Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு கிளைமோர் இலக்கு சுமந்திரனாம்; ஏற்பாடு யார் தெரியுமா?: பொலிசார் அதிர்ச்சி தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கிளைமோர் இலக்கு சுமந்திரனாம்; ஏற்பாடு யார் தெரியுமா?: பொலிசார் அதிர்ச்சி தகவல்!

June 22, 2018
imageproxy-696x464.jpg

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர் என நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உஷார்ப்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடியுடன் கிளைமோர்க் குண்டும் மீட்கப்பட்டுள்ளன. எனவே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்யும் நோக்குடன் அவை எடுத்துவரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன என பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வீதிச் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியை வழிமறித்து சோதனையிட முற்பட்ட போது, அதன் சாரதியும் மற்றொருவரும் தப்பிஓடிவிட்டனர். முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது, அதற்குள்ளிருந்து 20 கிலோ கிராம் எடையுடைய கிளைமோர் குண்டு, அதனை மறைந்திருந்து இயக்கும் ரிமோல்ட் உள்ளிட்ட கருவிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை மற்றும் புலிக் கொடி ஒன்று மீட்கப்பட்டன என்று இன்று காலையில் பொலிஸார் கூறியிருந்தனர்.

முச்சக்கர வண்டி சோதனை நடத்தப்பட்ட இடத்துக்கு அண்மையில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் இடம்பெறுகின்றன” என்று பொலிஸ் உயர்மட்டம் தெரிவிக்கின்றது.

மதியமளவில் இன்னொருவரும் கைதாகினார்.

கைது செய்யப்பட்ட இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். தப்பி ஓடியவரும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என பொலிசார் கூறுகின்றனர். நெடுங்கேணிப் பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் பகுதி வழியாக புதுக்குடியிருப்பு வீதியில் பயணித்த போதே முச்சக்கர வண்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. தமக்கு என்ன நோக்கம் எனத் தெரியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். தப்பிஓடியவருக்குதான் கிளைமோர் உள்ளிட்டவை தொடர்பான தகவல் தெரியும் என அவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்” என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.

 

http://www.pagetamil.com/9226/

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் புதிய நாடகம்!

 

அடுத்த "விஜய் அவார்ட்ஸ்" நிகழ்ச்சியை முல்லைத்தீவில் நடாத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நாடகங்களை எத்தனை தடவை தமிழ் மக்கள் பார்த்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்குமாத்து சுமந்திரனுக்கு,  குஞ்சம்  கேட்குதோ....
அதற்கு...  ஏனப்பா.... போராடி களைத்துப்  போன, புலிகளை காவு கேட்கிறாய்.....
அரசியல் செய்யுங்கள், ஆனால்... புலிகளுடன் அரசியல் செய்ய வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை.. திரைக்கதை.. வசனம்.. மற்றும் ஏற்பாடுகள்.. சொறீலங்கா பாதுகாப்பு அமைச்சு.

நிதி.. மற்றும் இயக்கம்.. சுமந்திரன் அண்ணாச்சி. ?

பலிக்கடா.. அப்பாவி தமிழ் இளைஞர்கள். 

இது எப்பிசாட் - 2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.