Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

Featured Replies

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

 

 

Capture-276.jpg

 
 
 
 

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

நல்­லூர் கிட்­டுப் பூங்­கா­வில் நேற்று நடை­பெற்ற உற்­பத்­திப் பொருள்­க­ளின் கண்­காட்­சி­யும்  விற்­ப­னை­யும் நிகழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே  அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;  வடக்கு கிழக்­கில் அமைச்­சின் ஊடா­கப் பல்­வேறு வேலைத் திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதி­லும் குறிப்­பாக கல் வீடு­கள் அமைக்­கும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.  அது இரண்டு வரு­டத்­தில் நிறை­வ­டை­யும் என்று எதிர் பார்க்­கின்­றோம்.

 

40 ஆயி­ரம் வீடு­களை அமைப்­ப­தற்­கும் அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இதற்­குத்  தூண்­டு­த­லாக இருந்­த­வர் சம்­பந்­தன் ஐயா என்­பதை நான் குறிப்­பி­ட­வேண்­டும். அவர்­தான்  அதற்­கான தயார்ப் படுத்­தலை என்­னி­டம் தந்து வீடு­கள் வேண்­டும் என்று தெரி­வித்­தார். அதற்கு
அமை­வா­கத் தற்­போது வீடு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

பனம் சாரா­யத்­துக்கு நல்ல வர­வேற்பு நாடெங்­கி­லும் உள்­ளது. அத­னால் திக்­கம் வடி­சாலை  சீர­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­து­டன் வெகு விரை­வில் பனம் குளிர் பானம் ஒன்­றும்  யாழ்ப்­பா­ணத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இது­வ­ரை­யில் 500 மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான இழப்­பீட்டு உத­வி­களை வழங்­கி­யுள்­ளோம்.  இன்­ன­மும் அபி­வி­ருத்தி வேலை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. ஆனால் இந்த முறை நிதி  ஒதுக்­கீடு எமது அமைச்­சுக்­குக் குறை­வா­கவே வழங்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் நலன் முன்­னேற்­றம் தொடர்­பில் தலைமை அமைச்­சர் அதிக அக்­கறை  கொண்­டுள்­ளார். தமிழ் மக்­கள் மீது நாம் அதிக அக்­கறை கொண்டு செயற்­பட வேண்­டும். எமது  கலா­சா­ரத்தை அழிக்­கப் பலர் நினைப்­பார்­கள். போரால் அல்ல. வேறு வகை­யில் முயற்சி
செய்­வார்­கள் என்­றார்.

‘‘மீள் குடி­ய­யேற்ற அமைச்­சா­ராக சுவா­மி­நா­தன் வந்த பின்­னரே இந்த அபி­வி­ருத்­தி­கள்  வேக­மா­கச் சிறப்­பாக நடை­பெ­று­கின்­றன. அவர் பல திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளார். இன்­னும்  பலர் மீளக்­கு­டி­ய­மர்ல்த்­தப்­ப­டா­மல் உள்­ள­னர். அவர்­க­ளும் மீளக்­கு­டி­ய­மர்த்­தப்­ப­ட­வே­வண்­டும்.
யாழ்ப்­பா­ணத்­தில் சிறப்­பான உற்­பத்­தி­கள் இடம்­பெ­று­கின்­றன. அவர்­க­ளுக்­கான சந்தை வாய்ப்பு  வேண்­டும்’’ என்­றார் யாழ். மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன்.

இதே­வேளை, நிகழ்வு முடிந்த பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமைச்­சர் சுவா­மி­நா­தன், மீள்  குடி­யேற்ற அமைச்­சின் ஊடாக பாது­காப்பு பிரி­வுக்கு வழங்­கப்­பட்ட நிதி வடக்­கில் விடு­விக்­கப்­ப­டும்
பகு­தி­க­ளில் உள்ள கட்­டங்­களை அகற்­று­தல் உள்­ளிட்ட வேலை­களை மேற்­கொள்­ளு­வ­தற்கே
என்று தெரி­வித்­தார்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்  ஆற்­றிய உரை­யில், மீள் குடி­யேற்ற அமைச்­சின் ஊடா­கப் பாது­காப்­புப் பிரி­வுக்கு அதி­க­ளவு நிதி  வழங்­கப்­ப­பட்­டது என்று குற்­றஞ்­சாட்­டி­யது குறித்து அமைச்­ச­ரி­டம் செய்­தி­யா­ளர்­கள் கேள்வி
எழுப்­பி­னர்.

‘‘மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் ஊடா­கப் பாது­காப்­புப் பிரி­வுக்கு நிதி வழங்­கி­யமை உண்மை.  மீள்­கு­டி­ய­மர்­வுக்­குக் காணி விடு­விப்பு அவ­சி­ய­மா­கும். இவ்­வாறு விடு­விக்­கப்­ப­டும் காணி­க­ளில்  உள்ள கட்­ட­டங்­களை அகற்­று­தல் போன்ற வேலை­கள் இருந்­தன. அதற்­கா­கவே அந்­தப் பணம்
பாது­காப்­புப் பிரி­வுக்கு வழங்­கப்­பட்­டது’’– என்­றார்.

இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராசா ; ”வடக்­கில் தெரி­விக்­கப்­ப­டும் கருத்­துக்­க­ளுக்­கும்,  செயற்­பா­டு­க­ளுக்­கும் முன்­ன­ரை­யும் விட எதிர்ப்­புக்­கள் மற்­றும் எதிர்க் கருத்­துக்­கள் தெற்­கில்
அதி­க­மா­கவே தற்­போது வரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யில் இன ஒழிப்­புப் பற்­றிய தீர்­மா­னம்  நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்­கும் அவர்­கள் எதிர்ப்­பு­க­ளைக் காட்­டி­யி­ருந்­தார்­கள். எனி­னும் நாம்  நிதா­ன­மா­கவே பய­ணிக்­கி­றோம் என்று ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்தார்.

http://newuthayan.com/story/10/தமி­ழர்­கள்-மீது-அக்­கறை-கொள்­ளா­விட்­டால்-6-லட்­சம்-பேரும்-வெளி­நாடு-ஓடி­வி­டு­வார்­கள்-அமைச்­சர்-சுவா­மி­நா­தன்.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

சிங்கள பொதுமக்களும் முஸ்லீம் பொதுமக்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.....அரசு அதற்கு ஏற்ற உதவிகளை செய்யும்...சர்வதேசம் தேவையான வ‌சதிகளை செய்யும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  எச்சரிக்கிறாரா?

தகவல்  கொடுக்கிறாரா????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

தமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்!!

அப்ப அந்த மக்களும் புலம் பெயர்ந்நத எம்மைப் போன்று வீரர்களாக மாறி விடுவார்கள்.என்ன எமக்குத்தான் போராட ஒரு களமும் இல்லாமல் போய் விடும்.?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

இவர்  எச்சரிக்கிறாரா?

தகவல்  கொடுக்கிறாரா????

இவர்களும் கொழும்புக்கு புலம்பெயர்ந்த மனிதர்கள் தான்.....

திண்ணை காலியாகும் வரை காத்திருக்கிறார்கள்.

On 5/26/2018 at 11:12 AM, நவீனன் said:

தமிழ் மக்­கள் மீது கொழும்பு அரசு அதிக அக்­கறை கொண்டு செயற்­ப­ட­வில்லை என்­றால் 6  லட்­சத்து 20 ஆயி­ரம் தமிழ் மக்­க­ளும் வெளி­நாடு சென்­று­வி­டும் நிலை ஏற்­ப­டும் என்று  தெரி­வித்­தார் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம். சுவா­மி­நா­தன்.

இப்படியெல்லாம் உளரவல்ல அரைவேக்காடுகளை தான்  ஐ.தே. கட்சி அமைச்சராகியுள்ளது. இவரின் வெங்காய அரசியல் ஒருபக்கம். மறுபக்கத்தில் சட்டவிரோத கடத்தல் கும்பல்களின் துணையுடன் விஜயகலா!

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சொறீலங்காவில் 6 இலட்சம் தமிழ் மக்கள் தான் உள்ளனரோ.

இதென்னவோ.. முள்ளிவாய்க்களில் 70யிரம் மக்கள் மட்டுமே இருந்தனர் என்று கோத்தா சொன்ன கணக்காய் இருக்குது. 

மிச்ச தமிழர்களை என்ன ஓட முதல் இனப்படுகொலை செய்யும் திட்டமா..???!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.