Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு…

Featured Replies

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்கள் – வைத்தியசாலையில் அனுமதிப்பு…

accident.jpg?resize=275%2C183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

 

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு பெண்களையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/79286/

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

 Putthan, குடியுரிமை கிடைச்சிட்டுது.?

  • கருத்துக்கள உறவுகள்

8_AC41780-8_C4_B-4118-_B74_F-_A7_D6_D0_C

  • தொடங்கியவர்

போதையில் பயணித்த இரு பெண்களில் ஒருவர் மீது வழக்கு!!

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 
 
 
bill-gonzalez.png
 
 

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முற்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.இருபாலைச் சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தனர். அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரும் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் மருத்துவமனையில் இருந்து இன்று வெளியேறியதுடன் அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சம்பவத்தில் தொடர்புடைய இரு பெண்களும் 23, 24 வயதுகளையுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/16/போதையில்-பயணித்த-இரு-பெண்களில்-ஒருவர்-மீது-வழக்கு.html

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் தண்ணியடிச்சது தவறில்லை அவர்கள் தனிப்பட்ட விஷயம்  மோட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு இறங்கியதுதான் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதிலும் சளைத்தவர்களல்ல எனவும் எடுத்துக்கொள்ளலாம்1f601.png?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

பெண்கள் தண்ணியடிச்சது தவறில்லை அவர்கள் தனிப்பட்ட விஷயம்  மோட்ட சைக்கிளை எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு இறங்கியதுதான் தவறு.

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.தண்னியும் போதையும் எப்பவும் எங்கும் எந்தப் பாலினருக்கும் தீமையே.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சுவைப்பிரியன் said:

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.

எங்க யப்பா சொல்லவே இல்லை ....அடுத்த முறை போய் பார்க்கத்தான் வேணும்...

  • தொடங்கியவர்

போதையில் இருந்த இளம் பெண்ணுக்கு யாழ். நீதிமன்று பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் இன்று குற்றப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றில் தோன்றவில்லை. அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

விபத்தில் சிக்கியவர்களை மக்கள் மீட்டபோது இளம் பெண்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை அவதானிக்கப்பட்டது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்ட்டது. கோப்பாய் பொலிஸார் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்ற இரு பெண்களும் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் மீது மது போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக இளம் பெண் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை யாழ். நீதித் துறையில் இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது.

http://newuthayan.com/story/16/போதையில்-இருந்த-இளம்-பெண்ணுக்கு-யாழ்-நீதிமன்று-பிறப்பித்த-உத்தரவு.html

  • தொடங்கியவர்

மது அருந்திய காரணத்தை நீதிமன்றில் கூறிய இளம் பெண்! – யாழ். நீதிமன்று எடுத்த முடிவு!!

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 
 

மது போதையில் வாகனம் செலுத்திய பெண்ணுக்கு 7 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது. அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு ஆண்டுக்கு இடைநிறுத்த வேண்டும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.

தோழி எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவர் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் வேதனைப்படுகிறார். அவருக்கு சாரயம் வழங்கப்பட்டது. அதில் சிறிதளவை இந்தப் பெண்ணும் பருகிவிட்டார் என்று மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகினர். இந்தச் சம்பவம் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

 

விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து மறுநாள் வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் மன்றில் முன்னிலையாகததால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மூத்த சட்டத்தரணி ஊடாக அந்தப் பெண் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரண்டைந்து குற்றத்தை ஏற்றுக்கொண்டார். அவருடன் எரிகாயங்களுக்குள்ளானவர் எனத் தெரிவிக்கப்பட்ட பெண்ணும் மன்றில் இருந்தார். அவரைக் காண்பித்தே மூத்த சட்டத்தரணி மன்றில் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்தார்.

மன்று : எத்தனை வயது?
பெண் : 21 வயது
மன்று : என்ன வேலை செய்கிறீர்கள்?
பெண் : —————————

குற்றப்பத்திரத்தை ஆராய்ந்த மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், 7 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த உத்தரவிட்டார். சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடங்களுக்கு இடைநிறுத்துமாறும் மன்று கட்டளையிட்டது.

http://newuthayan.com/story/14/மது-அருந்திய-காரணத்தை-நீதிமன்றில்-கூறிய-இளம்-பெண்-யாழ்-நீதிமன்று-எடுத்த-முடிவு.html

Edited by நவீனன்

சிறப்பு. மிகச்சிறப்பு.

  • தொடங்கியவர்

போதையிலும் ஆண்களை வெல்ல வேண்டும்!!

 

சில தினங்­க­ளுக்கு முன்­னர் இரவு. இரு­பா­லைச் சந்­தி­யில் இரண்டு இளம் பெண்­பிள்­ளை­கள் மோட்­டர் சைக்­கி­ளில் செல்­லும்­போது விபத்­துக்­குள்­ளாகி மீட்­கப்­பட்­டார்­கள்.  அப்­போ­து­தான் தெரி­யவந்தது அவர்­கள் குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடி­ய­து. இதில் என்ன விசே­ஷம் என்றா கேட்­கி­றீர்­கள்?

இன்­றைக்கு யாழ்ப்­பா­ணத்­தில் (ஏனைய இடங்­க­ளைப் பற்­றிக் கதைக்க வர­வில்லை) பெண்­கள் எல்லா இடங்­க­ளி­லும்… இடங்­கள் என்­றால்… பரீட்­சை­யில் சித்­தி­ய­டை­வது… கோவில் திரு­வி­ழாக்­க­ளில் ஒன்­று­கூ­டு­வது… , அரச திணைக்­க­ளங்­கள், அரச தனி­யார் வங்­கி­க­ளில் பணி­யாற்­று­வது என்­பது தொடங்கி எல்­லா­வற்­றி­லும் பெண்­கள் முன்­னிலை வகிக்­கி­றார்­கள். அது ஒன்­றும் தவ­றில்லை. தேவை­யும் அதுவே.

ஆனால், யாழ்ப்­பா­ணத்­தில் மது போதை­யில் மோட்­டார் சைக்­கிள் ஓடி வழக்­குப் பதி­வு­செய்­யப்­பட்ட முத­லா­வது பெண் என்ற பெரு­மையை அந்­தப் பெண்­க­ளில் ஒரு­வர் பெற்­றுக்­கொண்­ட­தாக அறியப்படுகிறது. இறு­தி­யா­கக் கிடைத்த தக­வ­லின்­படி நீதி­மன்­றுக்­குச் சமூ­க­ம­ளிக்­காத அந்­தப் பெண்­மீது பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக…

 

பெண்­கள் குடிக்­கின்­றார்­களா…?
ஆண்­கள் குடித்­தால், பெண்­கள் குடிப்­ப­தில் என்ன பிழை என்ற கேள்­வி­கள் பல முனை­க­ளி­லும் கேட்­கப்­ப­டு­கின்­றன. பொது வெளி­யில் இது தொடர்­பாக யாரும் அதி­கம் கதைக்­கா­விட்­டா­லும், முக­நூல்­க­ளி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் கருத்­துக்­களை அள்­ளி­வீ­சும் பல சமூக ஆர்­வ­லர்­கள் இது தொடர்­பா­கக் கதைக்­கத் தவ­ற­வில்லை.

பாரம்­ப­ரிய கிடுகு வேலிக் கலாசா­ரம் கொண்ட யாழ்ப்­பா­ணத்­தில் சைக்­கிள்­கூட ஓடப்­ப­ழ­காத, ஓடத்­தெ­ரி­யாத ஒரு சூழ­லில் இருந்த யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள், தாய், தகப்­பன், சகோ­த­ரங்­கள், பின்­னர் கண்­ணான கண­வன் என்று அடி­தொ­ழுது வாழ்ந்து பழக்­கப்­பட்ட யாழ்ப்­பா­ணத்­துப் பெண்­கள் இன்று ஆண்­க­ளுக்கு நிக­ரா­கக் குடித்­து­விட்டு நீதி­மன்ற வாச­லில் நிற்­கி­றார்­கள் என்­றால் இது எவ்­வ­ளவு மேன்­மை­யான விட­யம்…?

நன்­றா­கக் குடி­யுங்­கள்… குடித்­து­விட்டு மோட்­டார் சைக்­கிள் ஓடா­தீர்­கள் அல்­லது போதை இல்­லாத ஒரு­வரை மோட்­டார் சைக்­கி­ளைச் செலுத்­த­வி­டுங்­கள் என்ற போத­னை­கள் வேறு செய்­யப்­ப­டு­கின்­றன. போதை­யே­றித் தெரு­வில் விழுந்த பெண்­கள் தொடர்­பாக ஏன் ஊட­கங்­க­ளில் வெளி­யிட்டு அந்­தப் பெண்­க­ளைச் சந்தி சிரிக்க வைக்­கி­றீர்­கள்?

அவர்­க­ளுக்கு நல்ல அறிவுரைகளைச் சொல்­லிக்கொடுத்துத் திருத்­துங்­கள் என்று வேறு சில­ரும் சொல்­கி­றார்­கள். குடிப்­ப­தைப் பிழை­யா­கப் பார்க்­கா­தீர்­கள், நவீன உல­கில் பியர் அடிப்­பதோ விஸ்கி குடிப்­பதோ மோச­மான விட­யம் அல்ல. ஒக்­கே­ச­னாக அடிப்­பது ஒன்­றும் தவ­றில்லை என­வும் சம காலத்­துப் பின்­ந­வீ­னத்­துவ வாதி­கள் கருத்­துச் சொல்­கி­றார்­கள்.

அன்­றைய தினம் குடித்த பெண்­கள் ஒரு பிறந்­த­நாள் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொண்டு மது அருந்­திப் பின்­னர் புறப்­பட்­ட­தாக முக­நூல் நண்­பர்­கள் தெரி­விக்­கி­றார்­கள். அந்த இடத்­தில் இந்­தப் பெண்­கள் மட்­டும்­தான் கலந்­து­கொண்­டார்­கள் என்று சொல்­ல­மு­டி­யாது. வேறு பல பெண்­க­ளும் கலந்­து­கொண்­டி­ருப்­பார்­கள். எனவே இது ஒன்­றும் மறை­பொ­ரு­ளான விட­யம் என்று கூறு­வ­தற்­கில்லை.

ஸ்கூட்டி ஓடும் பெண்­கள் எல்­லோ­ரும் சாதா­ரண நிலை­யில் உள்ள பெண்­க­ளாக இங்கு இல்லை. சிறந்த கல்­வி­ய­றி­வும், ஆற்­ற­லும் உள்ள இவர்­க­ளில் அநே­க­மா­னோர் நிரந்­த­ர­மான அரச, தனி­யார் வேலை­க­ளில் உள்­ள­வர்­கள்.

இந்­தச் சமூ­கத்­தில் நீண்ட பாரம்­ப­ரி­யங்­க­ளைக் கொண்ட குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். இவர்­க­ளுக்கு குடி­யால் ஏற்­ப­டும் தீமை­களோ அல்­லது அதன் பின்­னணி தரும் சிக்­கல்­களோ தெரி­யா­ம­லி­ருக்க வாய்ப்­பில்லை. புத்தி கேட்­டுத் திருந்­த­வேண்­டிய நிலை­யில் அவர்­க­ளும் இல்லை. அவர்­க­ளு­டைய அறி­வும் இல்லை. உண்­மை­யில் என்ன தான் நடக்­கி­றது?

மாலை வேளை­யில் மங்­கிய இரு­ளில் ஒன்­று­சே­ரும் ஆண்­கள் தண்ணி தண்­ணி­யாக அடித்­துச் சில­வே­ளை­க­ளில் கஞ்­சா­போன்ற போதைப் பொருள்­க­ளை­யும் பாவித்து வெறி ஏறி, ஒரு மோட்­டார் சைக்­கி­ளில் மூன்­று­பே­ராக உட்கார்ந்து கூச்­ச­லிட்­ட­வாறு வளைந்து வளைந்து காப்­பெற் சாலை­யில் வேக­மாக ஓடித் திறில் காட்­டு­வதும், சம­யங்­க­ளில் சண்­டை­பி­டிப்­ப­தும், வாய்த்தர்க்கம் கைகலப்பாகி வாள்­வெட்டு வரை­போ­வ­தும் அவர்­க­ளின் கதா­நா­ய­கத்­த­ன­மா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு எந்­தக் கட்­டுப்­பெட்­டித்­த­ன­மும் இல்­லா­மல் யாருக்­கும் பயப்­ப­டா­மல் சுதந்­தி­ர­மா­கச் செயற்ப­டு­வோம் எனத் தலை­தூக்­கும் சில பெண்­க­ளின் கதா­நா­ய­கித் தனங்­களே இத்­த­கைய விளை­யாட்­டுக்­க­ளின் பின்­ன­ணி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

ஐஸ்­கி­றீம் கடை­யில் கேக் வெட்டி, றோல் சாப்­பிட்டு, ஐஸ்­கி­றீம் குடித்­துக் கொண்­டா­டப்­பட்ட பிறந்த நாள்­களை ஒத்த கொண்­டா­ட்டங்­கள் இன்று தண் ணி­ய­டித்­துத் தலை­கீ­ழா­கும் நிலை­வரை வந்­துள்­ளதை இளம் தலை­மு­றை­யின் முன்­னேற்­றம் என்று சொல்ல முடி­யுமா?

எத்­த­கைய வச­தி­கள் இருந்­த­போ­தும் உயர் பதவி நிலை­க­ளில் இருந்­தா­லும் கட்­டிய மனை­வியை, அல்­லது கண­வ­னை­விட வேறு தொடுசல் வைத்­தி­ருப்­பதை யாரும் மதிப்­ப­தில்லை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. தனி­ ம­னித ஒழுக்­கத்தை எவ­ரும் தூக்கி எறிந்­து­விட்­டுப்­போக முடி­யாது. இன்று பெண்­கள் தண்­ணி­ய­டிப்­பது சரி என வாக்­க­ளத்து வாங்­கும் எந்த ஆண்­ம­க­னும் அத்­த­கைய பின்­னணி உள்ள ஒரு பெண்­னைத் திரு­ம­ணம் செய்ய முன்­வ­ரு­வானா?

சம­கா­லத்­தில் நவீன தொழில்­நுட்ப வச­தி­கள், வாழ்க்கை முறை­கள் எல்­லாம் மாறி­விட்ட பின்­ன­ணி­யில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட அல்­லது அவ­தூறு பரப்­பப்பட்ட ஒரு பெண்ணை இந்­தச் சமூ­கம் எந்­தக் கேள்­விக்­கும் உட்­ப­டுத்­தா­மல் ஏற்­றுக்­கொள்­கின்­றதா?

திரு­ம­ணம் என்று வந்­த­வு­டன் சாத­கம் பார்த்து, சாதி குலம் கோத்­தி­ரம் எல்­லாம் விசா­ரித்து, ஆண் அல்­லது பெண்­ணின் சொந்த நடத்தை பற்­றித் துப்­ப­றிந்து இறு­தி­யில்­தானே திரு­ம­ணங்­கள் நிச்­ச­யப்­ப­டுத்­தப்­ப­டுகின் றன. ஒரு சில புற­ந­டை­க­ளைத் தவிர இவற்­றுக்கு மாற்­றீ ­டு­க­ளைக் கொண்­டு­வந்­து­விட்­டோமா?

பாட்­டுப் பாட விரும்­பு­வர்­களை மேலும் மேலும் பாடுங்­கள் என ஊக­கப்­ப­டுத்­து­கி­றோம். ஓவி­யம் வரை­ப­வர்­கள், கதை கவி­தை­கள் எழு­து­ப­வர்­கள் அவர்­கள் ஆண்­க­ளாக இருந்­தால் என்ன பெண்­க­ளாக இருந்­தால் என்ன அவர்களின் முன்­னேற்றம் காண முய­லு­கின்­றோம்.
அவ்­வாறே குடிப்­ப­ழக்­கத்­தில் உள்ள ஓர் ஆணையோ பெண்­ணையோ மேலும் மேலும் குடி­யுங்­கள் என ஊக்­கப்­ப­டுத்­த­லாமா? அல்­லது ஊக்கம் கொடுக்கத்தான் முடி­யுமா?

சும்மா ‘ஒக்­கே­ஷ­னாத்­தான் அடிக்­கி­றோம் ஒரு பெக் அடிப்­ப­தால் ஒன்­றும் பிரச்­சி­னை­ யில்லை. ஆக்­க­ளுக்கு முன்­னால கொஞ்­ச­மா­வது குடிக்­கா­மல் விடு­வது சரி­யில்லை, என்று தாம் குடிப்­ப­தற்கு நியா­யம் கற்­பிக்­கும் அன்­பர்­களே குடி­யின் எல்லை எது? குடித்­துக் குடித்து எல்லை தாண்­டும்­போது ஏற்­ப­டும் பிரச்­சி­னை­க­ளால்­தானே குடிக்கு எதி­ரான கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குடி­யால் ஏற்­ப­டும் பக்­க­வி­ளை­வு­களை சமூ­கத்­தில் நாளும்­பொ­ழு­தும் பார்த்­துக்­கொண்­டு­தான் எல்லை மீற மாட்டோம் என்று சொல்­லிக்­கொண்டு எல்­லோ­ருமாக குடிக்க ஆரம்­பித்து எல்­லோ­ரும் எல்லை மீறு­கின்றோம்.

அந்­தப் பெண்­கள்­கூட பிறந்தநாள் விருந்­துக்கு வெகு அட்­ட­கா­ச­மாக, அலங்­கா­ர­மாக சிறந்த ஆடை அணி­க­ளு­டன் அலட்­சி­ய­மாக வந்து முதல் றவுண்­டில் கலகலப்­பாக சிறிது சிறி­தா­கத் தண்­ணி­ய­டிக்க ஆரம்­பித்­தி­ருப்­பார்­கள்…? பின்­னர் அதன் நீட்­சி­தான் இரு­பா­லைச் சந்­தி­யில் காப்­பெற் றோட்­டில், விபத்­தாகி விழுந்து புரண்டு ஆடை­கள் அழுக்­கா­கும் வரை சென்றது.

அது வேறு சூழ­லாக இருந்­தால் போதை­யில் சுய­மி­ழந்த பெண்­க­ளுக்கு நடக்­கும் கொடு­மை­களை அறி­யா­த­வர்­களா? அந்­தப் பெண்­க­ளும் அவர்­களை ஒத்த பெண்­கள் சமூ­க­மும்போதை ஏற்­றியே பெண்­களை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தும் எத்­த­னையோ சம்­ப­வங்­கள் சமூ­கத்­தில் நடப்­பதை இவர்­க­ளும் இவர்­க­ளுக்கு வக்­கா­லத்து வாங்­கு­ப­வர்­க­ளும் அறிய மாட்­டார்­களா?

ஒரு புறத்­தில் வீறு­கொண்டு எழுந்த விடு­த­லைப்­போ­ராட்­டத்­தின் பின், அதைக் கட்­டிக்­காக்க முடி­யா­மல் அதன் தொடர் பயன்­களை அறு­வடை செய்ய முடி­யாத எங்­கள் தமிழ்த் தலை­வர்­கள் இன்று முள்­ளி­ வாய்க்­கால் நினைவு தினத்தை எப்­ப­டிக் கொண்­டா­டு­வது என்ற பிரச்­சி­னை­யில் நிற்­கும் நிலை­யில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளைத்­த­விர வேறு என்­ன­தான் நடக்­கும்?

பண்­பாடு மிக்க மக்­கள் கூட்­ட­மாக இருந்த எங்­கள் மக்­க­ளும் அவர்­க­ளின் விடு­ த­லைப்­போ­ராட்­டமும் உச்­ச­மாக இருந்த காலத்­தில் விடு­த­லைப் போ­ரா­ளி­க­ளாக ஆயு­தம் ஏந்­திப்­போ­ரா­டிய பெண்­க­ளும், அதற்கு ஏனைய உத­வி­க­ளைச் செய்த சமூக அமைப்­பில் இருந்த பெண்­கள் கூட்­ட­மா­க­வும் இருந்த எங்­கள் சூழல் இன்­றைக்கு எந்த நிலை­யில் வந்து நிற்­கி­றது என்­பதை யோசித்­துப் பார்க்­க­வேண்­டும்.

இதற்கு எங்­கள் அர­சி­யல் சமய சமூ­கத் தலை­வர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மாகாண, பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள்­தான்­பொ­றுப்­பேற்க வேண்­டும். இது­பற்றி இவர்­கள் சிந்­திக்­க­ மாட்­டார்­களா?

http://newuthayan.com/story/11/போதையிலும்-ஆண்களை-வெல்ல-வேண்டும்.html

  • கருத்துக்கள உறவுகள்
On 5/16/2018 at 3:11 PM, சுவைப்பிரியன் said:

இதே முன்பு ஒருக்கா ராமானாதன் கல்லுரி பளைய மாணவிகள சேலை களர களர தண்னி அடிச்சுப்போட்டு ஆடிய ஆட்டம் இதே யாழ் களத்தில் பார்த்தனான்கள்.இது நடந்தது அவுசில்.தண்னியும் போதையும் எப்பவும் எங்கும் எந்தப் பாலினருக்கும் தீமையே.

 முதல் இரண்டு வரிகளையும் படிச்சபோது சிரிப்பு தாங்கவே முடியல... உண்மைதான்.

ஆனால் ஒன்று சொல்லவேண்டும், இப்போதெல்லாம் தமிழர்கள் பார்ட்டி 

வெள்ளைக்காரனே இதுவரை செய்யாத அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது.

வெள்ளைக்காரன் நூறுபேர் சேர்ந்து தண்ணி அடிச்சாலும், கோர்ட் சூட்டில் ஒரு புள்ளிகூட அழுக்கு வராமல் நடந்துக்குவான்..

எவ்வளவுதான் அதி போதையாக இருந்தாலும் கூட்டமாய் நின்று பேசுவார்கள் , ஆனால் கிட்ட நீங்கள் நெருங்கி போனாலும் சத்தம் எதுவும் பெரிதாக கேட்காது...

இப்போலாம் புலம்பெயர் தேச நம்மவர்  பார்ட்டிகளில் ..

* தம்பதிகள் பலூன் உடைக்கும் பார்ட்டி நடக்கும், கையால் உடைப்பதல்ல கணவன் மனைவி , அல்லது நண்பர்கள் கூட்டத்தில் இருவரோ  ஆண் பெண்  சேர்ந்து இருவர் நெஞ்சுக்கு இடையில் வைத்து அழுத்தி வெடிக்க வைக்க வேண்டும், அது முடிய நீண்ட நேரமாகும்.. அதை எல்லோரும் பார்த்து கொண்டிருப்பார்கள் சும்மா  சமாளிக்குறதுக்காக சிரிச்சு கொண்டு..

Heineken  பியரை  ஆண்/பெண் ‘’போட்டியாளர்கள்’’ ஒரே மூச்சில் குடித்து முடிக்கவேண்டும், பார்வையாளர்கள் கைவேற தட்டி ஊக்க படுத்துவார்கள், முடிவில் பரிசு வேற உண்டு...

போதை உச்சத்தில் போனால் பிற ஆணை ...  Give me a hug   என்று நம் தாய்குலங்களில்  சிலர் கழுத்தை சுற்றி கைபோட்டு இறுக அணைப்பார்கள்...

கணவன் முன்னாடிகூட...

 கார் சாவி/டோக்கன் எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு,குலுக்குவார்கள் குலுக்கல் முறையில் ... எவர்  சாவி  எவர் டோக்கன் யாரிடம் போகிறதோ அவர்கள் ஜோடி சேர்ந்து அப்படி போடு போடு போடு பாட்டுக்கு வெறிதனமா ஆடும் அற்புதமும் உண்டு...

ஒரே சிகரெட்டை நாலு இழுவையில் ஆணோ பெண்ணோ பில்டர் வரை இழுத்து முடிக்கவேண்டும் அப்படி ஒரு போட்டிகூட உண்டு.. புகைத்தல் மண்டபங்களில் அனுமதிக்கப்படாது என்ற அரச சட்டம் இருந்தாலும், மண்டமும் எங்களது, மக்களும் எங்களது என்ற நம்மவர்கள் இடங்களில் சட்டத்தைமீறி அந்த போட்டி வேற இருக்கு...

அதற்காக புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்கள் எல்லோருமே அப்படி என்று அல்ல.. தாயகத்தில் இருந்ததைவிட மிக இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் தாமும் தம் குழந்தைகளுடனும் வாழ்பவர்கள் பல லட்சம் உண்டு...

இன்னும் சொல்லபோனால் வெளிநாட்டு பாஸ்போட் இருந்தாலும் தாயகத்துக்கு திரும்பிபோய் அங்கே குழந்தைகளை படிக்க வைப்பவர்கள்கூட உண்டு...

தாயகத்தில் இருப்பவர்களின் தப்புக்களை ஏதோ உலக அதிசயம்போல் , அவர்கள் கெட்டு போனார்கள் என்பதுபோல் நாங்கள் என்னவோ உத்தம புத்திரர்கள்போல், தமது தளங்களுக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்க  ஊடகங்கள் செய்யும்  கலாச்சார காவல் மிக உறுத்தலான ஒன்று...

அதைதான் சொல்ல வந்தேன்... மற்றும்படி அளவுக்கு மீறிய குடி ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆபத்தான ஒன்றே.

இப்படி எதுவும் நடப்பதில்லை , இது வெறும் புரளி என்று யாழ் நிர்வாகம் நினைத்தால் உடனடியாகவே இந்த  கருத்தை நீக்கிவிடலாம்..

கருத்தாளர்களுக்கோ நிர்வாகத்திற்கோ முதலில் உண்மைதான் முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/16/2018 at 7:42 AM, putthan said:

பெண்களுக்கு சம உரிமை கிடைச்சிட்டுது...tw_tounge:

On 5/16/2018 at 7:51 AM, Kavi arunasalam said:

 Putthan, குடியுரிமை கிடைச்சிட்டுது.?

எந்த விதத்திலை எப்பிடியான் சம உரிமை உங்களுக்கு வேணுமெண்டு கேட்டுப்பாருங்கோ....பேந்தப்பேந்த முழுசுவினம்..:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.