Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி தற்கொலை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வில் தோல்வி- விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விழுப்புரம் மாணவி பிரதீபா எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார்.

10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

நீட் தேர்வு தோல்வியால் மாணவி அனிதா கடந்த தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் உயிரிழந்தனர். தற்போது பிரதீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-exam-17-year-old-tn-student-commits-suicide-321606.html

####################################################################################################################

NEET Fail: Villupuram student attempts to commit suicide

நீட் தோல்வி: விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த 40% மாணவர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். அதனால் சுமார் 1 லட்சம் மாணவர்களின் மருத்துவ படிப்பு பாழானது.

தங்களது மருத்து படிப்பு கனவு பாழான நிலையில் மாணவ, மாணவிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரத்தில் பிரதீபா, டெல்லியில் பிரணவ் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-fail-villupuram-student-attempts-commit-suicide-321608.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ராஜஸ்தான் பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவ மாணவியர் எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற முடிகிறது?

எனக்கு  தெரிந்த  ஒரு பணக்கார பெண் இலங்கையில் B 2C  S எடுத்தவ  பிறகு இந்தியா சென்று MBBS முடிச்சு வந்து வேலை செய்யிறா.இப்படி பணக்கார தகுதியற்ற மாணவர்கள் டாக்டர் ஆவதை தடுக்கத்தான் NEET  தேர்வு என்பது என் கணிப்பு??

எனது புரிதல் சரியாக இருக்குமானால் பெரும்பாலான வட மாநிலங்களில் மத்திய அரசு பாடத் திட்டங்களில்தான் படிக்கிறார்கள். தமிழ்நாடு விலக்கு கேட்டது. ஆனால் இந்திய ஒன்றிய அரசும், உச்ச நீதி மன்றமும் மறுத்துவிட்டன. ஆனால் ஆந்திர மாநிலம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுவிட்டன.

தரம் என்று பார்த்தால் கேரளத்துக்கு அடுத்தபடியாக மருத்துவத்துறையில் முன்னேறிய மாநிலம் தமிழ்நாடு. வெளிநாடுகளில் இருந்துகூட சிகிச்சைக்கு வருகிறார்கள். இது இப்படி இருக்கையில், இன்னும் ஆண் மயிலின் கண்ணீரில் பெண்மயில் கர்ப்பம் தரிக்கிறது எனும் எண்ணத்தில் உள்ள வட இந்திய மந்திரிகள் வந்த மாநிலங்கள் தேர்வு பெறுகின்றன என்றால் முறைக்கேடு செய்கிறார்கள் என்பதே எனது கணிப்பு.

சென்ற ஆண்டு தபால்துறைக்கு ஆள் எடுத்தார்கள். இதற்கு தேர்வு எழுத வேண்டும். தமிழ்நாட்டில் வேலை செய்ய தேர்வாகி வந்தவர்கள் யார் என்று பார்த்தால் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். :35_thinking: இவர்கள் "தமிழில்" தேர்வு எழுதி வெற்றி பெற்றார்களாம். ? தமிழகத்தில் தமிழில் எழுதியவர்கள் தோல்வி அடைந்தார்களாம். 

அரியானா தேர்வில் வெற்றி பெறவர்களின் தொலைபேசி எண்ணில் அழைத்துப் பார்த்தபோது, அந்த எண்கள் வேலை செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, இசைக்கலைஞன் said:

அனியாயம் தெரிந்தே நடக்குது .?மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லத என்று சொல்வார்கள்.அப்பம் ஒட்டுப்டாமல் பிரிந்தால் நல்லது.எல்லா ஆண்மாவும் சாந்தி அடையும்.?

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

சந்திரபாபு நாயுடுவை ஊழல் வழக்குகளை வைத்து மிரட்ட முடியவில்லை. அவர்கள் இந்திய ஒன்றிய அரசை வளைக்க முடிகிறது. தமிழகத்தின் ஊழல் பேர்வழிகளால் முடியவில்லை.

ஒரு உதாரணத்திற்கு, வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது என்பதை கையில் எடுத்தது ஆந்திரா. சிறப்பு மாநில அந்தஸ்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. நாங்கள் உங்களுக்கு வரி செலுத்தவில்லை. நீங்களும் மத்திய தொகுப்பில் இருந்து பணம் தர வேண்டாம் என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறது. தமிழக எடுபுடிகளால் இது முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை கடைசி 3-வது இடத்துக்கு தள்ளிய நீட் கொடுங்கரம்!

நினைக்க நினைக்க நெஞ்சு பதறுகிறது... உலகம் முழுவதும் தமிழ்நாட்டு கல்வி கூடங்களில் அதுவும் அரசு பள்ளிகளில் படித்து இன்று லட்சக்கணக்கானோர் வெளிநாடுகளில் கோலோச்சி வருகின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் படிப்பறிவற்றவர்கள்; அவர்களுக்கு கல்வித் தகுதியே கிடையாது என கூனிக் குறுக வைத்திருக்கிறது நீட் தேர்வு முடிவுகள். தமிழகத்துக்கு 35-வது இடமாம்... அதாவது கடைசியில் இருந்து 3-வது இடமாம்,

Only 40% TN Students clear in NEET Exam

37-ல் நாகாலாந்து; 36-ல் டையூ டாமன்... தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை 1,14,302. ஆனால் தேர்ச்சி பெற்றோர் வெறும் 45336. அதாவது 40% மட்டுமே.

எஞ்சிய 60% மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கடந்த காலங்களைப் போல பிளஸ் டூ தேர்வில் 1100க்கும் மேல் நல்ல மதிப்பெண் எடுத்து இயல்பாக மருத்துவ படிப்பு கிடைக்க வேண்டிய விழுப்புரம் பிரதீபா போன்றவர்கள் தோல்வியைத் தழுவி இன்று மரணித்துப் போய்விட்டனர்.

Only 40% TN Students clear in NEET Exam

தமிழ்நாட்டு மாநில கல்வி முறையில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கும் என தலையால் அடித்து சொல்லியும் அனிதா தன் உயிரையே மாய்த்த போதும் கேளா அரசாக மத்திய அரசு இருந்து வருகிறது. இப்போது விழுப்புரம் பிரதீபா மாண்டு போய் விட்டார்.

விழுப்புரத்து கீர்த்திகா மாண்டு போக முயற்சித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய அநீதி?

கல்வியில் சிறந்த தமிழகத்தை கட்ட கடைசிக்கு தள்ளி டெல்லி கொடூரமாக சிரிக்கிறது.. இது நம்மை திட்டமிட்டு அவமானப்படுத்துகிற கல்வித் தரப்படுத்துதல் என்பது அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் நீட் எனும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/only-40-tn-students-clear-neet-exam-321613.html

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

எவ்வாறு ஆந்திரா நீட்டினை வெட்டியது? தமிழகம் அதை ஏன் செய்ய முடியவில்லை? 

இம்முறை ஆந்திர தெலுங்கானா இரண்டுமே நீட் தேர்வு நடந்த மாநிலங்களே 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎5‎/‎2018 at 3:33 AM, இசைக்கலைஞன் said:

இந்தியாவில் இரண்டு வகை பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் உண்டு.

1) மாநில பாட திட்டங்கள்
2) மத்திய (அரசு) பாடத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் பலர் மாநிலப் பாடத்திட்டங்களில் படிக்கின்றார்கள். நானும் அதில்தான் படித்தேன். இரண்டு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படும் சிலபஸ் வேறானவை.

இப்போது மத்திய அரசு நீட் தேர்வுகளை புகுத்தியுள்ளது. அதாவது பிளஸ் 2 பாஸ் செய்தவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த நீட் பெறுபேறுகளின் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்கள் கொடுக்கப்படும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்த நீட் தேர்வின் கேள்விகள் மத்திய அரசு பாடத்திட்டங்கள் அடிப்படையில் கேட் கப்படும். ஒரு உதாரணத்துக்கு, இலங்கையில் தாவரவியல் படித்த ஒருவரை இந்தியாவில் பரீட்சை எழுத வைப்பது போன்றது இது.

பாடத்திட்டங்கள் இவ்வாறு வெவ்வேறாக இருப்பதால் தனியார் கல்விகூடங்களில் சிறப்பு பயிற்சி பெற்றால் மட்டுமே இதில் ஓரளவு தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த தனியார் பயிற்சிகளுக்கு இலட்சக்கணக்கில் பணம் அறவிடப்படுகிறது. இது பிரதீபா போன்ற ஏழை மாணவிகளுக்கு எட்டாக்கனி. ஆனால் அகில இந்திய அளவில் 12 ஆம் இடத்தைப் பெற்ற கீர்த்தனா எனும் மாணவி (இவர்தான் தமிழகத்தில் முதலிடம் பெற்றவர்) இது முடிந்த காரியம். இவரது தாயும், தந்தையும் மருத்துவர்கள். இரண்டு வருடங்கள் தனியார் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பேச்சை பார்க்கும்போது ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரிகிறது.

ஆகவே, ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இனிமேலும் மருத்துவக் கனவில் இருப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.

அதைவிடவும், தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் (அரசு நடத்துபவை) உள்ளன. இவை தமிழக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டவை. பீகார், உபி போன்ற பெரிய மாநிலங்களில்கூட விரல் விட்டு எண்ணும் அளவில்தான் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இப்போது அந்த வெளி மாநில மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் தமிழக கல்லூரி இடங்களை எடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது.

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.

எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2018 at 11:17 AM, ரதி said:

நீட் தேர்வுகள் எது சம்மந்தமானவை?... மருத்துவம்,பொது அறிவு  அல்லது ஆங்கிலம் 

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Physics, Chemistry and Biology, ஆகிய பாடங்களே NEET  தேர்வில் பரீட்சிக்க  படுகின்றன.

நன்றி...தமிழ்நாடு மருத்துவ துறையில் சிறந்து விளங்குறது....ஆனால் அங்கு வேலை செய்பவர்கள் தமிழ்நாட்டுக்குள் மட்டும் படித்தவர்களா என்பது எனது கேள்வி ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

NEET: Trichy Student commits suicide

நீட் தேர்வில் தோல்வி - திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-trichy-student-commits-suicide-321800.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

8 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

மணியான... கருத்து,  கிருபன்.  ?
இசை.... வருவார்... என்று, நான் நினைக்கவில்லை. ?
ஆனால்.... கட்டாயம்  வரவேண்டும்.  சீமானை பற்ரி, என்னிடம்   நாலு கேள்வி,  பாக்கி இருக்கு...... ?️‍?️

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இசைக்கலைஞன் சீமானைக் கடாசிவிட்டு இந்தத் திரியில் எழுதியதுமாதிரி உருப்படியாக தொடர்ந்தும் எழுதவேண்டும்?

என்ட மச்சான் குறைந்த பட்சம் நான் எழுதினத்திற்காவது பதில் சொல்லி இருக்கலாம் 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2018 at 11:29 AM, ரதி said:

இசை பதிலுக்கு நன்றி ... மத்திய அரசின் பாடத் திடடத்திற்கும்,மாநில அரசின் பாட திடட சிலபஸ் வேறானாலும் அது மருத்துவம் சம்மந்தமானவை தானே.....சில நேரம் மாநில அரசின் பாடத் திடடமானது சர்வதேச தரத்துக்கு இல்லாமையால் தான் இந்த திடடத்தை கொண்டு வந்தார்களோ தெரியாது.

எது எப்படி இருந்தாலும் இதற்காக தற்கொலை செய்வது என்பது கோழைத்தனமானது

மத்திய பாடத்திட்டம் என்பதை முதலில் பார்ப்போம். இந்த மத்திய பாடத் திட்டத்தை முதலில் கொண்டு வந்த நோக்கம் என்பது மத்திய அரசு பணிகளில் உள்ளவர்கள் நாடு முழுமைக்கும் எங்காவது இடமாற்றலில் போக நேரிடும். அப்போது அவர்களது குழந்தைகள் ஒரே பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் அல்லவா.. அதற்காக CBSE எனப்படும் இந்த பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. மற்றும்படி, அரசியலமைப்பு சட்டத்தின்படி கல்வி என்பது மத்திய / மாநில பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசுக்கும் அதனை நிர்ணயிக்கும் உரிமை உள்ளது. அதனை பறிக்கும் ஒரு சட்ட வடிவமே இந்த நீட் என்பது.

எந்த பாடப் பரப்பாக இருந்தாலும் ஒரு மனிதனால் அதனை முழுமையாக படித்துவிடவே முடியாது, சாகும் வரையில்கூட.

ஒரு உதாரணத்துக்கு, தாவரவியல் என்றால் அதில் மாநில பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மத்திய பாடத்திட்டத்தில் சில பாடங்கள் இருக்கும். மாநில பாடத்திட்டத்தில் கத்தரிக்காயை படிப்பதாக வைத்துக்கொள்வோம். மத்திய பாடத்திட்டத்தில் அவரைக்காய் பற்றிய படிப்பாக இருந்தால் எப்படி அதை எழுதுவது? இந்த மாணவர்களின் வயது 17, 18 என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கே மாநில பாடத்திட்டத்தில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். எல்லோருக்கும் +2 தேர்வு முடிவுகளே பிரதானமாக போய்விட்டதால் +1 பாடங்களை சில உயர்ந்த பாடசாலைகளில் கற்பிப்பது இல்லை என்று சொல்கிறார்கள். இது அறிவுச் செழுமையை குறைக்கும் செயல். அதனால்தான், இப்போது +1 கூட பொது தேர்வு என கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்த "நீட்" என்பது அதிக தரம் வாய்ந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் என்று சொன்னார்கள். ஆனால் பீகாரில் தேர்வு பெற்ற முன்னணி மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வுகளில் அரைகுறையாக பாஸ் செய்தவர்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

48 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

அந்த மாணவி... 9,ம் மாடிக்கு ஏறிப்  போய், கீழே குதிக்கும் மட்டும் படம் எடுத்தவர்களை.. என்னவென்று சொல்வது. ?

இறந்த மாணவியும் அவர் இறக்கும் வரை படம் எடுத்த கூட்டமும் இந்தியாவின் இரட்டை முகத்தை காட்டுகின்றது. இதே போல் தான் எல்லா விசயங்களும். வாழ்வுக்காக போராடிய தமிழர்களை தமிழக காவல் துறையே சுட்டுக்கொல்கின்றது. உலக அழகிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் கொல்லப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவிக்கமாட்டார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனை நியாப்படுத்தி ஊர்வலம் போகுது ஒரு கூட்டம். அரசியல் புலனாய்வு ஒட்டுமொத்த அறிவு வளம் ஊடகத் துறை சட்டம் எல்லாம் கேலிக்குரியதாகி வெள்ளையரின் ஆட்சியில் இருந்ததை விட மோசமாக காப்பரேட்டுகளுக்கு அடிமையாகின்றது இந்தியா. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.