Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ் சந்தேகம்

Featured Replies

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ் சந்தேகம்

douglas-720x450.jpg

வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, மேற்படி சம்பவங்களுடன் தொர்புடையதாக ஆதாரங்களுடன் கைது செய்யப்படுகின்ற நபர்களை சட்டத்தரணிகளான உள்ளூர் அரசியல்வாதிகள் காப்பாற்ற முன்வருகின்ற நிலையில், இத்தகைய அரசில்வாதிகளுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கருத்து கூறுகின்ற சிலர், இது ஏதோ தமிழ்த் திரைப்படப் பாணியிலான தாக்குதல்கள் எனக் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஏதோவொரு சக்தி மறைமுகமாக இயங்குவதாகவே தெரியவருகின்றது. அந்தவகையில் இத்தகைய வன்முறைக் குழுக்கள் செயற்படுகின்றனவா? அல்லது செயற்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது.

தென்பகுதியிலும் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண முடிகின்ற போதிலும், யாழ். குடாநாட்டில் இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவே தெரியவருகின்றது.

யாழில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பேணுவதில் திறமை, ஆளுமையற்று செயற்படும் பொலிஸ் அதிகாரிகளை மாற்றி, திறமையும், ஆளுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்து, இப்பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

http://athavannews.com/வடக்கின்-வன்முறைகளுடன்-அ/

  • தொடங்கியவர்

குள்ள மனிதர்களின் பின்னணி என்ன?- டக்ளஸின் கேள்விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்

Parliament-720x450.jpg

யாழில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பாக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 27 இன் கீழ் 2ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கிறீஸ் பூதங்களால் அச்சுறுத்தப்பட்டு வந்த மக்கள் தற்போது குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன் பின்னணி என்ன டக்ளஸ் தேவானந்தா மன்றில் வினவினார்.

அத்துடன், யாழில் அண்மைக் காலமாக அதிகரித்துவரும் சமூக விரோதச் செயற்பாடுகளினால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அவருக்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர், ”குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையங்களில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை.

வடக்கில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஆவாக் குழுவுடன் தொடர்புடை 31 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

http://athavannews.com/குள்ள-மனிதர்களின்-பின்ன-2/

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸுக்கு வன்முறையுடன் எப்போதும் தொடர்பு இருந்ததே இல்லை. :LOL:
பல்லு புடுங்கிய பாம்பாக உள்ள போது மட்டும் கேள்விகள் எழுகிறது.

வடக்கில் நடைபெறும் அனைத்து சமூகவிரோத செயல்களுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் சிங்கள-பௌத்த முப்படைப்  பயங்கரவாதிகளும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும் அவர்களின் கைக்கூலிகளாக இயங்கிய ஈபிடிபி போன்ற ஒட்டுண்ணிக் குழுக்களும், இவர்களின் வலையில் சிக்கிய இளசுகளுக்கும் தான் காரணம்.

இதில் இரகசியம் ஒன்றுமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

வடக்கின் வன்முறைகளுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?- டக்ளஸ் சந்தேகம்

douglas-720x450.jpg

வடக்கின் வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கேள்வி நேரத்தின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”வடக்கின் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஒரு சில நபர்கள் கைது செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், அந்த நபர்கள் உண்மையிலேயே மேற்படி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டவர்களா? என்ற சந்தேகம் எழுகின்றது. இதேவேளை, மேற்படி சம்பவங்களுடன் தொர்புடையதாக ஆதாரங்களுடன் கைது செய்யப்படுகின்ற நபர்களை சட்டத்தரணிகளான உள்ளூர் அரசியல்வாதிகள் காப்பாற்ற முன்வருகின்ற நிலையில், இத்தகைய அரசில்வாதிகளுக்கு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் கருத்து கூறுகின்ற சிலர், இது ஏதோ தமிழ்த் திரைப்படப் பாணியிலான தாக்குதல்கள் எனக் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் ஏதோவொரு சக்தி மறைமுகமாக இயங்குவதாகவே தெரியவருகின்றது. அந்தவகையில் இத்தகைய வன்முறைக் குழுக்கள் செயற்படுகின்றனவா? அல்லது செயற்படுத்தப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகின்றது.

தென்பகுதியிலும் கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண முடிகின்ற போதிலும், யாழ். குடாநாட்டில் இத்தகைய வன்முறைச் செயற்பாடுகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவே தெரியவருகின்றது.

யாழில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பேணுவதில் திறமை, ஆளுமையற்று செயற்படும் பொலிஸ் அதிகாரிகளை மாற்றி, திறமையும், ஆளுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்து, இப்பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

http://athavannews.com/வடக்கின்-வன்முறைகளுடன்-அ/

தங்களை சூளைமேடு "மாமியார் வீடு " அன்போடு அழைக்கிறது. பஜ்ஜி , போண்டா எல்லாம் தயாராக உள்ளது .. ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nunavilan said:

டக்ளஸுக்கு வன்முறையுடன் எப்போதும் தொடர்பு இருந்ததே இல்லை. :LOL:
பல்லு புடுங்கிய பாம்பாக உள்ள போது மட்டும் கேள்விகள் எழுகிறது.

6 hours ago, போல் said:

வடக்கில் நடைபெறும் அனைத்து சமூகவிரோத செயல்களுக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் சிங்கள-பௌத்த முப்படைப்  பயங்கரவாதிகளும் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும் அவர்களின் கைக்கூலிகளாக இயங்கிய ஈபிடிபி போன்ற ஒட்டுண்ணிக் குழுக்களும், இவர்களின் வலையில் சிக்கிய இளசுகளுக்கும் தான் காரணம்.

இதில் இரகசியம் ஒன்றுமில்லை! 

அந்த சொக்கத்தங்கத்தின் மீது வீண் பழி போடாதீர்கள். கடவுளும் பொறுக்க மாட்டார்.tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

யாழில் சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பேணுவதில் திறமை, ஆளுமையற்று செயற்படும் பொலிஸ் அதிகாரிகளை மாற்றி, திறமையும், ஆளுமையும் கொண்ட அதிகாரிகளை நியமித்து, இப்பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

"இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா"

தமிழ்மக்களுக்கு உரிய தீர்வை குடுத்து விட்டால் இந்த பிரச்சனைகள் நாங்களே பார்த்து கொள்ளுவம் தீர்வை குடுங்க என்று சொல்ல மாட்டார் இன்னும் எஜமான விசுவாசம் .

தேர்தல் நெருங்க நெருங்க தமிழ் ஈழமே தீர்வு என்று சிங்க கொடி காட்டிய பெருமக்கள் கனவில் கூட கத்துவினம் பாருங்க இனித்தான் நம்ம ஈழத்து வடிவேலுகள் ,கவுண்டமணிகள் எல்லாம் வரிசையா வருவினம் வெயிட் அண்ட் சி  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

தமிழ்மக்களுக்கு உரிய தீர்வை குடுத்து விட்டால் இந்த பிரச்சனைகள் நாங்களே பார்த்து கொள்ளுவம் தீர்வை குடுங்க

வெறும் மாகாண சபையை கொடுக்கவே அமைச்சர் பதவிக்கு உச்ச நீதிமன்றம் வரை முதலமைச்சரும் அமைச்சச்சர்களும் மக்களின் பணத்திலும் நேரத்திலும் வழக்கு பேச போகிறார்கள். ஊழலும் கூத்துகளும் தவிர மக்களுக்கு எதுவும் பயனுள்ளதாக செய்ததாக தெரியவில்லை. இந்த கேவலத்தில் "உரிய தீர்வை" கொடுத்தால் இருப்பதும் போய் நாடு சோமாலியாவாக போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

வெறும் மாகாண சபையை கொடுக்கவே அமைச்சர் பதவிக்கு உச்ச நீதிமன்றம் வரை முதலமைச்சரும் அமைச்சச்சர்களும் மக்களின் பணத்திலும் நேரத்திலும் வழக்கு பேச போகிறார்கள். ஊழலும் கூத்துகளும் தவிர மக்களுக்கு எதுவும் பயனுள்ளதாக செய்ததாக தெரியவில்லை. இந்த கேவலத்தில் "உரிய தீர்வை" கொடுத்தால் இருப்பதும் போய் நாடு சோமாலியாவாக போய்விடும்.

  டக்கி தமிழர்க்கு கிடைக்கவேண்டிய உரிமையை மறந்து கள்ளர் காடையரை அடக்கினால் சரி எனும் தொனிக்கு எதிர் கருத்து போட நீங்கள் வேட்டி தலைப்பை பிடிச்சுக்கொண்டு ஏன் ஊரை சுத்தி ஒடுரியல் மெயின் கருத்துக்கு வாங்க பாஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.