Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TRIBUTE TO KALAIGNAR
கலைஞர் அஞ்சலி
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், 

கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.

குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதே

உன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். 

ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவிடவும் கலைஞருக்கோர் மணிமண்டபத்தை அமைப்பீரோ?

முஸ்லிம்களை அரவணைத்து நலிந்தார்க்குச் சமுகநீதி வளங்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்கிய அரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஆழுமையை 

கலைஞரை ஐம்பூதங்களாய் ஏற்று நிமிர்க தமிழகமே. 
.

.

(நான் ஒருவனல்ல 30 லட்சம் ஈழத் தமிழ் மக்கள் கடந்து எதிர்காலத்துக்குள் முன்செல்லவேண்டிய பாதை என் கவிதைகள்)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த கலைஞருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே நீங்கள்மட்டும் தமிழரினவிரோதிக்கு அஞ்சலி செய்யுங்கள் எதற்காக முப்பது இலட்சம் ஈழத்தமிழர்களையும் உங்களுடன் கூட அழைக்கிறீர்கள்  நான் முதலையோ மூர்க்கணோ தெரியாது ஆனால் தமிழினத்துரோகி முத்துவேலு கருனாநிதி என்பதிலிருந்து விலகமாட்டேன். நேற்றைய தினம்வரையில் யாழ் களத்தின்மீதும் அதன் நிர்வாகிகள்மீதும் மிகவும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தேன் ஆனால் அனைத்தும் கருனாநிதிக்காற்றில் கரைந்துபோய்விட்டது. இந்தியாவோ அன்றேல் தமிழ்நாட்டின் சகோதரர்களோ எமக்காக எதிர்காலத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட மாட்டார்கள் அத்துடன் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளும் அடக்கம் காரணம் இந்தியாவின் வல்லமைமிக்க உளவுப்பிரிவு அதற்கான காய்நகர்த்தல்களைக் கச்சிதமாகச் செய்துமுடித்திருக்கின்றது தவிர நாம் காணும் எமது உரிமைமீட்பில் இனிமேல் யாரது உதவியும் எதிர்காலத்தில் இருக்காது எமது விடுதலை சில காலங்கள் என்ன பல தசாப்தங்கள் பின்னோக்கிப்போகலாம் ஆனால் எமதுரிமையை நாமே வென்றெடுப்போம் அது எனது அன்றேல் உனது பேரனது காலத்திலோ அன்றேன் பேரனின் பேரஙாலத்திலோ கைகூடலாம் ஆனால் துரோகிகளை வாழ்த்தி பிச்சை கேட்பது கேவலம். எதிர்காலத்திலும் அப்படியே நெஞ்சில் துணிவிருந்தால் களத்துக்கு வாருங்கள் இப்படி நீங்கள் தமிழ்நாட்டில் காலம்தள்ள முப்பது இலட்சம் ஈழத்தமிழர்களையும் சாட்சிக்கு இழுக்காதீர்கள். 

நாம் அழிந்துபோவதாகவே இருக்கட்டும் நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என வாழ்ந்து வீழ்ந்துபோவோம் ஆனால் இப்படியான துரோகிகளுக்குச் சாமரம் வீசவேண்டிய தேவை இல்லை.  

உலகிலுள்ள ஈழத்தனிழனில் எவனும் இவரது மரணத்துக்கு மண்டியிடமாட்டான் சில புல்லிருவிகளும் கோடரிக்காம்புகளுமே கருனாநிதி எனும் ஈழத்தமிழர்களது அழிவுக்குக் கொள்ளிவெட்டிக்கொடுத்த கோடரிக்காம்பின் இழப்புக்கண்டு கலங்குவார்கள் என்ன இப்போ யாழ்களமும் இப்போது சேர்ந்துவிட்டது. 

 

கவிஞர் நீங்கள் கோழியைப் பாடும்வாயால் குஞ்சைப் பாடியிருந்தால் பருவாயில்லை எமது அரும்பாடுபட்டுக் கட்டமுயன்ற விடுதலை எனும் மாலையை குலைத்துப்போட்ட குரங்கைப்பாடுகிறீர்கள்

 

முப்பது இலட்சம் என எழுதாதீர்கள் என்னையும் எனது பிள்ளைகள் இருவர் எனது மனைவி ஆகியோரைத் தவிர்த்து இருபத்தியொன்பது இலட்சத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தியாறு ஈழத்தமிழர்கள் என வேண்டுமாகில் எழுதுங்கோ. என்னைப்பொறுத்தவரை இவர் ஈழத்தமிழர் போராட்டத்தையும் அவர்கள் கனவுகளையும் அம்மக்களையும் அழித்த இனவழிப்புத் துரோகி மட்டுமே.

இனிமேல் யாழ் களத்துக்கும் எனக்குமான உறவு தாமரை இலைத்தண்ணிர் போலானதாகும்

 

யாமார்க்கும் குடியல்லோம்

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு,

முப்பது இலட்சம் தமிழர்களின் பிரதிநிதி போன்று கவிஞர் கூறியதை நானும் ஒப்பவில்லை. ஆனால் கவிஞர்களுக்கு எப்போதும் பொய்யழகு என்று விட்டுவிடலாம்!

நிற்க, கலைஞரையோ தி.மு.க வையோ நானும் ஆதரிப்பதில்லை. ஆனால் அவரை தமிழினத் துரோகி என்று எழுந்தமானத்திற்கு சொல்வதை ஏற்கமுடியாது. இது ஒன்றில் எமது இயலாமையை அல்லது குற்றவுணர்வை மறைக்க முயற்சிக்கும் ஒரு சொல்லாடலாகத்தான் பார்க்கின்றேன். இன்னோர் திரியில் சொன்னதுபோன்று எமது அழிவுக்கு நாங்கள்தான் காரணம். அதை நாங்கள் உணருமட்டும் நமக்கு உய்வில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். ஆகக்கூடியது ஐரோப்பியத்தெருக்களில் பதாகைகளைப்பிடித்து அலறமட்டுமே தெரிந்தவர்கள் இல்லாதுவிடின் ஐநா முன்றலில் மண்ணெண்ணை ஊற்றி எம்மைநாமே பற்றவைக்கலாம்.

ஆனால் முத்துவேலு கருனாநிதி அப்படியில்லை பலகோடு தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு கட்சியின் தலைவர்.
கடந்த ஓரிரு வருடங்களாக சிந்தனா சக்தி குன்றிப்போய் அவர் என்னத்தைச் சொல்ல வருகிறார் எனத்தெரியாது வாழ்ந்து இறுதிநாதளில் மூளை முற்றிலுமாகச் செத்துபோய் மரணப்படுக்கையில் கிடந்தபோதும் இந்தியாவின் முதன்மை அரசியல்வாதுகள் அனைவரும் வரிசைகட்டி வந்து நின்றார்களே 

அப்போ ஈழத்தமிழர்களை அழிக்கும்போது எந்த அளவுக்குப்பலமுடையவராக இருந்திருப்பார், சோணியாகாந்தியினதும் காங்கிரசினதும் இந்திய உளவுத்துறையினதும் பழிவாங்களுக்கு உடந்தையாகி எமை அழிப்பதில் உறுதுணை நின்றாரே 

அப்போது ஈழத்தமிழர்களை ஆதரித்துநின்ற இனாழிப்புக்கெதிராய் குரல்கொடுத்து நின்ற தமிழர் ஆதரவாளர்கள் மன்றாடிக்கேட்டார்களே மத்திய அரசிலிருந்து விலகு காங்கிரஸ் அரசைக்கலை உனது தமிழ்நாட்டுப்பதவிக்குப் பங்கம்வந்தால் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு மீண்டும் நீ பதவிக்குவர ஆவனசெய்வோம் என ஆனால் இவர் என்னசெய்தார் போர் நிறுத்தம் வந்ததெனப் பொய்சொல்லி எமை அடியோடு அழிப்பதற்கு கோடரிக்காம்பாய் நின்றாரே அது நியாயம் அப்படித்தானே 

மிகப்பெரிய அரசியல் சாணக்கியம் அனுபவம் இவை அனைத்தும் இருந்து அழிவைத்தடுக்க வழிதெரிந்தும் காங்கிரசுடனும் மத்திய உளவுத்துறையுடனும் கைகோர்த்து எமது விடுதலைப்போராட்டத்தையும் எம்மினத்தின் ஒருபகுதியையும் அழிக்கத் துணை நின்றவரை நான் அஞ்சலி செய்தால் எனைப்பெற்றவள் என்மேல் கோவம்கொள்வாள் நான் என் வாழ்நாளில் ஒருமுறையேனும் மாவீரனின் வித்துடலுக்கு மலர்வைத்து வணங்கியதற்கு அர்த்தம் இருக்காது.

புலவர்க்குப் பொய் அழகு ஆனால் பொய்யரைப் பாடும் பாடலில் பொய் அழகில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கிருபன் said:

எழுஞாயிறு,

முப்பது இலட்சம் தமிழர்களின் பிரதிநிதி போன்று கவிஞர் கூறியதை நானும் ஒப்பவில்லை. ஆனால் கவிஞர்களுக்கு எப்போதும் பொய்யழகு என்று விட்டுவிடலாம்!

நிற்க, கலைஞரையோ தி.மு.க வையோ நானும் ஆதரிப்பதில்லை. ஆனால் அவரை தமிழினத் துரோகி என்று எழுந்தமானத்திற்கு சொல்வதை ஏற்கமுடியாது. இது ஒன்றில் எமது இயலாமையை அல்லது குற்றவுணர்வை மறைக்க முயற்சிக்கும் ஒரு சொல்லாடலாகத்தான் பார்க்கின்றேன். இன்னோர் திரியில் சொன்னதுபோன்று எமது அழிவுக்கு நாங்கள்தான் காரணம். அதை நாங்கள் உணருமட்டும் நமக்கு உய்வில்லை.

 

நீங்களும் உங்களைப்போன்றவர்களும் திரும்பத்திரும்ப அதையே பேசுவதான் நாங்களும் அவ்வாறாகவே பேசவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 கருணாநிதியின் பொய் உண்ணாவிரதமும் பொய் செய்தியும் எட்டடுக்கு இலக்கண வார்த்தையுமே ஈழத்தமிழர்களின் கோபத்திற்கு காரணம்.
மற்றும்படி அவர் தமிழ் விற்பன்னர். போட்டி போட யாருமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் உங்களைப்போன்றவர்களும் திரும்பத்திரும்ப அதையே பேசுவதான் நாங்களும் அவ்வாறாகவே பேசவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 கருணாநிதியின் பொய் உண்ணாவிரதமும் பொய் செய்தியும் எட்டடுக்கு இலக்கண வார்த்தையுமே ஈழத்தமிழர்களின் கோபத்திற்கு காரணம்.
மற்றும்படி அவர் தமிழ் விற்பன்னர். போட்டி போட யாருமில்லை.

ஏதோ கலைஞர் கருணாநிதியோடு கலந்தாலோசித்து இறுதிப்போரை தொடங்கிய மாதிரியும் அவர் உதவுகின்றேன் என்று வாக்குக்கொடுத்து ஏமாற்றிய மாதிரியும் இருக்கின்றது இந்தக் கோபப்படும் ஈழத்தமிழர்களின் நடத்தை.

அவர் ஏமாற்றியதைவிட நாங்கள் அவரை நம்பி ஏமாந்துபோனோம் என்பதுதான் சரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கிருபன் said:

ஏதோ கலைஞர் கருணாநிதியோடு கலந்தாலோசித்து இறுதிப்போரை தொடங்கிய மாதிரியும் அவர் உதவுகின்றேன் என்று வாக்குக்கொடுத்து ஏமாற்றிய மாதிரியும் இருக்கின்றது இந்தக் கோபப்படும் ஈழத்தமிழர்களின் நடத்தை.

அவர் ஏமாற்றியதைவிட நாங்கள் அவரை நம்பி ஏமாந்துபோனோம் என்பதுதான் சரி.

சம்பந்தமில்லாத விடயத்திற்கு ஏன் கருணாநிதி உண்ணாவிரமிருந்தார்?
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் கருணாநிதியின் பிரதிநிதிகள் ஏன் மகிந்தவை சந்தித்து பரிசுகள் கொடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தமில்லாத விடயத்திற்கு ஏன் கருணாநிதி உண்ணாவிரமிருந்தார்?
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் கருணாநிதியின் பிரதிநிதிகள் ஏன் மகிந்தவை சந்தித்து பரிசுகள் கொடுக்க வேண்டும்?

கலைஞர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி. அவர் தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க நாடகம் ஆடினார். அதை நம்பி யுத்தம் முடிவுக்கு வரும் என்று நினைத்த நாங்கள்தான் உண்மையில் மூடர்கள்.

ஒரு நாட்டின் பிரதிநிதிகள் இன்னோர் நாட்டின் தலைவரைச் சந்திக்கும்போது பரிசுகள் கொடுப்பது வழனைதானே. புலிகளை வென்றதுக்கு கொடுத்த பரிசு என்று ஏன் வீணான அர்த்தம் கொடுக்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாடல் எல்லாம் எமக்குத் தேவையில்லை.
அதிகாரம் உள்ளவன் அகிலத்தை ஆள்கின்றான்.
அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவனால் மட்டுமே எதுவும்  சாதிக்கலாம்.
அன்று கலைஞரிடம் இருந்த அதிகாரம் எமக்கும் தெரியும்.
அவர் நினைத்திருந்தால் அழிவை நோக்கிச் சென்ற ஈழத்து தமிழர்களுடன் அவரும் சேர்ந்திருக்கலாம்.

தமிழ் தமிழ்  என்று இன்று கூப்பாடு செய்யும் அத்தனைபேரும் அன்று வாய்மூடி மௌனமாகி அவரின் செயலிற்குத் துணை நின்றுவிட்டு இன்றும் வாழாவிருக்கின்றனர்.

நிச்சயமாகக் கலைஞர் ஒரு தமிழ்க்கடல் தான். அந்தக் கடலை இனிமேலும் யாராலும் நீந்திக் கடக்க முடியாது.
ஆனால் கடலைப்போலக் கறை என்ற சொல்லும் தமிழில் இருக்கின்றது.
தமிழுக்கும் அவர்தான்,
தமிழின் பால் கொண்ட அன்பிற்கும் அவர்தான்,
அதேவேளை தமிழ் இனத்திற்கு  ஏற்பட்ட அந்தக் கறைக்கும் அவர்தான் காரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, கிருபன் said:

கலைஞர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி. அவர் தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க நாடகம் ஆடினார். அதை நம்பி யுத்தம் முடிவுக்கு வரும் என்று நினைத்த நாங்கள்தான் உண்மையில் மூடர்கள்.

ஒரு நாட்டின் பிரதிநிதிகள் இன்னோர் நாட்டின் தலைவரைச் சந்திக்கும்போது பரிசுகள் கொடுப்பது வழனைதானே. புலிகளை வென்றதுக்கு கொடுத்த பரிசு என்று ஏன் வீணான அர்த்தம் கொடுக்கவேண்டும்?

நாங்கள் மூடர்கள் என்பது ஒருபுறமிருக்க...... அந்த மூடர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்ததுதான் அவர் தமிழினத்திற்கு செய்த தவறு. எல்லை மீறிப்போய் விட்ட நிலையிலும் தடுக்க ஒரு துரும்பும் இல்லாத நிலையிலும் உண்ணாவிரதமிருந்து   கபட நாடகமாடியதுதான் விரோதமாக மாறியது.

ஒருவருக்கு பரிசுப்பொருள் கொடுக்கும் நேரகாலத்தை வைத்துத்தான் காரணங்கள் கணிப்பிடப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி என்ற கலைஞனை......அரசியல் சாணக்கியனை நான் மதிக்கிறேன்!

அவனது கவித்துவத்தை.....அவனிடம்...தமிழ் வளைந்து குழையும் அழகை.....ரசிக்கிறேன்!

எனினும்....கருணாநிதி என்ற தனி மனிதனின் வாழ்வை...ஒரு சாதனையாக என்னால் பார்க்க முடியவில்லை!

ஊழல்கள்....உட்கட்சிப் பூசல்கள்....விளக்கவியாலாத தனி மனித மரணங்கள் என விரிந்தது தான்....தமிழக அரசின் ஆட்சி!

இந்தியாவின்.....அணு உலைகள்....மனித வாழ்வின் அத்தியாவசியமான...தண்ணீரையும்...காற்றையும் மாசு படுத்தும் தொழிற்சாலைகளின் முன்னெடுப்புகள் போன்றவற்றில்....பல் நிறுவனங்கள் தங்கள் நலனுக்காக....உள்ளூர் விவசாயத்தை படிப் படியாக அழித்தல் என்பவற்றில்...பொதுவாக தமிழக அரசியல் சாணக்கியர்களின் இரகசிய பணப்பரிமாற்றங்கள் நிறைய மறைந்திருக்கின்றன!

காமராஜர், ராஜாஜி , அண்ணாதுரை...எம்.ஜி.ஆர்...போன்றவர்களின் ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது....இவரது இலவசங்களை ஊக்கப் படுத்தும் அரசியல், மது பான நிலையங்களை ஊக்குவிக்கும் அரசியல்...எனக்குப் பிடிக்கவில்லை! 

சில தனிப்பட்ட காரணங்களுக்காக....ஈழ விடுதலைப் போராளிக் குழுக்கள் மீது இவருக்கு..ஒரு காலத்தில் கோபமிருந்தது என்பது என்னவே உண்மை தான்! அவர்கள்....எம். ஜி. ஆரிடம் அதிகம் நெருங்கியதை....இவர் தனிப்பட்ட கோபமாக....எவ்வளவுக்குப் பாதித்து இருக்கின்றது என்பதை....இவரது உண்ணாவிரத நாடகம் தெளிவாக வெளிப்படுத்தியது!

தனிப்பட்ட கோபங்களுக்காகவும்....தனது குடும்ப நலன்களுக்காகவும்.....பழி வாங்குபவன்....ஒரு சாதாரண மனிதன்!

அவன்....ஒரு நாளும்....ஒரு மக்கள் தலைவனாக....உருவாக முடியாது!

தென்னாபிரிக்காவில்....நிறைய நகைகள்....மகாத்மா காந்திக்கு அன்பளிப்பாகக் கிடைத்தன!

ஒரு சாதாரண மனைவியாக....கஸ்தூரி பாய்....அந்த நகைகளை....இந்தியாவுக்கு எடுத்து வர விரும்பிக் காந்தியிடம் மன்றாடினார்!

அப்போது மகாத்மா காந்தி.....அந்த அன்பளிப்புகளில் ஒரு சிறு பொருளேனும் இந்தியாவுக்குத் தன்னுடன் பயணிக்கக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்!

அந்த நிலையில் தான் ஒரு சாதாரணன்.....தலைவனாகப் பரிணமிக்கிறான் என்று நான் நம்புகிறேன்!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.