Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தையிட்­டி­யில் விகா­ரைக்கு அனு­ம­தி­யின்றி அடிக்­கல் வடக்கு ஆளு­நர் நட்டு வைத்­தார்

Featured Replies

தையிட்­டி­யில் விகா­ரைக்கு  அனு­ம­தி­யின்றி அடிக்­கல்

வடக்கு ஆளு­நர் நட்டு வைத்­தார்

download-2-10.jpg

தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யி­னால் நேற்று நடப்­பட்­டது. விகாரை அமைப்­ப­தற்­காக ஆவ­ணங்­கள் வலி.வடக்கு பிர­தேச சபை­யி­டம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தேச சபை அனு­மதி வழங்­காத நிலை­யி­லும் விகாரை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­டுள்­ளது.

தையிட்­டி­யில் போருக்கு முன்­னர், பிக்­கு­க­ளுக்­குச் சொந்­த­மான காணி இருந்­தது. போர் நட­வ­டிக்­கை­க­ளால் அந்­தக் காணி­யி­லி­ருந்து அவர்­கள் வெளி­யே­றி­யி­ருந்­தார்­கள்.

தையிட்­டிப் பகுதி விடு­விக்­கப்­பட்­ட­தும் அந்­தக் காணிக்கு அவர்­கள் மீள­வும் திரும்பி வந்து, காணியை அள­விட்­டி­ருந்­தார்­கள். இந்த நிலை­யில் விகா­ரைக்­கான அடிக்­கல் நேற்று நடப்­பட்­டுள்­ளது. இந்த நிகழ்­வில் பெரு­ம­ளவு இரா­ணு­வத்­தி­ன­ரும் பங்­கேற்­றி­ருந்­தார்­கள்.

https://newuthayan.com/story/10/தையிட்­டி­யில்-விகா­ரைக்கு-அனு­ம­தி­யின்றி-அடிக்­கல்.html

  • கருத்துக்கள உறவுகள்

காகித தொழிற்சாலையை பெருப்பிகிறார்களோ இல்லையோ சொல்ல  தெரியவில்லை. ஆனால் புத்தர் சிலைகள் தொடர்ந்து வடக்கு கிழக்கில் முளைக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, nunavilan said:

காகித தொழிற்சாலையை பெருப்பிகிறார்களோ இல்லையோ சொல்ல  தெரியவில்லை. ஆனால் புத்தர் சிலைகள் தொடர்ந்து வடக்கு கிழக்கில் முளைக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

தமிழர்கள் புத்தரையும் கடவுளாக ஏற்று வணங்கிவந்தவர்கள் இன்று புத்தர் சிலையைக் கண்டாலே முகம்சுழிக்கும் தமிழர்களையும் காணமுடிகிறது. 

பள்ளி வாசலை விட புத்தர் எமது கலாசாரத்துடன் இணைந்தவர் எவ்வளவோ மேல்

  • தொடங்கியவர்

நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும் விகாரையாக திஸ்ஸ விகாரை அமைய வேண்டும்…

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை தயிலிட்டி திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 

Regi-jaffna.png?resize=800%2C450
மாகாத்மாகாந்தி, நெல்சன்மண்டேலா, அன்னை திரேசா, ஆப்பிரகாம்லிங்கன் ஆகியோருக்கு முன்பதாகவே இரக்கம், கருணை, அன்பு உள்ளிட்ட தர்மத்தை போதித்தவர் புத்த பெருமான் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக அழிவடைந்த காங்கேசன்துறை தையிலிட்டி திஸ்ஸ விகாரையினை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான தொடக்க விழாவில் நேற்று (22) கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் தேவையாக இருப்பது புத்த பெருமான் சொன்ன தர்மம். மீள் புனர்நிர்மாணம் செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இந்த விகாரை சாந்தி சமாதானம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான மத்தியஸ்தலமாக அமைய வேண்டும் என்பது எனது வேண்கோளாக இருக்கின்றது. இந்த விகாரை ஒரு தனிப்பட்ட விகாரையாக இருக்க முடியாது சிங்கள பௌத்த சமயம், சீன பௌத்தம் சமய, கொறிய பௌத்த சமயம் என்று சொல்ல முடியாது. மனித நேயத்தை விரும்புகின்ற அனைவருக்கும் பௌத்த சமயம் சொந்தமானது எனத் தெரிவித்தார்.

Thisa-vaharai3.png?resize=800%2C450
யுத்தத்தினால் துக்கமடைந்துள்ள, நலிவுற்றுள்ள, மக்களின் துயர்துடைக்கும் ஸ்தலமாகவும் சமாதானம் நல்லிணக்கம் என்பவற்றிற்கான செய்தியை இங்குள்ள மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லும் ஸ்தலமாகவும் அமைய வேண்டும் என விரும்புகின்றேன்.

பௌத்த மதம் இந்துக் கடவுள்களையும் விகாரைக்குள் வைத்து பூசிக்கின்றது. கிறிஸ்தவ ஆலயத்தில் இந்து, பௌத்த தெய்வங்களை காண முடியாது. முஸ்லீம் சமயமும் அவ்வாறுதான். ஆனால் பௌத்த விகாரையில் முருகன், கணபதி, காளி, பத்தினி தெய்வங்கள் உள்ளே இருக்கின்றது. அதேபோன்று கிறிஸ்தவ சமயத்தை, முஸ்லீம் சமயத்தை பின்பற்ற வேண்டுமானால் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும் ஆனால் புத்த சமயத்தினை பின்பற்ற பெயர்மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

Thisa-vaharai2.jpg?resize=800%2C534
இங்கே இருக்கின்ற பௌத்த தேரர்களிடம் நான் பணிவாக கேட்டுக்கொள்வது. இப்பிரதேசத்திலே வாழ்க்கின்ற மக்களுடன், ஏனைய சமயத் தலைமைகளுடன், அமைப்புக்களுடன் சினேகபூர்வமாக இருந்து கொண்டு நாட்டின் நன்மைக்காக நல்லிணகத்தை ஏற்படுத்த செயற்படுமாறு வேண்டிக்கொள்கின்றேன். இங்கே தமிழில் புத்த பெருமானின் போதனைகளை தேரர்கள் சொல்லவேண்டும் அப்போதுதான் இப்பிரதேச மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். வேற்றுமை உணர்வு ஏற்படாது போகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த திஸ்ஸ விகாரையை மீளவும் புனரமைப்பதற்காக அதற்கு சொந்தமான காணியை இனங்கண்டு கொள்வதற்காக அதன் உண்மையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனுமதி வழங்கிய அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம சேவையாளர் உள்ளிட்ட அரச ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். என்று தெரிவித்தார்.

Thisa-vaharai1.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/92480/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

நலிவுற்ற தமிழ் மக்களின் துயர்துடைக்கும் விகாரையாக திஸ்ஸ விகாரை அமைய வேண்டும்…

ரெஜி­னோல்ட் குரே

நலிவுற்ற மக்கள் துயர் துடைக்க புத்தவிகாரையா?   சார் தமாஸ் பண்ணுறாரு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நலிவுற்ற மக்கள் துயர் துடைக்க புத்தவிகாரையா?   சார் தமாஸ் பண்ணுறாரு

அவர் தமாசு பண்ணவில்லை,  'இனம் இனத்தோடு சேரும்.' 'மொட்டை மொட்டைகளோடு சேரும்.' அவ்வளவுதான் சாமியாரே...!! ?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன குரே சாருக்கும் ஆமத்துருமாரு பகல்லை நட்சத்திரம் காட்டிபுட்டாங்களா ? ரண்டு அகப்பை சீமெந்தை அள்ளிப்போட்டுட்டு ஆளு இந்த காட்டு காட்டுறாரு. எனக்கென்னவோ இது அத்திவாரம் போடுறதா தெரியலை. ஏதோ ஒண்ணு செய்ய தமிழன்ரை நாடிபுடிச்சு பார்க்க ஒரு சந்தர்ப்பம். மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சிலையிருந்து விகாரைகட்டுமானப்பணிக்கும் காசு ஒதுக்கிறதிட்டமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

தமிழர்கள் புத்தரையும் கடவுளாக ஏற்று வணங்கிவந்தவர்கள் இன்று புத்தர் சிலையைக் கண்டாலே முகம்சுழிக்கும் தமிழர்களையும் காணமுடிகிறது. 

சில காலத்தின்  பின் வடக்கு கிழக்கு பாரம்பரிய சிங்கள பிரதேசம் என  சொன்னாலும் ஆச்சரியப்பட தோன்றாது. அப்படி சிங்கள அரசு திட்டமிட்டு செயற்படுகிறது. முடிந்தால் காத்தான்குடியில் ஒரு சிலையை வைக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.