Jump to content

ஆடிக்கூழ் செய்முறை


Recommended Posts

பதியப்பட்டது

ஆடிக்கூழ் செய்முறை

 
photo aadikool_zps7a77bbd0.jpg



5- 6 பேருக்கு போதுமானது

தேவையான பொருட்கள் :
 
  1. அரிசி - 1/2 சுண்டு
  2. வறுத்த பயறு - 100 கிராம்
  3. கற்கண்டு - 200 கிராம்
  4. தேங்காய் - 1
  5. உப்பு - அளவிற்கு
  6. தண்ணீர் - 14 தம்ளர்

செய்முறை :
  • அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .
 
  • ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .
 
  • பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .
 
  • பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .
 
  • பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க 
 
  • கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .

http://yarlsamayal.blogspot.com/2013/03/blog-post_1.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மா உருண்டையும்,தேங்காய் சொட்டும் வறுத்த பயறும் மாறி மாறி கடிபடும் பொழுது செமையாய் இருக்கும்......! சூத்தை பல் உள்ளவர்களும், பல்லு கட்டியவர்களும் எச்சரிக்கையாய் இருக்க வேணும்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கூழைக் காய்ச்சி தாராளமா குடியுங்கோ.

இரவில கொஞ்சம் தள்ளியும் படுங்கோ. அல்லது தகுந்த பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யுங்க.

ஆடி மாதம்.... சேர்ந்தால், சித்திரை பிள்ளை பிறக்கும். குடுமபததுக்கு ஆகாதாம்.

?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி தாராளமா குடியுங்கோ.

இரவில கொஞ்சம் தள்ளியும் படுங்கோ. அல்லது தகுந்த பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யுங்க.

ஆடி மாதம்.... சேர்ந்தால், சித்திரை பிள்ளை பிறக்கும். குடுமபததுக்கு ஆகாதாம்.

?

இப்ப இருக்கிறவை உந்த/அந்த விசயத்திலை பழம் திண்டு கொட்டை போட்டவையள் கண்டியளோ Will he catch anything?

என்ரை காலத்து ஆக்களைப்போலை அவசர குடுக்கையள் இல்லை பாருங்கோ The official hug emoticon

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.