிறரி அடியால தான் போறனாங்கள். மணிக்கூட்டு சந்தியில கதைத்துக்கொண்டு சைக்கிள் மித்தித்துக்கொண்டு வந்த கேடியினை திடீரனக் காணவில்லை. அதன் பின்பு நான் மனதுக்குள் ஏதோ குறிப்பால் உணர்ந்து மற்றவர்களுக்கு சொனனேன். நாள கெமிஸ்ட்ரி நடவாது என்று நினைக்கிறேன் என்று சொக்கிவிட்டு போய்விட்டோம். அதன் பின்பு அன்றிரவு 10.30 மணி போல பெரும் குண்டு வெடிப்பு. அப்ப பாருங்கள் கடைசிநிமிடத்தில் திருநெல்வேலிச்சந்திக்கு நைசாக கிட்ட போய் சென்றி பார்த்து விட்டு

துணிகரமாக எம்மையும் இழுத்துக்கொண்டு போனதில் இருந்து என் தமிழீழ போராட்ட ஆதரவு தொடங்கியது. அப்ப எனக்கு 17 வயசு என்றா கணக்குப்பாருமன். இப்ப நான் வயதில் மூத்தவன் ஆனால் போராட்டாஅறிவில் தான் என்னும் எனக்குக் குளப்பம்!!.முன்னம் ஒவ்வொரு புலி வீரர்களும் ஒவ்வொரு விவேகானந்தர்கள். கதைப்பதென்பதே அரிது. காரீயக்காரர். இப்ப உம்மைப்போல என்று வையுமன்.

ஆகவே தான் கப்பல் பயணி போன்ற ஆட்களினால் தான் இப்படியான மனிதர்கள் உருவாக்கப்பட இந்தியாவில் பல பாசரைகள் அமைக்கப்பட்டன. அப்ப நான் 83 கடைசியில் லோக்கல் ரெயினிங் எடுத்தது நல்லூர் சைவமங்கயர் கழக பாடச்சாலையில் எதற்காக சென்றி பார்க்க தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தமிழ் நண்பா,

உங்கள் பங்களிப்பு இங்கே காயப்பட்ட எம் தோழர்களுக்கு போடப்படும் மருந்து போன்றது. 82 களில் உங்கள் பாசரையில் உங்கள் மண்வாசனையில் வாழ்ந்து வந்தவர்கள் கட்டிய புலிப்பாசரையில் இருந்து நான் கூறுகிறேன். உங்கள் ஆதரவு விலைமதிக்கமுடியாதவை. விஞ்ஞான உலகில் கொடிகட்டிப்பறக்கும் உங்களிப்போன்றவர்களில் கள வருகை என்னைப்போன்ற விஞ்ஞானம் பற்றிய சிறிய அறிவு கொண்ட பலரை அறிவாளியாக்கட்டும்.

வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் யாழ் களபங்களிப்பு.

நன்றி பாசறை,

எனக்கிருக்கும் அறிவு கடுகைக் காட்டிலும் மிகச்சிறிது....புலிகளின் போர் மேதாவிலாசத்துடன் ஒப்பிடும்போது...

ஒரு கேள்வி....

நான் என்னாலான உதவிகளைத் தொடர, துன்பப்படும் ஈழ மக்களுக்கு குறிப்பாக ஈழக்குழந்தை களின் கல்விக்காக மிகவும் சித்தமாயிருக்கிறேன்...

தயவுச்ய்து எனக்கு அதற்கான தொடர்புகளையும் வழிகளையும் கூறுவீர்களா ?

Posted

நன்றி பாசறை,

எனக்கிருக்கும் அறிவு கடுகைக் காட்டிலும் மிகச்சிறிது....புலிகளின் போர் மேதாவிலாசத்துடன் ஒப்பிடும்போது...

ஒரு கேள்வி....

நான் என்னாலான உதவிகளைத் தொடர, துன்பப்படும் ஈழ மக்களுக்கு குறிப்பாக ஈழக்குழந்தை களின் கல்விக்காக மிகவும் சித்தமாயிருக்கிறேன்...

தயவுச்ய்து எனக்கு அதற்கான தொடர்புகளையும் வழிகளையும் கூறுவீர்களா ?

கப்பற் பயணி களத்திள் மாப்பிள்ளையை தொடர்பு கொள்ளுங்கள் அவர் உங்களிற்க்கு தகவல்கள் கொடுப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.