Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?

இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர்.
அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உணர்வாளர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் தமது உணர்வுகளை மதிக்காத வங்கி கணக்கினை மூடி வருகின்றனர்.
இதனால் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள மேற்படி வங்கியில் இருந்து யாழில் மட்டும் இதுவரை 812 பேர் கணக்கை மூடியுள்ளதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கிழக்கு மாவட்டத்திலும், ஏனைய சில பிரதேசங்களிலிருந்தும் வாடிக்கையாளர் வெளியேறிவருவதாக முகநூல் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார்ஙகள் தெரிவிக்கின்றது.

 

http://lankapuri.com/இதுவரையில்-எத்தனைப்பேர்/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா?

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார்ஙகள் தெரிவிக்கின்றது.

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லையென்று யார் சொன்னது...?? :innocent:

 

23 hours ago, விசுகு said:

இலங்கை ழுழுவதும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் சுமார் 17000 கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக

 இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை!

ஆனால் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழின விரோதிகளை அடக்குவதில் சிரமம் இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதியாத, காப்பிரேட் முட்டாள்தனம் என சாடியுள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

http://colombogazette.com/2018/05/26/mano-slams-bank-for-suspending-employees-over-event/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலம் பொருந்திய நாடுகளில் கூட பாமரமக்களுக்கு வங்கிக்கணக்கு பலமானது. அதை உதறித்தள்ள கையிலிருக்கும் காப்பை அடகு வைக்கும் வறிய மக்கள் சிந்திப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

சமூக வலைத்தளங்களில் புறக்கணிப்பு என்று பதிவிட்டவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். 2009- 2011 காலப்பகுதியில் பலர் சிறிலங்கா டில்மா தேயிலை, சிறிலங்கா துடுப்பாட்ட அணியினைப் புறக்கணிப்பதாக தங்களது முக நூல்களில் கருத்துக்கள் எழுதியதினைப் பார்த்திருக்கிறேன். அக்காலப்பகுதியில் சிட்னியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு எதிராக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. வேடிக்கை என்ன வென்றால் கவனயீர்ப்பில் கலந்து கொண்டவர்கள் வெறும் 100 பேர். ஆனால் சிங்களக் கொடியுடன் துடுப்பாட்டம் பார்க்கச்சென்றவர்கள் பல மடங்குபேர்கள். இவர்களில் சிலர் தங்களது முகனூல்களில் சிங்கள துடுப்பாட்டத்தினைப் புறக்கணிப்பதாகப் பதிவு இட்டவர்கள்.  உண்மையில்ஹற்றன் நஷனல் வங்கியினைப் புறக்கணித்தால் நல்லது.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.