Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

சிங்கள மக்களிலும் பார்க்க தமிழ் மக்களுக்கு இன மத துவேசம் அதிகம் ஆனால் இலங்கையில் தமிழர் பலம் குறைந்தவர்கள். இலங்கையில் தமிழர் எனபது வீதமாகவும் சிங்களவர் இருபது வீதமாகவும் இருந்து இருந்தால் இன்று நாகர்களை இரண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளுள் அடக்கி வைத்து இருப்பது போல சிங்களவர்களையும் அழித்து தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள் அடக்கி வைத்து இருப்பார்கள். சில ஆய்வாளர்கள் குறிப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி ஒன்று உண்மையில் முன்னாள் சிங்கள போர் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதுகிறார்கள். 

நடக்காதவற்றை நடந்திருக்கும் என்றும்
நடந்தவற்றை நடக்கவில்லை என்றும்
வாதாடி நடந்த தப்புக்களையும் தவறுகளையும் அநீதிகளையும்
அழிப்புக்களையும் மறைத்துவிட முடியாது

  • Replies 63
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

தமிழர்களுக்கு மற்றவர்களிடம் மொழியையோ மதத்தையோ பலவந்தமாக திணிக்கும் பழக்கம் கிடையாது . அப்படி அவர்கள் இருந்திருந்தால் உங்கள் இனத்தோன்றல்கள் வட கிழக்கில் இருந்திருக்காது தோழரே?

பௌத்தர்களாக இருந்த ஈழத்து நாகர்கள் இன்று எங்கே? அவர்களின் மொழிக்கும் மதத்துக்கும் என்ன நடந்தது? அவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் இன்று தமிழர்கள் இருக்கிறார்கள்.

கிறீஸ்தவர்களாக மாறிய தமிழர்களை நூற்றுக் கணக்கில் சங்கிலியன் கொன்ற வரலாறு உங்களுக்கு தெரியாது போலும்.

தமிழ் அரசர்கள் தமது மொழியையும்  பௌத்தர்களாக இருந்த மக்களிடம்  இந்து சமயத்தையும் பலவந்தமாக திணித்தார்கள் ஆனால் அவர்களின் திணிப்பு வெற்றி பெற முன்னர் அவர்கள் ஐரோப்பியராலும் மோகலாயராலும் இலங்கையில் சிங்களவராலும் தோற்கடிக்க பட்டார்கள். ஆனால் நாகர்களை தமிழர்கள் அதற்குள் அழித்து விட்டார்கள். அதானால் தான் நாகர்கள் இன்று இல்லை.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

நடக்காதவற்றை நடந்திருக்கும் என்றும்
நடந்தவற்றை நடக்கவில்லை என்றும்
வாதாடி நடந்த தப்புக்களையும் தவறுகளையும் அநீதிகளையும்
அழிப்புக்களையும் மறைத்துவிட முடியாது

நீங்கள் சொல்வது உண்மையே! வடக்கு பிரதேசத்தில் இருந்து சிங்களவரையும் சோனகரையும் சொத்துக்களை பறித்து விட்டு வெளியெற்றிய தும்  அவற்றுள் அடங்கும், இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

பௌத்தர்களாக இருந்த ஈழத்து நாகர்கள் இன்று எங்கே? அவர்களின் மொழிக்கும் மதத்துக்கும் என்ன நடந்தது? அவர்கள் வாழ்ந்த நாட்டில் தான் இன்று தமிழர்கள் இருக்கிறார்கள்.

கிறீஸ்தவர்களாக மாறிய தமிழர்களை நூற்றுக் கணக்கில் சங்கிலியன் கொன்ற வரலாறு உங்களுக்கு தெரியாது போலும்.

தமிழ் அரசர்கள் தமது மொழியையும்  பௌத்தர்களாக இருந்த மக்களிடம்  இந்து சமயத்தையும் பலவந்தமாக திணித்தார்கள் ஆனால் அவர்களின் திணிப்பு வெற்றி பெற முன்னர் அவர்கள் ஐரோப்பியராலும் மோகலாயராலும் இலங்கையில் சிங்களவராலும் தோற்கடிக்க பட்டார்கள். ஆனால் நாகர்களை தமிழர்கள் அதற்குள் அழித்து விட்டார்கள். அதானால் தான் நாகர்கள் இன்று இல்லை.

நாகர்கள் வழிபட்டது சிவனையும் அம்மனையும். அதன் பின்புதான் புத்த மதமும் சிங்கள மொழியும் இங்கு வந்தது. நாகர்களின் வழித்தோன்றல்கள் காலப்போக்கில் சிங்களவராகவும் தமிழர்களாகவும் மாறியதாகத்தான் வரலாறு சொல்கிறது.

சங்கிலியன் கொன்றது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட  .பரத்தவர்  இன கிறீஸ்தவர்களையே. காசுக்காக மதம்மாறி சொந்த இனத்தை கட்டிக்கொடுப்பவர்களை அழிப்பதில் எந்த தவறும் இல்லையே.

தமிழ் மன்னர்கள் இலங்கை முழுவதையும் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அப்படி அவர்கள் தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் திணித்திருந்தால் தமிழர்களின் எண்ணிக்கைதான் கூடாவாக இருக்கவேண்டும்.

வரலாறு தெரியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதை விடுத்து உங்கள் வழித்தோன்றல்கள் செய்த ஈனத்தனத்தை  நியாயப்படுத்த புனை கதைகளை எழுதவேண்டாம் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது உண்மையே! வடக்கு பிரதேசத்தில் இருந்து சிங்களவரையும் சோனகரையும் சொத்துக்களை பறித்து விட்டு வெளியெற்றிய தும்  அவற்றுள் அடங்கும், இல்லையா?

சிங்களவர்களையும் இஸ்லாமியர்களையும்  சொத்துக்களை பறித்துக்கொண்டு அனுப்பியதாக நான் அறியவில்லை. அவர்கள் எதற்க்காக அனுப்பப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.அவர்கள் செய்த பெரிய பிழை உங்களைப்போல புல்லுருவிகளை அழிக்காமல் பிழைத்து போங்கள் என வெளியே விட்டதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் ....ஓவரா குத்திமுறியாதிங்கப்பா ....உந்தாள் முன்னமே அமெரிக்காவிற்கு வால் பிடித்திருந்தால் தீர்வு எப்போதோ கிடைத்திருக்கும் என்று 
அடித்து விட்ட ஆள் எலுவா ...இவரை செல்லி வேலை இல்லை. 
தமிழர்கள் ஏன் தங்கள் வழிபாட்டிடத்திற்கு அருகில் புத்தர் முளைத்தால் காலில் கொதிதண்ணி ஊத்துப்பட்ட மாதிரி கத்துகிறார்கள் என்றால் 
இந்த உதாரணம் ஒன்று போதும் 
கிண்ணியா வெந்நீர் ஊற்று 
அங்கே சிவன் கோவில் ஒன்று உண்டு யுத்தம் முடிவடைவதற்கு முன் சும்மா ஏக போக வாழ்க்கை வாழ்ந்தார் லார்டு சிவா ...தனி பூசாரி என்ன  பஞ்சாமிர்தம் என்ன செம வாழ்க்கை 
யுத்தம் முடிந்தது வந்தானுவ கொஞ்ச காவிபிக்கிகள்   இரவோடிரவாக சிறுபிள்ளைகள் எச்சில் தொட்டு ஒட்டுவது போல கொஞ்சம்  பாசிபுடிச்ச செங்கற்களை  வட்டமா இரண்டுவரி ஓட்டிவிட்டு சுத்திநின்று உச்சா அடித்திருப்பானுகள் போல அடுத்த நாள் கிண்ணியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் திணைக்களத்திடம் வந்துவிட்டது , அப்படியே கொஞ்சம் எட்டி மலை போலிருந்த இடத்தில் புத்தரும் ஜரூராக பிசினசை ஆரம்பித்தார் 
24 மணிநேரமும் ஒலிபெருக்கியில் நுளம்பு காதில் அனுங்குவதை போல அவர்களது பிரித், நுழைவுச்சீட்டு எடுக்கும் இடத்தில் ஒரு பிக்கு அவரது காவிப்பையை விரித்தவாறு நிற்பார், அவர் காசு கேற்கும் தோரணையே கொஞ்சம் விட்டால் நமது பணப்பையினுள் அவர் கையை விடாதது மட்டும் தான்  பாக்கி  , இவ்வளவு களேபாரத்திற்க்கு மத்தியில் லார்ட் சிவா அப்படியே காணாமல் போனார்,
அப்படியே அவரது கோவில் கூரை உளுத்து இறந்து பெய்யும் மழை நேரடியாக சிவாவை அபிஷேகம் செய்கிறது , என்ன ஆளை ஒரேயடியாக காலி செய்ய பிக்கிகளுக்கு பயமாம் அதுதான் ஒரு மூலையிலே  இருந்துவிட்டு போகட்டும் என்று விட்டுவைத்திருக்கிறார்கள் , கதிர்காம வேலைப்போல்.
 ஒவ்வொரு தடவை வெந்நீர் ஊற்று போகும்போது லார்ட் சிவாவை தரிசிப்பது எனது வழக்கம் ,அப்படி வரும்  அநேக தமிழர்கள் அவரை  வந்து பார்த்துவிட்டு தானாகவே கோவிலை கொஞ்சம் சுத்தம் செய்து செல்வதும் வழக்கம் ஆனால் ஒரு அளவுக்குத்தான் கொஞ்சம் மும்மூரமாக கோவிலை புனருத்தாபனம் செய்ய வெளிக்கிட்டீர்கள் தொல்லியல் என்ற பெயரில் பிக்கி விசாரிக்க வந்துவிடுவான் ,இந்த ஒரு சோறு போதும் பானையின் பதத்தை காட்டுவதற்கு 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது உண்மையே! வடக்கு பிரதேசத்தில் இருந்து சிங்களவரையும் சோனகரையும் சொத்துக்களை பறித்து விட்டு வெளியெற்றிய தும்  அவற்றுள் அடங்கும், இல்லையா?

அது தான் பிரபாகரனில் என்னை போன்றவர்களின் கோபம். இறுதி வரை விடுதலை என்ற கொள்கையுடன் சிங்கள மக்களை அழிக்காமல் விட்டது  பெரிய  பிழையோ என தோன்றுகிறது. எம்மை அழிக்க வரும் போது அழிக்க வருபவர்களை அழித்தால் பாவமில்லை.புலிகள் நினைத்து இருந்தால் தெற்கில் பல சிங்கள மக்களை கொன்று குவித்து வன்னியில் கொல்லப்பட்ட (இறுதி யுத்தத்தில்) பல மக்களை காப்பற்றி இருக்கலாம்
அதே நேரம் உங்களின் உப்பு சப்பில்லாத மொக்கை கருத்துக்களுக்கும் இடம் இருந்திருக்காது.

கிஸ்புல்லாவை அழிக்க இஸ்ரேல்  மேற்கொண்ட பாரிய போர் நடவடிக்கை இப்படி தான் கிஸ்புல்லாவால் முறியடிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

அது தான் பிரபாகரனில் என்னை போன்றவர்களின் கோபம். இறுதி வரை விடுதலை என்ற கொள்கையுடன் சிங்கள மக்களை அழிக்காமல் விட்டது  பெரிய  பிழையோ என தோன்றுகிறது.

எல்லை கிராமங்களில் சிங்கள மக்களை குரூரமாக அழித்து இருக்கிறார்கள். விடுதலை புலிகளை அரசுகள் அரசியல் காரணங்களுக்காக விடுதலை அமைப்பு என்று ஏற்று கொள்ளவில்லை. ஆனால் மனித உரிமை அமைப்புகளும் விடுதலை புலிகள் மேல் குற்றம் சாட்டுவதற்கு காரணங்களில் அப்பாவி பொதுமக்களை கொன்றதும் ஒரு காரணம்.

கிஸ்புல்லாவை அழிக்க இஸ்ரேல்  மேற்கொண்ட பாரிய போர் நடவடிக்கை இப்படி தான் கிஸ்புல்லாவால் முறியடிக்கப்பட்டது.

இன்றும் பாலஸ்தீனர்களே பெருமளவில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் - இசுரேலியர்கள் அல்ல. ஹிஸ்புல்லாவால் அழியும் பாலஸ்தீனர்களை காப்பாற்ற முடிகிறதா? நீங்கள் சொல்வது போல விடுதலை புலிகள் பொது மக்களை வகை தொகை இன்றி கொன்று இருந்தால் தமிழ் மக்களின் அழிவு பர்மாவின் ரோஹின்டியா முஸ்லிம்களிலும் பார்க்க மோசமாகி எவருமே அங்கு இருக்க முடியாத நிலை உண்டாகி இருக்கும். இன்றும் யாழ்ப்பாணம் பணம் செறிந்த நகரமாக இருக்கிறது. கொழும்பில் தமிழர் பெரும் வணிகங்களையும் தேவையான போக்குவரத்தையும் செய்ய கூடியதாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல நடந்து இருந்தால் தமிழர் சிங்களவராக மாறினால் அன்றி கொல்லப்பட்டு இருப்பார்கள்.

16 hours ago, Eppothum Thamizhan said:

சிங்களவர்களையும் இஸ்லாமியர்களையும்  சொத்துக்களை பறித்துக்கொண்டு அனுப்பியதாக நான் அறியவில்லை. அவர்கள் எதற்க்காக அனுப்பப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.அவர்கள் செய்த பெரிய பிழை உங்களைப்போல புல்லுருவிகளை அழிக்காமல் பிழைத்து போங்கள் என வெளியே விட்டதுதான்.

நீங்கள் பொய்மையில் வாழலாம் - ஆனால் உலகம் உண்மையை அறிந்து இருக்கிறது. பொய்மையில் வாழ்ந்ததும் தோல்விக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

தமிழ் மன்னர்கள் இலங்கை முழுவதையும் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அப்படி அவர்கள் தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் திணித்திருந்தால் தமிழர்களின் எண்ணிக்கைதான் கூடாவாக இருக்கவேண்டும்.

சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட தீவை மிகச் சிறுபான்மையான இனத்து அரசன் ஆட்சி செய்வது ஆதிக்கம். இந்த நிலம் பிடிக்கும் ஆதிக்கத்தை சிங்கள மக்கள் முறியடித்தார்கள். அதனால் தான் சிங்கள இனமும் பௌத்தமும் தப்பி பிழைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

காசுக்காக மதம்மாறி சொந்த இனத்தை கட்டிக்கொடுப்பவர்களை அழிப்பதில் எந்த தவறும் இல்லையே.

வரலாறு தெரியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதை விடுத்து உங்கள் வழித்தோன்றல்கள் செய்த ஈனத்தனத்தை  நியாயப்படுத்த புனை கதைகளை எழுதவேண்டாம் 

16 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள் செய்த பெரிய பிழை உங்களைப்போல புல்லுருவிகளை அழிக்காமல் பிழைத்து போங்கள் என வெளியே விட்டதுதான்.

9 hours ago, nunavilan said:

அது தான் பிரபாகரனில் என்னை போன்றவர்களின் கோபம். இறுதி வரை விடுதலை என்ற கொள்கையுடன் சிங்கள மக்களை அழிக்காமல் விட்டது  பெரிய  பிழையோ என தோன்றுகிறது.

பயங்கரவாதிகள் என்று உலகு சொல்வதை உண்மை என்று நிரூபிக்க இவையே போதுமாக இருக்கின்றனவே?

ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது பயங்கரவாதிகளை தானே கொன்றோம், இதிலே எங்கே போர்க்குற்றம் என்று. நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Eppothum Thamizhan said:

நாகர்கள் வழிபட்டது சிவனையும் அம்மனையும். அதன் பின்புதான் புத்த மதமும் சிங்கள மொழியும் இங்கு வந்தது.

மணிமேகலை என்று கேள்வி பட்டு இருக்கிறீர்களா? படித்த தமிழர்கள் தமது முதுபெரும் ஐந்து காப்பியங்களுள் ஒன்று இது என்பார்கள். அதிலே நாக நாடு பற்றியும் மணிபல்லவம் பற்றியும் அது பௌத்த நாடு என்றும் அங்கே மணிமேகலை பௌத்த துறவியாக போனார் என்றும் அது பற்றி இந்த காப்பியமே முழுமையாக அமைந்து இருக்கிறது. சீனருக்கும் ஜப்பானியருக்கும் பௌத்தத்தை அறிமுகம் செய்த பொதி தருமர் தமிழர். சோழர் பௌத்தராக இருந்த தமிழரை பிராமணரின் ஆதிக்கத்தால் இந்துக்களாக மாற்றினார்கள். ஆக, நாகர்கள் பௌத்தர்கள். கந்தரோடையில் உள்ள புராதன விகாரைகள் இந்த முன்னைய காலத்து பௌத்த எச்சங்கள்.

வரலாறு தெரியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும் அதை விடுத்து உங்கள் வழித்தோன்றல்கள் செய்த ஈனத்தனத்தை  நியாயப்படுத்த புனை கதைகளை எழுதவேண்டாம் 

மணிமேகலையை புனைகதை என்பவர் படித்த தமிழராக இருக்கும் சாத்தியம் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதும் ஒரு தமிழ் பழமொழி. 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Jude said:

பயங்கரவாதிகள் என்று உலகு சொல்வதை உண்மை என்று நிரூபிக்க இவையே போதுமாக இருக்கின்றனவே?

ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது பயங்கரவாதிகளை தானே கொன்றோம், இதிலே எங்கே போர்க்குற்றம் என்று. நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள் இல்லையா?

வயலில் விளைந்த நெற்கதிர்களை பாதுகாக்க தேவையற்ற புற்களை களையெடுப்பது பயங்கரவாதம் அல்லவே 

நாங்கள் புலிகளை அழித்ததை போர்க்குற்றம் என்று கூறவில்லை. ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கொலை செய்யப்பட்டதைத்தான் போர்க்குற்றம் என்கிறோம் என்பது கூட தெரியாத அல்லது தெரிந்தும் தெரியாததுபோல் நடிக்கும் உங்களை போன்றோருடன் பேசுவதில் எந்த பயனும் இல்லை.

16 hours ago, Jude said:

மணிமேகலை என்று கேள்வி பட்டு இருக்கிறீர்களா? படித்த தமிழர்கள் தமது முதுபெரும் ஐந்து காப்பியங்களுள் ஒன்று இது என்பார்கள். அதிலே நாக நாடு பற்றியும் மணிபல்லவம் பற்றியும் அது பௌத்த நாடு என்றும் அங்கே மணிமேகலை பௌத்த துறவியாக போனார் என்றும் அது பற்றி இந்த காப்பியமே முழுமையாக அமைந்து இருக்கிறது. சீனருக்கும் ஜப்பானியருக்கும் பௌத்தத்தை அறிமுகம் செய்த பொதி தருமர் தமிழர். சோழர் பௌத்தராக இருந்த தமிழரை பிராமணரின் ஆதிக்கத்தால் இந்துக்களாக மாற்றினார்கள். ஆக, நாகர்கள் பௌத்தர்கள். கந்தரோடையில் உள்ள புராதன விகாரைகள் இந்த முன்னைய காலத்து பௌத்த எச்சங்கள்.

மணிமேகலையை புனைகதை என்பவர் படித்த தமிழராக இருக்கும் சாத்தியம் இல்லை. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதும் ஒரு தமிழ் பழமொழி. 

மணிமேகலைக்கு முந்திய வரலாறை சற்று படியுங்கள்.விஜயன் இலங்கைக்கு வந்தபின்தான் பௌத்த மதம் பரவியது. அதுவும் இயக்கர்கள் ( விஜயன் குவேனியை மணந்தபின்னர் )கூடுதலாக காலப்போக்கில் பௌத்தர்களாக மாறினார்கள். நாகர்கள் பௌத்தர்களாக இருந்ததாக எங்கும் சொல்லப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/15/2018 at 7:28 PM, Jude said:

பௌத்தர்களாக இருந்த ஈழத்து நாகர்கள் இன்று எங்கே? அவர்களின் மொழிக்கும் மதத்துக்கும் என்ன நடந்தது?

ஸ்பானிஸ் பேசிக்கொண்டு இருந்த நாகர்கள் 
போர்த்துக்கீசருடன் ஓடிவிட்ட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 8:32 PM, Jude said:

பயங்கரவாதிகள் என்று உலகு சொல்வதை உண்மை என்று நிரூபிக்க இவையே போதுமாக இருக்கின்றனவே?

ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது பயங்கரவாதிகளை தானே கொன்றோம், இதிலே எங்கே போர்க்குற்றம் என்று. நீங்கள் அதை ஆமோதிக்கிறீர்கள் இல்லையா?

தோன்றுகிறது.என்று எனது ஆத்திரத்தை தானே கூறினேன், புலிகள் அப்படி செய்யவும் இல்லை. சிங்களவர்கள் பிரபாகரன் போன்ற தலைவர் தனக்கு இல்லை என்று சொல்லும் அளவுக்கு புலிகள் போராட்டத்தை நடாத்தினார்கள். எனது தமிழை விளங்க முடியாத நீங்கள் புலிகளின் போராட்டத்தை விளங்குவது எப்படி?  tw_tounge_xd:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.