Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் - மாவை

Featured Replies

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் - மாவை

 

 
 

(ஆர்.ராம்)

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை இரவு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், கேவிந்தன் கருணாகரம் மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போது, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்கு ரீதியாக ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுவது தொடர்பிலான சத்தியக்கூறுகள் தென்படுகின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

அச்சமயத்தில் வடமாகாண சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன. குறிப்பாக மாவை.சோ.சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பொருத்தமானது என கூட்டமைப்பிற்குள்ளும் வெளியிலும் கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில் அவருடைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பில் வினவப்பட்டிருந்தது. 

அதன்போது கருத்து வெளியிட்டிருந்த மாவை.சோ.சோனாதிரா, 

வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை போட்டியிடுமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இருப்பினும் சிலபல காரணங்களுக்காக அந்த தீர்மானத்தினை நடத்த முடியாது போயிருந்தது. 

குறிப்பாக நான் போராட்ட பாதையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தமையால் அக்காலத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ஷ அதனைப் பயன்படுத்தி அரசியல் இலபம் ஈட்டிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம். அதன் காரணத்தால் நாம் வேறொரு தெரிவுக்குச் சென்றிருந்தோம். 

இருப்பினும் பகுதியளவில் முதலமைச்சர் பதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டபோதும் அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. ஆவ்வாறான நிலையில் இம்முறை முதலமைச்சர் வேட்பாளராக எனது பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி செய்து முன்மொழியுமாகவிருந்தால் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் களத்தில் குதிப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை கூட்டி முதலமைச்சர் வேட்பாளர் உட்பட மாகாண சபை தேர்தலை முகங்கொடுத்தல் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவது என்ற தீர்மானத்துடன் அக்கூட்டம் நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/34636

  • கருத்துக்கள உறவுகள்

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.

 

Quote

குறிப்பாக நான் போராட்ட பாதையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தமையால் அக்காலத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ஷ அதனைப் பயன்படுத்தி அரசியல் இலபம் ஈட்டிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம். அதன் காரணத்தால் நாம் வேறொரு தெரிவுக்குச் சென்றிருந்தோம். 

எச்சூஸ்மி :grin::grin:

15 minutes ago, nunavilan said:

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது.

நான் வளக்கிற பூனைக்குட்டியை வேணுமெண்டால் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துங்கள் - ஆதரிக்கின்றேன்

இந்தாள் வேண்டவே வேண்டாம். ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜீவன் சிவா said:

நான் வளக்கிற பூனைக்குட்டியை வேணுமெண்டால் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துங்கள் - ஆதரிக்கின்றேன்

இந்தாள் வேண்டவே வேண்டாம். ?

உங்களுக்கு தான் ஓட்டுப் போடும் உரிமை கூட இல்லையே! ??

  • கருத்துக்கள உறவுகள்

ஊரை  காவல் காத்த திறத்தில, வடை மாலை கேட்டாராம்  வயிரவர்,
என்ற கதையாக இருக்கு, மாவையின்  ஆசை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2018 at 1:23 PM, ஜீவன் சிவா said:

நான் வளக்கிற பூனைக்குட்டியை வேணுமெண்டால் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துங்கள் - ஆதரிக்கின்றேன்

இந்தாள் வேண்டவே வேண்டாம். ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பதவி ஆசை போகவில்லை.

அதுசரி.. இவர் போராடப் போய் இவ்வளவு ஆண்டுகளில்.. மக்களுக்காக போராடிப் பெற்றுக் கொடுத்தது என்ன.

மகனுக்கு அரசியல் காட்டினதும்.. தான் மாடி வீடு கட்டினதையும் தவிர. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/7/2018 at 6:54 PM, நவீனன் said:

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எனது பெயர் முன்மொழியப்பட்டால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

ஊரிலை இப்பவும் பெரியாக்கள்    சொல்லி  பேசுவினம்.......... 

"டேய்  நீ அப்ப இருந்தமாதிரியே இப்பவும் அதே குளப்படியோடை தான்   இருக்கிறாய்...இன்னும் திருந்தேல்லை." எண்டு  :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.